சனி, 2 நவம்பர், 2019

சுறுசுறுப்பான மூளை


1)  மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு, மக்களுக்கு உதவும் வகையில் கண்டுபிடிப்புகள் செய்யும் மதுரை ரிஸர்வ் லைன் பாசில்...




2)  நடந்து முடிந்த துயரமான சம்பவத்தைத் தொடர்ந்து ஆங்காங்கே சில நல்ல செயல்கள் நடைபெறுகின்றன.  முதலில் இந்தச் செய்தி வந்தது.  ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்போது வேகமாக ஆழ்துளைக்கிணறுகள் மூடப்பட்டு வருதாகத் தகவல்.  நாம் அனைவருமே நம்மைச் சுற்றியுள்ள இடங்களில் இதுமாதிரி ஆ.து. கிணறுகள் கண்ணில்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம்.  இப்போதைய சூழ்நிலையில் உடனே நடவடிக்கை எடுப்பார்கள்.  நீதிமன்றமும் குட்டியுள்ளது.







30 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம். நல்வரவும் வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும். நல்ல செயல் ஆழ்துளைக்கிணற்றை ஆங்காங்கே மூடி வருவது. பாராட்டத்தக்க செயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா..    வணக்கமும், நல்வரவும்...
      ஆங்காங்கே மூடி வரும் செயல் பற்றி இரண்டு நாட்களாய் செய்திகள் எதுவும் காணோம்!

      நீக்கு
  2. ஏதாவது ஒரு துர்நிகழ்வு நடந்தபின் அதனைப் பற்றிப் பேசுகிறோம். பின்னர் அப்படியே மறந்துவிடுகிறோம். அந்த வகையில் தற்போது ஆழ்துளைக் கிணறு. கும்பகோணம் பள்ளி தீ விபத்து இன்னும் நமக்கு நினைவில் உள்ளது. ஆனால் இன்னும் பல பள்ளிகள் வீடு போன்ற அமைப்பிலேயே எவ்வித விதிகளுக்கும் உட்படாமல் இயங்கி வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.   மக்கள் கவனத்திலிருந்து அந்தப் பிரச்னை அகன்றவுடன் ஆட்சியாளர்கள் சீர்திருத்தத்தை நிறுத்தி விடுவார்கள்.

      நீக்கு
  3. ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றுவது வரவேற்கத்தக்கது.

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    நேற்று முழுவதும் என்னால் வலைப்பக்கம் வர இயலவில்லை. மன்னிக்கவும். நேற்று
    சற்று வெளியே சென்று விட்டேன். அனைவரின் பதிவுகளுக்கும் இனிதான் படிக்க வர வேண்டும்.

    சாலை விபத்துக்களை தடுக்க நல்ல முறையில் காரில் பொருத்த கருவி கண்டு பிடித்து தந்தவருக்கு பாராட்டுகள். அதை பயன்படுத்தி விபத்துக்களை தடுத்து உயிர்களை காப்பாற்ற அனைவரும் முன் வர வேண்டும். மேலும், மேலும், இது போல் சாலை விபத்துகளை குறைப்பது போல் பயன்பாட்டு கருவிகள் கண்டு பிடித்தால் நல்லது.

    ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருவது பாராட்டுக்குரிய விஷயம். இதனால் அறியா குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்படும். இந்த மாதிரி கிணறுகளை மூட உத்தரவு தந்தவர்களுக்கு நன்றிகள்.

    இரு செய்திகளுமே உயிர்களை காப்பாற்ற உதவும் செயலாக இன்றைய பாஸிடிவ் பகுதியில் பகிர்ந்ததற்கு உங்களுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   காலை வணக்கம்.   பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      மெதுவா வந்து படிங்க...    ஒன்றும் அவசரமில்லை.

      நீக்கு
  5. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஊர்ப்புறங்களில் பட்டாமணியர், கர்ணம் என்னும் நிர்வாகத்தினரின் கீழ் தலையாரி, கங்காணி (கண் காணி) எனும் காவல் பணியாளர்கள் இருப்பார்கள்...

    வெயிலோ மழையோ பெருவெள்ளமோ அவர்களின் பணி சிறப்பானது..

    அவர்கள் மக்களையும் இயற்கைச் சூழலையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்...

    அவர்களை மீறி ஒரு நாய் கூட ஊருக்குள் நுழைய முடியாது...

    அவர்களது விசாரணைக்கு புதியவர்கள் தப்பிக்க முடியாது...

    இன்னாரது செயலால் இன்ன மாதிரியான பிரச்னை ஏற்படுகிறது என்று ஊர்ப்பொதுவில் தைரியமாகச் சொல்வார்கள்...

    அதற்கெல்லம் பயந்தே மக்கள் ஒழுக்கமாக நேர்மையாக வாழத் தலைப்பட்டார்கள்...

    சிறப்பாக ஊர்க்காவல் செய்த தலையாரிகள் காவல் தெய்வங்களுடன் வைத்து வணங்கப் பட்டார்கள்...

    தஞ்சை மாவட்டத்தின் பட்டுக்கோட்டை நகரில் தலையாரித் தெரு என்று இன்னும் உள்ளது...

    இத்தகைய சிறப்பான பணிகளை 78/79 களில் ஒழித்துக் கட்டிய பெருமை ஒழித்துக் கட்டிய பெருமை அன்றைய அரசைச் சேரும்...

    அதற்குப் பிறகே கண்காணிப்பு இன்றி ஊர்கள் குட்டிச் சுவராகத் தொடங்கின...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.    பல்வேறு காரணங்களால் அம்முறைகள் மாற்றப்பட்டன.  சொன்னால் தவறாகும்.

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்.... அப்போதைய நடைமுறைகள்லாம் கிராமத்தின் வளர்ச்சியை முன்னிட்டு இருந்தது. ஆனா அது, கட்சி அரசியலுக்கு பிரச்சனையாக இருந்தது. திமுக கட்சி என்று மத்த கட்சிக்காரங்களுக்கு ஒத்துழைப்பதில்லை என்றெல்லாம் சில இடங்களில் செயல்பட ஆரம்பித்ததனால்தான் எம்.ஜி. ஆர் அந்த முறையை ஒழித்தார். இன்னொன்று அந்த அந்த ஊர் நாட்டாமைகள். ஆனாலும் அது சரியான முடிவாக அமையவில்லை.

      நீக்கு
    3. நீங்கள் சொல்வது சரியே..

      ஆனாலும்
      நாட்டாமை (நாட்டாண்மை) என்பவர் வேறு.

      பட்டாமணியர், கர்ணம் தலையாரி என்பவர்கள் வேறு...

      Village Headman என்பது பட்டாமணியருக்குத்தான்...

      இவர் தான் கிராமத்தின் சட்ட ஒழுங்கை பராமரித்து வரி வசூல் செய்து தாலுகா கருவூலத்தில் செலுத்துபவர்...

      அதற்கான கணக்குகளை ஒழுங்கு செய்து கொடுப்பவர் கர்ணம்...

      கிராமத்தில் குச்சி வரி எனப்படும் வீட்டு வரி எட்டணாவைக் கட்டமுடியாத ஏழைகளுக்குத் தாமே வரிகட்டிய பட்டாமணியர்களை நானறிவேன்...

      நாட்டாமைகள் ஏழைகளாக இருக்கலாம்...

      ஆனால் பட்டாமணியர்கள் ஓரளவு பொருளாதார வசதி உடையவராக இருப்பர்...

      ஏனெனில் பசலி முடிவில் இருசால் செய்ய வேண்டுமே...

      இன்னும் சொல்லலாம்..

      நீக்கு
  6. நாலு வருசமா பாழாய்க் கிடந்த ஆழ்துளை கிணற்றைத் தூர்ப்பதற்கு யாருமே சொல்ல வில்லை என்பது தான் அதிசயம்...

    சொல்லியிருந்தாலும் என்ன பதில் கிடைத்திருக்கும்!?...

    எல்லாம் எனக்குத் தெரியும்...
    உம் வேலையப் பார்த்துக்கிட்டுப் போ!...

    பலபேர் நிம்மதிய அழிச்சதுக்கு அப்புறம்
    கோயில் கட்டப் போறேன்... கொடிய நாட்டப் போறேன் ...ந்னு கிளம்பி இருக்கானுங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ பாருங்க... குற்றத்தையும் செய்துவிட்டு, பொதுமக்களின் வரிப்பணம் கோடிகளை விழுங்கிவிட்டு, 30 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு, இன்னும் ஒரு கோடி வேணும் என்று அரசியல் கட்சிகள் அரசியல் செய்து, அதுக்கும் மேல, அங்க கோவில் கட்டணும் என்ற கோரிக்கை. நாடு எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

      ஒரு அரசியல்வாதியை 'தேச விரோதி' என்று கோர்ட் பிரகடனப்படுத்தியது போல, அனேகமா எல்லோரும் பிரகடனப்படுத்தப்பட வேண்டியவர்கள்தாம்.

      நீக்கு
    2. சுயபுத்தி, குடும்ப,சமூக கடமைஉணர்வுகள், தேசபக்தி இதெல்லாம் சராசரித் தமிழனைவிட்டு விலகி வெகுநாட்களாகிவிட்டது. இதற்கெல்லாம் யார், யார் காரணம் என விளக்கவேண்டியதில்லை.

      ஆழ்துளை விபத்து தொடர்பாக வாட்ஸப்பில் நானும் ஏகப்பட்ட வித,வித புலம்பல்களைப் பார்க்கிறேன். ஒப்பாரியின் நவீன வடிவங்கள். ஒரு அப்பாவியின் உயிர் அநியாயமாய்ப் போக்கப்பட்டுவிட்டது, ஒரு குடும்பத்தின் அலட்சிய அல்லது அஜாக்ரதைப்போக்கினால். இதுவே உண்மை. எனவே குற்றம் சுமத்தப்படவேண்டியவர் யார்? அதை நோக்குவோர் யாருமில்லை. நீதி, நியாயம் பார்த்தால், அரசியல், மீடியா வியாபாரம் நடக்காது. அதுதானே முக்கியம் தமிழ்நாட்டில். பொதுநலன், மக்கள் பணம் நாசமனால் யாருக்கென்ன! நாம் டிவி பார்த்து பொழுதுபோக்குவோம், அடுத்தவர் புலம்பினால் சேர்ந்து புலம்புவோம் என்கிற விட்டேத்தி நிலை, கையாலாகா நிலை, சராசரிகளுக்கு..

      இது சம்பந்தமாக ஒரு ’வாட்ஸப் உணர்வுப்பெருக்கிற்கு’, அபூர்வமாக அளித்த பதிலொன்றின் ஒரு சிறுபகுதியை இங்கே தருகிறேன்.(நெல்லையின் மேற்கண்ட பின்னூட்டம் கண்டபின்):

      ’’.... சீனா, க்யூபா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளிலோ, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற ஜனநாயக நாடுகளிலோ (உதாரணத்திற்கு இவை), இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால், பொறுப்பற்ற முறையில், உதாசீனமாக நடந்துகொண்டு ஒரு உயிரை வாங்கிய குற்றத்திற்காக, பெற்றோர்கள் அரசினால் உள்ளே தள்ளப்பட்டு, இந்நேரம் கம்பி எண்ணிக்கொண்டிருப்பார்கள். சம்பந்தப்பட்ட சமூகம், அவர்களைக் கொண்டாடியிருக்காது. தள்ளிவைத்திருக்கும்.’’

      In many civilized societies, an unattended child, will be treated, rightly, as an offence on the part of parents/guardians.

      நீக்கு
    3. ///சம்பந்தப்பட்ட சமூகம் அவர்களைக் கொண்டாடியிருக்காது... தள்ளி வைத்திருக்கும்..///

      இதெல்லாம் இங்கு நடக்கக் கூடியதா?...

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    இரண்டும் நல்ல செய்திகள். துரை செல்வராஜூ ஐயா சரியாகச் சொல்லி இருக்கிறார். மக்களுக்கு அலட்சியப்போக்கு அதிகரித்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் வெங்கட்.  வாங்க...

      அவர் ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

      நீக்கு
  8. மதுரை இளைஞர் பாசில் அவர்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    பயன் தராத ஆழ்துளை கிணறுகள் மூடல், அரசிற்கு நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  9. மதுரை பாசில் அவர்களின் கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளது. அதை பரிசோதித்து தரம் உள்ளதா என்று உறுதி செய்தபின் அரசு அதை சந்தைப்படுத்த முன்வரவேண்டும்.

    ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஒரு குழந்தை பலியானதற்கு பிறகுதான் அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஞானோதயம் வந்திருக்கிறது. இந்த முயற்சியை பாதியிலேயே கைவிட்டு விடாமல் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளையும் நிரந்தரமாக மூடுவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும்.

    இத்தகைய பயனுள்ள செய்திகளை ஒவ்வொரு வாரமும் திரட்டி பகிர்வதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  10. பாசில் வாழ்துகள். ஆழ்துணை கிணறுகளால் நடந்த சோகங்கள் எப்பொழுதோ கவனத்தில் எடுத்திருக்க வேண்டியது இப்பொழுதாவது கவனம் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. பாசில் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
    ஆழ்துளை கிணறுகளால் (மூடபடாத)
    விபத்துககள் இனி நிகழாமல் இருக்க வேண்டும்.
    விழிப்புணர்வுடன் கவனமாய் மூட வேண்டும் .
    ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேகரிப்பாய் மாற்றியதை முன்பு பாஸிடிவ் செய்தியில் வந்தது. அது போல் மாறினால் நல்லது தான்.

    பதிலளிநீக்கு
  13. இரண்டு செய்திகளுமே மக்களின் பாதுகாப்புக்கானவை.

    ஆழ்துளைக் கிணறுகள்... இனியேனும் கவனமாக இருந்து விபத்துகளைத் தவிர்த்திடல் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. பாசிலுக்கு வாழ்த்துகள். இது போன்ற நம் இளைஞர்களுக்கு அரசு ஆதரவு தந்து மக்களுக்கு உதவ வேண்டும்.
    ஆழ்துளை கிணற்றை பாதியில் விடாது அனைத்தையும் மூடி விட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. என் வீட்டில் பயன்படாத ஆழ் குழாயினை, நான் ஏற்கனவே மழை நீர் சேமிப்பாய் மாற்றியிருக்கிறேன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!