வியாழன், 28 ஜனவரி, 2021

பக்கம் பார்த்துப் பேசு

 சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும்போதோ அல்லது பொது இடங்களிலோ நமக்குள் பேசிக்கொண்டாலும் அருகில் தாண்டிச்செல்வோரை  சில நேரங்களில் அது புருவம் உயர்த்த வைக்கும்.  ஏனெனில் நாம் அந்த நேரம் பேசும் ஓரிரு வார்த்தைகள்  அவர்களைக் குறிப்பதாக பொருள் கொள்ள வைத்து விடும்.

இதுமாதிரி சந்தர்ப்பங்கள் நம் எல்லோருக்குமே எப்போதாவது அமைந்திருக்கும்.

அறிமுகமில்லாதவர்களாக இருந்தால் தாண்டிச் சென்று விடலாம்.  ஏற்கெனவே அறிமுகமானவர்களாக இருந்தால் கொஞ்சம் கஷ்டம்தான்.  அவர்களாக எதுவும் விளக்கமும் கேட்க மாட்டார்கள் (பெரும்பாலும்)  எப்படிக் கேட்பார்கள்!  நாமாகச் சென்று விளக்கமும் சொல்ல முடியாது!

புரிந்தவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை; புரியாதவர்களுக்குச் சொல்லிப் பயனில்லை தத்துவம்தான்!

எங்கள் அலுவலகத்தில் சாதாரணமாக ஒரு பிராஞ்சுக்கு உயர் அதிகாரி விசிட் செய்தால் மற்ற கிளைகளிலிருந்து எப்போ வந்தார், என்ன செய்தார் என்று விசாரிப்பதுண்டு.  புதிதாகப் பொறுப்பேற்றிருந்த அந்த உயர் அதிகாரி  சென்ற வாரம்  எங்கள் கிளைக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்திருந்தார்.

என்னிடம் வந்து "உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்..   இப்போதுதான் பார்க்கிறேன்"

"நல்லவிதமாதானே மேடம்?"

"ஹா...   ஹா...  ஹா...   ஆமாம்..  ஆமாம்...  நீங்கள் இப்படிக் பேசுவீங்கன்னும் சொல்லி இருக்கிறார்கள்"

யார் சொல்லி இருப்பர்கள் என்று எனக்குத் தெரியும் என்பதால் நான் அதுபற்றி எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

அப்புறம் கொஞ்ச நேரம் அதிகாரி போல் இல்லாமல் நட்பு ரீதியில் பேசிக்கொண்டிருந்து விட்டுச் சென்றார். 

புதிதாக வந்த அந்த உயர் அதிகாரி பெண் அதிகாரி.  

வழக்கம்போலவே மறுநாள் வேறு ப்ராஞ்சில் பணிபுரியும் தோழி போன் செய்தார்.     தகவல் இப்படித்தான் எப்படியோ பரவி விடும்.  உடனே ஆங்காங்கிருந்து விசாரிப்புகள் வரும்!

தோழி ஃபோனுக்கு வருகிறேன்.  சாதாரணமாக எப்போ வந்தாங்க, என்னென்ன பார்த்தாங்க என்னென்ன கேட்டாங்க, ஏதாவது கொக்கி, உண்டா போன்ற கேள்விகள் எல்லாம்தானே கேட்கப்படும்?  தோழி சுருக்கமாகக் கேட்ட கேள்வி   "எப்படி இருக்காங்க ......?"

என்னுடைய பதில்

"உயரமா இருந்தாங்க...    கொஞ்சம் குண்டா இருந்தாங்க...     சிவப்பா இருந்தாங்க...   அழகா இருந்தாங்க... கைண்டா இருந்தாங்க..."

கட் பண்றோம்.  லொகேஷன் சேன்ஜ்!

எங்கள் வீட்டின் பக்கத்துக்கு கதவு காலி செய்து இரண்டு மாதங்களான நிலையில் ஒரு புதுக்குடித்தனம் வந்திருக்கிறது.  புதிய இளஞ்ஜோடி.  காதல் திருமணமாக இருக்கவேண்டும்.  இருக்க வேண்டும் என்ன, அதுதான்.    வீட்டை எதிர்த்துத் திருமணம் புரிந்திருக்கிறார்கள் போல..  அறிகுறிகள் தெரிந்தன.

அவர்கள் வந்த நாளிலிருந்து எங்கள் வீட்டிலிருந்து கத்தி, ஏணி, ஸ்டூல் என்றெல்லாம் கடன் வாங்கி (அதில் கத்தியைத் திருப்பித் தரவில்லை!) வீடு செட் செய்திருந்தார்கள்.

அந்தப் பெண் வீட்டில்தான் இருப்பார்.   மதிய நேரம் என்பதால் கணவர் வேலைக்குச் சென்றிருந்தார் என்று நினைவு.

தோழி போன் செய்த நேரம் எங்கள் வீட்டில் சில வேலைகள் செய்ய வேண்டி இருந்தன.  முக்கியமாக புக்ரேக்.  அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அது சம்பந்தப்பட்ட இரண்டுபேர் ஐடியா கேட்க வீட்டுக்கு வருவதாக போன் செய்ய,  தோழியை ஹோல்டில் போட்டுவிட்டு அவர்களிடம் பேசி மேலே வரச்சொல்லிவிட்டு, கட்செய்து தோழி போனை மறுபடி உயிர்ப்பித்து அவர்களுக்காக கதவைத் திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கருகில் நின்றுதான்  மேற்சொன்ன வசனத்தைப் பேசினேன்.

பக்கத்து வீட்டுக் கதவு படாரென்று அறைந்து சாத்தப்பட்டதன் காரணம் அப்போது புரியவில்லை! 

========================================================================================================

அதிரா தனது தளத்தில் பின்னூட்டப் பகுதியில் வழக்கம் போல ஒரு படம் போட்டிருந்தார்.  மெயில் பாக்ஸில் அதை க்ளிக் செய்தால் என்ன படம் என்று தெரியும்.  சமீபத்தில் அப்படி தந்த ஒரு லிங்க்கை க்ளிக் செய்ய எரர் மெஸேஜ் வந்தது.  அது பார்க்க மிகவும் கவர்ச்சியாய் இருந்ததால் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து விட்டேன்!======================================================================================================

ஜனவரி 2014 இல் நான் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தது இது...


கவிதை பற்றி திரு அசோகமித்திரன் 'தி இந்து' வில்!
கே : இப்போது தமிழ் வளர்ச்சித் துறையின் திருவிக விருது கிடைத்துள்ளது. மிக நீண்ட பயணத்திற்குப் பிறகுதான் தொடர்ந்து விருதுகளால் அங்கீகரிக்கப்பட்டுவருகிறீர்கள்...
விருது கொடுக்கிறார்கள். சந்தோஷம். விருதுகொடுப்பதில் நிறைய பேருக்கு மகிழ்ச்சி. அவ்வளவுதான். தொண்டு கிழம் ஆன பிறகு விருதுகொடுக்கிறார்கள். பலபேர் விருது இல்லாமலே இறந்துவிடுகிறார்கள். எனக்கு 82 வயதாகிவிட்டது. சாரல் விருது விக்கிரமாதித்யனுக்குக் கொடுக்கிறார்கள். ஆனால் எனக்குக் கவிதை குறித்தே பொதுவாக நிறைய சந்தேகம் இருக்கிறது. எப்போதும் எனக்குக் கவிதை குறித்துச் சந்தேகம் உண்டு. கவிதையைப் புனித வாக்கு என்கிறார்கள். கொஞ்சம் முயற்சி எடுத்தால் யார் வேண்டுமானாலும் அந்தப் புனித வாக்கை எழுதிவிட முடியும்.
கே : இது பொதுவாகக் கவிதை குறித்த உங்கள் அபிப்ராயமா?
ஆம். ஆரம்பத்தில் கவிதை ஏன் அப்படி எழுதப்பட்டது என்றால் எழுதிய அந்தச் சாதனம் வெகுநாள் இருக்காது. ஓலைச் சுவடிகள் 150 வருஷத்திற்குள் உதிர்ந்துபோய்விடும். அதனால் மனப்பாடமாக வைத்துக்கொள்வதற்காக எதுகை, மோனை, அலங்காரங்கள் வைத்து எழுதினார்கள். மகத்தான படைப்புகள் எல்லாம் இருக்கின்றன. நான் இல்லை என்று சொல்லவில்லை.
கே :  கவிதை குறித்த சந்தேகம் தமிழ்க் கவிதைக்கு மட்டுமானதா?
எனக்குத் தெரிந்த மொழியில் இருக்கும் கவிதைகள் எல்லாம் சந்தேகமானவைதாம். நான் கவிதை எழுதியதில்லை. ஆனால் எனக்கு நெருங்கிய நண்பர்கள் கவிஞர்களாக இருக்கிறார்கள். நண்பர் வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன் போன்றோர்.

==========================================================================================================

இந்தமுறை புயல் ஏமாற்றவில்லை என்றாலும் முன்னர் அப்படி ஏமாற்றிய காலத்தில் எழுதியது!=====================================================================================================

பொக்கிஷம் :

படத்தைத் தனித்தனியாக க்ளிக் செய்து படித்தால் படிக்க முடியும் என்று நம்புகிறேன்.1960 களில் வாசகர்களுக்கு சொல்லப்பட்ட யோசனை...

========================================================================================================

விளம்பரங்கள் பழசு :

லியோ காஃபி விளம்பரம்.  ஏ ஆர் ரெஹ்மான் இசையில் உருவானது.  அர்விந்த் சாமி நடித்தது!


117 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. காலை வணக்கம் அனைவருக்கும்.

  இன்றைய கதம்பம் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 3. வாழைக்காய் பதப்படுத்தும் முறை புதிது. சில வாரங்களுக்குமுன் ஒருவர் முப்பது வாழைக்காய்களை (கொஞ்சம் ஒல்லியா இருந்தது)) கொடுத்தார்... எனக்கென்னவோ குளிர்சாதனப் பெட்டியில் சில நாட்கள் வைத்தாலே காய்கறி இறந்துவிடுகிறது எனத் தோன்றும். பயன்படுத்தப் பிடிக்காது. இதில் துண்டம் போட்டு காயவைத்து.... இது என்ன மாங்காயா ருசிக்குச் சாப்பிட?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும் நீண்ட நாட்களுக்கு வைத்துக்கொள்ள முடியாது.   இங்கு சொல்லி இருக்கும் முறையில் யாராவது செய்து பார்த்திருப்பார்களா, தெரியாது!  ஐந்தாறு வருடங்கள் வேண்டாம், ஐந்தாறு வாரங்கள் இருந்தாலே போதுமே!

   நீக்கு
  2. இந்த மாதிரி நிறைய வாழைக்காய்கள் கிடைக்கும்போது நான் நன்றாக மொறுமொறு வறுவல் பண்ணி வைச்சுடுவேன். வீணாகாது!

   நீக்கு
 4. யார் வேண்டுமானாலும் கவிதை எழுதிவிட முடியும் -- அசோகமித்திரன் அவர்கள் ஆதங்கத்தில் சொல்லியிருப்பாராயிருக்கும். கதையோ புதுக்கவிதையோ யார் வேணும்னாலும் எழுதலாம், பெரிய விஷயம் கிடையாது. எல்லோராலும் ரசிக்கப்படுதல் அரிது. காலத்தை மீறி நிற்பது இன்னும் அரிது. மரபுக் கவிதை, அதுவும் அர்த்தத்தோடு எழுதுவது கடினம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை.  முற்றிலும் உண்மை.

   ஆதங்கத்தில்தான் சொல்லி இருக்கிறார்.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  ஆகா.. பகலில் பக்கம் பார்த்து பேசு என்பதற்கு பொருள் இதுதானோ? நல்ல திருப்புமுனையுடன் (நேற்றைய பதிவில் வந்த திருப்புமுனையானது இன்று ஞாபகமாக திரும்பி உள்ளது.) ஒரு கதையை படித்த உணர்வு. அழகாக ஒரு பழமொழியின் விளக்கத்தை அதுவும் அனுபவித்து கூறியிருக்கிறீர்கள். ஹா.ஹா. அதன் பிறகு பக்கத்து வீட்டு கதவு கொஞ்ச நாட்களுக்கு அடிக்கடி மூடிக் கொண்டதா? ஹா.ஹா.ஹா.
  ஒரு தன்னெச்சரிக்கை பயம் எல்லோருக்கும் வந்து விடுமில்லையா?

  இப்போது எனக்கு நெட் சரளமாக வருகிறது.நேரமாக,நேரமாக ஒரே சுத்தல்தான்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம் யாரிடமாவது நேரிலோ, போனிலோ பேசிக்கொண்டிருக்கும்போது விழும் வார்த்தைகளைக் கேட்கும் தாண்டிப் போகிறவர்களுக்கு அதற்கு விசேஷ அர்த்தம் ஏதும் இருக்குமா என்கிற எண்ணம் மனதில் ஓடும் என்று நினைக்கிறேன்.  என்னிடம் வந்து சிலசமயம் சிலர் கேள்வியும் கேட்டிருக்கிறார்கள்.  நீங்கள் என் காதில் விழுமாறு வேண்டுமென்றேதானே அந்த வார்த்தை சொன்னீர்கள்? என்று கெட்டவர்களும் இருக்கிறார்கள்!

   நன்றி கமலா அக்கா.   நெட்டுக்கு உடம்பு சரியானதும் சந்தோஷம் தரும் தகவல்.

   நீக்கு
  2. ஆமாம் .. நீங்கள் சொல்வதும் உண்மைதான். ஃபோனில் உறவுகளிடம் பேசும் போது அங்கிருக்கும் யாரைப் பற்றியும் நாமோ, இல்லை பேசிக் கொண்டிருக்கும் எதிராளி சொல்லும் வாக்கியங்களை நாம் ஆமோதித்து பேசும் போதோ, நம் அருகிலிருப்பவரை சங்கடபடுத்தியோ, இல்லை சந்தோஷபடுத்திய மாதிரியோ ஆகி விடுகிறது. பிறகு இவருக்கு ஃபோனில் பேசிய பேச்சைப் பற்றி, நான் சொன்ன முதல் மாதிரி இவர் ஆகியிருக்கும் பட்சத்தில், அதற்கு ஒரு விளக்கம் தந்தாலும், இவர் (கேட்டவர்) மன சமாதானத்தை அடைந்திருப்பாரா என்பது ஐயமே.... வர வர மொத்தத்தில் எங்குமே பேசவே பயமாக உள்ளது.

   "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்பதை நம் சுயநலங்களினால் மறந்து விட்டோம். அதனால்தான் இத்தனை பிரச்சனைகள் உருவாகின்றன.பல நன்மைகள் புதிதானவைகளாக தோன்றினாலும், அப்போதிருந்த எல்லா நன்மைகளையும் இழந்து விட்டோம்.

   நீக்கு
 6. முயற்சி செய்தால் எழுதிவிட முடியும்னு தானே சொல்லியிருக்காரு? முயன்றால் முடியாததும் உண்டோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி வாசகருக்கானதுதானே!

   நீக்கு
 7. புயல் கவிதை நல்லாருக்கு.

  பதிலளிநீக்கு
 8. புயல் கவிதை நல்லாருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி!! இரண்டாவது முறையும் வந்ததும் கொஞ்சம் சந்தேகம் வருது!

   நீக்கு
  2. தெரிஞ்ச விஷயம் தானே? அப்பாதுரை எப்பவும் தனியாய், ஒற்றையாய் வர மாட்டார். சென்ற தடவை மூணுன்னா இப்போ ரெண்டு. வித்தியாசம் அவ்வளவே.

   நீக்கு
  3. ஒரே ஒரு பெக் தான் போட்டேன்.. மூணெல்லாம் ஒண்ணா தெரியுது

   நீக்கு
 9. இனிய காலை வணக்கம்.அனைவரும் நலமுடன் இருக்க
  இறைவனிடம் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் அம்மா...  வாங்க..    இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  சகோதரி அதிராவின் செல்லம் அழகாக உள்ளது.நீங்கள் கூறியபடி கலர் வித்தியாசமாக பார்ப்பதற்கு கவர்ச்சியாகத்தான் இருக்கிறது.

  கவிதை பற்றிய கேள்விகளுக்கு எழுத்தாளர் திரு. அசோகமித்திரன் கூறிய பதில் நன்றாகவும் உண்மையாகவும் உள்ளது.

  தாங்கள் எழுதிய புயல் கவிதை அருமை. ரசித்தேன். எப்போதும் வரும் புயல்களின் மனப்பான்மை இப்படித்தான். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது அதிராவின் செல்லம் இல்லை கமலா அக்கா...   கூகுள் காட்டிய எரர் மெசேஜுக்கு கூகுள் தந்த படம்!

   பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
 11. வாழைக்காயைப் பதப்படுத்தி வைக்கிறார்களா.
  தேவலையே.
  என் தோழி உப்பில் பிரட்டிக் காய் வைப்பால்.
  அது மாதக் கணக்கில் வருமா தெரியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுதானே அம்மா?  மாதக்கணக்கில் வருமா..   அது தெரியாதுதான்.  

   நீக்கு
 12. கன்னியும் புயலும் காத்திருந்து பயன் தராமல்
  போகும் கவிதை ஆகிவிடுகிறார்கள். கன்னிக்குத் தென்றல்கணவனும்
  நமக்கு நல்ல மழையும் கிடைக்கட்டும்.
  மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காத்து வாங்கப்போனாலே அது கிடைக்காமல் கவிதை கிடைக்கிறது!  புயலுக்கு கிடைக்காமல் இருக்குமா!!!   ஹிஹிஹி...

   நீக்கு
 13. திரு அசோகமித்திரனின் கருத்து ஏற்கும்படி இருக்கிறது,. எளிமையான வார்த்தைகள் புரிவது போல
  சில இலக்கியங்கள் புரிவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும்! 

   நிறைய புரியாது!

   நீக்கு
  2. வல்லிம்மா... உங்கள் கருத்தில் பிழை இருக்கு. காலத்தை ஒட்டித்தான் இலக்கியங்கள், அது உரைநடையோ கவிதையோ. சங்க காலக் கவிதை போலவே 10ம் நூற்றாண்டு உரைநடைத் தமிழும் புரியாது. இதற்கு விதிவிலக்குகள் உண்டு. இந்தக் காலத்திலும் சிலருடைய உரைநடை, என்ன சொல்ல வர்றாங்கன்னு தலை சுற்றவைப்பதில்லையா? 6-8ம் நூற்றாண்டைச் சேர்ந்த, "கனியிருப்பக் காய் கவர்ந்தற்று", "ஆதி பகவன் முதற்றே உலகு", "கூறாமல் சந்யாசம் கொள்", "கூடுவிட்டு விதான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்" போன்றவைகள் ரொம்ப சுலபமாகப் புரிகிறதே.

   நீக்கு
  3. நீங்கள் சொல்வதெல்லாம் புரிகிறதும்மா.
   திருக்குறள் கூடப் புரியும்.
   சில கவிதைகள் எழுதினவர்களின் நோக்கம் என்ன என்று
   விளங்காமல் போகும்.
   ஈடுபாடு வரவேண்டும் என்றால்
   எழுதினவர்களின் உள்ளக் கிடக்கை
   புரிய வேண்டும் இல்லையா? அதைச் சொன்னேன் முரளிமா.

   நீக்கு
 14. கதவு சாத்திக் கொண்டதா. இதென்னடா சங்கடம்.


  ரொம்ப சென்சிடிவ் பெண்ணாக இருப்பார் போல.
  புரியாதவர்களுக்குச் சொல்லிப் புரிவது இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது இயற்கைதானே அம்மா...   அப்புறம் நல்லா பேசி இப்போ நல்ல நண்பராய் தொடர்கிறார்  - பாஸுக்கு!

   நீக்கு
  2. உண்மைதான் ஸ்ரீராம். சட்டென்று ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள்
   வசனம் ஏ.பி. நாகராஜன் படங்களில் வருமே:}

   நீக்கு
 15. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடர்ந்து தொற்றுக் குறைந்து அனைவரும் ஆரோக்கியத்துடனும் அச்சமின்றியும், அமைதியுடனும் வாழப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரார்த்தனைகள் பலிக்கட்டும்.  வாங்க கெத்தா அக்கா..   நன்றி, வணக்கம்.

   நீக்கு
  2. கீதா அக்கா மட்டும்தான் கெத்தா !! மற்றவர்கள்?

   நீக்கு
  3. மதிய வணக்கம் சொல்ற நேரத்துல வந்து காலை வணக்கம் சொல்ற இவல்கதானே எப்போதும் அதிகாலையில் வரும் கீசா மேடம்?

   நீக்கு
  4. "கெத்"தே காட்டாத என்னை "கெத்தா" அக்கா என்ற ஶ்ரீராமைக் கன்னாபின்னாவெனக் கண்டிக்கிறேன்.

   நீக்கு
  5. ஹி... ஹி... ஹி.. அவசி தவிர வேறு வழி? ட்ராவல்ல டைப் பண்ணி இப்படிதான்.. இல்லைன்னா மட்டும் ஒழுங்கான்னு கேட்கக் கூடாது!

   நீக்கு
 16. நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு! அதனாலே முழிக்குதே அம்மாப் பொண்ணு! இஃகி,இஃகி,இஃகி, இன்னிக்குக் காலம்பரச் சீக்கிரமாவே எழுந்து கொண்டு சில வேலைகள் செய்தால் நம்ம ரங்க்ஸ் அதை முழுசும் மாற்றிவிட்டார். அதான் இப்போ இணையத்துக்கே வந்தேன். இல்லைனா வந்திருக்க முடியாது! கடைசியில் அது ஒரு திப்பிச வேலையோடு முடியும் போல! பின்னால் சொல்லுகிறேன். அது வரைக்கும் யோசிங்க எல்லோரும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னவா இருக்கும்!  காலை என்றால் இட்லி, பொங்கல் பூரி வகையறா இடம்பெறும்.  அதில் திப்பிசமா?

   நீக்கு
  2. @ஸ்ரீராம், கௌதமன் சொல்வது தான் காலம்பரத்துக்கு. ஆனால் நான் இன்னிக்குக் கஞ்சி சாப்பிடுவதாக இல்லை. ஆனால் சாப்பிட்டேன்! இஃகி,இஃகி, இஃகி, தெளிவாக் குழப்பிட்டேனா?

   நீக்கு
  3. உப்புமா கஞ்சி ஆகி விட்டதோ...!

   நீக்கு
  4. இல்லை, அதிலெல்லாம் நோ திப்பிசம். கஞ்சி, கஞ்சியே தான்! காலை வேளை நோ உப்புமா!

   நீக்கு
 17. தொ.மு.வோட கட்டுரையை மத்தியானமாப் படிக்கிறேன் ஸ்ரீராமின் புயல் கவிதை நல்லா இருக்கு. சித்தப்பாவுக்கு அவ்வளவாய்க் கவிதைகளில் ஆர்வம் இல்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை புதுக்கவிதை, அப்புறமா இந்தச் சின்னச் சின்னக் கவிதைகளாக ஒரு வரி, இரண்டு வரியில் எழுதறது எல்லாம் எளிதோ? அப்படினு நினைக்கிறேன். ஆனால் இலக்கண ரீதியான மரபுக்கவிதைகள் எழுதுவது கடினம். அதிலும் சிலர் ரதபந்தம் போலக் கவிதைகள் எல்லாம் எழுதுகின்றனர். முகநூலில் எனக்கு சிநேகிதிகளான பலரும் இப்படி மரபுக்கவிதை எழுதுவதில் கில்லாடிகள். அவர்களில் மாலா மாதவன், கீதா எம்.சுதர்சனம்(இவங்க கணவன், மனைவி இருவருமே ஆசுகவிகள்) வித்யா சுப்ரமணியம், நம்ம சாரல் இப்படிச் சிலர். எல்லோருமே சந்தக்கவி திரு இலந்தையாரிடம் பாடம் கற்றுக் கொண்டு கவிதைகளாகப் பொழிந்து தள்ளுகின்றனர். அதிலும் மாலா மாதவன் ஓவியர் கேஷவின் கிருஷ்ணா தொடர் ஓவியங்களுக்கு எழுதும் கவிதைகள்! ஆகா! இதில் நண்பர் ரிஷபனும் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  நிறைய திறமையான கவிஞர்கள் உண்டு.  சீர், தொடை, தளை எல்லாம் சொல்லி எழுதுவார்கள்.    நானெல்லாம் திருவிளையாடல் தருமி... "கொஞ்சம் வசன "நடையா எழுதுவேன்..  ஆனாலும் கவிதைன்னு சொல்லிடுவாங்க...

   ஓவர் இலக்கியம்  உடம்புக்கு ஆகாது - எனக்கு!!

   நீக்கு
  2. தொ மு கட்டுரையை யாருமே படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.  ஒருமுறை அதை எடுத்துத் தனியே தட்டச்சு செய்து வெளியிடுகிறேன் - பின்னொரு வியாழனில்!தொ மு கட்டுரையை யாருமே படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.  ஒருமுறை அதை எடுத்துத் தனியே தட்டச்சு செய்து வெளியிடுகிறேன் - பின்னொரு வியாழனில்!

   நீக்கு
  3. இல்லை ஸ்ரீராம், நான் ஓரளவுக்குப் படிச்சேன். அம்பிகையரின் சிற்பத்தின் விஸ்வரூபம் பற்றிச் சொல்லி இருக்கிறார். அந்தக் காலத்து அமுதசுரபி கட்டுரை. எனக்கு முழுவதும் நன்றாய்ப் படிக்க முடியவில்லை. எழுத்துப் பெரிது பண்ண வரவில்லை. மேலோட்டமாய்ப் படித்துப் புரிந்து கொண்டேன். அதனால் தான் எதுவும் எழுதவில்லை.

   நீக்கு
  4. ஒருநாள் தனிப்பதிவாய்ப் போடும் எண்ணம்தான் எனக்கு முதலில் இருந்தது.  பின்னர் இப்படி வெளியிட்டேன்.  தனியாகவே ஒருதரம் போட்டு விடுகிறேன்!  நன்றி கீதா அக்கா.

   நீக்கு
 18. தங்கமணி அம்மாள் என்றொருவர். சந்த வசந்தம் குழுவில் அறுபது வயதுக்கு மேல் சேர்ந்து மீண்டும் இலக்கணம் கற்றுக் கொண்டு கவிதை மழை பொழிவார்கள். அவங்களோட வலைப்பக்கம் பார்த்தால் தெரியும். "மதிசூடி துதி பாடி" என்னும் தலைப்பில் ஈசனைப் பற்றி அவர்கள் பாடி/எழுதி இருக்கும் பாடல்கள்! புத்தகமாகப் போட்டு எனக்கும் ஒன்று அனுப்பி வைத்திருக்கிறார்கள். இப்போது அவங்க இல்லை. நான் நிறையவே அவங்க கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனதில் வருந்தி இருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ.. கேள்விப்பட்டதில்லை!

   இன்னும் நிறைய கவிதாயினிகள் இருக்கிறார்கள். இப்போ நம்ம மாதவன் ஸ்ரீநிவாஸகோபாலன் கூட வெண்பா எழுதுகிறார்.

   நீக்கு
 19. உங்கள் அலுவலக அனுபவங்கள் சுவாரசியமானவை. அல்லது நீங்கள் எழுதும் விதத்தில் ருசியைக்கூட்டுகிறீர்கள். நாங்கல்லாம் வெளியே போகும்போது அதிகம் பேசிக்க மாட்டோம். ஆகவே யாரும் கேட்டுத்தப்பாய் நினைக்க வாய்ப்பில்லை. ஆனால் நேரில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போதே பல்லைக் கடிச்சுப் பிராண்டிப்போமே! அதனால் தனியாக வேறே பேசிக்கணுமா என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி...   இப்படிதான்..   இப்படிதான் பேர் வாங்கி வச்சுக்கறது!  திருவிளையாடல் தருமின்னு சொன்னது இதைத்தான்!

   நீக்கு
 20. வரேன். வீட்டு வேலைகளைத் தொடரணும். நானே கருத்துரை சொன்னால் எல்லோரும் அடிக்க வரப் போறாங்க. இந்தக் குட்டி நாய் உங்க ப்ரொஃபைலில் இருக்கும் படம் போல இருக்கோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட...   கருத்து  மழையா பெய்யறதேன்னு பாத்திரம் கொண்டாந்தா மழை நின்னுப்போச்சு!!!

   நீக்கு
  2. மழை பெய்யும்போது பாத்திரம் கொண்டுவருவது, மழைத் தண்ணீர் பிடிப்பதற்கல்ல. தரை முழுதும் தண்ணீர் வழிந்தோடுவதைத் தவிர்க்க, என்று நான் சொன்னால் ஶ்ரீராம், கீதா சாம்பசிவம் மேடம் இருஙரில் யாருக்கு அதிக்க் கோபம் வரும்?

   நீக்கு
  3. ம்... உண்மைதான். சுத்த அர்த்தமா பார்த்தா அப்படிதான் வரும்.

   நீக்கு
  4. மழைத்தண்ணீர் ஒரு காலத்தில் நாங்க பிடிச்சு வைச்சு சமைக்க, குளிக்க, சூடுபண்ணிக் குடிக்கனு பயன்படுத்தி இருக்கோம். முன்னாடி தண்ணீர் வரும் வழியை ஒரு மழையில் நன்கு சுத்தப்படுத்திட்டுப் பின்னர் நாங்களும் சுத்தம் செய்துவிட்டு வைத்திருப்போம். அதன் பிறகு பெய்யும் மழைகளில் தண்ணீர் பிடிச்சுப்போம். அம்பத்தூர் வீட்டில் கிணற்றுக்கு மழைநீர்ச் சேமிப்பு செய்து வைத்திருந்தோம். தண்ணீர் வற்றவே வற்றாது. போரும் இருந்தது. ஆனால் கிணற்றிலும் நீர் இறைப்போம்.

   நீக்கு
 21. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 22. பக்கம் பார்த்து பேச வேண்டியது அவசியம் தான்.
  புயல் கவிதை நன்றாக இருக்கிறது.

  என் அம்மா நேந்திரவாழைக்காயை துண்டமாக வெட்டி காயப்போட்டு அதை வஸ்திர காயம் செய்து (மெல்லிய துணியில் சலித்து) பத்திரபடித்தி வைப்பார்கள் அதை கடைசி தங்கைக்கு காய்ச்சி பாலுடன் சேர்த்து கொடுத்து வந்தார்கள். இதை ஒரு குழந்தைகள் மருத்துவர் சொல்லிக் கொடுத்தார் அம்மாவுக்கு. அப்போது இந்த பொடி ஓவல் டின் டப்பாபோல் டின்னில் அடைத்து விற்கப்பட்டது அவ்வளவாக கிடைக்காது.
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிடைக்கிறது. netmeds இல் 

   https://www.netmeds.com/non-prescriptions/double-horse-banana-powder-250-gm?source_attribution=ADW-CPC-Shoppingads&utm_source=ADW-CPC-Shoppingads&utm_medium=CPC&utm_campaign=ADW-CPC-Shoppingads&gclid=CjwKCAiAu8SABhAxEiwAsodSZDhdTBnmC0Dfo_MZ-PqOtN7eMqG-pI3A3PnmJLYo4CZvNNS8F6GnDxoCEDwQAvD_BwE

   நீக்கு
  2. இதை நான் கேள்விப்பட்டதில்லை.

   நீக்கு
 23. யார் வேண்டுமானாலும் கவிதை எழுத முடியும் இது சாத்தியமா ?

  நடிகர் வடிவேலு கவிதை எழுத முடியுமா ? ஆனால் விவேக் கவிதை எழுத முடியுமே...

  சமீபத்தில் வடிவேலுவிடம் நிருபர் கேட்ட கேள்விக்கு 2001-ல் நான்தான் முதல்வர் என்கிறார். பிறகு உதவியாளர் 2021-ல் என்று சொல்லவும் பிறகு அப்படியா என்று கேட்டு 2021-ல் என்கிறார்.

  நிகழ்ஙால வருடத்தின் எண்களே தெரியவில்லை காரணம் அவரது "வளர்ச்சி" அவ்வளவுதான் பாவம்.

  எல்லாவற்றுக்கும் முதலில் இறைவன் தந்த மூளை வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரியை மடக்கி மடக்கிப் போட்டு நான் எழுதறதைக் கவிதைன்னு நானே சொல்லி உங்களை மாத்தி யோசிக்க வைப்பதில்லை ஜி. அது மாதிரி கவிதை யார் வேண்டுமானாலும் எழுதலாம். உண்மையில் இலக்கண சுத்தமான கவிதை சிலரால்தான் அல்லது அதில் பயிற்சி பெற்றவர்களால்தான் எழுத முடியும் ஜி. நன்றி.

   நீக்கு
 24. // கட் பண்றோம். லொகேஷன் சேன்ஜ்! //

  ஏதேனும் அனுஷ் பாடல் இருக்குமோ என்று நினைத்தேன்...!

  பதிலளிநீக்கு
 25. கவிதை அருமை...

  பெண் பார்க்கும் படலம் போது, தங்கைகளை நாடு கடத்துவது நன்று...?(!)

  பதிலளிநீக்கு
 26. நம் சொற்கள், அது பாராட்டாக இருந்தாலும் கடியும் சொற்களாக இருந்தாலும் பலரைக் காயப்படுத்தும். ஶ்ரீராம் அருமையா எழுதியிருக்கிறார் என்று சொன்னால், நான் அதைவிட நல்லா எழுதுகிறேனே..வேண்டுமென்றே என்னை மட்டம் தட்ட அவரைப் பாராட்டுகிறார் என நினைப்பவர்கள்தாம் அனேகம். அதனால் பலர் சகட்டுமேனிக்கு எல்லாரையும் பாராட்டி, பாராட்டுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது.

  மௌனம்தான் சிறந்தது போலிருக்கு

  பதிலளிநீக்கு
 27. பக்கத்து வீட்டுக் கதவு படாரென்று அறைந்து சாத்தப்பட்டதன் காரணம் அப்போது புரியவில்லை!

  ஆகா

  பதிலளிநீக்கு
 28. அதிராவுக்கு பூசார் தானே பிடிக்கும். எப்படி லொள் படத்தை தேர்ந்தெடுத்தார். 
  //கொஞ்சம் முயற்சி எடுத்தால் யார் வேண்டுமானாலும் அந்தப் புனித வாக்கை எழுதிவிட முடியும்.//

  நீங்கள் எழுதிய கவிதை புனித வாக்கா? கனியிருப்ப காய் கவர்தல்- அக்கா இருக்கையில் தங்கையை நோட்டமிடல்-சென்னை இருக்க ஆந்திரத்தை நோக்கி போகும் புயல்- 
  ஆனால் இந்த வருடம் சென்னையில் நல்ல மழை என்று நினைக்கிறேன். பின்னர் ஏன் இப்படி என்று பார்த்தபோது 2013. 
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது பூசார் போட்ட படமில்லை. கூகுள் எரர் மெஸேஜுக்கு தந்த படம் ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

   புனிதவாக்கு என்று நான் எதுவும் சொல்லவில்லையே...

   நீக்கு
 29. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலம் வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 30. திரு.வி.க. படைப்புகளுக்கும் அசோக மித்திரனுக்கும் என்ன சம்பந்தம்? அந்த சம்பந்தமின்மையைப் பற்றி அவர் சொல்லியிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் பெயரில் வழங்கும் விருது...    அவ்வளவுதானே!

   நீக்கு
  2. அப்படியில்லை. யார் பெயரில் இருக்கும் விருது, யாருக்கு வழங்கப்படுகிறது என்பதில் சில பொருத்தங்கள் இருக்கின்றன.

   பெரியார் விருது பெரியார் ஈ. வெ. ராமசாமி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பெரியார் கருத்துக்களைப் பரப்புவதில் ஈடுபாடு கொண்டவருக்கு வழங்கப் பட்டால் ஏற்புடையதாக இருக்கும்.

   நீக்கு
 31. மறுபடியும் அ.மி.
  நண்பர்கள் கவிஞர்களாய் இருப்பதற்கும், கவிஞர்கள் நண்பர்களாய் இருப்பதற்கும் வித்தியாசன் உண்டா, ஸ்ரீராம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர்கள் என்னதான் பெரிய கவிஞர்களாக இருந்தாலும் அங்கே நட்பிற்குத்தான் முதலிடம், கவிஞன் பின்னுக்குத் தள்ளப்படுவான். தான் கவிஞன் என்பதை மறந்து போகக் கூட அந்த நண்பன் நினைக்கலாம். கவிஞனிடம் நட்பு பாராட்டும் பொழுதும் நண்பன் புறம் தள்ளப் படலாம். 

   நீக்கு
  2. ஓ சாரி ஜீ.வி. சார், நீங்கள் ஸ்ரீராமிடம் கேட்டிருக்கிறீர்கள், நான் அவருக்கு பிராக்சி கொடுத்து விட்டேன். 

   நீக்கு
  3. மேலே அ.மி. தன் இரு 'நெருங்கிய' கவிஞர் நண்பர்கள் பற்றிச் சொன்னது பற்றியது அது, பா.வெ.

   நீக்கு
  4. முதலாவது நமக்கு லாபம்.  கற்றுக்கொள்ளலாம்!

   நீக்கு
 32. கதம்பம் சுவை! அன்டைம்லியாக இருந்தாலும் கவிதை நன்றாக இருக்கிறது.  என்னதான் முயற்சி செய்தாலும் எல்லோரும் கவிதை எழுதிவிட முடியாது. கவிதை தன்னைத்தானே பிறப்பித்துக் கொள்ள வேண்டும். 
  பழைய விளம்பரங்களை தேடித்தேடி போடுகிறீர்கள், விஜய் ஆதிராஜும், அசினும் நடித்த ஹயக்ரீவா சில்க்ஸ் விளம்பரம் கிடைத்தால் போடுங்கள். பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பார்கள், விளம்பரங்களையுமா? என்று யாரோ கேட்பார்கள். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில விளம்பரங்கள் கவிதை! அதிலும் அந்தக்குட்டிப் பையன் வீட்டில் கோவிச்சுண்டு போய் ரயில் நிலையத்தில் உட்காருவதும் வீட்டு வேலைக்காரர் தேடிக் கொண்டு வந்து ஜிலேபி பண்ணறாங்க என்று சொல்வதும், "ஜலேபி!" என்று அந்தக்குட்டிப் பையன் கண்களில் ஒளிரும் ஒளி! ஆஹா! இப்போ உட்வர்ட்ஸ் விளம்பரம். அந்தக் குட்டிப்பாப்பா சிரிப்புக்குக் கோடிப் பொன் கொடுத்தாலும் போதாது. பின்னணியில் அண்ணன் குரல்! இரண்டும் அதி அற்புதம்! இப்படி எத்தனையோ இருக்கு! முன்னே வருமே ப்ரூக் பான்ட் காஃபி விளம்பரம், "ஸ""ஸ" ஷுகர் பாய்! அந்தப் பெண்ணின் இயல்பான வெட்கம்! ஆஹா!

   நீக்கு
  2. வாங்க பானு அக்கா..  நீங்கள் மற்றும் கீதா அக்கா சொல்லும் விளம்பரங்கள் பார்த்த நினைவு இல்லை.  தேடிப்பார்க்கிறேன்.  கவிதை பாராட்டுக்கு நன்றி.

   நீக்கு
 33. புயல் என்றால் காற்று வீசி வீசி
  வெறியாட்டம் போடும் தான்
  இருந்தாலும் இந்த அளவு சேதம்
  எதிர்பாராதது
  தமக்கை தப்பித்து விட்டாள்
  சென்னையைப் போலவே
  தங்கை தான் மாட்டினாள்
  ஆந்திரா, புனே போல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமயங்களில் இப்படி வந்தபடியே தாக்கியும் விடுகிறதுதான்!

   நீக்கு
  2. நூற்றுக்கணக்கில் சேரும் பின்னூட்டங்களுக்கு மடமடவென்று பதிலளித்துக் கொண்டே வந்தால் இப்படி மேலோட்டமான பார்வை படிவதை தவிர்க்கவே முடியாது தான். ஒப்புக் கொள்கிறேன்.

   நீக்கு
 34. ..கொஞ்சம் முயற்சி எடுத்தால் யார் வேண்டுமானாலும் அந்தப் புனித வாக்கை எழுதிவிட முடியும்.//
  காரைக்கூட எல்லோராலும் ஓட்ட முடிவதில்லை. கவிதையை யார் நினைத்தாலும் எழுதிவிட முடியுமா? எப்படி? சட்டியில் இருந்தால்தானே வரும் அகப்பையில்?
  அவரது கருத்து எப்படி இருக்கிறது எனில்,
  எந்தப் பெண் நினைத்தாலும், முயற்சித்தாலும், அழகாக ஆகிவிடமுடியும்.. ஓ! அழகென்பது அவ்வளவு அற்பமானதா? எளிதில் அருகில் வந்துவிடுமா? வாய்த்துவிடுமா? கழுதை முயற்சித்தால் குதிரையாகிவிடுமா? வெட்டிப் பேச்சிடம் வேதாந்தம் வந்து நிற்குமா? No Sir. No.
  அசோகமித்திரனின் கவிதை குறித்தான இந்தக் கருத்தை ஏற்கனவே படித்திருக்கிறேன். யாரும் எதைப்பற்றியும், எத்தகைய கருத்தும் கொண்டிருக்கலாம். அவர் கருத்து அவருக்கு.
  ஆனால் ஒன்று சொல்வேன்: அவரால், கவிதைகளில் வார்த்தைகளை மட்டுமே பார்க்கமுடிந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. பொதுவாகக் கவிதை குறித்து பெரிய அளவில் அபிப்பிராயம் சித்தப்பாவுக்கு இருந்தது இல்லை. என் அண்ணா பெண் எழுதிய முதல் கவிதையை அவருக்கு அனுப்பி இதை வெளியிட வேண்டும் என்றேன். அவர் நேர்மையாக எனக்கு இதைக்குறித்து எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டு அண்ணாகண்ணனுக்கு (அப்போ அமுதசுரபியில் இருந்தார்) அனுப்பி வைத்தார். அது அங்கே அவள் அறிமுகத்துடன் வெளியானது. அதன் பின்னரும் பல கவிதைகள் எழுதி நான் மின் தமிழிக் குழுமம், முத்தமிழ்க் குழுமம் எனப் பகிருந்திருக்கேன். இப்போது பிரபலமான பத்திரிகையாளராகி விட்டாள்! :)))) ஆகவே கவிதை எழுதும் மனம் காணாமல் போய்விட்டது. எனக்கு அது வருத்தம் தான்! :(

   நீக்கு
  2. //அவரால், கவிதைகளில் வார்த்தைகளை மட்டுமே பார்க்கமுடிந்திருக்கிறது.//

   அதே போல அவர் கதைகளின் உள்ளார்ந்த சிறப்பை அறியாமல் தாண்டிச் செல்பவர்களும் உண்டு.

   நீக்கு

 35. //
  "உயரமா இருந்தாங்க... கொஞ்சம் குண்டா இருந்தாங்க... சிவப்பா இருந்தாங்க... அழகா இருந்தாங்க... கைண்டா இருந்தாங்க.//

  ஒருவேளை பக்கத்துவீட்டு பெண் உங்களை பார்க்க ஆசையாக கதவை திற்ந்து நின்று கொண்டிருக்கும் போது அனுஷகாவை பற்றி விவரித்தால் கோபம் வராமலா இருக்கும் ஆஹா மொத்தாம் பக்கத்துவீட்டு பொண்னை மிஸ் பண்ணீட்டீங்க.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வியாழக்கிழமை என்றால் ஏதோ ஒரு வகையில் அனுஷ்காவை வரவழைத்து விடுகிறோம். ஹாஹா!  
    

   நீக்கு
  2. ஹா..  ஹா...  ஹா...  அப்படி இல்லை மதுரை...  புதிதாக வந்திருக்கும் நம்மைப்பற்றி யாரிடமோ சொல்கிறான்...  கேட்டால் உங்களை இல்லை என்று சொல்லிவிடக்கூடும் என்கிற எரிச்சலாய் இருந்திருக்கும்!

   நீக்கு
  3. ஆமாம் பானு அக்கா..   முன்னரே DDயும் பிரஸ்தாபித்திருக்கிறார்!  

   நீக்கு
 36. இன்றைய பதிவு சங்கப் பலகை!..

  நாம ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பார்ப்போம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெட்டி அரட்டைக்கு எதற்கு சங்கப்பலகை துரை செல்வராஜூ ஸார்...   நீங்கள்தான்  கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே நிற்கிறீர்கள்!

   நீக்கு
 37. கவிதை நன்று. கதவு படார் என சாத்தப்பட்டது சுவாரசியம்.

  பதிலளிநீக்கு
 38. படாரென்று அடித்துச் சாத்தப்பட்ட கதவு - ஹாஹா... ஜாக்கிரதையாகவே பேச வேண்டியிருக்கிறது! அதுவும் இப்போது நான் இருக்கும் குடியிருப்பில் இன்னும் இரண்டு தமிழ் நண்பர்களின் குடும்பங்களும்!

  மற்ற பகுதிகளும் நன்று.

  பதிலளிநீக்கு
 39. முதல் சம்பவம்.. சுவாரஸ்யம் :). நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!