திங்கள், 4 ஜனவரி, 2021

"திங்க"க்கிழமை :  சாபுதானா வடை - ஜவ்வரிசி வடை  - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி 

 சாபுதானா வடை – ஜவ்வரிசி வடை - நெல்லைத்தமிழன்

 

பஹ்ரைனில் இருந்த வட இந்திய இனிப்புக் கடை ஒன்றில் தினமும் கமன் டோக்ளா, ரவா டோக்ளா, சாபுதான வடா, சின்ன சமோசா, பெரிய சமோசா போன்றவை போடுவார்கள். 2008 வரை, எல்லாமே விலை குறைவு. அதற்குப் பிறகுதான் அந்த இனிப்புக் கடையை, செலவழித்து அழகுபடுத்தி, அங்கேயே அமர்ந்து சாப்பிடும்படியாக சிறிய அறையில் மேசைகள்லாம் போட்டு, பொருட்களின் விலையை ஏற்றி, அளவைக் குறைத்துவிட்டார்கள்.

 

பஹ்ரைனில் உணவு விலை ரொம்பவே குறைவு.  சில அத்தியாவசியப் பொருட்களை அரசு விலை ஏறாமல் at cost எல்லா கடைகளுக்கும் கொடுத்துவந்தது. கோதுமை மாவு, கிலோ 100 fils ஆக இருபது வருடங்கள் இருந்து.  தென்னிந்திய உணவகங்களில் மதிய உணவு 60-70 ரூபாய்தான்.  2013க்கு அப்புறம்தான் கொஞ்சம் விலை அதிகமானது. உணவின் தரம், இங்குள்ளதைவிட மேம்பட்டது.

 

அது கிடக்கட்டும். இப்போ சாபுதானாவுக்கு வருவோம். எனக்கு மிகவும் பிடித்தமான இதை, கிச்சன் என் கைக்கு வந்தபோது இங்கு செய்தேன். அதன் செய்முறை இங்கு.

 

தேவையானவை

 

வெண்மை நிற ஜவ்வரிசி 1 கப்

மீடியம் சைஸ் உருளை 2-3  வேகைவைத்து தோலுரித்துக்கொள்ளவும்

இஞ்சித் துண்டுகள் 1 ½ டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் 2 சிறிது சிறிதாக அரிந்தது

கொத்தமல்லித் தழை – கை நிறைய, சிறிதாக அரிந்தது

கருவேப்பிலை சிறிதளவு

அரிசி மாவு ¼ கப்

பொடித்த “வறுத்த வேர்க்கடலை” 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயப் பொடி

தேவையான உப்பு

எலுமிச்சைச் சாறு 2 டேபிள் ஸ்பூன்

பொரிப்பதற்கு எண்ணெய்

 

செய்முறை

 

ஜவ்வரிசியை நன்கு கழுவிவிட்டு, அரை பாகத்திற்குத் தண்ணீர் விட்டு 2-3 மணி நேரம் ஊறப்போடவும்.

 

வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்துக்கொள்ளவும்.

 

இந்த சமயத்தில் கடாயில் எண்ணெய் விட்டுச் சூடாக்கவும்.

 

மசித்த உருளையுடன், அரிசி மாவு, வேர்க்கடலை, ஊறின ஜவ்வரிசி, இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், தேவையான உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்துப் பிசையவும். அத்துடன் 1 எலுமிச்சையையைப் பிழிந்து சாறு சேர்த்துக்கொள்ளவும்.  பிசைந்த மாவு சிறிது புளிப்புச் சுவையோட இருக்கணும்.

 

நல்ல வட்டமாத் தட்டி, ஓரங்களைச் சரிசெய்து (விரிசல் இல்லாமல்) நன்கு சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரிக்கவும். சிறிது நேரம் கழித்துத் திருப்பி விடணும்.

 

இதற்குத் தொட்டுக்கொள்ள, நான் இணையத்தில் ரேவதி சண்முகம் அவர்கள் சொன்னமாதிரி, புளிக்காத ½ கப் தயிரில் 2 ஸ்பூன் ஜீனி சேர்த்துக் கலக்கி, கட்டியான லஸ்ஸிபோலச் செய்திருந்தேன்.
வெறும் சாபுதானா வடா ரொம்ப நல்லாருக்கு என்று சொன்னார்கள். ஒன்றுமே மிஞ்சவில்லை. தொட்டுக்கப் பண்ணினது எப்படி இருக்கு என்று கேட்டதற்கு, அது இதோட ருசிக்கலை என்று சொல்லிட்டாங்க.

 

ரொம்ப சுலபமான டிஷ் இது. நீங்களும் செய்துபாருங்கள்.

 

குறிப்பு: 1. இதுக்கு நைலான் ஜவ்வரிசி அவ்வளவு சுவையா இருக்காது. அதை உபயோகித்தால், ஊறவைக்கும் நேரம் ரொம்பவே குறையும்.  கருவேப்பிலையும் அவசியம் கிடையாது.


2. எண்ணெய் ரொம்பவும் சூடா இருக்கணும். வடை போட்ட உடனே சிம்ல வைக்கணும். எண்ணெய் ரொம்பச் சூடா இல்லைனா வடை ரொம்ப எண்ணெய் குடிக்கும். 

109 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  என்றும் எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்.
  இறைவன் துணை.

  பதிலளிநீக்கு
 2. அன்பு நெல்லைத்தமிழனுக்கு வாழ்த்துகள். நல்லதொரு சுலபமான
  செய்முறையில்
  தயாரான ஜவ்வரிசி வடை மிக அருமை.
  அந்த முத்து முத்தாக ஜவ்வரிசி பார்க்க
  மிக நன்றாக இருக்கும்.
  நீங்கள் மிக அழகாகச் செய்முறை சொல்லி இருக்கிறீர்கள்.
  பெரிய ஜவ்வரிசி இதற்கு ஏற்கும்.

  இங்கே இருக்கும் ஜவ்வரிசியை நாலு மணி நேரம் ஊற வைக்க வேண்டி இருக்கு.

  அளவெல்லாம் கச்சிதம். கிச்சன் உங்க கைக்கு வந்திருக்கிறதா?
  அட. அப்போ இந்தியா வந்தால் முதலில் பெங்களூருதான். :)
  மனம் நிறை பாராட்டுகள் மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிச்சன் எப்போல்லாம் என் கையில் வரும் என்று உங்களுக்குத் தெரியாதா வல்லிம்மா. உங்கள் பாராட்டுக்கு நன்றி (ரொம்ப அதிகமா புகழறீங்க... உண்மை நிலவர தெரிந்தால் எனக்குக் கலவரம்தான். வீட்டில் மெனுவைப் பார்த்தே... என்ன..இன்னைக்கு அப்பா சொன்ன மெனுவா என்று பையன் அலுத்துக்குவான். எனக்கு சூப்பரா பிடிக்கும் காம்பினேஷன், அவனுக்கு அட்டு காம்பினேஷன்.... எனக்கு மோர்ச்சாத்துமது, கோஸ் மிளகூட்டு, உருளையோ இல்லை சேப்பங்கிழங்கு ரோஸ்டோ ஒரு மெனு. இது மாதிரி, பருப்பு குழம்பு, தேங்காய் சீரகம் அரைத்த கூட்டு, மோர்க்குழம்பு, உருளை ரோஸ்ட் அல்லது பருப்புசிலி, இந்த மாதிரி ஒரு காம்பினேஷன் வைத்திருக்கிறேன்.

   உங்களுக்காவது இந்த காம்பினேஷன் பிடிக்குமா?

   நீக்கு
 3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். வரும் நாட்கள் கவலை இன்றி ஆரோக்கியமான பாதையில் செல்லப் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 4. கிச்சன் உங்கள் கைக்கு வந்ததா அல்லது கிச்சனுக்குள் உங்களை தள்ளிவிட்டார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாதத்தில் சில நாட்கள் நிச்சயமா நான் கரண்டி பிடிப்பேன். அவ்வப்போது ஏதாகிலும் செய்ய சமையல் அறைக்குள் புகுந்துடுவேன் (அப்போ யாரும் குறுக்க நெடுக்க நுழையக்கூடாது). சில சமயங்களில் இனிப்பு போன்றவை சொதப்பிவிடும். கிச்சனுக்குள் என்னை வற்புறுத்தி போகச் சொல்வதா? என் பசங்க கனவிலும் அப்படி நினைக்கமாட்டார்கள் ஹா ஹா

   நீக்கு

 5. இந்த வடை இது வரை செய்தது இல்லை நேரம் கிடைக்கும் போது செய்யனும் நீங்கள் சொல்லும் முறையை பார்த்தால் எளிமையாக இருப்பதோடு டேஸ்டாக இருக்கும் போலீருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப சுலபமானது. எண்ணெய் நல்லா சூடான பிறகுதான் வடையைப் போடணும். மற்றபடி ரொம்ப ரொம்ப டேஸ்டியானது

   நீக்கு
 6. வடையில் எனக்கு பிடித்த வடை உளுந்த வடைதான் இப்போது வாரத்தில் 2 தடவை செய்து விடுகிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் பையன் மாதிரியே உங்களுக்கும் டேஸ்ட் இருக்கே மதுரைத் தமிழன். அவனுக்கு உளுந்து உபயோகப்படுத்திய வடைகள் ரொம்ப இஷ்டம். பருப்பு வடைகள்லாம் அவனுக்கு அவ்வளவு பிடிக்காது. பெண்ணுக்கோ எதுவும் பிடிக்கும் ஆனால் ஓரிரு வடைகளுக்கு மேல் சாப்பிட மாட்டாள். நன்றாயிருக்குன்னு சாப்பிட்டால், மறுநாள் இரண்டு வேளைகள் பட்டினி இருந்துடுவாள்.

   எனக்கு எண்ணெயில் பொரித்ததைச் சாப்பிடுவதில் ஆர்வம் குறைகிறது.

   நீக்கு
 7. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..
  நலம் வாழ்க என்றென்றும்...

  பதிலளிநீக்கு
 8. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சாபுதானா வடை நான் கூடப் போட்டிருந்தேனே! ஜவ்வரிசி 2,3 மணி நேரம் ஊறினால் எல்லாம் போதாது. மாலை 3,4 மணிக்குப் பண்ணக் காலம்பரவே ஊறப் போடணும். மற்றவை எல்லாம் சரி. நைலான் ஜவ்வரிசி நான் வாங்குவதே இல்லை. இதுக்குத் தொட்டுக்க மஹாராஷ்ட்ராவில் பண்ணும் சட்னி, பச்சை மிளகாய், கொத்துமல்லி வதக்கிக் கொண்டு வறுத்த வேர்க்கடலையைத் தோல் உரித்துக் கொண்டு அதோடு சேர்த்து உப்பு,பெருங்காயம் போட்டு அரைப்பார்கள். இல்லைனாப் புளிச் சட்னி, பச்சைச் சட்னி. ஆனால் பெரும்பாலும் வேர்க்கடலை சேர்த்துக் காரசாரமான சட்னியே அரைப்பார்கள். சப்புச்சப்புனு லஸ்ஸி எல்லாம்நெ.த.வுக்குத் தான் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்....

   /மாலை 3,4 மணிக்குப் பண்ணக் காலம்பரவே ஊறப் போடணும்.// - சவுக் சவுக்குனு வடை ஆகிடாதோ? 3 மணி நேரம் ஊறினாலே யதேஷ்டம் என்பது என் எண்ணம்.

   தொட்டுக்கச் செய்யும் சட்னி - அடுத்த முறை செய்துவிடுகிறேன்.

   லஸ்ஸிலாம் அன்று யாருக்குமே பிடிக்கலை (நான் உட்பட). அதிர்ஷ்டவசமா மூன்று கரண்டிக்கும் குறைவாகவே பண்ணி அதில் பாதிக்குமேல் வீணடித்தேன்.

   நீக்கு
  2. https://sivamgss.blogspot.com/2019/01/3_23.html இது உப்புமாவுக்கு ஊற வைச்சது பத்திய பதிவு. வடைக்கும் கிட்டத்தட்ட இத்தனை நேரம் ஊற வைச்சே பண்ணுவோம். ஜவ்வரிசி எல்லாம் நீங்க செய்திருக்கும் வடையில் தெரியறாப்போல் தெரியாது.

   நீக்கு
  3. https://sivamgss.blogspot.com/2020/10/blog-post_6.html இது நான் பண்ணின சாபுதானா வடை

   நீக்கு
  4. இந்தக் கலவையிலேயே கோதுமை மாவு, கடலை மாவு சேர்த்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் காரம், உப்புச் சேர்த்து அடை மாதிரித் தட்டித் தோசைக்கல்லில் வேக விட்டு எடுத்தால் தாலி பீத்! முழுதாய் ஒன்று சாப்பிட முடியாது. சாபுதானாவில் மட்டும் குஜராத், மஹாராஷ்ட்ராவில் வெங்காயம் போட்டுப் பண்ண மாட்டார்கள். ஏனெனில் இது அவர்களுக்கு விரத உணவு. மற்றவற்றில் தாலிபீத் பண்ணினால் வெங்காயம், பூண்டு கூட நறுக்கிச் சேர்ப்பார்கள். வெந்தயக்கீரை, கொத்துமல்லி, புதினாவும் உண்டு. எல்லாம் அக்கி அடை மாதிரித்தான்! பெயர் தான் வேறே!

   நீக்கு
  5. தயிரிலும் செய்து தொட்டுப்பாங்க தான். ஆனால் அதற்கான சாமக்ரியைகள் லஸ்ஸிக்குப் போடுவது போல் எல்லாம் இல்லை. தயிரில், வேர்க்கடலைப்பொடி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, ஜீரகப்பொடி, ஒரு சிட்டிகை சாட் மசாலாப் பொடி, சர்க்கரை, உப்பு சேர்த்துக் கலக்கி வைச்சுக்கணும். இதையும் தொட்டுக்கலாம் (சாபுதானா வடைக்கு)

   நீக்கு
  6. உங்க சாபுதான வடையும் (அப்படியா? இஞ்சி மிஸ்ஸிங். வேர்க்கடலை தேவையானது போடாமல், பொட்டுக்கடலையும் சேர்த்திருக்கிறீங்க). அதையும் கவனிச்சுடுவோமில்ல.

   நான் நினைக்கிறேன்... ஜவ்வரிசி தெரியறதும், அது கொஞ்சம் கடுக் கடுக்குனு இருக்கறதும்தான் சாபுதான வடைக்கு ருசி சேர்க்குது.

   நீக்கு
  7. தாலிபீத் ஒரு தடவை செய்துபார்க்கணும். சாப்பிட்டதே கிடையாது (ஹா ஹா பசங்களும் சாப்பிட்டிருக்க மாட்டாங்க. நான் செய்வதுதான் தாலிபீத்)

   நீங்க சொல்லியிருக்கும் கார லஸ்ஸி நல்லா இருக்கும்னு தோணுது. இருந்தாலும் வடைல மிளகாய் காரம் இருந்தால், இனிப்பு சேர்த்த ஏதேனும் சட்னி நல்லா இருக்கும். பசங்க கெச்சப் தொட்டுக்கொண்டு சாப்பிட்டார்கள் (அதை எங்க போய்ச் சொல்ல?)

   நீக்கு
 9. ஏற்கெனவே கொடுத்த கருத்துக்களெல்லாம் போன இடம் தெரியலை. பத்து நிமிடங்களுக்கும் மேலாக இணையம் படுத்தல். பின்னர் வரேன். :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க. இந்த வடைக்கோ இல்லை பொதுவான வடைகளுக்கோ தொட்டுக்க வேற என்ன பண்ணலாம் என்ற ஆலோசனையையும் கொடுங்க.

   நீக்கு
  2. வடை, பஜ்ஜி, போண்டா, தவலை வடை, வெள்ளை அப்பம், காராவடை இதுக்கெல்லாம் தொட்டுக்க மதுரையிலே கோபு ஐயங்கார் கடையிலே ஒரு சட்னி கொடுப்பாங்க! உச்சந்தலைக்குக் காரம் ஏறும் முன்னெல்லாம். இப்போதும் கொடுத்தாலும் அந்தக் காரம்/அந்தச் சுவை இல்லை. பச்சை மிளகாயைக் கழுவி ஆய்ந்து கொண்டு எண்ணெய் விட்டு வதக்கிக் கொண்டு அதோடு பச்சைக்கொத்துமல்லியையும் சுத்தம் செய்து கழுவிக் கொண்டு காம்போடு மிளகாயோடு சேர்த்து வதக்கிக் கொண்டு கொஞ்சம் உப்பு,புளி, பெருங்காயம் வைத்து அரைத்துக் கடுகு தாளிக்கணும். எல்லாமே நல்லெண்ணெயில் பண்ணிப் பாருங்க. அன்றே அரைத்து அன்றே வார்க்கும் புளியா/கல் தோசைக்கும் பிரமாதமாய் இருக்கும்.

   நீக்கு
  3. ஏதோ ஒரு தோசைக்கு, இரயில்வே சட்னி என்று இணையத்துல பார்த்த ஒரு சட்னி செய்தேன். அவங்க சொல்லியிருந்ததைவிட இரண்டு மிளகாய் கம்மியாகத்தான் போட்டிருந்தேன். நான் சாப்பிட்டுப் பார்ப்பதற்குள், என் பெண், அதனை தோசைக்குத் தொட்டுக்கொண்டுவிட்டாள். ஒரு வாய் போட்டுண்டதும், ஐயோ..தாங்க முடியாத காரம்னு அலறிட்டா. கூடவே 'எதையாவது வெப் சைட்ல பார்த்தேன்னு செஞ்சுடாதீங்கோ' என்ற ரிக்வஸ்ட் வேற...ஹாஹா

   நீக்கு
 10. காலை வணக்கம் அனைவருக்கும்.

  இன்றைக்கு சாபுதானா இடுகை வெளியிட்டதற்கு நன்றி.... இது செய்து நிறைய வாரங்கள் ஆகிவிட்டன. அதற்குப் பிறகும் ஒருமுறை சாபுதானா வடை செய்தேன். எண்ணெய் ரொம்பவும் சூடா இருக்கணும். வடை போட்ட உடனே சிம்ல வைக்கணும். எண்ணெய் ரொம்பச் சூடா இல்லைனா எண்ணெய் குடிக்கும் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உபரி தகவலுக்கு நன்றி. மெயின் போஸ்ட் ல சேர்த்துடலாமா?

   நீக்கு
  2. எ.பில இடுகையை விட, பின்னூட்டங்கள்லதான் நிறைய தகவல்கள் இருக்கும். அதனால இடுகையைப் படிக்கறவங்க நிச்சயம் பின்னூட்டங்கள் படிப்பாங்க. அதுனால விட்டுடுங்க.

   நீக்கு
  3. சாபுதானா வடைனு இல்லாமல் எண்ணெயில் பொரிக்கும் எல்லாவற்றுக்குமே எண்ணெய் காய்ந்ததும் அடுப்பைத் தணிக்கணும். இல்லைனா மேலே வெந்து உள்ளே வேகாது.

   நீக்கு
  4. இப்போதானே ஒவ்வொண்ணா கத்துக்கறேன். அது சரி... எண்ணெய் காய்ந்துவிட்டதா என்று எப்படி செக் பண்ணுவது? அப்பளாத்துக்கு சிறிய பீஸ் அப்பளாத்தை எண்ணெயில் தொட்டுப் பார்ப்பேன். மனோகரம், தேன்குழலுக்கு சிறிய பீஸை எண்ணெயில் போட்டுப்பார்ப்பேன். வேறு மெதட் உண்டா?

   நீக்கு
  5. எந்தப்பொருளைப் பொரிக்கப் போறீங்களோ அதில ஒரு சிறு துகள் எடுத்துப் போட்டுப்பார்த்தால் புஸ் என மேலெழும்பும் அப்போ எண்ணெய் வயசுக்கு வந்துவிட்டது என அர்த்தம் ஹா ஹா ஹா..

   இல்லை எதுவும் கிடைக்கவில்லையா, சும்மா ஈரக் கையை உதறுங்கோ எண்ணெயில்.. அப்போ புஸ்ஸ்ஸ்ஸ் என சத்தம் வந்து பொங்கினாலும் ரெடியாகிட்டுது என அர்த்தமாக்கும்:))

   நீக்கு
  6. வாங்க அதிரா.... உங்கள் ஆலோசனைக்கு நன்றி... ஒரே ஒரு ஆலோசனைதான் பாக்கி. விரலை சூடான எண்ணெயில் விடுங்க. 'ஐயோ' அல்லது 'ஆ' என்று உங்கள் வாய் சப்தம் எழுப்பினால் எண்ணெய் ரெடியாகிவிட்டது என்று அர்த்தம்.

   நீக்கு
  7. ///இல்லை எதுவும் கிடைக்கவில்லையா, சும்மா ஈரக் கையை உதறுங்கோ எண்ணெயில்.. அப்போ புஸ்ஸ்ஸ்ஸ் என சத்தம் வந்து பொங்கினாலும் ரெடியாகிட்டுது என அர்த்தமாக்கும்:))//
   noooo   மியாவ் அப்போ அன்னிக்கு என்கிட்டே சொன்னிங்க அரை tumbler பச்சைத்தண்ணியை எண்ணெயில் ஊத்தி செக் பண்ணுங்கன்னு அதையும் சொல்லுங்க எல்லாருக்கும் :)))

   நீக்கு
  8. /////நெல்லைத் தமிழன்4 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 6:53
   வாங்க அதிரா.... உங்கள் ஆலோசனைக்கு நன்றி... ஒரே ஒரு ஆலோசனைதான் பாக்கி. விரலை சூடான எண்ணெயில் விடுங்க. 'ஐயோ' அல்லது 'ஆ' என்று உங்கள் வாய் சப்தம் எழுப்பினால் எண்ணெய் ரெடியாகிவிட்டது என்று அர்த்தம்.///


   எச்சூஸ்மீ ..இப்படியும் செய்யலாம் அருகில் இருக்கும் நபரின்  விரலை எண்ணையில் தொட வைத்தும் பார்க்கலாம் :)நெக்ஸ்ட் டைம் அதிராவை கெஸ்ட்டா அழைச்சுர வேண்டியதுதான்..
    குக் வித் cat :) 

   நீக்கு
 11. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. //பொருட்களின் விலையை ஏற்றி
  அளவைக் குறைத்து விட்டார்கள்//

  ஹா.. ஹா.. இந்தியன்.

  ரெஸிபி ஸூப்பர் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர்ஜி... நம்ம ஊர்லயும் விலையை ஏற்றி அல்லது கொஞ்சமாக ஏற்றி அளவை நமக்குத் தெரியாதபடி குறைக்கிறார்கள். எண்ணெய் பாக்கெட் முதலில் ஒரு லிட்டர் என இருந்தது. பிறகு 900 எம்.எல் என்று பொடி எழுத்துக்களில் வந்தது. கிலோ அதிகம் என்றால் லிட்டரிலும், லிட்டர் அதிகம் என்றால் கிலோவிலும் அளவைகள் வருவது சகஜம். அப்புறம் எண்ணெயிலும் கூர்ந்து கவனித்தால் நிறைய கலப்படம் சேர்க்கிறார்கள் (நல்லெண்ணெயில், அரிசி தவிட்டு ஆயில், பாமாயில் என்று). Ghee Mysorepa என்று விளம்பரப்படுத்தி பாக்கெட்டை கூர்ந்து பார்த்தால், Vegetable oil, Pamaolean oilம் சேர்திருப்பது தெரியும்.

   நீக்கு
 13. குறிப்பு இரண்டும் முக்கியம்... நன்றி...

  பதிலளிநீக்கு
 14. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!!

  பதிலளிநீக்கு
 15. ஜவ்வரிசி வடை அருமை! படங்களும் அருமை!
  எங்கள் வீட்டில் மட்டுமில்லை, நண்பர்களுக்கும் தேங்காய் சட்னி தான் இதற்கு விரும்புவார்கள். இப்போது கொஞ்சம் டேஸ்ட் மாறியிருக்கிறது. தக்காளி கார சட்னி தான் இதற்கு பொருந்தும் என்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மனோ சாமிநாதன் அவர்கள். நான் பஹ்ரைன்ல வெறும்னதான் சாப்பிடுவேன். இதுக்கு தொட்டுக்க எதுவும் தேவையில்லை என்பது என் எண்ணம். கார சட்னி நல்லாவே இருக்கும்.

   நீக்கு
 16. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

  சாபுதானா வடை படங்களுடன் நன்றாக உள்ளது. நெல்லை தமிழரின் பதிவு என்றால் கேட்கவா வேண்டும். பக்குவங்களை பக்குவமாக சொல்லி, அழகான படங்களுடன், பதிவுக்கு முன், பின் காரணங்களையும் விளக்குவதில் திறமைசாலி அவர்.. . (அட.. யாரது? இந்த பெங்களூர் குளிரில் இப்படி ஐஸ் வைப்பது என சொல்வது? இல்லையில்லை...நான் நிஜமாகவே நூறு சதவீதம் உண்மையைத்தான் சொல்கிறேன். நெ.தமிழராவது நம்பட்டும். ஹா.ஹா.ஹா)

  இந்த வடை இது வரை நான் செய்ததில்லை. ஜவ்வரிசி போட்டு வடாம், பாயாசம் தவிர உப்புமா, வடை இவற்றுக்கெல்லாம் போனதில்லை.கேள்வி பட்டுள்ளேன். செய்ததில்லை. காரணம் வீட்டிலுள்ள அனைவருக்கும் பிடித்திருக்க வேண்டுமே..இனி இதுபோல் நானும் முயற்சிக்க வேண்டும். வடைகள் பார்க்கவே நன்றாக உள்ளது.இதற்கு தொட்டுக் கொள்ள ஏதும் வேண்டாமென்றுதான் தோன்றுகிறது. ஏதாவது இனிப்பு (கேசரி, சர்க்கரைப் பொங்கல் ) செய்து வைத்துக் கொண்டால், மாலை நேரம் அதற்கு இதையையும்,இதற்கு அதையுமாக இணைத்து சாப்பிட்டு விட்டு ஒரு காஃபி குடித்தால் ஆயிற்று. என் கருத்து இது.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.... உங்க ஊர்க் காரங்களை (நெல்லை, பெங்களூர்) நீங்க எப்படி விட்டுக்கொடுப்பீங்க. ஹாஹா. கீதா ரங்கனைத்தான் காணோம்..

   ஜவ்வரிசி உப்புமா... சுமார் என்பது என் அபிப்ராயம். இந்தப் பசங்க, 'பண்ணாதே பண்ணாதே' என்று சொல்லி, பத்து மாதங்கள் கழித்து என் மனைவி செய்திருந்த ரவை உப்புமா எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. மூன்று தடவை இரு வாரங்களில் எனக்குச் செய்யச் சொன்னேன்.

   சாபுதானா வடை நிச்சயம் பசங்களுக்குப் பிடிக்கும். இதுவே ஹெவி என்பதால், வேறு இனிப்பு (கேசரி..சர்க்கரைப் பொங்கல்-இதில் என்ன இருக்கு. இனிப்பு சாதம்தானே) தேவையில்லை. கேசரியையும் பஜ்ஜியையும் பிரித்துவிடாதீர்கள். அப்புறம் பெண் பார்க்க வர்றவங்க கேசரி, சாபுதானா வடையை எதிர்பார்த்துவிடப் போகிறார்கள்.

   நீக்கு
 17. சில சமயங்களில் இனிப்பு போன்றவை சொதப்பிவிடும். கிச்சனுக்குள் என்னை வற்புறுத்தி போகச் சொல்வதா? என் பசங்க கனவிலும் அப்படி நினைக்கமாட்டார்கள் ஹா ஹா அப்பாவின் சமையல் அவ்வள்வு பிரசித்தம் !!!

  பதிலளி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு வாரங்களுக்கு முன்பு, திருவாதிரைக் களி செய்முறைலாம் நல்லாத்தான் செய்தேன். ஆனால் ஒரு மிஸ்டேக், end productஐ சொதப்பிடுச்சு. வெல்லம் நேரடியா போட்டிருந்தால் ரொம்ப நல்லா வந்திருக்கும். ஆனால் வெல்லத்தைக் கரைத்து ஜலத்தை விடுவோம் என நினைத்து கொஞ்சம் அதிகமா பாகாயிடுச்சு, அரிசி+பருப்பு குருணை சரியா தளிகைக்காகலை. இதுல வேற..என் மாமனாருக்கும் கொண்டுவந்து தர்றேன் என்று சொல்லியிருந்தேன். அவர், நீங்க நல்லாப் பண்ணுவீங்க கொஞ்சம் அதிகமாகவே கொண்டுவாங்க என்று சொல்லியிருந்தார். எல்லாமே சரியா வரலை. அப்புறம் அவசர அவசரமாக என் மனைவி திரும்பவும் அவள் செய்முறைல செய்து கொண்டுபோய்க் கொடுத்தா.

   சில சமயம் சில ஐட்டங்கள் சரியாக வருவதில்லை. பசங்களுக்கு அம்மாவின் சமையல் ரொம்ப இஷ்டம். ஹாஹா.

   நீக்கு
 18. ஆவ்வ்வ்வ் மீயும் லாண்டிங்ங்ங்ங்ங்ங்ங்ங்:)).. என்ன என் குரல் கேட்டதும் எல்லோரும் ஓடுற ஜத்தம் கேய்க்குதே:)) அப்பூடிப் பயந்து ஓடுமளவுக்கு மேக்கப்போட்டா வந்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க குரல் கேட்டதும் யாரும் ஓடலை... இந்தப் பூனை எந்தப் பக்கம் பாயப்போகுதோன்னு கொஞ்சம் சந்தேகத்தோடயே இருப்பாங்க போலிருக்கு

   நீக்கு
 19. “மழை விட்டும் தூவானம் நிற்கவில்லை” :) என்பினம், அதுபோல பாரைன் ஐ விட்டு வந்து பல:) வருசங்களாகிவிட்டாலும்.. அங்கு சாப்பிட்டதை மறக்க முடியல்லியாமே:))..

  சரி சரி நேரமில்லாத காலத்தில ஓவரா அலட்டுவது பிடிக்காது பாருங்கோ எனக்கு:). அதனால ஸ்ரெயிட்டா மற்றருக்குள் குதிக்கிறேன்ன்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடாதீங்க. மட்டருக்குள் என்று எழுதி எங்களை கதிகலங்க வைக்கணும்.

   நீக்கு
  2. மன்னிக்கவும் ஒரு சிறு திருத்தம்:)) அது மிஸ்டேக் இல்லை மிசுரேக்கூஊஊஊ ஆக்கும் ஹா ஹா ஹா நேக்குத் தமிழ் முக்கியம்:))

   நீக்கு
 20. சாபுதானா என்பது ஹிந்திப்பெயர்தானே? மோடி அங்கிள் பேசும்போது பலதடவை எனக்கு ஜொள்ளியிருக்கிறார்ர்.. சாபுதானா பஜி என:)) எனக்கது என்னவெனப் புரியவே இல்லை:)).. இப்போதான் தெளிஞ்ச நீரோடையாகப் புரியுது:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதெல்லாம் நான் பஹ்ரைனில் இருந்தபோதுதான் பார்த்திருக்கிறேன், சாப்பிட்டிருக்கிறேன். அந்த அந்தப் பொருட்களுக்கு அந்த அந்த ஊர் பாஷைதானே உபயோகிக்கணும்.

   லண்டன்ல இருப்பதால், இன்னைக்கு ரைஸ் கேக் என்று இட்லியைச் சொல்லமுடியுமா? இல்லை ஜிலேபியை இனிப்பு முறுக்கு என்று சொல்லலாமா?

   நீக்கு
  2. //அந்த அந்தப் பொருட்களுக்கு அந்த அந்த ஊர் பாஷைதானே உபயோகிக்கணும்.//

   நோஓஓஓஓஓஒ உப்பூடிப் பேசப்பிடாது நெல்லைத்தமிழன்:)).. நாங்கள் எந்த நாட்டுக்குப் போனாலும் டமிழை வளர்க்கோணுமாக்கும்:))... இப்போ நீங்கள் ரெஸ்ரோரண்ட் போய்க் கேட்டிருக்கோணும்.. “முஸ்தப்பா பாய் எனக்கொரு ஜவ்வரிசி வடை குடுங்கோ”:)) என அப்போதானே டமில் வளரும்... சே..சே.. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு என்னால ச்சும்மா இருக்க முடியுதில்லையே:)) பின்ன ஒரு தமிழ்ப் புலவர்:), தமிழ்ப் பண்டிதர்:).. [என்னைச் சொன்னேனாக்கும்} ஆக இருந்தால் பொயிங்காமல் இருக்க முடியவில்லை:))..

   சவ்வரிசியின் பூர்விகம் எது தெரியுமோ?:).. சென்னை.. அதுவும் ஸ்ரீராம் வீட்டுக்குப் பின்னால இருக்கும் விவசாய நிலத்திலதான் முன்ன முன்னம் அறுவடை ஆரம்பமானதென அஞ்சுப்பீடியா சே சே விக்கிப்பீடியா ஜொள்ளுதே:))

   நீக்கு
  3. //சென்னை.. அதுவும் ஸ்ரீராம் வீட்டுக்குப் பின்னால இருக்கும் விவசாய நிலத்திலதான்//

   ம்ஹூம்...    அதெல்லாம் கனவாய், பழங்கதையாய் போச்சே!

   நீக்கு
  4. பாய்? அடுத்து தலையணை, போர்வை என்பீங்க போலிருக்கு... அது சகோதரான்னு சொல்லணுமாக்கும்.

   தெரியாமச் சொன்னீங்களோ தெரிந்து சொன்னீங்களோ.... தஞ்சைப்பகுதியை, சோழ வளநாடு சோறுடைத்து என்பார்கள். அவ்வளவு வயல்வெளிகள் அங்கு

   நீக்கு
  5. //ம்ஹூம்... அதெல்லாம் கனவாய், பழங்கதையாய் போச்சே!//
   சே...சே.... உப்பூசிட் சொல்லபிடாது ஸ்ரீராம்.. இப்போ நீங்கள் இளமையின் விளிம்பில நிக்கிறீங்கள்:)),.. காணி வாங்கி விவசாயம் செய்வதெல்லாம் ரிரயேர்ட் ஆன பின்புதான் வசதி... அதனால இப்போதைக்கு வீடு வாங்கிட்டாலும்.. பின்பு வித்துப்போட்டுப் போய் நல்ல கிராமப்புறத்தில வாங்கலாம்.. இங்கு வெளிநாட்டவர்கூட இப்படிச் செய்கின்றனர்..

   நாம் தான் ஒரு வீடு வாங்கிட்டால் பின்பு சாகும்வரை இது சந்ததிவீடு எனக் கட்டிப்பிடிச்சிருப்பது, ஆனால் பலர், கார் மாற்றுவதைப்போல வீட்டை மாற்றுகின்றனர்:).... அதனால நம்பிக்கையை விட்டிடாதையுங்கோ.. :))

   நீக்கு
  6. பாய் எனில் சகோதரன் என்பது இப்போதான் தெரியுது நெ தமிழன் ஹா ஹா ஹா .. ஜி என்றாலும் அதுதானே அர்த்தம்.. அப்போ சகோதரியை எப்படிச் சொல்வது எனத் தெரியுமோ.. நான் அப்பெயர்சூட்டி அஞ்சுவைக் கூப்பிடோணும்:))

   நீக்கு
  7. Chōṭī bahan or choti behan


   😺😺😺😺😺😸😸😸

   நீக்கு
  8. @அதிரா - எனக்கும் நிலம் வாங்கி, அதில் ஒரு பகுதியில் பழத்தோட்டம், தென்னை, கருவேப்பிலை, அப்புறம் காய்கறி கீரை, பூசணிக் கொடி, புடலை, பாகல் என்று வளர்க்கணும், அதன் ஒரு புறத்தில் நல்ல வீடு ஒன்று கட்டி வசிக்கணும்னு ஆசை.

   Power cut, Emergencyக்கு medical facilities, பாதுகாப்பு என்று பல காரணங்களை மனைவி சொல்லி, அந்த ஆசை நிராசையாகிடுச்சு.

   நீக்கு
  9. ஏஞ்சலினை மரியாதையா கூப்பிடணும்னா 'தீதி' அல்லது 'தீதிஜி' என்றும் கூப்பிடலாம். அவங்க ரொம்பவே ரொம்பவே....கோபப்படுவாங்க....ஹா ஹா

   நீக்கு
  10. ///அவங்க ரொம்பவே ரொம்பவே....கோபப்படுவாங்க....ஹா ஹா///
   ஆஆஆஆ ஸ்கொட்லாண்டுக்கு மட்டுமே தெரிஞ்சது திருநெல்வேலிக்கும் தெரிஞ்சிடுச்சா ஹா ஹா ஹா....
   அப்பூடியே பெரியக்கா என்பதையும் எப்பூடிக் கூப்பிடலாம் எனவும் கொஞ்சம் ஜொள்ளுங்கோ:)... அதாவது “அஞ்சுப் பெரியக்கா” என நான் வாஆஆஆஆயாஆஆஆஆரக்க்க்க்க்க்க் கூப்பிடோணும்:)... ஹையோ மீ ரொம்ப பிசியாக்கும் ஓடிடறேன்:)

   நீக்கு
 21. நான் காசு வாங்கிட்டும் பேசவில்லை:)) அஞ்சுவுக்குப் பயந்தும் பேசவில்லை:)).. உண்மையிலேயே சொல்லி வேலையில்லை. வடையைப் பார்க்கவே ஆசையாக இருக்குது.. கிட்டத்தட்ட நான் சுடும் பருப்புவடை போலவே இருக்குது.

  ஆனா சவ்வரிசி அரை படாமல் முழுசு முழுசா முழுசுதே.. பொரித்தால் வாயில ஒட்டாதோ? ஏனெனில் நான் ஜவ்வரிசி வடகம் செய்தேனெல்லோ.. அதில இப்படி முழுசாக இருந்ததனால் வாயில ஒட்டுது வேண்டாம் எனச் சொல்லிட்டினம் வீட்டில கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆனா சுவையோ சுவை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப நல்லா இருக்கும். முழுசு முழுசாத் தெரிஞ்சாத்தான் சுவை. அங்க இருக்கும் (இருந்தால்) குஜராத்தி ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுப் பாருங்க...

   ஆனா பாருங்க...//கிட்டத்தட்ட நான் சுடும் பருப்புவடை// - இந்த வரிதான் கொஞ்சம் இடிக்குது. பருப்பு வடை ஸ்காட்லாண்டுனா சாபுதானா வடைனா லண்டன். அவ்வளவு வித்தியாசமல்லோ

   நீக்கு
  2. நெல்லைத்தமிழன் காதைக் கிட்டக்கொண்டு வாங்கோ ஒரு ரகசியம் ஜொள்றேன்ன்:)).. அஞ்சுவுக்கு வடை சூட் பண்ண வராதூஊஊஊஊஊஊ ஹா ஹா ஹா:))

   நீக்கு
 22. //எண்ணெய் ரொம்பச் சூடா இல்லைனா வடை ரொம்ப எண்ணெய் குடிக்கும். //
  உண்மைதான் இது அனைத்துப் பொரியல் வகைக்கும் பொருந்தும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொரியலா? பொரிக்கும் வகைக்கும் பொருந்தும்னு சொல்லுங்க.

   ஆனால் இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்னு நான் கேட்கமாட்டேன். ஏஞ்சலினா இருந்தால் நிச்சயம் கேட்டிருப்பேன்.

   நீக்கு
  2. ////ஏஞ்சலினா இருந்தால் நிச்சயம் கேட்டிருப்பேன்./

   Garrrrrrrrrr

   நீக்கு
  3. உங்கள் வசனத்தில் கருத்துப் பிழை இருக்கிறது நெல்லைத்தமிழன்:). நேக்கு டமில்ல டி ஆக்கும்:)).. பொரியல் வகை வேறு பொரிக்கும் வகை என்பது வேறாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பொரியல் வகை எனில் பொரிக்கும் பதார்த்தங்கள்.. பொரிக்கும் வகை எனில்.. பொரிக்கும் மெதேட்:))..

   //ஏஞ்சலினா இருந்தால் நிச்சயம் கேட்டிருப்பேன்.//
   ஆனா அவ பதில் சொலியிருக்க மாட்டா:)) ஏன் தெரியுமோ ?:) ஏடாகூடமாச் சொன்னால் அதிரா தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேனெண்டு பயம்ம்ம்:)).. இப்ப தண்ணி வேறு ஃபிரீசாகிப்போய் இருக்குது:))

   நீக்கு
  4. அதிராவின் பதிலைப் பார்த்தால் எனக்கே தமிழ் தடுமாறிடும் போலிருக்கு.

   நல்லா பனி பெய்யும் இடங்களில் என்ஞாய் பண்ணறீங்க. தோட்டத்திலெல்லாம் ஐஸாக உறைந்திருந்தால், மரங்களில் பனிச் சிதறல்கள் இருந்தால் பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும்.

   நீக்கு
 23. சவ்வரிசி வடை எனத் தமிழில ஜொள்ளாமல் சாபுதானா என சொன்னமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:)).. கீதா ரெங்கன் போல புதுசு புதுசாப் பெயர் சூட்டி எனை மிரட்டுறீங்கள் புத்தாண்டில், ஆனா பார்க்க சூப்பராக இருக்குது.. எப்படியும் இது செய்ய இருக்கிறேன், எப்போவோ தெரியாது, செய்ததும் சொல்கிறேன்ன்..

  அதென்ன நைலோன் சவ்வரிசி? எங்களிடம் இருப்பது/இங்கு கிடைப்பது வெள்ளை வெளீரென நீங்கள் பாவித்ததைப்போல இருப்பதுதான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நைலான் ஜவ்வரிசி, வடஇந்தியாவில் நிறைய உபயோகிக்கறாங்க. எனக்கு அதை பாயசத்தில் போட்டால் ரொம்பப் பிடிக்கும். பெரிதாக கண்ணாடி மாதிரி இருக்கும். எனக்கு ஒரு கெட்ட பழக்கமும் உண்டு. உணவுகளுக்கு இடையில் எதையாவது கொரிப்பது (கடலை மிட்டாய், மிக்சர்...போன்று). இதைத் தவிர்க்க, கொஞ்சம் கண்ணாடி ஜவ்வரிசியை வாயில் போட்டுக்கொள்வேன். அது ஊறி சாப்பிட ரொம்ப நேரமாகும். அதுபோல, இரவில் 6 மணிக்குள் சாப்பிட்டதும் பல் துலக்கிடுவேன், அதுனால வேற எதுவும் சாப்பிடத் தோணாது.

   நிச்சயம் சவ்வ்வ்வ்வ்வ்வ்வரிசி வடையைச் செய்துபாருங்க. உங்களுக்குப் பிடிக்கும். 'வாயில் ஒட்டுது' என்று வடகத்தைக் குறை சொல்பவர்களுக்குப் பிடிக்குமா?

   நீக்கு
  2. எங்கட வீட்டில உறைப்புப் பலகாரவகை எனில் உடனே முடியும், இனிப்பெனில் சொக்லேட் வகைதான் பிடிக்கும்.. நாம் நாட்டு வீட்டில் செய்யும் இனிப்புக்கள் பிடிக்காது ஆருக்கும்..:))

   நீக்கு
  3. கணவருக்குக்கூடப் பிடிக்காதா? பசங்க எப்போதுமே தென்னிந்திய இனிப்புகளில் எல்லாவற்றையும் விரும்புவதில்லை. அதில் அளவுக்கு அதிகமாக இனிப்பு சேர்ப்பதினால் இருக்கும். பெண்ணுக்கு பைனாப்பிள் கேசரி, கேரட் அல்வா பிடிக்கும், ஆனால் அம்மாதான் செய்யணும். நான் பைனாப்பிள் கேசரியில் அதிக இனிப்பு போடுகிறேன், கேரட் அல்வா என் மெதட்ல இனிப்பு ரொம்ப அதிகம் என்பாள்

   நீக்கு
  4. அதிரா... உங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு உங்கள் பாரம்பர்ய சமையலைக் கடத்த முடியாதே என உங்களுக்குத் தோன்றுமா? அவங்க உணவுப் பழக்கமே மாறுகிறதே என்ற எண்ணம் வருமா? (ஏஞ்சலினுக்கும் இந்தக் கேள்வி)

   நீக்கு
  5. எங்க மகளுக்கு சைவ சமையல் நல்லா தெரியும் ,திப்பிசம்லாம் சொல்லிக்குடுத்தாச்சு :)ரசம் ஒன்னு போதுமே அதோட பீன்ஸ் /கத்திரி வெண்டைலாம் சமைப்பா .

   நீக்கு
  6. /////நெல்லைத்தமிழன்5 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:48
   அதிரா... உங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு உங்கள் பாரம்பர்ய சமையலைக் கடத்த முடியாதே என உங்களுக்குத் தோன்றுமா? அவங்க உணவுப் பழக்கமே மாறுகிறதே என்ற எண்ணம் வருமா?//

   அந்த அருகூட்டு வடை முப்பருப்பு இட்லி , குழாய் சாதம் இதெல்லாம் அடுத்த ஜெனரேஷனுக்கு போயி ஆகணுமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

   நீக்கு
  7. எங்க வீட்ல மகளுக்கு நம் உணவு பழக்கம்தான் .அதனால் பிரச்சினை கவலை எனக்கில்லை :) 

   நீக்கு
  8. என் கணவரும் 2.5 வயசில இருந்தே வெளிநாட்டு வாழ்க்கைக்கு வந்துவிட்டதனால அவருக்கும் இப்படி இனிப்புக்கள் பிடிக்காது. கேக் வகைகள் மற்றும் என் கேசரி:)).. இவை இரண்டும் செய்த உடன் முடிஞ்சிடும்... பலகார வகைகள் பிடிப்பதில்லை[இனிப்பு]..

   ஆனால் கடைகளில் வாங்கும் பொம்பே சுவீட் வகைகள் சாப்பிடுவினம் சிலது, வீட்டில எப்படிச் செய்தாலும் அந்தச் சுவையில சரிவராதெல்லோ அதனால பிடிப்பதில்லை:))

   நீக்கு
  9. //அந்த அருகூட்டு வடை முப்பருப்பு இட்லி , குழாய் சாதம் இதெல்லாம் அடுத்த ஜெனரேஷனுக்கு போயி ஆகணுமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எங்கட மூத்தவர் யுனி போனதில் இருந்து குழைஜாதம் தான் செய்து சாப்பிடுகிறார்.. ரைஸ் குக்கரில் அரிசியுடன் அனைத்து மரக்கறிகளையும் போட்டு, தனக்குப் பிடிச்ச ஸ்பைசஸ் எல்லாம் போட்டு சூப்பராக சமைக்கிறார், குழைந்திடாமல் பிர்ர்ர்ர்ராணி போல, ஆனா எண்ணெய் உப்பு சேர்ப்பதில்லை..

   நீக்கு
  10. ///////நெல்லைத்தமிழன்5 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:48
   அதிரா... உங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு உங்கள் பாரம்பர்ய சமையலைக் கடத்த முடியாதே என உங்களுக்குத் தோன்றுமா? அவங்க உணவுப் பழக்கமே மாறுகிறதே என்ற எண்ணம் வருமா?/////

   எனக்கு உணவு விசயத்தில் எந்தக் கவலையும் இல்லை, அது அவரவர் சொய்ஸ்.. இப்போ வெளிநாட்டில் பல ரெஸ்ரோரண்டுகள், எந்த பங்சனும் ஃபுவே சிஸ்டம்தானே .. அப்போ நாம் கூட நம் நாட்டு உணவும் வேறு நாட்டு உணவும் இருப்பின், வேறு நாட்டு உணவையே விரும்பி எடுப்போம்ம்.. அப்படி நிலைமை இருக்கையில், நம் உணவுகள் வருங்காலத்துக்கு கடத்தப்பட வேணும் எனும் கவலை எனக்கு இல்லவே இல்லை..

   அதிலும் நம் நாட்டு உணவுகளை நம் பிள்ளைகள் செய்யத் தொடங்கி விட்டனர், யூ ரியூப் இருப்பதனால், வருங்காலத்தில், பழகி இருந்தால்தான் சமைக்க முடியும் எனும் கவலை இல்லைத்தானே... முந்தைய காலம்தானே கேட்டுக் கேட்டுச் செய்வது..

   எனக்கிருக்கும் கவலை எல்லாம், நம் கலாச்சாரம், சமயம், மொழி காணாமல் போய்விடும் என்பது மட்டுமே.

   இப்போ ஒரு விசேட நாள்கூட, நாம் பஞ்சாங்கம்/கலண்டர் பார்த்துச் சொல்வதனால் அவர்களுக்கு தெரிய வருகிறது, ஆனா வருங்காலத்தில் அதை யார் செய்வது?

   மற்றது உடை, இப்பொழுதே நம்மவர்கள் கோயிலுக்கு மட்டும்தான் சாறி, வேட்டி கட்டுகின்றனர் அதுவும் விசேட நாட்களில் மட்டும்.. வருங்காலத்தில் அதுகூட இருக்காது.

   நாம் எந்த நாட்டில் இருக்கிறோமோ.. நம் இரண்டு தலைமுறைகள் மட்டும்தான் அந்தக் கலாச்சாரத்தில் இருக்குமாம்[கோயில் கட்டலாம், சாப்பாட்டுக் கடைகள் போடலாம்] மூன்றாம் தலை முறை நம் கலாச்சாரத்தை விட்டு, அந்நாட்டுக் கலாச்சாரத்துக்கு மாறிவிடுமாம் ஓட்டமெட்டிக்காக, அதனாலதான் வெளிநாட்டவர் நமக்கு எதிர்ப்புச் சொல்லாமல் கோயில் எல்லாம் கட்ட விடுகின்றனராம்..

   கால ஓட்டத்தைப் பார்க்கும்போது அது 100 வீதம் உண்மையாகவே தெரியுது.

   நாம் முதல் தலைமுறை, நம் பிள்ளைகள் 2ம் தலைமுறை.. மூன்றாம் தலைமுறைக்கு தமிழ் எங்கே வரப்போகிறது? திருவிழா எங்கே தெரியப்போகிறது, சுவாமியைத் தோளிக் காவுவதே நம் பிள்ளைகளுக்கு சரியாக தெரியவில்லை.. இம்முறை கனடாவில் தோளில் சுமந்தார்கள் பிள்ளைகள் இருவரும், ஆனால் இடையில கை மாறி நழுவவிடப் பார்த்தனர்... தெரியாதுதானே.. நாம் இருக்கும்வரை சொல்லிக் குடுக்கலாம் பின்பு என்ன ஆகும்? அத்துடன் நம் பிள்ளைகளுக்கு வரும் துணையும், நம் பிள்ளைகளைப்போல கலாச்சாரம் சொல்லி வளர்க்கப்பட்டிருந்தால் ஓகே.. இல்லை எனில் கோவிந்தா கோவிந்தா தானே ஹா ஹா ஹா...

   நீக்கு
  11. //மகளுக்கு சைவ சமையல் நல்லா தெரியும்// - ரொம்ப நல்லது. அவங்க தனியா படிக்கப் போயாச்சுன்னா அவங்களே சமைச்சுக்கத் தெரிந்துகொள்வது நல்லதுதானே. சும்மா நூடுல்ஸ், சூப், ப்ரெட் என்று எப்படி ஓட்ட முடியும்? நம்ம சமையல் ரொம்பவும் நேரம் எடுப்பவை இல்லை. டக்குனு ஒரு ரசம் சாதம், பொரியல் வச்சு சாப்பிட்டுடலாம். இல்லைனா ஒரு புளிக்குழம்பு (வெந்தயக் குழம்பு போன்று). வாழ்த்துகள்

   நீக்கு
  12. @ ஏஞ்சலின் - //அந்த அருகூட்டு வடை முப்பருப்பு இட்லி , குழாய் சாதம் இதெல்லாம் அடுத்த ஜெனரேஷனுக்கு போயி ஆகணுமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்// - என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? அவங்க அவங்க பசங்களுக்கு அவங்க அவங்க அம்மா சமையல்தான் ரொம்பவே ருசியாக இருக்கும். எங்க வீட்டுலயும் நான் பார்க்கிறேனே...

   நீக்கு
  13. @ அதிரா - சில இனிப்பு வகைகள் கடையில் வாங்குவதுதான் சுலபம், நல்லாவும் இருக்கும் (உதாரணமா ஜாங்கிரி, ஜிலேபி போன்றவை). இன்னொன்றும் நான் அவதானித்திருக்கிறேன். நல்ல கடையில் உளுந்து வடை (சாம்பார் வடை அல்லது வெறும் வடை) வாங்கிச் சாப்பிட்டால், ஒன்று அல்லது இரண்டோடு திருப்தியாயிடுவாங்க. ஆனா வீட்டில் செய்தால், 6-7 கூட சாப்பிடுவாங்க.

   அது சரி..//இவை இரண்டும் செய்த உடன் முடிஞ்சிடும்... // - பின்ன..பாக்கி இருந்தால், எப்படியும் ஃப்ரிட்ஜில் வைத்து அது காலி ஆகும்வரை எப்படியும் அவங்களுக்கு சூடாக்கிக் கொடுத்துடுவீங்க. அதுக்கு பேசாம செய்த உடனே சாப்பிட்டு முடித்துவிடலாம் அல்லவா?

   நீக்கு
  14. @ அதிரா - நீங்க சொன்ன கேசரி கேக் எனக்கும் செய்யணும்னு ஆசை. ரொம்ப வருடங்களுக்கு முன்னால் ஹாஸ்டலில் சாப்பிட்டது. (அங்கதான் ஆளுக்கு ஒரு பீஸ் என்பதுபோலப் போடுவாங்க)

   நீக்கு
  15. @ அதிரா - //நம் கலாச்சாரம், சமயம், மொழி காணாமல் போய்விடும் என்பது மட்டுமே.// உங்கள் விரிவான பதில் சிந்திக்க வைக்கிறது. இரண்டு தலைமுறைகள் நம் பழக்க வழக்கங்களைத் தொடர முடிந்தாலே அது அதிசயம்தான். என்னதான் நாம முட்டி மோதினாலும், நம் கலாச்சாரத்தில் இல்லை என்றால் (அதாவது ஈழத்திலோ தமிழகத்திலோ), நம்ம பசங்களுக்கு 50 சதவிகிதம்கூட போய்ச்சேராது. அவங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு நிச்சயமாக 20 சதவிகிதம்கூடத் தெரியாது. அதுனால சமயம், மொழி நிச்சயம் கடத்துவது கடினம். உணவு பற்றிக் கவலை இல்லை. எப்படியும் யூ டியூப் இருப்பதால் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் அது போய்ச்சேர வாய்ப்பு உண்டு (இதையே என் மனைவி ஒத்துக்கொள்ள மாட்டாள். அவள், நம்ம வீட்டுச் சமையல்தான் நம்ம பசங்களுக்குப் போய்ச்சேரணுமே தவிர யூடியூபில் உள்ள மற்ற சமூகத்துச் சமையல் அல்ல என்பாள். உதாரணமா, சில குழம்புகளுக்கு சீரகம் போடக்கூடாது ஆனால் சில சமூகத்தில் இந்தப் பழக்கம் உண்டு. பூண்டு, வெங்காயம் போன்றவை எங்க சமையலில் கிடையவே கிடையாது, வெங்காய சாம்பார் தவிர, அதிலும் பூண்டு இல்லை. ஒரு தடவை நான் புதுமையா சரவணபவன் வற்றல் குழம்பு பண்ணறேன்னு சின்ன வெங்காயம் போட்டுச் செய்தேன்....மகள் ஓகே என்றாள் ஆனால் மனைவி இது மாதிரி இனிமேல் செய்யக்கூடாது என்று சொல்லிட்டா)

   இவை எல்லாவற்றையும்விட, நல்ல ஒழுக்கம், திருமண வாழ்வில் நீடித்திருக்கும் நம் கலாச்சாரம் போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தால், அவங்க கற்றுக்கொண்டால் அதுவே போதும்.

   நீக்கு
  16. அச்சச்சோ அண்ணியை எப்படி சமாளிக்கிறீங்களோ ஹா ஹா ஹா:)...
   இல்ல அவ சொல்வதில நிறைய அர்த்தம் இருக்கு அதாவது, ஆச்சார விதிப்படி உணவு உண்போர்... ஸ்ரிக்ட்டாக இல்லை எனில், பிள்ளைகள் வருங்காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வேறுவித உணவுகளை நாடவும் வாய்ப்பிருக்கு... வெளிநாட்டில் சிலரைப் பார்த்திருக்கிறோம்:)... நீங்களும் அறிஞ்சிருப்பீங்கள்தானே... அதனால உங்கட முறையில் அண்ணி சொல்வதுதான் கரீட்டூஊஊ...

   நீக்கு
 24. எங்க தலைவியை யாரும் பேய்க்காட்ட முடியாது இது வடை இல்லலாஈஐ ..நாங்க ஒதுக்கமாட்டோம் எதுக்குன்னா இதில் உருளை இருப்பதால் இது போண்டா அல்லது கட்லட்த்தான்னு எங்க தலைவி சொல்றாங்க :))எதோ புது ரெசிபியை  தானே சமைச்சு சாப்பிட்டு எங்க தலவீ கொஞ்சம் அசந்த போதுமே எல்லாரும் ஏமாத்தறீங்க :))))))))))) 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //Angel4 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:04
   எங்க தலைவியை யாரும் பேய்க்காட்ட முடியாது//

   உவைய்?:) உவைய்?:)) திஸ் கொல வெறி ஆக்கும்?:)) நானே பயந்து நடுங்கி:) கட்டிலுக்குக் கீழயும் மேசைக்குக் கீழயும் ஒளிச்சு:)) அப்பப்ப ஜன்னல் கம்பியைப் பிடிச்சு எழும்பி எட்டிப் பார்க்கிறேன் என்னைப் போய்த் தலைமைப் பதவி குடுத்து இருட்டடி வாங்க வைக்கும் பிளான்போலும்:))..

   //எதோ புது ரெசிபியை தானே சமைச்சு சாப்பிட்டு எங்க தலவீ கொஞ்சம் அசந்த போதுமே எல்லாரும் ஏமாத்தறீங்க :))))))))))) //
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அஞ்சு திட்டினால் நான் பயப்புட மாட்டேன்:)) புகழும்போதுதான் எங்கினமோ இடிக்குதே:)) ஹா ஹா ஹா:))

   நீக்கு
  2. ரெசிப்பி எழுதும்போதே.... இப்போலாம் அவங்க தளத்துக்கே அதிரா போகாம சோம்பேறியா இருக்காங்க... இங்க வந்து ரெசிப்பியை கலாய்க்கமாட்டாங்க என்ற நம்பிக்கைதான்.

   நீக்கு
 25. இந்த சவ்வரிசி வடை வெடிக்காதுதானே !!! பார்க்கா நல்லா இருக்கு ஆனா எங்க வீட்டில் எண்ணெய் சமையல் செய்வது எப்போதாச்சும்தான் .போன வாரம் உங்க ரெசிப்பி திருமால் வடை அப்படியே சொன்னமாறி செஞ்சேன் செம ருசி .இந்த sago அப்பம் ஒரு ரெசிப்பி பார்த்து செஞ்சு சொதப்பிச்சு அதிலேருந்து பயம் எனக்கு .நான் தோசை க்கு ஊறவைக்கும்போது ஒரு டீஸ்பூன் சவ்வரிசி போடுவேன் தோசை சுடும்போது கண்ணு கண்ணா வரும் :) இதுவரைக்கும் பாயசம் மட்டுமே செஞ்சிருக்கேன் இதையு முயற்சிக்கிறேன் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனி நெல்லைத்தமிழன் வந்து பதில் போடுவாரோ இல்லை கீசாக்கா ஏமாற்றியதுபோல ஒரு வரியில நன்றி சொல்லிட்டு ஓடிடுவாரோ ஆரு கண்டா:)) எல்லாம் அந்த திருப்பரங்குன்றத்து வெள்ளை வைரவருக்கே வெளிச்சமாக்கும்:)) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)).. மீ லொக்டவுனை என் சோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் பண்ணப்போறேன்ன்ன்:))

   நீக்கு
  2. ஜவ்வரிசி வடை வெடிக்காது. எலுமிச்சை சாறு பிழியும்போதுதான் அந்த புளிப்புச் சுவை கிடைக்கும். சவ்வரிசி அப்பம் கேள்விப்பட்டதுல்லை. நைலான் சவ்வரிசி ஆன்லைன்ல ஆர்டர் செய்து அதை உபயோகித்து சென்ற வாரம் மனைவி எனக்கு சேமியா சவ்வரிசி பாயசம் செய்தாள். சுசி சொல்லி மாளாது.

   நீக்கு
 26. அய்யோடா !!! இது எப்பலேர்ந்து :)) 
  ////தை மகள் அதிரா:)///
  அந்த தை  மாசமே தையத்தக்கான்னு குதிக்கப்போகுது :))) 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது ஒருவேளை "அத்தை மகள் அதிரா" என்று எழுதுவதில் ஏற்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோ?

   நீக்கு
  2. அது அத்தை மகள் ரத்தினம் எல்லோ:)) .. என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாது:)).. ஹா ஹா ஹா

   நீக்கு
 27. இப்போதான் உற்றுக் கவனிக்கிறேன். வியாளன் வெள்ளி வெஜிடேரியன் டேயில செய்யலாம் என, உருளைக்கிழங்கு சின்னன் என்றால் எவ்வளவு எனச் சொல்லுங்கோ.. அதாவது சவ்வரிசியை விடக் கூடப் போடுவது நல்லதோ குறையப்போடோணுமோ?.. நீங்க இங்கு வெங்காயம் சேர்க்கவில்லை.. சேர்ப்பதில்லையோ இதற்கு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுல உருளைக்கிழங்கு என்பது binding மற்றும் ருசி purpose தான். கையில் பிடிக்கும்படியான 2-3 உருளைக்கிழங்கு சேர்க்கலாம். ஜவ்வரிசி மற்றும் மசித்த உருளை சேர்க்கும்போதுதான் கட்டியான வடை தட்டும் பதத்துக்கு வரும். வெறும் ஜவ்வரிசி ஒட்டாது இல்லையா?

   இதிலெல்லாம் வெங்காயம் சேர்க்காதீங்க. அதை உளுந்து வடைக்கும் மசால்வடைக்கும் வச்சுக்குங்க.

   வியாழன் மற்றும் வெள்ளி மட்டும்தான் உங்களுக்கு வெஜிடேரியன் தினமா? ஒரு வீக் எண்டில் வைத்துக்கொண்டால், அதுவும் குளிர்/மழை நாளில், இன்னும் நல்லா இருக்குமே.

   நீக்கு
  2. செவ்வாயும்தான்:)... அது ஏனைய நாட்களில் அசைவம் எனில் பெரிசாகப் பசிக்காது:). அப்போ பசி இல்லாதபோது இதைச் செய்தால் சுசி தெரியாதாக்கும்:)... சைவ நாட்களில் பசி அதிகமாக இருக்கும் அப்போ இப்படி சைவ உணவைச் செய்தால்... தேவாமிர்தம்போல இருக்கும்:).. எனக்கும் பாராட்டுக் குவியும்:)... உண்மையை உளற வச்சிட்டீங்களே கர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா
   நன்றி நெ தமிழன்.

   நீக்கு
 28. சாபு தானா வடை - சில முறை சுவைத்திருக்கிறேன். செய்ததில்லை. செய்ய விருப்பமும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வெங்கட்..... அதை மட்டும் செய்து, நான் மட்டும் சாப்பிடணும்னா, நானும் செய்யமாட்டேன்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!