சனி, 16 ஜனவரி, 2021

நல்ல செய்திகள்

 

முதல் முறையாக தலைமை தகவல் அதிகாரி பதவி. 

அமெரிக்க ராணுவத்தின் தலைமை தகவல் அதிகாரியாக சென்னையை சேர்ந்த ராஜ் அய்யர் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் திருச்சி என்.ஐ.டியில் பி.டெக் படித்துள்ளார். ப ின் பெங்களூருவில் பொறியல் துறையில் ஆராய்ச்சி முடித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்கவிற்கு சென்று 25 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அமெரிக்க ராணுவத்தின் தலைமை தகவல் அதிகாரியாக தமிழர் நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது. ராஜ் அய்யருக்கு கிடைத்த தலைமை பதவி 3 நட்சத்திர தளபதி பதவி அந்தஸ்துக்கு சமமானதாகும். இவருக்கு கீழ் 15 ஆயிரம் வீரர்கள் உலகெங்கும் உள்ள 100 நாடுகளில் பணியாற்றுகின்றனர். 1600 கோடி டாலர் மதிப்பிலான ராணுவ தளவாட கொள்முதலை மேற்பார்வை செய்ய உள்ளார். ராஜ் அய்யர் மனைவி பிருந்தா தகவல் தொழில்நுட்ப சுகாதார தொழில் நிபுணர். இவரும் அமெரிக்க அரசில் பணி புரிந்து வருகிறார்.

= = = =

ராணுவ விமான பிரிவில் பெண் விமானிகளுக்கு ஒப்புதல். 

புதுடில்லி : ராணுவத்தின் விமானப் பிரிவில், பெண் அதிகாரிகளை விமானிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராணுவத்தில் உள்ள போலீஸ் பிரிவில், பெண்களை நியமிக்க, 2019ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நம் விமானப்படையில், அவனி சதுர்வேதி என்ற பெண் விமானி, 2018ல், முதல்முறையாக, ‛மிக் - 21' ரக போர் விமானத்தை இயக்கி சாதனை படைத்தார்.

இந்த வரிசையில், ராணுவத்தின் விமானப் படைப் பிரிவில், பெண் அதிகாரிகளை விமானிகளாக நியமிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து, ராணுவ தலைமை தளபதி, ஜெனரல் எம்.எம்.நரவானே, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராணுவ விமானப் பிரிவின் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் களப் பணிகளில், பெண்கள் ஏற்கனவே ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில், பெண் அதிகாரிகளை விமானிகளாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பெண் அதிகாரிகளுக்கான விமானம் ஓட்டும் பயிற்சி, வரும் ஜூலையில் துவங்க உள்ளது. ஒரு ஆண்டு பயிற்சிக்கு பின், ராணுவத்தில் பெண் விமானிகள் பணி செய்யத் துவங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.

= = = =

ஆட்டோமேடட் கார்கள் செல்ல உதவும் ஸ்மார்ட் சாலைகள்; ஹுவவே நிறுவனம் பரிசோதனை. 


பெய்ஜிங்: சீனாவின் ஹுவவே நிறுவனம் கடந்த ஆண்டு அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. அமெரிக்க உள்நாட்டு மற்றும் அரசு ரகசியங்களை சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவவே திருடுவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு குற்றம் சாட்டி இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த சீன தொழில்நுட்ப நிறுவனம் சீனாவின் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள குக்ஷி நகரில் நான்கு கிலோமீட்டர் சாலையில் தொழிநுட்ப பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஆட்டோமேட்டட் கார் தொழில்நுட்பம் தற்போது கார் நிறுவனங்களால் சோதனை செய்யப்பட்டுவரும் நிலையில் டிரைவர் இல்லாத இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வழிநடத்தும் ஸ்மார்ட் சாலைகளை உருவாக்க இந்த நிறுவனம் தற்போது ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக இந்த நான்கு கிலோ மீட்டர் சாலை சோதனை செய்யப்படுகின்றது.

இந்த சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் ரேடார் மற்றும் கேமராக்கள் ஆளில்லாத ஆட்டோமேட்டட் கார்களுடன் தொடர்பு கொள்ளும். சாலைக்கும் ஆட்டோமேட்டட் கார்களுக்கும் உள்ள தொடர்பு மூலமாக எதிரே வரும் வாகனங்கள், டிராபிக் உள்ளிட்டவற்றை கார்கள் தெரிந்துகொள்ளும். அதற்கேற்ப வாகனத்தின் வேகம் அதிகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படும். இந்த ஸ்மார்ட் சாலை பரிசோதனை வெற்றிபெற்றால் உலகம் முழுக்க ஆட்டோமேடட் கார்களால் எளிதில் சாலைகளில் இயங்க முடியும்.

இன்னும் 50 ஆண்டுகளில் உலகில் ஓட்டுநர்கள் இல்லாத ஆட்டோமேட்டட் வாகனங்கள் ஸ்மார்ட் சாலைகளில் செல்ல வாய்ப்புள்ளது. இதற்கு வித்திடும் வகையில் தற்போது சீனாவின் ஹுவவே தொழில்நுட்ப நிறுவனம் இந்த பரிசோதனையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

= = = = 

கட்டியைக் கரைக்கும் ஒலி.


ரத்தக் குழாய்களில் உறைந்துவிடும் ரத்தத்தை, மருந்து, மாத்திரைகளால் கரைப்பது ஒரு வழி. ஆனால், சில நேரங்களில், நோயாளிகளுக்கு இது பலன் தருவதில்லை. எனவேதான், அமெரிக்காவின், வட கரோலினா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அல்ட்ரா சவுண்டு எனப்படும் மீஒலியை பயன்படுத்தி ரத்தக் கட்டியை கரைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.

ரத்தம் கட்டியுள்ள இடத்திற்கு அருகே, நுண்ணிய மீஒலிக் கருவியை ஆராய்ச்சியாளர்கள் செலுத்துகின்றனர். பிறகு, 'பெர்ப்ளூரோ கார்பன்' திரவல்த துளிகளை செலுத்தி, மீஒலி அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. பெர்ப்ளூரோ திரவத் துளிகளை, அதிக ஆற்றலுடன் ஒலிகளைகள் அதிரவைத்து, ரத்தக் கட்டியை அக்கருவி கரைத்துவிடுகிறது

மீஒலி, பெர்ப்ளூரோ கார்பன் துளிகள், ரத்தக் கட்டியைக் கரைக்கும் மருந்து, ஆகிய மூன்றும் கலந்த சிகிச்சை நல்ல பலனைத் தருவதாக, வட கரோலினா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய சிகிச்சை முறை, நாள்பட்ட ரத்தக் கட்டிகளைக் கரைப்பதற்கு பயன்படும். அதுமட்டுமல்ல, மீஒலி அதிர்வலைகள், கட்டியைக் கரைக்குமே தவிர, அருகே உள்ள ரத்தக் குழாய் சுவர்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. இது கூடுதல் பலன்.

= = = = 

45 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குகை ஓவியம்: இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு.

ஜகார்த்தா: கடந்த புதனன்று சயின்ஸ் அட்வான்ஸ் என்ற இதழில் உலகின் பழங்கால குகை ஓவியம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தோனேஷியாவில் 45 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் வரைந்துள்ள ஓர் பன்றி குகை ஓவியம் பழம்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் கிரிஷிப்ட் பல்கலைக்கழக பேராசிரியர் மாக்ஸிம் ஆல்பர்ட் கூறுகையில், இந்தோனேஷியாவில் உள்ள சுலாவெசி தீவில் கடந்த 2011-ஆம் ஆண்டு பழம்பொருட்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது அங்கு இருந்த பழமையான லிங்க்ஸ்டேட் குகைக்குள் உள்ள லைம்ஸ்டோன் வகை கற்கள் குறித்து ஆராய்ச்சி நடந்தது.

அப்போது 136 செ.மீ., நீளமும் 54 செ.மீ., அகலமும்கொண்ட ஓர் பன்றியின் ஓவியம் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பன்றி மற்றொரு பன்றியை நோக்கி இருப்பதுபோல இந்த பழங்கால ஓவியம் காட்சியளிக்கிறது. மற்றொரு பன்றியின் ஓவியம் சிதிலமடைந்துள்ளது. இந்தோனேசியாவின் இந்த தீவில் கடந்த 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழங்குடியினர் இதனை வரைந்து இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இது தற்போது பழம்பொருள் பிரியர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

= = = =  

42 கருத்துகள்:

 1. அன்பு கௌதமன் ஜி. மிக நன்றி.
  இனிய காலை வணக்கம். அனைவரும் என்றும் நலமுடன் இருக்க
  இறைவன் அருளட்டும்.

  பதிலளிநீக்கு
 2. ராஜ் ஐயர் பற்றிப் படித்துத் தெரிந்து கொன்டேன் இங்கே சொல்லும்போது
  இரண்டு மூன்று வரிகளில் செய்தியாகத் தான் வந்தது.
  இங்கே படிக்கும் போதுதான் அவரைப் பற்றி இவ்வளவு
  விவரங்கள் தெரிய வருகிறது.நன்றி. மிக நல்ல பெருமை.

  பதிலளிநீக்கு
 3. மீ ஒலி பற்றி அறிய வரும்போது இனியாவது
  இதய நோய்க்கு விரைவில்
  விடுதலை கிடைக்கட்டும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
  விரைவில் நோயாளிகளை வந்தடையட்டும்.
  இதயத்திலிருந்து நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நேற்று இதே சுலவேசியில் தான் பூகம்பம்.

  எத்தனை அரிய கண்டுபிடிப்பு!!!
  45 ஆயிரம் வருடங்கள் முன்னே என்றால்
  எத்தனை அபூர்வமான ஆராய்ச்சி. தொல்லியல் வளர்ந்து இன்னும் உபயோகமான
  தகவல்கள் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி மேலோங்கி அமைதி நிலவ மனமார்ந்த பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 6. முதல் செய்தியைத் தவிர்த்து மற்றவை புதிய செய்திகள். எல்லோருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  எங்கெங்கும் நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 9. காலை வணக்கம் அனைவருக்கும்.

  இன்றைய நல்ல செய்திகள் பாசிடிவ் சிந்தனை தருகிறது.

  பதிலளிநீக்கு
 10. இன்றைய தொகுப்பு வழமை போல் அருமை..

  பதிலளிநீக்கு
 11. அமெரிக்காவில் தமிழர் உயர்பதவியில் இருப்பது மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 12. ஒருவர் தமிழரா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல்
  தமிழகத்திலேயே ஆளாளுக்கு வித்தியாசப் படுகிறது.

  உ.வே.சா--வையே தமிழரில்லை என்று பிதற்றியவரும் உண்டு.

  பதிலளிநீக்கு
 13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 14. ராணுவத்தின் விமானப் பிரிவில், பெண் அதிகாரிகளை விமானிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி அறிந்தேன். பெண் விடுதலை பற்றிய பாரதியாரின் கனவு நடுவண் அரசின் செயல்பாடுகளில் மிளிர்வது குறித்து பெருமிதமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 15. ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை சமீபத்தில் பாரதப் பிரதமர் ஆரம்பித்து வைத்தது நினைவுக்கு வந்தது. மோட்டார் வாகனப் பிரிவிலும் இதே தொடர்ச்சியில் ஸ்மார்ட் சாலைகள் அமைப்பில் உலக அளவில் கவனம் படிந்திருப்பது நல்ல செய்தி.

  பதிலளிநீக்கு
 16. இரத்த உறைதலை சீர்படுத்தும் முயற்சியில் அல்ட்ரா சவுண்ட் கருவிகளின் பயன்பாடு மகிழ்ச்சியூட்டுகிறது. வருடக் கணக்கில் இரத்த அழுத்த மாத்திரைகளை பயன்படுத்துதல், அதனால் ஏற்படும் பக்க விளைவு தொல்லைகள் இவையெல்லாம் இம்மாதிரியான கண்டுபிடிப்புகள் மூலம் விடிவு கண்டால் மனித குலத்திற்கே அது
  பெரும் பேறாக அமையும் என்பது உறுதி.

  பதிலளிநீக்கு
 17. சமீப காலங்களில் மிக அதிக பயன்பாட்டில் இருக்கும் 'வைரலாகிறது' என்ற சொல்லுக்கு மாற்றுச் சொல்லோ, இல்லை அதற்கான தமிழாக்கச் சொல்லோ பயன்பாட்டிற்கு வந்தால் நல்லது. வார்த்தைகளில் கூட வைரஸ், வைரல் இவற்றைத் தவிர்ப்போம். சரியா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும் தொற்று, பெரும் சுற்றி - சரியாக இருக்குமா?

   நீக்கு
 18. தென்னகத்தில் சமண மதம் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் குடவரை கோயில்கள், குகைச் சிற்பங்கள் என்று கலை சார்ந்த உன்னதங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தின. ஜகர்த்தாவின் குகை ஓவியங்களையும் இந்த நீட்சியில் பொருத்திப் பார்க்க ஆவல் ஏற்பட்டது. சிறப்பான பகிர்தல்களுக்கு எபிக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. இன்றைய செய்திகள் குறைவு என்றாலும் அனைத்தும் நன்று. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!