ரசவாங்கி
எபி
வாசகர்கள், பார்வையாளர்கள், எபி கிச்சன் ரசிகர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கம்.
ரசவாங்கிக்கு
அரைக்கும் பொடி கிட்டத்தட்ட மைசூர் ரசத்துக்குச் செய்யும் பொடிதான்.
ஆனால், என் பாட்டி, பொடியில் கடலைப்பருப்பிற்குப் பதில் துவரம் பருப்பு வறுத்துச் சேர்த்துப்
பொடி செய்வார். கடலைப் பருப்பு ஊற வைத்துச்
சேர்த்து, துவரம் பருப்பை நேரடியாக வேகவிட்டு, குழைய வேக வைக்காமல் மலர வேக வைத்துச் சேர்ப்பார். இது
ஒரு சுவை. அவர் மொழியில் ரச – ரசம் (எனவே ரசப் பொடி) வாங்கி என்றால் கத்தரிக்காய். கூட்டாகச் செய்வதால் சுவை தனியாகத்
தெரிய தேங்காய் வறுத்துப் போட்டுப் பொடி செய்து கலப்பது என்று சொல்வார்.
பாட்டி, பொரிச்ச ரசம் போன்ற ஓரிரு ரசவகைகளைத் தவிர மற்ற ரசத்திற்குப் பெருங்காயத்தைப் பொரித்துப் போட மாட்டார். புளித் தண்ணீர் கொதிக்கும் போது பெருங்காயக்கட்டியைப் போட்டு விடுவார். எனவே ரசவாங்கிக்கும் பெருங்காயத்தைப் புளித்தணீர் கொதிக்கும் போது போட்டுவிடுவார். நானும் அப்படியே.
பொடிக்கு
வறுத்து அரைப்பதற்குப் பதில் ரசப் பொடி சேர்த்தும் செய்யலாம். ஆனால் நான் ஃப்ரெஷ்ஷாக
வறுத்துப் பொடி செய்து போட்டுச் செய்வது வழக்கம்.
கத்தரிக்காய் மற்றும் புடலங்காய்க்குத் தாளிப்பு மற்றும் வதக்கும் போது கொஞ்சம் நெய் பயன்படுத்துவார்.
இது
என் பாட்டி செய்யும் குறிப்பு.
பெட்டிச் செய்தி:
[பிரபல வீணை வித்வான் ராஜேஷ் வைத்யாவுக்கு மிகவும் பிடித்த டிஷ்ஷாம் (எனக்கும் என் மகனுக்கும் அவர் வாசிப்பு மிகவும் பிடிக்கும்.) அவர் அம்மா அருமையாகச் செய்து ரசித்து சாப்பிட்ட, கத்தரிக்காய் ரசவாங்கி அவர் சுவைத்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டதாம்.]
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்..
பதிலளிநீக்குநலம் வாழ்க..
அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇன்றைக்குக் களேபரம் தான்...
பதிலளிநீக்குரச வாங்கி வாழ்க..
ரசம் வாங்கி வாழ்க!..
Aahaaa. Rasam rusikkiRathu.
நீக்குஎல்லோருக்கும் இனிய காலை வணக்கம்.
நீக்குஇன்னும் கொஞ்ச நாட்கள் வரை கொஞ்சம் பிஸி நாட்கள். எனக்கு டவுட் வந்தது இன்று திங்க நம்ம ரெசிப்பியா இருக்குமோ என்று. நேரம் பார்த்து வந்து எல்லோருக்கும் பதில் கொடுக்க வேண்டுமில்லையா! வந்து பார்த்தால் நம்ம ரெசிப்பி.
இப்போதைக்கு கொஞ்சம் பதில் கொடுத்துவிட்டு அப்புறம் வந்து பதில் தருகிறேன்.
எபி ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி.
கீதா
துரை அண்ணா மிக்க நன்றி
நீக்குகீதா
ரசவாங்கி...ங்கிறது
பதிலளிநீக்குலலிதாங்கியோட தங்கச்சி தானே!?...
அன்பு துரை, அன்பு ஸ்ரீராம்,அன்பு கௌதமன் ஜி
நீக்குமற்றும் அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக
வாழ்த்துகள்.
உலகின் அன்னை அனைவரையும் காப்பாள்.
நம்மை அந்த நோயின் பயத்திலிருந்து
விடுவிப்பாள்.
ஹா ஹா ஹா துரை அண்ணா....!!!
நீக்குலலிதாங்கி அருமையான ராகம்!!!
கீதா
உறவினர் நிச்சயதார்த்தம் ஒன்று அட்டென்ட் செய்துவிட்டு இப்போதான் கணினி பக்கம் வருகிறேன். எல்லோருக்கும் நல்வரவு!
நீக்குஆஹா. ரசம் வாங்கி.
பதிலளிநீக்குநிறை நன்றி அன்பு கீதாமா.
இத்தனை தெளிவாக இத்தனை அழகாக
ஒரு செய்முறை. கச்சிதமான அளவுகள்.
என் அம்மாவும், கத்திரிக்காய் அல்லது புடலங்காய் மட்டுமே
உபயோகிப்பார்.
ஓட ஓட இருக்கணும் என்றும் சொல்வார்.
கொத்தமல்லிவிரை, கடலைப் பருப்பு, தேங்காய் என்று வறுக்கும் போதே மணமாக இருக்கும்.
நானும் இன்றுவரை ,
பெருங்காயக் கட்டி தான் உபயோகிக்கிறேன்.
அழகான படங்களுக்கு மிக நன்றி மா.
வல்லிம்மா மிக்க நன்றி.
நீக்குநம் வீட்டில் ரசவாங்கி புடலங்காய் மற்றும் வேறு எந்தக் காயிலும் செய்ததில்லை வல்லிம்மா. ஒன்லி கத்தரிக்காய்.
ஆம் தளரத்தான் செய்வது. சாதத்தில் கலந்து சாப்பிடும் படியாக. அந்தக் கடைசி படம் கரண்டியால் எடுத்து விட்டுக் காட்டுவது போல எடுத்தும் சரியாக வராததால் சேர்க்க முடியாமல் போனது.
அப்புறம் ஒரு லைன் நான் அடிக்காமல் விட்டுப் போயிருக்கிறேன். வறுத்த பொருட்களுடன் வறுத்த தேங்காயும் சேர்த்துக் கொஞ்சம் கரகரப்பாக அரைக்க வேண்டும் என்பதையும்...
மிக்க நன்றி வல்லிம்மா
கீதா
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவரின் வாழ்க்கையிலும் சகஜநிலை திரும்பப் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குஎங்க பிறந்த வீட்டில் கத்திரிக்காயில் மட்டுமே ரசவாங்கி செய்வோம். அதுவும் கூட்டு மாதிரி இருக்காது. ஓட ஓட ரசம் மாதிரித்தான் இருக்கும். சின்னச் சின்னக் கத்திரிக்காயாக முழுசாகப் போட்டுச் செய்வோம். செய்முறை கிட்டத்தட்ட தி/கீதா சொன்னாப்போல் இருந்தாலும் சின்னச் சின்ன மாற்றங்கள். தேங்காயை வறுத்த பொருட்களோடு சேர்த்துக் கொரகொரவென அரைப்போம். துவரம்பருப்பும் குழைய வேகும். கடலைப்பருப்புச் சேர்ப்பதே இல்லை. நானும் என் அம்மா செய்த மாதிரி ரசவாங்கி சாப்பிட்டுப் பல வருஷங்கள் ஆகின்றன. இங்கே ஒரு முறை செய்தேன். நம்மவருக்கு ரசிக்கலை. அப்புறமாச் செய்வதில்லை. :(
பதிலளிநீக்குஆமாம் கீதாக்கா நம் வீட்டிலும் கத்தரிக்காயில் மட்டுமே.
நீக்குபுடலங்காய் என்று இங்கு சொன்னதுக்குக் காரணம் ரசவாங்கிக்குப் பாட்டி நெய்யில் தாளிப்பது வதக்குவது என்று செய்வார் அதே போல் புடலங்காய் வைத்துச் செய்யும் பதார்த்தங்களுக்கும் நெய் கொஞ்ச்ம ப்யனப்டுத்துவார் என்பதற்காக அதைச் சொன்னது.
புடலங்காயில் செய்ததில்லை. வேறு எந்தக் காயிலும் செய்ததில்லை ஒன்லி கத்தரி.
//தேங்காயை வறுத்த பொருட்களோடு சேர்த்துக் கொரகொரவென//
அதே கீதாக்கா. அந்த வரி விடுபட்டிருக்கிறது. வறுத்த தேங்காயுடன் வாறுத்த வெஞ்சசனப் பொருட்களுடன் கரகரப்பாகத்தான் அரைப்பது. அங்கு கரகரப்பாக என்று சொல்லியிருக்கிறேன் தேங்காய் விடுபட்டது.
கடைசியில் கொஞ்சம் வறுத்த தேங்காய் சேர்ப்பாங்க நம்ம வீட்டில்.
மிக்க நன்றி கீதாக்கா
கீதா
வறுத்தப் பொருட்கள் எல்லாம் என்றும் கரகரப்பாக என்றும் சொல்லியிருக்கிறேன். வறுத்த தேங்காயுடன் என்று தனியாகச் சொல்ல விடுபட்டிருக்கிறது.
நீக்குஇத்தனைக்கும் முதலில் அனுப்பிய ரெசிப்பி பாக்ஸில் சில விட்டுப் போச்சு என்று மீண்டும் பாக்ஸ் போட்டு எடிட் செய்து அனுப்பினேன் . அப்படியும் சில விட்டுப் போயிருக்கிறது ஹிஹிஹிஹி..
கீதா
புடலங்காயில் எல்லாம் செய்து பார்த்ததே இல்லை இன்று வரை. இப்போதெல்லாம் பூஷணிக்காய், சௌசௌ போன்றவற்றில் புளி விட்டு வறுத்து அரைத்த கூட்டுப் பண்ணிவிட்டு அதை ரசவாங்கி என்று சொல்லிப் பரிமாறுகின்றனர். என் புக்ககத்திலும் கூட்டைத்தான் ரசவாங்கி என்பார்கள். என் பெரிய நாத்தனார் அதற்குப் புளியும் விட்டு எலுமிச்சைச் சாறும் சேர்ப்பார்கள். வெல்லம் நிறையப் போடுவதால் புளிப்பும், தித்திப்புமாக இருக்கும்.
பதிலளிநீக்குஇதுவும் நன்றாக இருக்கு கீதாமா.
நீக்குஅன்பு கௌதமன் ஜி மின் நிலா
நீக்குபளிச்சிட்டுக் கொண்டே வருகிறது.
கார் வந்த சரித்திரம் அருமை.
ரமாஸ்ரீயின் கார்கள் அழகு.
என் ''நாடி'' ஆர்டிகிளும் வந்தது கண்டு மகிழ்ச்சி.
ஆமாம் கீதாக்கா தளரத்தான் செய்வது. அந்தப் படமும் அதாவது கரண்டியால் எடுத்துக் காட்டுவது போல எடுத்த படம் சரியா வரலை அதான் சேர்க்கலை.
நீக்குநன்றி கீதாக்கா,
நன்றி வல்லிம்மா
கீதா
மின்நிலா குறித்த பாராட்டுக்கு நன்றி.
நீக்குசெய்முறை விளக்கப் படங்கள் அருமை... அதன் படி செய்து பார்க்கிறோம்... நன்றி...
பதிலளிநீக்குகௌ அண்ணா மின்நிலா டவுன்லோட் செய்துவிட்டேன் பார்த்துவிட்டு அப்புறம் கருத்து.
பதிலளிநீக்குகீதா
நன்றி. படித்து கருத்துரை எழுதவும்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநலமா? உங்களை இரண்டொரு நாட்களாய் எ பியிலும், வேறு எந்த பதிவிலும் காணவில்லையே? அலுவலக வேலை அதிகம் காரணமாக வர இயலவில்லை போலும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீராமை கேட்கிறீர்களா?
நீக்குவணக்கம் கீதா ரெங்கன் சகோதரி
பதிலளிநீக்குஉங்கள் தயாரிப்பான ரசவாங்கி நன்றாக உள்ளது. அழகான படங்களையும், செய்முறைகளையும் பார்க்கும் போதே அதன் சுவை நாவில் தெரிகிறது. நேற்று கூட எங்கள் வீட்டில் கத்திரிக்காய் சாம்பார்தான். ஆனால் சாமான்களை வறுத்து அரைத்து செய்யும் போது அது ஒரு தனிப்பட்ட ருசி.. கத்திரியின் எல்லாவித ரெசிபியுமே மணமான சுவை தரும். உங்கள் பக்குவபடி செய்கிறேன். கடைசி மியாவ் படம் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி கமலாக்கா.
நீக்குஆமாம் சாமான் வறுத்து அரைத்துச் செய்யறப்ப நன்றாக இருக்கும். கத்தரிக்காய் பிடித்தால் அதில் செய்யும் வகைகள் எல்லாமே நன்றாக இருக்கும் பெய்ங்கன் பர்த்தா வரை எல்லாமே.
செய்து பாருங்க கமலாக்கா.
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
ரசவாங்கி... இதுக்கும் கத்தரிக்காய் புளிக்கூட்டுக்கும் எத்தனை வித்தியாசங்கள் என்று பார்க்கணும்.
பதிலளிநீக்குசெய்முறை நன்றாக வந்திருக்கு. செய்துபார்க்கணும்.
இது சுட சாதம், நெய் இவைகளோட நல்லா இருக்கும்னு தோணுது. பாராட்டுகள் கீதா ரங்கன்.
நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒழுங்கா ரெசிப்பி பாருங்க! வய்சாகிப் போச்சு போல கண்ணாடி போட்டுப் பாருங்க!! ஹா ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதாக்கா கொஞ்சம் வந்து எனக்குக் கை கொடுங்க.
புளிக்கூட்டுக்கு தேங்காய் வறுக்க வேண்டாமே. வறுத்துப் போடுவதும் இல்லையே. துவரம்ப் பருப்பு சேர்க்க மாட்டோமே. அதுவே சுவை மாறுபடுமே.
ஆமாம் நெல்லை சுட சுடச் சாதம் நெய் விட்டுச் சாப்பிட்டா சூப்பரா இருக்கும்.
மிக்க நன்றி நெல்லை பாராட்டுகளுக்கு
கீதா
மனைவிக்கு பச்சை ஜாக்கெட்டுக்குப் பதிலா மெரூன் கலர் ஜாக்கெட் போட்டா பேர் மாறிடுமா என்று நான் கேட்க மீட்டேன் கீதா ரங்கன் க்கா
நீக்குரசவாங்கி வேறே, கத்திரிக்காய்ப் புளிக்கூட்டு வேறே நெல்லையாரே! புளிக்கூட்டுக் கத்திரிக்காயில் மட்டுமில்லாமல் வாழைக்காய், வாழைப்பூ, வெண்டைக்காய், சௌசௌ, கொத்தவரை, அவரை போன்றவற்றிலும் பண்ணுவார்கள். அதுக்குப் பொடி போட்டாலே போதும். தேவைனா வறுத்து அரைக்கலாம். அல்லது தேங்காயைத் தாளிப்பில் சேர்த்துப் போடலாம். 2,3 விதங்கள் இருக்கின்றன. இது ரசம் மாதிரியும் இருக்கும், சாம்பார் மாதிரியும் இருக்கும். ரசவாங்கி பண்ணினால் அன்னிக்கு வேறே பண்ணமாட்டார்கள். அப்பளம் பொரித்துக் கொண்டு ரசவாங்கியோடு சாப்பிடுவோம். கத்திரிக்காய் எங்க வீட்டில் நிறையப் போடுவார்கள். அதுக்கே அடிச்சுப்போம் எனக்கு, உனக்கு என!
நீக்குஅம்மாவோடு அறுசுவை உணவு போகும் என்பது என் வரையில் உண்மை. பல உணவு வகைகள் அம்மாவுக்கு அப்புறமாச் சாப்பிட்டதே இல்லை. இங்கே பழக்கம் இல்லாததால் பண்ணுவதும் கஷ்டம்! :)))))
நீக்குசெய்முறை விளக்கம் படங்களோடு அருமை. பெயர் கேள்விபட்டது இல்லை.
பதிலளிநீக்குகில்லர்ஜி நல்லாருக்கும் இது.
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி
கீதா
பெங்களூர்ல உருப்படியான கத்தரிக்காய் கிடைக்காத்து ஏமாற்றம்தான்.
பதிலளிநீக்குநீளமா இருக்கும் பச்சைக் கத்தரி கைக்குது. வரி பிரிஞ்சால், பழமைதிர்ச் சோலைல மிக அருமையா இருக்கும். இந்த ஊர்ல கடந்த ஏழு தடவைகள் வாங்கியதும் கைக்குது. ஒரு தடவைதான் நல்லா இருந்தது.
வரி பிரிஞ்சால் சைஸ்ல பச்சை நிற கத்தரியை உபயோகித்துப் பார்க்கணும்.
பெங்களூர்வாசிகள் ஐடியா கொடுப்பாங்களா?
நெல்லை எங்க ஏரியாவுல நன்றாகக் கிடைக்கிறது இதுவரை கைய்க்க வில்லையே. அதுவும் இதுல புளி வேற சேர்க்கிறோமே நெல்லை அதனால தெரியாது.
நீக்குவரி பிரிஞ்சால் சைஸ்ல பச்சை நிற கத்தரியை உபயோகித்துப் பார்க்கணும்//
நல்லாருக்கும் நெல்லை. இதுலயும் செய்யலாம்.
நம் வீட்டருகில் சின்ன வயலட் கத்தரிக்காய் கிடைக்கும். நான் வயலட் வரிக்கத்தரி வாங்குவதில்லை. அது ஏதோ பயோ டெக் கத்தரின்னு சொல்றாங்க சரியா தெரியவில்லை. இந்த ரெசிப்பியில் அதைத்தான்பயன்படுத்தியிருக்கிறேன். வேறு கிடைக்காததால்.
நல்ல வயலட் கத்தரி சின்னதா குண்டு அல்லது கொஞ்சம் நீளமாகக் கிடைக்குமே அதுலயும் செய்யலாம் நல்லாருக்கும். பெரிய குண்டு வயலட் கத்தரிலயும் கூடச் செய்யலாம். எனக்குச் சுவை தெரிவதில்லையே. சில சமயம் மட்டுமே ஒன்றே ஒன்று தெரியும். இப்ப சமீபமா எதுவும் தெரியவில்லை. தெரியாததால் எல்லா கத்தரியும் ஒன்று போலவே இருக்குது.ஹா ஹா ஹா
கீதா
சாம்பார், புளிக்குழம்பு, வத்தல்குழம்பு, காரக்குழம்பு ( மூன்றும் கிட்டத்தட்ட ஒன்று இல்லையா?) தீயல், மோர்க்குழம்பு, புளிசேரி, குருமா, வெள்ளைக்குழம்பு, பொறிச்சகுழம்பு தவிர வேறு குழம்பு வகைகள் தெரியாது. தற்போது எங்கள் பிளாக் வழியாக ரசவாங்கி, பிட்லை போன்றவற்றையும் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குஅது போன்று சாறு வகைகளையும் எழுதுங்கள்.
Jayakumar
ஜெகே அண்ணா வாங்க
நீக்கு//சாம்பார், புளிக்குழம்பு, வத்தல்குழம்பு, காரக்குழம்பு ( மூன்றும் கிட்டத்தட்ட ஒன்று இல்லையா?) //
வித்தியசம் தெரியுமே. அதுவும் நன்றாகத் தெரியும்
//தற்போது எங்கள் பிளாக் வழியாக ரசவாங்கி, பிட்லை போன்றவற்றையும் தெரிந்து கொண்டேன். //
மிக்க நன்றி அண்ணா
/அது போன்று சாறு வகைகளையும் எழுதுங்கள். /
சாறு என்றால் ரசம் சொல்லறீங்களோ? இங்கு பங்களூர்/கர்நாடகால சாறுன்னுதானே சொல்வாங்க. நிறைய வெரைட்டிஸ் செய்வதுண்டு
முடிந்தால் படம் எடுத்து எழுதி எபிக்கு அனுப்புகிறேன்
மிக்க நன்றி
கீதா
பதிலளிநீக்குஎன் மனைவியிடம் இருந்து கற்றுக் கொண்டது இந்த ரசவாங்கியைத்தான்......
ஓ அப்படியா! நீங்கள் செய்தும் இருப்பீங்களே!
நீக்குமிக்க நன்றி மதுரை.
கீதா
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குகீதா! நீங்கள் எழுதியிருக்கும் அழகே உடனேயே கத்தரிக்காய் ரசவாங்கியை செய்யத்தூண்டுகிறது! எப்போதோ செய்தது. உங்கள் குறிப்பை முழுவதுமாக படித்தபோது உண்மையிலேயே ரசவாங்கி பக்கத்தில் மணம் வீசுகிற மாதிரி இருந்தது! சீக்கிரமே பிஞ்சு கத்தரிக்காய் வாங்கி செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோக்கா.
நீக்குஆஹா மணம் வீசுகிறதா?!! அடுத்த முறை வாங்கிச் செய்து பாருங்க மனோக்கா.
மிக்க நன்றி
கீதா
கத்திரிக்காய் ரசவாங்கி குறிப்புகள் நன்று. சுவைத்ததுண்டு செய்ததில்லை!
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி. எப்போது முடிகிறதோ செய்து பாருங்கள்.
நீக்குமிக்க நன்றி
கீதா
ரசவாங்கி சுவைக்கிறது.
பதிலளிநீக்குரசவாங்கி சுவைக்கும்.
நீக்குமிக்க நன்றி மாதேவி
கீதா
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு??????????????????????????
நீக்குகீதாக்கா ஒரு வேண்டாத ரியல் எஸ்டேட் மெசேஜ் போல ஏதோ வந்திருந்தது. அதுதான். சொன்னேன் இப்ப ஆசிரியர் நீக்கிவிட்டார்.
நீக்குகீதா
ரசவாங்கி செய்முறை விளக்கமும் ,படங்களும் மிக அருமை.
பதிலளிநீக்குதுவரம் பருப்பை மொட்டு மொட்டாக, மலர வேகவைப்பது எல்லாம் முன்பு கொடி அடுப்பில் வேக வைக்கும் போது அம்மா காலத்தில் எளிதாக இருந்தது. துவரத்திற்கு மொட்டு மொட்டாய் வெந்து கொண்டு இருக்கும் போது எடுத்துக் கொள்வார்கள்.
அம்மா, பெரியம்மாவை நினைவு படுத்தி விட்டது.""ஏட்டி குழையவிடாமல் எடுக்கனும் கேட்டயா" என்று சொல்வார்கள்.
கடலை பருப்பை வெதுப்பி அரைமணி ஊறவைத்தீர்கள் அதை பொடி செய்யும் போது பொடித்தீர்களா? சொல்லவில்லையே!
வறுத்து அரைப்பதிலும் துவரம் பருப்பு வருகிறது.
துவரம் பருப்பை மொட்டு மொட்டாக, மலர வேகவைப்பது எல்லாம் முன்பு கொடி அடுப்பில் வேக வைக்கும் போது அம்மா காலத்தில் எளிதாக இருந்தது. துவரத்திற்கு மொட்டு மொட்டாய் வெந்து கொண்டு இருக்கும் போது எடுத்துக் கொள்வார்கள்.//
நீக்குஆமாம் கோமதிக்கா. பார்க்கவே அழகாக இருக்கும்
//"ஏட்டி குழையவிடாமல் எடுக்கனும் கேட்டயா" என்று சொல்வார்கள்.//
ஆஹா நம் வீட்டிலும் இதே இப்படியேதான் சொல்லுவாங்க!!!!!!!!!!
கடலை பருப்பை வெதுப்பி அரைமணி ஊறவைத்தீர்கள் அதை பொடி செய்யும் போது பொடித்தீர்களா? சொல்லவில்லையே!
வறுத்து அரைப்பதிலும் துவரம் பருப்பு வருகிறது.//
பார்த்தீங்களா கோமதிக்கா சொல்லாமல் விட்டிருக்கிறேன் பாருங்க..எனக்கு சில சமயம் இப்படித்தான் எழுதும் போது பலதும் விட்டுப் போகிறது. கடலைப்பருப்பு புளித்தண்ணீரில் வேகப் போட்டுவிட்டு கத்தரிகொஞ்சம் வதங்கியதும் அதோடு சேர்த்து...வேக வைக்கணும்
வறுத்து அரைக்கப் பெரும்பாலும் கடலைப்பருப்புதான் சேர்ப்பாங்க. ஆனால் பாட்டி து பருப்பு, தனியா, மி வ வறுத்து அரைப்பார். சில சமயம் தான் க ப தனியா, மி வ வறுத்து அரைப்பார். மற்றபடி செய்முறை இதேதான் கோமதிக்கா. இது கிட்டத்தட்ட வறுப்பது ரசப்பொடி போலத்தான்.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
கோமதிக்கா முதல் பாக்ஸில் கீழுள்ள படங்களில் இரண்டாவது படம் அதில் கடலைப்பருப்பு தெரியும் பாருங்க...சொல்லாமல்விட்டிருக்கிறேன்...
நீக்குகீதா
நாங்களும் ரசப்பொடிக்கு துவரம்பருப்புதான் வறுப்போம் கீதா
நீக்குமின்நிலா படித்தேன், படங்கள் நன்றாக இருக்கிறது வல்லி அக்காவின் நாடி ஜோதிடம் பகிர்வு நன்றாக விறு விறுப்பாய் செல்கிறது.
பதிலளிநீக்குகார்களின் படம் நன்றாக இருக்கிறது.
மின்நிலா கருத்துரைக்கு நன்றி.
நீக்குகார்கள் பற்றிய குறிப்புகள் அறியாதவை. கார்களின் விதம் விதமான படங்கள் ஏற்கெனவே பார்த்தாலும் மறுபடியும் பார்த்தேன். ரமா ஶ்ரீநிவாசனின் கார்கள் படங்களும் நன்றாக உள்ளன. வீட்டில் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு காரோ? ரேவதியின் நாடி ஜோதிடப் பதிவு படித்து ஆச்சரியமாகி விட்டது. எங்களுக்கு இப்படி எல்லாம் நாடிகள் பேசவில்லை. ஓரளவுக்குப் பெயர், உத்தியோகம்னு சரியா இருந்ததே தவிரச் சில பழைய நிகழ்வுகள் ஒத்துப் போகவில்லை எதிர்காலம் குறித்து யாரும் சரியாகச் சொல்லவில்லை. ஆனால் நாங்க போனது வைத்தீஸ்வரன் கோயிலில். அங்கே அவ்வளவு நம்பிக்கையானவர்கள் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅன்பு கீதாமா,
நீக்குமகளிடம் அவர்கள் கொடுத்த நோட்புக் இருக்கு. அதில்
இவருக்கு என்ன உடல் நிலை கொஞ்சம் ஆபத்து என்று
கொடுத்திருக்கு ,நீதான் படிக்கலை என்று அப்போதே சொன்னாள்.
நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடர்களில் பலர் வியாபார நோக்கம் கொண்ட போலி ஜோதிடர்கள்.
நீக்கு//நாடி ஜோதிடர்களில் பலர் வியாபார நோக்கம் கொண்ட போலி ஜோதிடர்கள்// - ஒருவேளை பலருக்கு, நீங்கள் போலியிடம்தான் போய் நாடி ஜோதிடம் பார்க்கணும் என்று அகத்தியர் போன்ற முனிவர்கள் எழுதிவச்சிருக்காங்களோ என்னவோ
நீக்குஓஹோ ! அப்படியும் இருக்கலாம்!
நீக்குரசவாங்கி பார்க்கவே அருமையா கமகம ன்னு இருக்கும்போலிருக்கு ..அழகா இருக்கு படக்குறிப்பு
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சல்
நீக்குமுடிஞ்சா செஞ்சு பாருங்க. நல்லாருக்கும்
மிக்க நன்றி ஏஞ்சல்
கீதா
கத்தரிக்காய் ரசவாங்கி படங்கள் அருமை! நான் கொஞ்சம் வெல்லம் சேர்ப்பேன். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் கத்தரிக்காய் ரசவாங்கி எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். ரசவாங்கி செய்யும் நாட்களில் ரசம் மட்டுமே. ரசத்தோடு சாப்பிட மிக நன்றாக இருக்கும். ரசத்தை வாங்குவதால் ரசவாங்கி என்று என் அண்ணா ஒரு புது வியாக்கியானம் கொடுப்பார். கதை போல எழுதும் கீதாவுக்கு என்ன ஆச்சு? என்று நானும் பூஸாரைப் போல ஆலோசித்தேன்.
பதிலளிநீக்குபானுக்கா வாங்க...
நீக்குபாட்டியும் சேர்ப்பாங்க சோ நானும் கொஞ்சம் சேர்ப்பதுண்டு. சொல்லும் போது சிலது விட்டுப் போச்சு பானுக்கா.
//ரசவாங்கி செய்யும் நாட்களில் ரசம் மட்டுமே. ரசத்தோடு சாப்பிட மிக நன்றாக இருக்கும்.//
ஓஹோ! இப்படியும் சாப்பிட்டுப் பார்த்தா போச்சு.
//ரசத்தை வாங்குவதால் ரசவாங்கி என்று என் அண்ணா ஒரு புது வியாக்கியானம் கொடுப்பார். //
ஹா ஹா ஹா பெயருக்கேற்ற வியாக்கியானம் நல்லாருக்கே!!!
//கதை போல எழுதும் கீதாவுக்கு என்ன ஆச்சு? என்று நானும் பூஸாரைப் போல ஆலோசித்தேன். //
ஆமாம் ல பானுக்கா. இப்படித்தான் இதுக்கு அப்புறம் வரும் சில குறிப்புகளும் இப்படித்தான் கதை இல்லாமல் இருக்கும். அப்பப்ப கீதா பிஸியாகி மூளை ஃப்யூஸ் ஆகிடும். ஏதாவது ஒன்றில்தான் கவனம் செலுத்த முடிகிறது பானுக்கா. எழுத உட்கார்ந்தால் மனம் அதில் லயித்துவிடுகிறது...வீட்டு வேலை ஜகா வாங்கும் அது சில சமயங்களில் கஷ்டமாகிவிடுகிறது. அதனால்தான் கதைகள் பல பாக்கி அப்படியே இருக்கிறது. கதையில் உட்கார்ந்தால் மனம் வேறு எங்கும் போகாது. வீட்டு வேலை என்றால் அதில் அப்போது இடையே நிறைய கருத்துகள் வரும் ஆனால் எதையும் உடனே எழுதி வைக்க முடியாது அப்படியே நூல் விட்டுப் போகும்...
அப்படியான தருணங்களில் எழுதிய திங்க பதிவுகள் பானுக்கா. இன்னும் சில இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
மிக்க நன்றி பானுக்கா
கீதா
எல்லா படங்கள் மற்றும் குறிப்புகளை ஒரே பாக்சில் போடுவதால் செல்போனில் பார்ப்பது சற்று கடினமாக இருக்கிறது.
பதிலளிநீக்குபானுக்கா இனி வரும் ஒரு மூன்று என்று நினைக்கிறேன் சரியா நினைவில்லை. அவை இப்படித்தான் பாக்ஸில் இருக்கும். பொறுத்துக்கோங்க,
நீக்குஅடுத்து எழுதுவதில் இருந்து பாக்ஸில் குறைவான படங்கள் போட்டு 3, 4 பாக்ஸாகப் போடுகிறேன். அல்லது படங்கள் மட்டும் பாக்ஸில் போட்டுவிட்டு எழுதுவதை வெளியில் எழுதுகிறேன். படங்கள் ஸ்டெப் பை ஸ்டெப் நிறைய வருவதால் தனியாகக் கொடுக்கும் போது சில சமயம் எபிக்கு அனுப்பும் போது படங்கள் நெட் பிரச்சனையால் தாறுமாறாகி இடம் மாறும் வாய்ப்பு உண்டு என்பதால் இப்படி பாக்ஸில் போட்டால் படங்கள் அலைன் ஆகிவிடுகிறது.
நோட்டட் பானுக்கா
மிக்க நன்றி அக்கா
கீதா
கத்திரிக்காய் சீசனா இது? :)) கத்திரிக்காய் ரசவாங்கி நானும் கிட்டத்தட்ட இப்படிச் செய்வேன்; கூடக்கொஞ்சம் காராமணி வேக வைத்தது சேர்ப்பேன் கத்தரிக்காய் தான் பிடிக்காத என் பிள்ளைகளுக்கு போட!!
பதிலளிநீக்குவாங்க மிகிமா,
நீக்குஆமாம் சிலர் கொண்டைக்கடலை, காராமணி சேர்த்துச் செய்றாங்க.
//கூடக்கொஞ்சம் காராமணி வேக வைத்தது சேர்ப்பேன் கத்தரிக்காய் தான் பிடிக்காத என் பிள்ளைகளுக்கு போட!!//
ஐடியா!! ஹப்பா அம்மாக்கள் என்னெல்லாம் ஏமாத்து வேலை தெரிஞ்சு வைச்சுருக்க வேண்டியிருக்கு ஹா ஹா ஹா ஹா ஹா
மிக்க நன்றி மிகிமா
கீதா
மின் நிலா வாசித்தேன்.
பதிலளிநீக்குகார்கள் படங்கள் நல்லாருக்கு.
வல்லிம்மாவின் நாடி ஜோசியம் வியக்க வைத்தது. என் தங்கை தன் மகளுக்குப் பார்த்தாள் . ஆனால் அதில் சரியாக இருந்ததாகத் தெரியவில்லை.
வல்லிம்மா தைரியமா போய்ப்பார்த்திருக்காங்க. நான் போக மாட்டேன் நாஜோ என்றில்லை பிற ஜோஸ்யங்களுக்கும் என்பதால் ஹிஹிஹிஹி...
வேறு ஒன்றுமில்லை நெகட்டிவாகச் சொல்லிவிட்டால்? அது மனதை வாட்டும்.
ஆனால் வெகு சுவாரசியமாக அம்மா சொல்றாங்க. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்க்! கடைசி வரி அந்தக் கொசுறு ரொம்பவே ஈர்த்தது!!!! டேஸ்ட் பட்ஸ்!!! ஹா ஹா ஹா ஹா ஹா
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅருமை
பதிலளிநீக்கு//என்ன ஆச்சு இந்த கீதா பிள்ளைக்கு? கதைக்கயில்ல?//
பதிலளிநீக்குஅதானே.. மிக அடக்கொடுக்கமாக அதிராவைப்போல:) அச்சம் மடம் நாணம் பயிர்ப்பாக கொஞ்சமாக ரெசிப்பியைச் சொல்லிட்டு ஓடிட்டாவே கீதா:))
நீங்கள் “மலர அவிக்கவும்” எனச் சொல்லியிருக்கிறீங்கள்.. நாங்கள்.. “பருப்பு நன்கு அவிஞ்சு பூக்கோணும்” என்போம் ஹா ஹா ஹா.. மலரைப் பூ எண்டும் ஜொள்ளலாம் புய்ப்பம் எண்டும் ஜொள்ளலாம் தானே :))
பதிலளிநீக்குரெசிப்பி பார்க்க நல்லாயிருக்கு.. கொஞ்சம் மினக்கெடோணும்...நான் இதுவரை அறியாத பெயரெல்லாம் சொல்லிச் சொல்லிக் குறிப்புப் போடுறீங்கள் கீதா:)).. கறி சுவையாக இருக்குமோ இல்லையோ, பெயர் சூப்பராக இருக்கு ஹா ஹா ஹா.
பதிலளிநீக்கு//கொஞ்சம் மினக்கெடோணும்.// - கொஞ்சமா? நிறையவே மெனெக்கிடனும், உங்க ஊர்ல இந்த மாதிரி கத்தரிக்காய் வாங்க. ஒருவேளை துபாய் வரையில் பிரயாணம் செய்யவேண்டி வந்தாலும் வரலாம். உங்க ஊர்ல கிடைப்பது எல்லாம் பூசனி சைஸில் உள்ள கத்திரிக்காய்கள் தானே.
நீக்குஇன்று செவ்வாய்க்கிழமை..
பதிலளிநீக்குஇன்னும் என்ன தாமதம்?..
அட... எப்போ எபில மறுநாள் இடுகை வரும் என்று பார்க்க எதிர்காலத்தைச் சொல்லும் கணிணி வேண்டும் என்பீர்கள் போலிருக்கிறதே துரை செல்வராஜு சார்.
நீக்குரசவாங்கியின் காரணப் பெயர் இப்படியாக இருக்குமோ? தெலுங்கில் வாங்கிபாத் (கத்தரிக்காய் சாதம்) போல கத்தரிக்காயை ரசத்தில் சேர்த்தால் ரசவாங்கி என்று பெயர் வந்ததோ? (பானு அக்கா அண்ணன் சொன்னது சரி தான்)
பதிலளிநீக்குJayakumar
ரஸத்தை வைத்து ஒரு ரஸவாதமே செய்துவிடுவீர்கள் போல.
பதிலளிநீக்குநன்றி மேடம்.