வியாழன், 14 நவம்பர், 2019

சோதனை ஓட்டம்


"ப்.....பூ"
பிலஹரி 
----------------------






மணி பத்துக்கு மேலாகி விட்டது. 

இரண்டு நாட்களாகக் கண்ணீரைச் சிந்தியும், கொட்டியும் வானமங்கைக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டதோ என்னவோ...  ஈரத்துக்கு பதில் நெருப்பைத் தேக்கி அண்டம் முழுமையும் அனற் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெய்யில்...   வெய்யில்...   அப்படியொரு வெய்யில் ! 

காம்பவுண்டுக்கு வெளியே சுவரையொட்டி, தலைக்குமேல் பரவலாகப் படந்திருந்த வேப்ப மரத்தினடியில் கையில் தகரக் குவளையுடன் தவமிருந்தான் அந்தப் பரட்டைத் தலைச் சிறுவன்.

முளைத்த இடத்துக்கு நிழல் கொடுத்து தன் நன்றியைத் தெரிவிப்பது விருட்சம்.  மகாத்மாவைப் பெற்ற மண் கோட்ஸேயையும் சூலுற்றது போல் அந்த விருட்ச வகையிலும் ஒரு பனைமரம் உண்டல்லவா? முளைத்த இடத்திற்கு மாத்திரமல்ல, சுற்றியிருக்கும் நிலப்பரப்புக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது அந்த வேப்பமரம்.

"ராமன் வீட்டுச் சேவல் கிருஷ்ணன் வீட்டில் முட்டையிட்டால், முட்டை யாருக்குச் சொந்தம்?" என்று சிறுவர் வேடிக்கை பேசுவதுண்டு.  இந்த மர விஷயத்திலும் அப்படியொரு வேடிக்கைக் கணக்குத் தேவைப்படுகிறது.

வேர் பதித்து மண்ணைப் பற்றிக் கொள்ளும் உரிமையை மாத்திரம்தான் அந்த மரம் காம்பவுண்ட் உட்புறப் பகுதிக்கும் கொடுத்திருந்ததே யன்றி, அதனுடைய நிழலை - அந்த நிழலின் சுகத்தை சுவருக்கு வெளியேயுள்ள பிரதேசத்திற்கு அளித்து விட்டது. அதற்காக அந்த மரத்தையும் வெட்டிவிடவில்லை அந்த வீட்டுக்காரர்.

ஊருக்கு ஒதுக்குப் புறமாக சமீப காலத்தில் எழுந்திருந்த புதுக் காலனி அது.  அந்த வீடும் அவ்வாறே கட்டப்பட்டதா யிருக்க வேண்டும் என்பதை, பளபளக்கும் தளமும், இரும்புக் கிராதிகளும், காரை பெயர்ந்திராத காம்பவுண்டு சுவரும் பறை சாற்றின.   ஒருவேளை வீடு கட்டும்போதே அம் மரத்தின் அடிப்பாகத்தை வீட்டுக்குள் அடக்கி, மேல் பாகத்தை உலக நன்மைக்கு வெளியே பரவ விட்டு விட்டார்களோ என்னவோ!

அடடே...  எங்கோ ஆரம்பித்து எங்கோ போகிறோமே ! மரத்தடியில் நின்று கொண்டிருக்கும் பையனை மறந்துவிட்டு வன மகோத்சவத்தைத் துதி பாடுவதாவது !

சற்றைக்கொருதரம் 'கேட்'டை நெருங்கி உட்புறம் பார்த்தபடி இருந்தான் பையன்.

பயலுக்குப் பத்து வயது இருக்கும்.  எண்ணெயுடன் உறவே கண்டிராத தலைப் பகுதி.  திறந்த மார்புதான்.  நோஞ்சான் என்றோ, பயில்வானின் ஆரம்பத் தோற்றம் என்றோ கூற முடியாத தேகவாகு.  சற்றே சதைப்பற்று உண்டு.  பளபளக்கும் கருமை பாய்ந்த மேனி.  அரையில் காக்கி நிஜார்.  கையில் வெள்ளை வெளேரென்று தகரக் குவளை.

அன்று காலை-இருள் பிரிவதற்கு முன்னரே - கையில் குவளையுடன் கிளம்பி விட்டான் அவன்.  இரண்டு மணி நேரம்  சுற்றிப் பார்த்தான்.

அன்று முகூர்த்த நாள் போலிருக்கிறது.  தெருவுக்கு தெரு வாழை மரம், மாவிலைத் தோரணம், நாதஸ்வர இசை, ஆங்காங்கே ஒலிப்பெருக்கிகளில் சினிமாப் பாட்டுகள்.  இந்த அமர்க்களங்களெல்லாம் அவன் கண்ணில் பட்டபோது,  நிம்மதி ஒன்று பிறந்தது, அவன் உள்ளத்தில்.

"ஏதாவது ஒரு வீட்டில் முன்னமேயே போய் உட்கார்ந்து விட்டால், நாலு நாளைக்கு வேண்டியதை ஒரு இழுப்பு இழுத்து விடலாம் போலிருக்கிறதே !"

ஆனால் - நேரம் ஆக ஆக, தன்னை விழுங்கி ஏப்பம் விடும் பிறவிகளும்  இருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினான் பையன்.

ஒவ்வொரு காலியான வீட்டு வாசலிலும் அவனுக்கு முன்னரே பெரிய பட்டாளம்.  அதற்குரிய - அதாவது உண்டது போக எஞ்சி யிருக்கும் பதார்த்தங்களைத் தாங்கும் எச்சில் இலைகள் வந்து விழும் இடத்திலே - தவமிருப்பதைக் கண்டான்.  அந்தப் பொடியனைப் பார்த்ததுமே, ஒவ்வொரு பட்டாளமும் முறைத்தது.

"கயிதே...   போடா...  போடா...  வேறு எங்காச்சும் ஓடுவியா,  இங்கே வந்து பூந்துக்கப் பார்க்கறியே !...   வேற வூட்டுக்குப் போய்க் குந்துடா !...." என்று விரட்டி விரட்டி அடித்தது ஒவ்வொரு பட்டினிப் பட்டாளமும்.

அவனும் ஏழெட்டு கல்யாண வீடுகளுக்கு மேல் பார்த்துவிட்டான்.  எல்லாமே 'ஹவுஸ்புல்!' 

டவுனைச் சுற்றியடித்து, பலன் ஏதும் கிடைக்காமல் போகவே,  அந்தக் காலனிக்குள் காலடி எடுத்து வைத்தான் அவன்.  பசி யெடுக்காத பெரிய மனிதர்கள் வாழும் அப்பகுதியினுள், பசியைத் தவிர வேறு எதுவும் அறியாத அப் பஞ்சை நுழைந்தான்.  அங்கேயும் ஒன்றிரண்டு பெரிய பங்களாக்களில் பந்தல் போட்டு வாத்தியமெல்லாம் அமர்க்களப் படாமல் இல்லை.  ஆனால், ஒவ்வொரு வீட்டிலும், ஒரு பர்லாங்கு தூரத்திற் கப்பாலேயே அவனை நிறுத்தி விட்டார்கள்.  கார்களில் வந்து இறங்கும் பெரிய மனிதர்கள் கலந்துகொள்ளும் விசேஷங்கள் அவை.

கால் போன போக்கிலே சுற்றியவனுக்கு வெய்யிலின் கொடுமைகள் உறைக்கவே, தன்னையும் அறியாமல் அவ் வீட்டு வாசலில் அந்த வேப்ப மரத்தடியிலே, சிரமபரிகாரம் செய்து கொள்வதற்காக நின்று விட்டான் அவன்.

ஏதோ குருட்டாம் போக்காகத் தரையையே பார்த்தபடி யிருந்த அச் சிறுவனுக்கு அப்போதுதான் அது கண்ணில் பட்டது.  'அடடே ! இவ்வளவு நேரம் பாராமல் இருந்து விட்டோமே !'

வீட்டு வாசலில் பெரிய கோலம்.  அதுவும் செம்மண் கோலம்.

ஏதோ ஒரு உணர்வு அவனை உந்தவே 'கேட்'டருகே சென்று உட்புறம் ஒருமுறை பார்த்தான்.

அவனுக்கு ஏற்பட்டஆனந்தம் கொஞ்ச நஞ்சமல்ல.   வீட்டு வாயிற்படியில் மாவிலைத் தோரணம் காட்சி அளித்தது.

அவனுள் புதுத் தென்பு பிறந்தது.  அவ் வீட்டிலும் இன்று ஏதோ விசேஷம் போலிருக்கிறது.  பெரிய கல்யாணம், கார்த்திகை என்றில்லா விட்டாலும் இன்று சாதாரண நாள் அல்ல.  அது மட்டும் உறுதிதானே?   எப்படியும் ஏழெட்டு இலைகளாவது வாசலில் தேறாமல் போகாது.  பெரிய பெரிய கல்யாண வீடுகளில் நாய்களுடனும், நாயை விட வேகமாகச் சீறி விழும் மற்ற சகாக்களுடனும் மல்லுக்கு நின்று, தன் பங்குக்கு நாலு இலைகள் பெறுவதை விட, உடம்பை அலட்டிக் கொள்ளாமல் ஆடாமல், அசையாமல் இருந்த இடத்திலேயே ஏழெட்டு இலைகள் கிடைத்தால்...

அடே அப்பா...!  இதை விட பெரும் பாக்கியம் வேறென்ன வேண்டும்? அப்பொழுதிலிருந்தே சற்றைக்கொருதரம் உட்புறம் பார்க்கத் தொடங்கி விட்டான் பையன். 

கால் மணி...  அரை மணி...

நேரம் ஊர்ந்து கொண்டே யிருந்தது.  வெய்யிலின் உக்கிரத்திலே, பகல் கரைந்து கொண்டிருக்க, பரதேசிப் பயலின் பஞ்சை வயிற்றினுள் பெருச்சாளி பிறாண்டத் தொடங்கியது.  

வீட்டை விட்டு - அம்மரத்தடியை விட்டு - வேறு எங்காவது போய் வழி செய்யலாமா என்று கூடத் தோன்றியது அவனுக்கு.  எண்ணத்தைச் செயலாக்கவும் அவன் முடிவெடுத்த சமயம்- 

"ஏய் !  என்ன பண்றே அங்கே?" என்ற அதிகாரக் குரல் பின்புறமிருந்து எழுந்தது.  சடாரென்று திரும்பிப் பார்த்தான் பையன்.

'கேட்'டருகே -


-  மீதி அடுத்த வாரம் -



==========================================================================

எதையோ படித்தபோது மனதில் தோன்றியதை கவிதை மாதிரி எழுதி வைத்தேன்.  எனக்குத் தோன்றும் அர்த்தம்தான் உங்களுக்கும் தோன்றுகிறதா?

எனக்கான உண்மைகள் 
உனக்கான பொய்களாகின்றன.  
வெளியில் காட்டப்படுவதற்கு 
எதிராகவே இருக்கிறது மனம்.  
கண்ணாடிக்குப் 
பின்னாலேயே மனம்.  
பிரதிபலிப்புகள் உனக்கானவை.  
உண்மை பின்னால் மறைந்தே நிற்கிறது.


========================================================================================================

"ஆறாயிரம் ரூபாய்க்கு மேற்பட்டுதான்  வரி என்று..."     இதை வைத்து எந்த வருடம் என்று யூகிக்க முடியுமா என்ன?!   வெவ்வேறு இடங்களில் சமீபத்தில் செத்துப்போன இரண்டு பிச்சைக்கரார்களிடம் லட்சக்கணக்கிலும்  கோடிக்கணக்கிலும் பணம் இருந்ததாம்!  செய்தித்தாளில் படித்தேன்.




================================================================================================

சற்றே புன்னகைக்க வைத்த ஜோக்! 






===================================================================

மரண விளையாட்டு!



104 கருத்துகள்:

  1. அனைவருக்கும் நல்வரவு... வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு துரை செல்வராஜூ ஸார்...    வாழ்க நலம்.  நன்றி!

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    காலை வணக்கம்.  பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  3. இந்த நாள் இனியதாக இருக்க வேண்டும், உங்களுக்கும், எங்களுக்கும். நல்லதை நினைப்போம்; நலம் பெருகும்.

    பதிலளிநீக்கு
  4. கவிதை நல்லா இருக்கு; கமல் ட்வீட் மாதிரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு நீங்க நேரிடையாகவே “கவிதை புரியலை” என்றே சொல்லியிருக்கலாம். கீசா மேடத்தின் தலைவரை இங்கு இழுத்திருக்க வேண்டாம்

      நீக்கு
    2. கீ சா மேடம் அல்ல ; வேறொரு மேடம்.

      நீக்கு
    3. // கமல் ட்வீட் மாதிரி.// //நேரிடையாகவே “கவிதை புரியலை” என்றே சொல்லியிருக்கலாம்.//

      கவிதை புரியவில்லையா...    அய்யகோ...!

      நீக்கு
    4. அதுதானே, யார் அந்த சின்ன மேடம்?

      நீக்கு
    5. அதானே, பானுமதி, தி/கீதா ஆகியோர் உல(க்)கை நாயகனின் ரசிகர் மன்றத் தலைவிகள் ஆச்சே! யாராக்கும் அது?

      நீக்கு
    6. அப்போ உலக்கைக்கு ஒரு ஓட்டு எலெக்‌ஷன்ல கன்ஃபர்ம்ட் (தி.கீதாவுக்கு எப்போ வேலை வரும், எப்போல்லாம் பிஸியாயிடுவாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. அதனால் வாக்களிக்கும் அன்னைக்கு சரியா அவருக்கு வேற ஊருக்கு பிரயாணம் இல்லை வேற இடத்துல வேலைன்னு ஆயிடும்)

      நீக்கு
  5. எனக்கான உண்மைகள்
    ஊமைகளாய் இருக்க
    பொய்யே மின்னுகிறது
    பொன்னாடையுடன்....

    உங்களது கவிதை அருமை ஸ்ரீராம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையை ரசிப்பதற்கு முன், இதில் ஏதேனும் உள்குத்து இருக்கா என மனம் யோசிக்க என்ன காரணமாக இருக்கும்?

      நீக்கு
    2. எனக்கு வெளிக் குத்து தெரியுது பாஸ்.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      எனக்கு புதனா, வியாழனா என்ற சந்தேகம் வந்தது. ஹா. ஹா. ஹா. நேற்று என்னால் தங்கள் பதிவுக்கு வர இயலாமல் போய் விட்டது. மன்னிக்கவும்.
      நேற்றைய பதிவும் படிக்க வருகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. // எனக்கான உண்மைகள்
      ஊமைகளாய் இருக்க
      பொய்யே மின்னுகிறது
      பொன்னாடையுடன்....//

      சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள்  துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    5. கேஜிஜி பதில் சொல்வதால் புதனா வியாழனா என்று குழப்பம் ஆயிடுச்சா கமலா அக்கா?

      நீக்கு
    6. உள்குத்தா?  இதிலா?  ஏன் அப்படி நினைக்கறீங்க நெல்லை?

      நீக்கு
    7. அன்பின் ஸ்ரீராம்..

      இந்த நான்கு வரிகளைத் தொடர்ந்து
      இன்னும் இரண்டு வரிகள்...

      ஆனால் வெளியிடவில்லை...

      அந்த நாலு வரிகளை ரசித்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    8. அதில் என்ன தயக்கம் வந்ததோ....

      நீக்கு
    9. //எனக்கான உண்மைகள்
      ஊமைகளாய் இருக்க
      பொய்யே மின்னுகிறது
      பொன்னாடையுடன்....//

      சில சமயங்களில் பொறாமை கொண்டு, தனிப்பட்ட வெறுப்பினாலும் வரும் சில பின்னூட்டங்களைப் படித்திருந்த எனக்கு இந்தக் கவிதை அதனை ரெப்ரெசெண்ட் செய்து இருப்பதாக மனதில் தோன்றியது.

      நீக்கு
    10. /எனக்கான உண்மைகள்
      ஊமைகளாய் இருக்க
      பொய்யே மின்னுகிறது
      பொன்னாடையுடன்...\ ஒரு வேளை அது மாதிரி தோன்றலாம் ஆனால் உண்மை உண்மைதான்பொய் பொய்தான் என்னதான் அரிதாரம் பூசினாலும்

      நீக்கு
  6. பிலஹரிக்கு பனைமரம்னா என்ன என்றே தெரியவில்லையே.

    பனைமரம் அதை வளர்த்தவர்களின் குடும்பத்தைக் கைவிட்டதில்லை. அதன் ஒவ்வொரு பகுதியும் எளியவர்களுக்கு உபயோகமானது

    பனைமரம் அழிந்தால் அந்த நிலப்பகுதியே வீணாகப்போகிறது என்று அர்த்தம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனைமரமே, பனைமரமே ஏன் வளர்ந்தாய் பனைமரமே பாடல் எப்பவோ ரெண்டாம்பு படிக்கச் சொல்ல படிச்சது.

      நீக்கு
    2. நிழல் தரவில்லை என்பதை மட்டும் வைத்து அப்படி எழுதி விட்டாரோ என்னவோ...    அல்லது அந்த பிச்சைக்காரச் சிறுவனின் எண்ணமாக இருக்கலாம்.

      நீக்கு
    3. காந்தி-கோட்சே, கோட்சே-காந்தி எனப் பேசிப் பொழுதுபோக்கிக்கோண்டிருந்த காலம்போலும். வேப்பமரத்தை காந்தியாக்கி, பனையை கோட்சேயாக்கிவிட்டார். சரி விடுங்க.. அந்தப் பயலுக்கு ஏதாவது கிடைத்ததா இல்லையா?
      எழுதுமய்யா.. பிலஹரி! படிப்போம்..

      நீக்கு
    4. ஒருவேளை, வேப்பமரம் என்பது வேப்பிலைக் கொழுந்து போன்று கசப்புச் சுவையுள்ளவற்றைத் தந்தாலும் அது நம் உடலுக்கு நல்லது, பனைமரம் மக்கள் மகிழும் கள் போன்றவற்றைத் தந்தாலும், அது உடலுக்குக் கெடுதல். பெரும்பான்மை மதத்தின் சார்பாக நிற்காமல் அவர்களுக்கு கசப்பு மருந்தை, இந்தியாவின் நலன் கருதி காந்தி தந்தார், 'பெரும்பான்மை மதத்துக்காக கவர்ச்சியா இனிப்பா' பேசினாலும் கோட்சேவின் சிந்தனை இந்தியாவுக்குக் கெடுதல் என்ற உள்ளர்த்தம் இருக்குமோ?

      நீக்கு
    5. இருக்கும்..இருக்கும். இப்படி எதை எழுதினாலும் விளக்குவதற்கு ஆளிருந்தால், கவலையில்லாமல் எழுதித்தள்ளலாம் !

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருங்க நான் போய் ஹார்லிக்ஸ் கரைத்துக் குடித்துவிட்டு வருகிறேன்!

      நீக்கு
    2. வாங்க கீதாக்கா..   வணக்கம், நல்வரவு, நன்றி!

      நீக்கு
    3. கௌதமன் சார், காலம்பரக் காஃபியை நிறுத்திட்டீங்களா? அடப் பாவமே! :))))

      நீக்கு
    4. ’கரைத்துக் குடித்துவிட்டு வருகிறேன்‘ என்பது முதலில் கண்ணில் பட்டது. எந்தப் பரீட்சை எழுதப்போகிறாரோ என்று கவலைப்பட்டேன்!

      நீக்கு
    5. பரீட்சையெல்லாம் பார்த்து அல்லவா எழுத வேண்டும் ஏகாந்தன் ஸார்?!!!

      நீக்கு
  8. //இந்த மர விஷயத்திலும் அப்படியொரு வெடிக்கக் கணக்குத் தேவைப்படுகிறது.// வேடிக்கைக் கணக்குனு திருத்துங்க ஸ்ரீராம். மற்றபடி வேப்பமரத்தின் வர்ணனை எங்க வீட்டு வேப்பமரத்தை எனக்கு நினைவூட்டி விட்டது. இப்படித்தான் போகிறவர்கள், வருகிறவர்கள், எதிர்த்த, பக்கத்து வீடுகளின் வண்டிகள் என அனைத்திற்கும் நிழல் கொடுத்து வந்தது. எங்க பெண்ணைப் போல் வளர்த்தோம்னு சொன்னால் மிகை இல்லை. கதையைச் சரியான இடத்தில் நிறுத்திட்டீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பிழைமட்டும் அல்லாமல் இன்னும் சில பிழைகளும் இருந்தன.   திருத்தி விட்டேன் கீதா அக்கா.

      நீக்கு
  9. ஆனால் ஒரு விஷயம். குறவன், குறத்தி கூட இப்போதெல்லாம் எச்சில் பொறுக்குவதில்லை என்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். அந்தக் காலத்து நிலைமையைச் சொல்லிப் போகிறது கதை. இப்போது பெரும்பாலும் மனித மனம் மாறியே வருகிறது. இன்னமும் மாறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.   இந்தக் காலத்தில் அப்படி எல்லாம் சொன்னாலே நடவடிக்கை எடுத்து விடுவார்கள்.  ஏகப்பட்டஎதிர்ப்பும் கிளம்பும்.

      நீக்கு
    2. கீசா மேடம்.. அடையார் போயிருந்தபோது நிறைய குறவர்களைப் பார்க்கிறேன். குப்பைத் தொட்டியில் புதையல் தேடுவது, அதன் அருகிலேயே அநாதரவாக இருப்பது என்றெல்லாம்.

      பாவம் அவர்கள்

      மக்கள்தாம் உணவு எதையும் குப்பைக் கூடைக்கு அனுப்பறதுல்லை போலிருக்கு

      நீக்கு
    3. அப்படியா சொல்றீங்க? நம்ப முடியலை. அம்பத்தூரில் பல குறவர்கள் இனத்தவர் நன்றாகப் படித்து முன்னேறி இருக்கிறார்கள். பலரை எனக்குத் தனிப்பட்ட முறையிலேயே தெரியும். எச்சில்களைக் குப்பைத் தொட்டியில் போடுவதும் இப்போது காணமுடியவில்லை. ஆனால் நீங்க அடையாறுப்பக்கம் இருக்குனு சொல்லுவது ஆச்சரியமாக இருக்கே!

      நீக்கு
    4. இரண்டு நாட்கள் முன்னால், வீட்டில் பேசிக்கொண்டிருக்கையில் குறிப்பிட்டேன். நரிக்குறவர் என்றொரு இனம் இருந்தது. குடுகுடுப்பைக்காரர்கள் என்றெல்லாம் ஒருகாலத்தில் அலைந்து திரிந்தார்கள். இந்த வேக உலகில் அவர்களுக்கு என்ன ஆயிற்றோ என. நீங்கள் அடையாறில் நிறையப் பார்த்ததாகச் சொல்கிறீர்கள். நல்லது. ஆனால் அவரது வயிற்றுப்பிழைப்பு எப்படிச் செல்கிறதோ இந்த பிஸ்ஸா, நூடுல்ஸ் காலத்தில்...

      நீக்கு
    5. அவங்க அழுக்கு உடை அணிந்துகொண்டு, அவ்வப்போது ரோடில் யாரையாவது பார்த்து காசு கொடுங்க என்று கேட்டுக்கொண்டு, ரோடுகளில் இருக்கும் பெரிய பெரிய குப்பைக் கூடைகளில் துழாவி ஏதேனும் கிடைக்கிறதா என்று சேகரித்துக்கொண்டு, அவற்றை பழையபேப்பர் போன்றவற்றை வாங்குபவர்களிடம் விற்றுக்கொண்டு.... என்று அவர்கள் பிழைப்பு கஷ்டமாகத்தான் ஓடுகிறது (சென்னையில்) என்பதைப் பார்க்கிறேன்.

      நீக்கு
  10. உங்கள் கவிதையின் உண்மை மனதைத் துளைத்தால் அதற்கான துரையின் எசப்பாட்டும் அருமையான கருத்தைக் கொண்டு வந்திருக்கிறது. ஜோக்குகள் எப்போதும் போல் அருமை. உண்மையில் பிச்சைக்காரர்களிடம் நிறையப் பணம் இருப்பதும் அவர்கள் ஆனாலும் ஏன் இன்னமும் பிச்சை எடுக்கிறார்கள் என்பதற்கும் விடை காண முடியலை. எலியும் பூனையும் டாம் அன்ட் ஜெரியை நினைவூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், எனக்கும் தாமு & ஜெயராம்
      ( டாம் & ஜெர்ரிக்கு தமிழ்ப் பெயர்கள்) நினைவு வந்தது.

      நீக்கு
    2. நன்றி கீதா அக்கா.     துரை ஸாரும் நன்றாகவே எழுதி இருக்கிறார்.

      நீக்கு
    3. தாமு & ஜெயராம் 

      ஹா...   ஹா....  ஹா....

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    கதம்பம் அருமை.

    பிலஹரி அவர்கள் எழுதிய கதை அருமையாக போகிறது. மரம் பற்றிய உண்மைகள், அதன் உணர்வுகளை விவரித்தது ரசிக்க வைக்கிறது.

    பசியின் கொடுமை உலகிலேயே மிகவும் கஸ்டந்தான்.. ! பசி சுயமாக ஒரு மனிதரிடம் இருக்கும் ஒட்டு மொத்த அறிவையும் மழுங்க வைத்து விடும் சக்தி வாய்ந்தது. பாவம் அந்தச் சிறுவன்! அவனின் காத்திருப்புகள் மனக்கசிவை உண்டாக்குகின்றன. அவனுடன் தொடர்ந்து காண காத்திருக்கிறேன்.

    தங்கள் கவிதை அருமை. மன எண்ணங்களில் வெளி வரும் அதன் வார்த்தைகள் வெறும் பிரதிபலிப்புதான். மிகவும் சுருக்கமாக ஆனால் அழகாக மனித மனம் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். (நான் சொல்லும் இந்த என் பாராட்டுக்கள் உண்மை.. பிரதிபலிப்பு அல்ல...!)

    பண்டாரம் ஜோக் ரசித்தேன். சோதனை ஓட்டமும் நன்றாக உள்ளது. அப்படியென்றால் உண்மையான ஓட்டத்தையும் ஒரு நாள் அந்த விஞ்ஞானி அவர் ரீதியில் எதிர்பார்க்கிறாரா?
    ஹா. ஹா. ஹா. நல்ல நகைச்சுவை.

    மரணத்திலும் இப்படி ஒரு விளையாட்டு. மரண பயம் தெரியாதிருக்கவோ? ரசித்தேன்.
    ரசிப்பது ஒரு பக்கமிருந்தாலும், எலியின் "திக்" "திக்" கை புரிந்து கொள்ளவும் முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...
      கதை நன்றாகக் போவதில் மகிழ்ச்சி.  அப்புறம் ஒவ்வொன்றாய் இந்தப் புத்தகத்தில் இருக்கும் நான்கு கதைகளையும் டைப்பி வெளியிடுகிறேன்.

      கவிதையாய் பாராட்டியதற்கு நன்றி.

      நகைச்சுவையை ரசித்துச் சிரித்திருப்பபடற்கு நன்றி.   

      பூனை எலியைச் சாப்பிடும் முன் ஒரு விளையாட்டு!  இது 1960 இல் வந்த ஜோக்!

      நீக்கு
  12. பழைய நகைச்சுவை துணுக்குகள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  13. பகிர்ந்த கதை அருமை. அடுத்த வாரம் தொடருகிறேன்.

    கவிதை வரிகள் எனக்கும் அதே அர்த்தத்தையே அளித்தன.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  14. The Government of India had increased the basic personal income tax exemption limit from Rs. 5,000 to Rs. 6,000 for the Financial Year 1974-1975 and Assessment Year 1975-1976. The new income tax rates or Income tax slabs were applicable for the incomes earned or generated from April 01, 1974 to March 31, 1975.

    பதிலளிநீக்கு
  15. குறை நினைச்சிடாதீங்கோ யாரும், மீ வர கொஞ்சம் / கூட:)லேட்டாகலாம்:).

    கெள அண்ணன்... அப்பாடா தப்பிட்டேன் என நினைக்க வேண்டாம் கிளவிகள் சே சே டங்கு ஸ்லிப்பாகுதே கேள்விகள் கூடையில் வரும்:)...

    பதிலளிநீக்கு
  16. ஹா ஹா. இன்று வியாழன் அம்மா அம்சவல்லி அதிரடி அப்பாவி வெள்ளைமாளிகை etc etc...

    பதிலளிநீக்கு
  17. //பசி யெடுக்காத பெரிய மனிதர்கள் வாழும் அப்பகுதியினுள், பசியைத் தவிர வேறு எதுவும் அறியாத அப்பஞ்சை நுழைந்தான்//

    அருமை ஜி தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  18. உனக்கான பொய்கள் எனக்கான உண்மைகளாகின்றன.
    உள்ளேயும் மறைப்பதற்கு ஆதரவாகவே இருக்கிறது மனம்.
    கண்ணாடிக்கு முன்னாலேயே மனம்.
    பிரதிபலிப்புகள் எனக்கானவை.
    உண்மை முன்னால் நிறைந்தே நிற்கிறது.
    எனது தாத்தா...!

    கவித கவித...! ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  19. கவிதைகள் நன்றாக இருக்கின்றன.
    பிலஹரியின் கதையை முன்பே படித்த மாதிரி இருக்கிறது. ஆனாலும் முடிவு ஞாபகம் வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை.  ஞாபகம் வந்து விட்டால் சுவாரஸ்யம் போய்விடும்.

      நீக்கு
  20. //"ஏய் ! என்ன பண்றே அங்கே?" என்ற அதிகாரக் குரல் பின்புறமிருந்து எழுந்தது. சடாரென்று திரும்பிப் பார்த்தான் பையன்.

    'கேட்'டருகே -//

    பசித்த வயிறுக்கு அந்த அதிகாரக்குரலுக்கு உரியவர் உணவு அளிப்பாரா?

    கதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த அதிகாரக்குரல் அந்த வீட்டுத் தலைமைச் சமையற்காரரின் குரலோ? அப்படித்தான்படித்த நினைவு. என்றாலும் சரியாக நினைவில் வரலை.

      நீக்கு
    2. //..நினைவில் வரலை..//
      நல்லது! சஸ்பென்ஸ் தொடரட்டும் !

      நீக்கு
    3. //
      ஏகாந்தன் !14 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 6:25
      //..நினைவில் வரலை..//
      நல்லது! சஸ்பென்ஸ் தொடரட்டும் !//

      ஹா ஹா ஹா இதைத்தான் நானும் நினைச்சேன்ன்:)).. நன்ன் கும்பிட்ட அந்த புளியடி வைரவர் நம்மைக் கைவிடவில்லை:)), கீசாக்காவுக்கு நினைவிருப்பின், இப்பவே முடிவைச் சொல்லி நம்மை அடுத்தகிழமை படிக்காமல் பண்ணியிருப்பா ஹா ஹா ஹா..

      நீக்கு
    4. வாங்க கோமதி அக்கா...    பிலஹரி கதைகள் நன்றாயிருக்கும்.

      நீக்கு
    5. வாங்க கீதா அக்கா...    லோரும் சொல்லியிருப்பதுபோல நினைவு வந்திருந்தால் முடிவைச் சொல்லி விடுவீர்களா?மாட்டீர்கள்தானே?!!

      நீக்கு
    6. //நன்ன் கும்பிட்ட அந்த புளியடி வைரவர் நம்மைக் கைவிடவில்லை:)), கீசாக்காவுக்கு நினைவிருப்பின், இப்பவே முடிவைச் சொல்லி நம்மை அடுத்தகிழமை படிக்காமல் பண்ணியிருப்பா ஹா ஹா ஹா..//

      ஹா... ஹா... ஹா.....

      நீக்கு
  21. கவிதைகள்,.
    பட்ஜெட் ஜோக் நன்றாக இருக்கிறது
    நான் யார் சொல்லு பார்க்கலாம்//
    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதைகள்னு சொல்லி சும்மா விட்டுட்டதால அது சரியில்லை என்று எடுத்துக்கொள்கிறேன் கோமதி அக்கா! மற்ற பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  22. சோதனை ஓட்டம்//

    தலைப்புப் பார்த்ததும் ஸ்ரீராம்தான் ஏதும் 1500 மீட்டர் ஓடப்போகிறாரோ என நினைச்சு ஓடி வந்தேன்:)).. ஹா ஹா ஹா ஜோக் அழகு...

    இப்படித்தான் ஒரு கார் மெக்கானிக் ஒருவரைத் திருமணம் முடிச்சாராம் ஒரு பெண், அடுத்தநாள் காலையில் நண்பி கேட்டாவாம் கணவர் எப்படி நல்லவரோ என, அதுக்கு இவ சொன்னாவாம் ஹையோ மெக்கானிக்கைத் திருமணம் முடிச்சது தப்பாப் போச்சு.. எப்ப பார்த்தாலும் கட்டிலுக்குக் கீழேயே இருக்கிறார் என ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை, மெரைன் எஞ்சினீயரை அந்தப் பெண் திருமணம் செஞ்சுக்கலை. அப்புறம் தோழிகிட்ட, எப்போப்பார்த்தாலும் அவர் தண்ணீலயே இருக்கிறார் என்று சொன்னால் அர்த்தம் வேற மாதிரி ஆகிவிடும்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா இன்னொன்று சொல்லட்டோ நெ தமிழன்.

      ஒரு மிகவும் கஞ்சல்காரரைத்திருமணம் முடிச்சாவாம், அடுத்தநாள் தோழி கேட்டாவாம்ம் எப்படி கணவர் நல்லவரோ என.. அதுக்கு தோழி சொன்னாவாம்ம்..

      “அதை ஏன் கேட்கிறாய், நேற்று ரூமுக்குள் போனதும், அவரின் காலில் விழுந்தேன் ஆசீர்வாதம் வாங்க, குனிஞ்சு என்னைத்தூக்கி விட வந்தார், அப்போ அவரின் பொக்கட்டினுள் இருந்து 2 ரூபா குத்தி வெளியே விழுந்து உருண்டு ஓடியது, மனிசன் இரவிரவாகத் தேடிக் காலையிலதான் அதைக் கண்டெடுத்தார்” என ஹா ஹா ஹா ஹையோ ஹையோ எப்பூடி எல்லாம் சிந்திச்சு எழுதுகிறார்கள்.

      நீக்கு
    3. வாங்க அதிரா...   நான் எங்கே ஓட?  நடைப் பயிற்சியே சரியாய்ச் செய்யாமலிருக்கிறேன்!

      நீக்கு
    4. ஒவ்வொரு வேளையில் இருபப்வரை வைத்தும் ஜோக்ஸ் செய்வார்கள் போலும்!

      நீக்கு
  23. ஆஆஆஆஅ படத்தைப் பார்த்துக் கதையைப் படிச்சுவிட்டுக் கீழே பார்த்தால் ஸ்ரீராம் அதை ரப்பண்ணியிருக்கிறார் ஹா ஹா ஹா... நல்லதொரு இடத்தில தொடரும் போட்டிட்டீங்க.. அடுத்த கிழமை மிகுதி படிக்க முடியாமல் போய்விட்டால் காச்சல் வந்திடப்போகுது எனக்கு:))

    //"ராமன் வீட்டுச் சேவல் கிருஷ்ணன் வீட்டில் முட்டையிட்டால், முட்டை யாருக்குச் சொந்தம்?" எ//

    ஹா ஹா ஹா சின்ன வயதில் அப்பா அடிக்கடி எங்களிடம் இப்படி விடுகதைகள் கேட்பார்ர்.... இதையும் கேட்டிருக்கிறார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன அதிரா...    நானும் நான்கு வாரங்களாய் பிலஹரி கதையை போடுகிறேன் என்று பூச்சாண்டி காட்டிக்  கொண்டிருந்தேனே மறந்து விட்டீர்களா?!!

      நீக்கு
  24. ///எனக்கான உண்மைகள்
    உனக்கான பொய்களாகின்றன.
    வெளியில் காட்டப்படுவதற்கு
    எதிராகவே இருக்கிறது மனம்.
    கண்ணாடிக்குப்
    பின்னாலேயே மனம்.
    பிரதிபலிப்புகள் உனக்கானவை.
    உண்மை பின்னால் மறைந்தே நிற்கிறது.//

    இதற்கு மொத்தமாக ஓம் அலல்து இல்லை எனச் சொல்லிவிட முடியாது...

    //எனக்கான உண்மைகள்
    உனக்கான பொய்களாகின்றன.//
    என்னைப்பொறுத்து இது சிலசமயம் உண்மைதான்.. நீங்க கூட என்னிடம் நம்பிக்கை இல்லாமல் சொல்லுவீங்களே
    “நான் நம்பமாட்டேன் அதிரா” என ஹா ஹா ஹா

    //
    வெளியில் காட்டப்படுவதற்கு
    எதிராகவே இருக்கிறது மனம். ///
    சில சயங்களில் உண்மை, நம் கவலைகளை வெளியே காட்டி அடுத்தவர்களையும் கவலையாக்கிட வேண்டாமே என சிரிச்சபடி செல்வதுண்டு:)..

    ////கண்ணாடிக்குப்
    பின்னாலேயே மனம்.
    பிரதிபலிப்புகள் உனக்கானவை. ///

    புரியவில்லை..


    ///உண்மை பின்னால் மறைந்தே நிற்கிறது.//

    இது என்னைப்பொறுத்து ஏற்கமுடியாது.. எல்லோரும் அப்படி இல்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணாடிக்கு முன்னால் நின்றால் தெரிந்து விடுமே.   பின்னால் மறைந்து நின்று முன்னாள் வந்திருக்கிறவரை போலியாய் பிரதிபலிப்பது!  நிறைய பேர்கள் மனதிலிருக்கும் எல்லாவற்றையும் வெளியில் சொல்லி விடுவதில்லை!

      நீக்கு
  25. ஹா ஹா ஹா பிச்சைக்காரர்களும் சேர்த்து வைத்துவிட்டுப் பிச்சைக்காரர்களாகவே போய்ச் சேர்ந்துவிட்டனரோ?:) விதி ஆரை விட்டது?:) தலை எழுத்தை மாத்த முடியுமோ?:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ...  அந்தக் கதை இங்கு நிறையவே நடக்கிறது அதிரா...  லட்ச லட்சமாய் பணம் வைத்துக்கொண்டு தொடர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

      நீக்கு
  26. மரண விளையாட்டு.. ஆவ்வ்வ்வ் மிக அழகான பூஸார்ர்...

    “பூனைக்கு விளையாட்டு, எலிக்குச் சீவன் போகுதாம்”..

    நெல்லைத்தமிழன் பழமொழி சொல்லியிருக்கிறேன் ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூனை கொஞ்ச நேரம் விளையாடி விட்டு அப்புறம் அந்த எலியையே டிஃபன் பண்ணிவிடும்!

      நீக்கு
  27. அந்த வயதில் மனம் ஒன்றி வாசித்த பிலஹரி அவர்களின் கதைகள் இந்த வயதில் அப்படியாக இல்லை. எழுதிச் சொல்லும் முறையில் ஏன் இவ்வள்வு நீட்டல் என்று விமரிசனம் எழுகிறது. இடையில் வந்த சுஜாதா புதிய பாட்டை போட்டு ஒரு விஷயத்தை சுருக்கமாகச் சொல்வது என்று பாடம் நடத்தியிருக்கிறார். ஜெகேவோ இன்னொரு விதத்தில். எதையும் சமூக உறவுகளோடு பிணைத்துக் காட்டியிருக்கிறார். மேலும் படித்து பிலஹரி எந்த விதத்தில் கவர்கிறார் என்று பிரித்துச் சொல்ல முயல்கிறேன்.

    ஒரு முத்திரைக்கதையை வாசிக்கக் கொடுத்தற்கு நன்றி, ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  28. நன்றி ஜீவி ஸார்.  அந்த காலகட்டத்தில் ரசித்த கதைகள், நடை இப்போது அலுத்து விடுகிறதோ...  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி.  பாடல்களில் பழசை ரசிக்கும் நம் மனம் இதுபோன்ற விஷயங்களில் அப்படி இல்லையோ!

    பதிலளிநீக்கு
  29. எனாக்கான பொய்கள்
    உனக்கான உண்மைகளாகின்றன
    எதையும் உன்னிடம் பகிரவே
    வெட்கமாக இருக்கிறது எனக்கு
    உன்னைப் பிரதிபலிக்கும் ஆடியாய்
    உன் மனம் இருக்கும் வித்தையை
    எனக்கும் கற்றுக் கொடுத்து
    கரையேற்று, என் கண்மணியே...

    பதிலளிநீக்கு
  30. //பாடல்களில் பழசை ரசிக்கும் நம் மனம் இதுபோன்ற விஷயங்களில் அப்படி இல்லையோ!.. //

    அப்படியில்லை.. சிவாஜி, எம்ஜிஆர் காலப் பாடல்களை ரசித்த காலத்திலும் அதற்கு முன்னான பாகவதர், பி.யூ.சின்னப்பா கால பாடல்களை ரசிக்க முடிந்ததில்லை என்பது போல. இன்றைய கால கட்ட சினிமாப் பாடல்களையும் ரசிக்க முடியாமல் செய்திருப்பதைப் போல.

    பதிலளிநீக்கு
  31. கதை சிறப்பு.... மேலே படிக்க இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமே..... பகிர்வின் மற்ற பகுதிகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!