1) இயற்கையாக கிடைக்கும் சோள மாவு, வினிகர் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் உயிரி நெகிழி 28 நாளில் மக்கும் தன்மை உடையது என்பது இதன் சிறப்பு. இதற்காகவே இவரைப் பாராட்டலாம். மேலும் அரசு பள்ளியில் படித்தால் மட்டம் என்னும் நினைப்புக்கும் பதில்!
'பயோ பிளாஸ்டிக்' பொருளை கண்டுபிடித்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி அர்ச்சனா தேசிய அளவிலான அறிவியல் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
2) ".....அந்த பிசினஸ் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. கூச்சம் பார்க்காமல், பிசினஸ் விபரங்களை, ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.
பெண் என்பதால், நிறைய புறக்கணிப்புகளையும் சந்தித்தேன். எல்லா சவால்களையும், வைராக்கியத்தால் சமாளித்து, தலைமை பொறுப்புக்கு என்னை தயார்படுத்திக் கொண்டேன்...."
கணவரின் திடீர் மறைவால் சோர்ந்து முடங்கி விடாமல், அவர் நடத்திய, 'ரெடிசால்வ் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வரும், சாரதா பிரசாத்.
3) கடமைதான், வழக்கம்தான், எனினும் பாராட்டத் தோன்றுகிறது. கடும் மழை மற்றும் மோசமான வானிலையால் சிக்கிய இந்திய விமானம் நடுவானில் தடுமாறியபோது, பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை உதவிய சம்பவம்.
4) ".....முயல் விற்பனையால், மாதம், 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. செலவு, 20 ஆயிரம் ரூபாய் தான். மீதி எல்லாம் லாபம்.
முயல் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் தான், என்னை தன்னம்பிக்கை பெண்ணாக மாத்தியிருக்குது.
என்னைப் போல கஷ்டப்படுவோருக்கு, என்னால் முடிந்த உதவிகள் செய்கிறேன். தெரிந்தவர்களுக்கு, முயல் பண்ணை வைத்துக் கொடுக்கிறேன். பலருக்கு, இந்த தொழில் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறேன்.
இந்த தொழில் செய்யலாம் என, விரும்பும் பெண்களுக்கு, என் பண்ணையிலேயே இலவசமாக பயிற்சி அளிக்கிறேன்...." சொந்தக் காலில் நிற்கும், மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி சத்யா.
5) மிலாது நபி கொண்டாட்டத்தை, ஹிந்து குடும்பத்தினர் தள்ளி வைக்கும்படி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. முஸ்லிம்களாக முன்வந்து கொண்டாட்டத்தை தள்ளி வைத்துள்ளனர். இந்த முடிவை பலரும் பாராட்டினர்.
7) "........................ இப்படி செய்வதால், 'செப்டிக் டேங்க்' லாரிகளுக்கு செலவு செய்ய வேண்டியதில்லை. அதேநேரத்தில், காற்று மாசு குறையும். கரப்பான் பூச்சி வராது.கழிப்பறை ஆரோக்கியமாக இருக்கும். நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கலாம். இது சம்பந்தமாக, இதுவரை, 10 லட்சம் பேருக்கு, வகுப்பு எடுத்துள்ளேன். பலரும் இதை பின்பற்றி வருவது, மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இவரை தொடர்பு கொள்ள விரும்புவோர், 99410 07057 என்ற மொபைல் எண்ணில், இரவு, 7:00 முதல் 9:00 மணி வரை, தொடர்பு கொள்ளலாம்........."
பம்மலை சேர்ந்த ஒருவர், பல ஆண்டுகளாக, தங்கள் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, பயனுள்ளதாக மாற்றி, செடிகளுக்கு பாய்ச்சுவதோடு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
8) விளக்கம் தேவை இல்லை. படமே சொல்லும். முன்னர் ஒருமுறை இதைச் சொன்னதாக நினைவு. (நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்)
9) ".... மேலும் மாணவிகள் தங்களின் சோதனைகளை அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் செயல்படுத்தி சோதனை நடத்தினர். இதற்காக கல்லூரியில் கீரை தோட்டம் உருவாக்கினர். இதில் ஒரு பகுதியில் பாரம்பரிய உரமும், ஒரு பகுதியில் தங்களின் சோதனைக்கான தலை முடி உரமும் பயன்படுத்தினர். 45 நாட்களுக்கு பின்னர் பார்த்த போது அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது...."
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள பெலகாவி நகரை சேர்ந்த மாணவிகளான குஷிஅங்கோல்கர் மற்றும் ரெமினிக்கா யாதவ் ஆகியோர் அங்குள்ள கேந்திரியா வித்யாலயாவில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மனிதனின் தலை முடியில்இருந்து உரம் தயாரிக்கும் முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.
10) இது பற்றி ஹிருதயேஷ்வரின் தந்தை சரோவர் கூறியதாவது: "மாற்று திறனாளியாக பிறந்துவிட்டோமே என, என் மகன் ஒரு போதும் வருத்தப்பட்டது இல்லை. அவனது மன உறுதி, என்னையே வியக்க வைக்கிறது. எப்போதும், எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவன்இருப்பான். பல்வேறு நிகழ்ச்சிகளில், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரையாற்றி, பரிசுகளையும் வென்றுள்ளான்...."
11) ஒரு ஆங்கில தினசரியில் உலகப் பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, இங்கிலாந்து தூதரகம் 'பாலின சமத்துவம்' பற்றிய கருத்துக்களை பதிவிடும் ஒரு நிமிட குறும்பட போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. தான் பின்பற்ற விரும்பும் ரோல் மாடல் பற்றிய விவரங்களையும் அதில் குறிப்பிட வேண்டுமாம்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட தீபா கிறிஸ்டினா ஜெயராஜ் என்னும் சென்னை அம்பேத்கார் பல்கலைக்கழக நான்காம் ஆண்டு மாணவி பாலின சமத்துவம் பற்றிய தன் கருத்துக்களை பதிவு செய்ததோடு, தர்மபுரியை சேர்ந்த மாதேஸ்வரி என்னும் ஒன்பது வயது சிறுமியை தன் ரோல் மாடலாக குறிப்பிட்டிருந்தார்.
காரணம், அந்த ஒன்பது வயது சிறுமி, தன்னுடைய இரண்டாவது தங்கையை அவளுடைய பெற்றோரே பெண் சிசுக்கொலை செய்ய திட்டமிட்ட பொழுது, போலீசையும், பொது மக்களையும் நாடி, அதை தடுத்து நிறுத்தியவள்.
காரணம், அந்த ஒன்பது வயது சிறுமி, தன்னுடைய இரண்டாவது தங்கையை அவளுடைய பெற்றோரே பெண் சிசுக்கொலை செய்ய திட்டமிட்ட பொழுது, போலீசையும், பொது மக்களையும் நாடி, அதை தடுத்து நிறுத்தியவள்.
இந்தியா முழுவதும் ஏழு இடங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், சென்னையை மையமாக கொண்ட தென் மண்டல போட்டியில் தீபா வெற்றி பெற்றார். அதற்குப் பரிசாக இங்கிலாந்து துணைத்தூதர் நாற்காலியில் ஒரு நாள் பொறுப்பேற்றுக் கொள்ளும் அரிய வாய்ப்பைப் பெற்றார்.
இவருடைய மற்ற சாதனைகள்: கணிதம், அறிவியலில் சென்டம், பயோ கெமிஸ்ட்ரியில் மாநில ரேங்க், ஆங்கிலம்,தமிழ், ஃபிரென்ச் என்று மும்மொழிகளில் ஆளுமை, ஹார்வர்ட் பல்கலை கழகம், ஐ.ஐ.டி. கான்பூர் நடத்திய ஆங்கில மொழித் தேர்வுகளில் வெற்றி வாகை சூடியது, சென்ற வருடம் உலக அளவில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்காக நொய்டாவில் நடை பெற்ற கருத்தரங்கில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டது, இந்தியாவின் தலை சிறந்த சட்டக் கல்லூரிகளில் ஒன்றான சிம்பயாசிஸில் சென்ற வருடம் நடந்த தீர்ப்பு எழுதும் போட்டியில் முதல் பரிசை வென்றது, இத்தனை சிறிய வயதில் இரண்டு ஆங்கில நூல்களை எழுதி வெளியிட்டது என்று பட்டியல் நீள்கிறது. சட்டக்கல்வியில் பி.எச்.டி. முடித்து. சட்டக் கல்லூரியின் பேராசிரியராக ஆவதுதான் இவருடைய லட்சியமாம்.
தகவல் உதவி: குமுதம் சிநேகிதி (21.11.2019) (நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்)
செல்விருந்தோம்பி வரு விருந்து பார்த்திருக்க..
பதிலளிநீக்குவாழ்க நலம்....
வாழ்க நலம். காலை முதல் இணையாயத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றும் திறக்க நெடுநேரம் எடுத்துப் படுத்துகிறது.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க....
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிய நாளாக மலரவும் ஆண்டவனை மனதாற வேண்டிக் கொள்கிறேன்.
இன்றைய தினம் நிறைய பாஸிடிவ் செய்திகள் வந்திருப்பது மகிழ்வை தருகிறது. அனைத்தையும் படித்து விட்டு வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... காலை வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும். கீசா மேடத்துக்கு இரவு வணக்கம், நாளை கோவில் அல்லது வெளியிட பிரயாணங்களுக்கு ஏற்றவாறு ஓய்வெடுக்க.
பதிலளிநீக்குஇன்று அதிகமான பாசிடிவ் செய்திகள். ஐந்துக்கு மேல் அயர்ச்சியை வரவழைக்கிறதோ?
சுனாமி அனாதைகளை ஆளாக்கினவர் தனித்துத் தெரிகிறார்.
வாங்க நெல்லை... காலை வணக்கம்.
நீக்குஎனக்கும் கூட இவற்றை மொத்தமாக வெளியிடாமல் அடுத்த வாரத்துக்கு பாதியை வைத்துக் கொள்ளலாமா என்று தோன்றியது... அடுத்த வாரமும் ஒருவேளை அதிகமாக கிடைத்தால் செய்வது?
//ஐந்துக்கு மேல் அயர்ச்சியை வரவழைக்கிறதோ?..//
நீக்குஎன்ன தான் ஸ்ரீராம் சொல்லியிருந்தாலும், எதை விடுவது என்ற திணறலில் எதையும் விட முடியாத துணிவு ஏற்படுவது இயற்கை. அதிகாலை 2.30 மணி சுமாருக்கு செய்தித்தாட்கள் இறுதிக்கட்ட வடிகட்டல்கள் எல்லாம் முடிந்து அச்சுக்குப் போகும் சமயம் இப்படித் தான் இருக்கும்.. கட்டக்கடைசி கட்டத்தில் கூட
அவசரச் செய்தி (2021 அற்புதம் மாதிரி) ஏதாவது வந்து தொலைத்து முதல் பக்கத்தில் கட்டம் கட்டி போட்டு, மூன்றாவது பக்கத்திற்கு பேஜ் மேக்கப் செய்ய வேண்டியிருக்கும்.
அதிகாலை 3.30 மணி அளவில் சுடச்சுட முதல் காப்பியை (பிரதியை) கையில் ஏந்துகையில் அம்மாடி என்றிருக்கும்..
அதிகாலை 5 மணி அளவில் அரை இருட்டில் மைலாப்பூர் லஸ் அருகாமை மாதிரி ஏதாவது நாற்சந்தி நீயூஸ் மார்ட்டில் ட்யூட் லைட் வெளிச்சத்தில், பத்து பையன்கள் வெளி பிளாட்பார ஒடுங்கலில் உட்கார்ந்து வேனில் வந்து இறங்குகிற செய்தித் தாட்களின் சப்ளிமெண்ட் பகுதிகளை அந்த அந்த செய்தித்தாளில் நுழைத்துக் கொண்டிருக்கிற காட்சியை எந்த செய்தித்தாள் சம்பந்தபட்டவனும் பார்த்தால் சிந்திய வியர்வையின் வாசம் புரியும்.
எங்கள் பிளாக் பின் தேதியிட்ட பதிவுகளை முன்னாலேயே சீர் படுத்தி சரி பண்ணி விட்டாலும் செலவிட்ட உழைப்பின் அருமை
தினம் தினம் மனத்தில் உற்சாகத்தை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கும் என்பது நிச்சயம்.
ஜீவி ஸார்... மதுரையில் இருந்த நேரம்... என் தங்கையின் கணவர் செய்தித்தாள் நிறுவனத்தில் பணியாற்றுபவர். அதிகாலை ஐந்து மணிக்கு டவுன் ஹால் ரோடிலுள்ள ஒரு கடையில் நண்பர்களுடன் வந்து தேநீர் அருந்துவார். அப்போது அன்றைய அந்த செய்தித்தாளை வாங்கி நண்பர்கள் அனைவரும் சுற்றி நின்று பார்த்து கமெண்ட் செய்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.
நீக்குநீங்கள் சொல்வது போல எதை விடுவது, எதை இடுவது என்கிற அயர்ச்சி ஒருபுறம், மறுபுறம் அடுத்த வாரமும் அதிகமாகக் கிடைத்து விட்டால் ரொம்ப அதிகமாகி விடுமே!
இன்று காலையிலிருந்தே சென்னையில் மழை. நேற்று இருவர் இரயில், பஸ்ஸில் (அதில் ஒருவர் நான் )பெங்களூரிலிருந்து சென்னை வந்தனர். நல்லார் ஒருவர் வர்றேல் அவர்பொருட்டு என்பதால் இந்த இருவரில் யார் நல்லோராயிருக்கும்?
பதிலளிநீக்குமழையால் சென்னையின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்று கூக்குரல் எழாத வரைக்கும் மழை நல்லது..
நீக்குநிர்வாகக் கோளாறினால் தெருக்களில் சாலைகளில் சாக்கடை நீர் தேங்கினால் (அதை வெள்ளம் என்பார்கள் சென்னையில் )நல்லவர்கள் உடனே வேறிடத்துக்குச் சென்று விடவும்...
மழை நின்று விடும்... நல்ல ஐடியா!.. இல்லையா!...
இருவர் பெங்களூருவிலிருந்து சென்னை..
நீக்கு"அந்த இன்னொருவர் யார்?"
"அட, நான்தாங்க அது!"
காலை ஐந்தே முக்காலுக்கு நான் நடைப்பயிற்சியை முடிக்கும் வரை மழை இல்லை. பின்னர் தொடங்கியது!
நீக்கு//இந்த இருவரில் யார் நல்லோராயிருக்கும்?//யாராக இருந்தாலும் சரி, இருவரும் மே மாதத்தில் சென்னைக்கு வந்தால், சென்னைவாசிகள் மகிழ்வார்கள்.
நீக்குஇரு வருடங்களுக்கு முன், பஹ்ரைனிலிருந்து லண்டன் இரவு விமானத்தில் சென்றேன். வானின் காலநிலையினால் விமானம் பயங்கரமாக்க் குலுங்கி, மேலே கீழே என்று சென்றது. அந்த பயங்கர இரவை மறக்க முடியாது. விமானத,தில் அவ்வளவு கூட்டம் இல்லாத்தால் பின் வரிசை மூன்று சீட்டுகளில் பயத்தில் படுத்துக்கொண்டுவிட்டேன்.
பதிலளிநீக்குமோசமான காலநிலையில் விமானப் பயணம் பயத்தை வரவழைக்கும்
சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் போது ஒருமுறை இவ்வாறு ஏற்பட்டுள்ளது...
நீக்குஎனது அந்த ஒரே விமானப் பயணத்தில் கூட டர்புலென்ஸ் என்றார்கள். விமானம் குலுங்கியது. சில நிமிடங்கள்தான். சரியாகி விட்டது.
நீக்குஇன்று வழங்கப்பட்டுள்ள செய்திகளில் சிலவற்றை முன்னரே படித்திருக்கிறேன்...
பதிலளிநீக்குஇயற்கை நெகிழியை உருவாக்கியுள்ள பாப்பாநாடு அர்ச்சனா பாராட்டுக்குரியவர்...
காலத்திற்கேற்ற உருவாக்கம்... அரசு அவரை ஊக்கப்படுத்த வெண்டியது அவசியம்...
மற்றும் அனைத்துச் செய்திகளின் நாயகர்களும் பாராட்டுக்குரியவர்கள்...
ஆசிரியரைப் பிரிய மனமில்லாத மாணவர்கள் என்ற செய்தி மனதில் நிறைகின்றது...
வாழ்க நலம்...
உண்மை, உண்மை, ஆம், உண்மை! நன்றி!
நீக்குமிலாது விழாவை தள்ளி வைத்து கொண்டாடியது நெகிழ்ச்சி.
பதிலளிநீக்குஆமாம் ஜி. நன்றி.
நீக்குஇங்கே மீலாது என்று எதுவும் கொண்டாடாப்படுவதில்லை..
நீக்குநம்ம பக்கத்தில் இருந்து இங்கே வந்திருப்பவர்கள் கூடி ரத்த தான முகாம் , கலாசார விழா அதன் பின் விருந்து என்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்
ஆனால் பொதுவாக
வழக்கமான தொழுகை.. வாராந்திர விடுமுறையுடன் ஒன்று கூடுதல்.. அவ்வளவுதான்..
இந்தமுறை பல்கலையில் வேலை நாளாக அறிவிக்கப்பட்டதால் எங்களுக்கு விடுப்பு கிடைக்க வில்லை..
சென்ற ஞாயிறு வேலை நாளாகப் போய் விட்டது..
உங்களுக்கு வெள்ளிக்கிழமைதானே விடுமுறை நாளாக இருக்கும்? ஞாயிறும் உண்டா?
நீக்குபதினைந்து வருடகளுக்கு முன் அரபு நாடுகளில் வியாழனும் வெள்ளியும் வாராந்திர அரசு விடுமுறை நாட்கள்..
நீக்குஅதை சர்வதேச விதிமுறைகளை அனுசரித்து வெள்ளி மற்றும் சனி என்று மாற்றிக் கொண்டார்கள்...
ஆக, வெள்ளியும் சனியும் அரசு அலுவலகங்களுக்கும் வங்கிகளுக்கும் (ரொம்பவும் வெட்டி முறித்தாற்போல) ஓய்வு நாள்...
தனியார் நிறுவனங்களுக்கு வெள்ளி மட்டுமே...
எங்களது நிறுவனம் பல்கலைக் கழக வளாகத்துக்குள் உணவகம் நடத்தி வருவதால்
எங்களுக்கு வெள்ளி முழு நாளும் சனிக் கிழமை அரை நாளும் விடுமுறை...
இன்று காலையில் சென்று ஸ்டோர் வேலைகள் சிலவற்றைக் கவனிப்பேன்...
மிச்ச நேரத்தில் பாட்டு கேட்பேன்..இன்று ஒரு நாள் மட்டும்..
(ஆனாலும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள்.. ஹிஹிஹி...)
சமையலர்கள் நாளைக்கென சிலவற்றைச் செய்து வைப்பார்கள்..
மற்றபடி ஆக்கி அரித்து தின்று தீர்த்து விட்டு பகல் 12 மணியளவில் திரும்பி விடுவார்கள்..
நான் அறைக்கு வந்து தான் சமைத்து சாப்பிடுவேன்...
மற்ற நாட்களில் மாலை 6 மணிக்கு மேல் தான் சமையல் & சாப்பாடு...
காலையில் காஃபி மட்டும்..
மதியம் Plain bread + தயிர்.. அவ்வளவே!..
கொசுறு:
நீக்குகார்த்திகை முதல் நாளில் இருந்து தைப் பூசம் வரை பொது உணவுக் கூடத்தில் எதுவும் சாப்பிடுவதில்லை... அவிக்கப்பட்ட காய்கறிகளாக இருந்தால் கூட சாப்பிடுவதில்லை...
மிகவும் சுவாரஸ்யமான விவரங்கள். உங்கள் தினசரி நடைமுறையையும் தெரிந்து கொண்டேன். மதிய உணவு மிகவும் குறைவு என்று தெரிகிறது. எப்படி சமாளிக்கிறீர்களோ... தவ வாழ்க்கை என்று சொல்வார்களே.. அதுபோல இருக்கிறது உங்கள் தினசரி வாழ்க்கை. வணங்குகிறேன்,.
நீக்குஅனைத்துமே அருமையான செய்திகள் பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி ஜோஸப் ஸார்.
நீக்குஆகா!.. முக்கியமானதை சொல்லத் தவறி விட்டேன்...
நீக்குவார வேலை நாட்களில் ஏதாவது விசேஷ நாட்கள் வந்தால் அன்றைய நாளை வேலைநாளாகக் கொண்டு சனிக்கிழமையை அடுத்து ஞாயிறு விடுமுறை நாளாகி விடும்...
நோன்புப் பெருநாளையொட்டி தொடர்ந்து ஏழு நாட்கள்...அது போலவே ஈகைத் திருநாளுக்கும்..
மற்றபடி இஸ்லாமிய வருடத்தின் முதல் நாள்.. மீலாத்.. அவ்வளவுதான்...
சமீப காலமாக ஆங்கில வருடத்தின் முதல் நாள்...
ஐக்கிய அமீரகத்தில் தீபாவளியன்று விருப்ப விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். என்று சொல்கிறார்கள்... சரியாகத் தெரியவில்லை...
பிறர் உழைப்பைப் பெரிதாக நம்பியிருக்கும் இங்கே
உழைப்பவர் தினத்தில் - மே 1 - விடுமுறை கிடையாது என்பது சொல்லத்தக்கது...
போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
நன்றி நண்பரே...
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த பதிவில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் போற்றத்தக்க நபர்களைப் பற்றியும், அவர்களுடைய அரிய செயல்களைப் பற்றியும் பகிர்ந்துள்ள விதம் பாராட்டத்தக்கது. நாளிதழ் படிக்காதவர்களுக்கு இத்தொடர் பதிவு பெரிதும் உதவும். மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.
நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.
நீக்குநல் விருந்து வானத்தவர்க்கு
பதிலளிநீக்குநன்றி பானு அக்கா.
நீக்குஇன்றைய பகுதியில் வழங்கப்பட்டிருக்கும் அத்தனை செய்திகளும் அருமை. பாக். விமான போக்குவரத்துத் துறையின் உதவி டாப் ரகம்.
பதிலளிநீக்குநெகிழ்ச்சியானது. பயோ பிளாஸ்டிக் தயாரிப்பு சிறுமி பற்றிய நம் எல்ளோருக்குமான பெருமை, நல்லாசிரியர் ஒருவர் உள்ளரேல்..,
தலை முடி உரம், கழிவு நீர் பயன்பாடு, மாற்றுத் திறனாளிச் சிறுவனின் மன உறுதி என்று ஒன்றுக்கு ஒன்று போட்டியாய் நிறைய பாஸிட்டிவ் செய்திகள்.. முயல் விற்பனை மட்டுமே உறுத்தல்.
சலிக்காமல் பகிர்ந்து கொண்ட நல்லெண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.
நன்றி ஜீவி ஸார்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா... வாங்க...
நீக்குஅனைத்தும் அருமையான செய்திகள்.
பதிலளிநீக்குஇரண்டு செய்திகள் நீங்கள் முகநூலில் பகிர்ந்த போது படித்து விட்டேன்.
தஞ்சை சிறுமி பயோ பிளாஸ்டிக் நெகிழி பை மிகவும் அவசியமான ஒன்று. பாராட்டுக்கள். நல்லாசிரியர் இப்படி எல்லா பள்ளிகளிலும் இருக்க ஆசை.
//சட்டக்கல்வியில் பி.எச்.டி. முடித்து. சட்டக் கல்லூரியின் பேராசிரியராக ஆவதுதான் இவருடைய லட்சியமாம். //
தீபாவின் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.
இணைந்து வாழ்த்துவோம்.
நீக்குஆங்காங்கே நல்ல நிகழ்வுகள் உற்சாகம் தருகிறது ஆனால் ஏனோ ஒரு ஆனால் வருகிறது இவரகளுக்கு தொடர்ந்து ஊக்கம் கிடைக்கிறதா தெரியவில்லையே
பதிலளிநீக்குபின்னால் இவை தொடர்கிறதா என்கிற தகவல் நமக்குத் தெரிவதில்லை. ஆனால் இவர்களின் இந்த செயல்கள் வேறு ரூபத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நன்றி ஜி எம் பி ஸார்.
நீக்கு//அடுத்த வாரமும் அதிகமாகக் கிடைத்து விட்டால் ரொம்ப அதிகமாகி விடுமே!// உங்களுடைய இந்த நல்ல நம்பிக்கையை போற்றத் தோன்றுகிறது. நிறைய பாசிட்டிவ் செய்திகள் கிடைத்தால் நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களால் நிறைய நல்ல செயல்கள் நடக்கின்றன என்றுதானே பொருள். கிடைக்கட்டும்.
பதிலளிநீக்குநம்பிக்கைதான்.
நீக்குஇவற்றுள் சாரதா பிரசாத் பற்றிய செய்தியை உங்கள் முகநூலில் படித்தேன். சேப்டி டேங்க் நீரை சுத்தம் செய்து பயன்படுத்துபவரை பற்றி வேறு எங்கோ படித்திருக்கிறேன். அது இவர்தானா? அல்லது வேறு யாரோவா? என்று தெரியவில்லை. பயோ பிளாஸ்டிக்(இப்படி தமிழில் சொல்லுங்கள் உயிரி நெகிழி என்று மண்டையை பிய்த்துக்கொள்ள வைக்கிறீர்களே) கண்டுபிடித்திருக்கும் மாநகராட்சிப் பள்ளி மாணவி கவர்கிறார். நல்லாசிரியருக்கு வணக்கங்கள்.
பதிலளிநீக்குஇங்கு முன்னர் வந்ததில்லை என்று நினைக்கிறேன்.
நீக்குநேற்றைய தொடர்ச்சி, தாரிணி என்றதும் எனக்கு கல்கியின் அலை ஓசை நாவலும், 'தாரிணி தெலுசு கொண்டி...' என்னும் பாடலும் நினைவுக்கு வரும்.
பதிலளிநீக்குஅடடே...
நீக்குஇன்றைய அனைத்து செய்திகளூம் இனிமை. ஒன்றே ஒன்று முன்பு
பதிலளிநீக்குபடித்த நினைவு.
பையோ டிக்ரே டபில் ப்ளாஸ்டிக் கண்டு பிடித்த குழந்தைக்கு இன்னும் நிறைய
உதவி கிடைத்து பலன் பெற வேண்டும்.
மாறுதல் பெற்றுச் செல்லும் கணித ஆசிரியரைக் கண்டு மனம் நெகிழ்ந்தது.
அழும் குழந்தைகளுக்கண்டு சோகம்தான். நெருக்கடியான்
வான் நிலையில் உதவி செய்த பாகிஸ்தான் நல் மனதுக்காரர்களுக்கு
மனம் நிறை நன்றியும் வாழ்த்துகளும்.
தலை முடி உரமாவது நல்ல செய்த்.
அதே போல மிகக் கடினமானசூழ்னிலையில் மாற்றுத்திறனாளிப் பையனின் சாதனை
மிக மிக மகிழ்ச்சி.
அனைத்து நற்செய்திகளையும் கொடுத்து
இந்த நாளைச் சிறப்பாகச் செய்து விட்டீர்கள்.
ஜகார்த்தா கோவில் உத்சவம். முடித்து விட்டு இன்றைய பாசிடிவ்
செய்திகளைப் படிக்க நேரமாகி விட்டது.
அனைவருக்கும் இரவுக்கான இனிய வணக்கம்.
நன்றி அம்மா.
நீக்குசில செய்திகள் ஏற்கெனவே படித்தவை. சில படிக்காதவை. அனைத்தும் நல்ல செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகள். நல்லன தொடரப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
இன்று இங்கு வந்து கருத்துரைப்பதற்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.
மக்கும் நெழிகி பை தயாரித்து கண்டு பிடித்த மாணவிக்கு பாராட்டுக்கள்.
புது வேலையாயினும் ஊழியர்களுடன் சேர்ந்து கற்றுக் கொண்டு தன்னம்பிக்கையுடன் நிறுவனத்தை நடத்தி வரும் சாந்தா பிரசாத் அவர்களை வாழ்த்துவோம்.
மதநல்லிணக்கத்தால் தங்களுடைய விஷேடங்களை தள்ளி வைத்த உன்னதமான குணம் படைத்த நண்பர்களுக்கு தலை சாய்த்த வணக்கங்கள்.
மோசமான வான் நிலையினால் தடுமாறிய நிலையில் இருந்த இந்திய விமானத்தை காப்பாற்றிய பாகிஸ்தானின் நல்ல மனம் படைத்த வான் வீரர்களுக்கு மிக்க நன்றிகள்.
முயல் வளர்ப்பில் ஈடுபாட்டுடன் இருந்து சம்பாதித்து பொருள் ஈட்டுவதோடு பிறருக்கு உதவி செய்யும் நல்ல மனம் படைத்த கொட்டாம்பட்டி சத்யா அவர்களை பாராட்டி வாழ்த்துவோம்.
இன்றைய அனைத்துச் செய்திகளும் மனதிற்கு மகிழ்வை தந்தன. அதை எங்களுக்கு பகிர்ந்த உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோ.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்கு