ஞாயிறு, 10 ஜனவரி, 2021

மை மி கா சா - மேலும் சில படங்கள்

 

வருவோரும் --- போவோரும் 


வரிசையில் நிற்போரும் - - 


வாக்கிங் போவோரும் - - -


விசாரணைகள் செய்வோரும் - - -ஒரு மின்கல வண்டி வந்துவிட்டது போலிருக்கே! எல்லோருக்கும் சீட் இருக்கா? அடுத்து வரும் இரண்டு படங்களுக்குள் ஆறு வித்தியாசங்கள் இருக்கின்றனவா ? 


செடிகளைத் தொட்டியில் இட்டு - - 


மரங்களுக்கும், மலர்களுக்கும்  கட்டவுட்டா ! இன்னமும் காத்திருப்புதானா? 


ம் ம் ம் ம்  - - -  


எங்கே செல்கிறார்கள்? ஹூம் - - - - கட்டவுட்டு சரி - பக்கத்தில் என்ன தாழங்குடை விளக்குகள், படகுகள் ? 
==== 

34 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  இன்றைய படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. முதல் நான்கு படங்களுக்கு கோர்வையாக அமைந்(த)த வாசகங்கள் சிறப்பு.

  மின்கல வண்டிக்காக காத்திருந்து செல்வதை விட நடைபயணம் செய்தே சுற்றிப்பார்ப்பது நல்லது போலிருக்கே...! கட்டவுட் படங்கள் நன்றாக உள்ளது.

  இந்த மாதிரி ஆறு வித்தியாச படங்களை (உண்மையான வித்தியாசங்களுடன்) அங்கும் சில படங்களாக வைத்திருந்தால், அடுத்தடுத்து மின்கல வண்டி வருவதற்காக, கால் கடுக்க நின்றபடி இருப்பவர்களுக்கு நன்றாக பொழுது நகர்ந்திருக்கும். (ஆமாம்... நீங்கள் இங்கு பகிர்ந்ததில் உண்மையிலேயே இருக்கின்றனவா? ஹா ஹா.) அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுதானே.. அவர்களுக்கும் மின்கல வண்டி வரும்வரை நேரம் போகணுமே..

   நீக்கு
 3. என்ன இது... இது வரை யாரையும் காணவில்லையே? சகோதரிகள் கீதா சாம்பசிவம், வல்லிசிம்ஹன் அவர்களைக் கூட காணவில்லை. ஆச்சரியமாக உள்ளது. முதலில் வந்த மின்கல வண்டியில் அனைவருக்கும் இடம் கிடைத்து விட்டதோ? ஹா. ஹா. ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞாயிறு என்பதால் மெதுவாக வருவார்கள்!

   நீக்கு
  2. வரட்டும்... வரட்டும்.. அதே ஞாயறு என்பதால்தான் என்னுடைய இந்த அதிசய தொடர் வருகையோ எனவும் நினைக்கிறேன்.

   நீக்கு
  3. நாளை மாமியார் ஸ்ராத்தம் என்பதால் இன்றே வேலைகள் தொடங்கிவிட்டன. பார்க்கப் போனால் நேற்றே! அதனால் காலையில் வர முடியலை. இப்போவும் சொந்த வேலையைச் செய்ய வந்தப்போ இடையில் இங்கேயும் நுழைந்தேன்.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  கடைசி இரு படங்கள் இயற்கை எழிலுடன் பார்க்கவே மிக அழகாக உள்ளது.படகு போன்ற அமரும் பலகைகள் நன்றாக இருக்கிறது. அங்கு சுத்தங்கள் நன்றாக பராமரிக்கப்படுவது படங்களில் தெரிகிறது.

  ஆகா.. நாலு கருத்துக்கள் தொடர்ந்து நானா.. என்ற ஆச்சரியமும் எனக்கு எழுகிறது. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்நு நாலு கருத்துகள்... ஆஹா.. நன்றி அக்கா.

   நீக்கு
  2. நீங்களே தான் கமலாமா. இனிய காலை வணக்கம்.
   காற்று வாங்கப் போய் தலைவலியோடு
   உள்ளே வந்துட்டேன்:)
   கொஞ்சம் தாமதமாகிவிட்டது. எத்தனை அழகாகப்
   பின்னூட்டம் இடுகிறீர்கள்!!!!!!!!!!
   அனைவருக்குமினிய காலை வணக்கம்.

   நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரி

   அடாடா.. காலை காற்று தலை நோவை தந்து விட்டதா? உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் சகோதரி. தங்களுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. அன்பு கமலாமா,
   உங்களது காலை எனக்கு மாலை.
   மன இறுக்கம் தாங்காமல் வெளியே சென்றோம்.

   அந்த சில்லிப்பு தலையில் இறங்கியது.
   வேற ஒன்றும் இல்லை.
   பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றி'' என்று
   கோதை சொல்வாள்.

   நீக்கு
 5. கடைசி இரண்டு படங்களும் அமைப்போடு இருக்கின்றன.
  முதலிலிருந்து எல்லாப் படங்களுக்கும் கொடுத்திருக்கும் தலைப்புகள் அருமை.
  எப்படித்தான் பொறுமையோடு நின்றார்களோ!!!

  ஆனால் அத்தனாம் பெரிய மி கா வை, நடந்து
  பார்க்க முடியாது.
  நாங்கள் சென்ற போது நாம் மகனைத் தூக்கிக்
  கொண்டேன். சிங்கம் மகளைத் தூக்கிக் கொண்டான். பெரிய தம்பி
  கூடைகளை எடுத்து வந்தான்.

  சிறுத்தை எல்லாம் இருந்தது.
  நல்ல இடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தூக்கிகொண்டார் என்று இருக்க வேண்டும். சிங்கம் மன்னிப்பாராக.

   நீக்கு
 6. ஆறு வித்தியாசங்கள் பார்த்து வைத்துக் கொண்டேன்.
  அன்பு ஸ்ரீராமுக்கும் இனிய காலை வணக்கம்.
  வரும் காலங்கள் ஆரோக்கியத்துடனும்
  தொந்தரவில்லாமலும் கடக்க இறைவன் துணை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆறு வித்தியாசங்கள் பார்த்து வைத்துக் கொண்டேன்.//

   சொல்ல முடியாது.... அடுத்து ஞாயிறு, ஆறு வித்தியாசங்கள் போட்டி இருந்தாலும் இருக்கும்.

   நீக்கு
 7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலம் எங்கும் வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே சூழ்நிலை நூறு வித்தியாசங்களுடன் ஆகி விட்டது..

   வாழ்க எபி..
   வளர்க அதன் தொண்டு..

   நீக்கு
 8. அனைவருக்கும் காலை வணக்கம். படங்கள் துல்லியம். நேற்று பாசிடிவ் செய்திகளை படித்து விட்டு, பிறகு பின்னூட்டம் இடலாம் என்று நினைத்தேன். வரவே முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னூட்டம் எப்போது வேண்டுமானாலும் இடலாம். ஆறு நாட்களுக்குள் இடப்படும் பின்னூட்டம் உடனுக்குடன் வெளியாகும்.

   நீக்கு
 9. படங்கள் எல்லாம் நன்றாக இருந்தாலும் மிருகங்களைப் பார்க்க இவ்வளவு நேரமா எடுத்துக்கறது? சுத்தணுமே! அதுக்கே நேரம் வேண்டாமோ? இன்னும் உள்ளேயே போகலை. உள்ளே மிருகங்களைப் படம் எடுக்க முடிந்ததா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுக்குள்ள அவசரமா? இப்போதான் டைட்டில்ஸே வருது.... அதுனால சில பல வாரங்கள் காத்திருங்க. வருது..வருது...வந்துக்கிட்டே இருக்குது..

   நீக்கு
  2. இப்போது தான் டைட்டில்ஸ்!...

   இன்னும் ஓராண்டை ஓட்டி விடலாம் போலிருக்கே!..

   நீக்கு
  3. அடுத்த வாரம் வந்துவிடும் என்கிறார் பதிவாசிரியர்.

   நீக்கு
 10. படங்கள் நன்று. ரசித்தேன். உதய்பூரில் ஒரு பூங்காவில் இப்படித்தான் பேட்டரி ரிக்‌ஷாக்களுக்குக் காத்திருந்தோம். அது நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!