திங்கள், 1 ஜூன், 2020

மிளகுஷியம் - கீதா ரெங்கன் ரெசிப்பி



மிளகுஷியம்




ஹாய் ஹாய் எபி கிச்சன் ரசிகப்பெருமக்கள், பார்வையாளர்கள் எலோருக்கும் எங்கள் அன்பு வணக்கங்கள். நோ கைகுலுக்கல்! ஒன்லி கைகூப்பி வணக்கம்! லாக் டவுன் தளர்த்தப்பட்டாலும் சோசியல் டிஸ்டன்ஸ் உண்டு. எனவே தனியே தன்னந்தனியே என்பதால் பாடிக் கொண்ட ஹிஹிஹி நம்ம் பாட்டெல்லாம் இங்க வராது. தனியே என்றாலும் அங்கே பாருங்க நம்ம பூசார் நான் மாஸ்க் போட்டுக்கொண்டு சமைக்கிறேனா என்று செக் செய்து கொண்டு...லூட்டி....மாஸ்க் போட்டா எப்படி பாட..!!!

பாரம்பரிய சமையல் குறிப்பு போடுங்கன்னு நெல்லை ரொம்ப நாளா,சொல்லிக் கொண்டே இருக்கிறார். எனக்கு டவுட்டு. கீதாக்கா சூப்பரா பாரம்பரிய சமையல் குறிப்புகள் போட்டுட்டு இருக்காங்க. அப்படி இருக்க நான் என்ன கொடுக்க முடியும்னு. அடுத்து பாரம்பரியம் என்று சொல்வதில் எங்கிருந்து இது தொடங்குகிறது என்று.

ஒரு காலத்தில் சமையலில் காரத்திற்கு மிளகுதான் பயன்படுத்தியிருக்கிறார்கள். வற்றல் மிளகாய், பச்சைமிளகாய் எல்லாம் அப்புறம் வந்த சமாச்சாரங்கள் என்றும். நெய், எள்ளு எண்ணை இவைதான் பழக்கத்தில் இருந்தன என்றும் பழைய கால/கல்வெட்டு சமையல் பற்றி ஆராய்ச்சி செய்த, மறைந்த சமையற்கலை நிபுணர் ஜேக்கப் சொல்லியிருந்ததாக நினைவு. ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் வந்து கொண்டேதான் இருக்கும் போல.

என் அப்பா வழிப்பாட்டி இதையேதான் அடிக்கடி குறிப்பிடுவார். அதாவது என் பாட்டியின் பாட்டி, பாட்டியின் அம்மா, அத்தை சித்தி சமைத்தது, அக்குறிப்புகள் எல்லாம் கண் பார்த்து, செவி வழி கேட்டுச் செய்ததால் - அதுவும் அவர் சித்தி, அம்மா எல்லாரும் சில உணவு, டிஃபன் எல்லாம் விலைக்கும் செய்து கொடுத்ததுண்டாம் - தன் சமையலிலும் கூட சில வித்தியாசங்கள் இருக்கலாம் என்றும் சொல்லுவார். 

பாட்டியின் வீட்டில் திவசத்தின் போது சமையலில் மிளகு மட்டுமே பயன்படுத்துவாங்களாம். நெய்தானாம். அப்புறம் மிளகு நல்லெண்ணை என்று ஆனதாம். அப்புறம் உளுத்தம்பருப்பும் மிளகும் வறுத்து பொடி செய்து அப்படியும் சேர்ப்பதுண்டு என்று சொன்னார். பின்னர் இதுதான் பின்பற்றப்பட்டது. இப்போது சிவப்பு மிளகாயும், மிளகு, உளுத்தம்பருப்போடு சேர்க்கிறார்கள். இதேதான் புகுந்த வீட்டிலும். ஒரு சிலர் பச்சை மிளகாய் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன்.

   


மிளகுஷியம், மிளகுக்கூட்டு இரண்டும் கிட்டத்தட்ட ஒரே சுவைதான் என்று எங்கள் சிறு வயதில் நாங்கள் நினைத்ததுண்டு. ஆனால் சின்ன வித்தியாசம் உண்டு என்பதை நான் சமைக்கத் தொடங்கிய போது தெரிந்து கொண்டேன். நாக்கில் சுவை பட்ஸ் நன்றாக இருந்தால் அந்த வித்தியாசம் தெரியும்.

சமையலில் ஒரே போன்று தோன்றும் உணவுவகைகளை சமையல் கில்லாடிகள் வித்தியாசத்துடன் செய்து அசத்த மாட்டார்களா என்ன!!!!    சமையலில் மிளகுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து செஞ்சா ஒரு பெயர், இல்லாம செஞ்சா ஒரு பெயர், எப்படிச் செய்தாலும் இரண்டுமே ஒரே பெயர்தான் என்று சொல்லிச் செஞ்சாலும் சுவையாக இருந்தால் போதாதா.!!!!. அதனால இப்படித்தான் என்றில்லாமல்  அவரவர் வீட்டு வழக்கத்தில் வரும் பெயர்கள், ரெசிப் என்று சொல்லிக்கலாமோ.!!!
  
(ஸ்பாஆஆ கீதா இன்னா ஆராய்ச்சி! இந்தாங்கோ பிடியுங்கோ எபிகிநோ பரிசு! என்று….யாரது? ஆஆஆ பூஸார்! (கீதாவின் மைன்ட் வாய்ஸ்: வாயில மாஸ்க் போட்டு இருங்கோ!!!!!! என்பதாக இருக்குமோ!!!!!!!ஹா ஹா ஹா..
    

நம் வீட்டில் ஜுரம் என்றால் மிளகு ரசம் அல்லது மிளகு மட்டுமே சேர்த்த மிளகுஷியம்தான். ஜுரம் தணியும் போது…..இந்த மிளகுஷியத்தின் வேரியேஷன்ஸ் இடம் பெறும்.

மிளகு + உளுத்தம்பருப்பு வறுத்துப் பொடி
   
மிளகு + உளுத்தம்பருப்பு வறுத்து + கொஞ்சம் தேங்காய் வைத்து அரைத்தல்
     
இந்த இரண்டிற்கும் நெய்யில் கடுகு கருகப்பிலையுடன் ஜீரகம் சேர்த்தோ சேர்க்காமலோ தாளிப்பு.
நம் வீட்டில் மிளகுக் கூட்டின் வேரியேஷன்ஸ்.
     
மிளகு + உளுத்தம்பருப்பு + மிளகாய் வற்றல் வறுத்துப் பொடி
     
மிளகு + உளுத்தம்பருப்பு + மிளகாய் வற்றல் வறுத்து + கொஞ்சம் தேங்காயுடன் அரைத்து
   
இந்த இரண்டிற்கும் ஜீரகம் சேர்த்து அரைத்தோ அல்லது தாளிப்புடன் ஜீரகம் சேர்த்தோ.
            
துவரம்பருப்பு + உளுத்தம்பருப்பு + மிளகு வறுத்து பொடி
               
துவரம்பருப்பு + உளுத்தம்பருப்பு + மிளகு வறுத்து + தேங்காய் கொஞ்சம் வைத்து அரைத்தல்
        
துவரம்பருப்பு + உளுத்தம்பருப்பு + மிளகு + மிளகாய் வற்றல் வறுத்து பொடி
      
துவரம்பருப்பு + உளுத்தம்பருப்பு + மிளகு + மிளகாய் வற்றல் வறுத்து + கொஞ்சம் தேங்காய்

இந்த நான்கிற்கும் சில சமயம் தாளிப்புடன் மட்டும் ஜீரகம் 

இவை அனைத்தும் பாசிப் பருப்பு வேக வைத்துச் சேர்த்து அல்லது சேர்க்காமல். சிலப்போ பாசிப்பருப்பிற்குப் பதிலாகத் துவரம்பருப்பு.

காய்கள் : சௌசௌ, புடலை, கோஸ், அவரை, கோஸ் அண்ட் கேரட், கீரை, கீரைத்தண்டு. நம் வீட்டில் புடலங்காயுடன் அல்லது சௌ சௌவுடன் உருளைக் கிழங்கும் சேர்த்து மிளகுஷியம் அல்லது மிளகுக் கூட்டு செய்வதுண்டு. அதற்குப் பருப்பு போட்டோ போடாமலோ. தேங்காய் சேர்த்தோ சேர்க்காமலோ. நான் சுரைக்காயிலும் மிளகுஷியம், மிளகுக் கூட்டு செய்வதுண்டு.

அடுத்த திங்க பதிவில் சந்திக்கும் வரை எபி ஆசிரியர்கள் அனைவருக்கும் ப்ளஸ் வாசகர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறும் எபி கிச்சன் குழு.

===================

90 கருத்துகள்:

  1. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
    துன்பத்துள் துன்பம் கெடின்

    பகையுணர்வு எனப்படும் கொடிய துன்பம் நம்மிடமிருந்து அழியுமாயின் அஃது இன்பங்கள் எல்லாவற்றிலும் தலையாய இன்பத்தைக் கொடுக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பகையுணர்வு எனப்படும் கொடிய துன்பம் நம்மிடமிருந்து அழியுமாயின்//

      இருப்பதை அழிக்கலாம் ஆனா புதுசா வருவதை என்ன பண்ணுவதாம் ஹா ஹா ஹா..

      நீக்கு
  2. மே 29லிருந்து கொரோனா அழியத் தொடங்கும் என்று வருமுன்கூறுவோர் அறிவித்தலைத் தொடர்ந்து அக்கா (ஹா ஹா) கீதா ரங்கன் இன்று மிளகுக்ஷஈயம் பகிர்ந்திருக்கிறார். ஏதோ நோய்வாய்ப்பட்ட காலத்தில் கொடுக்கும் கஷாயத்தின் பெயர் போல இருக்கிறது.

    படித்துவிட்டு செய்துபார்க்கணுமா இல்லை "அருமை, அட்டஹாசம்" என்று சொல்லிக் கடந்துவிடலாமா என்று பார்ப்போம்.

    இருந்தாலும் அழகிய கொலாஜ் படங்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துவிடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை, கீதா அக்காவா?!!! நூல் நுழையற கேப் கிடைச்சா போதுமே….ஹா ஹா ஹா ஹா நெல்லை இது சாதாரணமாகவும் செய்யலாம். அப்போது தேங்காய் அரைச்சு விட்டு செய்யலாம். இல்லேனா ஜுரம், பத்தியம் சமயத்துல இப்படிச் செய்யலாம். இப்ப தொற்று சமயம்தானே ஹா ஹா ஹா அதன பத்திய சமையல் ஆனால் பத்தியத்தில் இந்தப் பருப்பு கூடக் கிடையாதாக்கும்…தேங்காயும் போடமாட்டாங்க எங்க வீட்டில்..….எல்லாரும் சாப்பிட வேண்டும் என்றால் இப்படி சில வித்தியாசப்படுத்திச் செயதுண்டு…

      ஹலோ செஞ்சு பார்த்துட்டுதான் சொல்லணும். அருமை அட்டகாசம்னு உங்களை ஆரூஊஊஊஊ சொல்ல சொன்னா கர்ர்ர்ர்ர்ர். உங்களுக்குப் பிடிச்சுருந்தா செஞ்சு பாருங்க. ஆனா ஒன்னு ஒவ்வொருத்தர் டேஸ்டும் மாறுபடும். நமக்கு ஒரு டேஸ்ட் பிடிக்கலைன்றதுக்காக அந்தப் பதார்த்தமே நல்லால்லைனு சொல்லக் கூடாதாக்கும் சொல்லிப்புட்டேன்…!!!!!!!!!!!!!!!!! (ஹப்பாடி நெல்லைய அக்காவா லட்சணமா நல்லா மிரட்டியாச்சு!!!!!!!!)

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  3. கருத்திட்ட அனைவருக்கும் நன்றி, இணையப்படுத்தல், அது சரியானவுடன் மறுமொழி தருகிறேன்.

    மடிக்கணிணி கல்லூரிக்குப் படிக்கப் போயிருக்கிறது. அது வந்தபிறகுதான் மறுமொழி தர முடியும்.

    இன்று மேகமூட்டமாக இருப்பதால் கரன்ட் கட் ஆகிவிட்டது. மாலை ஐந்து மணிக்குமேல் சூரியன் வந்தபிறகுதான் வரும் என்று தோன்றுகிறது. பிறகு வருகிறேன்.

    இந்தச் சாக்குகள் இல்லாமல் இன்று வேறு என்ன எழுதுவார் என்று படிக்க ஆவல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ! இவ்வளவு இருக்கா!

      நீக்கு
    2. //இந்தச் சாக்குகள் இல்லாமல் இன்று வேறு என்ன எழுதுவார் என்று படிக்க ஆவல்//

      ஹா ஹா ஹா இன்று நீண்ட நாட்களுக்குப் பின், மகன் ஸ்கைப்பில் வந்தார், மிளகுஷியம் ரெசிப்பி சொல்லிக்கொடுத்தேன் அதுதான் லேட்டாகிட்டுது:))

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா ஹா இன்னிக்கு என்ன சொல்லலாம்னு யோசிச்சுப் பார்த்துட்டே இருந்தேன் நெல்லை……..எல்லாம் சொல்லிட்டீங்கள்…சரி இந்தாங்க இன்னொரு ரீஸன்……கம்ப்யூட்டர் ரொம்ப டயர்டா இருக்கா ஆஆஆஆஆஆஆஆஆஅ அப்புறம் ராத்திரி என்ன செய்யனு யோசிச்சு செய்யணுமா ஸோ ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    4. அதிரா , ஹா ஹா ஹா ஹா ஹாஹா

      மகனுக்கு ஏற்கனவே இந்த பேச்சுலர் குக்கிங்க், ஒன் பாட் குக்கிங்க் எல்லாம் சொல்லிக் கொடுத்துட்டேனாக்கும் ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ கீதாவா கொக்கோன்னானா...!!!!!!!!!! ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  4. என்னாது.... நாங்க (நான் அதில் எக்ஸ்பர்ட் என்று நானே வீட்டில் சொல்லிக்குவேன்...வேறு யார் உண்மையை ஒத்துக்கொள்கிறார்கள்?) செய்யும் மிளகூட்டை, திருவமாறும்போது சிறிது மிளகோ இல்லை சீரகமோ சேர்க்கலாம் என்று சொன்னால் மிளகுஷீயம் ஆகிடுமா?

    இந்த அநியாயத்தை, தானும் தாய்க்குலம் என்பதால் கீசா மேடம் கேட்கமாட்டாரோ? பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிளகஷ்யம் என்று என்னுடைய அம்மா முன்பு கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுதான் அதுவா என்று தெரியாது!

      நீக்கு
    2. ஹலோ மிளகு மட்டும் சேர்த்து செய்யறதைத்தான் நம்ம வீட்டுல பாலக்காட்டு சமையல்ல மிளகுஷியம்னு சொல்றது……சமையலே நம்ம வீட்டுக் கிச்சன்ல இருக்கற பொருட்கள்ல பெர்ம்யூட்டேஷன் காம்பினேஷன் தான்……

      கௌ அண்ணா மிளகுஷ்யம்/மிளகுஷியம்/மிளகுஷீயம் எப்படி வேணாலும் சொல்லிக்கலாம். ஆனா செய்முறை கர்ர்ர்ர்ர்ர் நீங்க உங்க அம்மா செய்யறது நோட் செஞ்சு வைச்சுக்காம போய்ட்டீங்க….க்ளாஸ் ஒழுங்கா கவனிக்கலை!!! ஒழுங்கா ஹோம்வொர்க் செய்யலை…இல்லை மறந்துட்டீங்க.....இம்பொஸிஷன் எழுதுங்க !!!!!! தான் ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    கீதா ரங்கன் ரெசிப்பி பதிவுக்குப் போகுமுன்
    படங்களைப் பார்த்து விடுகிறேன்.
    கொலாஜ் பிரமாதமாக வந்திருக்கிறது

    நறுவிசுன்னு இதைத்தான் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா ஆ ஆ ஆ நறுவிசா!! அம்மா மீக்கு ஒரே ஷை ஷை!!ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  6. அடுத்த திங்கக்கிழமைதான் சந்திக்கப் போறீங்களா? கருத்துகளுக்கு மறுமொழி கிடையாதா? கொரோனா காலத்தில் உல்லாசப் பயணமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா கேளுங்க அய்யா!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நல்லாக் கேளுங்க அண்ணா!

      நீக்கு
    3. ஹா ஹா ஹா நல்லாக் கேளுங்க அண்ணா!இதாரு உள்ளே தலையை நுழைச்சது!!!!!!!!//

      ஹா ஹா ஹா ஹா ஹேய் கரீக்டா சொல்லிட்டீங்க அதிரா கௌ அண்ணனுக்கே அண்ணாவாக்கும் இந்த நெல்லை!!!!!!

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை ஹா ஹா ஹா ஹா ஆமாம் திங்க தான்!! இதோ உங்க வீட்டுக்குத்தான் கிளம்பிட்டுருக்கேன்!!

      கீதா

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் அனைவரும் தகுந்த பாதுகாப்போடு இருக்கவும் படிப்படியாகப் பிரச்னைகள் குறைந்து முன்னர் இருந்தாற்போன்ற நிலைமை திரும்பவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கையே வாழ்க்கை.

      நீக்கு
    2. கீதாக்கா அதே அதே பிரச்சனைகள் குறைய வேண்டும். அதுதான் பிரார்த்தனைகள். கௌ அண்ணா சொல்வது போல நம்பிக்கையே வாழ்க்கை...

      கீதா

      நீக்கு
  8. மிளகுஷ்யம், மிளகூட்டான் எல்லாம் வேற வேறயாமா.

    மிளகு சேர்த்தால் எல்லாமே சுகம் தான்.
    அம்மாடி எத்தனை வகை கூட்டுக் குழு!!!!!!

    அசர வைக்கிறது.
    சுரைக்காய் சேர்க்க மாட்டோம்.
    சௌ சௌவில வேண்டுமானால் செய்யலாம்.

    இன்னும் திதி நாட்களுக்கு மிளகு மட்டுமே
    சேர்ப்போம்.
    து.பருப்பு கிடையாது.
    நன்றியும் வாழ்த்துகளும் கீதாமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க வீட்டிலும் ச்ராத்தம் அன்று பாசிப்பருப்பு மட்டும் தான். கூடவே மிளகு, ஜீரகக் கூட்டணி.தக்காளி, சிவப்பு மிளகாய்,பச்சை மிளகாய் இதெல்லாம் இல்லை.

      நீக்கு
    2. வல்லிம்மா எங்கள் வீட்டில் மிளகுஷ்யம், மிளகூட்டான், என்றால் ஒன்றுதான் மொளகூட்டல் வேறு எங்கள் வீட்டில் சொல்லும் விதம் இது.

      மிளகு- குறுமொளகு. மிள்காயை மொளகு என்றும் மலையாளத்தில் சொல்வதால்… மொளகூட்டல் வற்றல் மிளகாய் போட்டு அரைப்பது…

      வல்லிம்மா அண்ட் கீதாக்கா நம் வீட்டிலும் திதி நாட்களில் பாசிப்பருப்பு மட்டுமே. து ப சேர்க்க மாட்டாங்க.
      என் பிறந்த வீட்டில் மிளகு மட்டுமே முதலில். அப்புறம் கூட உ ப வறுத்து அரைப்பாங்க. புகுந்த வீட்டில் மிளகு, உ ப, சும்மா பேருக்கு வற்றல் மிளகாய் வறுத்து அரைச்ச பொடி.

      துவரம் பருப்பு சேர்ப்பது பற்றி நான் சொல்லியிருப்பது சாதாரண நாட்களில் சிலர் வீட்டில் து ப வறுத்துப் போட்டு மிளகுஷியம் அல்லது மிளகுக் கூட்டு து ப வேக வைத்தும் செய்வதைப் பார்த்திருக்கிறேன் சாப்பிட்டும் இருக்கிறேன்.
      அதனால்தான் எல்லா வகைகளையும் கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு முறை. நான் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டு செய்வது உண்டு. இப்ப கீதாக்கா போடுவது கூடப் பார்த்து வைத்துக் கொண்டு செய்து பார்ப்பேன்.

      மிக்க நன்றி வல்லிமா அண்ட் கீதாக்கா

      கீதா

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. எனக்கும் தி/கீதாவுக்கும் இந்த "மிளகுஷ்யம்" குறித்துப் பேச்சு நடந்தது. அவர் எ.பியில் போடப்போகிறார் என்பது புரிஞ்சுக்கலை. ஆனால் நான் சொன்னது வேறே. இவங்க அன்னிக்கே இதைத் தான் சொன்னாங்க என்றாலும் நாங்க இதைப் பொரிச்ச குழம்பு என்போம். வெறும் மிளகு மட்டும் பொடித்துப் போட்டால் பத்தியப் பொரிச்ச குழம்பு.. பிரசவம் ஆனவர்களுக்குக் கூடப் போடுவாங்க. தாளிப்பெல்லாம் நெய்யில் தான். தேங்காய் சேர்த்தால் வீட்டில் எல்லோரும் சாப்பிடும்படியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி கீதா பதில் சொல்லவும்.

      நீக்கு
    2. கீதாக்கா ஆமாம் நீங்கள் சொன்னது அங்கு பார்த்துவிட்டேன். மிளகு மட்டும் போடுவதுதான் இது. மொளகூட்டல் வல்லிம்மாவுகும் உங்களுக்கும் ஆன அதில் சொல்லியிருக்கேன் மேலே..... இதில் நீங்கள் சொல்லியிருப்பது போல உப, மி வ பெருங்காயம் போட்டு வறுத்து தேங்காய் அரைத்தால் பொரித்த குழம்பு என்று வீட்டில் சொல்வாங்க. மிள்கும் சேர்த்து பெருங்காயம் இல்லைனா மிள்குக் கூட்டு என்று.

      வேறொரு பதிவில் இதையும் சொல்லியிருக்கிரேன். அதாவது ஒரே பதார்த்தம் ஒவ்வொரு வீட்டிலும் வேறு பெயர், அல்லது பதார்த்தங்கள் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பெயருடன் என்று..

      ஆமாம் கீதாக்கா பிரசவ டைம்ல மிளகு மட்டும் தான் போட்டு தருவாங்க. நெய்யில் தான் தாளிதம். சாதாரண நாட்களில் தேங்காய் சேர்த்தால் எல்லாரும் சாப்பிடுவதற்கு என்றுதான். பெயர் தான் வேறாகிறது.
      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  11. சுரைக்காய், கோவைக்காயெல்லாம் சாப்பிடுவது இல்லை. ஆனால் இந்தப் பக்குவம் கத்திரி, புடலை, அவரை, முருங்கை, கொத்தவரை போன்ற நாட்டுக்காய்களில் நன்றாக இருக்கும். கீரையிலும் கீரைத்தண்டிலும் கூடச் செய்யலாம். தண்டுக்கீரை என்னும் கீரையில் இது ரொம்ப நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசாக்கா நீங்கள் கோவைக்காயை காசியில வச்சு விட்டனீங்கள் எல்லோ? அதுதானே காரணம்? ஹா ஹா ஹா.. இங்கும் சுரக்காய் வாங்குவதில்லை, அதில் குளிர்க்க்குணம் அதிகமாக இருக்குது.. சுரக்காய் சாப்பிட்டால் எனக்கு குலைப்பன் காச்சல்போல உள்ளங்கால் எல்லாம் குளிர்ந்து உதறுது கர்ர்ர்ர்:))

      நீக்கு
    2. ஆமாம், பிஞ்சுப்பெதும்பை, காசியிலே தான் விட்டோம். நாங்க எங்கே விட்டோம். நாங்க எந்தக் காய்னு யோசிச்சு முடிப்பதற்குள்ளாகப் புரோகிதர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர், அங்கே ஸ்ராத்தத்தில் கோவைக்காய் சேர்ப்போம், அதனால் அதை விடுங்க இரண்டு பேரும்னு சொல்லிட்டார். நான் தனியாக எதையும் விடக் கூடாதாம். சுரைக்காய் எங்க பொண்ணு, பையர் எல்லோருக்கும் பண்ணிக் கொடுப்பேன். நாங்க இருவரும் சாப்பிடறதில்லை.

      நீக்கு
    3. இதுக்காகத்தான் போலும் சொல்வார்கள், வயதான காலத்திலதான் காசிக்குப் போகோணும் என... இளமையில போய் விரும்பிச் சாப்பிடுவதை விட்டால் கஸ்டமாகிடாது ஹா ஹா அஹ.. அதனாலதான் நான் இன்னும் போகவில்லையாக்கும்:))

      நீக்கு
    4. இப்போதைக்கு நம் வீட்டில் எல்லா காய்களும் சேர்க்கிறோம். பிடித்தும் இருக்கிறது. பிடிக்கலை என்று எதுவுமே இல்லை.

      கீதா

      நீக்கு
    5. கீரையிலும் கீரைத்தண்டிலும் கூடச் செய்யலாம். தண்டுக்கீரை என்னும் கீரையில் இது ரொம்ப நன்றாக இருக்கும்.//

      ஆமாம் கீதாக்கா. சொல்லியிருக்கிறேனே….என்னென்ன காய்களில் செய்யாஅம் என்று. நம் வீட்டில் தண்டுக் கீரை வாங்கினால் தண்டை மிளகுஷியத்திற்கும், கீரையை மசித்தும் ஒருநாள் செய்துவிடுவாங்க.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  12. வயிறு சரியில்லைனாலோ ஜூரம் வந்த உடம்பாய் இருந்தாலோ இந்தக் குழம்புடன் பாசிப்பருப்பு வேக வைத்த நீரைச் சேர்த்துத் தக்காளிச் சாறு+மிளகு, ஜீரகப் பொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்து நீர்க்க ரசம் மாதிரிப் பண்ணிச் சூடான சாதத்துடன் நெய் விட்டுக் கலந்து சாப்பிடலாம். என் அம்மா அடிக்கடி பண்ணுவார். பத்தியத்திலும் சாப்பிட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்தியத்துக்கு மிளகு சரி. ஆனால் பாசிப்பருப்பு ..... இடிக்குதே!

      நீக்கு
    2. பாசிப்பருப்புத் தான் வயிற்றுக்கு உகந்தது. ஜீரணம் ஆகும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு வயிற்றுக்கு ஆகாதது. நான் டைஃபாயிடில் இருந்து மீண்டு வந்ததும் திட உணவு சாப்பிடும் முன்னர் இந்தப் பாசிப்பருப்பு கரைத்த நீரோடு தக்காளிச் சாறு வடிகட்டிச் சேர்த்து மிளகு பொடி, உப்பு மட்டும் போட்டு அம்மா சூடாகக் குடிக்கக் கொடுப்பார். மருத்துவர்கள் இதைத் தான் சிபாரிசு செய்தனர். இதற்கப்புறமாகத் தான் திட உணவுக்கு ஆரம்பித்தப்போ இதிலேயே அரைக்கரண்டி மசித்த சாதத்தைப் போட்டுக் கொடுக்கச் சொல்லுவார்கள். இப்படி ஒவ்வொன்றாக ஆரம்பிக்கும். பிரசவப் பத்தியத்தில் பாசிப்பருப்பும், மிளகு, ஜீரகமும் தான்! வேறே இல்லை. உளுத்தம்பருப்புக் கூட அதிகம் தாளிக்க மாட்டார்கள், (எங்க வீட்டில்).

      நீக்கு
    3. கீதாக்கா டிட்டோ….பாசிப்பருப்பு வேக வைத்த நீர் சேர்த்துச் செய்து சூப் போல….புகுந்த வீட்டில் திதியின் போது மீள்கு ரசம் செய்வாங்கல்லியா அப்ப இலையில் போடவும், கூட்டில் போடவும் பாசிப்பருப்புதானே ஸோ அந்த தண்ணிய மட்டும் எடுத்து ரசத்துல விட்டு விளாவுவாங்க. நல்லாருக்கும்

      கௌ அண்ணா பாசிப்பருப்பு இல்லை….அதை வேக வைத்த நீர் மட்டுமே தெளிவு மட்டுமெ…இல்லை என்றாலும் பாசிப்பருப்பு வயிற்றிற்கு எதுவும் செய்யது. ஜுர நேரத்தில் வயிறு நன்றாக நிரம்பியும் இருக்கும்.

      மிக்க நன்றி கீதாக்கா அண்ட் கௌ அண்ணா

      கீதா

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவில். சகோதரி கீதா ரெங்கன் கொடுத்துள்ள சுரைக்காய் கூட்டு கொலாஜ் படங்கள், மிளகு சம்பந்தபட்ட குறிப்புகள் அனைத்தும் அழகுடன் அருமை. திவசத்திற்கு எங்கள் அம்மா வீட்டிலும் மிளகு, பச்சை மிளகாய், தேங்காய்தான். புகுந்த வீட்டில் மிளகு, பச்சை மிளகாய், (சில இடங்களில் சிகப்பு மிளகாய்,) தேங்காய்.

    மிளகு நாம் அன்றாடம் உணவில் சேர்ப்பது சிறப்புத்தான். நான் புடலை, முருங்கைகாய் அவரை, கத்திரிக்காய் , சேனை, வாழைக்காய் போன்றவற்றில் இவ்வாறு செய்வது உண்டு. சுரைக்காய் இதுவரை சேர்த்ததில்லை. பதிவு அருமையாக இருந்தது. சகோதரிக்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா ஆமாம் சிலர் வீட்டில் ப மி திதியில் சேர்ப்பதுண்டு அதைத்தான் சொல்லியிருக்கிறேன். நம் வீட்டில் சி மி அதாவது புகுந்த வீட்டில். சும்மா பேருக்கு. மிளகுதான் நிறைய ப்ளஸ் உ ப வறுத்து..பொடி செய்து…

      சேனை வாழைக்காயிலும் நம் வீட்டில் செய்வதுண்டு கமலாக்கா…

      மிக்க நன்றி கருத்திற்கு

      கீதா

      நீக்கு

  14. மிளகு சேர்த்த உணவுவகைகள் உடம்பிற்கு நல்லது கீதா அவர்கள் செஞ்ச கூட்டும் அருமை என்று சொல்லி செல்கிறேன்... 2 மாதம கழித்து நாளை வேலைக்கு செல்லுகிறேன் அம்புட்டுதான் இணையத்திற்கு நான் வரலைன்னா சாக அடிச்சுடாதீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா! நேரம் கிடைக்கும்போது வாருங்கள்.

      நீக்கு
    2. ஆமாம் மதுரை மிளகு சேர்த்தல் மிகவும் நல்லது. மிக்க நன்றி மதுரை பாராட்டிற்கு

      2 மாதம கழித்து நாளை வேலைக்கு செல்லுகிறேன் அம்புட்டுதான் இணையத்திற்கு நான் வரலைன்னா சாக அடிச்சுடாதீங்க

      ஹா ஹா ஹா ஹா ஹா மதுரை…இருந்தாலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏன் இப்படியான ஒரு கமென்ட். //

      அப்போது எல்லாரும் எப்படி வருத்தப்பட்டோம் தெரியுமா? இங்கு யாரும் அப்படிச் சொல்லவில்லை…….யாரோ ப்ளாகில் கருத்தில் போட ….எல்லாருக்கும் ஒரு பதற்றம்…அப்போது.

      ஆனால் அப்ப்டிப் போட்டவர் ஒன்றை நினைத்துப் பார்க்கவில்லை புலி வருது கதையை…எதில் கலாட்டா செய்யலாம் எதில் கலாட்டா செய்யக் கூடாது என்று இருக்கிறது.


      கீதா

      நீக்கு
  15. எங்கள் ப்ளாக் அட்மிங்கலுக்கு மின் நிலா பற்றி வந்த பதிவில் என் மனதில் பட்ட கருத்தை சொல்லி இருக்கிறேன் முடிந்தால் பார்க்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேடித்தேடிப் பார்த்தோம். எனக்குக் கிடைக்கவில்லை. where? email?

      நீக்கு
    2. மின்னஞ்சலில் எனக்குக் கூட வந்ததே (கருத்துகளை பின் தொடர்வதால்....) முதல் மின் நிலா வெளியிட்ட செய்தி பற்றிய பதிவில் வெளியாகி இருக்கும் பாருங்கள் கேஜிஜி.

      நீக்கு
    3. நன்றி. பார்க்கிறேன்.

      நீக்கு
    4. எனக்கு என்னமோ இம்மாதிரிக் கருத்துகள் எல்லாம் மின்னஞ்சலில் வருவதில்லை. ஆனால் அதற்குச் சொல்லும் பதில்கள் வருகின்றன. !!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
  16. மிளகுஷியத்தின் வேரியேஷன்ஸ் தான் எத்தனை வகைகள்...!

    சுரைக்காய் வைத்து செய்த மிளகுஷியத்தின் கொலாஜ் படம் அருமை... வாசிக்கும் படி சரியான அளவிற்கு வந்துள்ளது... செய்து பார்க்க வேண்டும்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி ஆமாம் மிளகுஷியம், மிளகுக் கூட்டு இரண்டுமே நிறைய வேரியேஷன்ஸ் இருக்கு. நான் ஒவ்வொரு பாட்டி, உறவினர்களிடம் தெரிந்து கொண்டதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

      செய்து பாருங்க டிடி ரொம்ப ஈசிதான். நல்லாருக்கும்.

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  17. எத்தனை எத்தனை தகவல்கள்!...

    இப்போது இங்குள்ள சூழ்நிலையில்
    சாதாரண மிளகு ரசத்துக்கே வழியைக் காணோம்!...

    மிளகுஷியத்துக்கும்
    சீரகஷியத்துக்கும் எங்கே போவது??...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ! 'அடியே என்று கூப்பிட ............... பொன்னுரங்கம் என்று வைத்தானாம்' என்று சொல்வார்களே, அந்த நிலையா?

      நீக்கு
    2. துரை அண்ணா ஓ எதுவும் அங்கு வெளியில் சென்று வாங்க முடியாத சூழலோ? உங்கள் உடல் நலம் தேறிவிட்டதா அண்ணா?

      இங்க வாங்க என்று சொன்னால் அண்ணா சொல்லுவாரே அங்க வரதுக்கு நேரே நான் தஞ்சாவூரே போயிடுவேனே என்று ஹா ஹா ஹா

      மிக்க நன்றி துரை அண்ணா…

      கீதா

      நீக்கு
    3. அன்பின் கீதா

      தங்களது நலம் விசாரிப்புக்கு மிக்க நன்றி...

      நான் தற்போது நலமாக இருக்கிறேன்...
      ஆயினும் வேறு சில பிரச்னைகள்...

      இறைவன் துணை... நலம் வாழ்க..

      நீக்கு
  18. மிளகுஷியம் படங்களுடன் சொன்னது அருமை.

    பதிலளிநீக்கு
  19. மிளகுஷியம்... கூட்டு போலவே இருந்தாலும் இந்த செய்முறையிலும் செய்து பார்த்து விடலாம்!

    கொலாஜ் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி! ரொம்ப ஈசிதான் வெங்கட்ஜி அதுவும் உங்களின் தனி சமையலுக்கு ரொம்பவே ஈசி அதுவும் குக்கரில் சாதம், மற்றொரு பாத்திரத்தில் இந்தக் கூட்டுக்கானவை வைத்துவிட்டால் சிம்பிளா ஒன் பாட் குக்கிங்க் முடிந்துவிடும். திறந்து நெய்யில் கடுகு, உ ப, மிளகு பொடி கருகப்பிலை தாளித்துவிட்டால் போதும்.

      கீதா

      நீக்கு
  20. //பாட்டியின் வீட்டில் திவசத்தின் போது சமையலில் மிளகு மட்டுமே பயன்படுத்துவாங்களாம். // இது தெரியும். எங்கள் வாடிக்கையாளர் ஓருவர் அவங்க வீடு திவசத்துக்கு இப்படித்தான் கேப்பார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் எல் கே! மிளகு மட்டுமே திதியின் போது சேர்ப்பாங்க. அந்த சமையல் செமையா இருக்கும்.

      சௌம்யா ரெசிப்பிஸ்ல அசத்துகிறார்கள்.

      மிக்க நன்றி எல் கே

      கீதா

      நீக்கு
  21. அழகிய படங்களுடன் மிளகுஷியம் .செய்து பார்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மாதேவி! செய்து பாருங்க. நல்லாருக்கும் ஈசியும் கூட.

      சரி நீங்கள் மீண்டும் ப்ளாக் எழுதலாமே. எழுதுங்க. ரொம்ப நல்லாருக்கு உங்க ப்ளாக். அதுவும் இலங்கை பற்றி வருவது வாசித்து மிகவும் ரசித்தேன்

      கீதா

      நீக்கு
  22. ஆஹா! மிளகுஷியம்!மிகவும் எளிய, ருசியான கூட்டு. ஆனால் நான் தேங்காய்,பருப்பெல்லாம் போட மாட்டேன். அவையெல்லாம் சேர்த்தால் அது மிளகூட்டல் ஆகி விடாதா?(இந்த சந்தேகம் ஏற்கனவே நெல்லையாருக்கு வந்து விட்டது போலிருக்கிறது)  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா மிளகுஷியம் பருப்பு, தேங்காய் இல்லாமதான் செய்வாங்க அது பத்தியம்….இப்படிச் செய்யும் போது எல்லாரும் சாப்பிட உகந்தபடி. அப்புறம் மிளகுக் கூட்டுக்கு பருப்பும் கூட வறுத்துப் போட்டுச் செய்வாங்க….இது எல்லாரும் சாப்பிட மிளகுஷியம்
      அக்கா பெயர் தான் வித்தியாசம். மிளகூட்டல் என்றும் இதைச் சொல்லுவாங்க எங்க வீட்டுல.

      மிக்க நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  23. ஆஆஆஆஆஆ இன்று கீதா ரெசிப்பி... குஷியான ரெசிப்பியாக இருக்குமோ? இல்ல இதைச் சாப்பிட்டால் குஷியாகிடுவமோ?:))

    //எனவே தனியே தன்னந்தனியே என்பதால் பாடிக் கொண்ட //
    நோஓஓஓஒ பாடினால் நான் கிச்சினுக்குள் வரமாட்டேனாக்கும் கீதா, காத்தில கொரோனா வந்திடும்:)).. ஒன்லீஈஈஈஈ கைச் சைகை கால்ச் சைகை மட்டும்தேன்..

    நீங்கள் காத்தில படம் கீறினால், நான் அதைப்பார்த்துப் பொருளை கபேர்ட்டில இருந்து எடுத்துத் தருவேனாக்கும் கரெக்ட்டா:)) ஹா ஹா ஹா... அதுசரி காத்தில எழுதத் தெரியுமோ கீதா? நான் எல்லாம் பயங்கரமாக எழுதியிருக்கிறேன்:).. ஹொஸ்டலில் இருந்து.. எதிர் பில்டிங்கில்.. தூர இருந்த ஆட்களோடு இப்படிப் பேசியிருக்கிறோமே ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா வாங்க பிஞ்சு பெதும்பை ஆகியாச்சா….ஹா ஹா ஹா ஓ ஆமாம் சிட்டைக் காத்த பெதும்பை ……..ஹையோ அன்றே உங்களைக் கலாய்க்க நினைத்து முடியாம போச்சு …….புரிந்தது போன தடவை ஏஞ்சலுக்கு உங்கள் வயதை நீங்க உண்மையை சொல்லிட்டீங்க நு சொன்னதால பெதும்பையாகிட்டீங்க!!! ஹா ஹா ஹா ஹா….மீயும் டமில்ல டி ஆக்கும்!!!!!!!! நீங்க என்னதான் பெதும்பை என்றாலும் உங்க அன்பு எதிரிக்குத் தெரியாதாக்கும்!! ஹா ஹா ஹா

      ஆதான் சொல்லிட்டேனே நீங்க செக் செய்ய வந்திட்டீங்கன்னு அதான் மாஸ்க் எல்லாம் போட்டு சமைச்சுருக்கேன் பாருங்க…அதான் பாடலை பாருங்கோ!!!!!!!

      ஓ காத்துல நல்லவே எழுதத் தெரியுமாக்கும்…அதுவும் எங்கள் அன்பிற்குரிய பாட்டியின் கண்ணுக்குத் தெரியனும்ல சோ பெரிதாகவே எழுதிக் காட்டறேன்…ஹா ஹா ஹா ஹா

      நீங்க எடுத்துக் கொடுங்க….

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  24. //பாரம்பரிய சமையல் குறிப்பு போடுங்கன்னு நெல்லை ரொம்ப நாளா,சொல்லிக் கொண்டே இருக்கிறார்//

    ம்ஹூம்ம்... இப்பூடிச் சொல்வது மட்டும்தான் அவர் வேலை, ஆனா அவர் சாப்பிடுவது என்னவோ வெஸ்ரேன்ன் சொக்கலேட்டும்.. கேக்கும்தானாமே:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ் நான் குஷியம் பார்க்கப்போறேன்ன்.. ஆனா கீதா இன்று நெ தமிழனுக்கு நான் ஒரு ரெசிப்பி செய்திருக்கிறேனே ஹா ஹா ஹ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதே அதிரா...அதை ஏன் கேக்கறீங்க.....வீட்டில் கேக் அது இது என்று ஹாஹா ஹாஹ் ஆ ஹா

      ஹை நீங்கள் நெல்லை க்கு சாப்பிட முடியாதபடிதானே செய்திருக்கீங்க நமக்கெல்லாம் தானே!!!!!!!!

      கீதா

      நீக்கு
  25. //ஒரு காலத்தில் சமையலில் காரத்திற்கு மிளகுதான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.//
    இப்போ டொக்டர் சிவராமனும் இதைத்தான் சொல்லுறாக..

    எனக்கு மிளகு பிடிக்காது, சின்னனில் அம்மா வடை சுடும்போது மிளகு சீரகம் கொஞ்சம் அரைச்சுச் சேர்ப்பா..உளுந்துவடைக்கு. நான் சாப்பிட மாட்டேன்.. ஆனா இப்போ கொஞ்சம் கொஞ்சம் பழகி விட்டேன், இருப்பினும் தூள் பிடிப்பதில்லை, முழுமிளகாக அப்படியே கறிகளுக்கு போடுவேன் .. மற்றும்படி நம் நாட்டுக் கறிப்பவுடர்தானே நாம் பாவிப்போம் அதில் மிளகும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா டாக்டர் கு சிவராமனும் அதைச் சொல்லுவார்.

      மிளகு நல்லதுதான். கொஞ்சம் கொஞ்சம் சேர்த்துக்கோங்க… இந்தக் கூட்டுல கூட நீங்க மிளகை அப்படியே நெய்யில் பொரித்து ச் சேர்த்து செய்து பாருங்க. நல்லாருக்கும்.

      மிக்க நன்றி அதிரா..

      கீதா

      நீக்கு
  26. வாவ்வ்வ்வ்வ் வாழ்க்கையில் சமையல் வரலாற்றில் முதல் முறையாகக் கீதா, ஒரு போட்டோவிலேயே ஒம்பேஎதூஊஊஉ படங்களையும் இணைத்து, ரெசிப்பியை ஒம்பேதூஊஊ வரியில் சொல்லி... சோட் அண்ட் சுவீட்டாக முடித்து கிச்சினையும் பூட்டிப்போட்டா ஹா ஹா ஹா.. இதுக்காகவே இன்று ஒரு பரிசு தரோணும் நான்:)).. கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வாங்கோ கீதா... சிம்பிளான ரெசிப்பியாக இருக்குது கீதா.. நன்றாகச் செய்திருக்கிறீங்க.

    நாங்கள் இதற்குப் பதில் பச்சைமிளகாய் தான்.. அத்துடன் நீங்கள் சொன்னதுபோல பால் சேர்ப்போம்... ஆனால் சமையலில் டிஸ் களுக்குப் பெயர் வைப்பதில் கீதாவை மிஞ்ச முடியாது ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா ஆஆஆஆஆஆஆஆ ஒரே ஷை ஷையா வருதே…நன்றி நன்றி நன்றி!!!! .இது ஜிம்பிள் ரெசிப்பி அதான் ஒரே பாக்ஸ் ல எல்லாத்தையும் போட்டுவிட்டேன். இப்ப்டி இன்னும் சிலது வருமே ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ
      ஆனால் சமையலில் டிஸ் களுக்குப் பெயர் வைப்பதில் கீதாவை மிஞ்ச முடியாது ஹா ஹா ஹா...//

      ஹா ஹா ஹா அதிரா நான் வைச்ச பெயரில்லை…….இதெல்லாம் முன்னரே நம்ம மக்கள் வைச்சுட்டுப் போய்ட்டாங்க. நான் ஏதாவது தில்லு முல்லு செஞ்சா ஒரு பெயர் வைச்சுரலாம்….இப்படிப் பெயர் வைக்கறதுல ஏஞ்சல் தான் பெஸ்ட் ஆக்கும்……கீதாக்கா நிறைய திப்பிஸம் செய்வாங்க ஆனா பெயரே வைக்க மாட்டாங்க!!!!

      ஆமாம் இலங்கையில் பாலும் பச்சை மிளகாய் அப்புறம் சின்ன வெங்காயம் சேர்ப்பது உண்டு. பெரும்பாலும்…

      //கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வாங்க கீதா//

      ஆஆஆஆஆஆ எதுக்கும் நான் இங்க இருக்கற எல்லாரையும் கூட்டிக் கொண்டே வரேன்….எல்லாம் ஒரு பாதுகாப்பு வளையத்துக்குத்தான் ஹா ஹா ஹா…..பின்னே நீங்க பாராட்டுவிழா நடத்தும் போது கூட்டமே இல்லாம இருந்தா ……அப்புறம் பரிசு விழா அது வைர வைடூரிய ப்ளாட்டின பரிசா இருந்தா பாதுக்காப்பு முக்கியமல்ல்லோ….அப்புறம் தேம்ஸ் கரை….ஹா ஹாஹ் ஆ ஹா
      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  27. //(ஸ்பாஆஆ கீதா இன்னா ஆராய்ச்சி! இந்தாங்கோ பிடியுங்கோ எபிகிநோ பரிசு! என்று….யாரது? ஆஆஆ பூஸார்! (கீதாவின் மைன்ட் வாய்ஸ்: வாயில மாஸ்க் போட்டு இருங்கோ!!!!!! என்பதாக இருக்குமோ!!!!!!!ஹா ஹா ஹா..//

    ஹா ஹா ஹா கீதா உங்களுக்கு மிளகுஷியம் பரிசு தந்து குஷிப்படுத்தப்போறேன்:))..

    இனி நானும் செய்யப்போகிறேன்ன்.. உருளைக்குஷியம், வெண்டிக்காய்குஷியம்.... ஹா ஹா ஹா எங்கட சின்னவரை இப்பூடிச் சொல்லிப் பேய்க்காட்டிடலாம் ஹையோ ஹையோ.. ஓகே நான் இன்று போய்....... இன்றே வந்தாலும் வருவேன் எனச் சொல்ல வந்தேன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஅ எனக்கே மிளகுஷியமா!!!! கர்ர்ர்ர்ர்ர்ர்

      உங்க சின்னவருக்கு உருளைக்கிழங்கில் செய்து கொடுங்க நல்லாருக்கும் அதிரா….
      //ஓகே நான் இன்று போய்....... இன்றே வந்தாலும் வருவேன் எனச் சொல்ல வந்தேன்:))//
      ஓ இன்னிக்கு உங்க பதிவு வரப் போகுதா!!!!!!! அதுக்குத்தான் இந்த கொட்டு தட்டி தகவலா!! ஓகே ஓகே… அங்கு ஆஜர் வைச்சாச்சு. அப்புறம் வருகிறேன் அங்கு/ பனானா கேக் வையுங்கோ. அது நெல்லைக்குப் பிடிக்காதாக்கும்!!!!! நான் நினைச்சேன்....நீங்கள் கேக் ஏதாவதுதான் செஞ்சுருப்பீங்கன்னு

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  28. மிளகுஷியத்தின் கொலாஜ் படம் அருமை. செய்முறை கொடுத்து எத்தனைவகையான மாறுதலான செய்முறைகள் அதையும் கொடுத்து விட்டீர்கள்.
    ஒவ்வொருவரும் நான் இப்படி செய்வேன் , கொஞ்சம் வேறு மாதிரி என்று சொல்வதெல்லாம் நீங்களே கொடுத்து விட்டீர்கள் கீதா.

    சொல்லிய விதம் அருமை.

    எல்லாவற்றையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் கொலாஜ் படத்தில் உள்ள செய்முரை மட்டும் செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
    நேற்று சின்னதாக சுரைக்காய் வாங்கி வந்தார்கள் அதை அடை செய்தேன்.
    வயதானவர்களுக்கு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும், என் மாமியார் அடிக்கடி செய்வார்கள். முறுகலாக இருந்தால்தான் அடை பிடிக்கும் எனக்கு முன்பு. அத்தை மெத் மெத் மெத் என்று பஞ்சு போல அடை நல்லாவா இருக்கும் என்பேன் முன்பு இப்போது அத்தையை நினைத்துக் கொண்டு செய்தேன்.

    வட நாட்டில் சுரைக்காயில் வித விதமாக செய்வார்கள். குழந்தை பெற்ற பெண்ணுக்கு தொப்பை வைக்காமல் இருக்க சுரைக்காய் கூட்டு பாசிப்பருப்பு இப்படி மிளகு, சீரகம், பூண்டு வைத்து அரைத்து கலுந்து விடுவார்கள்.. மற்றவர்களுக்கு அதில் தேங்காய் அரைத்துவிட்டு தருவார்கள்.

    பதிலளிநீக்கு
  29. வாங்க கோமதிக்கா இனிதான் உங்க பக்கம் வர வேண்டும்.

    எல்லாவற்றையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் கொலாஜ் படத்தில் உள்ள செய்முரை மட்டும் செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.//

    இதுதான் செய் முறை கோமதிக்கா.

    மற்றதெல்லாம் இப்படியும் செய்வார்கள் என்பதுதான்.

    ஆஹா சுரைக்காய் போட்டு அடையா...ரொம்ப நல்லாருக்குமே. பூஷணியும் போட்டு செய்வதுண்டு, மஞ்சள் பூஷணி போட்டும் செய்வதுண்டு...சுரைக்காய் போட்டு செய்வதை ஒரு தோழியிடம் தெரிந்து கொண்டேன். அந்தத் தோழி இப்போது இல்லை. அவர்கள் மாடியிலும் நாங்கள் கீழுமாக இருந்தோம் திருவனந்தபுரத்தில். வெல்லூர் பக்கம்.

    எனக்கும் அடை முறுகலாக இருந்தால் பிடிக்கும். இருந்தாலும் எப்படி இருந்தாலும் சாப்பிடும் பழக்கம்.

    என் மாமியாருக்கும் வயதான பிறகு அடை மெத் மெத்தென்று இருக்க விரும்புவார்கள் சாப்பிட முடியாதல்லவா...

    வட நாட்டில் சுரைக்காயில் வித விதமாக செய்வார்கள். குழந்தை பெற்ற பெண்ணுக்கு தொப்பை வைக்காமல் இருக்க சுரைக்காய் கூட்டு பாசிப்பருப்பு இப்படி மிளகு, சீரகம், பூண்டு வைத்து அரைத்து கலுந்து விடுவார்கள்.. மற்றவர்களுக்கு அதில் தேங்காய் அரைத்துவிட்டு தருவார்கள்.//

    அதே அதே அக்கா. நீங்கள் சொல்லிவிட்டீர்கள். மிளகு ஜீரகம் பூண்டு போட்டு தேங்காயும் அரைத்துவிட்டு...நானும் செய்வேன் தேங்காய் சேர்க்காமல் செய்தாலும் செமையா இருக்கும்.

    சுரைக்காய் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளும் விதத்தில் சப்ஜியாகவும் செய்யலாம்

    இதில் பூண்டுக்குப் பதில் சின்ன வெங்காயம் வற்றல் மிளகாய் ஜீரகம் தேங்காய் சேர்த்து அரைத்தும் விட்டுச் செய்வதுண்டு அக்கா திருநெல்வேலிப்பக்கத்தில். இது ஒரு தனி டேஸ்டு....என் அத்தை வீட்டில் செய்வாங்க. அதுவும் செய்வேன்.

    இப்படி நிறைய செய்யலாம்....நானும் சுரைக்காய் சேர்ப்பதுண்டு நல்லது என்று

    மிக்க நன்றி கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
  30. கௌ அண்ணா மற்றும் எபி ஆசிரியர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு
  31. ஆஆவ் கீதா படங்கள் அதிலேயே குறிப்புன்னு அசத்திட்டிங்க .நானா மட்டும்தான் மொளகுஷ்யம்னு தப்பா பேர் சொல்றேனோ ??எதோ ஒரு  கஷ்யம் :) பெயரில் என்ன இருக்கு .
    நான்  சுரைக்காய் சமைப்பதில்லை புடலங்காய் சேர்த்தி இப்படி செய்வதுண்டு .அரைக்கீரை தண்டுகளை வேஸ்ட் செய்யாமல் இப்போல்லாம் அதிலும் பருப்பு சேர்த்து செய்வேன் .நல்ல சுவைமிகு  குறிப்பு கீதா 

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!