வெள்ளி, 15 ஜனவரி, 2021

வெள்ளி வீடியோ :  நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்ண உடை நானாக கூடாதோ தொட்டு தழுவ

 1954 ல் வெளியான படம் பொன்வயல்.  நடிகர் டி ஆர் ராமச்சந்திரன் தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம்.  படமே காணாமல் போய்விட்டதாம்.  தியேட்டரிலிருந்து மட்டுமல்ல, படச்சுருளே காணோமாம்.  கல்கி எழுதி கல்கியில் தொடராக வந்த பொய்மான் கரடு கதையைத்தான் டி ஆர் ராமச்சந்திரன் படமாக எடுத்து நடித்தார்.  கதாநாயகியாக நடித்தவர் அஞ்சலிதேவி.

சுத்தானந்த பாரதியாரின் பாடலுக்கு இசை துறையூர் ராஜகோபால சர்மா.


பொங்கலுக்காக அதிலிருந்து ஒரு பாடல். என் எல் கானஸரஸ்வதி குரலில் பொங்கலோ பொங்கல் என்கிற பாடல்!  நான் கேட்டதில்லை.  நீங்கள் எத்தனைபேர் கேட்டிருப்பீர்கள் என்று தெரிந்துகொள்ள ஆவல்.=============================================================================================================================

1972 ல் வெளிவந்த மாப்பிள்ளை அழைப்பு எனும் பப்படத்தில்  வெள்ளிக்கிழமை நாயகன் ஜெய்சங்கர்-மற்றும் விஜயலலிதா நடித்திருக்கின்றனர்.  இசை வி. குமார்.  பாடல்கள் வாலி.  படம் பற்றி பேச பெரிதாக ஒன்றுமில்லை.  தேடினாலும் விவரம் கிடைக்காது. முழுப்படம் யு டியூபில் கிடைக்கறது!  விரும்புபவர்கள் பார்க்கலாம். 

நமக்குத்தேவை இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு அருமையான எஸ்பிபி பாடல்!  (உனக்கு எல்லாமே அருமைதான் என்று மைண்ட்வாய்ஸ் விடுபவர்கள் பாடலைக் கட்டாயம் கேட்கவும்!) 

வி குமாரின் இனிமையான இசையில் வழக்கம்போல எஸ் பி பி குரல் இனிமை.  இதில் வருவது போல இல்லாமல் ரேடியோவில் கேட்கும்போது ஒரு சுண்டுவிரல் ஸ்ட்ரிங் சுண்டலைத் தொடர்ந்து தொடங்கும் எஸ் பி பி  குரல்...

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்
ஆசை கோடி பிறக்கும்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத்தடுக்கும்
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்
.
நூலாடும் சின்ன இடை
மேலாடும் வண்ண உடை
நானாக கூடாதோ தொட்டு தழுவ
நூலாடும் சின்ன இடை
மேலாடும் வண்ண உடை
நானாக கூடாதோ தொட்டு தழுவ

கையோடு என்னை அள்ளி
கண்ணா உன் கண்ணிரண்டும்
கையோடு என்னை அள்ளி
கண்ணா உன் கண்ணிரண்டும்
வாறாதோ பாடாதோ நான் துயில

அஞ்சி வரும் தென்றலுக்கு மயங்கி
முந்தி வரும் ஆசையிலே நெருங்கி
போகப் போக அத்தனையும் விளங்கி
நடக்கட்டும் கதை இன்று தொடங்கி
.
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்
.
தேராட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்று
கண்ணோட்டம் சென்றதென்ன என்னைத்தேடி
தேராட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்று
கண்ணோட்டம் சென்றதென்ன என்னைத்தேடி

பூந்தோட்டம் தன்னைக்கண்டு
நீரோட்டம் போலே இன்று
பூந்தோட்டம் தன்னைக்கண்டு
நீரோட்டம் போலே இன்று
பாராட்ட வந்தேன் இங்கு உன்னைத்தேடி

புத்தகம் போல் பூவே உன்னைப்புரட்ட
பள்ளியறை பாடங்களை புகட்ட
முக்கனியும் சக்கரையும் திகட்ட
முப்பொழுதும் இன்பசுகம் இனிக்க
.
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்
ஆசை கோடி பிறக்கும்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத்தடுக்கும்
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்.  

23 கருத்துகள்:

 1. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் எங்கள் ஊரிலிருந்து
  இனிய பொங்கல் நன்னாள் வாழ்த்துகள்.

  அனைவரும் என்றும் ஆரோக்கியம், அமைதியுடன்
  இருக்க இறைவன் அருள வேண்டும்.
  பொங்கல் இனிப்பு நாவில் இருக்கும்போது
  எப்போதும் நல் வார்த்தைகளே வரவேண்டும்.
  அது மனத்தில் இறங்கிய பின் நல் நினைவுகளே
  எங்கும் உலவ வேண்டும்.
  அன்பு ஸ்ரீராம், அன்பு துரை இன்னும் வரப்போகிறவர்களுக்கும்
  இனிய காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...   வணக்கம்.  வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
  2. பொன் வயல் படப்பாடல்கள் நன்றாக
   இருக்கும்.
   ஓடியதா என்றெல்லாம் நினைவில்லை. எங்களுக்குத் துணை ரேடியோ
   சிலோன் மற்றும் தெற்காசிய நேயர்களுக்கான
   தில்லி தமிழ் ஒலிபரப்பும்.!!!!!!!!!!
   இந்தப் பொங்கல் பாடல் நன்றாக இருந்தது.
   கூடவே வந்த பாடல் வரிகளும் இனிமை.

   அடுத்து வரும் ஜெய்சங்கர் பாடல் ரொம்ப பாபுலர்.

   நீக்கு
  3. 'ஆசை....என்று சுசீலாம்மா இழுத்துப் பாடுவது எல்லோருக்கும் வருமா
   தெரியாது.
   உள்ளத்தில் நூறு நினைத்தேன்...எஸ்பி பியின் குரல்
   இனிமை சொல்லவே வேண்டாம்.

   எங்கே கீதாமாவைக் காணவே இல்லை!!!

   நாந்தான் மிஸ் பண்ணிவிட்டேன். நேற்றுப்
   பதிவின் பின்னூட்டங்களைப் பார்க்கிறேன்.

   கீதா ரங்கன், பானுமதி வெங்கடேஸ்வரன் இருவரும் அழைத்துப் பேசியது
   மந்துக்கு ஆறுதல்.
   எங்கள் ப்ளாகிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

   நீக்கு
  4. சகோதரி வல்லிசிம்ஹன் அவர்களுக்கு இனிய வணக்கங்களுடன் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
  5. என்னைத் தான் கேட்கறீங்கன்னா, காலை வேளையில் இப்போதெல்லாம் உட்கார நேரமே இருப்பதில்லை. மொத்தமாக மத்தியானமாத் தான் வரேன்.

   நீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. கல்கியின் பொய்மான் கரடினைப் படித்தவுடன் அந்த இடத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் வரவே அங்கு சென்று வந்த நினைவு இன்னும் உள்ளது.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாடல்களை ரேடியோவில் கேட்டு ரசித்திருக்கிறேன். இங்கு பதிந்தமைக்கும், விபரங்களுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. பொன்வயல் பாடல் இலங்கை வானொலியில் கேட்டு இருக்கிறேன் ஜி

  பதிலளிநீக்கு
 8. பாடல்கள் இனிமை...

  SPB ரசிகர் ஆன பின் மைண்ட்வாய்ஸ் அவசியமில்லை...?

  பதிலளிநீக்கு
 9. "உள்ளத்தில் நூறு நினைத்தேன்" பலதடவை கேட்டிருக்கேன். நல்லா இருக்கும். முதல் பாடல் இப்போதான் கேட்கிறேன். அதுவும் இனிமையா இருக்கு.

  பதிலளிநீக்கு
 10. //மாப்பிள்ளை அழைப்பு எனும் "பப்படத்தில்"// ஹாஹாஹாஹிஹிஹிஹி, ஹுஹுஹுஹூ! ஹே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!விவிசி, விவிசி!

  பதிலளிநீக்கு
 11. இந்தப் "பப்படங்கள்" எல்லாமே அறியாதவை, தெரியாதவை. பாடல் மட்டும் எங்கே கேட்டிருக்கப் போறேன். இஃகி,இஃகி,இஃகி

  பதிலளிநீக்கு
 12. இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. பொங்கலுக்காக ஒரு பாடல் - நன்று. இரண்டு பாடல்களுமே கேட்டதில்லை ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!