பானுமதி வெங்கடேஸ்வரன் :
ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் ஒப்பிடவும்.
$ ஓன்று ஊமத்தை இலை. மற்றது ஆமணக்கு இலை.
# அரசியல் சார்ந்த, அரசியல் பிரமுகர்கள் பெயரைச் சொல்லி க் கேள்விகள் கேட்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்?
என்னை மாதிரியே நீயும் அவர்களை எடைபோடுகிறாயா, என்ன சொல்லி அவர்களைத் தாக்கிப் பேசலாம் என்ற நோக்கில்தான் பெரும்பாலும் இருக்கும். மாற்றாக, கேட்பவர் கருத்துக்கு எதிரான பதிலுக்கு வரவேற்பு இராது. நாம் போற்றுபவர்களைப் பற்றி யாரிடமும் "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று கேட்பதில்லை.
நீங்கள் கேட்கும் இருவரின் அரசியல் திறன்களும் இதுவரை பரிசோதிக்கப் படவில்லை. எனவே கருத்துச் சொல்வது இயலாத ஒன்று.
ஒருவர் தாய்க்கு நல்ல பிள்ளை. மற்றவர் அப்பா செல்லம். மற்ற எல்லா வகையிலும் நமக்கு அந்நியப்பட்டவர்கள்.
& ஒருவர் பாட்டியின் அரசியல் அந்தஸ்தால் அறியப்பட்டுள்ளவர். இன்னொருவர் தாத்தாவின் அரசியல் அந்தஸ்தால் திரையுலகுக்கு வந்து அப்புறம் அரசியலில் இறங்கியுள்ளார். இவர்களை பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பது எதிர்காலத்தில்தான் தெரியும்.
நெல்லைத்தமிழன்:
1. காலத்தால் அழிக்க முடியாத காவியம் என்றெல்லாம் சொல்கிறார்களே... அப்படி ஏதேனும் உண்டா, ராமாயணம், மஹாபாரதம் போன்றவை தவிர? வெத்து திரைப்படங்களுக்கும் திரைப் பாடல்களுக்கும் இதனை உபயோகிக்கிறார்களே!
# சிறுகதைகளில் கூட சில காலம் கடந்து நிற்கும் என்று சொல்லப் படுகிறது. என்றாலும் இராமாயணம், மகா பாரதம் போல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்பது அசாத்தியம் என்றே தோன்றுகிறது.
& அப்படி எதுவும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கும் நீதி நூல்கள் என்றால் திருக்குறள் முதலில் நிற்கிறது.
2. டிசம்பர் கச்சேரி இல்லாத கொரோனா காலத்தில் நீங்கள் மிஸ் செய்வது இசையையா இல்லை இரையையா (கேண்டீன்ல)
# இணையத்தில் பல கச்சேரிகள் கேட்டாலும் நேரில் நண்பர்களுடன் கேட்கும் நிறைவு இல்லைதான்.
காண்டீன் சிற்றுண்டியை ஒரு வசதியாக மட்டுமே பார்த்துப் பழகிவிட்டேன்.
3. சுயநலமில்லாமல் ஒரு மனிதனால் இருக்க இயலுமா?
# இயலாது என்றே நினைக்கிறேன். மகான்கள் விஷயம் எப்படியோ தெரியவில்லை.
& தன்னடக்கம் காரணமாக இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதைத் தவிற்கிறேன்!
4. நீங்கள் சாப்பிட விரும்பிய ஆனால் கிடைக்காத உணவு ஏதேனும் உண்டா?
# அம்மா செய்த அடை !!
& ஜிகர்தண்டா
5 பெற்றோர் மீது கடைசி வரை அன்பு செலுத்துபவர்கள், உடலுழைப்பால் அவர்களுக்குச் சேவை செய்வதற்கு மாத்திரம் சலித்துக்கொள்வதேன்?
# குழந்தைகளும் கிழடுகளாக ஆகிவிட்டது காரணமாக இருக்கலாம்.
6 மகனோ இல்லை அப்பாவோ தன்னைத் திட்டியதை மறந்துவிடும் மனம், பிறர் திட்டுவதை அவ்வளவு சுலபமாக மறந்துவிடுவதில்லையே. காரணம் என்ன?
# பிறருக்கு நம்மை மறுக்கும் உரிமை உண்டே தவிர திட்ட உரிமை இல்லை அல்லவா.
& அப்பா சில சந்தர்ப்பங்களில் திட்டியிருந்தாலும் வேறு பல சந்தர்ப்பங்களில் ஆதரவாக, அன்பாக தோழமையுணர்வுடன் நம்மிடம் பழகிய நாட்கள் பல இருந்திருக்கும்.
ஆனால் மற்றவர்கள் நம்மை புகழ்ந்த சந்தர்ப்பங்கள் எதுவும் இருக்காது - அப்படிப்பட்டவர்கள் நம்மை திட்டினால் நம்மால் அதை மறக்க இயலாது.
7 தியேட்டருக்குப் போய் இந்தப் படத்தைப் பார்க்கணும் என்று சமீபகாலங்களில் ஆசைப்பட்ட படம் எது?
# எதுவுமில்லை.
& டீ வி யிலேயே (அல்லது ஓ சி யிலேயே) எந்தப் படத்தையும் முழுசாகப் பார்க்கிற பொறுமை இல்லை - இதுல தியேட்டருக்குப் போய் நேரம், பணம் எல்லாத்தையும் வீணடித்து ஏதாவது படத்தைப் பார்ப்பதாவது!
8 இப்போ புதிதா வீகன் டயட் என்று கிளம்பியிருக்காங்களே.. பால், நெய், தயிர், ஜீனி தவிர்க்கணும்னு... இதெல்லாம் வியாபார தந்திரமா இல்லை ஏதேனும் அர்த்தம் உண்டா?
# அர்த்தம் இருப்பினும் அனுசரிப்பது கடினம்.
& ஒரு சாமியார் இருந்தாராம். அவர் எப்பொழுதுமே 'பால், நெய், தயிர், சீனி தவிர்த்து பழங்கள் மட்டுமே சாப்பிடுவேன்' என்று சொல்லி வந்தாராம். ஆச்சரியப்பட்டுப்போன நிருபர் ஒருவர் அது எப்படி சாத்தியம் என்று சாமியாரின் உணவறை சென்று அங்கிருந்த ஆளிடம் விவரம் கேட்டாராம்.
அந்த ஆள் சொன்னாராம். ' அதை ஏன் சாமி கேக்குறீங்க - சாமியார் பழைய கள் குடித்துவிட்டு கார சாம்பார் சாதம் சாப்பிடுவார். பழைய கள் என்பதைத்தான் பழங்கள் என்று சொல்கிறார் என்றார்!
9 பாம்பை நினைத்து பயம் உண்டா? நான் அதிகாலை செடி கொடிகள் மத்தியில் நடக்கும்போது, குறுக்கே பாம்பு இருக்குமோ என்று ஜாக்கிரதையாக கவனித்து நடப்பேன். அதுபோல
# இளமையிலேயே நிறைய பார்த்ததால் பயம் கிடையாது, ஆனால் அதைக் கொன்றபின் குற்றவுணர்ச்சி நிறையவே உண்டு.
10 யானை, ஒட்டகம் மீது சவாரி செய்ததுண்டா?
# யானை சவாரி ஒரு முறை.
& இல்லை.
11 உங்க வாழ்க்கையின் திருப்புமுனை என்று எதைச் சொல்வீங்க?
# ஜே கிருஷ்ண மூர்த்தி பேச்சைக் கேட்டதும் நூல்கள் படித்ததும்.
& Dale Carnegie புத்தகங்கள் படித்ததால் உண்டான தாக்கம்.
12 சென்னை போகும் சந்தர்ப்பம் கிடைத்தால் (சென்னையில் இருப்பவங்க, அவங்க சொந்த மாவட்டத்திற்குப் போகும் சந்தர்ப்பத்தில்) என்ன சாப்பிட ஆசை?
# மகள் வீட்டில் அரிசி மாவு உப்புமா.
& அப்படி எதுவும் சிறப்பாக (சாப்பிட) ஆசை இல்லை.
13 பயமில்லாமல் பேருந்து இரயில் பயணங்கள் சமீப எதிர்காலத்தில் (near future) சாத்தியமா?
# ஆறு மாதங்களுக்குப்பின் சாத்தியம் ஆகலாம்.
& உறவினர்கள் பலரும் இப்போ அப்படி பயணம் செய்துகொண்டுதான் உள்ளார்கள். நான் பேருந்து & இரயில் பயணங்கள் சென்று கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
= = = =
மின்நிலா சித்திரை சிறப்பிதழில் என்ன எல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்? இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.
= = = =
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க... வணக்கம். நன்றி!
நீக்குஅட? இன்னும் யாரும் வரலையா? கொஞ்ச நாட்களாக நான் தான் போணி பண்ண வேண்டி இருக்கு. அதுக்கு என்ன இலவசமாக் கிடைக்கும்? நம்ம புத்தி இலவசங்களைத் தானே எதிர்பார்க்கும்! :(
பதிலளிநீக்குமெதுவா வரலாமேன்னுதான்!
நீக்குஎன்னதான் யானையைப் பிடிச்சாலும் எனக்கு இந்த யானை சவாரி என்றாலே கொஞ்சம் இல்லை/நிறையவே பயம் உண்டு. அதுக்காகவே முதுமலைக்குப் போகாமல் தவிர்த்தேன். நம்மவருக்கும் கொஞ்சம் யோசனை தான்.
பதிலளிநீக்குஎனக்கெல்லாம் திருப்புமுனை என்றால் தெருக்களில் திரும்புவது தான்! மற்றபடி புத்தகங்கள் படிப்பதாலோ, சொற்பொழிவுகள் கேட்பதாலோ திருந்தும் ரகம் இல்லை. :( வீகன் உணவு புதுசால்லாம் கிளம்பலை. வெளிநாடுகளிலும், விமானப் பயணங்களிலும் ஏற்கெனவே இருந்தவை தான். ஆனாலும் நம்மால் அப்படி இருக்க முடியுமா? சந்தேகமே! என் பெண்ணின் சிநேகிதி ஒருவர் வீகன் உணவுகள் தான் எடுத்துக்கொள்கிறார். ஓட்டல்களுக்குப் போனால் கூட அம்பேரிக்காவில் வீகன் உணவுகள் கிடைக்கின்றன.
பதிலளிநீக்கு//எனக்கெல்லாம் திருப்புமுனை என்றால் தெருக்களில் திரும்புவது தான்! //
நீக்குஹா.. ஹா.. ஹா
😁
நீக்குசுப்புக்குட்டியார் (பாம்பார்) அம்பத்தூரில் இருந்தவரைக்கும் ரொம்பவே நட்பாகப் பழகி விட்டன. இப்போ இங்கே வந்தப்புறமாப் பார்க்கிறதே இல்லை. ஆனால் கீழே கார் பார்க்கிங்கிற்கு விஜயம் செய்வதாகச் சொல்கின்றனர்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குஇனிய காலை வணக்கம்..
பதிலளிநீக்குகுளிர் நாட்களில் இன்னும் உட்கார்ந்து கொள்ளவே தோன்றுகிறது.
கோமதி அரசு அவர்கள் ஊரில் ஆலங்கட்டி மழையாம்.
இங்கே 5'' பனி பதிவாகியிருக்கிறது.
தாமதமாக வருவதற்கு காரணம் வேண்டாமா:)
5" பனி !! நான் எல்லாம் போர்வைக்குள் முடங்கி வெளியே தலை காட்டமாட்டேன்!
நீக்குமனசுல 5" என்ன... 5 அடி பனி பெய்தாலும் சூப்பரா இருக்கும்னுதான் தோணுது.
நீக்குஆனா பாருங்க..மெட்ராஸ் வெயில் கொடுமையிலிருந்து தப்பித்து குளு குளு பெங்களூர் வந்துட்டோம் என்று நினைத்தால், பகல்லலாம் கண்ணாடி ஜன்னல்களை நன்றாகச் சார்த்திவிடுகிறேன், குளிர் காற்று வராமல் இருக்க.
அப்போ 5" பனிப்பிரதேசத்துல என்ன செய்வேன்னு தெரியலை..
:)))
நீக்குகேள்விகள் பதில்கள் வெகு சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குஅதற்கு நம் கீதாவின் பின்னூட்டம் இன்னும் சுவை.
ஹாஹா.
திருப்புமுனையா....யாராவது சொல்லி நாம் திரும்புவேனா
தெரியாது.
சாயந்திரம் பேர் சொல்லாததை நினைத்தாலே பயம் அதனால் சொல்ல முடியாது.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குvegan diet தொடர்ந்து உண்டு உடல் உபாதைகள் குறைத்த சிலரை அறிவேன் (including reversal of early diabetes). எல்லாமே வியாபாரம் தானே ஒரு பார்வையில்?
பதிலளிநீக்குராம லட்சுமணர்கள் காட்டில் சாப்பிட்டது வீகன் டயட் தானாம். அதனால் தான் அவர்களால் focus and energy தக்க வைத்துக் கொள்ள முடிந்தத்தாம்.
5 வருடங்களுக்கு vegan டயட் இருந்தால் body age அசல் வயதை விடக் குறையும் என்று சொல்கிறார்கள். (அதற்கு மேல் இருந்தால் பாப்பாவா மாறலாம்)
vegan diet தொடர்ந்து உண்டு உடல் உபாதைகள் குறைத்த சிலரை அறிவேன் (including reversal of early diabetes). எல்லாமே வியாபாரம் தானே ஒரு பார்வையில்?
பதிலளிநீக்குராம லட்சுமணர்கள் காட்டில் சாப்பிட்டது வீகன் டயட் தானாம். அதனால் தான் அவர்களால் focus and energy தக்க வைத்துக் கொள்ள முடிந்தத்தாம்.
5 வருடங்களுக்கு vegan டயட் இருந்தால் body age அசல் வயதை விடக் குறையும் என்று சொல்கிறார்கள். (அதற்கு மேல் இருந்தால் பாப்பாவா மாறலாம்)
vegan diet தொடர்ந்து உண்டு உடல் உபாதைகள் குறைத்த சிலரை அறிவேன் (including reversal of early diabetes). எல்லாமே வியாபாரம் தானே ஒரு பார்வையில்?
பதிலளிநீக்குராம லட்சுமணர்கள் காட்டில் சாப்பிட்டது வீகன் டயட் தானாம். அதனால் தான் அவர்களால் focus and energy தக்க வைத்துக் கொள்ள முடிந்தத்தாம்.
5 வருடங்களுக்கு vegan டயட் இருந்தால் body age அசல் வயதை விடக் குறையும் என்று சொல்கிறார்கள். (அதற்கு மேல் இருந்தால் பாப்பாவா மாறலாம்)
வம்பா போச்சே!!
பதிலளிநீக்குவம்பு ஒன்றும் இல்லை. பின்னூட்ட எண்ணிக்கையை கூட்ட உதவியிருக்கிறீர்கள். அவ்வளவே.
நீக்கு:)))))
நீக்கு@ அப்பாதுரை, ஒண்ணை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை நீங்களே நீக்கிடலாமே! :)))))
நீக்குமின் நிலா சித்திரை இதழ் சிறப்பாக அமையும்.
பதிலளிநீக்குமதுரையை விட சிறப்பான தலைப்பு உண்டா என்ன.
அதே போல் எல்லோருக்கும் ஒவ்வொரு ஊருக்கான அனுபவம் நிறைய இருக்குமே
அவற்றை எழுதச் சொல்லலாம்.
கவனத்தில் கொள்கிறோம்.
நீக்கு@கௌதமன் சார்! மதுரை பத்தி எழுதினா 7/8 பதிவுகள் வரும். பரவாயில்லையா? அப்புறமாச் சித்திரை மலர்னு பெயரை மாத்திட்டு "கீதா மலர்"னு பெயர் வைக்கும்படியா இருக்கும். :))))
நீக்குமதுரை பத்தி தானே எழுதப்போறீங்க? அப்புறம் எப்படி அது கீதா மலர் ஆகும்?
நீக்குஎன்னோட பெயரிலேயே ஒரு ஏழெட்டுப் பதிவு வந்தால் நல்லாவா இருக்கும்? உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். நீங்களே முடிவு பண்ணிக்கோங்க! :)))))
நீக்குகவலைப்படாதீங்க - நல்லா இருக்கின்ற கட்டுரைகளை என் பெயரில் வெளியிட்டுவிடுகிறேன் !
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம்! வாங்கோ.
நீக்குகேள்விகளும் , பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு//அம்மா செய்த அடை// - 1. அம்மா... நீ அப்போ செய்து தந்த மாதிரி இப்போ நீ தந்த அடை ருடிக்கலை? 2. அம்மா... அடை சூப்பரமா.... (அம்மா: இத ஒன் பொண்டாட்டி இருக்கும்போது சொன்னைனா இன்னும் சந்தோஷபா இருக்கும். பாவம்.. பொண்டாட்டி அந்தாண்டை போனப்பறம்தானே சொல்ல தைரியம் வருது)
பதிலளிநீக்கு1. போடா போடா... பொண்டாட்டி கைருசி உன்ன மயக்கி வச்சிருக்கு.
2. அப்போ மாதிரி நல்ல சாமான்லாம் இப்போ எங்கடா கெடைக்குது? பத்தாக்கொறைக்கு ஆட்டுரலுக்குப் பதில் இங்க ஒன் வீட்டுல கிரைண்டர்தான் வச்சிருக்க. முன்ன கொழவியைச் சுத்துனோம் இப்போ உரல் சுத்துது. அதாண்டா காரணம்
இதுல எது பொருத்தமான பதிலா இருந்திருக்கும்?
எல்லாமே.
நீக்குஎங்க வீட்டில் நம்ம ரங்க்ஸாகட்டும், எங்க பையர் ஆகட்டும் யார் சமைச்சாங்களோ அவங்க சமையல் நல்லா இருந்ததுன்னா நேரடியாச் சொல்லிடுவாங்க. நம்மவர் எப்போவுமே மனைவிக்கு(ஹிஹிஹி) பயப்படமாட்டார். பையரைப் பத்திச் சொல்லவே வேண்டம். சுயமாகச் சமைப்பதில் புலி! ஆகவே மத்தவங்க சமையல் அவருக்குப் பிடிச்சதுன்னா உடனே சொல்லிடுவார். :)))))
நீக்குமொத்தத்தில் என்ன சொல்ல வரீங்க ? குழப்பமா இருக்கு!
நீக்குகேஜிஜி சார்... இன்னுமா புரியலை? அவங்க வீட்டுல நல்லா சமைக்கத் தெரிந்தது கீசா மேடத்தின் பையர் மட்டும்தான் என்று சொல்றாங்க(ன்னு நான் புரிஞ்சிக்கிறேன் ஹி ஹி) ஏற்கனவே சொல்லியிருக்கேன்..சமையல் புலி என்றால் அது ஆண்கள் மட்டும்தான். பெண்கள் அந்த உயரத்தை அடைய முடியாது என்று. நான் சொன்னது சரிதான் என்று கீசா மேடம் ஒத்துக்கறாங்க(ன்னு நினைக்கிறேன்)
நீக்கு@கௌதமன், நம்மவர் கொஞ்சம் கூடப் பயப்படாமல் குற்றம், குறை கண்டு பிடிப்பார்னு சொல்றேன். பையரும் சமைக்கத் தெரிஞ்சதால் மத்தவங்க சமையல் பத்திச் சொல்லும்போது அவருக்குப் பிடிச்சிருந்தாத் தான் நல்லா இருக்குனு சொல்லுவார். அது மனைவியானாலும் சரி, அம்மாவானாலும் சரி! :))))
நீக்குநெல்லை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்கு// நம்மவர் கொஞ்சம் கூடப் பயப்படாமல் குற்றம், குறை கண்டு பிடிப்பார்னு சொல்றேன். பையரும் சமைக்கத் தெரிஞ்சதால் மத்தவங்க சமையல் பத்திச் சொல்லும்போது அவருக்குப் பிடிச்சிருந்தாத் தான் நல்லா இருக்குனு சொல்லுவார். அது மனைவியானாலும் சரி, அம்மாவானாலும் சரி! :))))// இப்போ கூட நம்மவரோ அல்லது பையரோ, யாருடைய சமையலை புகழ்கிறார்கள் என்று தெரியவில்லை.
நீக்குகேள்விகளும் பதில்களும் நன்று.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குநலம் வாழ்க எங்கெங்கும்..
வணக்கம்.
நீக்குஎன்னது வீகன் டயட்டா...? ஓ...!
பதிலளிநீக்குயானை சவாரி பற்றி எழுதியிருக்கலாம். நான் இரண்டிலும் சவாரி செய்துள்ளேன். (ஒட்டக சவாரி பஹ்ரைன்ல, யானை சவாரி தாய்லாந்தில்) இரண்டுமே சவாரி செய்வது கஷ்டம். எப்போதாவது படம் பகிர்கிறேன்.
பதிலளிநீக்குயானை படமா அல்லது ஓட்டகப்படமா?
நீக்குஅந்த இரண்டும் என் எடையைத் தூக்க முடியாமல் கஷ்டப்பட்டதா என்று நீங்க சரிபார்க்கும்படியான படத்தை
நீக்குபொங்கல் மலருக்கே படம் அனுப்பி வைக்காதவர், இதற்கு மட்டும் படம் அனுப்பிவிடுவாரா!!
நீக்குபகிர்ந்தாரே?
நீக்குஎன்ன, அந்துமணி போல முகத்தில் ஒரு கட்டம் அல்லது வட்டம் இருக்கும்!
நீக்கு:)))
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை நல்ல கேள்விகள். அதற்கு தகுந்த பொருத்தமான பதில்கள் அனைத்தையும் ரசித்தேன். வீகன் டயட் இப்போதுதான் விபரமறிந்து கொண்டேன். சாப்பாட்டுடனே பழங்களையும் சேர்த்து விருந்தாக பரிமாறுவதும், சாப்பிடுவதுமாக மட்டுமே இது நாள் வரை வாழ்நாளை ஒரு டைப்டாக கழித்திருக்கிறோம்.:) இதில் இந்த டயட் சூத்திரங்கள் எங்கிருந்து புரியப் போகிறது? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்களை இங்கே பார்த்து கொஞ்ச நாட்களாகி விட்டதே கமலா, நலமா?
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குநான் நலமாக உள்ளேன். என் இணைய தொடர்பு தான் முற்றிலும் நலமில்லாது போய் விட்டது. உங்கள் அனைவரையும் பார்த்து நாளாகிறதே...நீங்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறீர்களா என்பதை விசாரிக்க மிகுந்த ஆவல் கொண்டு இன்று எப்படியோ வலைத்தளத்திற்கு வந்து என் தளத்திலும் அதை குறித்த விபரமான பதிவுடன் வந்து குதித்து விட்டேன். என்னை காணாது அன்புடன் நீங்கள் விசாரித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சின்ன வயதில் யானை மீது உட்கார வைக்கப்பட்டிருக்கிறேன். என்னோடு உட்கார வைக்கப்பட்ட பக்கத்து வீட்டு பையன் கோவென்று,கதற, நான் தைரியமாக உட்கார்ந்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தேன்(நம்ப யாரு?)
பதிலளிநீக்குமஸ்கட்டில் டெஸர்ட் சவாரி முடித்த பிறகு ஒட்டக சவாரியும் விரும்பினால் போகலாம் என்றார்கள்.விரும்பவில்லை. ஆக்ரா சென்ற பொழுது ஒட்டகம் பூட்டிய வண்டியில் சவாரி செய்தோம். சிம்லா சென்றிருந்த பொழுது செய்த குதிரை சவாரியே போதும் போதும் என்றாகி விட்டது.
பக்கத்து வீட்டுப் பையன் பயந்தது 'யானையைக் கண்டு' இல்லை என்று நினைக்கிறேன்.
நீக்குGrrrrrrrrrrr...
நீக்கு@கௌதமன், அதானே!
நீக்குஅதான்!!
நீக்குஅரசியல் சார்ந்த, அரசியல் பிரமுகர்கள் பெயரைச் சொல்லி க் கேள்விகள் கேட்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்?
பதிலளிநீக்குஎன்னை மாதிரியே நீயும் அவர்களை எடைபோடுகிறாயா, என்ன சொல்லி அவர்களைத் தாக்கிப் பேசலாம் என்ற நோக்கில்தான் பெரும்பாலும் இருக்கும்.// அப்படி எந்த நோக்கமும் இல்லை. இந்தப் பகுதியை ஸ்வாரஸ்யமாக்கலாம் என்ற எண்ணம்தான். சினிமா, அரசியல், ஸ்போர்ட்ஸ், கரெண்ட் அஃப்ர்ஸ் போன்றவைதானே எப்போதும் சுவாரஸ்யம்.
# புரிந்துகொள்வாராக !! எனக்குப் புரிந்தது.
நீக்குஊமத்தை இலை, ஆமணுக்கு இலை இவற்றோடு ஒப்பிட்டிருக்கிறீர்களே? அந்த இரண்டிற்கும் மருத்துவ குணம் உண்டு இல்லையா?
பதிலளிநீக்குஆம் என்று நினைக்கிறேன். ஊமத்தை இலை வைத்தியம் பற்றி ஸ்ரீஹரி 'வீட்டு வைத்தியம் ' புத்தகத்தில் எழுதியுள்ளார்.
நீக்குஅப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்? நாட்டின் வியாதியான ஊழலுக்கு பாட்டியின் பேரனும், தாத்தாவின் பேரனும் நல்ல மருந்து என்கிறீர்களா?
நீக்குஹாஹாஹாஹா
நீக்கு// நாட்டின் வியாதியான ஊழலுக்கு பாட்டியின் பேரனும், தாத்தாவின் பேரனும் நல்ல மருந்து என்கிறீர்களா? // வைத்தியத்தில் இலைகளை அப்படியே பயன்படுத்தக்கூடாது. பதப்படுத்தி, வெளி உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தலாம். இந்த இலைகளும் அப்படியே! பதப்படுத்தப்பட்டால் - வெளி உபயோகத்திற்கு மட்டுமே!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குரசனையான கேள்வி பதில்கள் ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு# பதில் என்ன என்பதும்
பதிலளிநீக்கு& பதில் என்ன என்பதும்
எனக்கு தெரியவில்லை. பொதுவாக இரண்டும் சுவாரஸ்யமாக உள்ளன.
பதில் அளித்தவர்கள் வெவ்வேறு ஆசிரியர்கள்.
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு