வெள்ளி, 29 ஜனவரி, 2021

வெள்ளி வீடியோ : செங்கோல் கொண்டு நாடெல்லாம் அரசாளும் மன்னரும்

பாட்டுப் பாட வா திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் இன்று வெள்ளி வீடியோவில்..

 எஸ் பி பாலசுப்ரமணியம், லாவண்யா, ரகுமான் ஆகியோர் நடித்திருக்கும் திரைபபடத்துக்கு இசை இளையராஜா.  பாடல்கள் வாலி.  இயக்குனராக B R விஜயலக்ஷ்மி அறிமுகமான முதல் படம்.

இந்தப் படத்தில் எஸ் பி பி யின் இந்தப் பாடல் மற்றும் சில பாடல்கள் நன்றாய் இருக்கும்.  இன்று இந்தப் பாடல்.

காக்கும் கரமுடைத்த கருணை வடிவே ஏ...
கடும் துயரை
தாக்கும் தயவுடைய தனிப் பொருளே ஏ... ஆ...
உரைக்கும் நிறைவாக்கும்
மனம் கடந்த வடிவருளே
அணுவிலும் உறை நீக்கமற நிறைந்த
நிலையருளே ஆ... ஆ... ஆ...

சின்னக் கண்மணிக்குள்ளே வந்த
செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே
நீண்ட காலத் தவமாய் நானே
வாங்கி வந்த வரம் நீ மானே கண்ணே கண்ணே..(சின்ன)

வாழும் கோயில் தெய்வங்கள்
உன்னைக் காக்க வேண்டுமே
சூழும் நோய் காக்க வேண்டி
தீயைக் கூடத் தாண்டுமே

வானம் போல வாழ்வெல்லாம் வரும் என்று நம்பு
தெளிவாக நீ செல்வாய் எதிர்க் காலம் உண்டு
மேகங்கள் மறைத்தாலும் மெதுவாக விலகும்
வேளை வரலாம் மானே தேனே......(சின்ன)

செங்கோல் கொண்டு நாடெல்லாம் அரசாளும் மன்னரும்
செல்வம் கல்வி யாவுமே குறையாத மேதையும்
இசை கூட்டும் பாடகன் ஈர்க்கின்ற நேரம்
தலையாட்டும் பொம்மையாய் செவி சாய்க்க வேண்டும்
தாய் தந்த அருளாலே நான் இன்று மேலே
பிறர் இன்று கீழே அம்மா அம்மா.......(சின்ன)  


36 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் மன அமைதியும் கிட்டப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா..    பிரார்த்தனைகளுக்கு நன்றி.  வாங்க வணக்கம்.

   நீக்கு
 2. அட? இன்னிக்கு நான் தான் போணியா? என்னத்தைச் சொல்றது? பாட்டுப்பாட வா என ஒரு படம் வந்ததே தெரியாதுன்னா லாவண்யா என்றொரு நடிகை வேறே இருந்திருக்கார். எனக்குத் தெரிந்த லாவண்யாவெல்லாம் அம்பத்தூரில் எங்க குடும்ப நண்பரும் இன்னோரு கவிதாயினி/இணையம் மூலம் பழக்கம். இவங்க தான்! அதைத் தவிர பெண்ணின் சிநேகிதி ஒருத்தர். :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அந்த நடிகை பெயர் இப்போதுதான் தெரியும்!!!  படத்தில் பாடல்கள் இனிமையாக இருக்கும்.

   நீக்கு
  2. எனக்கு அம்பத்தூர் லாவண்யாவும் தெரியாது.. அவ்ளோ தான் வித்தியாசம்.

   நீக்கு
 3. பாட்டை மத்தியானமாக் கேட்டுப் பார்க்கிறேன். ஒரு வேளை எப்போவானும் காதில் விழுந்ததானு!

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க
  இறை அருள் கிடைக்க பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 5. மிகப் பிரபலமான பாடல். இசையும் பாடல் வரிகளும் மிக அருமை.
  எஸ் பி பி சிறப்பாக நடித்திருப்பார்..

  சோகமான'
  பாத்திரத்தை அழகாக ஆரோக்கியமாகச் செய்திருப்பார்.

  இதே படத்தில் வரும் 'நில் நில் நில் பதில் சொல் சொல் சொல்''

  பாடலும் நன்றாக இருக்கும் இருக்கும்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக மிக உருக்கமான பாடல்.
   மனம் நிறை நன்றி மா ஸ்ரீராம்.
   வாழ்த்துகள்.

   நீக்கு
  2. ஆமாம் அம்மா.   'நில் நில் நில்' பாடலும் சரி, 'வழிவிடு வழிவிடு  வழிவிடு என் தேவி வருகிறாள்' பாடலும் நன்றாய் இருக்கும்.  மூன்றையுமே இணைக்க எண்ணி இருந்தேன்.  மறந்திருக்கிறேன்.  காலை ஐந்து இருபத்தைந்துக்குப் பார்க்கிறேன்.  வெள்ளி வீடியோ சேமிக்கவே இல்லை.  ஒன்றுமே இல்லை!  அவசரம் அவசரமாக இதை வெளியிட்டேன்!!!

   நன்றி அம்மா.

   நீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்

  பதிலளிநீக்கு
 7. இன்றைக்கு என்ன சுருக்கமா முடிச்சுட்டீங்க? பாடல் கேட்ட நினைவு இல்லை. பிறகு காணொளி பார்த்து நினைவுக்கு வருதான்னு பார்க்கணும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்து, கேட்டு சொல்லுங்க!

   நீக்கு
  2. @கௌதமன் சார், இன்னொரு மெயில் நேத்திக்கு அனுப்பிச்சேனே, சி.சி.ம.வுக்கு. வந்து சேர்ந்திருக்கும். ஆனால் நீங்க இன்னும் பார்க்கலைனு நினைக்கிறேன்.

   நீக்கு
  3. சினிமா சிறப்பு மலருக்கா? (என்று கேட்கமாட்டேன்... சித்திரைச் சிறப்பிதழுக்கு என்ன அனுப்பியிருப்பார்? மதுரை மீனாக்‌ஷியைப் பற்றி நீண்ட பதிவா இல்லை கோபு ஐயங்கார் கடை டிஃபனா - எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்பது போல?

   நீக்கு
 8. கேட்டு ரசித்த நல்ல பாடல் ஜி

  பதிலளிநீக்கு
 9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  நலமே வாழ்க எங்கெங்கும்!...

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் காலை வணக்கம். பாடல் கேட்ட நினைவில்லை. பெரிதாக கவரவும் இல்லை.

  பதிலளிநீக்கு
 11. ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான உருக வைக்கும் குரலில் இனிமையான பாடல்...

  பதிலளிநீக்கு
 12. பாடலைக் கேட்ட நினைவு இல்லை.

  இந்தப் பாடலைப் படம் பிடிக்க, பாவம் ஒரு செகண்டுக்கும் குறைவாக வருபவர்கள், மேக்கப் டிரெஸ் போட்டுக்கொண்டு கூட்டத்தில் இருப்பதைப் பார்க்கும்போது பாவமாத்தான் இருக்கு. நிச்சயம் 1/2 நாள் கால்ஷீட்டில் 1/2 செகண்ட்தான் அவங்க ஃப்ரேமில் வரப்போறோம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்குமா?

  பதிலளிநீக்கு
 13. பாடலைக் கேட்ட நினைவில்லை. இப்போது தான் அலைபேசி வழி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

  தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
 14. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 15. பாடல் கேட்டு இருக்கிறேன் . காணொளியாக பார்க்கும்போது சோகமாக இருக்கிறது காட்சிகள் மனதை வேதனைபட வைக்கிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!