வியாழன், 7 மே, 2020

"மாம்பழத்தைத் தின்பானேன்?...."



போன வாரம் ஒரு பொதுவான அனுபவம் முன்னுரை கொடுத்து நிறுத்தி இருந்தேங்க...   கதவிடுக்கில் மாட்டிய எலியைக் கூட ரிலீஸ் செய்து விடலாம்.  பல்லிடுக்கில் சிக்கிய பாக்கை அப்படி சுலபமாக ரிலீஸ் செய்ய முடியாதுங்க...    உண்மைதானே?    உங்களுக்கும் அந்த அனுபவம் இருக்கும்தானே?

அதாவது வெற்றிலையைச் சாப்பிடும்போது கூடவே பாக்கையும் சாப்பிடுவோம்.  அது எங்காவது பல்லிடுக்கில் மாட்டிக்கொள்ளும்.  அப்புறம் அதை கைகளால், நாக்கால் துழாவி, அல்லது குச்சியால் என்று எடுக்கும் வரை நிம்மதியே இருக்காது.  இல்லையா?  அது பாட்டுக்கு அப்படியே இருந்துட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவீர்களா என்ன?

கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டதும் சரியாய் ஒரு விதை எங்காவது ஒரு பல்லிடுக்கில் சென்று மாட்டிக்கொள்ளும்.   அதற்கும் அதே அனுபவம், அதே ட்ரீட்மெண்ட்தான்.  பாக்கைக் கூட சுலபமாக எடுக்கலாம்.  கொய்யா விதை ரொம்பக் கஷ்டமுங்க...

ஊர்ப்பக்கம் ஒரு சொலபோண்டா (அதென்ன எப்போதும் அதை சொலவடை என்று சொல்வது?!)  சொல்வார்கள்...   "மாம்பழத்தைத் தின்பானேன்?  ம*ரைப் பிடுங்குவானேன்?"  என்று... 

இப்போ பாருங்க...   போன வாரம் சம்பந்தமில்லாம, ஒரு விஷயமும் சொல்லாம எதுக்கு அதெல்லாம் எழுதி இருந்தேன்னு (ஒருத்தருக்காவது) தோணியிருக்குமில்லையா...  

புது வீட்டிலிருந்து அலுவலகம் வந்து செல்லும் போக்குவரத்து பற்றி பேசிக்கொண்டிருக்கையில் நண்பர் பூபாலன் (இவர் நான் மகான் அல்ல, காதல், வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களில் நடித்திருப்பவர்)  சொன்னார்...  "வண்டி வாங்கிடுங்க ஸார்...   வசதியாயிருக்கும்"  என்றார்.

"கஷ்டம் பூபாலன்"

"என்ன ஸார் கஷ்டம்...   காசில்லையா?  லோன்ல வாங்கலாம்..."

"அதில்லை பூபாலன்...  சும்மா நடந்து வருவதே கஷ்டம்..   அதில் ஒரு வண்டியைத் தள்ளிக்கொண்டு வேறு வருவது என்றால் கஷ்டம்தானே?"

அது நான் அடிக்கடி கடிக்கும் உளுத்துப்போன ஜோக் என்று புரிய பூபாலனுக்கு சில நொடிகள் பிடித்தது.  சிரிக்க மறுத்தவர், "ஏன் ஸார்...   வண்டியே ஓட்டினதில்லையா?  நான் கத்துத் தரேன்...  ரெண்டு நாளில் கத்துக்கலாம்" என்றார்.

"தொண்ணூறுகளுக்கு முன் மதுரையில் வண்டி ஒட்டி இருக்கேன் பூபாலன்...  இங்க சென்னை வந்து ஓட்டினதில்லை"

"அப்போ என்ன ஸார்...   வசதி..   ஈஸியா கத்துக்கலாம் ..." என்றார் 

"ஐயோ...   முதல்லேருந்தே ஓட்டி இருந்தா ஓகே...    இப்போ பயங்கர டிராஃபிக்..."

"எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா.."  என்ற வரிகளை பாடாமல் ஆனால் மனப்பாடமாக ஒப்பிப்பது போல சொல்லி ஆச்சர்யப்படுத்தினார் .பூபாலன்.

வண்டி பற்றி பேச்சு கொஞ்சம் அப்புறம் தொடர்ந்தது என்றாலும் என் மனதில் வழக்கம் போல அந்தப் பாட்டே வட்டமடித்துக் கொண்டிருக்க, பாட்டை நோக்கிப் பேச்சைத் திருப்பினேன்.

"சட்டுனு பாட்டு வரிகளை சொன்னீங்க...  என்ன பாட்டுன்னு தெரியும்தானே?"

அவர் கொஞ்சம் பாடிப் பார்த்துவிட்டு 'தெரியாது' என்பதுபோல தலையசைக்க, எனக்கும் பாடலின் ஆரம்பரி சில நொடிகள் கண்ணாமூச்சி காட்டிவிட்டு உடனே நினைவுக்கு வர..   

"நீலமலைத்திருடன் பாட்டு...   டி எம் எஸ் பாடியது...  சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா' பாடல்" என்றேன்.

பாடிப் பார்த்தவர் "ஆமாம்...    ஜெமினி நடிச்ச படம்.." என்றார்.  சும்மா இருந்திருக்கலாம்.  இது போதாதா எனக்கு?!

"இல்லை பூபாலன்,,,   ஜெமினி இல்லை...  யார் சொல்லுங்க பார்ப்போம்.."

"எம் ஜி ஆர்?"

"இல்லை..  உங்களால சொல்ல முடியாதுன்னு நினைக்கறேன்.  ரஞ்சன் நடிச்ச படம்.  அப்போல்லாம் குதிரைல வந்துகிட்டே பாடற  ஸீன் படத்தில் அடிக்கடி வரும்...   மலைக்கள்ளன்ல எம் ஜி ஆர், படித்தால் மட்டும் போதுமால சிவாஜி..."

ரஞ்சன் யார் என்று அவரால் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

சொன்னேன்.  அப்பாவுக்கு ரஞ்சன் பிடிக்கும்.  அவர் பற்றிய விவரங்களை அப்பா சொல்லி இருக்கிறார்.

"மேலும் இது எம் ஜி யாருக்காக தேவர் கற்பனை செய்திருந்த படம்.  எம் ஜி ஆர் சரியாய் பதில் சொல்லவில்லைன்னதும் வேணும்னே ரஞ்சனை வச்சு எடுத்தார்..."

"ஏன்?"

"சாலிவாகனன்ங்கற படத்துல ரஞ்சன் ஹீரோ, எம் ஜி ஆர் வில்லன்.  அந்தப் படத்து சண்டைக்காட்சில ரஞ்சனுக்கும், எம் ஜி ஆருக்கும் மிஸ் அண்டர்ஸ்டாங்டிங் வந்ததாம்.  அதிலிருந்து இருவருக்கும் அவ்வளவு ஆகாதாம்"

"ஜெமினின்னு நினச்சேன்...இல்லையா?" என்றார் பூபாலன் மறுபடி.

இப்போது என் மனதில் ஒரு பாடல் தோன்றியது.  "ஜெமினி ஒரு பழைய மன்னர் காலப்  படத்தில் மலைப்பிரதேசம் ஒன்றில் வந்து ஒரு பாட்டுப் பாடுவார்.  பக்தி பாடல்...  அது என்ன பாட்டு?"  என்று பூபாலனையே கேட்டேன்.

ஏனோ என் மனதில் அது முருகன் பாடல் என்று வேறு தோன்ற, சொன்னதும் அவர் 'சிங்காரவேலனே தேவா' என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.  

எனக்கோ, பாடலும் நினைவுக்கு வரவில்லை.  படமும் நினைவுக்கு வரவில்லை.  ஆனால் காட்சி அமைப்பு மட்டும் லேசாக நினைவிருந்தது.

பூபாலன் மட்டுமல்லாமல் அங்கு வேறு யாருக்குமே சொல்ல முடியாமல் போக அவஸ்தை ஆரம்பமானது.  அதுதான் பல்லிடுக்கில் பாக்கு!  எல்லாவற்றையும் சரியாகச் சொன்னாலே விடை கிடைக்காத இடத்தில் இந்த அரைகுறை விவரத்தை வைத்துக்கொண்டு விவரம் சொல்ல யாருமில்லை!

அலைபேசி, அண்ணன், அக்கா, மாமா என்று எல்லோரையும் கேட்டுப் பார்த்தேன்.  வேறு எந்த வேலையில் கவனம் செலுத்தினாலும் இந்த கேள்வி நின்று கொண்டே இருக்க, மனசில் நமநமவென்றிருந்தது.  பிடிவாதமாக வேறு பாடல்கள் கேட்டேன்.

அரைமணி நேரம் கழித்து விளக்கெரிந்தது.  முதலில் அது முருகன் பாடல் இல்லை.  நடராஜன் பாட்டு.  "தில்லை அம்பல நடராஜா..."  பாடல்.  மோஹன ராகத்தில் அமைந்த பாடலாம்.  யு டியூப் சொல்கிறது.  சௌபாக்யவதி படத்தில் இடம்பெற்ற டி எம் எஸ் பாடல்!  பல்லிலிருந்து பாக்கு விடுபட்டது.  சந்தேகம் கேட்ட ஒவ்வொருவரிடமாக அலைபேசி விவரம் சொன்னேன்.  ஆரோக்ய சமையல் ஹேமா என்னை கேலியுடன் பார்த்துக் கொண்டிருக்க,

கர்சீப்பால் முகமூடி அணிந்த ஒருநபர் என்னை நெருங்கினார்.  அவர் கையில் ஒரு துண்டு பேப்பர் இருந்தது.  

அந்தக் கண்கள்....

அருகில் வந்து அந்த பேப்பரைக் காட்டி ஏதோ கேட்க, அதில் எழுத்துகள் தலைகீழாக இருந்தன.  அதை வாங்கப் போன என்னை ஹேமா தடுத்தார்.  "அவரையே திருப்பிக் காட்டச் சொல்லு...   நீ தொடாதே"  கொரானா பயம்!

அவர் ஹேமாவை ஒரு பார்வை பார்த்தவர், ஹேமாவுக்கு சந்தேகம் வரவைத்த தனது கர்சீப் முகமூடியை அகற்றினார்.  பேப்பரைத் திருப்பி என்னிடம் காட்டி என்னிடம் பேசினார்.

என் கவனம் அவர் முகத்தில் இருந்தது.  என் மனதில் அந்தப் பெயர் வந்தது..."நல்லய்யன்..."  

ஒரே சமயத்தில் இரண்டு நல்லய்யன் முகங்கள் ஞாபகத்தில் மோதினாலும், அந்த நல்லய்யன்களை எங்கே சந்திருந்திருக்கிறேன் என்று ஞாபகமில்லை.  பாக்கு மறுபடியும் பல்லிடுக்கில் புகுந்து கொண்டது.

முகமூடியை மறுபடியும் மாட்டிக்கொண்டவர் பதில் தராமல் அவர் முகத்தைப் பார்த்து திகைத்திருந்த என்னைப் பார்த்த எரிச்சலுடன் அகன்றார் அவர்.

"நேத்துதான் ஒரு வீடியோ பார்த்தேன் ஸ்ரீ...    அதில் ஒருத்தன் எலெக்ட்ரிக் ட்ரெயினில் போகும்போது மாஸ்க்கை எடுத்துட்டு, வாயிலிருந்து எச்சிலை எடுத்து எல்லோரும் கைவைக்கிற அந்த கைப்பிடி மேலே தடவறான்...  வேணும்னே...   என்ன மாதிரி மனுஷங்க..."  ஹேமா ஏதோ சொல்லிக் கொண்டிருந்ததில் பாதி கவனம்தான் சென்றது.



எங்கே சந்திருக்கிறேன்....?   நல்லய்யன்...   தஞ்சாவூர் ஸ்கூல்?  மதுரையோ?   பாக்கை எடுக்கும் முயற்சியில் நான் மறுபடி...


========================================================================================

இசையமைப்பாளர் தேவா பற்றி ஒரு நெகிழ்ச்சியான செய்தி...   படித்ததில் நெகிழ்ந்தது...



========================================================================================

படித்ததில் சிரித்தது அடுத்து...



=============================================================================================

இந்த தில்லானா கேட்டிருக்கிறீர்களா?  திமிர் தில்லானா!



=============================================

கலர்ப்படம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.  நல்லா படிங்க...   கலப்படம் இல்லை, கலர்ப் படம்!



======================================================================================

பழைய வீட்டில் ஒரு சூர்யோதயக் காட்சியை க்ளிக்கிய படங்கள்...



121 கருத்துகள்:

  1. இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய் கவர்ந்தற்று..

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  2. சூர்யோதயக் காட்சி அழகு... அருமை....

    பதிலளிநீக்கு
  3. இன்று அனுப்ரேம் அவர்களின் மதுரகவி ஆழ்வார் இடுகைக்குச் சென்று வந்ததால் தாமதம்.

    சூர்யோதயப் படத்தில் இருப்பது மாமரமா? பல்லிடுக்கில் புகுந்துகொண்டது மாம்பழ நார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...   ஹா...   ஹா...

      திருப்பி அடிச்சுட்டீங்களா?

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய ப்ரார்தனைகளுடன் வந்திருக்கும் கமலா அக்காவுக்கு நன்றி, நல்வரவு.  வணக்கம்.

      நீக்கு
  5. வண்ணப் படத்திற்கு கதாநாயகனாகப் போட தகுதி வாய்ந்த தங்கநிற காதாநாயகன் எம்ஜிஆர். தகவல் புதுசு.

    இன்றைய கதம்பம் ரசிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.

      எம் ஜி ஆருக்கு ரசிகர்களிடையே இருந்த கவர்ச்சி அலாதி.

      நீக்கு
  6. தேவா, சூர்யன் படத்தில் கந்தசஷ்டி பாடல் ட்யூனில் ஒரு காதல் பாட்டை போட நேர்ந்ததின் பின்னணியும், அதனால் தவறுதலாக எல்லோரும் தேவாவைக் குறைகூறியதெயும் சொன்னதைப் பகிர்ந்திருந்தீர்களோ?

    பாடகர் சஞ்சய் சுப்ரமணியம் அவர்களும் ஆரம்பத்தில் பல தேங்காய் மூடி கச்சேரிகள் செய்திருக்கேன் எனச் சொல்லியிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அரைகுறையாய் நினைவில் இருக்கிறது.

      சஞ்சய் தகவல் கேள்விப்பட்டதில்லை.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பல்லிடுக்குகளில் மாட்டிய பாக்கு ,மாம்பழ நார், கொய்யா விதைகள் என பலதையும் மறுபடி வெளிக் கொணராமல், வேறு எதைப்பற்றியும் சிந்திப்பதும் அவஸ்தைதான். அதனுடன் வெளி வராத நினைவுகளின் அவஸ்தைகளையும் சேர்த்தது சுவாரஸ்யம். படிக்கும் போது பல இடங்களில் சிரிப்பு வந்தது.

    சூரியோதயம் வெகு அழகாக உள்ளது. நானும் இந்த மாதிரி சூரியோதய காட்சிகளை என் செல்லில் அடிக்கடி சிறைப்படுத்துவேன்.

    சந்திரோயதமும் மிக அழகாக உள்ளது. விபரங்களை விபரமாக படித்து விட்டு வருகிறேன்.(என்னடா இது ப.சி.பா மாதிரி இது? என நினைப்பதற்குள் உங்களுக்கு புரிந்திருக்கும்.) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய குருவார வணக்கம்.
      இங்கே இப்போதுதான் நரசிம்ஹ அவதாரத்தைக் கொண்டாடி ,பௌர்ணமி
      நிலவையும் படம் பிடித்தாச்சு.

      சூர்ய உதயம் ,இரண்டு படங்களும் மிகக் கச்சிதம்.
      பல்லில் பாக்கு ரொம்பக் கஷ்டம்.
      அதைவிட பாட்டு எந்தப் படத்தில் வந்தது என்று தேடுவது சக்ஸஸ்ஃபுல்லாக
      முடிந்தால் மஹா சந்தோஷம்.
      ரஞ்சன் நல்ல நடிகர்.
      நான் திருமங்கலத்தில் நீலமலைத்திருடன்
      பார்த்தேன். அதில்தானே கொஞ்சு மொழிப் பெண்களுக்கு அஞ்சா நெஞ்சம் பாடல் வரும்?

      நீக்கு
    2. வண்ணப் படங்களின் நாயகனா எம் ஜிஆர்?
      பொருத்தம்தான்.

      நீக்கு
    3. நன்றி கமலா அக்கா.

      ஹிஹிஹி...   பசிபா யோசித்துக் கொண்டிருக்கிறேன்...   கீதா அக்கா, ஏஞ்சல் உதவக்கூடும்!  இல்லா விட்டால் நீங்களே சொல்லிவிட வேண்டியதுதான்!

      நீக்கு
    4. வாங்க வல்லிம்மா...    இனிய வணக்கம்.  பல்லிடுக்கில் பாக்கின் அவஸ்தையைப் புரிந்து கொண்டதற்கு நன்றி.   அதைத்தான் தலைப்பாக வைக்க எண்ணியிருந்தேன்!  நீலமலைத்திருடன் படம் நான் பார்த்ததில்லை!  வழக்கம் போல பாட்டு மட்டும்!

      நீக்கு
    5. //வண்ணப் படங்களின் நாயகனா எம் ஜிஆர்?
      பொருத்தம்தான்.//
      பின்னே...   அவரைவிட வேறு யார் பொருத்தம்?!

      நீக்கு
  8. பல் குத்துவதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறீர்கள்.
    படங்கள் ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  9. ஊட்டிவரை உறவு படத்தில் சிவாஜியும்
    நன்றாக இருப்பார்.
    வீரபாண்டிய கட்டபொம்மன் படம்
    முன்னாலியே வந்துவிட்டதே ஸ்ரீராம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சௌபாக்யவதி கோடைக்கானலில் எடுத்திருப்பார்களோ.

      நீக்கு
    2. வீ பா க பொம்மன் கேவா கலர் என்று நினைக்கிறேன் வல்லிம்மா.

      நீக்கு
  10. பாங்க் பணம் கடன் இப்படித்திருப்பி வந்ததா. ஹஹஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாங்க் பணம் கடன் இப்படித்திருப்பி வந்ததா. ஹஹஹா.//

      ஹா...   ஹா...  ஹா...   நன்றாய் இருந்தது இல்லை?

      நீக்கு
  11. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  12. தேவா பாவம்.
    13 பாடல்கள் அல்ல.13 படங்களில் இசையமைப்பு. ஒன்றும் வெளிவரவில்லை. முதலில் கைக்கு வந்த அட்வாஸ் பணமோ, 50 காசுகள் - கொடுத்த தயாரிப்பாளர் யார்? தரையில் சாக்குப்போட்டு, பிச்சை எடுத்த காசிலிருந்து, ஒரு காசைக் கஷ்டப்பட்டு எடுத்து அனுப்பிவிட்டாரோ என்னவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏகாந்தன் ஸார்...   ஆனால் அவரை வெவ்வேறு விதங்களில் விமர்சிக்கிறோம்.  அவரவர் கஷ்டப்பட்டுதான் அவர்களுக்கான உயரங்களை எட்டுகிறார்கள்.

      நீக்கு
    2. கடும் உழைப்பு, அவமானங்களை சீரணித்துக்கொள்வது, மீண்டும் மீண்டும் முயற்சிப்பது, அத்துடன் அதிருஷ்டம் சேர்ந்தால்தான் ஒருவர் மேலே வர முடிகிறது. இதைத்தான் பெரும்பாலான தன் வரலாற்று நூல்களோ இல்லை வாழ்க்கையில் முன்னேறியவர்கள் பேசுவதோ, சொல்கிறது.

      பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி (?) திரைப்படத்தில் கதைக்களம் ஊட்டியில் இருக்கும்போது, சிம்ரனின் தோழிகளில் ஒருவராக கூட்டத்தில் ஒருவராக நிற்பார் திரிஷா. சில நாட்கள் முன்பு பார்த்த ஒரு பழைய படத்தில் கூட நிற்கும் கூட்டத்தில் ஒருவராக நிற்பார் யோகிபாபு. இதுபோல சத்யராஜ், அடியாட்களில் ஒருவராக சிவாஜி படம் ஒன்றில் பார்த்திருக்கிறேன். அவமானங்களைத் தாண்டி, அவர்களுக்கான நேரம் வரும்போது அவர்கள் பிரகாசிக்கிறார்கள்.

      நீக்கு
    3. சிவாஜி நடித்த ராமன் எத்தனை ராமனடி படத்தில் ஒரே காட்சியில் கார் டிரைவராக வருவார் கவுண்ட்டமணி. குஷி படத்தில் விஜய்யின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராக ஷ்யாம். அதேபோல் விஜய் சேதுபதி..

      நீக்கு
  13. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நேற்று மட்டும் நோய் ஆயிரக்கணக்கில் பரவி உள்ளது தமிழ்நாட்டில். அனைவரும் நல்ல நலமுடன் இருக்கப் பிரார்த்திப்பதைத் தவிர்த்து வேறு வழியில்லை. இன்னிக்கு டாஸ்மாக் வேறே திறப்பதில் நோய் பரவும் வேகம் அதிகரிப்பதை எதிர்பார்க்கலாம். இவ்வளவு நாட்கள் கட்டிக்காத்து வந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இந்த ஒரே விஷயத்தில் தூள் தூளாகப் போய்விட்டது வருத்தமளிக்கும் செய்தி. இறைவன் பாதாரவிந்தங்களைச் சரண் அடைவதைத் தவிர வேறே வழியே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.  நல்வரவு.  வணக்கம்.   ஆண்டவன் அகிலத்தைக் காக்கட்டும். ஏற்கெனவே சொல்லும்போதே மே நான்கு முதல் இருபது தேதி வரை எண்ணிக்கை அதிகமாகும் என்றே சொல்லி இருந்தார்கள்.  அப்புறம் குறையும் என்றும் சொல்லி இரு ந்தார்கள்.  பார்ப்போம்.

      நீக்கு
  14. வீரபாண்டியக் கட்டபொம்மனை நானும் நினைச்சேன். ஆனால் அதெல்லாம் கேவா கலர்ப் படங்கள் என நினைக்கிறேன். அறுபதுகளுக்குப் பின்னரே வண்ணப்படங்கள் அதிகம் வர ஆரம்பித்தன. பல்லிடுக்கில் எது மாட்டிக்கொண்டாலும் உடனே ப்ரஷ் செய்து அதை எடுத்துடுவேன். இல்லைனா வேலை ஓடாது! ::)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லிடுக்கில் மாட்டிக்கொண்டது குறித்த என்னோட அனுபவத்தை எழுதிட்டேனே, பரவாயில்லையா? இது போல் பல நினைவுகள் நம் நினைவுப் பெட்டகத்தின் அடியில் இருந்து கொண்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும். நானும் சில சமயங்களில் இப்படி விழிச்சிருக்கேன்.

      நீக்கு
    2. ஆமாம் கீதா அக்கா...    அது கேவா கலர்தான்.  பல்லிடுக்கில் சிக்கிய அனுபவங்கள் எல்லோருக்கும் இருக்குமே...  அது பொருளாகட்டும், நினைவுகளாகட்டும்!

      //பல்லிடுக்கில் மாட்டிக்கொண்டது குறித்த என்னோட அனுபவத்தை எழுதிட்டேனே, பரவாயில்லையா? இ//

      ஹா..  ஹா..  ஹா...

      நீக்கு
  15. அதெல்லாம் சரி, அந்த நல்லையன் கொண்டு வந்த பேப்பரில் எழுதி இருந்தது என்ன? தெரிஞ்சுக்கலைனால் தலை வெடிச்சுடுமோனு நினைக்கிறேன். :))))) பூபாலன் என்பவர் திரைப்படங்களில் நடிச்சவர் உங்க அலுவலகத்தில் வேலை பார்க்கிறாரா? !!!!!!!!!!!!!!!!!!!!!! ஆச்சரியம் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லய்யன் ஏதோ விசாரித்தார்.  அது என்னவாய் இருந்தால் என்ன?  இப்போ நல்லையனை எங்கே பார்த்திருக்கிறேன் என்பதே கேள்வி.  இதுவரை விடை வரவில்லை! பூபாலன் சுசீந்திரன் படங்களில் சிறு வேடங்களில் நடித்திருப்பார்.

      நீக்கு
    2. இங்கே சுசீந்திரன் யாருனு கேட்டால் பானுமதி அடிக்க வருவாங்களோ? ஙே!!!!!!!!!!!!!!!!! அவ்ர் யார்?

      நீக்கு
    3. சுசி கணேஷ்னோ என்னமோ பெயர். ஓர் நடிகர் அல்லது இயக்குநர், எங்கள் நண்பர் தி.ரா.ச. அவர்களின் கிண்டி குடியிருப்பில் அவரோடு இன்னொரு குடியிருப்பில் எதிரேயோ என்னமோ! வசிக்கிறார். அதைச் சொல்லிட்டு எங்களை அவரைப் பார்க்க வரீங்களானு கேட்டார். நான் வரலைனுட்டேன். அவரைப் பற்றி எதுவுமே தெரியாது. போயிட்டுத் திருதிருனு முழிக்கணும்.

      நீக்கு
    4. வெண்ணிலா கபடிக் குழு, வழக்கு எண் ..., நான் மகான் அல்ல (கார்த்தி தமன்னா) காதல் போன்ற படங்களை இயக்கியவர்.

      நீக்கு
    5. அடடா... சுசிகணேசனை சந்திக்கும் வாய்ப்பு கீதா சாம்பசிவம் மேடத்துக்குப் போய்விட்டதே... அது சரி.... சந்தித்திருந்தால் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையை சிவாஜி சந்தித்ததைப்போல ஆகியிருக்கும்.

      கீசா மேடத்துக்குப் பதில், பா.வெ. மேடம் அல்லது நானோ சந்தித்திருந்தால், 'அந்த அமலாபால் குற்றச்சாட்டு எந்த அளவு உண்மை, லீனா மணிமேகலை சொன்ன குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன' என்றெல்லாம் (தைரியம் இருந்தால்) கேட்டிருப்போமோ?

      நீக்கு
    6. நான் அந்த சுசி கணேசனைச் சந்திக்கவே இல்லை நெல்லை. ஆவலும் இல்லை. அதோடு ஸ்ரீராம் மேலே சொல்லி இருக்கும் படங்களில் வெண்ணிலா கபடிக்குழு 2 என்னும் படம் மட்டும் இப்போது சன் தொலைக்காட்சியில் விளம்பரங்களில் வருகிறது. மற்றப் படங்கள் பற்றி எதுவும் தெரியாது

      நீக்கு
  16. பழைய வீட்டில் எடுத்த சூரியோதயப் படம் நன்றாக இருந்தாலும் ஏனோ அன்னிக்கு சூரியனின் வெப்பம் அதிகமாக இருந்திருக்குமோனு ஒரு எண்ணம் படத்தைப் பார்த்ததும் தோன்றியது. ரஞ்சனைப் பற்றிச் சித்தப்பாவிட இருந்த ஒரு புத்தகத்தில் நிறையப் படிச்சிருக்கேன். லாயிட்ஸ் ரோடில் வரிசையாக முன்னர் இருந்த கடைகள் (எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எதிரே) ரஞ்சன் கட்டி வாடகைக்கு விட்டிருப்பது என்று சொல்லுவார்கள். உண்மையான ஸ்டன்ட் நடிகர் எனவும் தனக்காக வேறு யாரும் தேவை இல்லை எனச் சொல்லிவிட்டுத் தானே நடிப்பார் எனவும் சித்தப்பா சொல்லிக் கேட்டிருக்கேன். ஜெமினி ஸ்டுடியோவில் சித்தப்பா வேலை பார்த்த சமயங்கள் அவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஞ்சன் பற்றிய மேலதிக சுவாரஸ்யத் தகவல்களுக்கு நன்றி.  பொதுவாக வெகு திறமையானவர் என்று மட்டும் தெரியும்!

      நீக்கு
    2. ரஞ்சன் துடிப்பானவர். நிஜமாகவே வாள்சண்டை வீரர். அவருக்குத் தெரியும். திறமை உண்டு. அதனால்தான் அவரைப் ’புரட்சி’க்குப் பிடிக்காது!

      நீக்கு
    3. ஆமாம் ஏகாந்தன் ஸார்.. குதிரையேற்றம் உள்ளிட்ட வேறுபல கலைகளும் அறிந்தவர் அவர் என்பார்கள்.

      நீக்கு
  17. பெரும்பாலும் ஹிந்திப்படங்களின் ட்யூன்களைக் காப்பி செய்தே தேவாவின் இசை அமைப்பு இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயாரிப்பாளர் விருப்பமாய் இருக்கலாம்!  தேவாவைத் திருப்பிப் போட்டால் வேதா!

      நீக்கு
    2. "சினிமா பார்ப்பதே இல்லை. இப்படியெல்லாம் பாடல்கள் வந்திருக்கிறதா?" என்று கேட்பவர் தேவாவின் பாடல்கள் ஹிந்தி பாடல்களை காப்பியடிக்கப்பட்டிருக்கும் என்று கூறுகிறார். என்று நெல்லையியிலிருந்து தமிழன் வந்து கூறுவதற்கு முன் நான் முந்திக் கொள்கிறேன்(என்ன ஒரு வில்லத்தனம்!)ஹாஹா!

      நீக்கு
    3. //பெரும்பாலும் ஹிந்திப்படங்களின் ட்யூன்களைக் காப்பி செய்தே தேவாவின் இசை அமைப்பு இருக்கும்.//அவர் பெயரான டி.தேவா என்பதை கேலியாக காபி தேவா என்று குறிப்பிடுவார்கள். அதற்கு முன் சங்கர் கணேஷ் அந்த செயலை செய்து  கொண்டிருந்தார்கள். ஏன் இளையராஜாவைப் பற்றி கங்கைஅமரன் எம்.எஸ்.வி. பாட்டிலிருந்து அண்ணன் உருவிப் போட்ட பாடல்கள் 150 என்னால் சொல்ல முடியும் என்கிறார்.

      நீக்கு
    4. சமீபத்தில் யுவன் கூட இப்படி சில விஷயங்கள் பற்றிப் பேசி இருந்ததாய் என் இளைய மகன் சொன்னான்.

      நீக்கு
    5. ஹாஹா, பானுமதி! கீழே உங்களுக்கும் சேர்த்தே பதில் சொல்லி இருக்கேன். படம் பார்க்காட்டியும் பாடல்கள் காதில் விழுமே! எங்க வீட்டு ரேடியோ இல்லைனாலும் அக்கம்பக்கம் உள்ளவங்க வைப்பது! ஒலிபெருக்கிகள் மூலம் அலறுவது! இதெல்லாம் போதுமே! மேலும் அதிகம் ஹிந்திப்படப் பாடல்கள் கேட்டதால் அதே மாதிரித் தமிழ்ப்படப்பாடல் வந்தால் தானே தெரியுமே! என்றாலும் ஒரு சில விஷயங்கள் எனக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல் இருக்கும். அதுவும் சமீபத்தியப் பத்து வருஷப் படங்கள்! சுத்தமாய்த் தெரியாது. புரியாது.

      நீக்கு
    6. சமீபத்திய படங்கள் பற்றி நானும் நிறைய அறிந்தவனல்ல.

      நீக்கு
    7. //சமீபத்திய படங்கள் பற்றி நானும் நிறைய அறிந்தவனல்ல.// - நாம் முந்தைய ஜெனெரேஷன் என்ற நிலையை நோக்கிப் பயணிக்கிறோம் என நினைக்கிறேன். சில பாடல்கள், படு கோரமாகவும் வார்த்தைகள் என்னன்னே தெரியாமல் எரிச்சலூட்டுவதாக இருந்தாலும், என் பெண், சட் என்று பாடல்களைப் பாடுவாள் (அந்த சமீபத்தைய பாடல்கள் ஃபேமஸாக ட்ரெண்டாக இருந்திருக்கணும்).

      நீக்கு
  18. வங்கிப் பணம் திரும்பி வந்த விதம் வெகு அருமை! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா...  ஹர்ஷத் மேத்தாக்கள்!

      நீக்கு
    2. ஏற்கனவே வங்கி மேலாளர்கள் பதட்டத்தில் இருக்கிறார்கள். இதில் இப்படிப்பட்ட ஜோக்குகள் வேறா?

      நீக்கு
    3. ஒரு முறை ஶ்ரீரங்கம் இந்தியன் வங்கியில் ரூ.5000/-பணம் எடுத்த பொழுது ஒரு நோட்டு கள்ள நோட்டு என்பதை கண்டு பிடித்து என் கணவர் வங்கி மேலாளரிடம் தெரிவிக்க அதிர்ச்சியடைந்த அவர் வேறு நோட்டு மாற்றிக் கொடுத்தார்.

      நீக்கு
    4. என் வங்கியில் பணம் அப்போதே எடுத்து, மகனின் பள்ளிக்கட்டணத்தை அந்தப் பள்ளி கொடுத்த ஃபார்ம் நிரப்பி பணத்துடன் கொடுத்தேன். அது நான் பணம் எடுத்த கவுண்ட்டருக்கு அடுத்த கவுண்ட்டர் அவ்வளவுதான். ஆனால் அதில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று சொல்லி என்னைப் படுத்தினார்கள் பாருங்கள்.. நான் சொன்ன எதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டு என்னை விட்டார்கள்.

      நீக்கு
  19. மேலே நீங்கள் சொல்லி இருக்கும் எம்ஜார் படங்கள் எதையும் பார்க்கவில்லை (நல்லவேளையாக) என்று மிகுந்த மன மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கிறேன். நான் பார்த்த வெகு சில எம்ஜார் படங்களில் கலங்கரை விளக்கம், அன்பே வா!(தூர்தர்ஷன் தயவு), மதுரை வீரன் (தூர்தர்ஷன் தயவு) இவை 3 தான் நினைவில் உள்ளன. கலங்கரை விளக்கம் மட்டும் வேறே ஏதோ நல்ல படம் பார்க்கப் போயிட்டு அதுக்குக் கூட்டம் தாங்காமல் சென்ட்ரல் தியேட்டர் வந்து இதைப் பார்த்துட்டு வந்தோம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் எம் ஜி ஆர் படங்கள் சுவாரஸ்யமாய் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை 1

      நீக்கு
    2. //ஆனால் எம் ஜி ஆர் படங்கள் சுவாரஸ்யமாய் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை// 
      அப்படி எல்லோரும் சொல்கிறார்களே என்று ந....ம்.....பி ..... முந்தாநாள் ரகசிய போலீஸ் 115 உட்கார்ந்து பார்த்து நொந்து போனேன். அந்தப் படம் எப்படி ஓடியது? என்று ஆச்சர்யமாக இருக்கிறது. அழகான கதாநாயகி, அருமையான பாடல்களுக்காக ஓடியிருக்குமோ?  

      நீக்கு
    3. கீசா மேடத்தைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத்தவிர வேறு என்ன செய்வது? அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன் படங்கள்கூட பார்க்கவில்லையே. இரண்டு முதல்வர்களை திரையில் பார்க்கும் வாய்ப்பு கூட கிடைக்கலையே. ஐயோ பாவம்.

      அடிமைப்பெண் வந்தபோதெல்லாம் எம்ஜிஆருக்கு வெறித்தனமான ரசிகர் கூட்டம் இருந்தது. அவர் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட சமயம் (நான் 4-5வது படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன்). அப்போ அவர் வெற்றி பெறணும் என்று கிளாஸ் நண்பர்கள் பேசிக்குவாங்க. அவருடைய முதல் சின்னம் தாமரை என்று நினைவு (சின்னம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு).

      பூலான்குறிச்சி என்ற ஊரில் (பொன்னமராவதி அருகில். நா.கோ.செ நிரம்பிய ஊர். அவங்க வீடுல்லாம் கோட்டை மாதிரின்னு சொல்லித் தெரியவேண்டியதில்லை), கஞ்சித் தொட்டி திறப்பதற்காக, எம்ஜிஆரின் அண்ணன் சக்ரபாணி அவர்கள் மாலை 6 மணிக்கு வருவதாக நிகழ்ச்சி. அவர் வந்ததோ நடு இரவில். அவ்வளவு கூட்டம் எங்கள் பள்ளிக்கு முன்பிருந்த மைதானத்தில்.

      இப்போவும் அடிமைப்பெண் படத்தை ரசிக்கலாம்.

      சரி.சரி...எம்ஜிஆரைப் பற்றி நிறைய எழுதிடப்போகிறேன்.

      நீக்கு
    4. ... அழகான கதாநாயகி, அருமையான பாடல்களுக்காக ஓடியிருக்குமோ? //

      பின்னே வேறு எதற்காக எம்ஜிஆர் படங்கள் ஓடியதாக உங்களுக்கு எண்ணம்!

      நீக்கு
    5. எம் ஜி ஆர் படங்களை ரசிப்பவர்களுக்கு ரகசிய போலீஸ் 115 எல்லாம் ஜாலியான படங்கள்! நெல்லை சொல்லி இருக்கும் படல்கள் எல்லாம் சூப்பர்ஹிட் படங்கள்.

      நீக்கு
    6. எம் ஜி ஆரின் ரசிகர்கள் இன்றும் மாறாதிருக்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சர்யம் ஏகாந்தன் ஸார்.

      நீக்கு
    7. எனக்கு எம்ஜிஆர் படத்துக்கெல்லாம் பாஸ் கிடைச்சதில்லை நெல்லை. கலங்கரை விளக்கம் படம் அனுமதிச் சீட்டு வாங்கிப் போனதோடு மட்டுமில்லாமல் அப்பாவிடம் அனுமதி வாங்கவும் ரொம்பக் கஷ்டப்பட வேண்டி இருந்திருக்கும். நாங்க போக இருந்தது வேறே படம். அதற்குக் கூட்டம் அதிகம் என்பதால் அனுமதிச் சீட்டுக் கிடைக்கவில்லை. ஆகவே இந்தப் படம் போனோம். எல்லோருக்கும் என் அக்கா (பெரியப்பா பெண்) எச்சரிக்கை கொடுத்தார், சித்தப்பாவிடம் சொல்லக் கூடாது என! :)))) தொலைக்காட்சி தயவில் சந்திரோதயம் பார்த்த நினைவு. அதுகூட எங்க வீட்டில் பார்க்கலை. அண்ணா வீட்டிலோ என்னமோ பார்த்தேன். அங்கே எல்லோரும் திரைப்படங்களுக்கு முன்பதிவு செய்து கொண்டு நண்பர்களோடு சேர்ந்து போவார்கள், வருவார்கள். எனக்குப் பிறந்த வீட்டிலும் திரைப்படங்கள் பார்க்க அனுமதி கிட்டியதில்லை. கல்யாணம் ஆகி வந்த பின்னரும் திரைப்படங்கள் அதிகம் பார்த்ததில்லை. ராஜஸ்தான், ஜாம்நகரில் போனது தனி. ஏனெனில் அங்கெல்லாம் கிட்டத்தட்டப் பாஸ் மாதிரித்தான். பத்து ரூபாய் டிக்கெட் எனில் நாங்க ஒன்றரை ரூபாய் கொடுத்தால் போதும்.

      நீக்கு
    8. ஆனால் அங்கே பார்த்தவை எல்லாம் ஹிந்திப்படங்கள்! :)))) இஃகி, இஃகி,இஃகி!

      நீக்கு
    9. ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண்ணெல்லாம் பார்த்ததில்லை. பார்க்கும் ஆவலும் இருந்ததில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ஒலியும் ஒளியும் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் எம்ஜிஆர் படப்பாடல்கள் கேட்டிருக்கேன். பல திரைப்படப் பாடல்கள் ரேடியோ, தொலைக்காட்சி மூலமே அறிமுகம். படங்கள் மூலம் அல்ல.

      நீக்கு
    10. இன்னும் ஜிவாஜியின் "பாசமலர்" "பாலும் பழமும்" படங்களே நிலுவையில் உள்ளன! நீங்க வேறே எம்ஜார் படத்தை எல்லாம் பார்க்கலையானு கேட்டுக் கொண்டு இருக்கீங்க!

      நீக்கு
    11. //கீசா மேடத்தைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத்தவிர வேறு என்ன செய்வது?// ஹாஹாஹா, இப்படித் தான் என் கணவரின் அலுவலக நண்பர் ஒருவரின் மனைவி, வியட்நாம் வீடு படம் பற்றி ஏதோ சொல்லப் போக நான் அதைப் பார்க்கவில்லை என்று சொல்லவும் அவங்க முகம் போன போக்கு! இப்போ நினைத்தாலும் சிரிப்பு வரும். ரஜினி படங்களில் அண்ணாமலை, படையப்பா, ஐஸ்வர்யா ராயுடன் நடித்த ஏதோ ஒரு படம், இப்படிப் பல படங்கள்பார்த்ததில்லை. தொலைக்காட்சி தயவில் ஒரு சில படங்கள் பார்த்திருக்கேன். முள்ளும் மலரும், ராஜா சின்ன ரோஜா, மீனா குழந்தையாக நடித்த ஒரு படம் இப்படி! மற்றபடி திரைப்படங்கள் பார்க்கவில்லையே என்ற வருத்தமெல்லாம் கிடையாது. வாய்ப்புக் கிடைத்தால் நேரமும் அனுமதித்தால் பார்ப்பேன். இல்லைனா இல்லை தான்! இதில் பரிதாபப்படும் உங்களைப் பார்த்து எனக்குப் பரிதாபம் வருது! :)))))))) இதனால் வாழ்க்கையில் நான் எதையும் இழக்கவில்லை. அந்தக் கொஞ்ச நேர சந்தோஷம்! அது வேணா இல்லாமல் இருக்கலாம். ஆனால் சந்தோஷம் அடைய வேறு எத்தனையோ இருக்கின்றன.

      நீக்கு
    12. இதற்கு நெல்லை பதிலளிப்பாராக..

      நீக்கு
    13. //இதனால் வாழ்க்கையில் நான் எதையும் இழக்கவில்லை. அந்தக் கொஞ்ச நேர சந்தோஷம்!// - நினைத்தேன்.. என்னடா...இன்னும் சாமியாரிணியாகவில்லையே என்று. ஆயிட்டீங்க.

      நம் அடுத்த வாழ்க்கைக்குத் தேவையானவற்றை நாம் செய்யாமல் இருந்தால்தான், 'நம் நேரத்தை இழந்துவிட்டோமே' என்று வருத்தப்படணும். வேறு எதைப்பற்றியும் 'அடடா..இதனைச் செய்யலையே, இதனைப் பார்க்கலையே, படிக்கலையே' என்று வருத்தப்பட வாழ்க்கையில் எதுவுமே இல்லை. சிலர், சில எழுத்தாளர்கள் (பழைய) கதைகளைப் படிக்கவில்லையா..நீங்கள் ஏதோ ஒன்றை இழந்துவிட்டீர்கள் என்கிற அளவுக்கு பில்டப் கொடுப்பார்கள். அப்படி எதுவுமே கிடையாது. நிற்க...

      நான் சொல்லவந்தது... பல பாடாவதிப் படங்களைப் பார்த்து நேரத்தை வீணாக்கிய (மற்றும் அதற்கு விமர்சனம் எழுதி எங்களை நொந்துபோக வைத்த - ஹா ஹா ஹா) நீங்கள், அந்த நேரத்தில் இந்த உருப்படியான பொழுதுபோக்குச் சித்திரங்களைப் பார்த்திருக்கலாமே என்பதைத்தான்.

      நீக்கு
    14. படங்கள் பார்ப்பது என்பது கிட்டத்தட்ட நம்முடைய டீன் ஏஜ் தொடங்கி, நாம் பெற்ற குழந்தைகளுக்கு டீன் ஏஜ் வரும்வரை நடக்கலாம். அந்தக் கால கட்டத்தில் பிரபலமாக இருக்கின்ற இரண்டு மூன்று கதாநாயக நடிகர்களுக்குள் ஏதேனும் ஒருவரின் படத்தை ஆர்வத்துடன் பார்ப்போம். அப்புறம் எதிலும் அவ்வளவு ஈர்ப்பு இருக்காது.

      நீக்கு
    15. நான் பிறப்பதற்கு முன்பே கல்கியில் வெளிவரத்துவங்கிய பொன்னியின் செல்வன் கதையை, நான் வேலை பார்க்க ஆரம்பித்த வருடம் வரைப் படித்ததில்லை. எப்பவோ உறவினர்கள் கூட்டத்தில் உரையாடிக்கொண்டிருந்தபோது, பொன்னியின் செல்வன் பற்றி பேச்சு வந்தது. 'நான் படித்ததில்லை' என்றேன். என்னுடன் பேசிக்கொண்டிருந்த ஒரு உறவினர் " சந்தர்ப்பம் கிடைத்தால் படி. மிஸ் பண்ணிவிடாதே. அப்போதான் உனக்கு இந்த அற்புதமான அனுபவத்தை இவ்வளவு நாட்கள் தவறவிட்டுவிட்டோமே என்று தெரிய வரும் என்றார். வீட்டில் பெரிய அண்ணன் ஒரு அலமாரி நிறைய பத்திரிகை கதைகள் பைண்டிங் வைத்திருந்தார். ஒரே வாரத்தில் பொன்னியின் செல்வன் முழுவதையும் படித்து முடித்தேன். அவர்கள் சொன்னது எல்லாமே நூற்றுக்கு நூறு சரி என்று தெரிந்துகொண்டேன்.

      நீக்கு
    16. நான் தேர்ந்தெடுத்துத் தான் படங்கள் பார்ப்பேன் நெல்லை. அவை உங்களுக்குச் சிறப்பான படங்களாக இல்லாமல் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை ஓர் திரைப்படத்துக்கு உள்ள தகுதிகள் கொண்ட படமாக இருக்கும் அவை எல்லாம். நான் ரசிக்கும் நடிகர்களில் அமிதாப், நஸ்ருதீன் ஷா, நானா படேகர், ஸ்மிதா படீல், ஷபனா அஸ்மி, தபு, ஊர்மிளா ஆகியோர் உண்டு. ஊர்மிளாவின் "பனாரஸ்" படத்தைப் பார்த்துவிட்டு, இன்னொரு படம், பஞ்சாபி கதை,ஓர் இந்துப்பெண்ணாக வருவார். திருமணம் நிச்சயம் ஆகி இருக்கும், அவரைப் பாகிஸ்தானுக்குக் கடத்திச் சென்று கட்டாயக் கல்யாணம் ஓர் முஸல்மானுடன் செய்து வைத்துவிடுவார்கள். அதில் அவர் நடிப்பு அபாரமாக இருக்கும். பாகிஸ்தான் முஸ்லீமாக நடித்தவர் விக்ரம் கோகலே! அதே சமயம் இந்தியாவின் அவர் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையாக நடித்தவர் ஓர் முஸ்லீம் நடிகர். எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். அதில் வரும் "Bhidhayi!" பிதாயி பாடல் கேட்கும்போதே கண்ணீர் வரும்.

      நீக்கு
    17. பொழுதுபோக்கிற்காகச் சில படங்கள் பார்க்கலாம். ஆனால் அதில் என்னைப் பொறுத்தவரை எம்ஜிஆர் படங்கள் எல்லாம் வந்ததில்லை.

      நீக்கு
  20. பல்லிடுக்கில் பாக்கு நிகழ்வுகள் எத்தனை....!

    இரு படங்களும் மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..   ஹா...  ஹா...   தேடிப்பார்த்தால் இன்னும் கூடக் கிடைக்கலாம்!

      நன்றி DD.

      நீக்கு
  21. மாம்பழம், கொய்யாப்பழம் பற்றிச் சொன்னீர்கள். சாத்துக்குடியை மறந்துவிட்டீர்களே! அது பல்லில் சிக்கிக் கொண்டால் எப்படியிருக்கும் என்று அனுபவித்துத்தான் பாருங்களேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...    அதையும் சேர்த்திருக்கலாம்தான்!  நன்றி செல்லப்பா ஸார்.

      நீக்கு
  22. பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட பாக்கும், நினைவடுக்குகளில் மாட்டிக்கொண்ட பெயர்களும் அளிக்கும் அவஸ்தை கஷ்டம்தான். சமீபத்தில் அப்படி அவஸ்தை அளித்த பெயர் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையின் பெயர். அவர் ஒரு போலீஸ் அதிகாரி. பெயர் என்ன பெயர் என்ன? என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். பெப்பெர்ஸ் டி.வி.யில் படித்ததில் பிடித்தது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போதுதான் ஞாபகம் வந்தது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... அவர் போலீஸ் அதிகாரியின் மகனா? சரி, ஆனால் அவர் பெயரை நீங்கள் சொல்லவில்லையே...

      நீக்கு
    2. இந்த விஷாலும் நடிகர் சங்கத்தலைவர் விஷாலும் ஒருவரே தானே? நேற்றுக் கூட தினமலரில் விஷ்ணு விஷால் என்னும் பெயரில் ஏதோ செய்தி வெளியிட்டிருந்தார்கள். நான் கவனித்துப் படிக்கவில்லை.

      நீக்கு
    3. விஷால் வேறு...   விஷ்ணு விஷால் வேறு.    விஷால் நான் மதுரைக்காரன்டா என்று அலறுவார்.  பாய்ந்து பாய்ந்து அடிப்பார்!  விஷ்ணு விஷால் சைக்கோ படத்தில் நடித்தவர்.  வெண்ணிலா கபடிக்குழுவிலும் அவர்தான்!

      நீக்கு
  23. சூரியோதய காட்சி மாதவன் வரைந்த ஓவியம் போலவே இருந்தது.. எத்தனை கலர்த் திட்டுகள் பாருங்கள். அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதவனா ஆதவனா ஜீவி ஸார்?

      நீக்கு
    2. மாதவன் தான் ஓவியர். நாகர்கோவில்காரரோ? ஏனோ அவர் ஓவியங்கள் எனக்குக் கேரளத்தை நினைவூட்டும். ஆதவன் எழுத்தாளர். சிருங்கேரியில் துங்கபத்ராவில் குளிக்கையில் வேகத்தோடு இழுத்துச் செல்லப்பட்டார். :( அவரும் நெல்லைக்காரரே!

      நீக்கு
    3. நான்ஆதவன் என்று குறிப்பிட்டது சூரியனை!

      நீக்கு
  24. எந்த ஒரு செய்தியிலு ம் ஒவ்வொருவருக்கு ஓரோர் அனுபவமிருக்கும்சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களில் பி எச் டி செய்யும் அளவுக்குநம் வாசகர்களிருக்கிறார்க்ச்ள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக எல்லோருக்கும் எல்லாவற்றிலும் அனுபவம் இருக்கும். அதுதான் படிப்பவர்களை சுவாரஸ்யப்படுத்தும், ஒன்ற வைக்கும்.

      சினிமா 90% மக்களைக் கவரும் விஷயம்தானே GMB ஸார்...

      நீக்கு
  25. கதம்ப பதிவு அருமை.

    பாக்கைக் கூட சுலபமாக எடுக்கலாம். கொய்யா விதை ரொம்பக் கஷ்டமுங்க...//

    ஆமாம்.

    சொலவடை சொலபோண்டா ஆனது சிரிப்பு.

    "தில்லை அம்பல நடராஜா... பாடல் மிக இனிமையாக இருக்கும் பிடித்த பாடல்.

    மற்ற செய்திகளை படித்தேன். பழைய வீட்டில் எடுத்த சூரியோதய காட்சி அருமை.




    பதிலளிநீக்கு
  26. வழக்கு எண் படத்தை இயக்கியது பாலாஜி சக்திவேல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்தனை பதில்களும் அருமை.
      கேவா கலர் ஒரு கலர் இல்லையோ?
      வண்ணம் பற்றி அதிகம். விளம்பரத்தில் முற்றிலும் கேவா
      வண்ணத்தில் எடுக்கப்பட்டது என்று வந்த நினைவு.
      ரகசியப் போலீஸ் 115 பாட்டுக்கள் அருமை. எம்ஜீஆர் படங்களை
      லகுவாகப் பார்க்கலாம்.டென்ஷனே இருக்காது.
      கதா நாயகிகள் மாவாகப் பிசையப் படுவார்கள்.
      கொஞ்சம் அருவருப்பாக இருக்கும்.
      பின்னாள் சிவாஜி படங்களையும் சேர்த்தே சொல்கிறேன்.

      நீக்கு
    2. அப்போ அதை லிஸ்ட்லேருந்து நீக்கிடலாம்!

      நீக்கு
    3. ஆமாம் வல்லிம்மா.. நீங்கள் சொல்வது உண்மை.

      நீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    தேவா பற்றிய செய்தி நெகிழ்வூட்டியது. பிரபலங்கள் முன்னுக்கு வந்து இப்படி நெகிழ்ச்சியுடன் கூறும் போதுதான் அவர்களும் கஸ்டங்களெனும் பாதாள படிகள் ஏறி வந்திருக்கிறார்கள் என உணருகிறோம்.

    பேங்க் கதை நல்ல தமாஷ். பிரிண்டிங் மிஷினுக்கு லோன் வாங்கிய நபர் உடனே மொத்த பணத்தையும் ரீ பே பண்ணியவுடன் பாங்க் மானேஜருக்கு சந்தேகம் வர வேண்டாமோ ? ஹா. ஹா. ஹா. ஆனால், கொஞ்சம் நாட்களுக்கு முன்பு நாங்கள் ஒரு கடையில் கொடுத்த 100 ரூபாய் நோட்டு செல்லாது என அவர் திருப்பி கொடுத்தவுடன் அதிர்ச்சியானோம். இப்போது அந்த விஷயம் உண்மைதானோ என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது. ஹா.ஹா.ஹா.

    ப.சி.பா (பல்லில் சிக்கிய பாக்கு) இன்னுமா யோசிக்கிறீர்கள்? சந்திரோதயம் என குறிப்பிட்டது மக்கள் திலகத்தைதான். கலர் படங்கள் அனைத்திலும் எம்.ஜி.ஆர் வரிசை கட்டி வந்திருப்பதை குறிப்பிட்டு சொன்ன செய்தியில், அவர் படமும் இறுதியில் இருந்ததை கண்டவுடன் , சூரியோதயதத்தின் அழகுக்கு நிகராக ராமச்"சந்திரனின் " சந்திரோயதமாக அவர் படமும் பதிவில் வந்துள்ளது என குறிப்பிட அவ்வாறு கூறினேன். அவரின் வண்ணப் படங்களின் வரிசை இப்போதுதான் படித்தேன். ஆச்சரியம்தான்..

    தில்லானா திமிர்..டாக்ஸி டாக்ஸி என்று ஒரு பாட்டு பிரபுவும், ரஞ்சிதாவும் சேர்ந்து பாடுவதாக வரும் அதுவா?

    சூரியோதய படங்கள் இரண்டும் இப்போதும் ரசித்தேன். அழகாக வந்துள்ளது. (படங்கள்)
    கதம்பம் நன்றாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்கா ரசித்துப் படித்த பின் அதை விவரித்து நீங்கள் இடும் பின்னூட்டங்கள் சுவாரஸ்யம்.

      பசிபா பற்றி அசட்டுப் புன்னகையுடன் விவரம் அறிந்துகொண்டேன். அந்த பாரா முழுவதுரம் உங்கள் கற்பனையும் ரசனையும் பிரமிக்க வைக்கிறது.

      நன்றி அக்கா.

      நீக்கு
    2. நன்றி. ஒரு படத்தின் பாடல்களை எந்த இடத்தில் ஆரம்பித்தாலும்,அந்தப் பாடலைப் பற்றியும், அப்படத்தில் நடித்திருப்பவர்கள் பற்றியும், (பழைய. புதிய பெயர்கள்/பேர்களாக இருப்பினும்) அந்தப்பாடலின் ராகங்களையும் சட்டென நினைவு கொண்டு நீங்கள் சொல்லுவது எனக்கும் பிரமிப்பாகத்தான் உள்ளது. அசாத்திய திறன் அது. இதோ.. நானை வெள்ளி முளைக்கும் முன் வரும் வெள்ளித்திரை பாடல்களை எதிர்பார்க்கும் அளவுக்கு வெள்ளியின் சிறப்பு வியக்க வைக்கிறது. இப்போதெல்லாம் கிழமைகளை விடியலில் எங்கள் ப்ளாக் காலண்டரில் தான் நான் அறிந்து கொள்கிறேன்.(இந்த வருட தமிழ் காலண்டரும் எங்களுக்கு இதுவரை கிடைக்கவேயில்லை. சார்வரி பஞ்சாங்கமும் இதுவரை வாங்க முடியவில்லை.) நன்றி.

      நீக்கு
    3. ஹா... ஹா... ஹா... நன்றி கமலா அக்கா.

      நண்பர் சுகுமார் உதவியால் எனக்கு பாம்புப் பஞ்சாங்கம் உட்பட இரண்டு பஞ்சாங்கங்கள் கைக்கு வந்து விட்டன.

      நீக்கு
    4. கமலா சொல்லி இருக்கும் பாடல்களை எல்லாம் நான் கேட்டதே இல்லை. வாய்ப்பும் கிடைக்கவில்லை. என் மருமகள் போடும் பாட்டுக்கள் வரிசையில் ஒரு பாடல், "செந்தூரா" என ஆரம்பித்து வரும். குட்டிக் குஞ்சுலுவுக்கு அதன் ராகம் ரொம்பப் பிடிக்கும். எங்கே இருந்தாலும் ஓடி வந்துவிடும். கூடவே அதுவும் ஆடும்.

      நீக்கு
    5. ஸ்ரீரங்கம் வந்த பின்னர் தினசரிக் காலண்டர்களையும், மாதாந்தரிகளையும் என்ன செய்வது என்றே தெரியாமல் வருகின்றன. பஞ்சாங்கம் எப்போவுமே நாங்க தை மாதமே பாம்புப் பஞ்சாங்கம் கடைகளில் வந்ததும் நாள் பார்த்து வாங்கிவிடுவோம். அதன் பின்னர் வைதிகஸ்ரீ இன்னும் சில பஞ்சாங்கங்கள் வரும்.

      நீக்கு
    6. நான் காலண்டர்களை நிறையவே குறைத்து விட்டேன். ஒரு தினசரி, ஒரு மாதாந்திரி.

      நீக்கு
    7. வணக்கம் சகோதரி

      எனக்கு அப்படியெல்லாம் பாடல்களை தெரிந்து கொள்ளும் சக்தி கிடையாது. பழைய பாடல் என்றால் ஏதோ சட்டென எப்போதாவது நினைவுக்கு வரும். இப்போது பத்து ஆண்டுகளாக வந்த பாடல்கள் சுத்தம்....ஒன்றுமே தெரியாது.

      திருமங்கலத்தில் இருந்த வரை தினசரி காலண்டர்களுக்கு பஞ்சமில்லை. (ஆணி அடிக்க இயலாது என்பதினால் ஆங்காங்கே சுவரில் அதன் முதுகை சாய்த்து ஆசுவாசபடுத்தி அமர வைப்போம்.ஏதோ ஒன்று மட்டும் எட்டிய தூரத்தில் கதவுகளில் தற்கொலை செய்து கொண்ட மாதிரி கயிற்றில் தொங்கும். ) பஞ்சாங்கமும் வந்தவுடன் வாங்கி விடுவோம்.

      இங்கு வந்தும் வருடாவருடம் பாம்பு பஞ்சாங்கம் உடனடியாக வாங்கி விடுவோம். தமிழ் தினசரி காலண்டரும் கிடைக்கும். சென்னை போகிற மாதிரி சந்தர்ப்பம் அமைந்தால் முன் கூட்டியே வாங்கி வந்து விடுவோம். இந்த வைரஸ் பீதியில் வெளியில் செல்லாமல் இந்த தடவை மிஸ் ஆகி விட்டது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  28. அவ்வளவு சுலபமாக எம்ஜார் படம் பார்ப்பதற்கு அனுமதி கிடைக்காது வீட்டில்...

    திடீரென கொட்டகைக்குள் விசிலடிச்சான் குஞ்சுகளின் சத்தங்கள்.. ரகளைகள்.
    மாங்கா திருடித் தின்கிற பெண்ணே... என்பது மாதிரியான காட்சியமைப்புகள்...

    ஊர்ல உள்ள பெண்கள் எல்லாம் வழக்கமாக சேலைகட்டியிருக்க
    கசாநாயகி (ஜி!)மட்டும் சேலையை வரிஞ்சு கட்டிக்கிட்டு மாடு புடிக்கப் போறவ மாதிரி வருவா...

    நம்நாடு படத்தில் சில பாடல் காட்சிகள் சரியில்லை என்று அன்றைக்கே பேசிக் கொண்டார்கள்...
    எளனி விக்கும் பாட்டுக் கூட அந்த ரகம் தான்...

    அந்தப் படத்தையும் சில ஆண்டுகளுக்கு முன் தான் பார்த்தேன்..

    சனி, ஞாயிறு மட்டும் என்றிருந்த காலைக் காட்சிகளை
    எல்லா நாட்களும் நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்தது யாருடைய ஆட்சியில்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை செல்வராஜு ஸார். நீங்கள் சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை. இதுபோன்ற எம்ஜிஆர் கதாநாயகிகள் ரிக்‌ஷாக்காரன் உசுவா முதல் நாளை நமதே வரை சகஜம்!

      நம்நாடு படத்தின் இந்திப் பதிப்புப் பார்த்திருக்கிறீர்களோ? அப்னாதேஷ்.

      நீக்கு
    2. துரை சொல்லி இருப்பது சரி. நான் சொல்லத் தயங்கினேன். ஏனெனில் ஏகப்பட்ட எம்ஜார் ரசிகர்கள். இந்தக் காரணங்களால் தான் அப்பா அனுப்பவே மாட்டார். பாஸ் வாங்கிப் பார்க்கும் படங்களும் திரை அரங்கை விட்டு எடுக்கப் போகும் முன்னர் தான். அப்போத் தான் திரை அரங்குகளில் கூட்டம் இருக்காது. காதலிக்க நேரமில்லை படமெல்லாம் "இன்றே கடைசி" என்று போட்ட அன்றுதான் மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் போய்ப் பார்த்தோம். அப்பா, தம்பி எல்லாம் பார்த்துட்டாங்க. அண்ணாவுக்கு எப்போவுமே இதெல்லாம் பார்க்கத் தடை இல்லை. அதோடு அப்போ வேலைக்கும் போய்விட்டார்.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. காதலிக்க நேரமில்லை கடைசி நாளில்தான் பார்த்தீர்களா? ஆ...

      நீக்கு
  29. பல நேரங்களில் முயற்சிகள் கூட தோற்று போகலாம். ஆனால், விடாமுயற்சி என்றுமே தோற்றுப்போவதில்லை .. வெற்றியை சந்தித்தே தீரும் என்பதற்கு தேவாவின் வாழ்க்கையும் ஒரு நல்ல உதாரணம் ...

    பதிலளிநீக்கு
  30. எம்ஜிஆர் படங்களில் ரிக்சாக்காரன் மட்டும் பார்த்திருக்கிறேன். சூரிய உதயம் அழகு.

    பதிலளிநீக்கு
  31. பல்லிடுக்கில் பாக்கு - ஸ்வாரஸ்யம். நினைவுக்கு வராமல் படுத்தும் விஷயத்தினை தெரிந்து கொள்ளும் வரை திண்டாட்டம் தான்.

    கடைசி இரண்டு படங்கள் செம!

    ஸ்வாரஸ்யமான தொகுப்பு. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!