புதன், 20 ஜனவரி, 2021

கடவுளைப் பார்த்தால் என்ன கேட்பீர்கள்?

 


கீதா  சாம்பசிவம் : 

1.நாத்திகம் என்பது "கடவுள் இல்லை" என்னும் மறுப்பா? அல்லது மூட நம்பிக்கை ஒழிப்பா?

# கடவுள் மறுப்பு தான்.

& அஸ்தி என்றால் இருக்கு. நாஸ்தி என்றால் இல்லை. 

2.ஆத்திகம், நாத்திகம் இரண்டுக்கும் என்ன பெரிய வேறுபாடு?

 # கடவுள் பற்றிய நிலைப்பாடு தான்.

3. ஆன்மிகம் வேறே ஆத்திகம் வேறே என்பது சரிதானே?

# சரிதான். ஆன்மீகத் தேடல் ஆழமானது.

4. ஆன்மிகவாதி நாத்திகம் பேசினால் எடுபடுமா? இல்லை எனில் அவருடைய பக்தியை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டுமா?

 # ஆன்மீக "வாதி" என்பதைவிட ஆன்மீகத்தேடல் மிக்கவர் என்பதே பொருத்தம். அவர் நாத்திகம் பேச முன்வரமாட்டார். பக்தி என்பது வேறு கோணம் என்று நான் நினைக்கிறேன்.

5. பொதுவான கருத்து மனித நேயம் இருந்தால் அவர்கள் நாத்திகவாதிகளாகவே இருப்பார்கள் என்றும்/ கடவுள் நம்பிக்கை இருந்தால் அவர்கள் மனித நேயம் இல்லாதவர்களாக இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையா?

# உண்மையல்ல.

6. கடவுளைப் பார்த்தால் என்ன கேட்பீர்கள்?

# அப்போது கேட்க எதுவும் இராது.

& உலக மக்கள் எல்லோரும் ஆத்ம சக்தியும், மனித நேயமும் கொண்டு சந்தோஷமாக வாழ வரம் கொடுங்க ஆண்டவரே! 

(  சென்ற வாரப் பதிவில் ஏஞ்சல் கடவுளிடம் கேட்பேன் என்று சொல்லியவை : 
 1,எச்சூஸ்மீ நீங்க கடவுள்தானா? ஐடி கார்ட் காட்டுங்க  ?எச்சூஸ்மீ உங்க வயசென்ன ?3, டியர் கடவுளே உங்களுக்கு காதல் தோல்வி அனுபவம் இருக்கா ?4,கடவுளே நீங்க சைட் அடிச்சிருக்கீங்களா ? நீங்க சிங்கிளா ? இல்லை கமிட்டடா ?5,மனுஷர் செய்ற தப்புக்கல்லாம் உங்கள எதுக்கு வையறாங்க ?அதுவும் ஐரோப்பியர் மோசம்பா கெட்ட வார்தைள்லாம் திட்டறாங்க அதுபத்தி  நீங்க என்ன நினைக்கிறீங்க ?6, டியர் காட் நீங்க முகப்புத்தகதில் இருக்கீங்களா ?7, உங்களுக்கு கனவுகள் வருமா ?8,எங்களுக்கு பயம் வந்தா உங்களை கூப்பிடறோம் உங்களுக்கு பயம் வந்தா யாரை கூப்பிடுவீங்க ?9, உங்க பேங்க் பேலன்ஸ் எவ்ளோ 10, கடவுளே உங்களுக்கு கொரோனா வந்துச்சா ?11, உங்களுக்கு கண் இருக்கா ? நிறையபேர் கடவுளுக்கு கண்ணில்லைங்கிறாங்க அதான் கேட்டேன் ?12,கடவுளே உங்களுக்கு மசாலாதோசை பிடிக்குமா இல்லை பூரி மசாலா பிடிக்குமா ?) 
இதை எல்லாம் கேட்டால் கடவுள் என்ன செய்வார்? 

 
பானுமதி வெங்கடேஸ்வரன்: 

நெல்லை ஜெபமணி, நெல்லைக் கண்ணன், நெல்லைத் தமிழன் மூவருக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன?

# நெல் இருக்கிறது என்பதுதான்.

இலக்கியத்தில் வர்ணிக்கப்படுவது போல "மூட நெய் பெய்து முழங்கை வழிவாரும் பொங்கல்", "பாலும்,தெளி தேனும், பாகும் பருப்பும்" போன்ற பிரசாதங்கள் செய்திருக்கிறீர்களா?

# நெய் மூடிய அக்கார அடிசில் , முந்திரி போட்ட பழப் பச்சடி சாப்பிடாதோரும் உளரோ ?

& ஔவையார் சொன்னதை சுவைத்துப் பார்த்ததில்லை. 

தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவது என்று எப்படி தீர்மானிப்பீர்கள்? கொள்கை ரீதியாக உங்களுக்கு பிடித்த கட்சி வேட்பாளருக்கா? அல்லது நல்ல மனிதர் என்று நீங்கள் நம்பும் ஆசாமிக்கா?

$ பின்னவருக்கே.

#  பெரும்பாலும் தகுதியை வைத்துப் பார்த்தால் எரிகிற கொள்ளி எல்லாமே ஒன்றுதான் என்பதுதான் நிலவரம். எனவே எந்தக் கட்சி வருவது நல்லதல்ல என்று தோன்றுகிறதோ அதற்கு எதிரான அணி வேட்பாளருக்கு வாக்களிப்பேன். நல்ல மனிதர் தவறான கட்சி என்பது அடிக்கடி காண்கிற அபத்தம்.

& முன்னவருக்கே ! 

நெல்லைத்தமிழன் : 

எந்த ஒரு இடுகையும் படிக்கத்தான் வெளியிடறாங்க. அப்புறம் ஏன் பின்னூட்டம் எதிர்பார்க்கிறாங்க?  

$ வாட்ஸாப் குழுவில் பதிவு என்றால் படித்தவர்கள் யார் எத்தனை பேர் என்று அறிந்து கொள்ள வாய்ப்புண்டு. ப்லோக்கில் பின்னூட்டம் மட்டுமே வழி.

# கைதட்டல் பெறுவதில் உள்ள நாட்டம்தான்.

& என்னதான் படிக்க வெளியிட்டாலும் - படித்தவர்கள் சும்மா கடந்து போகாமல், ஏதேனும் கருத்து பதிந்தால், அது, பிறகு நாம் எழுதும் பதிவுகளின் தரத்தை மேம்படுத்த உதவும் அல்லவா? 

நம்ம ஏரியா அல்லது எ.பி. மாதிரி platform கொடுத்தாலும் ஏன் மக்கள் நிறைய எழுதி அனுப்பமாட்டேன் என்கிறார்கள் என யோசித்திருக்கிறீர்களா? 

$ எழுதத்திறமை வேண்டும். அது இல்லாதவர்கள் ஒதுங்கித்தான் போவார்கள்.

# எழுதுவதை விடுங்கள் படிக்க வைப்பதே கூட பிரச்சினையாக இருக்கிறதே.

& யோசித்திருக்கிறேன். அப்படி இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். 'எழுதி அனுப்பக்கூடாது' என்று யாரும் நினைப்பதில்லை. எழுத நினைப்பவர்கள் பெரும்பாலானோர் அந்த நேரத்தில் மட்டும் நினைத்து, பிறகு மறந்துவிடுவார்கள். சிலர் எழுதி, பிறகு அதை அனுப்பிவைக்க மறந்துவிடுவார்கள். எழுதி அனுப்பியவர்கள் சிலர் அப்புறம் அப்படி எழுதி அனுப்பியதையே மறந்துவிடுவார்கள்.  

இணையத்தில் ஆயிரக்கணக்கான சமையல் குறிப்புகள் வெளியிடறவங்க இருக்காங்க. உங்களைக் கவர்ந்தவர்கள், ரிலையபிள் என்று ஏதேனும் ஓரிரண்டைச் சொல்ல முடியுமா?  

# சமையல் குறிப்பு படிப்பதோடு சரி.  எழுதுபவர் ஐந்து பேர் விபரம் கேட்டால் அடியேன் அம்பேல்.

& நெல்லைத்தமிழன், பானுமதி வெங்கடேஸ்வரன், கீதா ரெங்கன், கீதா சாம்பசிவம் (இவருடைய குறிப்புகள் எல்லாம் பெரும்பாலும் பின்னூட்டங்களில்தான் காணப்படும்) 

சமீபத்தில் தாம்பரத்தில் செக்கு நல்லெண்ணெய் என்று விற்கும் பலப் பல கடைகளைப் பார்த்தேன். அவற்றில் ஒன்றில் வாங்கிய நல்லெண்ணெயின் ஒரு பகுதி உறைந்தது. வேறு ஏதேனும் கலப்படம் நிகழ்ந்திருக்குமா இல்லை நல்லெண்ணெய் உறைய வாய்ப்பு உண்டா?  

$ நல்லெண்ணெய் நம் ஊர் வெப்பத்துக்கு உறையாது. தேங்காய் எண்ணெய் அல்லது palm ஆயில் கலந்திருக்கலாம்.

# ந.எ உறைய வாய்ப்பு இல்லை. 

& Now, a law is passed by the Govt banning sale of oils in unpacked condition. Please check the ingredients printed on the packing cover. பெங்களூரில் விற்பனையாகும் " தீபம் " எண்ணெய்கள் பலவற்றிலும் palm ஆயில் கலந்துள்ளது. பாக்கெட் மீதும் எவ்வளவு கலந்துள்ளது என்று அச்சடித்திருக்கிறார்கள். அந்த எண்ணெய் பத்து சதவிகிதம் நெய்யாக அடியில் உறைந்து தங்கிவிடுகிறது. 

ப்ரெட், நூடுல்ஸ், மைதா போன்றவை உடலுக்கு நல்லதா? இல்லை என்றால் ஏன் அவைகளை விற்பனை செய்ய அரசாங்கம் அனுமதிக்கிறது?

$ அளவுடன் உண்டால் நஞ்சும் அமிர்தம். நமக்கு நம் சுகவீனங்களுக்கு ஒரு காரணம் வேண்டும். பிரெட் மற்றும் இதர மாவுப்பொருள்களும் தீமை பயப்பன என்று சொல்லப்பட்டாலும் நூற்றாண்டுகளாக உண்ணப்பட்டுத்தான் வருகின்றன. உழைப்பின்மையால் வரும் வியாதிகளுக்கு காரணம் தேடுகிறோம் அரசாங்கம் பல பொருள்களைத் தடை செய்தும்....  ! 
நிற்க - மைதா தயாரிப்பில் உபயோகப்படும் whitening agent கேன்சர் வரவழைக்கும் என்னும் ஐயம்,
வனஸ்பதி hydrogenationகு உபயோகப்படும் நிக்கல் உப்பு, சர்க்கரை செய்யும்போது கசடுகளைக் களைய சேர்த்து வடிகட்டப்படும் கால்சியம் சல்பேட் இவை எல்லாம் தனியே உண்ணமுடியாத பொருள்கள்.

# மைதா பற்றி மட்டுமே ஐயம்.  அதிலும் பெரிய ஆபத்து எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  மைதா போன்ற வழுவழுப்பான மாவு வயிறு குடல் சுவர்களில் ஒட்டிக்கொண்டு இடம் பெயர்வது கடினம். தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் மட்டுமே இடர்.

& மைதா உடலுக்கு நல்லது இல்லை என்று நான்கு வருடங்கள் முன்பு படித்தேன். அதிலிருந்து மைதாவை விலக்கி வைத்துவிட்டேன். 
 

ஏஞ்சல் : 

பாராட்ட ஆயிரம் முறை யோசிக்கும் சிலர்   குற்றம்சாட்டும்போது கொஞ்சம் கூட யோசிப்பதில்லையே ? அது ஏன் ? ?

$ பாராட்ட 10 பேர் இருந்தால் குறை சொல்ல கோடிப்பேர் கூட வருவார்கள் என்பதால். 

# பாராட்ட அடிப்படை உண்டா என உறுதி செய்வது சுலபமில்லை. 

& இப்படி நானும் நினைத்ததால், பாராட்டுகளை நிறைய பொதுவில் எல்லோருக்கும் வழங்கிவிடுவேன். குறைகள் எதுவும் என் கண்ணில் படுவதில்லை. பட்டாலும் எதையும் சொல்வதில்லை. 

சிடுமூஞ்சி / சுடுமூஞ்சி, முன்கோபி , திமிர் , அகங்காரம், இந்த மாதிரி கேரக்டர்ஸை எப்படி சமாளிப்பீர்கள் ?

$  தள்ளிப் போய்விடுவேன்.

#  ஒதுங்கிப் போய்விடுவேன்.

& சற்றே தள்ளி, ஒதுங்கிப் போய்விடுவேன். 

அதிரா :  

நரிக்குணம் என்றால் என்ன?

$ நரியும் கொக்கும்  தோட்டம் போட்ட கதை உலகப்புகழ் பெற்றது.. நீங்களும் படித்திருப்பீர்கள். எந்த ஒப்பந்தமானாலும் எப்போதும் advantage நரிக்குத்தான்!

# சுயநலத்தை மட்டுமே முற்படுத்தி செயல் படுவது.

= = = = 
மின்நிலா பொங்கல் மலர், பலருடைய பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 

நிறைகள் : முகப்பு ஓவியம், கதைகளுக்கான (அருண் ஜவர் ) ஓவியங்கள், கதைகள், கட்டுரைகள் எல்லாமே பலரும் பாராட்டி வருகிறார்கள். விமரிசனம் எழுதி அனுப்புகிறேன் என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். வாசகர் விமரிசனம் - மலரின் நிறை & குறைகளை சொல்லி, 500 வார்த்தைகளுக்கு மேல் எழுதப்பட்ட விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன. பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் engalblog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 

குறைகள் : பக்கங்கள் ரொம்ப அதிகம். நல்ல கவிதைகள் சில மட்டும்தான் உள்ளன. மற்றவை மிக சாதாரணமாக உள்ளன. 'கோபு வெச்ச ஆப்பு' என்கிற கதை சகிக்கவில்லை. இதை எந்த அடிப்படையில் வெளியிட தேர்வு செய்தீர்கள்? கதைகளுக்கு kgg என்பவர் வரைந்துள்ள படம் எல்லாமே சுமார் ரகம்தான். 

= = = = 

எங்கள் அடுத்த தயாரிப்பு " மின்நிலா சித்திரை சிறப்பிதழ் " 
இது ஏப்ரல் பதினான்காம் தேதி வெளியிடப்படும். 

இந்த சித்திரை சிறப்பிதழுக்காக 'ஆசிரியர் குழு' ஒன்று உருவாகியுள்ளது. அந்த ஆசிரியர் குழு உறுப்பினர்கள், எங்கள் சார்பாக பலரிடமும் படைப்புகள் வாங்கி எங்களுக்கு அனுப்ப இசைந்துள்ளார்கள். ஆசிரியர் குழுவில் இருப்பவர்களும் படைப்புகள் அனுப்புவார்கள். எல்லோரும் பங்கேற்போம். சி சி யை சீரும் சிறப்புமாக கொண்டுவருவோம்.  



கதைகள், கட்டுரைகள், கவிதைகள், சுவையான தகவல்கள், படங்கள், நீங்கள் அல்லது உங்க நண்பர்கள் / உறவினர்கள் வரைந்த ஓவியங்கள் - எல்லாம் எங்களுக்கு அனுப்புங்கள். 

சித்திரை சிறப்பிதழ் மலரில், உங்கள் படைப்புகளோடு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகளில் சிறப்பு படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன : 

" மதுரை ", கோடை விடுமுறை ", " மதுரை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் , கோவில்கள்", "சினிமா சம்பந்தப்பட்ட மதுரை தகவல்கள்" , " புகைப்படங்கள், ஓவியங்கள். " 

எல்லாம் -  engalblog@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு இப்பொழுது  தொடங்கி, மார்ச் 31 ஆம் தேதிக்குள்  அனுப்புங்க. 

நன்றி. 

= = = = .  

 

96 கருத்துகள்:

  1. செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எனக்குப் புரியுதோ இல்லையோ... தமிழகத்தில் நிச்சயம் அரசியல் கூட்டங்களில் கிராம சபையில் கலந்துகொள்ளும் லட்சக்கணக்கானவர்களுக்குப் புரியுது.

      நீக்கு
    2. எங்களுக்கு செல்வத்துட் செல்வம் - செல்வராஜு மட்டுமே!

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    அனைத்துயிரும் இன்புற்று வாழ்க...

    பதிலளிநீக்கு
  3. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இறைவன் அருளால் எல்லோரும்
    நன்மை பெறட்டும்.

    பதிலளிநீக்கு
  4. // மூட நெய் பெய்து....//

    இலக்கியத்தில் வர்ணிக்கப்படுவது போல என்ற வார்த்தை மழுப்பல் எதற்கு!..

    நேரிடையாக திருப்பாவையில் என்று சொல்லலாமே!...

    நீங்கள் ஏதும் தேர்தலில் நிற்கப் போகின்றீர்களா?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்க ரொம்ப அரசியல் பேச்சு கேட்பாங்களோ? பக்தி இலக்கியப் பேரைச் சொல்லத் தயங்கறாங்களோ? என்று நான் சொல்லமாட்டேன்.

      நீக்கு
    2. நானும் சொல்லமாட்டேன்.

      நீக்கு
    3. //இலக்கியத்தில் வர்ணிக்கப்படுவது போல என்ற வார்த்தை மழுப்பல் எதற்கு!..// மழுப்பும் நோக்கம் இல்லை. இலக்கிய நயம் செறிந்த வரி,என்று நினைப்பதால் அப்படி கேட்டேன்.
      இதற்கு ஶ்ரீரங்கத்தில் பெரியவாச்சான் பிள்ளை அவர்கள் உரை நிகழ்த்திய பொழுது,அவருடைய சீடர்,"இப்படி சாப்பிட்டால் நெய் வாயில் தொங்காதோ?" என்று கேட்டாராம், அதற்கு பெரியவாச்சான் பிள்ளை,"சோறு வாயில் தொங்கினன்றோ, நெய் வாயில் தொங்கும்?" என்று பதில் கூறினாராம். அதாவது பாவை நோன்பை முடித்த பெண்கள் எல்லோரும் கண்ணனோடு சேர்ந்து அமர்ந்து சாப்பிட பொங்கலை கையில் எடுக்கிறார்கள், ஆனால் அது வாய்க்கு போய் சேரவில்லை, கண்ணனுடைய திருமுக மண்டலத்தை பார்த்தபடி அப்படியே அமர்ந்திருக்கிறார்கள்,அதனால் அவர்கள் கையிலிருக்கும் பொங்கலில் இருக்கும்,நெய் உருகி முழுங்கை வரை வழிகிறதாம். இந்த பாசுரத்தில் முக்கியமான வார்த்தை கூடியிருந்து குளிர்ந்து என்பதுதான்.

      நீக்கு
    4. ஆஹா ! சுவையான கருத்துரை. நன்றி.

      நீக்கு
    5. மன்னிக்கவும்...

      தேவார, திருவாசக, திருமந்திர, திவ்யப் பிரபந்தம் இவற்றில் மொழியப்பட்டுள்ள பொன்னார்ந்த வரிகளுக்கு சமய அடையாளத்துடன் நாம் உரிமை கொண்டாடத் தவறுகின்றோமே...

      என்ற வருத்தத்தினால் அப்படிச் சொன்னேன்..அன்றி வேறொன்றில்லை..

      நீக்கு
  5. ஒன்றே குலம்.. ஒருவனே தேவன்...

    இவ்வாறு அறிவுறுத்தியவர் யார்?..

    அடுத்து வரும் தேர்தல் கூட்டங்களில் அறியலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.... அவரா.... காமராஜ் ஆட்சியை அமைப்போம் என்று இப்போது சொல்லும் கட்சியைச் சேர்ந்தவரா?

      நீக்கு
    2. திருமூலர் என்று காலையிலே சொல்ல நினைத்து மறந்திருக்கேன். :(

      நீக்கு
  6. நெல்லை ஜெபமணியி நினைவில் வைத்திருப்பதே ஆச்சர்யம்தான். நல்லவர்களுக்குத்தான் நம் நாட்டில் வாக்குகள் கிடைக்காதே

    நெல்லை கண்ணன் சிறந்த பேச்சாளர். தேவையில்லாத்தைப் பேசி வம்பிலும் மாட்டிக்கொள்வார். எழுத்தாளர் சுகாவின் தந்தை?

    இவர்களின் திறமைகள் எதுவும் இல்லாதவர்தான் மூன்றாவது நபர்.

    பதிலளிநீக்கு
  7. எங்களின் அடுத்த தயாரிப்பு..... விளம்பரம் படித்ததும்...

    காலை உணவைச் (பகலுணவு) சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே....ஆமாம்..சாயந்திரம் என்ன பண்ணப் போற என்று கேட்பது, நினைவுக்கு வந்தது. பொங்கல் மலரை முழுவதும் படித்து விமர்சனம் எழுதுவது, எழுத்தாளர்களுக்குச், சிறப்பாக மலரைத் தயாரித்தவர்களுக்குச் செய்யவேண்டிய குறைந்தபட்ச மரியாதைனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைகோவின் கதை வரை படிச்சிருந்தேன். நேற்றுப் படிக்க முடியலை. மிச்சமும் இன்று படிக்க வேண்டும். எனக்கு இவ்வளவு தாமதம் ஆகாது! ஆனால் இப்போ என்னமோ உட்காரவே முடிவதில்லை. :(

      நீக்கு
    2. // விமர்சனம் எழுதுவது, எழுத்தாளர்களுக்குச், சிறப்பாக மலரைத் தயாரித்தவர்களுக்குச் செய்யவேண்டிய குறைந்தபட்ச மரியாதை// ஆம் - அதே !

      நீக்கு
    3. // ஆனால் இப்போ என்னமோ உட்காரவே முடிவதில்லை. :(// Please consult a physiotherapist .

      நீக்கு
    4. ஹாஹாஹா, அப்படி அர்த்தம் வந்துடுத்தா? நான் உட்கார்ந்து இணையத்தை மேய நேரம் கிடைப்பதில்லை என்னும் பொருளில் சொன்னேன். விரிவாய்ச் சொல்லி இருக்கணுமோ? அதெல்லாம் கை,கால் வலினு உட்கார்ந்து கவலைப்படும் ரகம் அல்ல. அது பாட்டுக்கு அது! இது பாட்டுக்கு இது! இப்போ நேரம் கிடைப்பது அரிதாகி விட்டது. :)))) அப்பாடா! தெளிவாய்க் குழப்பிட்டேனோ?

      நீக்கு
    5. விளக்க உரைக்கு நன்றி.

      நீக்கு
  8. ஆன்மீகவாதி நாத்திகம் பேசினால் எடுபடுமா? -- அதற்கு நாத்திகம் என்றால் என்ன என்ற புரிதல் நமக்கு இருக்கவேண்டும்.

    நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்... என்பதையும் நாத்திகம் எனப் புரிந்துகொள்பவர்கள் அதிகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை மனதில் வைத்துத் தான் நான் கேட்டேன் நெல்லையாரே! பெரும்பாலான ஆன்மிகவாதிகள்/சித்தர்கள் இறை நம்பிக்கை அற்றவர்கள் என்றே புரிந்து கொள்ளப்படுகிறார்கள்.

      நீக்கு
    2. சாதாரண மக்கள் பலரும் எதையும் உள்ளார்ந்து படித்து உணர்வதில்லை.

      நீக்கு
  9. மைதா,சர்க்கரை, உப்பு எல்லாமே கெடுதல் தான்.
    சர்க்கரை ,மைதாவைக் கண்டிப்பாக ஒதுக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரவுன் ப்ரெட் கிடைக்கிறதே! அதை வாங்கிச் சாப்பிடலாம். இங்கேயும் நாங்கள் வாங்குவது ப்ரவுன் ப்ரெட் தான். மாடர்ன் ப்ரெடிலும் ப்ரவுன் ப்ரெட் கிடைக்கிறது. ஆனால் அது வாங்கினால் எங்களுக்குச் சீக்கிரம் தீராது என்பதால் பேக்கரி ப்ரெடே ப்ரவுன் ப்ரெடாக எப்போதேனும் வாங்கிப்போம்.

      நீக்கு
    2. என் பையன் whole wheat bread (முழு கோதுமை ரொட்டி?) prefer செய்வது உண்டு.

      நீக்கு
    3. ப்ரவுன் ப்ரெட் பற்றியும் சில எதிர்மறை செய்திகள் வந்தது.

      நீக்கு
    4. வல்லிம்மா... நான், மைதா, சர்க்கரை, நெய் ஆகியவற்றைத் தனியாக சாப்பிடுவதில்லை. மைதா ஸ்வீட் பண்ணிச் சாப்பிடறேன். பரவாயில்லைதானே.. (பண்ணினா தி பதிவுக்கு எழுதணும்)

      நீக்கு
    5. ப்ரவுன் ப்ரெட் அம்பேரிக்காவில் நன்றாக இருக்கும். இங்கே வாங்கும் ப்ரவுன் ப்ரெடும் அதிக மிருது வகை தான்! :( நல்ல நார்ச்சத்து உள்ள ப்ரவுன் ப்ரெட் அம்பேரிக்காவில்.

      நீக்கு
  10. நெல்லை கண்ணன் சிறந்த பேச்சாளர். தேவையில்லாத்தைப் பேசி வம்பிலும் மாட்டிக்கொள்வார். எழுத்தாளர் சுகாவின் தந்தை?///இல்லை என்று நினைக்கிறேன் முரளி மா.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். சில நாட்கள் கழித்துக் காலை வந்திருக்கேன். ஆனாலும் இன்னிக்கு எழுந்துக்கும்போது ஐந்தரை மணி! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவு வெளியாகும் தருணத்தில் எழுந்திருத்திருக்கிறீர்கள் !! வாழ்த்துகள்.

      நீக்கு
  12. "மூட நெய் பெய்து முழங்கை வழிவார" என்பது அதிகப்படியான வர்ணனையாய்த் தோன்றினாலும் இந்த வருஷம் கனுப்பிடிக்காக நான் பண்ணின சர்க்கரைப் பொங்கலில் நெய் மிதந்தது! ஆண்டாளைத் தான் நினைத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட்டா.... நல்லா மிக்ஸ் ஆகலையா? அல்லது நெய் உங்க சர்க்கரைப் பொங்கலை ரிஜெக்ட் செய்துடுச்சா?ஹா ஹா ஹா

      நினைத்தால் நான் ச.பொங்கல், பாயசம் செய்துடுவேன். தொடர்ந்து நாலு நாட்கள் செய்தோம்..(மாமனார் சொன்னார்னு கூ.வல்லிக்கு முந்தினநாள் 2 1/2 மடங்கு வெல்லம், Stiffen ஆனதால் என் மனைவியை திரும்ப பண்ணித் தரச் சொன்னார். அப்புறம், அது எப்படி மிஸ்டேக் வரும்னு மறுநாள், 1 3/4 வெல்லம்.. இனிப்பு குறைந்துவிட்டது, ..)

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நெய் மிதந்தது என்றால் சரியாக் கலக்கலைனு அர்த்தமா! அதுக்கும் மேல் நெய் நின்றது என்றே பொருள்! ஒரு கிண்ணம் அரிசி எனில் அரைக்கிண்ணமாவது பாசிப்பருப்புப் போடுவேன். குக்கரில் வைப்பதில்லை. குக்கரில் வைத்து வெல்லப்பாகு கரைய விட்டுச் சேர்ப்பதில்லை. நேரடியாகப் பண்ணிடுவேன்.

      நீக்கு
    3. சொப்பு வச்சு விளையாடறவங்க கிட்ட, கிண்ணம் அளவு என்னன்னு நான் கேட்க மாட்டேன். நான் வரும்போது பெரிய கிண்ணம் (பாத்திரம்) அளவுக்கு எடுத்துக்கோங்க கீசா மேடம்

      நீக்கு
    4. நான் அன்றாட சமையலைச் சொன்னேன் நெல்லை. நாளுக்கு நாள் அளவு குறைந்து கொண்டே வருது! நீங்க வரச்சே நிறையச் சமைச்சு வைப்பேன். கவலையே படாதீங்க. ஆனால் உங்களால் எந்த அளவுக்குச் சாப்பிட முடியும்! சும்மாப் பேராசை தான் பெரிசா இருக்கு!

      நீக்கு
    5. சாதாரணமாக ஒரு கிண்ணம் என்பது 200 கிராம் அளவு. அந்த அளவுக்குப் பொங்கல் பண்ணினால் இங்கே சாப்பிட ஆளுக்கு எங்கே போக! ஆகவே நான் ஒரு சின்னப் ப்ளாஸ்டிக் கிண்ணம் வைச்சிருக்கேன். 50 கிராமுக்குக் கூட அரிசி+அதில் பாதி பருப்புப் போட்டுச் சின்ன உருளியில் பொங்கல் பண்ணிடுவேன். அதிலேயே நாங்க சாப்பிட்டு எதிர்வீடுகள், வேலை செய்யும் அம்மானு கொடுத்தும் கொஞ்சமானும் மிஞ்சும். கல்யாணமே பண்ணிடுவேன்! :)))))

      நீக்கு
  13. பதிலளிப்போம்னு சொல்லிட்டு இந்த வாரம் கேஜிஜி குறிப்பிட்ட கேள்விகளுக்குத் தான் பதில் சொல்லி இருக்கார். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்த ஆ"சிரி"யர் " # " அவர்களுக்கு நன்றி. இது "#" தட்டச்சுகையில் விட்டுப் போயிருக்கு.

      நீக்கு
    2. # வுடைய கருத்தோடு ஒத்துப்போகும்போது & மௌனமாகிவிடுவார் !

      நீக்கு
  14. மின் நிலா பொங்கல் மலரை ஒவ்வொரு பக்கமாக
    படித்து வருகிறேன்.
    சித்திரைச் சிறப்பிதழுக்கு நிறைய
    வரவு இருந்தால் இரண்டாகப் பிரசுரிக்கவும்.

    பதிலளிநீக்கு
  15. கேள்விகளும் பதில்களும் மிக அருமை.
    சிந்திக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  16. //கீதா சாம்பசிவம் (இவருடைய குறிப்புகள் எல்லாம் பெரும்பாலும் பின்னூட்டங்களில்தான் காணப்படும்) // இஃகி,இஃகி,இஃகி, சமையல் பற்றி ஆங்கிலத்தில் ஒன்றும், தமிழில் ஒன்றுமாக இரு புத்தகங்கள் அமேசான் மூலம் வெளிவந்து இருக்கு. திரு கௌதமன் அவர்களுக்குத் தெரியலை. விளம்பரம் பண்ணி இருக்கணுமோ? ம்ம்ம்ம்ம்ம்? நமக்குத் தெரியாத கலை விளம்பரம்! இரண்டாம் பகுதிகளும் இரண்டிலும் தயாராகிக் கொண்டிருக்கு. எப்போ எனக்கு முடியுமோ அப்போ வெளிவரும். அல்டிமேடம் கொடுத்துட்டு இப்போ இருக்கிற நிலைமையிலே எடிட்டே செய்ய முடியலைனா என்ன பண்ணறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொன்னது எங்கள் வலைப்பூ பக்கங்களுக்கு மட்டுமே applicable.

      நீக்கு
    2. ஓ, ஹிஹிஹி, இன்னிக்குக் கூட ஒரு குறிப்புச் சொல்லி இருக்கேனே! சரி, இனிமேல் எ.பி.க்கும் அனுப்பப் பார்க்கிறேன். ஆனால் அதிகம் திப்பிசமாவே இருந்தால் என்ன செய்யறது? :)))))

      நீக்கு
    3. திருவரங்கத்து திப்பிச சமையல் என்ற தலைப்பில் வெளியிடலாம்.

      நீக்கு
    4. அட! இது நல்லா இருக்கே! திப்பிசமாப் பொறுக்கி இந்தத் தலைப்பில் புத்தகம் வெளியிட வேண்டியது தான்! :)))))

      நீக்கு
  17. அனைவருக்கும் காலை வணக்கம். கேள்வி பதில்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  18. கொஞ்ச நாட்களாக வேலைப் பளு அதிகம், இன்னும் மூன்று நாட்களுக்கு துணை தேவதைக்கு விடுமுறை:((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கேயும் அப்படித் தான். காலையிலே வீடு சுத்தம் செய்ய வரவில்லை. இப்போத் தான் வந்து பாத்திரங்களை மட்டும் தேய்த்துக் கொடுத்துவிட்டுப் போனார்.வாரம் 3 நாட்கள் இப்படி விடுமுறை ஆகிவிடும். :(

      நீக்கு
  19. மின் நிலாவை கையில் பிடிப்பது கடினமாக இருக்கிறது.ஓடிப்போய் விடுகிறது. படித்து முடித்து, விமர்சனம் வேறு எழுத வேண்டும்.. சக்தி கொடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுமையா படித்துவிட்டு வாங்க. நிறைய நாட்கள் அவகாசம் உள்ளது.

      நீக்கு
  20. சமீபத்தில் வினாயகருக்கு வெல்ல அவல்,செய்து நிவேதனம் செய்தேன். அப்பொழுது இந்தப் பாடல் நினைவுக்கு வர, ஒளவையார் கூறியிருக்கும் அத்தனை incredientsகளையும் சேர்த்தேன். ஆஹா என்ன ருசி! நான் விநாயகருக்கு ஒளவையார் கூறிய நான்கையும் கொடுத்து விட்டேன்.அவர் எனக்கு சங்கத் தமிழ் மூன்றையும் தருவாரா?

    பதிலளிநீக்கு
  21. மின்னிலா சித்திரை சிறப்பிதழ் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. //எழுதத்திறமை வேண்டும். அது இல்லாதவர்கள் ஒதுங்கித்தான் போவார்கள்.// ஹாஹா... நல்லாத்தான் கொடுக்கறீங்க பதில்! நேரடியாவே சொல்லிடலாம்! :)

    கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம். பொங்கல் சிறப்பிதழ் - பாராட்டுகள்.

    சித்திரைச் சிறப்பிதழ் மிகச் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள். படைப்புகள் நிறைய வரட்டும். படிப்பவர்கள் மகிழ்ச்சி அடையும்படி அமைந்திடட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. # யாரைச் சொன்னார் என்று தெரியவில்லை.
      பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  23. தீபம் எண்ணெய் - நிறைய பேர் இதயம் நல்லெண்ணெய் மாதிரி பாக்கெட் அதே டிசைன்ல போட்டு ஃப்ராடு பண்ணறாங்க. இப்போது ஏழெட்டு எண்ணெய் கலந்து தீபம் எண்ணெய்னு அடுத்த ஃப்ராடு. பழைய காலத்தில் ஆங்காங்கு கிடைத்த இலுப்பெண்ணெயோ அல்லது ஆமணக்கு எண்ணெயோ நல்லெண்ணெயோ நெய்யோ உபயோகித்தாங்க. இவனுங்க அதன் காரணமே தெரியாம..... வியாபாரம் பண்றானுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு ஆரோஹண அவரோஹணத்தோட பாட்டு வேற!...

      நீக்கு
    2. சுத்திகரிக்கப்படாத நல்லெண்ணெயே விளக்கு எனத் தனியாய்க் கிடைக்கிறதே!

      நீக்கு
  24. கடவுளைப் பார்த்தால் - கீசா மேடத்திடம் கேள்வி... அவர் என்ன வடிவில் வருவார்? என் வடிவில் வந்து நான்தான் கடவுள்னா நம்புவீங்களா? அனேகமா எல்லோரும் கேட்கும் கேள்வி, "நீ கடவுள் என்பதற்கு என்னையா ப்ரூஃப்?"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீவிஷ்ணு, துருவனுக்கு காட்சி கொடுக்கும் முன்பு, நாரதரிடம் கேட்கிறார் : " நாரதா - நீ துருவனுக்கு என்னைப் பற்றி விளக்கும்போது - என்ன வடிவம், என்ன உருவம், என்ன பொருட்களோடு நான் பிரசன்னம் ஆவேன் என்று கூறினாய்? " நாரதர் சொன்னதைக் கேட்டுக் கொண்ட விஷ்ணு - அதே உருவம், வடிவம் கொண்டு துருவனுக்கு தரிசனம் அளித்தார். " கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான் - கேள்வியே பதிலாக கண்ணன் வந்தான் !"

      நீக்கு
    2. ம்ஹூம், நெல்லையாரே, உங்க வடிவில் வந்தால் கடவுள் இல்லை. யானை மாதிரி வருவார்.

      நீக்கு
    3. கடவுளைக் கண்டால், தூரத்தில் நின்று பாதுகாப்போடு போட்டோ எடுக்கறீங்களே.. பக்கத்தில் ஏன் போய்ப் பேசுவதில்லை கீசா மேடம்?

      நீக்கு
    4. ஹாஹாஹாஹா, நீங்க பக்கத்தில் நின்னு கட்டிக் கொண்டு படம் எடுத்துக்கோங்க நெல்லை! யார் வேணாம்னு சொல்லப் போறாங்க!

      நீக்கு
  25. மன்னிக்கவும்...

    தேவார, திருவாசக, திருமந்திர, திவ்யப் பிரபந்தம் இவற்றில் மொழியப்பட்டுள்ள பொன்னார்ந்த வரிகளுக்கு சமய அடையாளத்துடன் நாம் உரிமை கொண்டாடத் தவறுகின்றோமே...

    என்ற வருத்தத்தினால் அப்படிச் சொன்னேன்..அன்றி வேறொன்றில்லை..

    ஒன்றே குலம் ஒருவனே தேவன்... என்று அண்ணா சொன்னதாக திமுகவினர் சொல்கின்றனர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகம் உருண்டை எனச் சொன்னவரும் அவரே..

      நீக்கு
    2. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

      நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே...

      சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து

      நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே...

      நீக்கு
  26. கேள்வி பதில்கள் அருமை...

    சித்திரை சிறப்பிதழ் சிறக்க வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  27. கடவுளிடம் ஏஞ்சல் கேட்கும் கேள்வி பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  28. சித்திரைச் சிறப்பிதழில் மதுரையின் மீது ஏன் இந்த obsession? குதிரையைப்பற்றி எழுதினால் ஒருவேளை.. பிரசுரமாகாதோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாராளமாக எழுதலாம். மலரில் மதுரை 10% to 20% மட்டுமே!

      நீக்கு
  29. இன்று திரு "ஜீவி"அவர்களின் பிறந்த நாள் என முகநூல் மூலம் தெரிய வந்தது. அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளும், நமஸ்காரங்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கேயும் வாழ்த்து கூறினேன்; இங்கும் வாழ்க பல்லாண்டுகள்.

      நீக்கு
  30. திருமிகு ஜீவி அண்ணா அவர்களுக்கு
    அன்பின் பிறந்த நாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  31. சித்திரை சிறப்பிதழ் சிறக்க வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!