செவ்வாய், 10 மார்ச், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை - திருடா திருடா - கீதா ரெங்கன்

திருடா திருடா
கீதா ரெங்கன் 

காலை வேளை. பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய பேருந்து பள்ளிகல்லூரிஅலுவலகம் மற்றும் பெரிய சந்தைக்குச் செல்லும் கூட்டத்தைச் சுமந்து கொண்டு, கர்ப்பிணிப் பெண் போல மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. படிகளில் தொங்கும் அளவு கூட்டம் இல்லை. கதவுகளும் மூடியபடிதான் இருக்கும். ஆண் பெண் பிரிவு என்றெல்லாம் பெரிதாக இல்லை என்றாலும்பெண்கள் முற்பகுதியிலும் ஆண்கள் பிற்பகுதியிலும்கூட்டத்திலும் இளசுகள் தைரியமாக மொபைலை நோண்டிக் கொண்டிருந்தனநடுத்தரமும் தான்சில இயர் ஃபோன் செருகிக் கொண்டு லயித்திருந்தனஇருக்கையில் இருந்த சில பெண்கள் தங்கள் ஒப்பனையைச் சரிசெய்து கொண்டிருக்க, சிலர் காலை உணவில் மும்முரமாக இருக்கசிலர் உறங்கத் தொடங்கியிருந்தனர்.  
இப்படி நான் பேருந்துக் கூட்டத்தை அளந்து கொண்டிருந்த போது, நடுவில் இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த அந்த நீலச் சட்டைஜீன்ஸ் அணிந்திருந்த பெண்ணும் என்னைப் போல் சுற்றி நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்அவளது பார்வைம்ஹூம் சரியாகப்படவில்லை.
அப்போதுதான் கவனித்தேன் அவள் அருகில் பேருந்துக் கூட்டத்திற்குச் சற்றும் பொருந்தாத ஒரு தேவதை நின்று கொண்டிருப்பதைமனம் வியப்பில் திக்குமுக்காடியது. பேருந்தே ஜில்லானது! அனுஷ்ஆனால் படங்களில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்குமோ? கூட்டமும் கண்டு கொள்ளவே இல்லையே. அனுஷ் எல்லாம் பஸ்ஸில் வர நோ சான்ஸ்! ஷூட்டிங்க்? ஆனால் கேமரா எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே. புரியவில்லை. உறுதியாகும் வரை தேவதை என்ற பொதுப்பெயர்.
நானும் ஆந்தையைப் போல பார்வையைச் சுழற்றினேன்அதானே பார்த்தேன்! இப்படி ஒரு தேவதை இருந்தால் ஆண்கள் தூங்குவார்களா என்ன?! எல்லோரது பார்வையும் தேவதையின் மேல்தேவதையின் தோளில் தொங்கிக் கொண்டிருந்த நீளமான தோள்பை கூட்டத்தில் சிக்கித் தவித்ததுதேவதையும் தான்பாவம்.
அந்த நீல உடுப்புப் பெண், தேவதையைத் தட்டி அவள் தோள் பையின் ஜிப் திறந்திருப்பதைக் காட்டி மூடச் சொன்னாள்தேவதையின் உதடுகள் உச்சரித்த 'தாங்க்ல் வெளிப்பட்ட அந்த ரோஸ் நாவும், 'யுஎன்று சொன்னதில் குவிந்த அந்த அழகிய வண்ண உதடுகளும்...ஸ்ஸ்ஸ்ஸ்….அந்த உதடுகளில் அழுத்தமான ஒரு முத்தம் கொடுத்து... ஜிஃப் ஆக  இருந்திட்டால்….. என்ற ஏக்கம் எனக்கு மட்டும்தான் எழும்பியதோ இல்லை எல்லா ஆண்களுக்குமாஎப்படிக் கேட்பது?! அனிச்சையாக என் கைகள் உதட்டைத் தடவிட முள்ளாய் குறு குறுவென...ச்சே இந்தத் தாடிய முதல்ல எடுத்து தொலைக்கணும் என்று நினைத்த போது…...
தேவதையின் மீதிருந்த என் கவனத்தைக் கலைத்தான் எனக்கு சற்று முன்னே நின்று கொண்டிருந்தவன்அவனும் அந்த நீலச் சட்டையைப் போலவே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.  நீலச் சட்டை இவனைப் பார்த்து தம்ப்ஸ் அப் காட்ட இவனும் பேருந்தின் பின்னால் கடைசி இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து தம்ப்ஸ் அப் காட்ட  அவன் ஏதோ குனிந்து செய்ய எனக்கு வித்தியாசமாகப் பட்டது. சந்தேகம் எழுந்தது.
இந்த வழித் தடத்தில், இப் பகுதியில் உள்ள 4, 5 நிறுத்தங்களுக்கு இடையில்தான் அடிக்கடி திருட்டு நடப்பதாகச் சொன்ன சமீபத்துச் செய்திகள் நினைவுக்கு வர, 'அந்தக் கூட்டம்தானோ இவர்கள்?' நான் உஷாரானேன்என் பின்புற பாக்கெட்முன்புற பாக்கெட் எல்லாவற்றையும் தடவிப் பார்த்துக் கொண்டேன்எல்லாம் பத்திரமாக இருந்தன. 
தேவதையின் தோள்பை அந்த நீலச்சட்டையின் கைக்கு வெகு அருகில். 'அந்த நீலச் சட்டைதான் நல்லவள் போல கைப்பையின் ஜிப்பை மூடச் சொன்னது நடிப்போதேவதையை இப்போது எப்படி எச்சரிப்பது?'  சுற்றும் முற்றும் பார்த்த வேளையில்,  நான் நின்றிருந்த இடத்தின் அருகில் இருக்கையில் உட்கார்ந்திருந்த இரு இளைஞர்களின் ஸ்வாரஸ்யமான வாக்குவாதத்தில் ஒருவன்  மெல்லிய குரலில்  அத்தேவதை அனுஷேதான் என்றும் ஷூட்டிங்தான் என்றும் சொல்லி  கேமராவை  தேடினர். 
அப்ப ஷூட்டிங்காகதான் இருக்குமோ?! அனுஷ் மேக்கப்பே இல்லாமல் – அப்போது கூட தேவதையேதான்! இதைச் சொல்லலைனா எனக்கு புண்ணியம் கிடைக்காது!க் - யதார்த்தமாக இருக்கணும்னு நினைத்திருப்பார்கள் போலும். சரி அதுக்காக அனுஷ் தேவதையை இப்படிக் கூட்டத்துல சிக்க வைக்கிறது நியாயமா?!
அந்த இருவரும் மீண்டும் தம்ப்ஸ் அப் காட்டினர்பின்னால் இருந்தவன்  திடீரென்று ஜன்னலின் மேலே பேருந்தின் கூரையின் மூலையில் ஏதோ செய்தான்அங்கு என்ன இருக்கிறது என்று கண்ணிற்குச் சரியாகப் புலப்படவில்லை.  ஹைடெக் கேமராவாக இருக்குமோலாம்!
அனுஷிற்கு சமீபத்தில் நின்றிருந்த அந்த ஆளைப் பார்த்து கொஞ்சம் பொறாமை வந்தது. ச்சே தெரிந்திருந்தால் நானும் கொஞ்சம் முன்னேறி நின்றிருக்கலாம்.  அனுஷிற்கு வைக்கப்பட்ட கேமரா கோணத்தில் ப்ரேமிற்குள் வந்திருக்கலாம். நண்பர்களிடம் கெத்து காட்டியிருக்கலாம். நானும் அனுஷுடன் நடித்தேன் என்று.   
திடீரென்று  பேருந்து இடதுபுறம் ஓரம் கட்டியதுபேருந்து நிறுத்தம் எதுவும் வந்திருக்கவில்லைபேருந்தின் கதவுகளும் திறக்கவில்லை. யாரும் இறங்காதபடி பார்த்துக் கொண்டனர். ஒருவேளை ஏதேனும் திருட்டோ? இல்லை...ஷூட்டிங் முடிந்திருக்குமோகண்டக்டரும்டிரைவரும் கூட ஏதோ புரிதலில் செயல்படுவது போலத் தோன்றியது.   
எல்லோரும் வியப்புடன் என்ன நடக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்த போது  நீலச்சட்டைக்காரி பேருந்தின் முன்புறம் சென்று டிவி போன்ற பெட்டியின் திரையை எல்லோரும் பார்க்கும் வகையில் விரித்தாள். ஹைடெக்! அதில் காட்சிகள் விரிந்தன. கூடவே நீலச்சட்டைக்காரியும்,  என் முன்னே நின்றிருந்தவனும்  அதைக் காட்டி விளக்கிப் பேசினார்கள். 
ஆச்சரியம்! அனுஷ் தேவதையின் கைப்பையிலிருந்து, தான் திருடியது பற்றி நீலச்சட்டை சொல்லிக்கொண்டிருந்தாள். 'அது சரி இந்த நீலச்சட்டை, ஜிப்பை மூடச் சொல்லி அறிவுறுத்தி அப்புறம் எப்படி அதிலேயே திருடவும் செய்திருக்கிறாள்! வித்தகி’. என் முன் இருந்தவனும் திருடினானாம்! கூட்டத்தில் எப்படி திருடு நடக்கிறது மக்கள் எப்படி உஷாராக இருக்க வேண்டும் என்று விளக்கிக் கொண்டிருந்தார்கள். நானும்  கவனமாக இருக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டேன்மக்கள் தங்கள் உடைமைகளைச் சரி பார்த்துக் கொண்டனர்.

நன்றி இணையம் 
எல்லாம் விளக்கிவிட்டு அவர்கள் இறங்கினார்கள்கூட இருவர் அந்தக் குழுவில் இருந்தது அப்போதுதான் தெரிந்தது. அனுஷும் இல்லை. வெறிச்! ஸ்வாரஸ்யம் இல்லை.
அடுத்த நிறுத்தத்தில் நான் இறங்கினேன். என் கையில்  இரண்டு 2000 ரூ நோட்டுகள். காந்தித்தாத்தா கோபப்படாமல் தன் பொக்கை வாயை விரித்துச் சிரிப்பு! ஸாரி மிஸ்டர் காந்தி தாத்தா! பின்னே கோடிக்கணக்குல கண் முன்ன கொள்ளை அடிச்சவன் எல்லாம் தப்பிக்கலையா?! ஆனா, பாவம் என் முன்னே நின்னுட்டுருந்தவன். ஸாரி ப்ரோ!
இருங்க இன்னும் முடியலை. இப்ப சொல்லப் போறது ரொம்ப முக்கியம். நான் இறங்கி நோட்டைப் பார்த்து உங்ககிட்ட டயலாக் அடிச்சிட்டுருந்தேனா…என் பக்கத்துல சர்ர்னு ப்ரேக் அடிச்சு வண்டி நிக்கற சத்தம். ஷாக்! அந்த ஷூட்டிங்க் க்ரூப். ஒரு வேளை கேமரால பதிஞ்சு……என்னை பிடிக்க வந்துட்டாங்களோ? உஷாரானேன்.
ஆனால் என்னைக் கடந்து சென்று நின்றனர். அடுத்து வேறு வழித்தட பேருந்தில் ஏறி ஷூட்டிங்க் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். என் முன்னே நின்றிருந்தவனையும், நீலச்சட்டையையும் காணவில்லை. ஹோட்டலில் சாப்பிடப் போகிறார்கள் போலும். அனுஷ்? ஸ்பெஷல் காரில் சென்றிருக்கலாம். நான் அவர்கள் கண்ணில் படாதவாறு நின்று கொண்டு கவனிக்கத் தொடங்கினேன்.
என் முன்னே நின்றிருந்தவன் தன் சைட் பேக்கட்டைத் தடவிப் பார்த்துக் கொண்டே வந்தான். “ஹேய்… என் சைட் பேக்கட்லருந்த 2 2000 நோட்டு அபேஸ்.” எல்லோரும் அதிர்ச்சியில் பார்க்க…...
“ஹேய்! கூல்! செல்லா நோட்டு! ஹாஹாஹாஹா....” என்று கண்ணடித்தான். “செக்யூரிட்டி ஃபீச்சர் ஒன்னு சரியா இல்லை. டக்குனு தெரியாது”
செல்லா நோட்டா? நான் எடுத்துப் பார்த்தேன். ஹாஹா இதையும் செல்ல வைக்கும் அதி கில்லாடி நான்.  
“ஓ! காட்! டேய் முட்டாள், ரொம்ப புத்திசாலின்னு நினைப்பு?? நம்மள நல்லா ஃபூல் பண்ணிட்டான்டா. பஸ் ஃபுல்லும் கவராகியிருக்கு.. அதுவும் ஒருத்தன் பக்கத்து பொண்ண நைஸா தடவினது கூட எல்லாம் கவராகியிருக்கு ஆனா அவன் ஆட்டைய போட்டது வீடியோல வரவே இல்லை நம்ம ப்ராஜெக்ட் ஃபெயிலியர்! இதுல வேற ரகசிய விஜிலென்ஸ் கேமரா ஃபிக்ஸிங்காம்!” நீலச்சட்டைக்காரி அதிர்ச்சியில் எல்லோரையும் திட்டி புலம்பிக் கொண்டிருந்தாள். 
“ஹா…….ஹா…….ஹா…….ஹா……ஹா……மண்டை காயட்டும்” என் கூலிங்க்ளாஸை ஸ்டைலாக மாட்டிக் கொண்டு கெத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். 

77 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் அனைவருக்கும். ஆஹா
    கீதா கதையா. மீண்டும் வருகிறேன். அனுஷ்கா அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் வல்லிம்மா..  வாங்க...

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் ஸ்ரீரராம் மற்றும் எல்லாருவுக்கும். நேற்று பயணத்தில்...இரவு 11 மணியாகிவிட்டது பெங்களூர் வந்து சேர...கருத்து கொடுக்க முடியவில்லை..இன்று பார்த்து ஒவ்வொன்றாகட் கொடுத்து விடுகிறேன்...தாமதத்திற்கு மன்னிப்பு...ப்ளீஸ்..

      மிக்க நன்றி ஸ்ரீராம் கதை வெளியிட்டமைக்கு. பயணம் சட்டென்று முடிவான ஒன்று.

      கருத்திட்ட எல்லாருக்கும் மிக்க நன்றி...பின்னர் தனி தனியாகக் கொடுக்கிறேன்..

      கீதா

      நீக்கு
    3. மொபைல் வழியாகக் கருத்து...மெதுவாகத்தான் கொடுக்க முடிகிறது. அதிலும் ஒரு எழுத்து அடித்தால் அது ரஜினி ஸ்டைலில் நூறாக வருகிறது.!!!. அதை அழித்து...நீண்டும் அடிக்க அது ஒரு எழுத்து அடிக்கவே பல நொடி எடுத்து வார்த்தை கணினி மொழியாக வருகிறது. ஜம்பிங் ஸ்டைல்...

      கணவரின் கணினி கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் கிடைக்கவில்லை. மோவைல் வழி ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  2. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  3. கார்த்திகைப் பிறையைக் கண்டது மாதிரி இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  4. கீதா ரங்கன் அவர்களது கை வண்னம்...

    இன்றைய பேருந்து பயணம் கண் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கிறது...

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. கீதாவுக்கு நினைவு படுத்த வேண்டும்!

      நீக்கு
    2. மிக்க நன்றி துரை அண்ணா கருத்திற்கு..

      மிக்க நன்றி ஸ்ரீராம் நினைவு படுத்தியமைக்கு.

      கீதா

      நீக்கு
  6. பிக்பாக்கெட் கதை+அனுஷ்கா ஷூட்டிங்க்+ பரிஸோதனைக்காமிரா
    பஸ்ஸில் சாப்பிடக்கூட வழி இருக்கா. ஒண்ணுமே தெரியாமல் இருக்கேனே.
    மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா... உங்க ஊர்ல பஸ் பிரயாணத்தின்போது டிபன் பாக்சை ஓபன் பண்ணிச் சாப்பிட ஆரம்பித்தால் அப்ஜெக்ட் செய்வாங்களா? (வெளிநாடுகள்ல)

      நீக்கு
    2. காரில் போனால் கூடக் காரை ஒரு ஓரமாக ஓய்வு எடுக்கும் இடம் அருகே நிறுத்திவிட்டுக் காரில் அமர்ந்து சாப்பிடுவோம். அநேகமாக இந்த ஓய்வு எடுக்கும் இடங்களில் உள்ளே பெரிய கூடம், மேஜை, நாற்காலிகள் இருக்கும். வெளியேயும் சிமென்ட் பெஞ்சுகள் போட்டிருக்கும். அங்கே அமர்ந்து சாப்பிடலாம். ஆனால் நீங்கள் கேட்பது போலப்போக்குவரத்துக்கு இருக்கும் பேருந்துகளில் நான்கு அல்லது ஐந்து பேர் போனால் அதிகம். அதுவும் நீண்ட பயணங்களில் ஓய்வு எடுக்கும் இடங்களில் நிற்கும். அங்கே சாப்பிடலாம். பேருந்துகளில் எல்லாம் சாப்பிட முடியாது. நீண்ட பயணங்களிலும் கூட பத்துப் பேர் இருந்தால் அதிகம். எங்க பேத்தி ஆஸ்டினில் இருந்து ஹூஸ்டனுக்கு வாராந்தர விடுமுறைகளில் வரும்போது பேருந்தில் பத்துப் பேர்தான் இருப்பார்கள் என்று சொல்லுவாள். அவளையே அவள் பெற்றோர் காரைப் பயன்படுத்த அனுமதிச்சிருந்தால் அவள் காரில் தான் வருவாள். இப்போதைக்கு உள்ளூர் தவிர்த்து வெளியூர்களுக்குக் காரைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை.

      நீக்கு
    3. வல்லிம்மா வணக்கம்...இங்கு எல்லாம் காலை பேருந்தில் வேலைக்குச் செல்வவர்கள் சாப்புட்டுக் கொண்டே பயணிப்பார்கள். பெரும்வாலும் பேருந்து பயணம் அதிக நேரம் எனவதால்...அது போல மாலையிலும்...மதியம் கூட...பாவம் பள்ளு, கல்லூரி வேலைக்குச் செல்வவர்கள்...

      உங்கள் ஊரில் முடியாதே...

      நன்றி அம்மா கருத்திற்கு..

      கீதா

      நீக்கு
  7. காலை வணக்கம் அனைவருக்கும்.

    ஆரம்பிச்சாச்சா... அனுஷ்கா அக்கப்போர்?

    கீதா ரங்கன் கதை எழுதி எதில் எப்படி அனுப்பினார்? அவர் இணையம் வந்தே மாதங்களாகிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  வணக்கம்...

      நீக்கு
    2. அவ்வப்போது ஏதாவது செய்து எதையாவது எப்படியாவது அனுப்புவார்!  அவர் இணையத்துக்கு வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

      நீக்கு
    3. நெல்லை ஹாஹாஹா... ஸ்ரீராமின் பதிலை டிட்டோ செயகிறேன்..

      கீதா

      நீக்கு
  8. கீதா ரங்கன்.... கதை புரியலை, நடப்பதுபோல் தெரியலை (unreality). எத்தனுக்கு எத்தன் என்று சொல்ல வர்றீங்களா. இல்லை எனக்குத்தான் கதையைப் புரிந்துகொள்ளத் தெரியலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரெங்கன் தர்ஷன் கொடுத்திருக்கிறார் என்பதே பெரிய விஷயம். சரியாத் தெரியலே.. -ன்னா எப்படி!

      நீக்கு
    2. திருடன் மனதிலும் அனுஷை முத்தமிடும் ஆசையோ. அடேங்கப்பா
      கதை கொஞ்சம் புரியவில்லை.
      ஆனாலும் நடை நன்றாக இருக்கிறது.

      நீக்கு
    3. கீதா ரங்கன் எதற்கும் பாராட்டுகளையே பின்னூட்டமாக்குவார். இது சரியில்லை என்று ஒரு போதும் பின்னூட்டமிட மாட்டார். ஆனா நான் அப்படிச் செய்யாத்து என் தவறுதான். என்ன செய்ய?

      நீக்கு
    4. நெல்லை..அதே எத்தனுக்கு எத்தன்...

      நீங்கள் தாராளமாகச் சொல்லலாம்...கருத்துகளை....ஒவ்வொருவர் விதமும் வெறுதானே...இதென்ன மொய் கணக்கா..ஹாஹாஹா..உங்க தவறு ஒன்னுமில்ல....

      மிக்க நன்றி நெல்லை..

      ஹாஹாஹா ஏகாந்தன் அண்ணா...

      கீதா

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தி/கீதாவின் கதையா? அதிலும் அனுஷ்காவை வைத்து? இஃகி,இஃகி, ஸ்ரீராமுக்கு ஜென்ம சாபல்யம் கிடைச்சிருக்குமே/ கதையைப் பின்னர் தான் படிக்கணும். வீட்டு வேலைகள் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கென்னவோ இந்த கேஜிஜி சார் பண்ணறாப்புல ஶ்ரீராம், கீதா ரங்கன்கிட்ட, அனுஷ்கா கதை நெடுக வரணும், கதை பஸ்ஸுல நடக்கணும்னுலாம் (தன்னிடம் இருக்கும் அனுஷ் படத்துக்கு ஏற்ப) கண்டிஷன் போட்டிருப்பாரோ? ஹா ஹா ஹா... எனினும் கீதா ரங்கன் இணையம் வந்ததைக் கொண்டாடுவோம்..

      நீக்கு
    2. ஸ்ரீராம், கௌ அண்ணா யாருக்கும் கதையில் நான் அனுஷ் கொண்டு வந்ததற்கு எந்த சம்பந்தமும் இல்லை....யாரேனும் ஒரு பிரபலம் விழிப்புணர்வு படங்களில் வந்தால் தானே அது பேசப்படுகிறது....அனுஷ் வந்தா கும்மி வம்பு வரும்னு நினைச்சு வச்சது...அவ்வளவுதான்..ஆனால் என்னாலேயே கருத்து வர தாமதம்...

      இணையம் தொடர்ந்து வர கொஞ்சம் லேட் ஆகும்...நினைப்பது நடப்பதில்லையே...

      கீதா

      நீக்கு
  10. சுவாரஸ்யமான கதை..வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    இன்று சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் எழுதிய கதை எனப் படித்ததும் அவர்களை இன்று தளத்தில் கண்டது போல், மகிழ்ச்சியடைந்தேன். மார்ச்சு மாத வாக்கில் அவர்கள் வலைப்பக்கம் வந்து விடுவார்கள் என நீங்கள் கூறியது நினைவுக்கு வந்தது.

    நேற்று இணைய பிரச்சனை காரணமாக என்னால் வலைத்தளம் வர இயலவில்லை. இனி என் அறுவைகள் தொடர்ந்து விடும். ஹா. ஹா. ஹா. ஆனால் எல்லோரும் இங்கு கருத்தில் கூறியிருக்கும் அழகான படம் எனக்கு மட்டும் ஏனோ தெரியவில்லை. (சரியான பின்னும் இணையத்தின் உடல் பலஹீனமாக இருக்கும் என நினைக்கிறேன்.) இருப்பினும் கதை படித்து கொண்டு பின்னர் வருகிறேன். அனைவருக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. டிஜிடல் உலகில் ஹைடெக் திருட்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே கில்லர்ஜி மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு..

      கீதா

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    கீதா ரெங்கன் வாங்க வாங்க , மார்ச் மாதம் வருவேன் என்று சொன்னீர்கள் வந்து விட்டீர்கள்.

    //நம்ம ப்ராஜெக்ட் ஃபெயிலியர்! இதுல வேற ரகசிய விஜிலென்ஸ் கேமரா ஃபிக்ஸிங்காம்!” நீலச்சட்டைக்காரி அதிர்ச்சியில் எல்லோரையும் திட்டி புலம்பிக் கொண்டிருந்தாள்.//

    கதை பஸ்ஸில் நடக்கும் கதை. வல்லவனுக்கு வல்லவன். "கள்ளன் பெரிசா காப்பான் பெரிசா" என்று எங்கள் பக்கம் சொல்வார்கள்.

    உங்கள் வரவுக்கும், கதைக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. //ஹா…….ஹா…….ஹா…….ஹா……ஹா……மண்டை காயட்டும்” என் கூலிங்க்ளாஸை ஸ்டைலாக மாட்டிக் கொண்டு கெத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். //

    "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"
    பாடல் கேட்குது காதில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா மார்ச் மாதம் கடைசியில் வருவதாக இருந்த கணினி டாக்டர் இப்போதைய கோரோணா நிலவரம் பொருத்து வருவார் என்று தகவல்...தெரியலை. என் கணவரின் கணினி கிடைத்தால் அவ்வப்போதேனும் வரலாம்...பார்ப்போம்...

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கோமதிக்கா...

      கீதா

      நீக்கு
  15. நீ....ண்....ட.... நாட்களுக்குப் பிறகு கீதா ரங்கன் கதை. கதையில் அனுஷ்!! பேருந்தில் எப்படி ஆட்டையைப் போடுகிறார்கள் என்று சொல்லப் போகிறார் என்று பார்த்தால் மழுப்பி விட்டார். இருந்தாலும் சுவாரஸ்யமான நடைக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா...பானுக்கா..அக்கா அந்த தேக்கினிக்கி இருக்கற ஒரு வீடியோ லிங் எடுத்து வைத்திருந்தேன்..கதையோடு அனுப்ப இணைக்க மறந்திருக்கிர்றேன்னு இப்பதான் தெரிஞ்சுச்சு...என்றாலும் சில பகிறங்கமாகச் சொல்லாமல் இருப்பதே நல்லது என்றும் தோன்றும்...

      மிக்க நன்றி பானுக்கா கருத்திற்கு...

      கீதா

      நீக்கு
  16. பேருந்தில் நடக்கும் திருட்டு - ஸ்வாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறார் கீதா ஜி.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது வருகை. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  17. வலைத்திரட்டி உலகின் புதிய புரட்சி: வலை ஓலை .
    நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது கேட்டு வாங்கிப் போடும் கதை – திருடா திருடா – கீதா ரெங்கன் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
  18. பேரூந்தில் திருட்டா பிறர் கவனம் திருப்ப் அனுஷ்கா என்னு உத்தியோ கீதாவின் கதையா நம்பமுடியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜிஎம்பி சார் கரீகட்டு...அதே...ஹாஹாஹா...நன்றி சார்...

      கீதா

      நீக்கு
  19. கதையில் கொஞ்சம் குழப்பம் இருப்பது போல் தெரிகிறது. ஆனாலும் சிறப்பு. நானும் பேருந்தில் பொருளை பறி கொடுத்திருக்கிறேன். அப்போதில் இருந்து முடிந்த வரை கூட்டமான பேருந்துகளில் செல்வதில்லை.

    பதிலளிநீக்கு
  20. நீல சட்டைக்காரியின் புலம்பலை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  21. சுவாரஸ்யமான கதை... சகோதரி கீதா ரெங்கன் அவர்களா என்று வியக்கவும் வைக்கிறது...!

    ஸ்ரீராம் சாருக்காக எழுதியதாகவும் தெரியவில்லையே... அப்படியிருந்தால், மனதை திருடி(ய) 'அனுஷ்' காணாமல் போய் விட்ட பின், கேவலம் 'சிப்பு' வைத்த 2 x 2000 திருட எப்படி மனம் வரும்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா...டிடி.... அனுஷ் டீம் போவதற்கு முன்னரே அவன் ஆட்டையை போட்டாச்சே..அந்த டீம் ஆளிடம் இருந்தே.....

      இப்படி எழுத ஒரு சிறு முயற்சி அவ்வளவே....மிக்க நன்றி டிடி கருத்திற்கு..

      கீதா

      நீக்கு
  22. ஆஆஆ கீதா ஒளிச்சிருந்து கதை எழுதுறாவோ... போன கிழமைதான் கீதாவைக் காணவில்லையே என்னவாக இருக்கும் எனக் கவலைப்பட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா தேடியதற்கு நன்றி...நீங்க கம்பபாரதி ஆச்சே...அப்புறம் ஏன் பிஞ்சு எழுத்தாளர்...ஹாஹாஹா....நெல்லை கண்ணுல இது படலியோ....ஹாஹாஹா..

      வலைப்பக்கம் தொடர்ந்து வர முயற்சி செயகிறேன் பார்ப்போம்...

      கீதா

      நீக்கு
  23. பேருந்தில் திருட்டு அதிலும் "ஜேப்படி"க் கொள்ளை நடக்கும் விதம் பற்றிப் பொதுமக்களை எச்சரிக்க வந்த காவல்துறையினரா அந்த நீலச் சட்டைக்காரி, அவள் கூட வந்தவர்கள் எல்லாம்? அதில் தெரியாமல் மாட்டிக்கொண்டு பின்னர் உண்மையிலேயே ஜேப்படி செய்த ஒரு திறமையான திருடன் தான் நம் கதாநாயகனா? தி/கீதா ஆங்காங்கே கதையில் தெளிவாகச்சம்பவங்களைச் சொல்லாட்டியும் ஓரளவுக்குப் புரிகிறது. ஏதோ கல்லூரிக் காலக் கதைனு நினைச்சேன். கடைசியில் மாறியே போச்சு. சம்பவக் கோர்வையும், பாத்திரப் படைப்புக்களும் சரியாகப் பொருந்தி வரவில்லையோ? அனுஷை அங்கே காட்டியது ஸ்ரீராமுக்காகவா? அல்லது பேருந்துப் பயணிகளை எச்சரிக்கவும், விளம்பரப் படங்களில் பிரபலங்களை வைத்து எடுப்பதும் காரணமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அனுஷை அங்கே காட்டியது ஸ்ரீராமுக்காகவா?//

      கர்ர்ர்ர்ர்ர்ர்....

      நீக்கு
    2. கீதாசாம்பசிவத்தின் கேள்விகளே எனக்கும்.
      போலீஸ் ரிஹர்சலா,
      சினிமா ஷூட்டிங்கா,
      கீதா ரங்கன் டியர் வந்து சொல்லுங்கோ.

      நீக்கு
    3. இல்லை நேரடி காவல்துறை இல்லைக்கா...விஜிலென்ஸ் கேமரா ப்ராஜெக்ட்...ப்ளஸ்...ஒரு விழிப்புணர்வு...மற்றவை..அந்தக் கதாநாயகன் மனதில் தோன்றும் எண்ணங்கள்..ஷூட்டிங்கோ என்ரம்...இன்னும்..பல எண்ணங்கள்...தெளிவாக இல்லையா என்ன...ம்ம் இது மூன்று கருத்தில் எழுத நினைத்தது....ஜீவி அண்ணாவுக்குச் சொல்லும் கருத்தில் சொல்கிறேன்...அங்கும் சொல்லணும் இல்லசியா..சில ஆதாரங்கள் வைத்து எழுதிட்டதுதான் இக்கருத்து மும்பை குண்டு வெடிப்பின் போது விஜிலென்ஸ் கேமரா, செய்திகள் போலீஸ் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் ஊடகங்கள் மூலம் கசிந்து எங்கெல்லாம் கேமரா இருக்கு வைக்கப்பபியும் என்று செய்திகள் வெளியாவது எதிரிக்கு எவ்வளவு இடம் கொடுக்கிறது என்று தோண்றியத்தில் இருந்து....உருவாகி...இப்படி எழுத ஒரு சிறுமுயற்சி கீதாக்கா..

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா




      நீக்கு
  24. 'சிக்'னு கதை ஆரம்பம் இருக்கக் கூடாதா?... 'பேருந்து நிறுத்தத்திலிருந்து கிளம்பிய பேருங்து' என்று சாவதானமாக...

    ஒரே விசில் தான். அதற்காகவே காத்திருந்தது போல பஸ் ஒரு குலுக்கலுடன் கிளம்பியது. -- எழுத்து வாத்தியார் நமக்கெல்லாம் எத்தனை கிளாஸ் எடுத்திருக்கிறார்?.. அவர் ஸ்டூடண்ட்ஸ் அவர் பெயரைக் காப்பாத்த வேண்டாமா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி அண்ணா நோட்டட் உங்கள் பாயின்ட்ஸ்...ஹாஹா அண்ணா எனக்கு வாசிப்பு அனுபவம் மிகக் மிக மிக...பல மிகக்கள் போடலாம் .குறைவு. எழுதும் திறனும் அத்தனை கிடையாது..இங்கு எபி யில் கதைகள் வெளியாகித்தான் ungalaip போன்றவர்களின் கருத்தின் மூலம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்திக் கொள்கிறேன்...எபிக்கு அதுக்கு மிக்கnanri. மிக்கநன்றி அண்ணா...நல்ல டிப்ஸ் கொடுத்தமைக்கு...

      கீதா

      நீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் எழுதிய கதை நன்றாக உள்ளது. மிகவும் ரசித்தேன். பேருந்தில் திருட்டு நடப்பதை விளக்க கஸடப்பட்ட அதிகாரிகளில் ஒருத்தருடைய பணத்தை திருடிய நம் கதாநாயகனின் திறமையை பாராட்ட வார்த்தைகள் இல்லை. ஹா. ஹா. ஹா. அப்படி ஒரு எதிர்பாராத திருப்பு முனையை கதையில் புகுத்திய சகோதரியின் கற்பனை திறமைக்கு பாராட்டுக்கள். கதை நன்றாக படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது.

    ஒரு அழகான நடிகையை வைத்துக்கொண்டு இப்படி உஷார் படம் எடுத்து, அதை வீடியோவாக திரையில் போட்டு காண்பிக்கும் போது,அவர் அழகை களவாடி கொண்டிருக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் பல மனங்களுக்கிடையே இப்படி பணம் களவாடுவது சிலருக்கு பெரிய விஷயமேயில்லை போலும்..!

    நாளை எ. பியில் புதன் கேள்வி பதிலுக்கு அனுஷ்காவும் இடையில் பதிலளிக்க வந்தாலும் வருவாரோ என ஒரு சிறு சந்தேகம் கூட வருகிறது. ஹா. ஹா. ஹா.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்கா கரீகடா கதையைப் பாலோ செஞ்சமைக்கு மிக்க நன்றி...ஹாஹாஹா...பிரபலம் வைத்து எடுப்பது...

      மிக்க நன்றி கமலாக்கா...

      கீதா

      நீக்கு
  26. பாதிக் கதையில் நீங்கள் நினைத்தப்படியே சினிமா ஷூட்டிங் என்று இன்னும் கொஞ்சம் நீட்டி, பிக்-பாக்கெட் மாதிரி போக்குக் காட்டி முடித்திருந்தால் பிரமாதமாக வந்திருக்குமே?.. பஸ் திருட்டு அவேர்னஸ் படப்பிடிப்பு என்று கொண்டு போனது கூட நல்ல திருப்பம் தான். அப்புறம் என்ன ஆச்சு? தானே திருடினது செல்லா நோட்டு என்று ஆகி அதையும் செல்ல வைக்கும் சாமர்த்தியம் உண்டு என்று சமாளித்து -- அந்த சாமர்த்தியத்தையாவது காட்சி ஆக்கியிருந்தால் 'அட' என்று வியந்து-- கதையை நகர்த்திய சாகசம் கண்டு கைதட்டியிருக்கலாமோ லாம்.

    இப்படியா, அப்படியா எப்படி என்று முடிக்கலாம் என்று ஏகப்பட்ட யோசனை போலிருக்கு. ஒரு குட்டியூண்டு சின்ன கதை இத்தனை திருப்பங்களை சுமக்க முடியாமல் சுமந்து நிறை மாத---

    ஆயிரம் இருக்கட்டுமே!--- பாராட்ட வேண்டிய கண்ணாமூச்சி விளையாட்டு தான்! வாழ்த்துக்கள், சகோதரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் அவன் ரூபாய் அடித்து போவதுடன் நிறுத்தியிருந்தேன்...மூன்று விஷயம் சொல்ல நினைத்திருந்தேன்...ஒன்று திருடல்...மற்றோன்று இப்ப எங்கள் ஏரியாவிலிருந்து மேஜஸ்டிக் செல்லும் பேருந்தில் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட நிறுத்தங்களுக்கிடையில் திருடு போவது பற்றி சில சமயம் எங்கள் பகுதி வழிதடப்பெருந்துகள் சிலவர்ட்டில் பிளாஷ் ல் எச்சரிக்கைகள் வரும் அதை கதையில் காணொளியாக ஒரு விஜிலென்ஸ் கேமரா ப்ராஜெக்ட் குழு இணைத்து..அப்படி இருந்தும் பிக்பாக்கெட் என்று...அடுத்து கேமரா வைத்தும் அதில் பதிவாகாமல் போவதும், செல்லா நோட்டை யம் செல்ல வைக்கும் திருடுத்தனம்..சமீபத்தில் எநல்குத் தெரிந்த ஒருவருக்கு 2000 செல்லா நோட்டு 3 வந்தது. முதலில் அவருக்கும் தெரியவில்லை. 2 செலவழித்து விட்டார்.!!!!! மூன்றாவது ஒஒரு .நடைபாதை பழ வியாபாரி பெண்மணியிடம் 500 ருக்கு பழம் வாங்கி கொடுத்த போது அவர் செக் செய்து செல்லாது என்று சொல்லிட...
      பேங்கில் சென்று கொடுக்க அவர்களும் சொல்விட...அப்போது தோன்றியது...

      இப்படி எல்லாம் இணைத்துச் சொல்ல..அதனால் வந்திருக்கும் இல்லையா...உங்கள் கருத்துகளைக் குறித்துக் கொண்டேன்....இதற்கெல்லாம் எப்படி கள்ளத்தநம் நடக்கிறது என்று ஒரு காணொளி எடுத்து வைத்திருந்தேன்..இக்கதை எழுத நினைத்ததும் கூகுளில் பலவற்றிற்கு ஆதாரம் தேடியிருந்தேன்....ஸ்ரீராமுக்கு கதை அனுப்பும் போது லிங்க் இணைக்க மறந்துவிட்டேன்...அது வெளிவந்தபிறகுதான் கவனித்தேன்.

      எத்தனை டெக்னாலஜி வந்தாலும் முறியடிக்கும் ஒருங்கூட்டம் இருக்கிறது...

      மிக்க நன்றி கருத்துக்கு..நோட் செய்துகொண்டேன்

      கீதா

      நீக்கு
  27. //இப்படியா, அப்படியா எப்படி என்று முடிக்கலாம் என்று.. //

    இப்படியா, அப்படியா எப்படி முடிக்கலாம் என்று ஏகப்பட்ட யோசனை போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா...அண்ணா மிகவும் சரியே.ungal kanippu...செம கணிப்பு...உங்கள் அனுபவம் வாவ்....இதோடு முடிக்கலாம் என்று இரு இடங்களில் யோசித்து...மூன்றாவதாகmudithen....மிக்க nanri...

      கீதா

      நீக்கு
  28. அஆவ் !! கீதா ரெங்கனா  இன்றைய இன்றைய கதாசிரியர் ???
    அனுஷ் கேரக்டரை பார்த்து ஸ்ரீராம்தான்///ஹைடெக் கேமராவாக இருக்குமோ? லாம்!//
    /// எழுதிருப்பார்னு நினைச்சிட்டேன் :) அதிலும் இங்கிலிஷ் வசனம் கொஞ்சம் கூட  geetha style :)வரலை கதையில் எங்குமே :))

    சரி சரி வெல்கம் கீதா 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா.ஏஞ்சல்.இங்கு பலரிடம் இருந்தும் சில தொற்றிக் கொள்கிறது..ஹாஹா.அதே ஏஞ்சல் இங்கிலீஷ் வசனம் சொல்லாத கீதா இதில்...கொஞ்சம் வித்தியாசமாக எழுத ஒரு சிறு முயற்சி...நன்றி ஏஞ்சல்

      கீதா

      நீக்கு
  29. குலுக்கலுடன் கிளம்பியது. -- எழுத்து வாத்தியார் நமக்கெல்லாம் எத்தனை கிளாஸ் எடுத்திருக்கிறார்///ஜீவி சார், அவர் எங்கே நாங்க எல்லாம் எங்கே.:)
    கீதாரங்கன் பங்களூர் வாசி. சுஜாதா சார் வாடை
    பட்டிருக்கவே நவீனமாகக் கதை எழுதி இருக்கிறார்.

    இப்பொழுது இரண்டு தடவை படித்த பிறகு இந்த சினேரியோ
    பிடிபடுகிறது.
    வாழ்த்துகள் கீதா மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா ரோமவ நன்றி...கதை புரிந்தமைக்கு...ஹப்பா... ஹாஹாஹா...

      ஹையோ அம்மா சுஜாதா எங்கோ உயரத்தில்...எத்தனை ஏணி வைத்தாலும் எட்டmudiyaathu....Avar enge naan enge...சிறு முயற்சி அம்புட்டுத்தான்..ஹாஹா..

      மிக்க நன்றி அம்மா...

      கீதா...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!