வெள்ளி, 8 நவம்பர், 2019

வெள்ளி வீடியோ : உங்கள் அழகிய மேனி சுகமா


வழக்கம்போல முதலில் நேயர் விருப்பம் !

பானு அக்கா சென்ற வாரத்தில் பாவ மன்னிப்பு படத்தில் வரும் "அத்தான்...   என்னத்தான்...   "  பாடலைக் குறிப்பிட்டிருந்தார்.  சென்ற வெள்ளிக்கிழமை அன்று,  ஏற்கெனவே ஏகாந்தன் ஸார் விருப்பம் வெளியிட்டதால், இந்த வரம் பானு அக்காவின் நேயர் விருப்பம்!




பாவ மன்னிப்பு.  1961 - இல் வெளிவந்த படம்.  திரைக்கதை, இயக்கம் பீம்சிங்.  பீம்சிங் அவர்கள் தனது புத்தா பிலிம்ஸை ஏ வி எம் நிறுவனத்துடன் சேர்த்துத் தயாரித்திருக்கும் படம்.  இந்தக் கதை சந்திரபாபு இயக்குனர் பீம்சிங்கிடம் சொன்ன கதையிலிருந்து உருவானதாம்.  

பீம்சிங் சந்திரபாபுவை வைத்து இந்தப் படத்தை 4,50,000 ரூபாய் பட்ஜெட்டில் "அப்துல்லா" என்கிற பெயரில் 2000 அடி வரை எடுத்து விட்டாராம்.  ஆனால் அவருக்கே திருப்தி அளிக்காத நிலையில் ஏ வி எம் சரவணன் அவர்களிடம் போட்டுக்காட்ட, அவர் தந்தை மெய்யப்ப செட்டியாரிடம் யோசனை கேட்க, ஏ வி எம் நிறுவனமும் தயாரிப்பில் இணைந்து கொள்ள அப்புறம் 1,05 மில்லியன் பட்ஜெட்டில் உருவானதாம் பாவ மன்னிப்பு திரைப்படம்.  வசனங்களை எம் எஸ் சோலைமலை எழுதி இருக்கிறார்.  இதில் சிவாஜியின் ஜோடியாக நடித்திருந்த தேவிகாவுக்கு இது மூன்றாவது படம் என்பது மட்டுமல்ல,  அவருக்கு சம்பளம் 4500 ரூபாய் என்கிற விவரமும் சுவாரஸ்யம்.  மேலும் அங்கு கிடைத்த இந்த விவரம் படித்துப் பாருங்கள். சுவாரஸ்யமான நிறைய விவரங்கள் கிடைக்கும். 

பாவ மன்னிப்பு படம்தான் லதா மங்கேஷ்கரும் அவர் சகோதரி ஆஷா போன்ஸ்லேயும் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படமாம்.  இடைவேளைக்கு காட்சியில் மொழியே புரியாத நிலையில் கூட சகோதரிகள் அழுது விட்டார்களாம்.  படம் முடிந்தபின் சிவாஜி கணேசனுக்கு இருவரும் தனித்தனியாக ராக்கி கட்டி சகோதரர் ஆக வரித்துக் கொண்டார்களாம்.  அது மட்டுமின்றி, இந்தப் படத்தின் 16 mm பிரதி ஒன்றை தங்களுக்கு சொந்தமாக தரும்படி கேட்டு, வாங்கி வைத்துக் கொண்டார்களாம்.

இதில் ஆயுர்வேத மருத்துவராக நடித்திருப்பபது கொத்தமங்கலம் சுப்பு.  நடிகராக அதுதான் அவர் கடைசிப் படமாம்.

காலங்களில் அவள் வசந்தம் பாடலில் வரும் 'கலைகளிலே அவள் ஓவியம் வரிக்கு ஓவியர் ஜெயராஜை இன்ஸபிரேஷனாக வைத்திருந்தாராம் கண்ணதாசன்.

காலங்களில் அவள் வசந்தம் பாடலை ஜெமினியின் ஆஸ்தான பாடகர் ஏ எம் ராஜாவைத்தான் பாட வைக்க விரும்பினாராம் ஏ வி எம் சரவணன்.  பீம்சிங் அவரை கன்வின்ஸ் செய்து பி பி ஸ்ரீநிவாஸுக்கு வாய்ப்பு கொடுக்க, பி பி எஸ்ஸுக்கு இந்தப் பாடல் ஒரு திருப்பு முனையாம்...

கண்ணதாசன் பாடல்களுக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை.  இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே இனிமையான பாடல்கள்.  குறிப்பாக 'வந்த நாள் முதல்', 'காலங்களில் அவள் வசந்தம்', 'சிலர் சிரிப்பார்' 


அத்தான் என்னத்தான் அவர் என்னை தான் 
எப்படி சொல்வேனடி 
அவர் கையை தான் 
கொண்டு மெல்லத்தான் 
வந்து கண்ணை தான் 
எப்படி சொல்வேனடி  
அத்தான் என்னத்தான் 
அவர் என்னை தான் 
எப்படி சொல்வேனடி  
ஏன் அத்தான் என்னை பார் அத்தான் 
கேள் அத்தான் என்று சொல்லித்தான்  

சென்ற பெண்ணை தான் கண்டு துடித்தான் 
அழைத்தான் பிடித்தான் அணைத்தான் எப்படி சொல்வேனடி  
அத்தான் என்னத்தான் அவர் என்னை தான் எப்படி சொல்வேனடி  

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான் முத்துத்தான் 
உடல் பட்டுத்தான் என்று தொட்டுத்தான் 
கையில் இணைத்தான் 
வளைத்தான் பிடித்தான் அணைத்தான் 
எப்படி சொல்வேனடி  

அத்தான் என்னத்தான் அவர் என்னை தான் எப்படி சொல்வேனடி  
அவர் கையை தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணை தான் 
எப்படி சொல்வேனடி  
அத்தான் என்னத்தான் அவர் என்னை தான் 
எப்படி சொல்வேனடி




===================================================================

இரண்டாவது பாடல் என் விருப்பத்தில்!

1942 இல் கல்கி எழுதிய நாவலை 1960 இல் படமாக்கினார்கள்.  ஜெமினி கணேசன், வைஜயந்தி மாலா நடித்திருக்கும் திரைப்படத்தில் சரோஜா தேவி குந்தவையின் தோழியாக சாதாரணமாக வந்து போவாராம்.





​கண்ணதாசன் பாடலுக்கு இசை வேதா.   வேதாவின் இசையில் மிக இனிமையான இந்தப் பாடலை ஏ எம் ராஜாவும் பி சுசீலாவும் பாடியிருக்கிறார்கள்.​  இயக்கம் டி. யோகானந்.

​வைஜயந்திமாலா லேடி சூப்பர்ஸ்டார் என்று அறியப்பட்டவர்.  அவர் காலத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை.  சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியிலோ எதிலோ அவர் வந்து கமலுக்கு விருது வழங்கினார்.  கமல் விஸ்வரூபம் படத்தில் நடிக்க அழைத்ததும் அவர் மறுத்து விட்டாராம்.அவரே சொன்ன தகவல்.​


பழகும் தமிழே பார்த்திபன் மகனே 
அழகிய மேனி சுகமா சுகமா?  
பாவலன் கவியே பல்லவன் மகளே 
காவலன் மேனி சுகமே 
உன் கைகளினால் வந்த குணமே 
உன் கைகளினால் வந்த குணமே

 வேலாலெறிந்து வெல்லும் 
உங்கள் வீரமும் காதல் சொல்லும் 
வேலாலெறிந்து வெல்லும் 
உங்கள் வீரமும் காதல் சொல்லும் 
பால்போல் தெளிந்த முகமும் 
பால்போல் தெளிந்த முகமும் 
நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும் 

சித்திர வடிவம் போலே 
தங்கச் சிலையைக் கண்டதினாலே 
சித்திர வடிவம் போலே 
தங்கச் சிலையைக் கண்டதினாலே 
நித்திரை தீர்ந்தது கனியே 
நித்திரை தீர்ந்தது கனியே 
உன் நினைவில் வீழ்ந்தது மனமே  
உங்கள் அழகிய மேனி சுகமா 
உன் காவலன் மேனி சுகமே  

வளரும் காதலின் எல்லை 
இதை மறுப்பவர் யாரும் இல்லை 
வளரும் காதலின் எல்லை 
இதை மறுப்பவர் யாரும் இல்லை 
வளரும் காதல் வளரும் 
வளரும் காதல் வளரும் 
நம் வாழ்வினில் அமைதி நிலவும் 
உங்கள்  அழகிய மேனி சுகமா 
உன் காவலன் மேனி சுகமே  

பழகும் தமிழே பார்த்திபன் மகனே 
அழகிய மேனி சுகமா சுகமா? 
பாவலன் கவியே பல்லவன் மகளே 
காவலன் மேனி சுகமே 
உன் கைகளினால் வந்த குணமே 
உன் கைகளினால் வந்த குணமே

86 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. சித்திர வடிவம் போலே - தங்கச்
    சிலையைக் கண்டதினாலே!...

    வெள்ளி விடியலில் தங்கச் சிலை....

    இனிமை.. இனிமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி...    நன்றி...

      உங்கள் அழகிய மேனி சுகமா?

      நீக்கு
    2. தமிழ் தந்த மேனிக்கு
      குறள் கொண்ட நெஞ்சுக்கு
      நிறையே எந்த நாளும்..
      கலையே என்னை ஆளும்..

      நன்றி.. நன்றி..

      நீக்கு
  3. பாருங்கள்...

    இனிமையிலும் இனிமையான பாடலைக் கேட்டதும் வணக்கம் சொல்ல மறந்து போச்சு!..

    வணக்கமுங்கோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.   வாங்க...  வாங்க...

      நீக்கு
  4. "பார்த்திபன் கனவு" படத்தின் செட்டிங்க்ஸ் எல்லாம் ஓவியர் மணியமின் வரைபடங்களை வைத்துப் போடப்பட்டதாகச் சொல்லுவார்கள். படத்தின் பெயர் முதல் கடைசியில் வரைக்கும் மணியம் வரைந்த படங்களை வைத்தே பெயர்கள் எல்லாம் வரும். இது ஜெமினிக்கு ஓர் வெற்றிப்படம் என நினைக்கிறேன். ஆனால் நான் பார்த்தது இந்தப் படம் மதுரை "சந்திரா" என்னும் "பழனி" தியேட்டரில் தோழியோடு காலைக்காட்சியாக வந்தப்போப் பார்த்தேன். படம் முடியும் வேளையில் அப்பாவுக்குத் தெரிந்து விடுமோ என்னும் பயத்தில் முடியும் முன்னரே எழுந்து வந்து விட்டேன். கூட்டத்தோடு வந்திருந்தால் தெரிய வாய்ப்பில்லை என்பது உறைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரையில் சந்திரா அலலது பழனி தியேட்டரா?  நான் கேள்விப்பட்டதேயில்லையே...    எங்கு இருக்கும் அது?

      நான் படம் பார்க்காததால் ஓவியங்கள், பெயர் போடுதல் எல்லாம் அறியேன் நான்.  இதே படத்தில் இன்னொரு இனிமையான பாடலும் உண்டு.  கேட்டிருப்பீர்கள்.  

      "இதய வானின் உதய நிலவே...   எங்கே போகிறாய்...?"  இந்தப் பாடல் வேறொரு தமிழ்ப்பாடலை நினைவு படுத்தும்!

      நீக்கு
    2. ஆரம்பத்தில் "பழனி" என்னும் பெயரில் இருந்தது அந்தத் திரை அரங்கு. வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி முனையில் நேரு பிள்ளையார் இருக்கும் வரிசையிலேயே அந்தத் திரை அரங்கு இருந்தது. சம்பந்த மூர்த்தித் தெருவுக்கு முன்னாடியே வந்துடும். எஸ்.பாலச்சந்தரின் "பொம்மை" படம் அந்தத் திரை அரங்கில் தான் திரை இடப்பட்டது. இரு மாசி வீதிகளும் அடைத்துக் கூட்டம் தாங்கலை. பின்னர் சந்திரா என்று பெயர் மாறியது. அப்போது தான் காலைக்காட்சிகளும் போட ஆரம்பித்தார்கள். 11 மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்கு முடிஞ்சுடும். பல பெண்களுக்கும் அது வசதியாக இருந்தது என்பார்கள். வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு திரைப்படம் பார்த்துட்டுப் பின் வீட்டுக்கு நேரத்தோடு போயிடலாம். மத்தியான வேலைகளும் தடைப்படாது!

      நீக்கு
    3. அது சாந்தி தியேட்டர் இல்லையோ...    அங்குதான் நான் நீலவானம், இன்னும் சில படங்கள் பார்த்தேன்!

      நீக்கு
    4. முன்னாடியே ஒரு தரம் இதே பதிலைச் சொல்லி இருந்தீங்க. பின்னர் மூன்றாவது கைக்கு மாறிய பின்னர் பெயர் மாறி இருக்கலாம்.

      நீக்கு
    5. ஆமாம்...   முன்னரே சொன்ன நினைவு எனக்கும் இருக்கிறது.  முதல் முறை கேட்கும்போதே இந்தத் தியேட்டரா இருக்குமோ எனும் சந்தேகத்திலேயே கேட்டேன்!

      நீக்கு
  5. அத்தான், என்னத்தான் பாடல் குறித்து கண்ணதாசன் ஏதோ சொல்லி இருந்தார் என நினைக்கிறேன். ஆனால் நினைவில் இல்லை. இந்தப் படம் பார்த்த மாதிரியும் இருக்கு. இல்லை போலவும் இருக்கு. ஆனால் பாடல்கள் பிரபலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணதாசன் பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு பின்னணி சொல்வார்கள்.இது, மஹா பெரியவர் அனுபவங்கள் எல்லாம் நான் ரொம்ப நம்புவதில்லை!  ஆனால் சுவாரஸ்யமாக படித்துக் கொள்வேன்!

      நீக்கு
    2. ஜிவாஜி ஏதாவது சொல்லியிருந்தா அது நினைவில் இருந்திருக்கும்...

      இஃகி..இஃகி..இஃகி!..

      நீக்கு
    3. ஹா....  ஹா...  ஹா... அதுதானே?!!  அக்கா மோடத்தை அணைச்சிட்டு தூங்கி இருப்பாங்க...    காலைல வந்துதான் பார்ப்பாங்க...

      நீக்கு
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மோடத்தை அணைப்பது எல்லாம் நம்ம வீட்டில் ஸ்ரீரங்கத்தில். இங்கே பையர் வீட்டில் அணைப்பாங்க. மருமகள் தான் கடைசியில் குஞ்சுலுவுக்குப் பால் காய்ச்சி எடுத்துப் போவாள். அப்போ அணைப்பாள் என நினைக்கிறேன். காலம்பர நாங்க யார் சீக்கிரம் எழுந்துக்கறோமோ அவங்க போட்டுடுவோம். மணி இன்னும் மாலை ஏழரை ஆகலை. அதுக்குள்ளே தூக்கமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    5. //ஜிவாஜி ஏதாவது சொல்லியிருந்தா அது நினைவில் இருந்திருக்கும்...
      இஃகி..இஃகி..இஃகி!..// அதானே, ஜிவாஜி ஏதும் சொல்லி இருக்க வேண்டாமோ? ஏவிஎம் சரவணனின் பேட்டியைப் படிக்கும்போதே சாப்பிடப் போயிட்டேன். இனி மிச்சத்தைப் படிக்கணும்.

      நீக்கு
    6. //மணி இன்னும் மாலை ஏழரை ஆகலை. அதுக்குள்ளே தூக்கமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

      ஓ...  இன்னும் தூங்கவில்லையா...   ஓகே ஓகே....

      நீக்கு
    7. எல்லாம் சரி, ஏவிஎம் சரவணன் சொல்லி இருப்பதில் பாவமன்னிப்புப் படம் குறித்து ஏதும் சொல்லவே இல்லையே? ஆவலுடன் போய்ப் பார்த்து ஏமாந்தேன். :(

      நீக்கு
    8. ஆமாம்.  சம்பந்தம் இருந்தால்தான் சுவாரஸ்யமா? கிடைக்கும்போது சிலவற்றைப் பகிர்ந்தால் படிக்க சுவாரஸ்யம்!  அவ்வளவுதான்!

      நீக்கு
  6. அந்த பராசக்தி படத்திலோ
    அல்லது வேறெதிலோ
    சில வரிகள் இப்படி வரும்..

    கல்லைத் தான் மண்ணைத் தான்
    காய்ச்சித் தான் குடிக்கத் தான் கற்பித்தானா!...

    இந்த வரிகள் தான்

    அத்தான் என் அத்தான்!..
    என் எண்ணத்தான்!..
    என் இதழில் தமிழை நீ
    அருந்தத் தான்!..

    இதென்ன...
    வண்டி வேறெங்கோ போகிறது!..

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    முதல் பாடல் அருமை. அடிக்கடி கேட்ட பாடல். இரண்டாவதும் அழகான பாடல். அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். இன்னமும் இந்த படம் எதிலும் பார்த்ததில்லை. இனி பார்க்க வேண்டும்..

    வைஜெயந்தி மாலா நடிப்பில் ஒரு வித அலட்சியமும், அழகும் சேர்ந்து இருக்கும். நடிகை பானுமதியம்மாவும் அப்படித்தான். இருவருமே தமக்கென்று ஒரு பாணியை வைத்தபடி நடித்தவர்கள். இருவர் நடிப்பும் நன்றாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம்..   வாங்க கமலா அக்கா...

      பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      ஆமாம்... வைஜயந்தி அம்மாவும், பானுமதி அம்மாவும் கொஞ்சம் ஒரே மாதிரி குணநலன்கள், திறமைகள் படைத்தவர்கள்!

      நீக்கு
    2. இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. பானுமதி ஆளுமை மிகுந்தவர். அவர் சொல்வது தான் எங்கேயும்! வைஜயந்தி நீக்குப்போக்குத் தெரிந்து ஒத்துப் போனவர். அதோடு பானுமதி மாதிரி வைஜயந்தி படங்கள் ஏதும் எடுத்ததாகத் தெரியவில்லை. வாழ்க்கை போகும் போக்கில் போனார் வைஜயந்தி என்பது என் எண்ணம். தனிப்பட்ட விருப்பங்கள் எதுவும் நிறைவேறாவிட்டாலும் கிடைத்ததை வைத்து வாழ்ந்தார்/வாழ்கிறார் வைஜயந்தி. வளைந்து கொடுத்து வாழ்ந்தார் வைஜயந்தி. வளையாமல் நிமிர்ந்தே இருந்தார் பானுமதி. ஆனால் பானுமதி தன் நிலையிலிருந்து சிறிதும் விட்டுக் கொடுக்க மாட்டார். தனிப்பட்ட வாழ்க்கையைத் திரைப்பட வாழ்க்கையிலிருந்து தனியாகப் பிரித்து வாழ்ந்தார். அதில் யாரையும் தலையிட அனுமதிக்கவில்லை. சொந்த அப்பாவாக இருந்தாலும் கூடத் தன் மணவாழ்வில் குறுக்கிடாமல் பார்த்துக் கொண்டார். சிறந்த நிர்வாகி. பாடல், ஆடல் அனைத்திலும் தேர்ந்தவர். அவரே சொந்தமாகப் படங்கள் எடுத்திருக்கிறார். பல படங்களை இயக்கி இருக்கிறார். எழுத்துத் திறமை மிகுந்தவர். திரைப்படங்கள் மட்டுமின்றி எழுத்து உலகிலும் ஜொலித்தார் பானுமதி! பானுமதி அம்மா என்றால் திரை உலகில் ஓர் மதிப்பும், மரியாதையும் அனைவரும் காட்டும்படி வாழ்ந்தார்.

      நீக்கு
    3. அவசரம்!  அப்போது வெளியே வேறு வேலைக்குச் செல்ல வேண்டிய நேரம்!  நீங்கள் சொன்னது சரி என்று எனக்கும் தோன்றியது. ஆனால் மேலே வேறு விதமாகச் சொல்லியிருந்தால் ஒரே வார்த்தையில் முடித்த்து விட்டேன்!  மன்னிக்கவும்!

      நீக்கு
  8. பெங்களூரில் இன்று காலைக் காப்பி குடிக்கும்போதே படபடத்தது மழை..! ஒரு ஆச்சரிய ஆரம்பமாயிருக்கிறதே தினம் எனப் பார்த்தேன். இரண்டு பழைய பாடல்கள்! விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஒரு பக்கம், வேதா ஒருபக்கம். அபாரம். அப்போதெல்லாம் தமிழ் நன்றாகத்தான் பழகியிருந்திருக்கிறது.. இப்போது அதற்கு என்ன வந்ததோ தெரியவில்லை!

    வைஜயந்தி, பாலி என்றொரு வடநாட்டு அசடைத் தேடிப் பிடித்துக் கல்யாணம் செய்துகொண்டாரே.. எங்கேபோய் முட்டிக்கொள்வது எனத் தெரியவில்லை தமிழனுக்கு.
    தமிழிலிருந்து பாலிவுட் போன நடிகைகள், அங்கே பெரிதும் கொண்டாடப்பட்டார்கள். ஜொலித்தார்கள் திரையில். வாடினார்கள் வாழ்க்கையில். ஹேமமாலினி ஒரு விதிவிலக்கு. அவரையும், அவரது பெண்களையும்கூட, தர்மேந்திராவின் ஹரியானா கும்பல் ஒருமாதிரி விலக்கித்தான் வைத்திருந்தது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்...   எபப்டியோ மழை பெய்து நாடு நன்றாய் இருந்தால் சரி!!!

      //ஹரியானா கும்பல் ஒருமாதிரி விலக்கித்தான் வைத்திருந்தது ..//

      வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்!   இன்னமும்தானே?

      நீக்கு
    2. ஏகாந்தன் சார்... வடநாடு சென்ற நடிகைகள் மட்டுமல்ல இங்கிருக்கும் நடிகைகளிலேயே வாழ்க்கையில் ஜொலித்தது மிக மிக்க் குறைவுதான். அப்படி ஜொலித்தவர்கள் அசட்டுக் கணவர்களை அடையப் பெற்றவர்கள்தாம்

      நீக்கு
    3. ஓ! இந்தமாதிரி அசடுகள் தங்கள் நடிகை-மனைவிகளை நன்ன்னாப் பாத்துக்கிறதுகளோ ..என்னவோ..யாரறிவார்!

      நீக்கு
  9. சரி, உருளைக்கிழங்குக் காரக்கறிக்கும், சி.உ.கறியும் போணியே ஆகலை. போய்ப் பொடிமாஸ் பண்ணிப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிட வாங்க பகுதியா?   நான் வந்து கமெண்ட் போட்டேனே...

      நீக்கு
  10. இனிமையான பாடல்...
    இதமான பாடல்...

    என்றும் ரசிக்கலாம்...

    பதிலளிநீக்கு
  11. ///திரைப்படத்தில் சரோஜா தேவி குந்தவையின் தோழியாக சாதாரணமாக வந்து போவாராம்.///

    அப்போ பார்த்திபன் கனவு - படம் பார்த்ததில்லையா!...

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. நேயர் விருப்ப பாடலும், பார்த்திபன் கனவு பாடலும் அருமையான காலத்தை வென்ற பாடல்கள்.
    பகிர்வுக்கு நன்றி.
    தொலைகாட்சியில் வைத்த போதும் பார்த்திபன் கனவு படம் பார்க்கவில்லையா?
    அருமையான படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொலைக்காட்சியில் போட்டார்களா?   தொலைக்காட்சியே பார்ப்பதில்லை!

      நீக்கு
  14. பார்த்திபன் கனவு கல்கியில் வந்தது படித்து இருப்பீர்கள் அம்மா, அப்பா சேர்த்து வைத்த தொகுப்பை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் படிக்கப் போகிறேன் கோமதி அக்கா, எனக்கும் ரொம்பப் பிடிக்கும் பா.க.

      நீக்கு
    2. //நானும் படிக்கப் போகிறேன் கோமதி அக்கா, // - பொன்னியின் செல்வன் 2 அத்தியாயமே இன்னும் 5 வருஷமா படிச்சு முடிக்கலை. இதுல புதுசா 'பார்த்திபன் கனவு' இவங்க படிக்கப்போறாங்களாம். ஏற்கனவே 'சரித்திர நாவல்கள்லாம் பிடிக்காது'ன்னு ஒரு பில்டப் கொடுத்திருக்காங்க.

      இறைவா... இந்தப் பின்னூட்டம் என் கண்ணில் ஏன் பட்டது? ஹா ஹா

      நீக்கு
    3. அதிராவின் தலையணைக்கு அடியில் பொன்னியின் செல்வன், அலைஓசை, பார்த்திபன் கனவு எல்லாம் இருக்கிறதாக்கும்!

      நீக்கு
    4. ஹா ஹா ஹா இருந்து பாருங்கோ ஒரு நாளைக்கு நான் படிச்சு முடிச்சிட்டேன் எனப் போஸ்ட் போடும்போது நீங்கள் எல்லோரும் மூக்கில விரல் வச்சு வாயடைச்சு நிற்பீங்கள்:)

      நீக்கு
  15. இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள். அபூர்வமாகத்தான் இப்படி அமைகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.   எல்லோருக்குமே பிடித்த பாடல்களாய் அமைந்திருக்கின்ற பாடல்கள்.

      நீக்கு
  16. திரைத்துறையினரின் அனுபவங்களும், வாழ்க்கையுமே நமக்குப் படிப்பினைதான்.

    திறமையான சந்திரபாபுவை மற்றும் பலரை குடிகார்ர்களாக்கி சொந்தப் படம் எடுக்க வைத்து வாழ்க்கையை அழித்ததும் அந்தத் திரைத்துறையினர்தாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திரபாபுவைப்பற்றி ஜெயகாந்தன் தன் ‘ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ புத்தகத்தில் விஷயபூர்வமாக எழுதியிருக்கிறார்.

      நீக்கு
    2. அதிக பணம்!   அது செய்யும் மாயங்கள்.

      நீக்கு
  17. ஆஹா! இன்று என்னுடைய விருப்பமா? நன்றி! 
    நண்பர்களோடு கடற்கரைக்குச் சென்றிருந்த கண்ணதாசன் கடலை வாங்கி சாப்பிட்டிருக்கிறார். சாப்பிட்டு முடித்த அவர் அந்த பொட்டலத்தை பிரித்து பார்க்க, அதில் யாரோ ஒருவர், "கல்லைத்தான், மண்ணைத்தான், காய்ச்சித்தான், குடிக்கத்தான் கற்பித்தானா?" என்று எழுதியிருந்ததை படித்தாராம். பிறகு பாடல் எழுத ஸ்டுடியோவிலிருந்து அழைப்பு வர, அவர் எழுதிய பாடல்தான் 'அத்தான், என்னத்தான்..'பாடல் என்று எப்பொழுதோ குமுதத்தில் படித்த ஞாபகம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆ இந்தக் கல்லைத்தான் மண்ணைத்தான்.. இதுவும் எனக்குத் தெரியுமே... அம்மா பாடுவா...

      நீக்கு
    2. நன்றி பானு அக்கா.   எப்போதுமே நீங்கள் வந்தால் ஒரு எக்ஸ்டரா  தகவல் கிடைக்கும்.

      நீக்கு
    3. // அம்மா பாடுவா //

      துரை ஸார் அது வசனம்னாரே....

      நீக்கு
    4. எனது நினைவுப் பேழையில் அது வசனமாகவும் இருக்கிறது...

      ஸ்ரீமதி பானுமதி அவர்கள் சொல்லிய கடலை மடித்திருந்த காகிதமாகவும் இருக்கிறது...

      பானுமதி அவர்கள் சொல்லிய விவரத்தை முன்னதாகச் சொல்வதற்கு இணையம் ஒத்துழைக்கவில்லை...

      கைத்தலத்தில் தட்டச்சு செய்வதும் டட்டென இயல வில்லை...

      அ.அ. வந்து அம்மா பாடுவா...
      என்றதும் இன்னும் பல இருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது....

      நீக்கு
    5. அதில் இன்னும் இருக்கு வசனம்...
      கல்லைத்தான் மண்ணைத்தான் காச்சித்தான் குடிக்கத்தான் கற்பிற்தானா- இல்லைப்
      பொன்னைத்தான் பொருளைத்தான் போட்டுத்தான்.... இப்படி தொடரும் அது...

      நீக்கு
  18. தன் முதல் கலவி அனுபவத்தை தன் தோழியோடு பகிர்ந்து கொள்ள விரும்பும் ஓர் பெண், சொல்லத் தொடங்கி ஒரு நிலைக்கு மேல் சொல்ல முடியாமல் 'எப்படி சொல்வேனடி?' என்று முடித்திருப்பதை பார்க்கும் பொழுது இதுவல்லவோ கவிதை நயம் என்று தோன்றுகிறது. இப்பொழுதும் எழுதுகிறார்களே, 'கட்டிப்புடி,கட்டிப்புடிடா, கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா..' என்று. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா பானுமதி அக்கா.. இங்கு நீங்க குறிப்பிட்ட கட்டிப்புடிடா பாடல் பற்றி மீ எதுவும் சொல்லமாட்டேன்ன்ன் ஹையோ ஹையோ:))

      நீக்கு
    2. இதே போல வார்த்தையைச் சொல்லாமலேயே புரிய வைக்கும் பாடலும் ஒன்று உண்டு.   அதுவும் பி சுசீலா அம்மா தான்.  "ஆயிரம் ரிவுகள் வருவதுண்டு..."

      நீக்கு
  19. அதிகம் சேதப்படுத்தப்படாமல் திரைப்படமாக்கப்பட்ட நாவல் பார்த்திபன் கனவு என்று நினைக்கிறேன். ஒரு முறை தொலைகாட்சியில் பார்த்தேன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...     இன்னும் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை!

      நீக்கு
  20. இரண்டு படமும் பார்ததில்லை. பாடல்கள் கேட்டிருக்கிறேன் இனிமை.

    பதிலளிநீக்கு
  21. இரு பாட்டுக்களும் அழகானவையே.. முதல் பாடல்.. அத்தான்.. என்னத்தான். போலவே தானே.. காய் காய் அத்திக்காய்..பாடலும் கிட்டத்தட்ட காயை வச்சே ஒரு பாடல்... அனைத்தும் அழகுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா...    சில பாடல்களைக் கேட்டதுமே வேறு சில பாடல்கள் நினைவுக்கு வரும்!

      நீக்கு
  22. //ஆஷா போன்ஸ்லேயும்//

    ஆஆஆஆஆஆ என் பெயரும் அடிபடுகுதே இங்கின என ஓடி வந்தேன்ன்:).

    ///பாவ மன்னிப்பு. 1961 - இல் வெளிவந்த படம்.///
    இதை எந்தத் தியேட்டரில் போய்ப் பார்த்தனீங்களெண்டு சொல்லுங்கோ ஸ்ரீராம்:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் படம் தியேட்டரில் பார்த்த நினைவில்லை அதிரா...    தொலைக்காட்சியில்தான் பார்த்திருப்பேன்.  

      நீக்கு
  23. பிற்பகல் 1:23 அ.அ. -வுக்குப் பின் யாரும் தலைகாட்டவில்லை. பிற்பகல் தூக்கம் கழியவில்லை போலும். ஒருவேளை, விடியலுக்காகக் காத்திருக்கிறதோ எபி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)))

      விடிஞ்சுது போங்க...     இதோ வந்தாச்சு!   பதில் தந்தாச்சு!

      நீக்கு
  24. பாவ மன்னிப்பு..அழகான திரைக்கதையையும், பாடல்களையும் கொண்ட படம். பார்த்திபன் கனவு புதினத்திற்கு ஈடாக திரைப்படம் இருந்ததாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!