திங்கள், 6 ஜூலை, 2020

"திங்க"க்கிழமை  :  கார்ன் ஆன் டோஸ்ட் -  ரமா ஸ்ரீநிவாசன் ரெஸிப்பி 

கார்ன் ஆன் டோஸ்ட்
ரமா ஸ்ரீநிவாசன்

நாங்கள் நுங்கம்பாக்கத்தில் குடியிருப்பதால், வெளியில் சென்று சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்தால், உடனே ஹாரிஸன் ஹோட்டலில் உள்ள “ஈடன்” ரெஸ்டாரண்ட்தான் நினைவுக்கு வரும். நாங்கள் யாவரும் விரும்பி உண்ணும் ஒவ்வொரு சிற்றுண்டியும் அங்குள்ள எல்லா பணியாளர்களுக்கும் தெரியும் என்றால் நாங்கள் எவ்வளவு சுவைத்து உண்ணும் குடும்பம் என்று பாருங்கள்!

எப்போது அங்கு சென்றாலும் என் இரு பெண்களும் இந்த கார்ன் ஆன்
டோஸ்ட் ஆர்டர் செய்து விடுவார்கள். நாங்களும் ஒரு வாய் ருசிப்பதற்காக சாப்பிட்டு பார்ப்போம். அபாரமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் அபாரம்.

இது எங்கள் “மிகப் பிடித்த” ஐட்டமும் ஆகிவிட்டது. இப்போது இதன்
செய்முறையைக் கீழே விளக்கியுள்ளேன்.

வேண்டிய பொருட்கள் :
ஸாசிற்கு :
வெண்ணெய் : 1 டீஸ்பூன்
பால் : 1 கப்
சீஸ் : 2 – 4 டீஸ்பூன்கள் (சீவப் பட்டது)
"ஆல் பர்ப்பஸ் மாவு" அல்லது "மைதா மாவு"
உப்பு : தேவைக்கேற்ப (1 சிட்டிகை)
மிளகு : 1 சிட்டிகை (பொடி செய்யப்பட்டது)

கார்ன் கலவைக்கு :
கார்ன் மணிகள் : ½ கப் (குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்)
எண்ணெய் : ½ டீஸ்பூன்
வெங்காயம், தக்காளி : 1 கப் (பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்)
மிளகாய் பொடி : ½ டீஸ்பூன்
கஸூரி மேத்தி : ¼ டீஸ்பூன்

செய்முறை :

1. முதலில் வெண்ணெயை பேனில் போட்டு சிறிது உருகிய பின்னர், சிறிது “ஆல் பர்பஸ் ஃப்ளவர்” அல்லது மைதா மாவை சேர்த்து நன்றாக மாவும் வெண்ணெயும் ஒன்று சேரும்வரை கிளறவும்.

2. இப்போது, கேஸ் ஸ்டவ்வை 'சிம்'மில் வைத்து, மெதுவாக பாலை
சேர்க்கவும்.  கை விடாமல் கிளறி கட்டி தட்டாமல் பார்த்து கொள்ளவும்.

3. இப்போது, சீஸை சேர்க்கவும். அது நன்றாக உருகி கலவையுடன் கலந்துவிடும்.

4. இதனுடன் உப்பையும் மிளகுப் பொடியையும் சேர்த்து அடுப்பிலிருந்து
இறக்கி தனியாக வைக்கவும்.

5. வேறொரு பேனில் எண்ணெய் விட்டு, மிளகாய்ப் பொடி, வெங்காயம்,
தக்காளித் துண்டுகளை நன்றாக வதக்கவும்.

6. ஒரு நிமிடத்திற்குப் பிறகு, வேக வைத்த சோள மணிகளை இவற்றுடன்
சேர்க்கவும்.

7. பேனை மூடி நன்றாக 4 அல்லது 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

8. இப்போது, இந்த சோள விழுதை வெள்ளை ஸாசுடன் சேர்க்கவும்.



பின்னர், தேவையான ஹோல் வீட் ப்ரெட் ஸ்லைஸ்களை வெண்ணெயோ நெய்யோ விட்டு டோஸ்ட் செய்த பின்னர், அந்த கலந்த வெள்ளை ஸாசை அதன் மீது ஊற்றி நன்றாக ஸ்லைஸ் முழுக்க பரப்பவும். இதன் மேல் லேசாக கஸூரி மேத்தியைத் தூவி, சுடச் சுட பரிமாறவும். மிக அம்சமாக இருக்கும்.



எங்கள் வீட்டில் ஆல் பர்பஸ் ஃப்ளவர்” அல்லது மைதா இல்லாததால், நான் சிறிதளவு கோதுமை மாவு உபயோகித்தேன். அதனால் வர்ணம் மாறுபட்டு இருக்கின்றது. மைதா உபயோகித்தால், கீழேயுள்ளது போல் இருக்கும்.

74 கருத்துகள்:

  1. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்...

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்....

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஶ்ரீராம் துரை. வளமுடன் வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு ரமா ஶ்ரீநிவாசனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். என்றும் நலம் வளம் பெற்று இனிதே வாழ ஆசிகள்.!,!!!

    பதிலளிநீக்கு
  5. கார்ன் ஆன் டோஸ்ட். இது வரை சாப்பிட்டதில்லை. இனிமேலும் சாப்பிட ஆட்சேபணை இல்லை.:)
    வெள்ளை ஸாஸ் செய்முறை பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  6. மக்காச்சோளம் + வெள்ளை ஸாஸ் சேர்த்து செய்யும் அழகு அருமை. இரண்டு துண்டகள் சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும். நன்றி ரமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வல்லி மாமி. இரவு நேரங்களில் இரண்டு துண்டுகள் டின்னருக்கு போதுமானதாக இருக்கும். மிக சத்துமிக்கதும் கூட. உங்கள் வாழ்த்துக்களை வீட ஆசிகளை மகிழ்ந்து பெறுகின்றேன்.

      நீக்கு
  7. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரமா ஸ்ரீநிவாசன்.

    பதிலளிநீக்கு
  8. இன்று என்ன பாயசம் செய்யப் போகிறீர்கள் என்றும் குறிப்பிடவும்... குடும்பமும் நீங்களும் சிறப்புடன் இருக்க
    வாழ்த்துகள.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம்/நல்வரவு/வாழ்த்துகள்/பிரார்த்தனைகள். நேற்று சுகாதாரத்துறைச் செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் கொரோனா குறைந்து வருவதாகச் சொல்லி இருக்கார். அது உண்மையாக இருக்கப் பிரார்த்திப்போம். இனி வரும் நாட்களில் கொரோனா முற்றிலும் அழியவும் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது!

      நீக்கு
    2. என்ன கேஜிஜி சார்... ஒரு வாரமாவே வானம் ஒரே மேகமூட்டமா இருக்கு. உங்களுக்கு மட்டும் ஒளிமயமான எதிர்காலம் தெரியறதுன்னு சொல்றீங்களே. இனி ஒளிமயமான எதிர்காலத்துக்கு நாம ஃபெப்ரவரி வரை காத்திருக்கவேண்டாமா?

      நீக்கு
    3. அது நமக்கு. நம்மைப்போன்ற 'வில்'லர்களுக்கு மட்டுமே !

      நீக்கு
  10. ரமா ஸ்ரீநிவாசனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அவருக்கும் அறுபது என நம்புகிறேன். இந்த இனிய பிறந்தநாளில் வாழ்க்கையில் எல்லா நலங்களும் பெற்று சந்தோஷமாக வாழவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. மேலே உள்ள சமையல் குறிப்பில் வெள்ளை சாஸ் செய்முறையில் "ஆல் பர்ப்பஸ் மாவு" அல்லது "மைதா மாவு" குறிப்பிட விட்டுப் போயிருக்கு. அதைச் சேர்த்துவிடவும். வெள்ளை சாஸ் செய்ய அது தான் முக்கியமானது. வெண்ணெயில் மாவைச் சேர்த்து பிஸ்கட் வாசம் வரும் வரை வறுத்துப் பின்னர் பாலைச் சேர்க்கவேண்டும். என்னிடம் முன்பெல்லாம் இந்த சாஸ் எப்போவும் தயாராக இருக்கும். இப்போல்லாம் செய்து வைச்சுக்கறதில்லை. சூப்பில் சேர்க்க இந்த சாஸ் மிகவும் பயன்படும். இப்போச் சாப்பிடும் முருங்கைக்கீரை சூப் ப்ளெயினாகவே குடிச்சுடறோம். வெண்ணெய் மட்டும் கொஞ்சம் சேர்ப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை எப்படி சேர்ப்பது? எனக்கு தெரியாதே.

      நீக்கு
    2. வேண்டிய பொருட்கள் லிஸ்டில் சேர்க்கச் சொன்னீர்களா! எனக்கு சரியாகப் புரியாததால், சேர்க்காமல் இருந்தேன். செய்முறையில் ஏற்கெனவே 'ஆ ப மா, மை மா' வருகிறதே என்று நினைத்துக்கொண்டேன். இப்போதான் புரிந்தது லிஸ்டில் சேர்க்கச் சொன்னீர்கள் என்று. சேர்த்துவிட்டேன்.

      நீக்கு
    3. ஹாஹாஹாஹா, பார்த்தேன்! :)))))

      நீக்கு
    4. செய்து பார்க்க (சாப்பிட) தோன்றும் ரெசிபி

      நீக்கு
  12. இந்த வாரம் நன்கு அறிந்த செய்முறை தான். சோளத்தைத் தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கிக் காரப்பொடி, கொத்துமல்லிப் பொடி, கரம் மசாலா சேர்த்துக் கொண்டு சீஸைத்துருவிச் சேர்த்துப் பச்சைக்கொத்துமல்லி சேர்த்து அப்படியே சாப்பிடலாம். அல்லது சப்பாத்திக்கும் தொட்டுக்கலாம். சோள மணிகள் நன்கு வெந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. இன்றைய ரெசிஃபி வித்தியாசமாக உள்ளது... ரமா ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டி.டி. சார், மிக்க நன்றி. சாப்பிட்டு பாருங்கள் சார். மிதமான ருசியுடன் அம்ஸமாக இருக்கும்

      நீக்கு
  14. வழக்கம் போல் மின் நிலா அருமை. பக்கங்கள் 29,31, 53 ஆகியவற்றில் நிறையவே இடைவெளி. படங்கள் அழகாக அமைந்துவிட்டன. உங்களுடன் நெருங்கிப் பழகி இப்போது நீங்கள் என்றென்றைக்குமாக இழந்துவிட்டவர் யார்? தெரியலை. கேஜியின் பள்ளி அனுபவங்கள் சுவையானவை. உலக மஹா யுத்தக்காலமோ? இறகுப் பேனா பற்றி எல்லாம் சொல்லி இருக்காரே! முதல் இதழிலேயே நான் எதிர்பார்த்தபடித் தலைப்பில் சுட்டினால் அந்தப் பதிவுக்குப் போவதைக் கொண்டு வந்ததுக்கு மிக்க நன்றி. நாளுக்கு நாள்/சேச்சே/வாரத்துக்கு வாரம் மெருகேறிக் கொண்டிருக்கிறது நிலா பிரகாசமான இதமான ஒளி. அறிமுகப்பதிவில் பானுமதி அழகாய் எல்லா விஷயங்களையும் தொட்டு அதிகம் வளவளவென இல்லாமல் எழுதி இருக்கார். நினைவாய் எல்லோரையும் குறிப்பிட்டிருக்கார். என்னையும் குறிப்பிட்டதுக்கு நன்றி. மொத்தத்தில் பௌர்ணமி நிலா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்கம் 29, 31 & 53 எல்லாம், பொருளடக்கம் திரும்ப கொண்டு செல்லும் சுட்டி இணைக்கப்பட்டதால், gap தவிர்க்க இயலாமல் போய்விட்டது. அடுத்தடுத்த இதழ்களில், குறைகளைக் களைய ஆவன செய்கிறேன். நன்றி.

      நீக்கு
  15. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramah Srinivsan : 6 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 9:37
      நன்றி கமலா.

      (கீழே உள்ள நன்றி அறிவிப்பு இங்கே வந்திருக்க வேண்டியது.)

      நீக்கு
  16. ரமா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வாழ்க பல்லாண்டுகள்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கப் பதிவில், சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் செய்முறையான கார்ன் ஆன் டோஸ்ட் நன்றாக உள்ளது. படங்களும், செய்முறைகளும் இப்படி ஒருநாள் செய்து பார்க்கத் தூண்டுகிறது. பாராட்டுக்கள் சகோதரி.

    இது போல் கார்ன் சேர்த்து இதுவரை செய்ததில்லை. இனி அதையும் சேர்த்து செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் சிறப்பாக வாழ இறைவனிடம் மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமா ஶ்ரீநிவாசனின் நன்றி அறிவிப்பு இங்கே வந்திருக்கணும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எடுத்துப் போட்டவரும் தப்பாய்ப் போட்டிருக்கார். :))))))

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      யார் அந்த பெயரில்லா மர்ம மனிதர். ஹா. ஹா.அவரும் தப்பாகவே போட்டிருப்பதை நானும் அப்போதே கவனித்தேன். சரி.. போட்டதை திருத்தம் வருகிற மாதிரி சொல்ல வேண்டாம் என விட்டு விட்டேன். ஆனால், "நீதி தேவதையாய்" (சகோதரி அதிரா பார்த்தால் பொய்....ங்கப் போகிறார். எனக்கு போட்டியாய் ஒரு பட்டமா என்று... ஹா.ஹா.ஹா.) வந்த தங்களுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  18. வித்தியாசமான செய்முறை. பசங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ப்ரெட்டுக்கும் கஸூரி மேத்திக்கும் ஏற்பாடு செய்துவிட்டுச் செய்கிறேன்.

    ஒயிட் சாஸ் எவ்வளவு நாட்கள் இருக்கும்?(ஃப்ரிட்ஜில் வைத்தால்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அப்பப்பொழுது கார்ன் ஆன் டோஸ்ட் செய்யும்போது சாஸ் செய்து கொள்வேன். வீட்டு பெரியவர்கள் ஃப்ரிட்ஜில் வைக்க விட மாட்டார்கள்.

      நீக்கு
    2. வெள்ளை சாஸ் செய்து சுமார் 3 மாதம் வரை வைச்சுக்கலாம். மேலே நீர்த்துக்கொண்டு வர ஆரம்பித்தால் கண்ணை மூடிக்கொண்டு கொட்டிவிட வேண்டும். எங்க வீட்டில் ஒரு மாதம் இருந்தாலே ஜாஸ்தி அப்போவெல்லாம்! :)))))))

      நீக்கு
    3. வொயிர் சாஸ் பத்தி சொல்ல வ்னததை எல்லாம் கீதாக்கா சொல்லிட்டாங்க!!!!

      நெல்லை இதுல இட்டாலியன் ஃப்ளேவர் வேண்டும்னா கொஞ்சம் வெள்ளை மிளகுத்தூள், இட்டாலியன் ஸ்பைஸஸ் தூவிக் கொடுங்க உங்க பொண்ணுக்கு ரொம்பப் பிடிச்சுப் போகும்!!

      கீதா

      நீக்கு
    4. // வெள்ளை மிளகுத்தூள், இட்டாலியன் ஸ்பைஸஸ் தூவிக் கொடுங்க// - ஹா ஹா. அது ஐயங்கார் வீட்டில் ஆம்பூர் வெஜிடபிள் பிரியாணி செய்ய முயல்வதைப்போல பல்லிளித்துவிடும்.

      நீக்கு
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஜூலை ஆரம்பத்தில் பிறந்தவர்கள் நிறைய இருக்கிறார்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி சார். பெரிய மனிதர்கள் யாவரும் ஜூலையில் பிறந்தவர்கள் நெல்லை சார்.

      நீக்கு
    2. இந்திரா காந்தியும், நேருவும், நானும் (ஹா ஹா ஹா) பெரிய மனிதர்கள் இல்லைனு சொல்றீங்களா ரமா ஸ்ரீநிவாசன்?

      நீக்கு
    3. நானும் ஜூலையில் பிறக்கவில்லை!

      நீக்கு
    4. ரஷ்ய சக்ரவர்த்தி நிகோலாஸ்-1, ஜப்பானிய சக்ரவர்த்தி சுடோகு, ஜூலியஸ் சீஸர், இளவரசி டயானா, சீக்கிய 6-ஆவது குரு ஹர்கோவிந்த், தலாய் லாமா, பாலகங்காதர் திலக், ப்ரேம் சந்த் ஆகியவர்களோடு, ஜே.ஆ.ர்டி. டாடா, அஸீம் ப்ரேம்ஜி போன்றவர்களும் ஜூலையில் பிறந்துவிட்ட சாதாரணர்கள்!

      நீக்கு
  20. திருமதி. ரமா ஸ்ரீனிவாசனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. புதுமையான ரெஸிஃப்பி.
    பிறந்தநாள் வாழ்த்துகள் மேடம். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு


  22. ரமா ஸ்ரீநிவாசனின் புதுமையான கார்ன் ஆன் டோஸ்ட் ரிசிப்பி இளம் வயதினருக்கு மிகவும் பிடித்தமான ரிசிப்பி என நினைக்கிறேன் பகிர்விற்க்கு நன்றியும் அவரின் பிற்ந்த நாளுக்கு எனது மன்மார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன் வாழ்க பல்லாண்டு

    பதிலளிநீக்கு
  23. ஸ்ரீமதி ரமாஸ்ரீநிவாசன் அவர்களுக்கு
    அன்பின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

    வாழ்க பல்லாண்டு..

    பதிலளிநீக்கு
  24. வணக்கம். நேற்று நட்பு,சுற்றம் என வாழ்த்து மழையில் நனைந்ததி்ல் ஜலதோஷம் பிடித்து விடப் போகிறது என்று பயந்து விட்டேன். இன்றைக்கு ரமாவிற்கு பிறந்த நாள் இல்லையா? நாங்கள் இருவரும் ஒரே வருடம், ஒரே மாதம், அடுத்தடுத்த நாட்களில் பிறந்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானு, க்ரேட் பீப்பிள் ஆர் பார்ன் இன் ஜூலை.

      நீக்கு
    2. //ஒரே வருடம், ஒரே மாதம், அடுத்தடுத்த நாட்களில் // - அப்படீன்னா ரமா ஸ்ரீநிவாசன் பொறுமையா இருந்திருக்கார் என்றும் பா.வெ. மேடம் அவசரப்பட்டுட்டாங்க என்றும் பொருள் கொள்ளலாமா?

      நீக்கு
    3. நெல்லைக்கு இந்த நாரதர் வேலை ரொம்பப் பிடிச்ச வேலை ஹா ஹாஅ ஹா ஹாஹ் ஆ

      கௌ அண்ணா வேறு நாராயண நாராயண ந்னு ஹா ஹா ஹாஅ ஹாஅ

      கீதா

      நீக்கு
  25. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரமா! உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சந்தோஷத்தையும் அளிக்க சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாளை பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. கார்ன் டோஸ்ட் இப்போது இங்கு நிலவும் இதமான சீதோஷ்ணத்திற்கு ஏற்ற சுயையான ஈவ்னிங் ஸ்நாக். பார்க்கவே ஆசையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  27. நண்பர்களே, எங்கள்பிளாக் வழியாக நான் ஓர் புதிய குடும்பத்தையும் நிறைய சிறந்த நண்பர்களையும் பெற்றிருக்கின்றேன். நீங்கள் யாவரும் வாழ்த்தியதும், ஆசிர்வதித்ததும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கின்றது. மிக்க, மிக்க நன்றி நண்பர்களே.

    பதிலளிநீக்கு
  28. கார்ன் ஆன் டோஸ்ட் செய்முறையும் படங்களும் நன்றாக இருக்கிறது.
    ரமா ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  29. ரமாஸ்ரீ,
    அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. ஆசிகள்.

    பதிலளிநீக்கு
  30. ரமா அட! உங்கள் பிறந்தநாளுக்கு எங்களுக்கு அருமையான கார்ன்டோஸ்ட்!!

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! ரமா.

    கார்ன்டோஸ்ட் அருமையா செய்திருக்கீங்க. நல்லா வந்திருக்கு

    இது நம்ம வீட்டுல நல்லாவே போணியாகும். நன்றாக இருக்கும்.

    இதுல இட்டாலியன் ஸ்பைஸஸ்- ஒரிகேனோ, பேஸில் தைம், போட்டு, வொய்ட் பெப்பர் தூவினாலும் அது ஒரு டேஸ்ட் நன்றாக இருக்கும்.

    ப்ரெட் இல்லாம இதை அப்படியே என் மகன் சாப்பிடுவான்.

    சூப்பர் ரமா நல்லா வந்திருக்கு.

    காழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  31. இந்த வொயிட்ஸ் காஸ் முன்பெல்லாம் என் வீட்டில் எப்போதுமிருக்கும். அதுவும் சென்னையில் இருந்தவரை. இப்ப எங்களுக்கு எப்பவாச்சும்தான் ஸோ ஸ்டாக் வைப்பதில்லை.

    வெள்ளை சாஸ் இருந்தால் வெஜிட்டபில் ஆ க்ரேட்டின் vegetable au gratin செஞ்சு பாருங்க செமையா இருக்கும்.

    நான் செஞ்சா படம் எடுத்துப் போட முடிஞ்சா திங்கவுக்கு அனுப்பறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  32. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  33. நல்ல குறிப்பு.

    வலைப்பூ வழியேயும் திருமதி ரமா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் - ஒரு நாள் தாமதமாக.

    பதிலளிநீக்கு
  34. “அம்சமாக” சொல் கேட்டு வருஷக்கணக்கில் ஆகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!