வியாழன், 3 செப்டம்பர், 2020

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே 


அந்த மாலை 4/4
ஸ்ரீராம் 



[4]

இங்கிருந்து நேராக கல்யாண மண்டபத்துக்குதான் போகப்போகிறோம் என்று தோன்றி விட்டது அவருக்கு.

வினோத்துடனும் ரவியுடனும் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் ரேணு.

நீ எப்பம்மா வைத்தியநாதன் மாமாவைப் பார்த்தே...?  உனக்கெப்படி தெரியும்?"

"கேள்வியே தேவை இல்லையே அங்கிள்...   வினோத் சொன்னான்.  போய்ப் பார்த்துட்டு வந்துட்டேன்.."

"இப்போ அடுத்தது அவர் எண்ட்ரியா?"

"அய்...   அஸ்கு புஸ்கு...  அவர் எவ்வளவு பெரியவர்..   நாமதான் அவர் இருக்கற இடத்துக்குப் போகணும்..."

அது என்றைக்குப் போகணும்?  அதையும் நீயே சொல்லிடு...  அவர் கிட்ட சொல்லி வச்சிருப்பே... தெரியும்... எனக்கும் சொன்னாதானே தயாராய் இருக்க முடியும்?"

"என்றைக்கா...  அப்படி  எல்லாம் இனி தள்ளிப் போடமுடியாது அங்கிள்...   வாங்க போகலாம்..."

வினோவும் வினோத்தும் எழுந்து முன்னால் நடக்க, பாலாஜி மூர்த்திக்காகவும் ரேணுவுக்காகவும் காத்திருந்து சேர்ந்து நடந்தார்.  மூர்த்திக்கு ஆச்சர்யங்கள் அலுத்துப்போயிருந்தன.  ரவி தயக்கத்துடன் சந்தியாவுடன் சேர்ந்து வந்தான்.  முன்னால் வினோத்-வினோ, பின்னால் ரவி-சந்தியா ஜோடியைக் கண்ட மூர்த்தி "திருடனுங்க" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.  அடுத்து எங்கே போகவேண்டுமோ என்று அவர்களுடன் மெல்ல நடந்தார்.

வாசலை நோக்கி நடந்த மூர்த்தி ரேணுவை, பாலாஜி கவனம் திருப்பி வினோ ஜோடியை நோக்கிக் கைகாட்டினார்.  அவர்கள் இதே போல பக்கத்தில் இருந்த இன்னொரு ஏ ஸி ஹாலுக்குள் அழைத்துச் செல்ல, அங்கே அமர்ந்திருந்தார் வைத்தி மாமா!

"எனக்கு ரொம்ப நேரமா காத்திருந்ததா தோணினாலும் இது ரொம்ப ரொம்ப சீக்கிரம் வினோதா..." என்றார் வைத்தி மாமா.

"நீங்களுமா வைத்தி மாமா?" என்றார் மூர்த்தி.

"நல்ல விஷயம்தானே மூர்த்தி?  ஒண்ணு தெரியுமோ...   குழந்தைகள் மூணு வாரமா பிளான் பண்ணினதுகள்...  போன வாரம் வினோத்தையும், ரவியையும் நீ அம்பத்தூர் அனுப்பிட்டே...  இல்லாட்டா போனவாரமே கூட முடிஞ்சிருக்கும்...   உனக்கேத்த மருமகள்...   எனக்கு உன் சின்ன வயசு ஞாபகம் வர்றது.."  என்றார் வைத்தி மாமா.

"சொல்லுங்க...  என்ன சாப்பிடறீங்க.."

"அட போப்பா...   எனக்குப் பிடிச்ச ரவா தோசை ரெண்டு வாட்டி சாப்பிட்டுட்டு ரெண்டு காஃபி குடிச்சுட்டேன்.  யதேஷ்டம்.."

"நீங்களா நாள் குறிச்சு கொடுத்துருக்கீங்க?"

"ஆமாம்...   அதுல எந்த நாள் சிலாக்கியம்னு வினோ சொல்லி இருப்பாளே...  போகப்போக அவளே உனக்கு எல்லா சந்தேகத்துக்கு பதில் சொல்லிடுவாப்பா...   கெட்டிக்காரி.."

மூர்த்தி வினோவைப் பார்த்தார்.  "எந்த மண்டபம் பிக்ஸ் பண்ணியிருக்கே?"

"முதலில் தேதி...    அதில் நாலாவதா இருக்கற தேதி ஓக்கேன்னு நினைக்கறேன் அங்கிள்..  வாரக் கடைசியில் வருவதால் வருபவர்களுக்கும் வசதி.  ஆனால்...   அங்கிள்,,  நான் ஒண்ணு சொல்வேன்..  யோசிச்சுப் பாருங்க..    கோவிச்சுக்கக் கூடாது.. "  வினோ சற்றே தயங்கி நிறுத்தி இடைவெளி விட்டாள்.

பாலாஜி குறுக்கிட்டார்.

"சம்பந்தி...   இப்போ சொல்லப்போகும் யோசனை என்னோடது இல்ல...   எனக்கு விருப்பமும் இல்ல..."

சம்பந்தியா?  மூர்த்தி வியந்து கொண்டார்.  எவ்வளவு வேகமாக ஏற்பட்டு விட்ட உறவுகள்!

"அப்பா...   பயப்படாத...   அங்கிள் உங்களை தப்பா நினைக்க மாட்டார்.  அது மட்டும் இல்ல..  நான் உன்னை அப்படி எல்லாம் விட்டுடவும் மாட்டேன்.."

"புதிர்போடாம சொல்றியாம்மா...?

"அங்கிள்...   கல்யாணத்துல நாம அதிகமா காசு செலவு செய்யப்போறதில்ல..  என் அப்பாவுக்காக, சந்தியா அப்பாவுக்காக நான் இதைச்  சொல்லல...  பொண்ணு வீட்டு சைடாவே பேசல...   ஒருவாட்டி வினோத் நீங்க கூட இந்தக் கருத்தைப் பேசிக்கிட்டிருந்ததா சொன்னான்.  எனக்கு அது பிடிச்சுப்போயி அப்புறமா தோணின ஐடியாதான் இது.."

பாலாஜி சங்கடத்துடன் மூர்த்தியைப் பார்த்தார். மூர்த்தி விநோதினியையே பார்த்துக் கொண்டிருந்தார்.  

"சொல்லு..."

"முதல்ல ஏதாவது கோவில்ல தாலி கட்டிடறதுன்னு யோசிச்சோம்.  அப்புறம் அதென்ன ஏதாவது ஒரு கோவில்?  குலதெய்வம் கோவில்ல தாலி கட்டிடறது...  அப்புறம் ரெஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம்.  அப்புறம் ஒரு ஹோட்டல்ல ரிஸப்ஷன்.  ஏன், வீட்டுல பெரியவங்க முன்னால தாலி கட்டிட்டு ரெஜிஸ்டர் ஆபீஸ் போயிடலாம்னு கூட யோசிச்சோம்.  அனாவசியமான ஜவுளிகள், மிச்ச செலவுகள் எல்லாம் கட் பண்ணிட்டு, அந்தப் பணத்தை அப்படியே பொண்ணு பேர்ல டெபாசிட் பண்ணிடறது...   இதைதான் அப்பா கிட்ட நீ தப்பிக்க முடியாதுன்னு சொன்னேன்..."

"இது அவ யோசனைதான் சம்பந்தி...   நீங்க வேற மாதிரி அபிப்ராயப்பட்டீங்கன்னா கல்யாணம் நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி செய்துடலாம்..."  பாலாஜி அவசரமாக இடைபேசினார்.

வைத்தி புன்னகைத்தார்.  'மூர்த்திக்கேற்ற மருமகள்.  இவன் அநேகமாக ஆல்ரெடி ஓகே சொல்ல முடிவு செஞ்சிருப்பான்...  மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க டிலே பண்றான்... அவ கிட்ட இதுக்கு அவன் கட்டாயம் ஒத்துப்பான்னு சொல்லி வச்சிருக்கேன்..'

மூர்த்தி எல்லோரையும் பார்த்தார்.  ரேணுவைப் பார்த்தார்.  ரேணுவுக்கு இதில் பெரிய சம்மதம் இருக்காது.  ஆனால் எல்லோரும் சொன்னால் முணுமுணுத்தாலும் ஏற்றுக்கொண்டு விடுவாள்.  பொண்ணு வீட்டு ஸைட் பற்றிக் கவலை இல்லை.  அவர்கள் இதற்கு சரி என்று சொல்லத் தயாராய் இருப்பார்கள்.  வினோத் தான் எதற்கெடுத்தாலும் எதிர்வாதம் செய்பவன்..   காசு பெரிசு இல்லை என்பவன்... 

"வினோத்...   நீ என்ன சொல்றே?"

"நீ சொல்றதுதான்ப்பா...  எனக்கு ஓகே...  ஆனா உன்னோட, அம்மாவோட ரெண்டு பேரோட சம்மதம் முக்கியம்...   மாமாவையும் கேட்டுடுவோம்...   அம்மா?"

"அப்பா சொன்னா சரி.."

வைத்தியைப் பார்த்தார் மூர்த்தி.  அவர் கண்களாலேயே சம்மதம் சொன்னார்.

"என்னைப் பொறுத்தவரையும் ஓகே.  வேறு யாருக்கானும் ஏதாவது தோணினா சொல்லலாம்..."  சந்தியாவைப் பார்த்தார். 

சந்தியா தலையாட்டினாள்.  "நாங்க எல்லாம் முன்னாலேயே கன்வின்ஸ் ஆயிட்டோம் மாமா..."

"அப்போ.. எந்த ஹோட்டல்ல ஹால் மாதிரி கிடைக்குதுன்னு கேட்டுடலாம்.  இப்போவே ஆரம்பிச்சாதான் சரியா இருக்கும்...  இன்னும் ஒன்றரை மாசம்தான் இருக்கா?  இந்த ஹோட்டல்ல அப்படி ஏதாவது இருக்கோ?"  மூர்த்தி திரும்பி ஹோட்டல் மேனேஜரை இங்கிருந்தே அளவெடுப்பபது போல பார்த்தார்.

"இருக்குப்பா...   செகண்ட் ப்ளோர்...   நம்ம சர்வர் மூலம் அதையும் பேசி ரிஸர்வ் பண்ணி வச்சிருக்கேன்..." என்றாள் வினோதினி.

புன்னகைத்தார் மூர்த்தி.

"அம்மா வினோதினி...  நான் அசந்து போயிருக்கேன்.  என்ன மாதிரி பொண்ணும்மா நீ...  வினோத் கவலை இனி  எங்களுக்குத் தீர்ந்துடும்..  சந்தியாதான் சந்தேகமா இருக்கு.  பதட்டமாவே இருக்கா..."

"அங்கிள்...   இனி நானும் உங்களை மாமான்னே கூப்பிடறேன்.  மாமா...   அவளும் லேசுப்பட்ட பொண்ணு இல்ல...  அவகிட்ட ஒரு வீக்னஸ் இருந்ததால அடக்கி வாசிக்கறா...   ரவி பத்தின கவலையையும் விடுங்க..."

ரவி சொன்னான்.  "அண்ணி ரொம்ப ஃபாஸ்ட்.  பயங்கரமா பிளான் பண்ணினா..   இதெல்லாம் வொர்க்கவுட் ஆகுமான்னு எங்களுக்கெல்லாம் சந்தேகம்.  அப்பா எந்த நேரமும் சட்டென எழுந்து போயிடுவார்னு வினோத் பயமுறுத்தி வச்சிருந்தான்...."

அண்ணி!   ஹூம்...

"நம்பிக்கைதான்.  மாமா எழுந்து போயிருந்தால் கதை அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தொடரும்.  சிக்கனக் கல்யாணத்துக்கு மாமா ஒத்துக்கலைன்னா செலவு பண்ணி கல்யாணம் செய்யவும் தயாரா இருந்தோம்.  சேலையூர் தாண்டி ஒரு மண்டபம் பார்த்து வச்சிருந்தேன்.  ரொம்ப தூரம் அது.   வர்றவங்களுக்கு கஷ்டம்.  இல்லைன்னா தேதியையே மாற்ற வேண்டியதிருந்திருக்கும்.  ஆனா வைத்தி மாமா தைரியம் கொடுத்தார்"

"நீங்க எப்படி இங்கே?"  மூர்த்தி வைத்தியைப் பார்த்து கேட்டார்.

"அதுவா?  போன வாரம், இல்லை அதற்கு முந்தின வாரம் இந்த சம்பவம் நடந்திருந்தா நீங்க எல்லோரும் வினோவோட கார்ல எங்க வீட்டுக்கு டிரைவ் பண்ணிக்கிட்டு வந்திருக்கணும்...   இந்த வாரம் எனக்கு இந்த ஏரியால ஒரு வேலை வந்தது.  என் ஸ்கூல் ஃபிரெண்டு சுந்தரராஜன்...   உனக்குத்தான் தெரியுமே .... அவன் தன் மகன் வீட்டுல வந்து தங்கிட்டு என்னை இங்கு வரமுடியுமான்னு கூப்பிட்டான்.  அவனே ஊபர் புக் பண்ணிக் கொடுத்தான்.  சரின்னு வந்தேன்.   வினோ கிட்டயும் சொன்னேன்.  அவ இந்த வாரம் எப்படியும் முடிச்சுடறேன்னு சொன்னா"

"இந்த வினோத்தான் அவர் 'மூடை'க் கெடுத்து அனுப்பி வச்சான்.  அது கொஞ்சம் பயமா இருந்தது.  நல்லவேளை..  எல்லாம் சுபம்!"  சிரித்தாள் வினோதினி.

"மாமா...   கோபம் இல்லையே..."

"இல்லை"  என்று தலையாட்டினார் மூர்த்தி.  "நீ விரிவா செஞ்சு வச்சுருக்கற ஏற்பாட்டுல ஆடிப்போயிருக்கேன்மா நான்...  ரொம்ப சந்தோஷம்..."

ரவி வினோத்தைப் பார்த்தான்.  "பார்றா...   உன்னையோ, என்னையோ அப்பா எப்பவாவது இப்படி எல்லாம் பாராட்டி இருக்காரா?"

"அப்படி நீங்க நடந்துக்கலையேடா..."

"இப்போ அடுத்தது என்ன?  ரேணு கேட்டாள்.

"அத்தை...  நைட் ஆகாரம் இங்கேயே கிட்டத்தட்ட முடிஞ்சுடுச்சு.  வீட்டுக்குப்போய் தூங்கறோம்..  நாளைலேருந்து ஆகவேண்டிய வேலைகளைப் பார்க்கறோம்...  மாமா..   நாளைக்கு அல்லது நாளை மறுநாள் சாயங்காலம் நான் உங்க வீட்டுக்கு வந்து உங்களையும் அழைச்சுக்கிட்டு வைத்தி மாமா வீட்டுக்குப் போறோம்...   பத்திரிகை மாடல் வச்சிருக்கேன்...  அதை முடிச்சிடலாம்..."

"அதுல என்ன புதுமை வச்சிருக்கியோ..."

மூர்த்தி வாழ்வில் இதுவரை இல்லாத திருப்தியுடன் முன்னே நடந்தார்.  சட்டென பல தளைகளிலிருந்து விடுதலை போல இருந்தது அவருக்கு.

[ நிறைந்தது ]
================================================================================================

லா ச ராவின் இந்தக் கதை படித்திருக்கிறீர்களோ?  நான் படித்ததில்லை!

===================================================================================================

மறுபடியும் ஒரு கவிதை!  கவிதை மாதிரி...

தென்னைபோல் பனைபோல் 
நீண்டுநான் வளரவேண்டும்..
வாழைக்கும் வந்தது 
உயரமாய் நின்று 
உலகைப் பார்க்கும் ஆசை

ஆலமரம்போல அடர்ந்தே நானும் 
வளர்ந்துநல் நிழல்தரவேண்டும்
தென்னைக்கும் உண்டிங்கு ஆசை..

வாழைபோல, வந்தோமா 
பயன் தந்தோமா சென்றோமா 
என்று வாழ்வதே வாழ்க்கை
வருடங்கள் பலவாழ்ந்து 
வாழ்க்கை போரடிக்கிறது..

ஆலமரத்துக்கும் இருக்கிறது 
அடுத்த வாழ்க்கை மீதான ஆசை..

இங்கு எவரும் 
தன் வாழ்க்கையை 
வாழ்வதேயில்லை.

===============================================================================================

ஒரு தத்துபித்துவம்!

தேடுவது கிடைக்காவிட்டால் 
நிம்மதி இல்லை
தேடாதது கிடைத்துவிட்டால் 
மதிப்பில்லை

===========================================================================================

இதற்கெல்லாம் ஒப்புதல் பெற்றா வெளியிடுவார்கள்?  அப்படி ஒப்புதல் பெற என்ன விசேஷம் இருக்கிறது இந்த ஓவியத்தில்...  அவ்வளவு நியாயமாக இருக்கிறார்களாமா?  ஏன் இந்தக் கேள்வி கேட்கிறேன் என்றால்...



இந்த ஓவியத்துக்கு இப்படி ஒரு வாக்குமூலம் கொடுக்கப்படவில்லையே...

[ இங்கு சேர்க்கப்பட்டிருந்த படம் நீக்கப்பட்டது ]

==========================================================================================

வேகமாவா?  வேகாமவா?



அப்போது வெளிவந்த ரயில் பற்றிய சில சுவாரஸ்யமான விவரங்கள்..

99 கருத்துகள்:

  1. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. புதிய அணுகுமுறை...
    இப்படி நல்ல விதமாக கதை நிறைவடைந்ததில் எல்லாருக்கும் மகிழ்ச்சி...

    மங்கலம் சுப மங்கலம்...

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். உலகில் ஆரோக்கியம் பெருக வேண்டும். மக்கள் செழித்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டும், டும், நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது, ஆரோக்கியம் திரும்புது, அனாவசிய பயங்கள் ஓடுது!

      நீக்கு
    2. பயங்கள் ஓடும். புது வாழ்வு பிறக்கும் என்றும் சுப்ரமணியரின் அருளால்.

      நீக்கு
  4. நல்ல விதமாக திருமணம் நிகழ்வதில். ஆமா கொரோனா காலத்தில் எதற்கு ஆடம்பரச் செலவு.

    எப்படியோ மூர்த்திக்கு எந்த அலைச்சலும் இல்லை. ஆசீர்வாதம் செய்து விட்டு, பெயரன்-பெயத்திகளை எதிர் பார்க்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  5. சுபமாகத் திருமணங்கள் இளையோரால்
    நிச்சயிக்கப் படுகிறது.
    மூர்த்தி புத்திசாலிதான்.
    எந்த வித ஈகோவும் பாராமல்
    மருமகள்கள் சொல்படி நடக்கிற
    மாமனார் ஆகிவிட்டார்.
    இது போல விட்டுக் கொடுக்கவும் பெரிய மனம்
    வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. இத்தனை வேகமாகச் செயல்படும்
    வினோதினி, தன் காதலனை முன்னமே முடுக்கி
    விட்டிருந்தால் மூர்த்திக்கு மனக் கவலை குறைந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. மணமக்கள் நலமுடன் வாழ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துவோம்! மணமக்களையும், அவர்களைப் படைத்த ஸ்ரீராமையும்!

      நீக்கு
  8. ரயில் செய்திகள் அத்தனையும் மனதுக்குப்
    பிடித்திருக்கின்றன. லாஸ்ட் வேகன் என்பதற்கு எல். டபிள்யு
    வரவேண்டாமோ.
    எஸ் கே பாட்டீல் வரலாறு மிகச் சுவை. நடந்தே மந்திரியாகிவிட்டார்.
    லண்டன் அண்டர் க்ரௌண்ட் ரயிலும் புது செய்தி.
    இந்தக் கடைசி வாகன் பற்றி தி ஜா ஒரு கதையே
    எழுதி விட்டார்.

    பதிலளிநீக்கு
  9. சப்பாத்தி வேகாத ஜோக் பிரமாதம்.
    சாண்டில்யனின் கதைக்கான ஓவியம்

    நினைவில் இல்லை.

    காப்பி ரைட் என்று எதை சொல்கிறார்கள்?
    எல்லாம் இணையத்தில் வந்த பிறகு
    இது கொஞ்சம் வினோதம் தான்.

    பதிலளிநீக்கு
  10. ஆலமரத்துக்கும் இருக்கிறது
    அடுத்த வாழ்க்கை மீதான ஆசை..///////தத்தபித்துவம் தத்துவமாகவே இருக்கிறது.
    கவிதை நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்.
    ஆசைகளுக்கு அளவேது.

    பதிலளிநீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    கதை நல்லபடியாக முடிந்தது மகிழ்ச்சி. மூர்த்திக்கு எந்த ஒரு வேலையும் கொடுக்காமல், மணமக்கள் தாங்களாகவே தீர்மானித்து எடுத்த முடிவுகள் இறுதியில் வெற்றியாகவே அமைந்து விட்டது மூர்த்தியின் விட்டுத்தரும் நல்ல சுபாவத்தினால்தான். அவர் மட்டுமில்லை அவர் மனைவியும் நல்ல குணவதி. வாழ்க அவர் குடும்பம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    கவிதை நன்றாக உள்ளது. ஸ்ரீராம் சகோதரருக்கு வாழ்த்துகள். தற்சமயம் சகோதரரின் உடல்நலம் எப்படி உள்ளது.?

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. மூர்த்தி வாழ்வில் இதுவரை இல்லாத திருப்தியுடன் முன்னே நடந்தார். சட்டென பல தளைகளிலிருந்து விடுதலை போல இருந்தது அவருக்கு.//- இந்த வரிகள்தாம் இந்தக் கதைக்கு அடிப்படை. நமக்கெல்லாம் கடவுள் நம் முன்னால வந்து என்ன வரம் வேணும்னு கேட்டா, சட்னு, எனக்கு நிறைய வரங்கள் நீங்க தரணும் என்பதுதான் என் வரம். எனச் சொல்லும்படியாக பல சிக்கல்கள் இருக்கு. சட்னு தீர்வுதான் கண்ல படலை.

    கதை நன்றாக இருந்தது. நாடகத் தன்மையா இருந்தது. நம்பும்படியாகவும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைக்கு கால் உண்டா, கை உண்டா! எல்லாம் ஒரு சுவாரசியம்தானே பாஸ்!

      நீக்கு
    2. உண்மை. சுவாரசியமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த மாதிரி டாமினேட்டிங் பெண் ஏன் நான் பெண் தேடும்போது பார்க்க முடியலைனும் தெரியலை. ஹாஹா. (நமக்கு ரெஸ்பான்சிபிலிடி குறைவல்லவா?)

      நீக்கு
    3. :)) இன்னார்க்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று!

      நீக்கு
    4. @ நெல்லைத்உ தமிழன்! உங்கள் நல்ல வேளை என்று எடுத்துக் கொள்ளுங்கள் முரளிமா.

      நீக்கு
  14. அம்மா விநோதினி... நான் யாருக்கும் சொல்லாம ரொம்ப கவலையோடு இருந்தேன்மா... எனக்கு மரணம் இப்பவோ அப்பவோன்னு நெருங்கிட்டிருக்கு. இவனானா கல்யாணப் பேச்சையே எடுக்கவிட மாட்டேங்கறானே.. இந்த வாழ்க்கையில் பையன் கல்யாணம், பேரனைப் பார்க்க கொடுத்து வைக்கலை, அந்தப் ப்ரார்த்தம் இல்லைனு குமைஞ்சுக்கிட்டிருந்தேன்மா..

    மாமா... அப்படீலாம் உங்களை விட்டுட மாட்டோம்.. ஆறு மாசத்துக்கு முன்னாலதான் உங்களுக்கு பேரன் பொறந்தான். இது ஊர் உலகத்துக்கான கல்யாணம்தான். இப்பவே வேணும்னா பக்கத்துத் தெருல என் ஃப்ரெண்ட் வீட்டில் விட்டுட்டு வந்திருக்கிற பேரனை கூட்டிட்டு வர்றேன்

    இதை மட்டும்தான் ஶ்ரீராம் யோசிக்கலை. எதுக்கு ரொம்ப அட்வான்ஸ்டா போவானேன் என்று நினைத்திருப்பாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடக் கஷ்டகாலமே !! ஏதோ ஒரு அளவுக்குத்தான் advanced என்று காட்டிக்கொள்ளலாம். அதற்காக இப்படியா !! நல்லவேளை - 'மாமா நீங்க முதலில் போயிட்டா - இதோ இந்தப் பேரனுக்கு உங்க பெயரை வைப்போம், என்னுடைய அப்பா முந்திக்கிட்டா - அவர் பெயரை இவனுக்கு வைப்போம். ஸ்கூல்ல சேர்ப்பதற்கு முன்பு என்ன நடக்குதுன்னு பார்க்க வெயிட் பண்றோம்' என்று வினோ சொன்னாள் என்று சொல்லாமல் விட்டீர்களே!

      நீக்கு
  15. ஒரு ஓவியத்தை வெளியிட்டால், அது நன்றாக இருந்தால் ஓவியத்தை ஸ்லாகிப்போம். அவரை நினைவுகூர்வோம். அந்தக் கதை, வெளிவந்த பத்திரிகை இவைகளைப் பற்றிப் பேசுவோம்.

    குடத்திலிட்ட விளக்காக வைக்க எண்ணுவதால், அதுவும் பழைய ஓவியத்தை, யாருக்கும் பயன்? அந்த ஓவியத்தை என் வாட்சப்புக்கு அனுப்புங்கள்

    பதிலளிநீக்கு
  16. குமாஸ்தா மந்திரி ஆவதற்கு, எத்தனை முறை, பணத்தைக் கட்டாமலேயே இருந்தாரோ

    பதிலளிநீக்கு
  17. கவிதை தந்த பொருளை ரசித்தேன். பல மரம் கண்ட தச்சர் போல நாம் அக்கரை பச்சை என்றே ஏங்கிக்கொண்டு காலத்தைக் கடத்துகிறோமோ?

    //தேடுவது கிடைக்காவிட்டால்// நல்ல பத்து ரூபாய் பால்பாயின்ட் பேனா பல கலர்களில் ஏராளமாக அவ்வப்போது சென்னையில், பயணம் பண்ணும் சமயத்தில் ஒரே பிராண்ட் வாங்கியருந்தேன். இந்த வீட்டில் எங்கே அவற்றை எந்த பாக்கெட்டில் வைத்தேன் எனசில நாட்களாகத் தேடுகிறேன். நிச்சயம் தூரப்போட்டிருக்க மாட்டேன். கிடைத்தபாடு இல்லை.

    மனதுக்கும் நிம்மதி இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பெங்களூரிலிருந்து ஒவ்வொரு முறை சென்னை செல்லும்போதும் சென்னையில் ஏதேனும் ஒரு புத்தகக் கடையில் ஐந்து ரூபாய் பந்துமுனை எழுதுகோல் ஒன்று வாங்குவேன். இப்போ குரோம்பேட்டையில் என் வீட்டில் சற்றேறக்குறைய இருபத்தைந்து ப மு எ உள்ளன!

      நீக்கு
  18. கதை சுபமாக முடிந்தது... கவிதையும் மற்ற பகுதிகளும் அருமை...

    பதிலளிநீக்கு
  19. கெளதமன் ஸார்,

    வணக்கம். மெயில் பாக்ஸை செக் பண்ண கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு இமெயில் மூலமாக மெஸேஜ் அனுப்பி வைத்திருக்கிறேன். உங்கள் பார்வைக்காக.

    அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
  20. 'I have been damned lucky!'
    -- இது லா.ச.ரா-வின் அந்த மாயமான் கதையில் வரும் ஒரு வரி!
    நானும் அவரின் அந்தக் கதையை வாசித்திருப்பதால் எனக்கும் அப்படியான ஒரு சந்தோஷம் தான்!

    பதிலளிநீக்கு
  21. சாண்டில்யன் கதை ஓவியத்தைப் பார்த்ததும் 'லதா' என்ற பெயர் சட்டென்று நினைவுக்கு வந்தது. அது போதும் அந்த ஓவியத்திற்கான எபெஃக்ட்!

    ஓவியர் லதா, சுஜாதா மாதிரி! இரண்டு பேருக்கும் அப்படி எதில் ஒற்றுமை என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரியும் ---- ஆனா நான் சொல்லமாட்டேன்!

      நீக்கு
    2. ஒற்றுமை உலகறிந்தது. வேற்றுமை சொன்னா ஆபாசமாயிடும்.

      நீக்கு
    3. வேற்றுமையெல்லாம் எனக்குத் தெரியாதது.
      எனக்குத் தெரிந்த ஒற்றுமையைத் தான் கேட்டேன்.
      உலகறிந்ததைச் சொல்வதில் என்ன தயக்கம், நெல்லை?

      நீக்கு
    4. அது என்ன ஒற்றுமை? அடுத்த ம.கு.

      நீக்கு
    5. இருவரும் அவரவர் மனைவி பெயரை தங்கள் புனைப்பெயராக வைத்துக்கொண்டவர்கள். சரியா ஜீவி சார்.....

      சுஜாதா கதைகளுக்கு லதா ஓவியம் வரைந்ததில்லை. சாண்டில்யன் கதைகளுக்கு ஜெயராஜ் அவர்கள் வரைந்த ஓவியம் ரசித்ததில்லை.

      நீக்கு
    6. இருவருமே பெண்களின் பெயரைப் புனைப்பெயராகக் கொண்டவர்கள்.

      நீக்கு
    7. ஒருவர் எழுத்தில் பெண்கள் பற்றிய குறிப்பு தூக்கல். இன்னொருவர் ஓவியத்தில் அதே.

      நீக்கு
  22. இங்கு எவரும்
    தன் வாழ்க்கையை
    வாழ்வதேயில்லை

    -- இந்த வரிகளுக்குத் தான் அந்தக் கவிதை! ரத்தினம் போன்ற வரிகள் ஸ்ரீராம்! என்னமா எண்ணங்களை விதைக்கிறீர்கள் என்று ஆச்சிரியமா இருக்கு.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. தேடுவது கிடைக்காவிட்டால்
    நிம்மதி இல்லை
    தேடாதது கிடைத்துவிட்டால்
    மதிப்பில்லை..

    அதனால் தானோ என்னவோ கிடைக்காதற்கு எப்பொழுதுமே மதிப்பு ஜாஸ்தியா இருக்கு!

    அதைத் தேட
    இது கிடைத்தது
    இது கிடைத்தது
    எதிர்பாராதது.
    அது கிடைக்க
    அது இல்லாத இன்னொண்ணைத்
    தேட வேண்டும் போலிருக்கு!..

    பதிலளிநீக்கு
  24. //மூர்த்தி வாழ்வில் இதுவரை இல்லாத திருப்தியுடன் முன்னே நடந்தார். சட்டென பல தளைகளிலிருந்து விடுதலை போல இருந்தது அவருக்கு.//

    இப்படி மருமகள் வீட்டுக்கு வரும் முன்னேயே பொறுப்புகளை எடுத்துக் கொண்டால் எதிர்காலம் வளமே! நலமே!

    பெண்ணை பெற்றவருக்கும் வேலைகளில் இருந்து விடுதலை தான், அவருக்கும் நிம்மதி ஏற்பட்டு இருக்கும்.

    அருமையாக கதை சொல்கிறார் ஸ்ரீராம். கதை மனதுக்கு நிறைவு.



    பதிலளிநீக்கு
  25. கவிதை,தத்துபித்துவம்!, மற்றும் அனைத்தும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  26. அது என்ன நீக்கப்பட்ட ஓவியம்? அதான் இப்போ மண்டையைக் குடைகிறது. ஸ்ரீராம் கதையை சுபமாக முடித்தாலும் எனக்குள் ஏதோ நெருடல். என்னவோ சரியில்லை. போகட்டும்! எல்லோரும் பாராட்டி இருக்கையில் நாம மட்டும் குற்றம் கண்டுபிடிக்கலாமோ? அதிலும் மூர்த்தி ரொம்பப் பெரிய மனிதர். எந்தவிதமான சச்சரவும் இல்லாமல் எல்லாத்துக்கும் ஒத்துக்கொண்டு விட்டார். முதல் அத்தியாயம் படிக்கையில் விநோத் கல்யாணத்துக்கே ஒத்துக்கப் போறதில்லைனு நினைச்சேன். மாறாக! குழந்தை ஒண்ணுதான் பெத்துக்கலை! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குழந்தை ஒண்ணுதான் பெத்துக்கலை! :// - கதைல ஒன்றுக்குமேல் குழந்தை பெற்றுக்கொண்டதாக ஸ்ரீராம் எழுதி நான் படிக்கலையே. அவங்களுக்கு இனிமேல்தானே திருமணம்..

      நீக்கு
    2. அதானே! (அந்த படம் என்ன என்றால், அதற்கு முந்தைய / அல்லது முந்தையதுக்கும் முந்தைய குமுதம் இதழில் வெளிவந்த, அதே ஓவியர் வரைந்த படம் என்று ஞாபகம்.)

      நீக்கு
  27. சாண்டில்யனின் இந்தக் கதை/நாவல் நான் படிச்சதில்லை. லா.ச.ரா.வின் கதை படிச்ச நினைவு. ரயில் பற்றியவை படிக்க முடியலை. பெரிசாக்கி மறுபடி பார்க்கணும். :(

    பதிலளிநீக்கு
  28. ஶ்ரீராமின் கவிதையில் உள்ள "தத்துப்பித்துவம்" நல்லாவே இருக்கு. ஆனால் யோசித்தால் யாருமே அவரவர்க்கான வாழ்க்கையை வாழ்கிறோமா? சந்தேகமா வருதே!

    பதிலளிநீக்கு
  29. சோன்பூர் ரயில்நிலையம், லக்னோ ரயில்நிலையம், விஜயவாடா, ஜான்சி ஆகியவற்றைப் பார்த்திருக்கேன். அதே போல் வாரணாசியிலிருந்து ரயில் மார்க்கமாகக் கயா சென்றால் சோன் நதிப் பாலம் மிகப் பெரியதாக இருப்பதை ரயிலில் அந்தப் பாலத்தின் மீது பயணிக்கையில் அறியலாம். அதோடு இருபக்கங்களும் பசுமை, பசுமை, பசுமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நான் சொல்வது 20 வருடங்கள் முன்னர். இப்போது தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  30. கதையின் நிறைவில் மகிழ்ச்சி
    ஒர் நிறைவு
    நன்றி

    பதிலளிநீக்கு
  31. மூர்த்தி மனதளவிலும் சமாதானமாகி விட்டதாகத் தெரிகிறது. சுபமான முடிவு. எப்போதும் போலத் தொய்வில்லாத விறுவிறுப்பான நடையில் கதை சிறப்பு. கவிதையும் தத்துவமும் அருமை.

    பதிலளிநீக்கு
  32. கதை முடிவு சுபம்! நன்றாகவே இருந்தது கதை. பாராட்டுகள்.

    மற்ற பகுதிகளும் நன்று.

    பதிலளிநீக்கு
  33. சுபமாக முடிந்தது கதை.

    இதேபோல நிஜவாழ்கையில் நடந்தால் நன்றாக இருக்கும்.
    ரயில் செய்திகள் அறிந்து கொண்டோம்.
    சப்பாத்தி சிரிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  34. இனி வரும் காலங்களில் திருமணங்கள் இப்படி நட்ந்தாலு ஆச்சரியமில்லை ஸ்ரீ ரா நிறையவே சிந்திக்கிறார்

    பதிலளிநீக்கு
  35. கதை எழுதப்பட்ட விதம் என்னவோ நன்றாகத்தான் இருந்தது, ஆனால் அதீதம் என்று தோன்றியது. சொல்ல முடியாது, நாளைக்கே இந்த வினோ,"மாமா, நானும், விநோதும் ஆபிஸ் போனதும், உங்களுக்கும், அத்தைக்கும் ரொம்ப போர் அடிக்கிறது, அதனால் ... இந்த சீனியர் சிட்டிசன் ஹோமில் வீடு புக் பண்ணி விட்டோம், அங்கு எல்லா வசதிகளும் உண்டு, உங்களுக்கு கம்பெனி கிடைக்கும் , நன்றாக பொழுது போகும், இன்னும் அரைமணி நேரத்தில் அங்கிருந்து உங்களை அழைத்துச் செல்ல கார் வந்து விடும், ரெடியாகுங்கள், உங்க திங்ஸ் எல்லாவற்றையும் நான் பாக் பண்ணி விட்டேன்" என்றும் சொல்லலாம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் என்னவோ கார்ல ஃபர்ஸ்ட் ஸ்பீட், செகண்ட் ஸ்பீட் என்று கிளட்ச் அமுக்கி கியர் மாற்றினால் - நீங்க தொடர்ந்து சிக்ஸ்த் ஸ்பீட் வரை போய் அதற்கப்புறம் ரிவர்ஸ் கியரும் போட்டுடுவீங்க போலிருக்கு!

      நீக்கு
    2. haahaahaa, agreed with Banumathi. Jing chakka, jing chakka, jing chakka jing! :D

      நீக்கு
  36. கவிதை சூப்பர்! வேகாத சப்பாத்தி.. ஹாஹாஹா!. லா.சா.ரா.வின் கதி படித்த நினைவு இல்லை. 

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!