சனி, 22 பிப்ரவரி, 2020

சிறைசென்று மீண்டாலும் கற்கை நன்றே...


1)  இலட்சியத்தைக் கைவிடாமல்   டாக்டர் ஆனவர்.




2)  5,000 அனாதைப்பிணங்களை அடக்கம் செய்த பெண்




3)  பிச்சை எடுத்து நற்செயல்....




4)  நன்றி பானு அக்கா.



================================================================================================





நேர்மை – ஒரு வாழ்க்கை முறை
ரமா ஸ்ரீநிவாசன் 

நண்பர்களே, நாம் யாவரும் உரக்க பேசியும் சொற்பொழிவாற்றியும் பிரபல படுத்தும் இந்த “நேர்மை” என்பதுதான் என்ன ? நேர்மை என்பதின் விளக்கம் ஒரு சரியான செயலை நம்பகத்தன்மையுடன் செய்வது என்பதே ஆகும்.  இந்த பண்பின் ஆளுமையுள்ளவர் என்றும் தன் ஒழுக்க வரம்பிலிருந்து வழுவாதவர்.  இதன் உண்மையான அர்த்தம் யாதெனில் அவரது நேர்மையும் ஒழுக்கமும் ஒரு முழு எண்னைப் போன்றது.  என்றுமே உராய்வுகள் அற்றது.

என்னைக் கேட்டால், நேர்மைப் பாடங்கள் நாம் பிறந்ததிலிருந்து ஆரம்பிக்கின்றன.  நம் பெற்றோர், சகோதர சகோதரிகள், நண்பர்கள் யாவரும் நாம் வளர வளர நமக்கு முன் மாதிரிகளாக விளங்குகின்றார்கள்.

குழந்தைகளான நாம் பெரும்பாலும் நம் பெற்றோரைப் பார்த்தே வளர்கின்றோம்.  எனவே, “தகப்பன் எவ்வழி தான் அவ்வழி” என்பதற்கேற்ப அவர்களை போல் நாமாகின்றோம்.  அவர்களுடைய வாழ்க்கை முறையால் நாம் இப்படிதான் வாழ வேண்டும் என்று எடுத்துக் காட்டுகின்றார்கள்.  அவர்களுடையது ஒரே வழி.  அது குழப்பமில்லாத நல்ல வழி.

நம்முடைய உடன் பிறப்புகள் நீதியுடனும் நேர்மையுடனும் வாழ்வதைக் கண்டு நாம் அதை வாழ்க்கை பாடம் ஆக்கிக் கொள்கின்றோம்.

போகப் போக நம் ஆசிரியர்கள் தங்கள் நடத்தையால் நமக்கு முன் மாதிரிகளாக விளங்குகின்றார்கள். அவர்கள் நமக்கு நேர்மை, நியதி,
உண்மை ஆகியவற்றை கற்று கொடுக்கின்றார்கள்.

நமது அடுத்த சோதனை மிகுந்த கட்டம் நாம் வெளி உலகத்திற்குள் பிரவேசிக்கும் போது துவங்குகின்றது. நம் விஷப் பரிட்ஷை இப்போதுதான் ஆரம்பம் ஆகின்றது. அதிர்ஷ்டம் நம் பக்கம் இருந்தால், நாம் சரியான பாதையை தேர்ந்தெடுக்கின்றோம்.  அதிர்ஷ்டம் இல்லையென்றாலும், நாம் நேர்மையான்வர்களை முன்னோடிகளாகக் கொண்டு நல்ல பாதையை பின் பற்றலாம். நம்மை சுற்றி எண்ணிலடங்கா காந்திகளும், அப்துல்கலாம்களும், சிவாஜிகளும் ஜான்சி ராணிகளும் உள்ளனர். சந்திராயன் 2 launchன் பொழுது, இந்த உலகம் முழுவதும் ISRO தலைவர் திரு. சிவன் அவர்களை அண்ணாந்து பார்த்தது. launchல் நாம் தோல்வியுற்றிருக்கலாம்.

ஆனால், அவர் தானும் தன் குழுவின் உழைப்பாலும் தந்த உதாரணம் திக்கெட்டும் சென்று உரைந்தது.  அது “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பது.

நேர்மையுடன் வாழ, இது உங்கள் வாழ்க்கைக் கொள்கையாக இருக்கட்டும் :  “பொய் இந்த உலகிற்குள் வரட்டும். அது வெற்றி கூட அடையட்டும். ஆனால் என்னால் அல்ல” –  அலெக்சாண்டர் சோல்சனிட்சின்.

நேர்மையுடன் வாழ்வது சுலபமான காரியம் இல்லை. எப்போதாவது எல்லோருக்கும் தப்பு செய்யத் தோன்றும், சமரசம் செய்யத் தோன்றும்.

ஒவ்வொரு முறை நாம் தவறை கண்டும் காணாமல் முகம் திருப்பும்போதும், நம் மனச்சுமை ஏறுகின்றது.  இப்போது தப்பிப்பது போல் இருக்கும்.  ஆனால், தண்டனை சுவரோரம் காத்திருக்கும்.

நாம் நேர்மையுடன் வாழ எப்படிப் பழகுவது ? அதற்கு சிறிய படிக்கற்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.

உதாரணத்திற்கு, ஒரு டீக் கடையில் வரிசையில் நிற்கும்போது, ஒரு நிமிடம் அதிகமானாலும் பொருட்படுத்தாமல் பக்கத்தில் இருப்பவரிடம் இனிமையாக இரண்டு வார்த்தைகள் பேசுங்கள். டீ வினியோகிப்பவரிடம் ஒரு புன்சிரிப்பை உதிருங்கள். இது வெகு தூரம் செல்லும். நீங்கள் யாராவது ஒருவருக்கு உதாரணமாய் இருப்பீர்கள்.  உங்கள் மனம் சந்தோஷிக்கும். முடிவில் யாவரும் வெல்லுவோம்.  

என்னைப் பொறுத்தவரை நேர்மை என்பது நம் நல் வாழ்க்கையைப் பார்த்து மற்றொருவர் நம்மை பின்பற்றுவதேயாகும்.

நேர்மையுடன் வாழ்வது என்பது சுலபமானது அல்ல.  நாம் ஒவ்வொரு படிக்கல்லிலும் போராட வேண்டும். ஆனால், நாம் இங்கிருப்பதே “இயலாததை இயல வைக்கத்தானே”.   முதலில் மிகவும் கடினமாகத் தோன்றும் இந்த வாழ்க்கை லட்சியம் போகப் போக இயல்பாக மாறி விடும். நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பல பேர் நேர்மையானவர்கள் இல்லை என்பதை ஜீரணிப்பதே பெரும் பாடாகும். 

ஆம். ஆயின், இது நமக்கு ஒரு தடைக் கல்லாக இருக்கக் கூடாது. நாம் நேர்மையான நடைபாதையில் சென்று மற்றதை விதியின் வழியில் விடுவோம். நம் வாழ்க்கை முறையால் நாம் ஒருவரையேனும் ஊக்குவித்தோமேயானால், அதுவே நாம் காணும் பெரும் வெற்றியாகும். அவர் தன் பங்கிற்கு ஒரு குடும்பம், ஒரு சுற்றுப்புறம், ஒரு சமூகம் என்று ஆரம்பித்து முடிவில் இவ்வுலகமே நேர்மையின் அளவுகோலாக மாறிவிடும் அதிசயத்தைக் காண்பார்.

எச். ஜாக்சன் பிரௌன் என்னும் பெரும் மேதை கூறியது :  “உங்கள் பிள்ளைகள் நேர்மையைப் பற்றியோ, அன்பைப் பற்றியோ எண்ணும்
பொழுது,  அவர்கள் தானாக உங்களை பற்றி நினைக்கும்படி வாழுங்கள்”.

என்ன ஒரு அழகான அறிவு பூர்வமான மேற்கோள்!  நாம்தான் நம் மக்களை இவ்வுலகிற்குள் கொண்டு வருகின்றோம். அவர்களுக்கு ஓர் நல் வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது நம் தலையாய கடமையல்லவா?

அதற்கு நாம் முதலில் எடுத்துக்காட்டாய் வாழ வேண்டும். “சிறு துளி பெரு வெள்ளம்”.  ஒருவர் மேல் ஒருவராக பெருகி ஒரு வெள்ளத்தை உருவாக்குவோம். மேலும் நினைவு கொள்ளுங்கள் நண்பர்களே, நீங்கள் நேர்மையாக வாழ்வதன் காரணமே உங்கள் நேர்மையான பெற்றோர்தான்.

நேர்மை காசு பெறாமல் இருப்பது மட்டுமல்ல. நேர்மை உங்கள் ஒவ்வொரு நடத்தையிலும் தெரிய வேண்டும். நம் நண்பர் செய்யும் காரியம் சரியில்லை என்று தோன்றியவுடன் அவரைக் கூப்பிட்டு
எச்சரிப்பதுதான் நேர்மை.  நாம் மறுபுறம் திரும்பிக் கொண்டு போவதில்லை. அவருடைய செயல் தவறு என்பதைத் தெளிவான கருத்துக்களுடனும் புள்ளி விவரங்களுடனும் சுட்டி காட்டி எச்சரிக்க வேண்டியது நம் கடமையாகும். 

அவருடைய தவறான நடத்தையால் விளையப் போகும் தீமைகளையும் அவருக்கு உணர்த்த வேண்டும்.

அதே போல், நம் நடத்தையால் நம் குழந்தைகளுக்கு ஓர் முன்னுதாரணமாக விளங்க வேண்டும். அதே சமயம், அவர்களை சுதந்திரமாக சிந்திக்க விட்டு எது தவறு, எது நேர்மை என்பதை முடிவெடுக்கும் ஆற்றலையும் வளர்க்கப் பழக்க வேண்டும். 

எந்த வாழ்க்கைப் பாடமும் பள்ளிகளில் கற்பதில்லை. நேர்மையின் வெகு சிறந்த பாடங்கள் நடப்புகள் மூலமும் அனுபவங்கள் மூலமும்தான் கற்பிக்கப் படுகின்றன. எனவே, நம் நல் நடத்தை மூலம் படிப்பினை பெறும் நம் செல்வங்களின் அனுபவங்கள் என்றுமே இன்பமாகவும் உற்சாகமாகவும் அமையட்டும்.

உங்கள் நண்பர்களாகட்டும், சக ஊழியராகட்டும். அவர்களுடைய தவறுகளை தயங்காமல் சுட்டிக் காண்பியுங்கள். 

நேர்மையில் சமரசம் செய்து ஒரு நட்பு வளர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் என்றும் வேண்டாம்.

ஏனெனில், நண்பர்களும் சக ஊழியர்களும் நம் வாழ்க்கை என்னும் ரயில் பயணத்தில் வெறும் பிரயாணிகள்.  வருவார்கள், போவார்கள்.  ஆனால், நேர்மையும் வளைந்து கொடுக்கா தன்மையும் என்றும் நின்று நீடிப்பதாகும்.

“தலைமைத்துவத்தின் மேன்பு மிகுத் தன்மை ஐயுறவிற்கு இடந்தராத நேர்மையேயாகும்.  அது கால் பந்து விளையாட்டாக இருக்கட்டும்,  போர்முனை ஆர்மியாக இருக்கட்டும், உங்கள் அலுவலகமாக இருக்கட்டும்.  அதில்லாமல் எந்த வெற்றியும் சாத்தியமில்லை”. – டுவைட் டி எய்செனோவர்.

முடிவாக, நான் கூற விரும்புவது என்னவென்றால், நேர்மை என்பது முதலில் நம் வாழ்க்கை மரபாக இருக்க வேண்டும்.  உங்கள் நேர்மை சக மனிதர்களையும், நண்பர்களையும் மரியாதை மற்றும் நம்பிக்கை நிமித்தம் உங்கள் பக்கம் இழுக்கும்.  இவை யாவையும் தாண்டி நான் அனுபவித்த ஒரு உணர்வு என்னவென்றால், நான் மிகவும் சந்தோஷமாகவும் சௌஜன்யமாகவும் நெருடலற்ற உணர்வுடன் வாழ்வதுதான்.

நண்பர்களே, நான் ஓர் அருமையான திருக்குறளுடன் இக்கட்டுரையை முடிக்கின்றேன் :

“எல்லா விளக்கும் விளக்கல்ல, சான்றோர்க்கு பொய்யா விளக்கே

விளக்கு” – திருவள்ளுவர்.

57 கருத்துகள்:

  1. இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. காலை வணக்கம் நெல்லை.  பயணத்திலா இருக்கிறீர்கள்?

      நீக்கு
    2. கழுகுக்கு மூக்கில் வேர்த்துவிட்டது... ஹா ஹா ஹா.

      பயணம் மதியம் ஆரம்பம். நாளை காலையில் கிட்டத்தட்ட இருவார நெடிய பயணம் துவங்குகிறது. கண்ணன் வளர்ந்த இடங்களைத் தரிசிக்கலாம்.. ஆனால் பக்தியும் கூட வருமா என யோசிக்கணும்...

      நீக்கு
    3. அப்படியில்லை.   அதிரா பிறந்தநாள் வாழ்த்துப் பதிவில் கேட்கப்பட்டிருந்த காரணத்தால் நானும் கேட்டேன்!

      //ஆனால் பக்தியும் கூட வருமா என யோசிக்கணும்...//

      ஹா... ஹா...  ஹா...   சுற்றுலா சுவாரஸ்யம்தான்! 

      நீக்கு
    4. ஆஹா! நெல்லை ஊருக்குப்போகிறாரா? இரண்டு வாரங்களா? என்னை யார் வம்புக்கு இழுப்பார்கள்? போரடிக்குமே..((

      நீக்கு
    5. ஹா.... ஹா.... ஹா... கவலை வேண்டாம். மொபைல் வழி வருவார்.

      நீக்கு
  3. இன்றைய இணைப்புச் செய்திகளும்
    சிறப்புக் கட்டுரையும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜ் சார், இது ஆங்கிலத்தில் integrity என்பதை பற்றி எழுதிய கட்டுரை. சிறிது முயற்சி எடுத்து technical சொற்களை மொழி பெயர்த்து எழுதியுள்ளேன். பாராட்டிற்கு நன்றி.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. முதல் செய்தி விரிவாக இல்லாத்தால் கருத்துக்கூற முடியவில்லை. மற்ற மூன்று செய்திகளும் பிறருக்குப் படிப்பினை ஊட்டுபவை. அந்த நல்லோருக்குப் பாராட்டுகள்.

    நேர்மை - இதற்கு பெற்றோர் தாங்கள் நடக்கும் முறையினால் பிள்ளைகள் தானாகவே கற்பார்கள், நடந்துகொள்வார்கள். வெறும் அட்வைஸ் எந்தப் பயனும் தராது. நல்ல தலைப்பில் எழுதியுள்ளார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நேர்மை - இதற்கு பெற்றோர் தாங்கள் நடக்கும் முறையினால் பிள்ளைகள் தானாகவே கற்பார்கள், நடந்துகொள்வார்கள்.// இது நான் என் வாழ் நாளில் கண்கூடாகக் கண்டது. என் பெற்றோர் இருவரும் எனக்கு முன்னுதாரணங்கள். நாங்களும் அவ்வாரே முயற்சிக்கின்றோம்.

      நீக்கு
  6. இன்று பிறந்தநாள் காணும் அதிராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.  இந்நாள் மட்டுமல்லாது எந்நாளும் இனிமையானதாக அமைய வாழ்த்துகள்.  அவருடைய பட்டங்களை சொல்லி மாளாது.   அவருடைய இனிமையான பழகும் குணங்களை சொல்ல ஒருநாள் போறாது.  வாழ்க வளமுடன் அதிரா...    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      அதிரா சகோதரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் அவர் என்றும் எல்லா நலன்களையும் பெற்று சிறப்புடன் வாழ ஆண்டவனை மனப்பூர்வமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. அதிரா அவர்களே, இனிய பிற்ந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் என்றும் வளமுடனும், நிம்மதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க என் வாழ்த்துக்கள்.

      நீக்கு
    3. அன்பான அதிரா, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! உங்களின் எல்லா நல்ல விருப்பங்களும் ஈடேற இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.

      நீக்கு
    4. அதிராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க நலமுடன்.

      நீக்கு
    5. ஆவ்வ்வ்வ்வ் இங்கயுமோ?:)).. நன்றி ஸ்ரீராம் நன்றி..

      //அவருடைய இனிமையான பழகும் குணங்களை சொல்ல ஒருநாள் போறாது//

      இப்பூடிச் சொல்லிச் சொல்லியே கடசியில ஒன்றுமே என்னைப்பற்றிச் சொல்லாமல் விட்டிட்டாரே கர்:)) ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் கமலாக்கா.

      மிக்க நன்றிகள் ரமா அக்கா..

      மிக்க நன்றிகள் பானுமதி அக்கா

      மிக்க நன்றிகள் ஏ அண்ணன்...

      ஊசிக்குறிப்பு:
      என்வலப்புக்களைக் கூச்சப்படாமல் நீங்கள் தரலாம்:)) நானும் கூச்சப்படாமல் வாங்குவேனாக்கும்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  7. ஆயிரம் பெயர் பெற்ற அதிரா வாழ்க...

    அன்பின் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  8. தர்மம் தலை காக்கும் ..
    இது ஆன்றோர் வாக்கு...

    அத்தகைய தர்மத்திற்கு
    இருபுறமும் நின்று வெண்சாமரம் வீசுவன -
    வாய்மையும் நேர்மையும்...

    இவையிரண்டுமே வாழ்வின் தூய்மை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க உண்மையான வார்த்தைகள் துரை செல்வராஜூ அவர்களே. படிப்பதற்கு சுலபமாக இருந்தாலும், நேர்மையான வாழ்க்கை ஒரு மலை ஏறும் பயணம் என்று நான் என் வாழ்க்கை பயணத்தில் கண்டு கொண்டேன். அதற்கு உற்ற துணையாய் இருந்தவர்கள் என் பெற்றோர்கள்.

      நீக்கு
  9. செய்திகள் அருமை...

    நேர்மை கட்டுரை சிறப்பு...

    பதிலளிநீக்கு
  10. சேலம் பெண்மணி சீதா பிரமிக்க வைக்கிறார் ஓர் ஆண் மகனால் (தந்தை) அவர் இந்த வாழ்க்கையை தேர்வு செய்து இருக்கிறார்.

    வேலூர் திரு ஜெய்சங்கர் தனது திருமண வாழ்வைத் துறந்ததற்கு இந்த செயலே காரணம் அவர் பேப்பர் வியாபாரம் செய்வதாக சொல்லி இருப்பது தவறு இதற்கு அவர் மனதளவில் வருந்துகிறார் அவர் லாரியில் கிளீனராக வேலை செய்கிறார்.

    நேற்று முன்தினம் அவரைப் பாராட்டி வெகுநேரம் பேசினேன் எவ்வளவோ அரசு பணத்தை செலவு செய்து விழா நடத்துகிறார்கள், மணி மண்டபம் கட்டி வெட்டியாக விடுகின்றார்கள்.

    இவரைப் போன்றவர்களுக்கு சொந்த வீடு இல்லை நல்ல வாக்காளர்கள் பிறக்காதவரை நல்ல அரசியல்வாதிகளும் பிறக்கப்போவதில்லை.

    திரு.ஜெய்சங்கர் அவர்களைப்போல் மனது எனக்கு இல்லாவிட்டாலும் அவரது செயல்களில் 10 சதவீதமாவது நானும் வாழ்ந்து இருக்கிறேன், வாழ்கிறேன், வாழ்வேன் என்ற நம்பிக்கையோடு.... கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி கில்லர் ஜி.

      நீக்கு
    2. ஜெய்சங்கர் அவர்கள் பழைய பேப்பர் வியாபாரி என்று தவறாக குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன்.

      நீக்கு
  11. அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்.
    1,மருத்துவர் வளம் பெறுக.
    2,வயோதிகத்திலும் நற்காரியம் செய்யும் முதியவருக்கு வணக்கங்கள்.
    3, இதுதான் உண்மையான தர்மம். தன்னலமற்ற
    கர்மம். இந்தப் பெண்ணுக்கு எல்லோரும் உதவ முடிந்தால். நன்றாக இருக்கும்.
    அடுத்தவரும் தன்னையும் கவனித்துக் கொண்டு புனிதப் பணிகளில் ஈடுபடலாம்.
    4,

    பதிலளிநீக்கு
  12. அனபு ரமாவின் நேர்மை அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. பெற்றோர் தான் தாங்கள் நேர்மை வழி நடந்து குழந்தைகளின் வழிகாட்டியாக இருக்கவேண்டும்.
    நன்றி .

    பதிலளிநீக்கு
  13. அன்பின் அதிராவுக்கு. ,வளமான பிறந்த நாள் வாழ்த்துகள்.
    இதே அழகான மனத்தோடு. வாழ்க்கை செழிக்க வாழ்ததுகள்.

    பதிலளிநீக்கு
  14. அதிராவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
    என்றும் பதினாராய் மகிழ்ச்சியோடு இருக்கட்டும் இறை அருளால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஅ இங்குமோ?.. இன்று கோமதி அக்கா எல்லா இடத்திலும் எனக்கு வாழ்த்துச் சொல்லியே களைச்சிருப்பா ஹா ஹா ஹா நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  15. முதல் செய்தி சமுதாய்ம் அவரை ஒதுக்காமல் அவரிடம் மருத்துவத்திற்கு வருகிறதே!
    சேலம் சீதா கடைசியில் சொன்னது மனதை கனக்க வைத்து விட்டது.பெண்களை மதிக்கும் நாடும், வீடும் நலம் பெறும். அவர் செயல் பாராட்ட வேண்டும்.

    கோவிலில் பிச்சை எடுத்து கோவிலுக்கு கொடுத்து இருக்கும் பெரியவரை வணங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  16. ஜெயசங்கர் போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள் தேவகோட்டை ஜி அவரிடம் உரையாடி அவர் நிலையை கூறி இருப்பதற்கு அவருக்கு நன்றி.
    ஜெயசங்கரின் நல்ல செயலை பாராட்டி அவருக்கு உதவி செய்யலாம் அரசியல்வாதிகள் .

    பதிலளிநீக்கு
  17. நேர்மையைப் பற்றிய கட்டுரை மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அவர்களே, மேலும் மேலும் யாவரும் பாராட்டும்போது, இந்த உலகிலும் நல்லவர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கை பிறக்கின்றது.

      நீக்கு
  18. கடந்த கால தவறையே நினைத்து நிகழ் காலத்தை வீணாக்காமல் நிகழ்காலத்தில் மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும் சுபாஷை பாராட்ட வார்த்தையில்லை.
    சீதாவின் மனக்கசப்புகள் மாறி அவருக்கு நல் வாழ்க்கை அமைய பிரார்த்திக்கலாம்.
    பிச்சை எடுத்து உதவும் பெரியவர் ஆச்சர்யப்படுத்துகிறார். சாதாரணமாக கையேந்தி பழகியவர்களுக்கு பகிர மனம் வராது.

    பதிலளிநீக்கு
  19. ரமா ஶ்ரீனிவாசன் கட்டுரை பிரமிப்பூட்டுகிறது. தமிழில் எழுதுவதில் நல்ல முன்னேற்றம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. , பானு, எல்லாம் நீங்களும் ஸ்ரீராமும் மற்ற நண்பர்களும் தரும் உற்சாகம்தான்.

      நீக்கு
  20. அநாதைப் பிணங்களைப் புதைக்கும் செய்திகள் ஏற்கெனவே அறிந்தது. மற்றவை புதுசு. மருத்துவர் பணியில் சிறந்து விளங்க வாழ்த்துகள். கடந்த காலத்தைக் கனவென நினைத்து எதிர்காலத்தைச் சிறப்பாக வாழ வாழ்த்துகள். திருமதி ரமா ஸ்ரீநிவாசனின் கட்டுரை நன்றாக உள்ளது. ஆங்காங்கே காணப்படும் ஒரு சில எழுத்துப் பிழைகளைத் தவிர்த்தால் பிரமாதமாக எழுதுவார். அடுத்து சொந்தக்கட்டுரையாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
  21. ஓ ரமா அக்காவின் கட்டுரை[சொற்பொழிவு] இடம்பெறுகிறதோ.. நன்றாக இருக்கிறது.

    நேர்மை பற்றிய விளக்கம் நேர்மையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!