திங்கள், 30 மார்ச், 2020

"திங்க"க்கிழமை  :  குஜராத்தி கடி! -  பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி

குஜராத்தி கடி!


கடி ஜோக் அல்ல, கிட்டத்தட்ட நம்மூர் மோர் குழம்பை வட இந்தியர்கள் கடி என்கிறார்கள். இதற்கு தேவையான பொருட்கள்:



புளித்த தயிர்    −  1 கிண்ணம் 
கடலை மாவு     -   3 டேபிள் ஸ்பூன் 
வெங்காயம்      -   2(பொடியாக அரிந்து கொள்ளவும்) 
பூண்டு.                -  5பற்கள் 
மஞ்சள் பொடி.  - 1/4 டீ ஸ்பூன் 
மிளகாய்ப் பொடி - 1 டீ ஸ்பூன் 
உப்பு.                   -  1 1/2 டீ ஸ்பூன் 
சர்க்கரை.           -  1/2 டீ ஸ்பூன் 
தாளிக்க: (எண்ணெய்.      - 1 டேபிள் ஸ்பூன் 
கடுகு சீரகம் கறிவேப்பிலை 

 செய்முறை:
தயிரைக் கடைந்து,  அதில் கடலை மாவு,  உப்பு இவைகளை சேர்த்துக் கொள்ளவும்.


ஒரு வாணலியை அடுப்பில் வைத்து  கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை  போட்டு வதக்கிய பிறகு  கரைத்து வைத்திருக்கும் கடலை மாவு,  தயிர் கரைசலை வாணலியில் ஊற்றி சர்க்கரையும், மிளகாய்ப் பொடி மற்றும் இன்னுமொரு கப் தண்ணீரும் சேர்த்து கட்டியாகாமல் கிளறவும்.  

சேர்ந்தால்போல் கொதித்து வரும் பொழுது அடுப்பை நிறுத்தி  விடலாம்.  பின்னர்  ஒரு சிறிய கடாயில் சிறிதளவு வெந்தயம் மற்றும் பொடியாக அரிந்த பூண்டு பற்களை நன்கு வதக்கி சேர்க்கவும்.  கொத்துமல்லி தழை தூவி அலங்கரித்து இறக்கி விடலாம்.


இதையே தண்ணீர்  அதிகம்  சேர்த்து சற்று நீர்க்க செய்து, அதில் கடலை மாவு  வெங்காயம் சேர்த்து பொரித்த பகோடாக்களை சேர்த்தால் அது பஞ்சாபி கடி!


கீதா ரங்கன், நானே மற்றொரு முறையையும் எழுதி விட்டேன்.  இப்போ என்ன  செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க?
    

83 கருத்துகள்:

  1. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. ஓ... இதுதான் கடியா!...

    ஒருநாளைக்கு செய்து விடலாம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இதேதான். செய்து பாருங்கள், சுவையாக இருக்கும்.

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    அன்பு பானுமா

    அருமையான கடி. மும்பை , பூனெயில் சாப்பிட்டிருக்கிறேன்.
    நம் ஊரில் மோர்ச்சாத்துமது அம்மா செய்வார். வெங்காயம், கடலை மாவு கிடையாது.

    இதை டம்ப்ளரில் ஊற்றீக் கொடுப்பார்கள். பக்கோடா போட்டும்
    சாப்பிட்டிருக்கிறேன்.
    நல்ல செய்முறை. கீதா அனுப்பப் போகிறார்களா அடுத்த முறை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...  இனிய காலை வணக்கம்.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம்.ஸ்ரீராம்.

      நீக்கு
    3. நன்றி வல்லி அக்கா. //கீதா அனுப்பப் போகிறார்களா அடுத்த முறை?// இல்லை வல்லி அக்கா. எந்த ரெஸிபி போட்டாலும் கீதா ரங்கன் அதை இன்னும் வேறு எப்படி எல்லாம் செய்யலாம் என்று பின்னூட்டமிடுவார். அதனால் அவரை கொஞ்சம் கலாய்த்தேன்.

      நீக்கு



  4. கடி எப்போதாவது செய்வோம்..... இப்ப செய்யல்லாம் என்றாலும் சாப்பிட முடியாத சூழ்நிலை படங்களுடன் கூடிய எளிய விளக்கம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் நலமா ஸ்ரீராம்?

      நீக்கு
    2. நலம்தான் மதுரை...   பயம்தான் ஆட்டுகிறது!  உங்கள் உடல்நிலை, உங்கள் குடும்பத்தார் உடல்நிலை சீக்கிரம் சரியாக எங்கள் பிரார்த்தனைகள் மதுரை.

      நீக்கு
  5. எங்கள் ப்ளாக் வரும் அனைத்து நண்பர்களும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் விளையாட்டாக எடுத்து கொள்ள வேண்டாம் மிகவும் பாதுகாப்பாக இருந்தாலும் முத்லில் என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது நமது நண்பர்களின் பிராத்தனைகளால் அவருக்கு கொஞ்சம் சரியாகிவிட்டது அதன் பின் எனக்குதான் காய்ச்சல் படுத்தி எடுக்கின்றது.எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இன்று Covid 19 டெஸ்ட் செய்து வந்திருக்கிறோம்.. ரிசல்ட் வர மூன்று நாட்கள் ஆகும். #அவ்வளவுதான் இப்போதைக்கு சொல்ல முடியும் எந்த வித கூட்டங்களிலும் ஏன் கடைகளுக்கும் போகாத எங்களுக்கே இப்படி . அதனால் நீங்கள் அனைவரும் கடைகளுக்கு செல்லாமல் சிறிது நாளைக்கு வீட்டில் உள்ளதையே சமைத்து சாப்பிடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் நல்லபடியாக குணமடைவீர்கள் ட்ரூத். நியூஜெர்சியில் வசிக்கும் என் மாமா பையனின் குடும்பமும் covid-19ஆல் பாதிக்கப்பட்டு குணமடைந்திருக்கின்றனர். உங்களைப்போலவே அவனும் "இதை ஈஸியாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்று எங்களுக்கு செய்தி அனுப்பியிருந்தான். இதுவும் கடந்து போகும். தைரியமாக இருங்கள்.

      நீக்கு
    2. நீங்கள் அனைவரும் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கின்றோம்.

      நீக்கு
    3. மதுரைத் தமிழன்... நீங்கள் சொல்வது உண்மை. ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டிய தருணம். நீங்கள் எல்லோரும் நலமாகவே இருப்பீர்கள்.

      நீக்கு
    4. மதுரைத்தமிழனும், குடும்பமும் நலம்பெற ஆண்டவன் அருளட்டும். எந்த ஊரில், எந்த நாட்டில் இருந்தாலும், அதிஜாக்ரதையாக ஒவ்வொருவரும் தன்னை கவனித்துக்கொள்ளவேண்டிய காலகட்டம். அவனருள் எல்லோருக்கும் நீங்காது இருக்குமாக.

      நீக்கு
    5. மதுரைத் தமிழன் அவரது குடும்பத்தினரும் நலமுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக...

      நீக்கு
    6. மதுரை தமிழனும் வீட்டில் அனைவரும் நலமாக இருக்க இறைவன் அருள்புரிவார்.
      காய்ச்சல் சரியாகிவிடும்.

      நீக்கு
    7. மதுரை தமிழன் சார், நீங்களும் உங்கள் குடும்பமும் இதிலிருந்து மீண்டு நலமாக வருவீர்கள். ஏனினில், எங்கள் யாவருடைய பிரார்த்தனையும் உங்களுடன் இருக்கின்றது. இந்த பிளாக் நண்பர்கள் அனைவரும் அரிஜோனா மெடிகல் யூனிவர்சிடியில் டாக்டராக வேலை செய்யும் என் பெண்னிற்கு வேண்டி அவள் இது வரை நலமாகவே உள்ளாள். நான் யாவற்றையும் இறைவனிடம் விடுகின்றேன். ஆயின் என் பிரார்த்தனையில் நீங்களும் அவசியம் உண்டு. "அவனை நினைத்.து அவன் தாள் பணிந்து"

      நீக்கு
    8. குடும்பத்துடன் குணமாகி,  நல்லபடி சரியாக எங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகள் மதுரை..

      நீக்கு

    9. அனைவரின் அக்கறைக்கும் ஆருதல்களுக்கும் மிகவும் நன்றி

      நீக்கு
    10. மதுரைத் தமிழரும் அவர் குடும்பத்தினரும் நலத்துடன் இருக்கப் பிரார்த்தனைகள். விரைவில் இந்தச் சூழ்நிலை சரியாகவும் பிரார்த்திப்போம்.

      நீக்கு
    11. நண்பரே ... கவலை வேண்டாம் நீங்களும் உங்கள் குடும்பமும் எந்த பிரச்சனையும் இன்றி நலமுடன் இருப்பீர்கள் .. கவலை வேண்டாம் ... தன்னம்பிக்கையே பலம் ... மன உறுதியுடன் இருங்கள் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

      நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அழகிய மோர்க்குழம்பு பார்த்தேன்// ஆ ! இவர் என்ன சொல்கிறார்!

      நீக்கு
    2. அதிருக்கட்டும் கேஜிஜி சார்... பூட்டைத் திறக்கும் சாவியைத் தொலைத்துவிட்டீர்கள் போலிருக்கிறதே.... விடை சொன்னால் அதற்கு மறுமொழி சொல்ல வேண்டாமோ? பா.வெ க்கு மட்டும் மறுமொழி கொடுத்திருக்கீங்களே... நியாயமா?

      நீக்கு
    3. ஓஹோ! அங்கே வந்துவிட்டீர்களா! உங்கள் பெண்ணுக்கு 100/100.

      நீக்கு
  7. பானுமதி வெங்கடேச்வரன் அவர்களைப் பாராட்டறேன். வெங்காயம் , பூண்டு இதைல்லாம் நான் என்றும் கடியில் பார்த்ததில்லை என்பதையும் சொல்லிக்கறேன்.

    இதை எழுதும்போது ஆரம்ப காலத்தில் துபாயில் குஜராத்தி மெஸ்ஸில் வெள்ளிக்கிழமை மட்டும் ஆபீஸ் நண்பர்களோட சென்று சாப்பிட்டது நினெவுக்கு வந்தது. (அன்று இனிப்பு உண்டு என்பதாலும், எதற்கும் அளவில்லை என்பதாலும்). ஒரு முறை சாப்பிட 5 திர்ஹாம். மாத கூப்பன் என்றால் 4 திர்ஹாம் வரும் (1993ல்). அங்கும் கடி சாப்பிட்டிருக்கேன். எதிலும் வெங், பூண்டு கிடையாது.

    குஜராத,தி உணவகத்தில் சப்பாத்தி (ரோடி என்பார்கள்), உணவு எதையும் உபசரித்து நம் தட்டில் போடுவார்கள். வாடிக்கையாளர் வயிறு நிரம்ப திருப்தியா சாப்பிடணும் என்பது அவர்கள் எண்ணம். எந்த மாநில உணவகங்களிலும் இத்தகைய ஆட்டிடியூடை நான் அனுபவித்ததில்லை. ச்பவன்ல இது இன்னும் வேண்டும் என நாம் கேட்கணும், அவனும் ஏதோ தானம் பண்ணுவதுபோல் கொண்டுவருவான். ஆனால் குஜராத்தியர்கள் அப்படி அல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை. நான் கற்றுக்கொண்டது வெங்காயம்,பூண்டு சேர்த்துதான். என் மருமகள் கடி சாவல் என்று சாதத்தில் கலந்து சாப்பிடுவாள். நானும்,மகனும் சப்பாத்தியோடு சாப்பிடுவோம்.

      நீக்கு
    2. குஜராத்தி உணவுகங்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி. எங்கள் பாட்டி "சாப்பாடு பரிமாறும் பொழுது இலையைப் பார்த்து, அவர்கள் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்பதை கவனித்து பரிமாற வேண்டும்" என்பார். அப்படி இலையைப்பார்த்து குஜராத்தி உணவகங்களில் பரிமாறுவார்கள்.

      நீக்கு
    3. துபாயில் முதல் முதலில் சாப்பிட்டபோது சாத்த்துக்குத்தான் மோர்க்குழம்பு போல விட்டுக்கொண்டேன். கொஞ்சம் இனிப்புச் சுவைதான், இது நம்ம ஊர் மோர்க்குழம்பு அல்ல என்று உணர வைத்தது.

      நீக்கு
    4. நெல்லை சொல்வது சரிதான். குஜராத், ராஜஸ்தான் உணவில் வெங்காயம், பூண்டு குறைவாகவே இருக்கும். கடியில் சேர்த்து நானும் பார்த்தது இல்லை. குஜராத்தி கடியில் சர்க்கரை கட்டாயமாய் உண்டு.

      நீக்கு
    5. வடமாநிலங்களிலேயே சப்பாத்தி என்று அதிகம் சொல்ல மாட்டார்கள். "ரோடி" தான். புல்கா ரோடி என்றால் சுட்டது. தவா ரோட்டி என்றால் தோசைக்கல்லிலேயே போட்டுச் சுட்டது. பராத்தா பற்றி அறிமுகம் தேவையில்லை. ருமாலி ரோட்டி என்று சிறப்பாக விருந்தினருக்குப் பண்ணுவார்கள். மெலிதாக மஸ்லின் துண்டு போல் இருக்கும். பெரிய அளவில் இட்டு அதற்குக் காரசாரமாக ஆலு மட்டரோடு கொடுப்பார்கள். ஆலு மட்டரில் வெங்காயம், பூண்டு இருக்காது.

      நீக்கு
    6. ராஜஸ்தான், குஜராத்தில் ஜைனர்கள் அதிகம் என்பதால் அங்கே வெங்காயம், பூண்டு இல்லாமலே சாப்பாடு கிடைக்கும். மற்ற வடமாநிலங்களில் வைஷ்ணவ் போஜன் எனத் தேடிச் சென்றால் வெங்காயம், பூண்டு இல்லாத சாப்பாடு கிடைக்கும்.

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம். இந்த நாள் எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. 'கடி' என்று பார்த்தவுடன் கொஞ்சம் பயம் வந்தது. ஆனால் படித்துப் பார்த்ததும் சுவையாக இருக்கும் என்று நம்பிக்கை வருகிறது. செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் யாத்திரைக்குச் செல்லும்போது கூட்டிச் செல்பவர் வெளி இட உணவு ணாப்பிட அனுமதிப்பதில்லை. (ஶ்ரீநாத் த்வாரகாவில் பாசந்தி, தயிர், கோகுலத்திலும் தயிர், ரப்டி, த்வாரகையில் இஞ்சி டீ போன்றவை விதிவிலக்கு).

      எனக்கு வதோதராவில் குஜராத்தி தாலி, டோக்ளா, அகமதாபாத்தில் டோக்ளா, ஜிலேபி சாப்பிடணும்னு ஆசை. வாய்ப்பு கிடைக்கலை.

      அவருக்கு, அனுமதி கொடுத்தா இஷ்டத்துக்கு சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொண்டால் யாத்திரை தடைபடுமே என்ற எண்ணம். எனக்கு சிங்கத்தின் குகைக்குச் சென்று அதாவது அந்த அந்த இடங்களுக்குச் சென்று அங்கு புகழ் வாய்ந்த உணவைச் சாப்பிட முடியலையே.. இதற்காக இன்னொரு தடவை தனியா வரமுடியுமா என்ற எண்ணம். ஹா ஹா

      நீக்கு
    2. உண்மை நெ தமிழன், எங்கள் கொள்கையும் அதுதான், அதாவது ஒரு இடம் போகிறோம் எனில், அவர்களின் உணவை சுவை பார்க்கோணும் என்பதுதான். திரும்பத் திரும்ப போகப்போவதில்லைத்தானே...

      நீக்கு
    3. //செய்து பார்க்கிறேன்.//
      இந்தக் “கடி”:)தானே வாணாம் என்கிறோம் கெள அண்ணன்:))

      நீக்கு
    4. செய்வதை முதலில் பார்க்கத்தான் பார்ப்போம்..அப்புறந்தானே வாய்க்கும் அது போகும்... அதைதான் கெளதமன் சகோதரர் சொல்லியிருக்கிறார். இந்த "கடி" எப்படி? யாரும் கண்டுக்க மாட்டீங்க என்ற தைரியத்தில் இந்த "கடி" ஹா.ஹா.

      நீக்கு
    5. நெல்லைத்தமிழரே, தி.நகரில் போக் ரோடில்னு நினைக்கிறேன். ஆம்டாவாடி (அஹமதாபாதை குஜராத்தியர் ஆம்டாவாட் என்றே சொல்லுவார்கள்.) ஓட்டல் ஒன்று ரொம்பவே பிரபலமானது உள்ளது. அங்கே குஜராத்தி தாலி கிடைக்கும். புஜ் எல்லாம் காத்தியாவாட் என்னும் பகுதியில் வரும். அந்தச் சாப்பாடு காரசாரமாக இருக்கும். சென்னையில் காத்தியாவாட் (நாம பள்ளியில் படிக்கையில் கத்தியவார்னு படிச்சிருப்போம்.) சாப்பாடு அதிகம் கிடைப்பதில்லை. சௌகார்பேட்டில் ராஜஸ்தான், குஜராத் சாப்பாடு நிறையக் கிடைக்கும்.

      நீக்கு
    6. நன்றிகீசா மேடம்.... இனி எங்க சென்னை சென்று வெளியில் சாப்பிடுவது.... பெங்களூரில் இருந்தால் சொல்லுங்கள்... ஹாஹா ஹா...

      சென்னையில் ராஜஸ்தான் உணவகங்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு தாலி ஹெவி... நெய், இனிப்பு என்று ரொம்ப ரிச்சா இருக்கும்... எனக்கு டூ மச்சாத் தோன்றும்.

      நீக்கு
  10. Kadhi என்று எழுதுகிறார்கள், ஆனால் Kadi என்றுதான் உச்சரிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  11. இந்த மோர் குழம்பு வித்தியாசமாக உள்ளது... நன்றி...

    பதிலளிநீக்கு
  12. கடி! நம்ம ஊர் மோர்க்குழம்பு மாதிரி இருந்தாலும் சுவையில் வித்தியாசம் உண்டு. வட இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள். கடி-சாவல் இங்கே ரொம்பவும் அதிகம் பயன்படுத்துவார்கள்! சுவையான குறிப்புகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட். நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். காய்கறிகள் போட்டு கூட்டு போல் கூட சாப்பிட்டிருக்கிறேன். 

      நீக்கு
  13. ஆசையை தூண்டுகிறது....

    இன்று உலக மருத்துவர்கள் தினம் அவர்களை வணங்கி தொழுவோம்.

    பதிலளிநீக்கு
  14. மதிய வணக்கம் சொல்லி வந்துவிட்டேன் .ஹா ஹா காலையிலேயே தலைப்பு பார்த்துவிட்டேன் ப்ளாகரில்..பார்த்தா பூஸாரின் கொரொனா ரெசிப்பிஸ் நு திங்க க்குப் போட்டியாக (நாராயணா நாராயணா!!) போட்டிருக்காங்க. கணினி ஃப்ரீ ஆக...மதில் மேல் பூனையாக அங்கிட்டு சாப்பிட போலாமா இங்கிட்டான்னு பார்த்து ரெண்டு இடத்துலயும் கால் வைச்சேன்...அங்க கொரொனா ஆஹா நான் சேஃபா மாஸ்க் போட்டுட்டு போய் எப்படிச் சாப்பிடறதுன்னு ஹிஹிஹி

    இங்க சேஃப் கடி....

    அடி ஆத்தீ பானுக்கா சூப்பரா கடி செஞ்சுருக்காங்க...யும்மி....இதே இதே..

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///ப்ளாகரில்..பார்த்தா பூஸாரின் கொரொனா ரெசிப்பிஸ் நு திங்க க்குப் போட்டியாக (நாராயணா நாராயணா!!) ///

      ஹா ஹா ஹா இனிமேல் நானும் கீசாக்காவைப்போல திங்களில் ரெசிப்பி போடப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்:))... பின்ன இந்தக் கொரொனா லீவில நிற்கும்போது ஸ்ரீராம் வெளியிடுவார் எனில் இங்கு அனுப்பலாம், அவர் கொரொனா முடிஞ்சு ஸ்கூல் தொடங்கிய பின்புதான் போடுவார் கர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  15. பதில்கள்
    1. கீசாக்காவைத்தான் நானும் யோசித்தேன், வருவா அலுவல்கள் முடிய என நினைச்சு பேசாமல் விட்டேன்.

      நீக்கு
    2. கீதா அவர்களின் பெரிய மச்சினர் வந்து இருப்பதாலும் சின்ன மச்சினர் இறந்த துக்கத்தில் இருப்பதாலும் வரவில்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    3. வந்துட்டேன் கோமதி . பெரிய மச்சினர் இல்லை. இவரும் கணவரின் தம்பி தான். நாங்க தான் பெரியவங்க. ஆகையால் தான் அந்த மைத்துனர் காரியங்கள் செய்தார்.

      நீக்கு
  16. பானு அக்காவின் கடி நன்றாக இருக்கு. என்னாதூ தென் இந்தியர்களைப் பார்த்து வட இந்தியர்கள் கடி என்பினமோ ஹா ஹா ஹா அப்போ திருப்பிக் கடிக்க வாணாமோ?:)).

    //கீதா ரங்கன், நானே மற்றொரு முறையையும் எழுதி விட்டேன். இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க?//
    இதைப் படிச்சதும் நெஞ்சு பகீர் என ஆகிப்போச்ச்ச்ச்:)) இது உண்மையில் செயக்கூடிய ரெசிப்பியோ இல்ல கீதாவுக்காக உருவாக்கப்பட்ட கடியோ என:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா.  //இதைப் படிச்சதும் நெஞ்சு பகீர் என ஆகிப்போச்ச்ச்ச்:)) இது உண்மையில் செயக்கூடிய ரெசிப்பியோ இல்ல கீதாவுக்காக உருவாக்கப்பட்ட கடியோ என:))..ஹாஹா!

      நீக்கு
  17. குஜராத்தி கடி படங்களுடன் நன்றாக இருக்கிறது.

    மோர்குழம்பை என் மாமியார் சில சமயம் இப்படி கடலைமாவு சேர்த்து செய்வார்கள்.
    காய்கள் கிடைக்காத சமயம்.

    பக்கோடா மோர்குழம்பு நன்றாக இருக்கும் , அதன் பேர் பஞ்சாபி கடியா?
    நம் ஊர் மோர் குழம்பில் தேங்காய் இருக்கும் இதில் இல்லை.

    பதிலளிநீக்கு
  18. அன்பு தீஜ் துரை,
    நீங்களும் ,குடும்பமும் நல்ல சுகம் பெற வேண்டும்.
    மிகக் கவனம். என் பிரார்த்தனைகள்.
    உடல் நிலை சரியானதும் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  19. பானு, உங்கள் "கடி" அம்சமாக இருக்கின்றது. என் பெண்ணிற்கு சப்பாத்தியுடன் செய்து தருவேன். படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் மாலை வணக்கம்.

    சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் "குஜராத்தி கடி" நன்றாக உள்ளது. தேங்காய் இல்லாத மோர் குழம்பின் சுவை மாறாமல் அற்புதமாக உள்ளது. படங்கள், செய்முறை அருமை. முதலில் நான் கடி என்றவுடன் ஏதோ திடப் பொருளாக இருக்குமென நினைத்தேன்.

    நான் மோர் குழம்பு செய்யும் போது எப்போதுமே சிறிது அரிசி, கடலைப்பருப்பை ஊற வைத்து தேங்காய், சீரகம், ப. மிளகாயுடன் அரைத்துத்தான் செய்வேன். இனி தேங்காய் இல்லாத சமயம் இவ்விதமாக முயற்சிக்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வட இந்தியக் கடியில் சாதம் கலந்து சாப்பிடுவதற்கு எனக்கெல்லாம் அவ்வளவு பிடிப்பதில்லை. அப்படியே சாப்பிட்டு விடுவோம். ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா கோயிலில் சாப்பாட்டில் இந்தக் கடி நிச்சயம் இருக்கும். அங்கே உணவே வெங்காயம், பூண்டு இல்லாமல் தான் தருவார்கள்.

      நீக்கு
  21. குஜராத்தி "கடி"யில் அதிகம் வெங்காயம், பூண்டு சேர்த்துப் பார்த்ததில்லை. மற்ற சாமான்கள் உண்டு. குஜராத்தில் எல்லா சமையலிலும் வெல்லம், சர்க்கரை இடம் பெறும்.

    பதிலளிநீக்கு
  22. என் கணவருக்கு குஜராத்தி உணவு மிகவும் பிடிக்கும். இங்கு பெங்களூரில் மெஜஸ்டிக் அருகில் சுக் சாகர் என்ற உணவகத்தில் குஜராத்தி தாலி கிடைக்கும்.நிறைய தடவை சாப்பிட்டு இருக்கிறோம்.வெங்காயம் சேர்த்து சாப்பிட்டது இல்லை. இது வரை வீட்டில் செய்து பார்த்தது இல்லை.

    பதிலளிநீக்கு
  23. romba nal aassu blog pakkam vanthu, engka athirava theedi kondu iruntheen, ingku kathaiththu kondu iruikkiraar , puusaaree pls mail me.

    kadi arumai
    jaleelakamal from samaiyal attakaasam
    https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
    ithu en channel. blog ku support panna maathiri youtube channel kum support pannungka

    athira pls contact me

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஆஆ ஜல் அக்கா.. நான் இங்குதான் இருக்கிறேன்னே புளொக்குகளில்.. ஓ ஒருவேளை மீ ரொம்ப மெலிஞ்சு போயிட்டதால உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையோ ஹா ஹா ஹா....

      என்னைத்தேடிக்கொண்டு எங்கள்புளொக்வரை வந்திட்டீங்க, புல்லரிச்சுப்போயிட்டேன்ன்... நன்றி ஜல் அக்கா...

      நீக்கு
  24. moor kuzmpu romba pidissathu,athuvum easy yaa ka irukku arumaiyaaka vum irukku

    பதிலளிநீக்கு
  25. கேள்விப்படாத கடியாக இருக்கிறதே....

    பதிலளிநீக்கு
  26. நம்ம மோர்க்குழம்புதான் அங்கு "கடி" யா ? ... அப்போ நம்ம குடிக்கிறததான் அவனுக கடிக்கிறானுகளா !!! இருக்கட்டும்...இருக்கட்டும்.. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!