திங்கள், 18 நவம்பர், 2019

திங்கக்கிழமை  :   மலிடா/மலீடா (Malida/Maleeda)  - கீதா ரெங்கன் ரெஸிப்பி 


அஃப்கான் இனிப்பு மலிடா/மலீடா (Malida/Maleeda) கொஞ்சம் நம்ம ஸ்டைல்ல

நட்புகள் அனைவருக்கும் வணக்கம்! மீண்டும் எபி கிச்சனுக்குள் அடி எடுத்து வைத்துவிட்டேன். தொடர்வேன் என்ற நம்பிக்கையுடன். இன்னிக்கு நாம செய்யப் போறது அஃப்கானின் பாரம்பரிய இனிப்பு மலிடா.

பெயர் தான் மலிடா. இதற்கு நம் நாட்டில் பஞ்சாபில் சூரி, குஜராத்தில் சுர்மா என்றும் பஞ்சாபியர்களின் பாரம்பரிய இனிப்பு என்றும் சொல்லப்படுகிறது. சில பகுதிகளில் மலிடா. இன்னும் சொல்லப் போனால் வெண்ணையை நெய்யாக உருக்கிய பாத்திரத்தில் கோதுமை மாவு போட்டு வறுத்துக் கொண்டு சர்க்கரை சேர்த்து செய்வோமே கசண்டு லட்டு அதேதான் அடிப்படையில். (என் பாட்டி ஒவ்வொரு முறையும் லட்டு என்றோ உதிரி என்றோ செய்து கொடுத்ததுண்டு.) 

இந்த மலிடா அஃப்கான், மத்திய ஆசிய நாடுகளின் குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தில் பெரிய விழாக்களில் மற்றும் புனித நாட்களின் போதும் செய்யப்படும் மிக முக்கியமான பாரம்பரிய, விரத இனிப்பு என்று தெரிகிறது. சில சரித்திரம் வாசித்த போது மத்திய ஆசிய நாடுகளின் தாக்கம் நம் நாட்டில் வடக்கே ஏற்பட்ட போது விளைந்த கலாச்சார, பண்பாட்டின் தாக்கத்தில் இந்த இனிப்பு நம் நாட்டிலும் வந்திருக்கலாம் என்று தோன்றினாலும்......

ரிஷி மூலம், நதி மூலம் ஆராய்ந்து பார்க்கும் ஆர்வம் இல்லை. தேவையும் இல்லை. எந்த நாட்டின், இனத்தின், சமூகத்தின் பாரம்பரியமாக இருந்தால் என்ன? இந்த அருமையான எளிமையான இனிப்பை ஆராயாமல் (எஞ்சாய்) சுவைப்போம். இதைப் பற்றி சுவையான நல்ல தகவலை இங்கு பகிர்கிறேன்.

அஃப்கான் நாட்டில், விழாக்களில், விரத நாட்களில் இந்த இனிப்பிற்கான ரொட்டி / நானை, கோதுமை / மைதா மாவில் பால், நிறைய எண்ணெய், பேக்கிங்க் பௌடர், ஈஸ்ட் எல்லாம் சேர்த்து கலந்து, தடிமனான ரொட்டி செய்து அடுமனையில்/பேக் செய்து, அஃப்கான் பெண்மணிகள் அனைவரும் குழுமி, ரொட்டியைச் சிறு சிறு துண்டுகளாக்கி, பிரார்த்தனை சொல்லிக் கொண்டே கையாலேயே தேய்த்து, திரித்துப் பொடிப்பார்களாம்.

ரொட்டி செய்ய நிறைய எண்ணெய் பயன்படுத்துவதால் கையால் பொடிப்பது எளிதாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. இப்போது அரைப்பானில் பொடித்துவிடலாம். ஆங்கிலம் கலக்காமல் சொல்லணும்னு நம்ம பெரியவங்க இங்க சொல்லும் போது....ஹிஹிஹி மேலே, கீழே வரும் ஆங்கிலச் சொற்களைக் கண்டுக்காம வேகமாக அடுத்த சொல்லுக்குப் போய்டுங்க!!!

பொடித்ததை சல்லடையில் போட்டு சலித்து கொஞ்சம் பெரிய ரவை பக்குவத்தில் எடுத்துக் கொண்டு அதில் சூடாக எண்ணெயை ஊற்றி உடன் ஜீனி கலந்து பிஸ்தா பருப்பு, ஏலக்காய் எல்லாம் பொடித்து கலந்து செய்கிறார்கள்.

அப்படிப் பிரார்த்தித்துக் கொண்டே செய்வதால் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டு - NAZR – நஜர் அதாவது பிரசாதம் ஆகிறது. நம் நாட்டில் எண்ணெய்க்குப் பதிலாக நெய். இங்கும் வடக்கில், குஜராத்தில் ஆட்டா கா ப்ரஸாத் என்றே செய்யப்படுகிறது. (நம் ஊரில் இப்படிக் கூட்டுப் பிரார்த்தனையில் முன்பு செய்யப்பட்டவை, இப்போது பிரசாதமே வியாபாரம்!!!!!!!)

நஜர் - மற்றொரு அர்த்தம் காணிக்கை. நம்மில் பலரும் இறைவனிடம் நேர்த்திக் கடன் செய்வது உண்டில்லையா, அதே போன்று அவர்கள் கலாச்சாரப்படி, அப்படி எடுத்த உறுதி மொழியை நிறைவேற்ற முடியவில்லை என்றால் அதனை ஈடு செய்ய ஏதேனும் தான தர்மம், ஏழைகளுக்கு உதவுதல் என்று தொண்டு செய்ய வேண்டுமாம். 

இந்த இனிப்பை செய்ய ரொட்டி/நான் செய்யாவிட்டாலும் சப்பாத்தி செய்து மீந்தால் அதனைப் பொடித்துக் கொண்டோ அல்லது கோதுமை ப்ரெட் வாங்கியோ செய்யலாம். கோதுமை மாவிலும் செய்யலாம். என்றாலும் ஒவ்வொரு முறையிலும் கொஞ்சம் சுவை மாறுபடுகிறது. சரி மலிடா செய்வோமா! ஜிம்பிள்தான்.

செய்முறை :

நாம மைதா மாவு பயன்படுத்தப் போவதில்லை. கோதுமை மாவு, பால், ஈஸ்ட், பேக்கிங்க் பௌடர், வெண்ணை, கொஞ்சம் தேன், உப்பு என்று கலந்து கொண்டு தடிமனாக இப்படி இரண்டு ரொட்டி/நான் மொறு மொறுப்பாக பேக் செய்து எடுத்துக் கொண்டுவிட்டோம். செய்த ரொட்டி படம் மட்டுமே இங்கு.


ஆரும் என்னோடு முறைக்காதீங்க. ரொட்டி செய்யும் போது செய்முறையை எடுத்த படங்கள் அனைத்தும் எங்கு போச்சு என்று தெரியவில்லை எனவே செய்முறை படங்கள் இல்லை. இந்தப் படம் நான் செய்த ரொட்டி படம் தான் என்று மூன்று முறை, நெல்லையின் மகளின் ஆப்பிள் “பை”க்குள்ள ஓங்கி அடித்துச் சொல்கிறேன்!!! நான் இணையத்திலிருந்து சுட்டுப் போட்டிருக்கேன் என்று நெல்லை சொல்லக்கூடாதில்லையோ அதனால் இந்த சாச்சுட்டரி வார்னிங்க்!!!

பாரம்பரிய மலிடாவில் நிறைய எண்ணெய், பொடித்த வெள்ளை சர்க்கரை, ஏலக்காய் மற்றும் பிஸ்தா பருப்பு மட்டுமே பொடித்து பயன்படுத்துகிறார்கள். கலந்து உதிரியாகக் குவித்து வைக்கிறார்கள். பால் பொடி கிடையாது. 

நாமதான் எப்பவுமே மாத்தி தானே செய்வோம். அதனால லட்டு பிடிச்சுருவோம். நான்கு 10 ருபாய் பால் பொடி பாக்கெட்டுகள், முந்திரி, பாதாம், உலர் திராட்சை, பிஸ்தா என்று நம்ம விருப்பத்திற்கு ஏற்ப பருப்புகள், பேரீச்சை போன்ற உலர் பழங்கள் எடுத்துக்குவோம். இதுக்கு நாம அளவு எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம். அப்புறம் அரை கப் ப்ரவுன் சர்க்கரை. அதாவது 100 கிராம் கப்/கோப்பை. படத்தில் இவை அனைத்தும் உள்ளன.

(ஒரு சிறு விளம்பர இடைவேளை: சாதரணமாகச் சாப்பிடுவதற்குச் செய்யும் அஃப்கான் நான், அஃப்கான் பனீர் மற்றும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கார்லிக் நான் செய்முறைகள் விரைவில்)

Image result for cat thinking and laughing gif
ஹா ஹா ஹா இந்த விளம்பர பில்டப்புக்கு ஒண்ணும் கொறைச்சலில்லை......இந்த கீதாவாவது விரைவில் போடுவதாவது...பாருங்க வயித்த பிடிச்சு சிரிக்கற அளவுக்கு...சிப்பு சிப்பா வருது!!

இ.வே. முடிஞ்சு போச்சு. வாங்க செய்முறை பார்க்கலாம். ரொட்டியை சிறு துண்டுகளாக்கி அரைப்பானில்/மிக்ஸியில் பொடிச்சுக்குவோம். படத்தில் இடது புறம் இருக்கும் முதல் படம்.
ஏலக்காய் கொஞ்சம் சர்க்கரையுடன் கலந்து பொடித்து வைச்சாச்சு. (இரண்டாவதாக இருப்பது) பருப்புகளைத் தனியா, உலர் பழங்களைத் தனியா அரைப்பானில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக்குவோம். மூன்றாவது படம்.


வாணலியில் 4 மேசைக் கரண்டி நெய் ஊற்றி அதில் இந்தப் பொடித்ததை பொன்னிறத்தில் வறுத்துக்குவோம். பொடித்ததும் இருந்த 3 கோப்பை (நான் எப்போதுமே கோப்பை/கப் என்பது 200 கிராம் கோப்பை) ரொட்டித் துகள்கள் வறுத்ததும் 2 கோப்பை விளிம்பை விட கொஞ்சம் மேலாக...

குறிப்பு : பேக் செய்த ரொட்டிகள் ரஸ்க் போன்று நல்ல ப்ரொவுனாக இருந்தால் பொடித்ததை வறுக்க வேண்டாம் பொடித்துவிட்டு அதில் நல்ல சூடான நெய்யை ஊற்றி எல்லா பொருட்களையும் கலந்தால் போதும். அதே போன்று கோதுமை ப்ரெட் அல்லது வீட்டில் செய்த சப்பாத்தி பயன்படுத்தினால், கொஞ்சம் வெண்ணை அல்லது நெய் தடவி தாவாவில் அல்லது ஓவனில் சுட்டு மொறு மொறுவென்று எடுத்துக் கொள்ளலாம். நாம இங்க பேக் செய்த ரொட்டிகள் மொறு மொறுப்பாக இருந்தாலும் உள்ளே கொஞ்சம் பொன்னிறம் இல்லாததால் நெய்யில் வறுத்துக்கறோம்.


இப்ப நெய்யில வறுத்து சூடா இருக்கற ரொட்டி துகள்களோடு சர்க்கரையையும் கலந்துவிட்டால் சர்க்கரை கரைந்து ஒட்டிக் கொண்டு விடும். அதோடு நாம் ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்திருக்கும் உலர் பழங்கள், பருப்புகள் கலவையும், பால் பொடியையும் எல்லாமும் நன்றாகக் கலந்து அந்தச் சூட்டோடயே உருண்டை பிடித்து விட வேண்டியதுதான். உலர் பழங்கள் மற்றும் ப்ரௌன் சர்க்கரையின் ஈரப் பதம் போதும் லட்டு பிடிக்க. இனிப்பும் மிதமான, திகட்டாத, கூட ஒன்று சாப்பிடலாம் என்ற அளவிலான இனிப்பு.

அவ்வளவுதான். சுவையான லட்டு ரெடி. வாங்க எல்லாரும் எடுத்துக்குவோம். அடுத்த பதிவில் எபி கிச்சனில் கில்லாடிகளுடன் சந்திப்போம்.

Image result for டெய௠சி பிள௠ளை, என௠பக௠கமà¯
என்னையும் என் அஸிஸ்டெண்டையும் அதான் ஜெஸ்ஸி... எபி கிச்சனுக்கு இந்த கீதா கூப்பிடவே இல்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜெஸ்ஸி உண்ணாவிரதத்துக்கு அவவ கோபத்துல வரமாட்டாவ. அதனால நான் தனியா ஒரு உண்ணாவிரதம் போடுறேன். எல்லாரும் எனக்கு உங்க லட்டுல பங்கு நைசா ஆருக்கும் தெரியாம (குறிப்பா ஜெஸ்ஸி பிள்ளைக்கு) இந்த டெட்டி கைல வைச்சுட்டுப் போங்கோ. ஆங்க் நான் கையில் வாங்க மாட்டேனல்லோ...உண்ணா விரதம்!!!!! 

(கீதாக்காவின் வாய்ஸ்: கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதெல்லாம் கூடவா இத்தனை பில்டப் செஞ்சு திங்கவுக்கு?!!!! இஃகி இஃகி!!!!!!!) (கீதா: ஹிஹிஹி)

77 கருத்துகள்:

 1. வெள்ளத்தனைய மலர் நீட்டம்....

  வாழ்க நலம்....

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா....  +இரண்டு நிமிஷம் ஆகிவிட்டது!

   நீக்கு
  2. இப்போ ஏது காஃபி? ராத்திரி நேரத்திலே! இன்னும் கொஞ்ச நேரத்திலே சாப்பிடணும்!

   நீக்கு
  3. வேறே செய்தியில் மும்முரமாகக் கவனம் செலுத்தியதில் மணி ஆறு ஆனதைக் கவனிக்கலை.

   நீக்கு
  4. முக்கியமான செய்தி ஏதும்....

   நீக்கு
 3. வட்டமான தட்டு ..
  தட்டு நிறைய லட்டு...

  அந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வட்டமான தட்டு ..
   தட்டு நிறைய லட்டு...//

   அத்தனையையும் வாயில கொட்டு 
   உள்ளே போகாட்டி தலையில தட்டு!

   ஹிஹிஹிஹி...

   நீக்கு
  2. /உள்ளே போகாட்டி தலையில தட்டு!/

   ஹா. ஹா. ஹா. அதே தட்டாலேயேவா?
   பாட்டு நன்றாக உள்ளது. ரசித்தேன்.

   நீக்கு
  3. ஏன், கையால் கூட தட்டலாம்!   ஹா..ஹா.. ஹா...

   நீக்கு
  4. கையால தட்டலாம்..

   லட்டை எடுத்து கூட தட்டலாம்...

   நீக்கு
  5. லட்டு அவ்வளவு உறுதியா? இல்லை அந்த மாதிரி உறுதியாக பண்ண வேண்டுமா? ஹா. ஹா. ஹா.

   நீக்கு
  6. துரை அண்ணா மிக்க நன்றி லட்டு பாடல் எல்லாத்துக்கும்

   கீதா

   நீக்கு
  7. வட்டமான தட்டு, தட்டு நிறைய லட்டு, லட்டு மொத்தம் எட்டு, என்று உருண்டை என்னும் உருவத்தை குழந்தைகளுக்கு புரிய வைக்க உதவும் அழகான பாடல்.   

   நீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.

  சகோதரி கீதா ரெங்கன் அவர்களின் புது ரெசிபியா? பெயரே வித்தியாசமாக இருக்கிறதே.. ! விபரமாக படித்து விட்டு வருகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...  காலை வணக்கம்.  பிரார்த்தனைகளுக்கு  நன்றி.

   நீக்கு
  2. இந்த “ப்ரார்த்தனைகள்’ வார்த்தை கர்ர்ர்ர்ர்ர்ர் மேடத்துடையது அல்லவா? அவங்க அம்பேரிக்கா போன தைரியத்துல நீங்க உபயோகப்படுத்த ஆரம்பிச்சாச்சா க.ஹ மேடம்?

   நீக்கு
  3. யார் வேண்டுமானாலும் பிரார்த்திக்கலாமே! நீங்களும் பிரார்த்தனை செய்யுங்க நெ.த.

   நீக்கு
  4. நன்றி சகோதரி..அட.!நீங்க இன்னமும் உறங்கச் செல்லவில்லையா?

   அதேதான் நானும் சொல்ல வந்தேன். "பிராத்தனைகள் என்பது இனம், மொழி, மதம், நாடு அனைத்திற்கும் உரித்தானவை..அவரின் எதிர்ப்புக்கள் (கர்ர்ர்ர்) நகைசுவைச் சிரிப்புகள் (இஃகி, இஃகி) இது போன்ற இன்னும் பல டிரேட்மார்க்குகளை நான் நான(அவர)றியாமல் தொடவில்லையே.. ஹா. ஹா. ஹா. " என சொல்ல வந்தேன். அதற்குள் நீங்களே பதில் தந்து விட்டீர்கள்.

   நீக்கு
  5. பிரார்த்தனைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாமே...    இந்தக்கருத்தில் நானும் உடன்படுகிறேன்!

   நீக்கு
  6. கமலா அக்கா மிக்க நன்றி கருத்திற்கு..

   கீதா

   நீக்கு
  7. அனைவருக்கும் இனிதான நன்றிகள்.

   நீக்கு
 5. தி/கீதா இந்த உருண்டை பிடிக்க ரொம்பக் கஷ்டப்பட்டிருக்காங்க. குஜராத்திலே கோதுமை லட்டு பிரபலம் தான். எங்க வீட்டிலே அம்மா கோதுமை பூரி செய்து அதை உரலில் போட்டு இடிச்சு மற்ற சாமான்களை தி/கீதா சொன்னபடி சேர்த்துப் பண்ணுவாங்க. இதோட பெயர் தான் மறந்துட்டேன். மனதின் ஆழத்தில் இருக்கு! வெளியே வரலை. பானுமதி வந்து சொல்றாங்களானு பார்க்கலாம். கோதுமை மாவில் லட்டு நான் அடிக்கடி பண்ணுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓஹோ...    கீதா ரெங்கன் இதை எப்போது படிப்பாரோ...   பதில் சொல்வாரோ....

   நீக்கு
  2. ராஜஸ்தானில் இந்த மாதிரி கோதுமை மாவில் " BHபாட்டி" என்பார்கள். பண்ணிட்டு அதை நொறுக்கி நெய், சர்க்கரை அல்லது வெல்லத்தூள் பிடித்து உருண்டை உருட்டி அதை "சூர்மா" என்னும் பெயரில் கொடுப்பார்கள். பாட்டிக்குக் காரசாரமாக தால்! BHபாட்டியை நொறுக்கிப் போட்டு நெய்யைக் கொட்டி அதன் தலையில் தாலையும் ஊற்றுவார்கள்.

   நீக்கு
  3. வடக்கே அதிக வருடங்கள் இருந்ததன் காரணமாகப் பற்பல வகைத் தித்திப்புகள், பல்வேறு பெயர்களில் சாப்பிட்டாச்சு.

   நீக்கு
  4. கீசா மேடம் இரவுக் காலை வணக்கம் மாலையில் உங்களுக்கு.

   உங்க பின்னூட்டம் முதல்ல சரியா படிக்காமல், ஒரே வகைத் தித்திப்புகளை பல்வேறு பெயரில் சாப்பிட்டாயிற்று என்று முதலில் படித்துக் குழம்பிவிட்டேன் ஹா ஹா

   நீக்கு
  5. வணக்கம்!நான் வந்தேன். கீதா அக்கா நீங்கள் குறிப்பிட்டிருப்பது மோகனலாடு என்று நினைக்கிறேன். அதை பிடிப்பதற்குள் கை பொள்ளி விடும்.

   நீக்கு
  6. //பொள்ளி விடும்.//

   மனசில் இதன் அர்த்தம் புரிகிறது.  இதற்கு வேறு வார்த்தை உண்டா?

   நீக்கு
  7. ஹாஹாஹா கீதாக்கா கஷ்டமே படலை....ஈஸி. இது அவங்க செய்யற முறை அதைப்பற்றி விளக்கம் சொன்னதால் அப்படி தெரியுது.... ஹிஹி...

   நம் வீட்டிலும் கோதுமை மாவில் செய்வதுண்டு.அதுவும் பாட்டி கசந்து லட்டு செய்யறதும் சொல்லிருக்கேன்.

   குஜராத், ராகட்தான் சுர்மா சூரி....சொல்லிருக்கேன் பாருங்க...

   இது புதுசு னு சொல்லலை....அங்கும் செய்யறங்க..நான் அதுல பால் பவுடர் கலந்து கொஞ்சம் மாற்றி செய்தது...அவ்வளவுதான் அக்கா...அப்படி ஒரு தகவல் ப்ளஸ் செய்முறை ன்னு...தான் சொல்லிருக்கேன்..பதிவுலயும்....ஹிஹிஹி....

   ரொம்ப சுலபம் தான்...ஒரிஜினல் மைதா தான் அவங்க..செயுயறது.அதுவும் சொல்லிருக்கேன்...

   Bhati செஞ்சு ராஜ்ஜஸ்தான்ல செய்யரதும் செஞ்சதுண்டு....நல்ல சுவையா இருக்கும்.
   ஒவ்வொன்னும் ஒவ்வொருவிதம்..

   பல ஊர் உணவு பார்த்தோம்னா பேசி க் ஒன்றேதான். பேரமியூட்டேஷன் காம்பினேஷன் தான்..பேர் விடத்தியாசம் அவ்ளவுதான்...நம்ம ஊர் ரசம் போல செஞ்சு அதுல கொஞ்சம் சாதம் போட்டு மெக்சிகன் சூப்...இப்படி.

   மிக்க நNரி கீதாக்கா

   கீதா
   மிக்க

   நீக்கு
  8. //நீங்கள் குறிப்பிட்டிருப்பது மோகனலாடு என்று நினைக்கிறேன். அதை பிடிப்பதற்குள் கை பொள்ளி விடும்.// அதே, அதே, சபாபதே, பானுமதி. அம்மா வருஷா வருஷம் தீபாவளிக்கு உரலில் பூரிகளைப் போட்டு இடித்துப் பண்ணுவா! சாப்பிட்டிருக்கேன். பெயர் மறந்து போச்சு! அ.வ.சி.

   நீக்கு
  9. பொள்ளிப் போய் விடும் என்பதற்கு இன்னொரு வார்த்தை கொப்பளித்து விடும் 

   நீக்கு
  10. எனக்குத் தெரிஞ்சு மைதாவிலே செய்து பார்க்கலை.dhaal bhபாட்டி முழுக்க முழுக்கக் கோதுமை மாவு தான். குஜராத்திலும் மைதா நான் அவ்வளவாய்ப் பார்க்க முடியாது. கோதுமையிலே தான் விதவிதமான ரொட்டிகள்.

   நீக்கு
 6. கோதுமை மாவு லட்டு செய்முறை அருமை.

  இணையப் படங்கள், எடுத்த படங்கள் காணலை என்ற சாக்குப்போக்கு வேண்டாம். இப்போதான் சந்திச்சீங்களே.. அப்போவும் கொடுத்திருந்தால் நம்பியிருப்பேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹாஹா...நெல்லை

   கற்ற்ற்ற்ற்றரர் நீங்க முதல் நாளே நீங்களும் வரீங்கன்னு சொல்லிருநிதீங்கன்னா செஞ்சு கொண்டு வந்திருப்பேன்ல....நான் பஸ்ல இருக்கறப்ப நானும் வரேன்னு மெஸ்ஸேஜ் கொடுத்தா..கற்ற்ற்ற்ற்றரர்...ஹாஹாஹா

   கீதா

   நீக்கு
 7. நானும் அடுத்த செய்முறை எழுத ஆரம்பிச்சாச்சு.

  தோசிட்லிசேவ். இது கஜகஸ்தான் பாரம்பர்ய உணவு. கார்ன் மாவு, அரிசி, உளுந்து சேர்த்து ஊறவைத்து உப்பு சேர்த்து அரைத்து புளிக்காமல் தோசை வார்க்கணும்.

  பிறகு அதை மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து இட்லி பண்ணணும்.

  அந்த இட்லியை சேவை நாழியில் பிழிந்தால் தோசிட்லிசேவ் ரெடி.

  ஶ்ரீராம் ஓகேன்னு சொன்னா இதைச் செய்து தி பதிவுக்கு அனுப்பப் போறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா.. புது பேராக இருக்கிறதே! முயற்சிக்கலாம்.. ஆனால், தோசை, இட்லி. சேவை எல்லாம் செய்கிற வரை சாப்பிடுகிறவர்களுக்கு பொறுமை வேண்டுமே! பொறுமை சிதைந்து அவர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விடுவார்கள். ஹா. ஹா. ஹா.

   நீக்கு
  2. கமலா ஹரிஹரன் மேடம்... கல்யாணத்துல காய், கூட்டு மற்றதெல்லாம் ரெண்டாவது தடவை உடனே போடமாட்டாங்க. நாம அப்பளாம் வேணும்னு நினைப்போம். அவங்க பாயசம் வச்சிக்கிட்டிருப்பாங்க. அப்புறம் கூட்டு காய் வேணுமான்னு கேட்டுக்கிட்டு வருவாங்க (நிச்சயம் யாரும் கேட்க மாட்டாங்க என்ற நம்பிக்கையில்). மோர் விட்ட உடனே பாயசம் இன்னும் யாருக்கேனும் வேணுமாம்பாங்க. அதுமாதிரி, உங்களை வீட்டுக்குப் கூப்பிட்டு இதெல்லாம் நாங்க செஞ்சு முடிக்கும்போது, ஒரு வாய் சாப்பிட்டாலே போதும்னு தோணிடும். எல்லாம் ரெடி பண்ணிட்டு உடனே சாப்பாட்டுக்கு வந்தாங்கன்னா நிறைய செலவாகும்.

   உங்களுக்குத் தெரியாதா நெல்லைப் பகுதி உபசரிப்பு பற்றி. ஹா ஹா

   நீக்கு
  3. வா,...வ்...    நெல்லை...   புதிய முயற்சி!

   நீக்கு
  4. ஹாஹாஹா நெல்லை நீங்க சொன்ன அந்த பேரு... செய்முறை...சிரிச்சு முடில...செமையா ரசிச்சேன்...

   கீதா

   நீக்கு
 8. அன்பின் ஸ்ரீராம்..

  அன்றைக்கு Fb ல் பகிர்ந்தீர்களே
  மாயாவின் படம் ஒன்று...

  அதற்கு ஒரு கவிதை எழுதி (!) வைத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே...   துரை ஸார்...    அனுப்புங்கள்... வியாழனொன்றில் பகிர்ந்து விடுவோம்!  ஜெ பாணியிலமைந்த அந்த மாயா படத்தை இன்னும் வியாழனில் பகிரவில்லை.

   நீக்கு
 9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
  சுவையான நல்ல தகவலுடன் சுவையான லட்டு.கீதா, உங்கள் பாட்டி போல்
  வெண்ணெய் உறுக்கிய கசடில் என் மாமியாரும் பொட்டுக்கடலை பொடி போட்டு சீனீ போட்டு உடனே பிடித்து கொடுப்பார்.
  அம்மா அந்த பாத்திரத்தில் ரசம் செய்து ஊற்றி விடுவார். நெய் வாசத்தோடு ரசம் சூப்பராக இருக்கும்.

  செய்முறை படங்கள், சொல்லியவிதம் அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // நெய் வாசத்தோடு ரசம் செய்து ஊற்றி விடுவார்..///

   இப்படித் தான் எங்கள் வீட்டிலும் செய்வது..

   நீக்கு
  2. நல்ல ஐடியா கோமதி அக்கா.  

   நான் ரசம் சாதத்துக்கு நெய் சேர்த்துக் கொள்ள மாட்டேன்!

   நீக்கு
  3. கோமதிக்கா மிக்க நன்றி அக்கா.

   எங்க வீட்டிலும் இப்படி அதிலேயே ரசம் செய்வதுண்டு....

   கீதா

   நீக்கு
  4. //நான் ரசம் சாதத்துக்கு நெய் சேர்த்துக் கொள்ள மாட்டேன்!// ரசம் சாதத்துக்கும் நெய் சேர்த்து, அதோடு சுட்ட அப்பளத்திலும் நெய் சேர்த்துச் சாப்பிட்டால் அந்தச் சுவையே தனி தான். நெய் காய்ச்சிய உருளியில் (நான் உருளியில் தான் நெய் காய்ச்சுவேன்.) அரிசி உப்புமா, பொங்கல் என்று பண்ணுவேன். சில சமயங்களில் அலுமினியம் கடாய் எனில் அதில் கோதுமை மாவைப் போட்டுச் சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்துவிடுவேன். ரொம்பக் கொஞ்சமாக இருந்தால் ரசம் வைக்கும் புளி ஜலத்தை அந்த நெய் காய்ச்சிய பாத்திரத்தில் விட்டுக் கொதிக்கவிட்டுப் பின்னர் ஈயச் செம்புக்கு மாற்றுவேன்.

   நீக்கு
 10. என் பையனுக்கு நெய் உருக்கிய கசண்டு பாத்திரத்தில் கோதுமை மாவு சீனி போட்டு வறுத்துக்்கொடுத்தால் பிடிக்கும்

  அதைப் பார்த்துப் பார்த்து இப்போ நானும் அப்படி சாப்பிட ஆரம்பித்துவிட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அச்சச்சோ கோதுமை மாவை வறுத்தால் சரியான பித்தம் உண்டாக்கும் நெ.தமிழன், அத்தோடு பொல்லாத சூடு வயிற்றுக்கு... ஆசைக்கு எப்பவாவது வறுத்துச் சாப்பிடலாமே தவிர அடிக்கடி கூடாது.

   நாங்கள் எப்போதாவது கோதுமையை வறுத்துப் புட்டு அவிப்போம்.. அதன் சுவையே தனி, ஆனா அடிக்கடி எனில் நல்லதல்ல.

   நீக்கு
  2. இதோ... இலக்கியங்கள் படிப்பதை இந்த நொடியிலிருந்து நான் நிறுத்திவிட்டேன். அதிரா வேறு பட்டப்பெயர் வைத்துக்கொள்ளும்வரை.

   கண்ணதாசன் பாடல்கள், த்த்துவங்கள், பிறரின் த்த்துப்பித்துவங்கள், புலாலியூர் பூசானந்தா சொன்னது இவற்றை காவிவந்து (களவாடி) தன் இடுகையில் போட்டுக்கொண்டால் இலக்கியச் செம்மல் ஆகிவிட முடியுமா? இந்த அநியாயத்தைக் கேட்பவர்கள் (தைரியமாக) கிடையாதா?

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா

   நீக்கு
  3. ஸ்ஸ்ஸ் இலக்கியச் செம்மல் கிடைப்பதென்பது இலேசுப்பட்ட காரியமோ நெ தமிழன்:)...
   ஹா ஹா ஹா

   நீக்கு
  4. காலை வணக்கம் இலக்கிய தும்மலே :)))))))))))))))))  துலக்கிய கம்மலே 

   நீக்கு
  5. நெல்லை உங்க கருத்துக்கு நன்றி...மேலே சொல்ல விட்டுப் போச்சு.

   உங்க பையன்...நீங்க இப்ப....

   +1 சேர்த்துக்கோங்க....

   கீதா

   நீக்கு
  6. ஹாஹாஹா இத்தாரோஊஊ. புச்சா... இலக்கியக் கம்மல் போட்டுக்கிட்டு...அட இலக்கியக் கம்மல் எல்லாம் வந்திருக்கா...நானும் பார்த்து வாங்கி போட்டுக்கிட்டு வாரேன்.இலக்கியக் கம்மல் கீதான்னு...!!!!!!!!!!!😊

   கீதா

   நீக்கு
  7. அவசரத்தில் இலக்கியத் தும்மல் எனப் படித்துவிட்டேன்..

   நீக்கு
  8. ஓ! ஏஞ்சலுக்கும் ’தும்மல்’ வந்திருக்கிறதே..!

   நீக்கு
 11. ஆஆஆஆ இன்று கீதா ரெசிப்பியோ.. ரெசிப்பி இருக்கு, கீதாவைக் காணமே:))..

  // (என் பாட்டி ஒவ்வொரு முறையும் லட்டு என்றோ உதிரி என்றோ செய்து கொடுத்ததுண்டு.)
  //
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுக்குப் பேர் லட்டுத்தான்:)) என்னமோ வாயில நுழையாத பெயரை எல்லாம் சொல்லி எங்களை மிரட்டி உள்ளே வந்து படிச்சால் நாங்கள் செய்யும் ரவ்வை லட்டு:)).. ஹா ஹா ஹா சரி சரி எதுக்கும் கீதாட ரெசிப்பி என்ன சொல்லுதெனப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. ரொட்டி எல்லாம் சுட்டு வித்தியாசமாக செய்திருக்கிறீங்க கீதா, நல்லாயிருக்குது. எனக்கு ரவ்வையில் ஒருதடவை செய்ய விருப்பம், ஊரில் செய்தது பார்த்திருக்கிறேன், வெளிநாடு வந்து செய்ததில்லை, எங்கள் வீட்டில் பெரிசாக விரும்ப மாட்டாஅர்கள்.. சாப்பிட்டதுண்டு.

  ஆஆஆஆஆஆஆஅ எங்கட டெய்ஷிப் பிள்ளையை எப்பூடிக் களவெடுத்தா கீதா, அதுவும் அங்கு என்பக்கத்தில் அநாமிகாவைக் காவலுக்குப் போட்டிருக்கிறேனே:) அவ எப்படிக் கீதாவின் கையைக் கடிக்காமல் விட்டா:)).. கையைக் கடிப்பதற்குப் பதில் கொம்.. ஹார்ட் டிஸ்க் ஐக் கடிச்சிட்டாவோ?:)) ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா 2 கருத்துக்கும் சேர்த்து....ரவை லட்டு மீக்க்கும் பிடிக்கும்...

   இதுவும் நல்லாருக்கும் ஈஸி தான் ...

   நம் வீட்டிலும் கோதுமை மாவை வறுத்து புட்டு அவிப்பதுண்டு. நல்ல வாசனையா இருக்கும்...

   ஹாஹா ஓ அப்ப என் ஹார்ட டியிஸ்க்கை கடித்தது நம்மட டெய்ஸி பிள்ளையா...இருங்க உங்கூர் கோர்ட்ல வந்து கேஸ் போட்டு தேம்ஸ்ல ஆர்பாட்டம்...ஜெசி இருக்க எனக்கென்ன கவலை....ஹாஹாஹா

   கீதா

   நீக்கு
 13. baked ரொட்டி ..லட்டு ...

  நல்லா இருக்கு கீதா அக்கா ...ஆன செய்றது என்னமோ நீளமான முறையா ல இருக்கு ..அதனால் நான் முயற்சி செய்ய வாய்ப்பு இல்லை ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்ல அனு விளக்கம் தான் பெரிசு. ஈசித்தான்...

   மிக்க நன்றி அனு

   கீதா

   நீக்கு
 14. செய்முறை அருமைதான்... செஞ்சு தந்தா சாப்பிடலாம் அக்கா.... :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா குமார் வாங்க செஞ்சு தரேன்...

   மிக்க நன்றி குமார்

   கீதா

   நீக்கு
 15. ஆஆஆ ஸ்வீட்ட்டா !!!!!!!!!! செய் முறை விளக்கம்லாம் நல்லா இருக்கு கீதா .மைதா கோதுமைலாம் என்கிட்டே நெருங்காது :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏஞ்சல் இதை செஞ்சப்ப உங்க நினைவு...இது ஏஞ்சலுக்கு கூடாது ன்னு....மில்லட்ஸ் லட்டும் செஞ்சேன்...கணினி சரியானதும் அனுப்பறேன்....

   கீதா

   நீக்கு
 16. இதே மலிடாவை நைஜீரியன்ஸ் puff puff என்று செய்து எண்ணெயில் பொரிக்கிறாங்க .வாசனை நம்ம பணியாரம் போலிருக்கு 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யெஸ் ஏஞ்சல் அதுவும் பார்த்தேன்...நெட்டில்...பைனும் என்கிட்ட நிறைய ட்ரை panna sonnaan..நான்.மெக்சிகன் சூப், மொராக்கன் சூப், ஆனா அந்த பெப்பர் பிளேவர் இங்க கிடைக்காதே...

   மிக்கnanri angel

   Geetha

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி கீதா ரெங்கன்.

   தங்கள் செய்முறையில் இனிப்பான லட்டு நன்றாக வந்துள்ளது. இந்த மாதிரி பூரி செய்து அதை உரலில் இடித்து இனிப்புச்சேர்த்து அந்நாளில் அம்மாவும் உருண்டைகள் கோதுமை லட்டு பண்ணுவார்கள்.பக்குவம் சரியாக நினைவில்லை.ஆனால் சாப்பிட்ட மாதிரி உள்ளது. தங்கள் செய்முறை, படங்கள் மிகவும் அழகாக உள்ளன. ஒரு தடவை முயற்சித்துப் பார்க்கிறேன். தங்கள் கணினி சரியில்லாமல் இருப்பினும் கை பேசியில் பதில் தருகிறீர்கள் போலும்..! விரைவில் கணினி நலம் பெற வாழ்த்துக்கள்.எனக்கு கருத்துக்கள் அளிக்க கொஞ்சம் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!