திங்கள், 18 ஜனவரி, 2021

"திங்கக்கிழமை : எண்ணெய்க்கத்தரிக்காய் குழம்பு - ரேவதி நரசிம்மன்

​​'விட்டாச்சு லீவு...' என்று பாடாத குறையாக எல்லோரும், இரவு விழித்துப் பகலில் தூங்கிக் கொண்டிருக்கும் காலம்.

காரசார சமையல் பாட்டியின் பொறுப்பாயிற்று.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் சமையல் பொறுப்பு எடுத்துக் கொண்டேன்.
என் தோழி ,இதை வெகு ருசியாகச் செய்வாள்.அவளுடன் கூட இருந்து கற்றுக் கொண்டது அனேகம். இதெல்லாம் 30 வருடங்கள் முன்பு.
எங்கள் சிங்கத்துக்கு இந்த மாதிரி மசாலா சமையலில் விருப்பம் அதிகம்.
அங்கே கற்றுக் கொண்டதில் இந்த கத்திரிக்காய் க்ரேவி குழம்பும் ஒன்று.

இன்று செய்யும்போது இரண்டு மூன்று படங்கள் எடுக்க நினைவு வந்தது.
மற்றவர்கள் போலக் கோர்வையாக எடுக்கவில்லை.  மன்னிக்கணும்.

இன்று எடுத்துக் கொண்ட  மசாலா பொருட்களில் வெள்ளை எள்ளும் , வேர்க்கடலையும் முக்கியம்.  இணையத்திலும் சந்தேக நிவர்த்தி செய்து கொண்டேன்.

எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்புக்குத் தேவையான பொருட்கள்.

16 சின்னக் கத்திரிக்காய்.
அதற்குத் தேவை
2 மேஜைக் கரண்டி வெள்ளை எள்ளும்
2 மேஜைக்கரண்டி  வறுத்த வேர்க்கடலையும்.
இவற்றை முதலில் பொடித்துக் கொள்ள வேண்டும்..

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

எலுமிச்சை அளவு புளியை கோது போக, கெட்டியாகக் கரைத்து  வைத்துக் கொள்ள வேண்டும்.
-----------------------------------------------------------------------------

அரைக்க வேண்டிய பச்சை மசாலா.
ஒரு பெரிய வெங்காயம்,
நான்கு  பெரிய பூண்டு
6 கார பச்சை மிளகாய்,
இரண்டு இன்ச் இஞ்சி,
கூடவே இரண்டு டீஸ்பூன் தனியா பொடி,
ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி,
இரண்டு ஸ்பூன் கஷ்மீரி மிளகாய்ப் பொடி.
இவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளணும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில்  கொஞ்சம் மிளகு, ப்ரிஞ்சி இலை, இரண்டு ஏலக்காய், ஒரு ஸ்பூன் கசகசா, இரண்டு கிராம்பு போட்டு வறுத்துக் கொண்டு தனியே வைத்துக் கொண்டு, இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வகிர்ந்து வைத்திருக்கும்  கத்திரிக்காய்களை அப்படியே முழுதாகப் போட்டு கொஞ்சம் உப்பும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

வதங்கின காயோடு, தாளித்துவைத்திருக்கும் மிளகு,மற்றவைகளைச் சேர்த்து அடுப்புச் சூட்டில் மூடி வைக்கணும்.

அரைத்து வைத்த வெங்காயம் ,இஞ்சி பூண்டு,ப.மிளகாய்க் கரைசலை இத்துடன் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும்.இப்போது அரை உப்பு சேர்க்கலாம்.

அடுத்த வேலை புளிக்கரைசலை விடுவது.  இதற்குள் கத்திரிக்காய் பாதி வெந்திருக்கும், புளிவாசனை போனதும், பொடித்து வைத்திருக்கும்
வேர்க்கடலைப் பொடி, வெள்ளை எள்ளுப் பொடியப் போட வேண்டியதுதான்.

அடிக்கடி கிளறினால் கத்திரிக்காய் இரண்டு ஆக சந்தர்ப்பம் உண்டு. அதனால் எச்சரிக்கையுடன் இருக்கணும்.

மீண்டும் மூடிவைத்துவிட்டுப் பார்த்தால் எண்ணெய் பிரிந்து பார்க்கவே அழகாக இருந்தது.

அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலை இரண்டு ஆர்க் போடலாம். உப்பு சரிபார்த்துக் கொள்ளவும்.
புரிகிற மாதிரி எழுதி இருக்கிறேனோ தெரியவில்லை. தோழி என்னைப் பார்த்தால் சந்தோஷப் படுவாள்.

நன்றி ராஜகுமாரி டேவிட்.

எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.

அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்

68 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  அன்பு ஸ்ரீராம் சொல்லி இருந்தார் , 18 ஆம் தேதி வெளியிடலாம் என்று.

  நாட்கள் ஓடும் வேகத்தில் இதை மறந்து விட்டேன்.
  மிக நன்றி மா ஸ்ரீராம்.
  இன்னும் கொஞ்சம் கோர்வையாக எழுதி இருக்கலாம்.
  பேரனைக் கேட்டிருந்தால் புல்லட் பாயிண்ட்
  எல்லாம் வைத்து தட்டச்சு செய்திருப்பான்.

  செய்யத் தெரிந்த அளவுக்கு அதை அழகாக எழுதத் தெரியவில்லை.

  எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப்
  போனார் கதைதான்.
  ஆனால் இந்த எண்ணெய்க் கத்திரிக்காயை
  எல்லோரும் விரும்புவதால் அடிக்கடி செய்கிறோம்.
  படிக்கிறவர்கள் தான் பக்குவமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

  மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  நல்லாதான் எழுதி இருக்கீங்க...  இதற்கென்ன?   நானும் இதுமாதிரி ஒருமுறையாவது எண்ணெய் கத்தரிக்காய் செய்து சாப்பிடவேண்டும் என்று ஆவல்..

   நீக்கு
  2. அன்பு ஸ்ரீராம். நன்றி மா. சரி. எல்லோருக்கும்
   பயன் பட்டால் நல்லதுதான்.செய்து பாருங்கள். இங்கே வறுத்த கடலையே கிடைக்கும்.
   அதுவும் வெள்ளை எள்ளும் தான் முக்கியம்.

   நீக்கு
  3. இங்கேயும் மளிகைக்கடைகளில் கூட வறுத்த வேர்க்கடலை கிடைக்கிறது.

   நீக்கு
 2. செய்முறை மனதைக் கவர்ந்தது. இன்று நானே செய்துடணும்னு ஆவலா செய்முறையைப் படித்தால் வெங்காயம், பூண்டு சேர்ந்திருக்கு. ஐயோ.... பையன், மனைவிட்ட யார் வாங்கிக் கட்டுவது?

  படங்கள் அருமை. மோர் சாத்த்திற்கு அந்தக் கத்திரியை (மட்டும்) எடுத்துச் சாப்பிடத் தோணுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றாக இருக்கும் இங்கேயும ஒரு பேரனுக்கு கத்திரிக்காயும் பிடிக்காது. வெங்காயமும் பிடிக்காது:)

   நீக்கு
  2. நான் பூண்டு இல்லாமல் ஒரு நாள் செய்து பார்க்கிறேன்.

   நீக்கு
  3. அன்பு கீதாமா,
   எல்லோருக்கும் பிடித்த காய் கத்திரிக்காய். சின்னவனுக்குப்
   பிடிக்காது. அவனுக்காக வாழைக்காயில் ஏதோ
   செய்து கொடுத்தேன். அத்தனையையும் சாப்பிட்டான்:)
   பருப்புத் தொகையல் கூட.

   நீக்கு
 3. உங்கள் நினைவிலிருந்து, நீங்கள் உங்கள் அம்மா, பாட்டி ஆகியோரிடம் கற்றுக்கொண்ட சமையலை எழுதலாமே.

  சித்திரை புத்தாண்டு மலரில் ஒரு செய்முறை எதிர்பார்க்கலாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பா செய்யலாம் அன்பு முரளிமா.
   நினைவில் இருப்பதை எழுதுகிறேன் .நன்றி மா.

   நீக்கு
 4. இணையத்தில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்முறைல வெங், பூண்டு மசாலா இல்லாத செய்முறையைத் தேடுகிறேன். ஒருவேளை இந்தச் செய்முறையிலேயே அவற்றைத் தவிர்த்தால் சரியாக வருமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு முரளிமா, நான் கற்றுக் கொண்டது பூண்டு வெங்காயம் இல்லாமல் சமைக்கத் தெரியாத பெண்ணிடம் நம் இஷ்டம் படி செய்யலாம் மா. நன்றாகத்தான் இருக்கும்.

   நீக்கு
  2. நெல்லைத்தமிழன் நீங்கள் சாஸ்திரத்திற்காக வெள்ளைபூண்டு வெங்காடம் சேரக்கவில்லை என்றால் சரி ஆனால் அப்படி இல்லாமல் சேர்க்காமல் இருந்தால் மிக அருமையான சுவையை நீங்கள் ருசிக்காமல் இருக்கிறீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்..

   நீக்கு
  3. நெல்லைத்தமிழன் காயந்த மிளகாய் வெள்ளை எள் நிலக்கடலை கொஞ்சம் தேங்காய் கொத்தமல்லி விதைகள் போட்டு எண்ணெயில் வறுத்து எண்ணெய் கத்திரிக்காய செய்து பாருங்கள் அட்டகாசமாக இருக்கும் நான் இதோட வெங்காயம் சேர்த்து கொள்வேன் அவ்வளவுதான்

   நீக்கு
  4. @ Nellai Tamizhan: உங்களுக்கு வெங்காயம், பூண்டு பிடிக்காது என்றால் அவற்றை தவிர்க்கலாம். என்ன..? நெய் சேர்க்காத ஹல்வா போல இருக்கும். 

   நீக்கு
  5. பூண்டு, பிரண்டை, கண்டந்திப்பிலி போன்றவை எங்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை. நெஞ்செரிச்சல் அதிகம் ஆகிறது. இப்போக் கொஞ்ச நாட்களாக இஞ்சியும்! :(

   நீக்கு
  6. @பா.வெ. மேடம்... என்ன இப்படிச் சொல்லிட்டீங்க... நானெல்லாம் சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா வாங்கினாலும் முடிந்த அளவு எண்ணெயைத் துடைத்துவிட்டு/எடுத்துவிட்டுத்தான் சாப்பிடுவேன். சில சமயம் 'அவனில்' லைட்டா சூடுபடுத்தினா எண்ணெய் வழியும். அதையும் எடுத்துவிடுவேன்.

   பண்றேன்..எண்ணெய் கத்திரிக்காய்.... தவிர்க்கப்போகும் ஐட்டங்களையெல்லாம் தவிர்த்துவிட்டு.... அப்புறமும் அதன் பெயர் எண்ணெய் கத்தரிக்காய்தான். எண்ணெய், கத்தரி இரண்டையும் தவிர்க்கப்போவதில்லை என்பதால்.

   நீக்கு
 5. ..​​'விட்டாச்சு லீவு...' என்று பாடாத குறையாக எல்லோரும், இரவு விழித்துப் பகலில் தூங்கிக் கொண்டிருக்கும் காலம்.//

  அடடா! எங்கே போச்சு அந்தக் காலமெல்லாம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே இருக்கு அந்தக் காலம் ஏகாந்தன் ஜி.பெரிய பேரன் கல்லூரிப் பட்டம் வாங்கியதிலிருந்து அதுதான் நடக்கிறது.!!!

   நீக்கு
  2. இளைஞர்களுக்கு வரும். தூக்கம் வரும்போது தூங்கட்டும்.
   பின்னால் எங்கே நிம்மதி என்பதுபோல, எங்கே தூக்கம் எனத் தேடவேண்டிய நிலை பலருக்கு வந்துவிடுகிறதே!

   ரெஸிப்பி நாளுக்கு சம்பந்தமில்லாததை எழுதிக்கொண்டிருக்கிறேன் !

   நீக்கு
  3. பரவாயில்லை மா. எபி நமக்கு நல்ல மேடை.
   நம் எண்ணங்கள் செல்லும் வழி
   ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதில்
   நஷ்டம் ஏதும் இல்லை.
   ''காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே"
   பாடலும் அதைத்தான் சொல்கிறது.நன்றி ஜி.

   நீக்கு
 6. ஒவ்வொருவர் செய்யும் முறையும் வேறுவிதமாக இருக்கிறது செய்முறை எப்படி இருந்தாலும் டெஸ்ட் அவரவருக்கு பிடித்தமாக இருந்தாலே போதும்.. நீங்கள் நன்றாகத்தான் விளக்க முறை சொல்லி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 7. அன்பு துரை, மிக நன்றிம்மா. உங்களுக்கு இந்த முறை பிடித்திருந்தால் செய்து பாருங்கள்.ஆமாம் சோதித்து செய்யலாம்.

  பதிலளிநீக்கு
 8. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் வெங்காயம் பூண்டு இல்லாமலும் செய்ய தான் அதனால் என்ன அந்த வாசனை குறைவு மற்ற டேஸ்ட் இருக்கிறது பெருங்காயமும் சேர்த்தால் போகிறது நம் இஷ்டத்திற்கு ருசியை மாற்றிக்கொள்ளலாம் அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு காமாட்சிமா. உங்கள் செய்முறைகளைப் படித்துக் கொண்டு வருகிறேன்.
   பதில்தான் இடமுடியவில்லை. வேர்ட் ப்ரஸ் என்னை உள்ளைவிட அட்டகாசம்
   செய்கிறது:)
   மிக மிக நன்றி மா.

   நீக்கு
 9. இரவு நேரம் நன்றி எல்லோருக்கும் கடவுள் அருளுடன் காலை சந்திக்கலாம்.

  பதிலளிநீக்கு
 10. செய்யலாம் என்றது சிறிய தான் என்று வந்திருக்கிறது எப்போதும் இப்படி நாம் தவறு செய்கிறோம் ஹாஹாஹா அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் மா. நான் சிலசமயம் எழுத்துப் பிழைகளில்
   விஷயத்தை விட்டு விடுகிறேன்.
   முக்கியமாக ஐபாட் ல செய்யும் போது.
   நன்றி மா.

   நீக்கு
 11. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலமே வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய மாலை வணக்கம் அன்பு துரை செல்வராஜு.

   உங்களுக்கு மீண்டும் நன்றாக சமைக்கும்
   வாய்ப்பு கிடைக்கட்டும்.
   நம் ஊர் ஆற்றங்கரைக் கத்திரிக்காய்
   கிடைத்தால் நன்றாக இருக்கும்.
   எத்தனை விதமான கத்திரிக்காய் நம்மூரில் கிடைக்கும்!!!
   பிஞ்சு ,புழு இல்லாத சேலம் கத்திரிக்காய் நினைவில் வருகிறது.
   மிக மிக நன்றி மா.

   நீக்கு
 12. ஆகா.. எண்ணெய்க் கத்தரிக்காய்...
  சுவையோ சுவை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீக்கிரம் ஊருக்கு வந்து நல்ல சமையலைச் சுவைக்க
   ஆசிகள் மா.

   நீக்கு
 13. முன்பு சமையலறைப் பிரச்னை இல்லாத வரைக்கும் அடிக்கடி செய்யும் குழம்பு இது..

  கொள்ளிடத்துப் படுகை - திருவையாற்றுக் காவிரிக் கரை இங்கெல்லாம் விளையும் கத்தரிக்காய்கள் அதுவும் அந்த வெள்ளை நிறக் கத்தரிக்காய்கள்..

  பள்ளி நாட்களில் கொல்லைப் புறத் தோட்டத்தில் விளைவித்ததெல்லாம் நினைவுக்கு வருகின்றது...

  இப்போது இங்கு சில கத்தரி வகைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தியதால் தவிர்த்திருக்கிறேன்... எனினும்

  நேரம் கிடைக்கும் போது கத்தரிக்காய் சாம்பார் செய்யத் தவறுவதில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொள்ளிடத்துப் படுகை - திருவையாற்றுக் காவிரிக் கரை இங்கெல்லாம் விளையும் கத்தரிக்காய்கள் அதுவும் அந்த வெள்ளை நிறக் கத்தரிக்காய்கள்..// அதேதான், நாங்கள் அதை வெண்ணை கத்தரிக்காய் என்போம். 

   நீக்கு
  2. அன்பு துரை,
   கத்திரிக்காய் ஒவ்வாமை உண்மை. தோலில்
   பிரச்சினை ஏற்படுத்தும் காய்கறிகளில் அதுவும் ஒன்று.

   நல்ல வேளை நான் தப்பித்தேன்.

   நீக்கு
  3. அன்பு பானுமா,
   பின்னூட்டம் கொடுத்து ஊக்கப் படுத்தியதற்கு மிக நன்றி.

   நீக்கு
  4. எங்களுக்கு ஆஹார நியமம் என்று ஒரு rule உண்டு. அந்தப் புத்தகத்தில் (கூடாது என்று குறிப்பிட்டவைகள் பலவற்றை நாங்கள் பயன்படுத்துகிறோம், அல்லது அதில் சொல்லாததையும் நாங்கள் பயன்படுத்துகிறோம் உணவில்), வெள்ளை நிற கத்தரி உணவில் சேர்க்கக்கூடாது என்று சொல்லியிருக்கு. சமீபத்தில் அந்தப் புத்தகத்தைப் படித்தபோது (ஒருவருக்கு பதில் சொல்வதற்காகப் படித்தேன்) இந்த விஷயம் அதில் இருந்தது. Art Of Livingல், கத்தரிக்காய் உடலுக்கு சத்து எதுவும் தராத காய் என்று சொன்னார்கள்.

   எனக்கு ரொம்பப் பிடித்தது கத்தரிக்காய் தொகையல், அப்புறம் மனைவி செய்யும் புளிக்கூட்டு (மோர்க்குழம்புக்கு சூப்பரான காம்பினேஷன்). கைக்காத கத்தரி என்றால் பொடிதூவிக் கரேமது, சாம்பாரில் பெரிய கத்தரிக்காய் தான்கள். மற்றபடி வேறு எதுவும் பிடிக்காது.

   நீக்கு
  5. ஆஹார நியமம் 'படித்துவிட்டால்,
   உண்பது மிகச் சிரமம்.

   எங்கள் வீட்டுப் பையர் அதில் முயன்று கொண்டிருக்கிறார்.
   மருமகள் என்னம்ம இப்படிச் செய்கிறார் என்று கம்ப்ளைண்ட்:))))))

   நீக்கு
 14. இதே போல் செய்து பார்க்கிறோம்... நன்றி அம்மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு தனபாலன்,
   திண்டுக்கல்லில் வரிபோட்ட கத்திரிக்காயும்,
   பச்சை கத்திரிக்காயும் நன்றாகக் கிடைக்குமே.
   சுவைத்து சாப்பிடலாம். மிக நன்றி மா.

   நீக்கு
  2. ஆம், இயற்கையாக விளைவித்த (வரி உள்ள) கத்திரிகாய் அதிக சுவை கிடைப்பது உண்மை தான்...

   நீக்கு
  3. நன்றி தனபாலன். பழைய நினைவில் சொன்னேன்.
   பாடவரங்காய் என்று கூட ஒரு காய் வரும்.

   நீக்கு
 15. எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பிடிக்காதவர்க உண்டா? செய்முறையும், படங்களும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக நன்றி அன்பு பானுமா. ஆமாம்
   கத்திரிக்காய், உ.கிழங்குக்கு அடிமை என்று சொல்லாதவர்கள்
   மிக சொல்பம்.நன்றி மா.

   நீக்கு
 16. கீதா அக்கா, கமலா ஹரிஹரன் இவர்களை காணோமே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடுமையான வேலை நாட்களாக இருக்கின்றன. இன்று காலை ஐந்தரைக்குக் காஃபி குடித்ததும் சிறிது நேரம் படுக்கலாம்னு படுத்தேன். உடனே ஒரு தொலைபேசி அழைப்பு. இருவர் சாப்பிட வருகின்றனர். உடனே எழுந்து வேலைகளை ஆரம்பித்து விட்டேன். முதலில் வீடு பார்க்கும்படி இருக்கணுமே! அதை எல்லாம் முடித்துக் கொண்டு பத்து மணிக்குச் சமையலை ஆரம்பித்து அவங்களுக்குப் போட்டு நான் சாப்பிட்டு முடிக்கையில் 2 மணி! அவங்கல்லாம் 2 மணிச் சாப்பாட்டுக்காரங்க. எங்களுக்காக இன்று பனிரண்டரைக்கே சாப்பிட்டார்கள். பின்னர் சமையலறை சுத்தம் செய்து காலையிலேயே தோய்த்த துணிகளை உலர்த்திமுடித்துவிட்டு உட்காரும்போது மூன்றரை மணி! இப்போத் தான் கணினிக்கே வந்தேன். இப்போப் போயிடுவேன். ராத்திரிக்கு ஏற்பாடு பண்ணணுமே! :)))) இப்போல்லாம் வேலை செய்யும் வேகம் மிகவும் குறைந்துவிட்டது போல! :)))) நேரம் எடுத்துக் கொள்கிறேன்.

   நீக்கு
  2. கமலா ஏற்கெனவே என்னோட பதிவில் இந்த வாரம் வருவது சிரமம் எனச் சொல்லி இருந்தார்கள். அவங்களுக்கும் வேலை அதிகம் போல!

   நீக்கு
  3. அன்பு கீதாமா,
   விருந்து உபசாரம் உங்களை எப்பொழுதும் விடுவதில்லை.
   தளராமல் நீங்களும்
   செய்கிறீர்கள். எப்பொழுதும் உங்களுக்கு உடல் திறம் குன்றாமல் இருக்க வேண்டும்.
   மிக நன்றி மா. இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் இங்கே வந்து பின்னூட்டம்
   இட்டு கௌரவப் படுத்தி இருக்கிறீர்கள்.

   நீக்கு
 17. பெரும்பாலும் பலரும் கத்திரிக்காயை விரும்பமாட்டார்கள் ஆனால் இது அருமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு தேவ கோட்டைஜி,,
   ஆமாம் சில பேருக்குப் பிடிக்காது. எனக்கும்
   கொத்தவரங்காய் பிடிக்காமல் இருந்தது.
   இப்பொழுது கிடைக்காதா என்று
   ஆசையாக இருக்கிறது. நன்றி மா.

   நீக்கு
 18. எண்ணெய்க் கத்திரிக்காய் என்றதும் கத்திரிக்காய்க் கறி என நினைத்தேன். இது கிட்டத்தட்ட மராத்தியர் செய்முறை போல் இருக்கிறது. அவங்க தான் அதிகம் வெள்ளை எள்ளும், வேர்க்கடலையும் சேர்ப்பார்கள். சப்பாத்திக்கு நன்றாக இருக்கும் என நம்புகிறேன். நல்லாத்தான் எழுதி/சொல்லி இருக்கீங்க. படங்கள் எடுப்பது தான் எனக்கும் சிரமமான வேலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு கீதாமா,
   என் தோழி சேலம் ஆத்தூர்க்காரி.

   அவளுக்கு பிரியாணி செய்யும் போது தொட்டுக் கொள்ள இந்த எண்ணெய்க்
   கத்திரிக்காய் குழம்பு செய்வாள்.
   புளிப்பும் காரமுமாக நன்றாக இருக்கும்.
   நான் அங்கே செல்லும் காலம்
   சைவ சாப்பாடுதான் அவர்கள் வீட்டில்.
   மிக மிக நன்றிமா.
   இங்கே ஒரு மராத்திய மங்கை இருக்கிறாள்.
   சமையலில் வேர்க்கடலையும் வெள்ளை எள்ளும்
   கலந்தே இருக்கும். அதுவும் இந்த சாபுதானா...ஜவ்வரிசியில்
   நிறையவே சேர்ப்பாள். நன்றி மா.

   நீக்கு
 19. இது பொதுவாய் நாகூர் பக்கம் இஸ்லாமியர்கள் வீட்டில் பிரியாணிக்காக தொடுகையாக செய்யப்படும் சுவையான குழம்பு! முக்கியமாக நல்லெண்ணெயில் தான் முழுக்க முழுக்க செய்ய வேண்டும். தஞ்சாவூர் பக்கம் கிராமங்களில் விளையும் சின்ன சின்ன கத்தரிக்காய்களில் செய்தால் அத்தனை சுவையாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு மனோ சாமினாதன்,
   நீங்கள் சொல்வது உண்மை. என் தோழியும் ஒரு இஸ்லாமியரிடம் இருந்து கற்றதாகச் சொல்லுவாள்.
   அவர்கள் வீட்டில் எல்லாப் பண்டிகைக்கும்
   அவர் வந்து சமையல் செய்வார்.
   மிக் நன்றிமா.

   நீக்கு
 20. நானும் ஒரு இஸ்லாமிய சினேகிதியிடம் தான் கற்றுக்கொண்டேன். எள், வேர்க்கடலை, வெந்தயம், சீரகம் வறுத்து சேர்ப்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே அதே மனோ.
   அந்த மாதிரி கத்திரிக்காய்களை
   இங்கே பார்க்க முடிவதில்லை.

   நீக்கு
 21. வாவ் !!!! சூப்பரா இருக்கும்மா அந்த குழம்பு பார்க்க ..இதெல்லாம் நம்மூர் கத்திரிக்காயில் செய்ய நல்லா இருக்கும் .இதே முறையில் புளியை கொஞ்சம் குறைத்து தக்காளி ஒன்று சேர்த்து செய்தா வெஜ் ரைஸ் ,தேங்காய் சாத வெரைட்டீஸுக்கு சைட் டிஷ் நல்லா இருக்கும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு ஏஞ்சல்,
   ஆமாம் நம்மூர்க் கத்திரிக்காய் இங்கே கிடைப்பதில்லை. எல்லாம் அண்டை நாட்டில் விளைவது
   என்ன உரம் போடுகிறார்களோ என்று சந்தேகிப்பேன்.
   ஆர்கானிக் என்று சொல்வதால் சிறு சந்தோஷம்.

   தக்காளி சேர்த்தாலும் சுவைதான்.
   வேறு ருசி கிடைக்கும்.
   நாமாக ஏற்படுத்தும் ருசிகள் தானே இவை.!!!
   மிக நன்றி மா. செய்து பார்த்து சொல்லுங்கள்.

   நீக்கு
 22. அன்பின் எங்கள் ப்ளாக் குழுமத்துக்கும், ஸ்ரீராமுக்கும்
  மிக நன்றி.
  எத்தனையோ வல்லுனர்கள் இருக்கும் சபை இது.
  எனக்கும் அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சி.
  மனம் நிறை வந்தனங்கள்.

  பதிலளிநீக்கு
 23. இந்த முறையில் நான் செய்ததில்லை. செய்முறை செய்து பார்க்க தூண்டுகிறது. இருந்தால் ஒரு ஞாயிறு செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 24. நேரம் வரவழைத்துக் கொண்டு செய்து பாருங்கள் வெங்கட். மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
 25. பதில்கள்
  1. ஓட்டுக்குள் இருக்கும் கூட்டுப் பழங்களே - புளி..

   ஏறக்குறைய பத்துப் பழங்களைக் காம்பினில் இருந்து நீண்டு வரும் இழைகள் கூடை போலப் பின்னி ஒற்றைக் கூட்டிற்குள் இழுத்து அடைத்துக் கொண்டு இருக்கின்றன..

   உலர்ந்த ஓட்டைத் தட்டிப் பிரித்த பின் காம்பை நறுக்கி விட்டு புளியங் கொட்டையை நீக்கி விடுவர்...

   குழம்புக்குக் கரைக்கும் போது புளியம் பழச்சாறு கரைந்த பின் கையில் மிஞ்சுவது விதையின் மேல் தோலும் பழங்களை இணைத்திருந்த இழைகளுமே...

   இவையே கோது எனப்படும்..

   கோது என்றால் குற்றம் என்றொரு அர்த்தமும் உண்டு..

   புளியம்பழத்த்துக்குள் மிகப்பெரிய தத்துவம் ஒளிந்திருக்கின்றது..

   நீக்கு
  2. அப்பாடி நல்ல விளக்கம் அன்பு துரை செல்வராஜு.
   என்னால் இந்த அளவு விவரித்திருக்க முடியாது.

   கோதுடன் கரைத்து விட்டால் ,அது வழக்கம் இல்லைதான்.
   சிலசமயம் பெரிய சமையல்களில் ,ரசம் செய்யும்போது
   புளியை அப்படியே போட்டு விடுவார்கள்.

   அப்போது ரச மண்டியில் அது கிடைக்கும்.
   சத்திர வாசலில் காத்திருக்கும் இல்லாதவர்களுக்கு
   அந்தக் கோதையும் அகற்றி,
   சாதம் கலந்து போடுவதைப்
   பார்த்திருக்கிறேன்.
   அதுவும் தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரைத் திருமணம்
   ஒன்றில் பார்த்தது தான், நன்றி மா.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!