வெள்ளி, 1 ஜனவரி, 2021

வெள்ளிப் பாடல் : எங்கேயும் எப்போதும் இன்பம் பொங்கும் சங்கீதம் சந்தோஷம்

 நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


தெரிவில் வைத்திருந்த பாடல்களை ஒதுக்கி விட்டு புத்தாண்டுக்காக வேறு இரு பாடல்கள் பகிர்கிறேன்.  

புத்தாண்டு என்றால் மறுபடி மறுபடி சகலகலாவல்லவன் பாடலும், சங்கிலி பாடலும்தானா?​   இல்லை, தங்கமகள் அள்ளித்தந்தாள் ... பாடல் போல புத்தாண்டு வாழ்த்துகள் என்று பாடலில் வரி வந்தால்தானா?

ஒரு உற்சாக நடனப் பாடலும் , அமைதியான பாடலுமாய்ப் பகிர்கிறேன்.

'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் வரும் 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்' பாடல்.  வயதோடு ரசித்தாலும் பாடல்.  அது வயதாகி ரசித்தாலும் பாடல்!  

1979 இல் வெளியான படம் 'நினைத்தாலே இனிக்கும்'.  இளையராஜாவால் சற்றே சரிந்திருந்த எம் எஸ் வி யின் மார்க்கெட்டை மறுபடி கொஞ்சம் தூக்கி நிறுத்திய படம்.  இந்தப் படத்தின் பாடல்கள் பீட்டில்ஸ் பாடல்களின் இன்ஸ்பிரேஷனில் வந்தது என்கிறார்கள்.  அதே போல இந்தப் படத்தில் ரஜினி சிகெரெட்டைத் தூக்கிப் போட்டு பத்து முறை வாயில் கவ்வும் போட்டி Roald Dahl ன் Man from the South என்ற படத்திலிருந்து உருவியதாம்!  வேண்டாத விவரங்களை எல்லாம் கொடுக்கிறது விக்கி!

பாடல்கள் கண்ணதாசன்.  கேபி படம் என்று சொல்லத்தேவை இல்லை. சுஜாதா எழுதிக்கொடுத்த க்ரைம் கதையை சற்றே மாற்றி காதல் கதையாக்கி எடுக்கப்பட்ட படம்.

ஆடல், பாடல், குதூகலம்...   எஸ்பிபி!




அடுத்த பாடல் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் 'இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே..'

பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி ஆர் பந்துலு இயக்கி சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், பத்மினி போன்றோர் நடிப்பில் 1959 ல் வெளியான படம்.  கு மா பாலசுப்ரமணியம் பாடல்களுக்கு ஜி ராமநாதன் இசை.  

இந்தப் பாடல் பி பி ஸ்ரீநிவாஸும் பி சுசீலாவும் பாடியிருப்பது.  காட்சியில் ஜெமினியும், பத்மினியும். 

சக்தி கிருஷ்ணசாமியிடம் சிவாஜி வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிக்க தனக்கிருக்கும் ஆசையைச் சொன்னதும் அவர் ஸ்க்ரிப்ட் தயார் செய்ய, சிவாஜி நாடக மன்றத்தால் அது நடிக்கப்பட்டு வந்த நேரத்தில் பந்துலு அதைப் பார்த்து, படமாக எடுக்கத் திட்டமிட்டு, ம பொ சிவஞானம் உள்ளிட்ட சிலரை கட்டபொம்மன் ப்பற்றிய தகவல்களைச் சேகரிக்க வைத்து, படமமாக்கினாராம்.

இதற்கு முன்னரே இரண்டு தடவை கட்டபொம்மன் பற்றிய வரலாற்றுப் பட முயற்சிகள் நடந்திருக்கின்றன.  பி யு சின்னப்பாவை வைத்து செல்வம் பிக்சர்ஸ் எடுக்க நினைத்த படம் எடுக்கப்படவில்லை.  எஸ் எஸ் வாசன் 1952-53 விகடனில் கட்டபொம்மன் பற்றிய விவரங்கள் யாருக்காவது தெரியுமானால் ஜெமினி கதை இலாகாவில் வந்து சொல்லும்படி விளம்பரம் வெளியிட்டிருந்தாராம்.  

கொத்தமங்கலம் சுப்பு, வேப்பத்தூர் கிட்டு ஆகியோர் அவர் கதை இலாகாவில் இருந்தாராம்.  எனினும் சிவாஜியின் வேண்டுகோளுக்கிணங்கி 1957 ல் அவர் முயற்சி கைவிடப்பட்டாலும், ஜெமினி தயாரிப்பில் சிவாஜியை இதே படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தார்களாம்.  ஆனால் சந்திரலேகாவில் சிவாஜியை ஒரு வேடத்தில் நடிக்க அழைத்து சரியில்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தால் இது சாத்தியமா என்று சிவாஜி யோசித்தாராம்.  இதெல்லாம் ராண்டார்கை சொல்லி இருக்கும் தகவல்.  படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதும் விகடனில் எஸ் எஸ் வாசன் மிகவும் பாராட்டி இருந்தாராம்.




நினைவுபடுத்திய அப்பாதுரைக்கு நன்றி.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே


                      

61 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாங்க அதிரா...   வாழ்த்துகள்.  நல்வாழ்த்துகள்.  புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அழகிய வரவேற்பு நன்றி நன்றி_()_

      நீக்கு
  2. ஆவ்வ்வ்வ்வ் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
    மீயேதான் 2ண்டூஊஊஊஊஊஊஊஊஊ:))

    பதிலளிநீக்கு
  3. நினைச்சேன் இன்று ஹப்பி நியூ இயர் பாடலாகத்தான் இருக்குமென..

    இன்பம் பொங்கும் வெண்ணிலாவும் நல்ல பாட்டு...

    பதிலளிநீக்கு
  4. //நினைச்சேன் இன்று ஹப்பி நியூ இயர் பாடலாகத்தான் இருக்குமென..//

    அப்படியா?

    பதிலளிநீக்கு
  5. என்ன இருப்பினும் இம்முறை இங்கெல்லாம் மக்களே இல்லாமல் புத்தாண்டு வெறும் ஃபயர் வேர்க்ஸ் உடன் பிறந்ததுபார்க்க கொஞ்சம் மனதுக்குக் கஸ்டமாகவே இருந்துது.. சரி சரி எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும், எல்லோரும் நலமாகவும் மகிழ்வாகவும் இருக்கோணும் எனப் பிரார்த்திக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  6. இன்று நான் களம் குதிப்பேன் என ஆரும் நினைச்சிருக்க மாட்டீங்களென நினைக்கிறேன்ன்:))... நானும் நினைச்சேன் போஸ்ட் வந்து 15 நிமிடமாகுது என ஆனாலும் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ என்பதனை இந்தப் புத்தாண்டில் பதிவு செய்து கொள்கிறேனாக்கும்... ஹா ஹா ஹா...அப்போ நான் போட்டு வரட்டே?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  உண்மையிலேயே இனிய வியப்புதான்.  நன்றி அதிரா...  மீண்டும் புத்தாண்டு வாழ்த்துகள்.  தூங்கி எழுந்து மறுபடி ஃபிரெஷா வாங்கோ...

      நீக்கு
    2. இப்பூடியா ஸ்ரீராம்?:))

      https://s-media-cache-ak0.pinimg.com/736x/e6/1e/a2/e61ea252f7e49316524e5839371b9db0.jpg

      நீக்கு
  7. வலைத்தள நட்புகள் அனைவருக்கும் தன் சார்பாய் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைச் சொல்லச் சொல்லி கோமதி அரசு அக்கா தகவல் அனுப்பி உள்ளார்கள்.  

    நன்றி அக்கா.  

    உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவ்வ்வ்வ்வ் செய்தி படிச்சதும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. கோமதி அக்காவை விரைவில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் கெதியா வாங்கோ.

      நீக்கு
  8. அனைவருக்கும் இந்த வருடம் நன்மை மட்டும் செய்ய
    இறை அருள் இருக்கட்டும்.. ஹாப்பி 2021!!!!!!
    அன்பு அதிரா வளமோடு இருக்க வாழ்த்துகள்.

    அன்பு ஸ்ரீராம் இன்னும் எல்லோருக்கும்
    எல்லா நன்மைகளையும் இறைவன் கொடுக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா, உங்கள் வீட்டுக்கும் ஓடிவந்து வாழ்த்துச் சொல்லி ஆசீர்வாதம் இப்போதான் பெற்றுக்கொண்டு வந்தேனாக்கும்:))...

      2021 இல் நல்ல செய்திகளாகவே நம் காதுகளில் ஒலிக்கட்டும் கண்களில் தெரியட்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

      நீக்கு
    2. நன்றி அம்மா. உங்கள் வாக்கு பொன்னாகட்டும். வருக, வணக்கம்.

      நீக்கு
  9. நினைத்தாலே இனிக்கும் பாடல் திரையில் பார்த்தது தேவி,மௌண்ட் ரோடில்:)

    பாடல் காட்சியில் முன் வரிசையில் சிலர் ஆடியதிம் நினைவில். இந்தப் பாடலிலேயே
    ஒரு மயங்கி தலையைச் சுழற்றுவார்:)

    எஸ்பி பி சாரின் அமுத கானங்களில் ஒன்று.

    வீரபாண்டிய கட்டபொம்மனின் கொசுறு தகவல்கள் ரசிக்கும் படி இருக்கின்றன.
    நல்ல படம்.
    நல்ல பாடல்கள். அதிலும் இந்தப் பாடல் மிக அருமை.
    நீங்கள் சொல்லும் ரோல்ட் டால் கதைகள் என் பேத்திகளிடம்
    நிறைய இருக்கின்றன.
    இந்தப் படத்தின் பல காட்சிகளுக்கு
    சில காட்சிகளுக்கு வேறு ஆங்கிலப் படத்திலிருந்தும் முன்னோடி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நிஇ படத்தில் அனைத்துமே ஹிட் பாடல்கள். நன்றிம்மா.

      நீக்கு
  10. இன்றைய பாடல்கள் அருமை.

    இந்த ஆங்கில வருடம் அந்நிய தேசங்களிலிருந்து வைரஸ்களைக் கொண்டு வராமல், உள்ளூரில் நம்மை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு தின வாழ்த்துகள்.

    சித்திரைப் புத்தாண்டு முதல் வெள்ளியில், சித்திரைமாதம் பௌர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்... பாடலை எதிர்பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டுடுவோம்!!!

      நன்றி. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
    2. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

      இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்தப்பாடல் நன்றாக இருக்கும். நல்ல பாடலை விரும்பி கேட்டதற்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  12. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
    எங்கும் நலமே நிறையட்டும்...

    பதிலளிநீக்கு
  13. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன் எங்கும் மகிழ்ச்சியே நிறைவதற்குப் பிரார்த்தனைகள்..

    பதிலளிநீக்கு
  14. இனிய பாடல்களுடன் இவ்வருடத்தின் முதல் பதிவு ....

    அதிலும் அந்த -
    இன்பம் பொங்கும் வெண்ணிலா!...

    கோல நிலவோடு கூடிய குளிர்த் தென்றல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோல நிலவோடு கூடிய குளிர்த் தென்றல்..//

      நன்றி. சிங்காரவேலன் கருணை.

      நீக்கு
  15. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    தங்களுக்கும், வலைத்தள சகோதர சகோதரிகளுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சகோதரி கோமதி அரசு அவர்களின் வாழ்த்துச் செய்தியும் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

    இன்றைய இரு பாடல்களும் அருமை. நிறைய தடவைகள் கேட்டு ரசித்திருக்கிறேன் இன்றும் பிறகு நிதானமாக கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. அருமையான பாடல்கள்...

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  18. யாவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் அன்புடன் காமாட்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா.  நமஸ்காரங்கள்.  உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

      நீக்கு
  19. இரண்டு வெவ்வேறு காலகட்டங்களுக்கான ரசிக்கத் தகுந்த பாடல்கள். இரண்டையும் கேட்டேன்.

    நல்ல நாளிது. நல்லதொரு காலத்தை நோக்கி வருடம் நகரட்டும்..

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    இன்று காலையிலேயே வழக்கமாக வரும் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களை காணவில்லையே? புத்தாண்டு பிஸியில் காலையில் வர இயலவில்லையா? அவர்களுக்கும் என அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை விசாரித்ததற்கு நன்றி கமலா. இன்னிக்குக் காலம்பரவே கு.கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல வந்து விட்டது. பின்னர் பெண்/பேத்திகளுடன் பேசியதில் மணி ஆகிவிட்டது. ஆகையால் கணினியைத் திறக்கவே இல்லை. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  21. எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யப் பெருமக்கள் அனைவருக்கும், மற்றும் இங்கே வந்து அளவளாவும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய சிநேகிதிகள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். அனைவர் வாழ்விலும் இந்தப் புத்தாண்டில் இருந்து மறுமலர்ச்சி தோன்றி அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   வணக்கம்.  நன்றி.  புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  22. இந்த வாரப் பாடல்கள் அனைத்துமே நன்கு தெரிந்த, அடிக்கடி கேட்ட பாடல்கள். எல்லாமே பிரபலமான பாடல்கள். ஒரு ஜிவாஜி, ஒரு ஜெமினி, ஒரு எம்ஜார்னு வைச்சிருக்கக் கூடாதோ? ரஜினி, கமல் (உலக்கை) வந்தாச்சு. இவங்கல்லே தான் ஜிவாஜியும், எம்ஜாரும் மிஸ்ஸிங்க். சாப்பிட்டுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எம் ஜி ஆர்  !பாடல்களில் எதுவும் நினைவுக்கு வரவில்லை.

      நீக்கு
  23. அனைத்து அன்புள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ சாமிநாதன் மேடம்..   வணக்கமும் நன்றியும்.  புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  24. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  26. அனைத்து blogகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  27. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துகள்! மூன்றுமே நல்ல பாடல்கள் என்றாலும் முதல் பாடல் மற்ற பாடல்களோடு ஜெல் ஆகவில்லையோ? இன்பம் பொங்கும் வெண்ணிலா பாடலில்  பத்மினி, ஜெமினியிரண்டு பேருமே எவ்வளவு அழகு? பாடல்களுக்கு மிகச் சரியாக வாயசைப்பவர்கள் சிவாஜியும், சாவித்திரியும். 

    பதிலளிநீக்கு
  28. எவ்வளவு அழகு என்பதற்கு பிறகு ஆச்சர்ய குறிக்கு பதிலாக கேள்விக்கு குறி வந்து விட்டது. 

    பதிலளிநீக்கு
  29. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். பிறந்திருக்கும் ஆண்டு உங்கள் அனைவருக்கும் சிறப்பாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
  30. இனிய பாடல்கள்! கட்டபொம்மன் படம் பாடல் செம கிளாரிட்டி! 👌
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் 'எங்கள் பிளாக்' நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  31. மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் (பத்து தேதி வரைக்கும் சொல்லலாம்னு எங்கேயோ படிச்சேன்! :)]

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!