புதன், 6 ஜனவரி, 2021

ரஜினி அரசியல் விலகல் குறித்து வாத, விவாதங்கள் தேவையா?

 


கீதா சாம்பசிவம் : 

கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் கலந்து கொண்டிருக்கிறீர்களா?

 # இல்லை இதுவரை.

& நாகை கோயில் விழாக்களில் - ஆடிப்பூரத் திருவிழா, மார்கழி மாத பஜனை, சூரசம்ஹாரம், மாரியம்மன் கோவில் செடில் உற்சவம் எல்லாம் பார்த்து ரசித்தது உண்டு. ஆடிப்பூர விழா கடைகளில் விளையாட்டு பொருட்களை ஆவலோடு வாங்கி விளையாடியது உண்டு. 

இப்போதெல்லாம் பொதுமக்கள் இல்லாமலேயே திருவிழாக்கள் நடைபெறுவதை ஆதரிக்கிறீர்களா?

# மக்கள் கூட்டம் இல்லாததற்கான காரணம் தெரிந்தபின் ஆதரிக்காமல் என்ன செய்வது ?

$ கூட்டம் இல்லை என்றால் அப்புறம் என்ன திருவிழா! 

இப்போது திருமணங்களில் நாதஸ்வரத்துக்குப் பதிலாகச் செண்டை, மேளம் வைக்கிறாங்களே, உங்களுக்கு அதன் தாத்பரியம் தெரியுமா? புரிந்து கொண்டிருக்கிறீர்களா?

# சத்தம் அதிகம் காட்சிக்கு ஆடம்பரம். மற்றபடி தாத்பரியம் ஏதுமிராது.

& இதுக்கெல்லாம் தாத்பரியம் இருக்கா! நீங்களே சொல்லிடுங்க. 

மெல்லிசைக்கச்சேரி, கர்நாடகக் கச்சேரி எது திருமணங்களில் நன்றாக இருக்கும்?

# மெல்லிசைக் கச்சேரியில் மேடையிலிருந்தும்,  கர்நாடகக் கச்சேரியில் ஆடியன்ஸிடமிருந்தும் வரும் இரைச்சல் காரணமாக இரண்டுமே ரசிப்பதில்லை. 

& திருமணங்களில் பாடப்படுவது மெல்லிசை அல்ல வல்லிசை. கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் திருமணக் கூட்டங்களுக்கு ஏற்றதல்ல. என்னைக் கேட்டால், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் நாட்டியம் / விகடம் / மேஜிக் ஷோ நடத்தலாம். 

ரிசப்ஷனில் பிள்ளை/பெண் வீட்டுக்காரர்கள் சேர்ந்து திருமண ஜோடியோடு ஆடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அது நல்லதா?

# பார்த்திருக்கிறேன். பிள்ளை அழைப்பில் நண்பர்கள் கூட்டம் ஆடுவதும் கூட. ஆடுபவர்களின் ஆனந்தம் அவர்களுக்கு நல்லதாகவே இருப்பதைக் காட்டுகிறது.  மேலும் விரசம் இன்றி ஆடுவதில் தவறுக்கு வாய்ப்பில்லை.

& கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக தோன்றினாலும் - அவரவர்கள் எது சந்தோஷமோ அதை செய்யட்டும் என்று கடந்து போய்விடுவேன். 

திருமண பந்தத்தின் உண்மையான அர்த்தமே மாறிக்கொண்டு ஒப்பந்தமாக மாறி வருவதை வரவேற்கிறீர்களா?

# "கடவுளுக்கு அஞ்சி பிடிக்காத பந்தத்தில் தவிப்பதைக் காட்டிலும் ஒப்பந்தமாக இருக்கும் திருமணம் விடுதலைக்கு வாய்ப்பளிக்கிறது அல்லவா ?

& நான் வரவேற்கிறேன் என்றாலோ அல்லது எதிர்க்கிறேன் என்பதாலோ எதுவும் மாறிவிடப்போவாதில்லை - அதனால் எனக்கென்ன கவலை! 

அடுத்த தலைமுறைத் திருமணங்கள் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

# இப்போது இருப்பது போலவே இருக்கும் ஆனால் ஆடம்பரம் சற்றுக் குறையும்.

ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகுவது குறித்து இத்தனை வாத, விவாதம் தேவையா?

# அவரே முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

& தேவையே இல்லை. தேர்தல் முடியும் வரை மீடியா மக்கள் ஏதாவது சென்சேஷனல் செய்திகள், விவாதங்கள் செய்துகொண்டுதான் இருப்பார்கள். 

அவர் வந்துவிட்டால் எல்லாவற்றையும் மாற்றிவிட்டுப் பாலும், தேனுமாக ஓட விட்டிருப்பாரா?

 # சாத்தியம் இல்லை.

& ஊ ஹூம் ! 

நம் மக்களால் ஏன் திரைப்பட நடிகர்களால் தான் நல்லாட்சி தர முடியும் என்பதைத் தாண்டி சிந்திக்க முடியவில்லை?

# அதுதான் பிரபலங்களின் பின்பலம்.

& பிரபலமாக உள்ளவர்கள் மீது ஏதும் அறியாத பாமர மக்கள் அப்படி நம்பிக்கை வைக்கிறார்கள். 

உங்களுக்குப் பிடிக்காத விளம்பரம் எது? ஏன்?

# அருவருப்பான படங்களுடன் புகை பிடிக்காதீர் குறும்படம்.

& நகைக் கடன் விளம்பரங்கள். ஏமாற்று விளம்பரங்கள் என்று தோன்றும். 

விளம்பரங்களில் ஜாதியை/அதிலும் குறிப்பிட்ட ஜாதியைச் சுட்டிக்காட்டி அவங்க கூட எங்க பொருட்களை வாங்கறாங்க என விளம்பரப் படுத்துவதால் என்ன லாபம்?

# அப்படி எந்தப் பொருள் யாரைச் சொல்லி விளம்பரம் செய்ததோ தெரியவில்லை. தரமான காபி மட்டுமே தமிழ் ஐயர் மக்களுக்குப் பிடிக்கும் என்பது போன்ற நம்பிக்கைகளின் அடிப்படையில் சில வரக் கூடும்.

ஹிஹிஹி, மாட்டி விடற ஒரு கேள்வி!
கார்ப்பொரேட், கார்ப்பொரேட் என்கிறார்களே! அது இல்லாமல் இருந்தால் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடிக் கொண்டிருக்குமா?
ஒரு காலத்தில் தொழிலுக்கு முன்னுரிமை கொடுக்கணும்னு சொல்லிட்டு இன்னிக்குத் தொழிலதிபர்களைக் குறித்து மாறுபட்ட கருத்துகளைச் சொல்லுவது சரியா?
அம்பானியும், அதானியும் மட்டும் தான் இந்தியாவில் கார்ப்பொரேட்டா? (மற்றவர்கள் டாடா, பிர்லா, பஜாஜ், தொலைக்காட்சி சானல்கள், பத்திரிகைக்குழுமங்கள், இன்ஃபோசிஸ், ஷிவ்நாடாரின் எச் சிஎல், காக்னிசன்ட், போன்றவை எல்லாம் கார்ப்பொரேட்டில் சேராதா? விடுபட்டவை நிறைய உள்ளன. பொதுவாக அனைவரும் அறிந்தவற்றை மட்டும் சொல்லி இருக்கேன்) 

$ அரை வேக்காடுகள் சொல்வதை எடுத்துக்கொண்டு ரியாக்ஷன் கொடுக்க வேண்டும் என்றால் எல்லையில்லாப் பிழைகளும் பிணக்குகளும் வருவது நிச்சயம்.

# நாட்டின் தொழில் வளம் பெருக கார்பொரேட் முயற்சிகள் மிக அவசியம் தான். அதே சமயம் கார்பொரேட் ஆதிக்கம், தலையீடு என்பதும் கண்ணுக்குத் தெரியாமல் இருந்து கொண்டு தான் இருக்கும். இதில் சரியான பங்கீடு இருக்கும் வரை பிரச்சினை இல்லை. ஏறுமாறாக ஆகும்போது சமப்படுத்தல் ஏதோ ஒரு வழியில் நிகழும். 
நம் போன்றோர் ஓரத்தில் நின்று வேடிக்கை பார்ப்பது தவிர வேறு எதுவும் செய்ய இயலாது.

நெல்லைத்தமிழன் : 

மளிகைக் கடைக்காரரும் கடவுளிடம் வியாபாரம் நல்லா நடக்கணும்னு வேண்டுவார். ஆஸ்பத்திரிகள், டாக்டர்கள், மயானத் தொழிலாளர்கள், டாஸ்மாக் என பலதரப்பட்டவர்களும் கடவுளிடம் அவரவர் தொழில் நல்லா நடக்க வேண்டிக்கொள்ளும்போது கடவுள் என்ன நினைப்பார்?

# கடவுள் என்ன நினைப்பாரோ அறியேன். "முன்பே விதித்தபடி நடக்கட்டும். வேறு நடவடிக்கை வேண்டாம்" என நோட் பண்ணிவிடுவாரோ என்னவோ.

&  

----
 
எங்கள் blog  - 2020 ஆம் ஆண்டு பதிவுகள் பற்றி -

உங்கள் ஆதரவோடு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதிவு என்பதை இந்த வருடமும் நிறைவேற்றி 366 நாட்களில் 366 பதிவுகள் வெளிவந்தன. 

லாக் டவுன் வருடம் என்பதால், பார்வையாளர்கள் வருகை பதிவர்கள் பலருக்கும் வெகுவாகக் குறைந்து போயிற்று. 

அதிகம் பேர் படித்த பதிவு :  கபசுரக் குடிநீரும் கடும் வயிற்றுவலியும்.. (வியாழன், 16 ஜூலை, 2020) 

அதற்கு அடுத்த இடத்தைப் பெற்ற பதிவு : சொந்தமாக ஒரு ரயில்  - டீனேஜ் ஆசை -  வியாழன், 11 ஜூன், 2020. 

அதிக கருத்துரைகள் இடம் பெற்ற பதிவு : புதன் 2020 - 04- 08: சுஜாதா நாவல்களில் எந்த நாவலில் வசந்த் என்ட்ரி?

அதற்கு அடுத்தபடியாக அதிக கருத்துரைகள் பெற்ற பதிவு : வியாழன் - ஆகஸ்ட் 6 2020 - விசித்திரக்கனவும் வித்தியாச அனுபவமும் - 

திங்கள் / செவ்வாய் பதிவுகள் குறித்த புள்ளி விவரங்கள் அடுத்த வாரம். 

= = = = = 


ஜனவரி 14 அன்று வெளியிடப்படும் உங்கள் மின்நிலா பொங்கல் மலர் 2021.

மொத்தம் 275 பக்கங்கள் (A4  size.)

அட்டைப்பட (முன் / பின்) மற்றும் கதைகளுக்கு ஓவியம் வரைந்தவர் : arunjawar

மலரில் நீங்கள் காணப்போவது முப்பதுக்கு மேற்பட்ட படைப்பாளிகளின்  படைப்புகள்!

12 கதைகள், 20 கட்டுரைகள், 7 கவிதைகள், படங்கள், புத்தக விமரிசனம், புதிர், அப்பாதுரை பதில்கள் என்று பல சுவையான பகுதிகள். 

மின்நிலா மின்னூல் வடிவில் மட்டுமே கிடைக்கும். 17 MB size.

பொங்கல் மலர் புத்தகத்தை படித்து முடித்த பின், மலர் பற்றிய உங்கள் விமரிசனத்தை பிப்ரவரி 28, 2021 முன்பாக engalblog@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். நிறை / குறைகள் எடுத்துச் சொல்லி, சிறந்த விமரிசனம் எழுதி அனுப்பும் பத்து வாசகர்களுக்கு பரிசு உண்டு.

மின்நிலா பொங்கல் மலரை, இமெயில் மூலமாக ஜனவரி 14 அன்று பெற விரும்புபவர்கள் உடனே engalblog@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு Please send me MINNILA pongal malar pdf through e mail” என்று மின்னஞ்சல் அனுப்பவும்.   


= = = =  

91 கருத்துகள்:

 1. கேள்வி பதிலை ரசித்தேன். பலர் பலவித கேள்விகள் கேட்டால் இந்தப் பகுதி இன்னும் சிறக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // பலர் பலவித கேள்விகள் கேட்டால் இந்தப் பகுதி இன்னும் சிறக்கும்.// வழக்கமாகக் கேட்பவர்களும், இதுவரை கேட்க நினைத்து கேட்காதவர்களும் கேளுங்க, கேளுங்க, நிறையக் கேளுங்க.

   நீக்கு
 2. மின்னிலா பொங்கல் மலர் எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க/படிக்க ஆவல். கேஜிஜி சாரின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

  லாக்டவுன் சமயத்தில் பார்வையாளர்கள் வருகை அதிகமாயிருக்கணுமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதோ அருகில் வந்து விட்டது பொங்கல் மலர் வெளிவரும் நாள்!

   //லாக்டவுன் சமயத்தில் பார்வையாளர்கள் வருகை அதிகமாயிருக்கணுமே//

   ம்ம்ம்ம்.....

   நீக்கு
 3. என் அம்மாவின் காரியங்கள் மின்மயானத்தில் நடந்தபோது, பண்ணிவைப்பவரிடம் உதவிக்கு வந்தவர், அடிக்கடி என்னைக் கூப்பிட்டு வாய்ப்புத் தாருங்கள் என்று சொன்னது நினைவில் வந்து கேள்வி கேட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். அப்படியும் கேட்கிறார்கள்தான். எனக்கு அலுவலகம் செல்லக் கிடைக்கும் வாடகை வண்டிகளிலும் இதுமாதிரி அனுபவங்கள் உண்டு. ஆனால் ஆளை ஏற்பாடு செய்தபிறகு அவர் பல சமயங்களில் கைவிட்டு விடுவதும் உண்டு.

   நீக்கு
  2. இப்போது நெல்லை தமிழரின் பதிலில் ஒரு விஷயம் புரிந்தது

   நீக்கு
 4. அனைவருக்கும் அன்பின் இனிய வணக்கம்.

  எல்லோரும் நோயின்றி மன நிம்மதியோடு
  இருக்க வேண்டும் இறைவன் அருளால்.

  பதிலளிநீக்கு
 5. அனைத்துக் கேள்விகளும் சுவாரஸ்யமானவை.
  பதில்களும் சுவையாகக் கொடுத்திருக்கிறிர்கள்.

  மின் நிலாவுக்கு இத்தனை வரவேற்பு இருப்பது
  அருமை.

  வரும் பொங்கல் நாள் இறைவன் அருளால்
  இனிமையாக வரவேற்கப் படட்டும். நல்ல நன்மைகளை அளிக்க வேண்டும்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகர சங்கராந்தி பலன் - மனித குலத்துக்கு மகிழ்ச்சி அளிக்கட்டும்.

   நீக்கு
 6. பதிவுகளைப் படிப்பவர் அனேகம் .
  பதிலிடுபவர்கள் குறைவு. எங்கள் ப்ளாஹுக்கு அத்தனை பிரச்சினை இல்லை என்று நம்புகிறேன்.
  தனிப் பதிவுகளுக்கு வருகையோ பின்னூட்டமோ,
  நம்மைப் பொறுத்தது.

  இது ஆதி நாட்களிலிருந்து வரும் வழக்கம் தானே.
  பின்னூட்ட அரசியாகக் கொண்டாடப்பட்ட
  நம் துளசி கோபால் சொன்ன கருத்துப்படி
  மொய் எழுதினால் மொய் கிடைக்கும்:)

  பதிலளிநீக்கு
 7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  என்றென்றும் நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 8. அனைவரது கடும் உழைப்புடன்
  சீரும் சிறப்புமாக மின் நிலா
  வெளிவர இருக்கின்றது..

  அன்பின் நல்வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 9. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. மின்நிலா பிரகாசமாய் ஜொலிக்க வாழ்த்துகள் ! அட்டைப்படம் சரியாக வந்திருக்கிறதா? ஜோக்காளர்கள் - ஜோக் எழுதுபவர்கள்/படம் வரைபவர்கள் பங்களிப்பும் இருக்கிறதா !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜோக்காளர்கள் - ஜோக் எழுதுபவர்கள்/படம் வரைபவர்கள் பங்களிப்பு இதுவரை இல்லை.

   நீக்கு
 11. அனைவருக்கும் காலை வணக்கம். பதில்கள் நியாயமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தன.
  கார்ப்பரேட் பற்றி கேள்விக்கு # பதில் 100% சரி.

  பதிலளிநீக்கு
 12. எதிர்காலத்தில் திருமண சம்பிரதாயங்கள் பல ஒரு இனத்தை சார்ந்ததாக இல்லாமல் கலந்து கட்டியாக மாறி விடும் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 13. நெ.த.வின் கேள்வி ஒப்புக்கொள்ளக் கூடியதுதான். எங்கள் உறவில் ஒரு இளைஞன் சிறுநீரகம் செயல் இழந்து,மாற்று சிறுநீரகம் பொறுத்துவதற்காக காத்திருக்கிறான். உறவினர்கள் யாரும் உதவும் நிலையில் இல்லை. தற்சமயம் வாரத்தில் மூன்று நாட்கள் டயாலிஸிஸ் செய்கிறார்கள். அவனுக்கு மாற்று சிறுநீரகம் கிடைக்க வேண்டுமென்றால் யாருக்காவது மூளைச்சாவு நிகழ வேண்டும். அவனுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளும் பொழுதெல்லாம் இந்த நினைவு வந்து அதை தடுக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிக்கும்போதே வருத்தமாகின்றது...
   எல்லாரும் அவருக்காக பிரார்த்தித்துக் கொள்வோம்...

   நீக்கு
 14. மி்ன் நிலா பற்றி எதிர்பார்ப்பு எகிறுகிறது.

  பதிலளிநீக்கு
 15. 2019 பதிவுகள் பற்றிய விவரங்களை 2020 ஆரம்பத்தில் தனிப்பதிவாக வெளியிட்டீர்கள். 2020ல் அதிகம் படிக்கப்பட்டது இரண்டுமே ஶ்ரீராமின் கை வண்ணமா? வெரி குட்! பாராட்டுகள். ஆனால் நீங்கள் உங்கள் முகத்தை காட்ட விரும்ப மாட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 16. கேள்வி பதில் அருமை... மற்றவைகளுக்கும் பாராட்டுகள்...

  பதிலளிநீக்கு
 17. கீசா மேடம் இன்னும் வரலையே....

  //திரைப்பட நடிகர்கள் நல்லாட்சி// - இதெல்லாம் ஒரு mythதான். திரைப்பட நடிகைகள்தீம் வெகு அழகு என மேக்கப் இல்லாத முகத்தைப் பார்க்காமலேயே நாம் கொண்டாடுவதில்லையா? திரையில் நல்லவர்களாக நடிப்பவர்கள் நிஜ வாழ்விலும் நல்லவங்க என்று நினைக்கிறோம். ரஜினி மாதிரி ஒரு சிலர்தாம் அதனையும் மீறி நம்மைக் கவர்வார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைவு கூர்ந்தமைக்கு நன்றி நெ.த. என்னை எந்த நடிகரும்,நடிகையும் கவர்ந்ததே இல்லை. நடிக்கும்போது அட, இவர் நல்லா நடிக்கிறாரேனு தோன்றும். அப்புறமா அது மறந்துடும்.

   நீக்கு
 18. //பொதுமக்கள் இல்லாத திருவிழாக்கள்// - கேள்வி சரியாக இல்லை. கோவில்களின் பாரம்பர்ய விசேஷங்கள் பொதுமக்கள் இல்லாவிட்டாலும் சாங்கியத்துக்காக நடக்கும். வீதி ஊர்வலம் போன்ற, பொதுமக்களை இன்வால்வ் செய்து நடக்கும் திருவிழாக்கள், சம்ப்ரதாயத்துக்காக கோவிலின் உள்ளேயே நடக்கும். அஷ்டே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோயிலின் உள்ளேயும் பொதுமக்களை அனுமதிக்காமல் நடந்தது மீனாக்ஷி கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குவது போன்றவை. வீதி ஊர்வலம் பற்றி நான் கேட்கவில்லை. பதில் சரியாகவே வந்திருப்பதால் கேள்வியும் சரியே! நம்மாழ்வார் மோக்ஷத்தின் போதும் கோயில் ஊழியர்கள், பரிசனங்கள் தவிர்த்தப் பொதுமக்கள் இல்லை. எப்போவும் கூட்டம் கூடும்.

   நீக்கு
 19. தாத்தாவை ஓய்வெடுக்க விட மறுக்கின்றார்களே... ரசிகர்கள்.

  தாத்தாவுக்கு முதல் தேர்தலிலேயே முதல்வராக வேண்டும் அடுத்த தேர்தல்வரை காலம் காத்தாருக்காது.

  அம்மாயிக்கு தேர்தலில் செலவு செய்ய மனமில்லை. காரணம் பள்ளி வாடகை கொடுக்கவே வரு"மானம்" இல்லை

  ரசிகர்களின் ஓட்டு மட்டுமே நிச்சயம் இதை வைத்து முதல்வராக முடியாது என்பது தாத்தாவுக்கு புரிகிறது

  ஆனால் ரசிகர்களுக்கு என்றுமே புரியாது காரணம் சரக்கு அவ்வளவுதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ killergee

   //தாத்தாவை ஓய்வெடுக்க விட மறுக்கின்றார்களே... ரசிகர்கள்.//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))))))

   நீக்கு
 20. இந்த வாரம் கேள்விகள் இரண்டு பேரிடம் மட்டுமிருந்து போலும்! பதில்கள் ஸ்வாரஸ்யம்.

  மின் நிலா பொங்கல் மலர் - வாழ்த்துகள்.

  2020 - தினம் தினம் ஒரு பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள் - இந்த ஆண்டும் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 21. ராத்திரி பனிரண்டு மணி வரை தூங்க முடிவதில்லை. ஏசி போட்டுக்கறதில்லை என்பதால் ஜன்னலைத் திறந்து வைக்கிறோம். இங்கே ஒரு குடியிருப்பில் உள்ளவங்க இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் குழாயை முழுவதுமாகத் திறந்து துணி தோய்ப்பது, பாத்திரம் தேய்ப்பது, மிக்சி போடுவது, வாஷிங் மெஷின், வாக்வம் க்ளீனர் போடுவது என பனிரண்டு வரை வேலை மும்முரத்தில் இருப்பாங்க. அவங்க பனிரண்டு மணிக்கு ஓய்ந்ததும் தான் தூங்க முடிகிறது. காலை ஐந்து மணிக்கு எழுந்தாலும் இன்னிக்கு ரொம்ப முடியலைனு மறுபடி போய்ப் படுத்துட்டேன். ஏழரைக்குக் கு.கு. கூப்பிட்டதில் தான் எழுந்து வந்தேன். அதான் காலையில் வரலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடியிருப்பில் உள்ளவங்க மத்தவங்களைப் பற்றியும் சிந்திக்கணும். பெரும்பாலான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அப்படி நடப்பதில்லை. இங்கயும் அவ்வப்போது, லாபியில் இரவு 9 மணிக்குப் பிறகும் லேடீஸ் சத்தம் போட்டுச் சிரிச்சுக்கிட்டிருக்காங்க, பசங்க 10 மணிக்குப் பிறகும் பில்டிங்கைச் சுற்றி சத்தம் போட்டு விளையாடறாங்க என்றெல்லாம் குழுமத்தில் கம்ப்ளெயிண்ட் வரும்.

   அது சரி..ஒருவேளை அவங்க நைட் ஷிஃப்ட் ஆட்களோ? ஹஸ்பண்ட் இரவில் வேலைக்குப் போனதும் வீட்டு வேலை, காலையில் வந்ததும் இருவரும் இரவுபோல ரெஸ்ட் எடுப்பது என்று இருக்குமோ?

   நீக்கு
  2. ஹாஹாஹாஹா, அந்தக் கணவர் தில்லியில் மாற்றலாகிப் போயிருக்கார். கணவரின் அம்மா, அவர் மனைவி(இன்ஷூரன்ஸில் வேலை. ஒன்பது மணி அலுவலகத்துக்குப் பத்து மணிக்கு அரக்கப்பரக்க ஓடுவாங்க) ஒரு சின்னப் பெண் 12 வ்யதுக்குள் இவங்க 3 பேர்தான். நாள் முழுவதும் அந்த மாமியார் வீட்டிலே தான் இருப்பாங்க. அந்தக் குழந்தை இப்போத் தான் ஆன்லைன் க்ளாஸ். இத்தனை காலமாப் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தாள். மருமகளும் அலுவலகம் போயிட்டுச் சாயங்காலமா வருவாங்க. மத்தியானம் பூராவும் என்ன செய்வாங்கன்னே தெரியலை! அவங்க வீட்டுக்கு மட்டும் வேலை செய்ய இரவில் தான் வருவாங்க! அவங்க எல்லோரும் காலை எட்டு மணிக்கு எழுந்துக்கறவங்களாம்.

   நீக்கு
 22. எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொன்னதுக்கு நன்றி. விளம்பரங்களைக் கூர்ந்து கவனித்தால் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரர்கள், ஆச்சி ப்ரான்ட் மசாலாப் பொடிகளைத் தான் வாங்கிக் குழம்பு வைப்பதாகக் காட்டுவார்கள். ஏற்கெனவே சாம்பார்ப் பொடிக்குச் சச்சுவை மாமியாராகப் போட்டுப் பின்னர் பலரின் எதிர்ப்பால் அதை நீக்கினாங்க. இப்போ மீண்டும்! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆச்சி மசாலா கிறிஸ்டியனுடையது என்று வாட்சப் செய்திகள் வந்தன..இந்துக்களே இந்த பிராண்டை புறக்கணியுங்கள் என்றெல்லாம். வியாபாரத்தில் மதம் வருவதால் அப்படி இல்லை என்று ஒவ்வொரு பிராண்டும் காண்பிக்க முயல்கின்றன. அதில் தவறில்லை.

   நீக்கு
 23. திரு கேஜிஜி அவர்கள் சொல்வது போல் இன்னொரு அருவருப்பான விளம்பரமும் உள்ளது. நான் சொல்வதும் கேஜிஜி சொல்வதும் ஒன்றுதானானு தெரியலை. சகிக்காமல் இருக்கு! :( இப்போக் கொஞ்ச நாட்களாகக் குழந்தை வேண்டாம்னு மறைமுகமாகச் சொல்லும் விளம்பரம் வருவதில்லை.

  பதிலளிநீக்கு
 24. கேஜிஜி சார், மின் நிலா பொங்கல் மலரை அனுப்பி வைச்சுடுங்க! நன்றி. இந்த வாரத்து மின் நிலா, போன வாரத்து மின் நிலா இரண்டுமே பார்க்கலை! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேஜிஜி சார்...எனக்கு பொங்கலை அனுப்பிவச்சுடுங்க... அதோட மின்னிலா மலரும்.

   நீக்கு
 25. மின் நிலா சுட்டியையே காணோமே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :))) என்ன சுட்டி? மின்நிலா இதழ்கள் - வாட்ஸ் அப் குழு மற்றும் facebook மின்நிலா குழுவில் மட்டுமே பகிர்கிறேன்.

   நீக்கு
  2. அட? திங்கற கிழமை பதிவில் கடைசியில் கொடுத்த மின் நிலாச் சுட்டியை இப்போத் தருவதில்லையா? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ அதைக் கூடக் கவனிக்காமல் இருந்திருக்கேனே! சரியான அசடு நான்!

   நீக்கு
 26. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 27. 1, எதிர்மறை விஷயங்கள் செய்திகள் எதுவும் சிலருக்கு பபார்க்கவோ கேட்கவோ பிடிப்பதில்லை இதன் காரணம் என்னவா இருக்கும் ? 
     
  2, The Greatest Showman  இந்த ஆங்கிலப்படத்தை தமிழில் ரிமேக்கினால் யார்  அந்த Hugh Jackman கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் ?
  A , சித்தப்பா ரஜினி 
  B , அங்கிள் கமல்  இந்த படத்தை கண்டிப்பாக பார்த்துவிட்டு பதில்  சொல்லவும் :)))))))))))


  3, எத்தனையோ வாத்தியக்கருவிகள் இருக்க நம் அன்றாட வாழ்வில் //ஜால்ரா //  மட்டும் அடிக்கடி இடம்பெறுவதேன் ??   
  4,  கோவிட் VACCINE பற்றி உங்கள் கருத்து ?

  5, இளைய தலைமுறை மூத்த தலைமுறையைவிட  விட சில விஷயங்களில்  அவதானமாக விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதில் உடன்படுகிறீர்களா ?

  6, நிஜ வாழ்க்கை உலகம் என்பது  வேறு ஆனால் அடிக்கடி மக்கள்  போலியான விஷயங்களில் திசை திருப்பப்படுவதன் காரணம் என்ன ? 

  7, Thug Life ..எல்லாருக்கும் வாழ்க்கையில் ஒரு சிறு ரௌடி பேபி அல்லது ரௌடி பையன் // நானும் ரவுடிதான் மொமெண்ட் .. அனுபவமாவது இருந்திருக்கும் .அப்படி உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்  எதாவது இருக்கா ?

  8, ஸ்கூல் படிக்கும்போது செய்த சில அற்ப விஷயங்கள் இப்போ படு அற்பத்தனமா  தோணுது  உங்களுக்கு அப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கா ?.உதாரணத்துக்கு ஒரு ரூபா காயின் போட்டு சும்மா தோணின நம்பருக்கு கால்போட்டு பேசியிருக்கோம் நானும் தோழிகளும்.இப்போ நினைச்சா அது தப்புன்னு தோணுது ..

  9, திருப்தியடைதல் /போதும் என்ற மனம் என்பது சிலருக்கு மட்டும் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கே அது ஏன்  ?

  10, சில விஷயங்கள் தவறு ஆனாலும் சிலநேரம் சரியாக மனசுக்கு தோணும் அப்படி உங்களுக்கு தோணியிருக்கா ?       

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 11, உலகமே பயத்துடன் அடுத்த நாளை எப்படியிருக்குமோ என  எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில் chennai சினிமா தியேட்டர்கள் திறப்பது அத்யாவசியமா ??

   நீக்கு
  2. 12, சிலர் மட்டும் எப்பவும் ஒருவித வன்மம்  ,குரோதம் ,வெறுப்பு ,ஆக்ரோஷம் போன்ற பிசாசு குணங்களுடன் திரிவதேன் ?இது பிறப்பால் அமைந்ததா ? அல்லது சூழ்நிலைகளால் அமைந்ததா ?

   நீக்கு
  3. பதில்கள் அளிப்போம். நன்றி.

   நீக்கு
 28. // என்னமோ நமக்காக மெனக்கெட்டு அரைக்கிறாங்களாமே!...//

  ஓசியில் கொடுத்தாலும் ஆச்சி நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்குவதில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன காரணம்..ன்னு சொல்லலாமே!...

   அந்தத் தயாரிப்புகளின் மீது விருப்பம் ஏற்படவில்லை.. அவ்வளவு தான்...

   நீக்கு
  2. ஆச்சி மட்டுமில்லை, எந்த திடீர்த்தயாரிப்புக்களையும் வாங்குவதே இல்லை. எல்லாம் வீட்டில் செய்து கொள்வது தான். மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் போன்றவை மட்டும் ஒரு மாமி அவங்க சொந்த மில்லில் அரைச்சுத்தருவது. பொருட்களையும் அங்கேயே வாங்கி அங்கே அரைச்சுக்கலாம், கோதுமை மாவு உட்பட.

   நீக்கு
 29. நான் மொத்தம் 12 கேள்வீஸ் கேட்டிருக்கேன் :)

  பதிலளிநீக்கு
 30. அருமையான கேள்வி பதில் தொடர்

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் சகோதரரே

  இன்றைய கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யமாக இருந்தது. அனைத்தையும் ரசித்தேன். அடுத்த வாரத்திற்கான கேள்வி கணைகளை தொகுத்து தந்திருக்கும் சகோதரி ஏஞ்சல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  மின்நிலா அழகான வடிவத்தில் பொங்கலன்று வெளி வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. எப்போதும் போல் எ.பியில் வராதா? அதை நாங்கள் வாங்குவதற்கு ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா? இல்லை இறுதியில் நீங்கள் தந்திருக்கும் விபரத்தின் அடிப்படையில், பதிந்தால் எங்கள் அனைவரது (எங்களுக்கே எங்களுக்கான ப்ளாக்) ப்ளாக் வசம் வந்து சேர்த்து விடுமா? இது குறித்து விபரமளிப்பதற்கு மிக்க நன்றி. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///அடுத்த வாரத்திற்கான கேள்வி கணைகளை தொகுத்து தந்திருக்கும் சகோதரி ஏஞ்சல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

   தேங்க்ஸ் கமலாக்கா :))))))))))
   அது என்னமோ தெரிலைன்னிக்கு சரமாரியா கேள்விகள் வந்துடுச்சி :) இதோட முற்றுப்புள்ளி இன்னிக்கு வச்சிக்கறேன் :))))))))))

   நீக்கு
  2. நன்றி சகோதரி

   கேள்விகளை கேட்பதற்கும் ஒரு அசாத்திய திறமை வேண்டும். அது உங்களிடம் நிறையவே உள்ளது. உண்மையிலேயே வியக்கிறேன். நன்றி.

   நீக்கு
  3. மின்நிலா சிறப்பிதழ் வாசகர்கள் குறிப்பிடும் மின்னஞ்சல் (email) முகவரிக்கு அனுப்பப்படும்.

   நீக்கு
 32. நான் எல்லாவற்றையும் படித்து ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் யாவும் அருமையாக இருக்கிறது அன்புடன்

  பதிலளிநீக்கு
 33. கேள்வி பதில்கள் ரசனை.
  மின் நிலா பொங்கல் மலர் மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!