சனி, 22 மே, 2021

காற்றில் வரும் ஜீவனே...

 புதுடில்லி: காற்றில் உள்ள நைட்ரஜனை கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் 100 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை எண்ணெய் மற்றும் எரிவாயு பொதுத்துறை நிறுவனங்கள் மருத்துவமனைகளில் நிறுவத் துவங்கியுள்ளன.

'காற்றில் உள்ள நைட்ரஜனை கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும். ஆக்சிஜன் உற்பத்தி மையங்களுக்கான ஆர்டர்கள் இந்திய நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் சில இந்த மாதத்தில் இருந்தே செயல்படத் துவங்கும். ஜூலைக்குள் அனைத்து நிலையங்களும் செயல்படும்' என, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


=============================================================================================================================

புதுடில்லி:கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு வழங்கக் கூடிய தடுப்பு மருந்தை பயன்படுத்த, டி.ஜி.சி.ஐ., எனப்படும், இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்தை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  கொரோனா வைரசுக்கு எதிராக, தற்போது நாட்டில், 'கோவாக்சின், கோவிஷீல்டு' என, இரண்டு விதமான தடுப்பூசிகள், ரஷ்ய தயாரிப்பான, 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டு, மிதமானது முதல், தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; இதை பயன்படுத்த, டி.ஜி.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.  

'இன்மாஸ்' எனப்படும், நியூக்ளியர் மருத்துவம் மற்றும் சார்பு அறிவியல் மையம், டி.ஆர்.டி.ஓ., ஆகியவை, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, 'டாக்டர் ரெட்டிஸ்' நிறுவனத்துடன் இணைந்து, இந்த மருந்தை தயாரித்துள்ளன. மூன்று கட்டங்களாக இந்த மருந்து பரிசோதனை செய்யப்பட்டு, அதில் சிறந்த பலன் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  தற்போது இரண்டாவது அலை பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர், ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. இது போன்றவர்கள், மிக வேகமாக பாதிப்பில் இருந்து மீள்வது, இந்த மருந்து பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பொடி வடிவில் உள்ள இந்த மருந்தை, தண்ணீரில் கரைத்து கொடுக்க வேண்டும். இந்த மருந்து, வைரசால் பாதிக்கப்பட்ட செல்களில் செயல்பட துவங்கும். வைரஸ் பரவுவது தடுக்கப்பட்டு, அது வெளியேற்றப்படுகிறது. இந்த மருந்தால், மருத்துவமனையில் இருக்க வேண்டிய காலம் குறைவதுடன், உயிர் பலியும் வெகுவாக குறைகிறது; ஆக்சிஜன் தேவையும் குறையும்.

குளுக்கோஸ் அடிப்படையிலான மருந்து என்பதால், நம் நாட்டிலேயே அதிகளவில் இதை தயாரிக்க முடியும். தற்போது பயன்பாட்டில் உள்ள மருந்துகளைவிட, இந்த மருந்தை பயன்படுத்துவதால், 2.5 நாட்களுக்கு முன்பே, இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.தற்போதுள்ள மருந்துகளைவிட, இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால், ஆக்சிஜன் தேவை, 42 சதவீதம் குறையும். மூன்றாம் நாளில் இருந்தே, இதன் பலன் தெரிய வரும். வயதானவர்களுக்கும் சிறப்பான பலன்களை அளிக்கிறது.  அடுத்த சில வாரங்களில் அல்லது அதிகபட்சம், ஒரு மாதத்தில், இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
===============================================================================================================
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தியுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமாக முன்வந்து உதவி செய்யும் வகையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், பகவான் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில், 'ஸ்ரீசத்ய சாய் அமுதம்' என்ற திட்டத்தில், வீடு தேடிச் சென்று, ஏழு நாட்கள் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.  லிங்க்கை க்ளிக் செய்தால் விளக்கமான செய்தியில் அந்தந்த ஊர்களுக்கான தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
.
முக கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை பின்பற்றி, பயனாளி வீட்டு வாசல் வரை கொண்டு உணவு சேர்ப்பிக்கப்படுகிறது.வீட்டு முறைப்படி, தரமாக உணவு தயாரித்து, வழங்கப்படுகிறது. கலவை சாதம், காய்கறி பிரியாணி, மிளகு சாதம், புளியோதரை, சாம்பார் சாதம் உட்பட ஏதேனும் ஒரு சாதம் மற்றும் ஒரு கூட்டு, பொரியல், சுண்டல், தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய் வழங்கப்படுகிறது. கடந்த, 6, 7ம் தேதிகளில் மட்டும், 3,655 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இச்சேவை தொடர்ந்து வழங்கப்படும் என, பகவான் ஸ்ரீசத்யசாய் சேவா நிறுவனங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
========================================================================================
 நள்ளிரவுக்கு பின் பஸ் இல்லாமல் தவித்தவர்களுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் தலையிட்டு சிறப்பு பஸ்களை இயக்க வைத்துள்ளார்.   நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பின் 20க்கும் மேற்பட்டோர் சென்னை, கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் கிடைக்காமல் காத்திருந்தனர்.   நள்ளிரவுக்கு பின் ஊட்டிக்கு பஸ் இயக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை பயணியர் தொடர்பு கொண்டனர். அவர் அனுமதி வழங்கியதை அடுத்து, சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. அதன்பின் அனைத்து மண்டல மேலாண் இயக்குனர்களிடமும் அமைச்சர் விசாரித்து, பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணியரை ஊரில் சேர்க்கும் வகையில், சிறப்பு பஸ்களை இயக்க உத்தரவிட்டார். இது, பயணியரிடையே வரவேற்பை பெற்றது.
===========================================================================================

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்து பயத்தில் உள்ளவர்களுக்கும், அறிகுறி உள்ளவர்களுக்கும் அலைபேசி வழியாக இலவசமாக 'கவுன்சிலிங்' கொடுத்து தைரியமூட்டி வருகிறார்கள் மதுரை இளம் மருத்துவர்கள் 20 பேர்.   பலர் நோய் முற்றிய நிலையில் வருவதால் அவர்களை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படுகிறது என்பதை உணர்ந்த இவர்களில் டாக்டர் ஜெயன் என்பவர், 'ஏன் நாம் அலைபேசி மூலம் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு இலவசமாக கவுன்சிலிங் கொடுக்கக்கூடாது' என்றுக்கூற, டாக்டர்கள் ஆனந்தி, பிரவீன் ஆர்திக், அருள், நிவேதிதா, சத்யா, ஜனார்த்தனன், யுவா, கருண், தீப், நிரஞ்சன், கிருத்திகா, காவ்யா, ஹரிணி, ரோஷ்னா, காயத்ரி, சத்யலட்சுமி, கவுரி ஆகிய டாக்டர்கள் 'நாங்க ரெடி' என முன்வந்தனர். எல்லோருக்குமே வயது25க்குள்தான். இரு வாரத்திற்கு முன் 'கவுன்சிலிங்' கொடுக்க ஆரம்பித்தனர்.
===================================================================================================
கொரோனா தொற்றால் இறந்தவரை அடக்கம் செய்ய உறவினர்களே தயக்கம் காட்டும் நிலையில், காஞ்சியைச் சேர்ந்த 'பசுமை புரட்சியில் எங்கள் முயற்சி' அமைப்பினர், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களது சொந்த செலவில் இறந்தவர்களின் உடலுக்கு உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகின்றனர்........
=====================================================================================================================================


கொரோனா ஊரடங்கால் தேனியில் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு தேடிச்சென்று தினமும் உணவு வழங்கி பசியாற்றிவருகின்றனர் மகேஷ்ராஜ் 35, குடும்பத்தினர்.
=================================================================================================
டில்லியில் உள்ள ஹிமான்ஷ்(42)காலியா (39) தம்பதியினர் மகத்தான சேவை செய்து வருகின்றனர்..  காப்பீட்டு திட்ட முகவர்களாக இருக்கும் இவர்களுக்கு காலியாவின் தாயார் திருமண பரிசாக பனிரெண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு ஆம்புலன்ஸ் வழங்கினார்.
அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை தம்பதியினர் இருவருமே இயக்க கற்றிருந்தனர் அவசரமாக அவர்களை அணுகுபவர்களுக்கு இலவசமாக அழைத்துச் சென்று உதவி வந்தனர்.
எவ்வளவு நெருக்கடியான போக்குவரத்திலும் ஹிமான்ஷ் வேகமாகவும் லாவகமாகவும் ஆம்புலன்ஸ் ஓட்டிச் சென்று நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பார் என்பதினால் இவரது பெயரை பல மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.
இப்படி அவசரத்திற்கு அவ்வப்போது ஆம்புலன்ஸ் ஒட்டிக்கொண்டிருந்த இந்த தம்பதிகள் கடந்த ஒரு வருடமாக ஆம்புலன்ஸிலேயே வாழ்ந்து வருகின்றனர் அந்த அளவிற்கு அடுத்தடுத்த அழைப்புகள்.
கொரோனா நோயாளிகளை ஏற்றுவதற்கு ஆம்புலன்ஸ்களும் அதன் டிரைவர்களும் தயங்கிய நிலையில் இந்த தம்பதியினர் இன்னோரு ஆம்புலன்ஸ் வாங்கி ஆளுக்கொரு பக்கம் கொரோனா நோயாளிகளுக்காக இயங்கினர். இதையெல்லாம் கூட சில சமயம் மனிதாபிமானமுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்கள் செய்துவிடுவர் ஆனால் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு போய் தகனம் செய்வதற்கு எந்த ஆம்புலன்ஸ் டிரைவரும் வரமாட்டார்கள் அதற்கும் இவர்கள் இருவரும்தான் முன்னால் போய் நிற்பர்....
===================================================================================================
தண்ணீர் வரும் ஆனால் கொட்டாது! தண்ணீர் பயன்பாட்டை வெகுவாக குறைத்து, தண்ணீரை சேமிக்கும் குழாய்களை தயாரித்து, விற்பனை செய்து வருவது பற்றி, சென்னையில், 'எர்த் போகஸ்' என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வரும் அருண் சுப்ரமணியன்: சென்னை அண்ணா பல்கலையின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை, 2017ல் முடித்தேன்.படித்து முடித்ததும், ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, கை நிறைய நான் சம்பாதிக்க வேண்டும் என என் குடும்பத்தினர் விரும்பினர். ஆனால் நான் அப்படி செய்யவில்லை.மாறாக, குழாய்களில் அதிக அளவில் வெளியேறும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, கையை சுத்தப்படுத்துவது குறித்து எண்ணம் ஓடியது.பல கட்ட முயற்சிகள், ஆய்வுகளுக்கு பின், குழாயை திறந்தால் தண்ணீர் கொட்டுவதற்குப் பதில், பனி மாதிரி தண்ணீர் குழாயிலிருந்து தண்ணீரை தெளிக்கும் குழாயை தயாரித்தேன். அந்த குழாய் மூலம் கையை கழுவலாம்; தண்ணீர் குறைவாகத் தான் செலவானது. மேலும், அதில் பல ஆராய்ச்சிகள் செய்தேன். என்னுடன் கல்லுாரியில் பயின்ற மாணவர்களை இணைத்து, அவர்களுடன் சேர்ந்து, எந்த விதமான தண்ணீர் குழாயின் நுனியிலும் பொருத்தும் வகையில், 'நாசில்' ஒன்றை கண்டுபிடித்தோம். ஆராய்ச்சியின் விளைவாக, 'குவா மிஸ்ட்' என்ற தண்ணீர் நாசிலை கண்டுபிடித்துள்ளோம். இதை, வீடு, அலுவலகங்களில் உள்ள எந்த விதமான தண்ணீர் குழாய்களிலும் பயன்படுத்த முடியும்.வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரில்,10 சதவீதம் மட்டுமே, இந்த குழாயை பயன்படுத்துவதால் தேவைப்பட்டது. சாதாரணமாக ஒரு குழாயில், 1 நிமிடத்திற்கு, 8 - 10 லிட்டர் தண்ணீர் வெளிவரும். நாங்கள் தயாரித்துள்ள குழாயில், ஒரு நிமிடத்திற்கு, 400 மி.லி., தண்ணீரே வரும்; இதனால் மின்சார செலவும் குறையும். இதை அறிந்த பல நிறுவனங்கள், எங்கள் தயாரிப்பை கேட்டு வாங்கிச் செல்கின்றன. கொரோனா தொற்று காலத்தில் பல தடவை கைகளை கழுவ வேண்டியுள்ளது. அதற்காக அதிக தண்ணீரை செலவழிக்க வேண்டியுள்ளது. எனவே, 'ஈகோ மிஸ்ட்' என்ற பெயரில், சற்று அதிகமாக தண்ணீர் வரும், 80 சதவீத தண்ணீர் சிக்கனத்தை தரும் தண்ணீர் சிக்கன குழாய் மற்றும் நாசிலை தயாரித்துள்ளோம்.எங்கள் தயாரிப்புகளை விற்க, பெரிய அளவில் விளம்பரம் செய்வதில்லை.எங்களைப் பற்றி அறிந்தவர்கள் வாங்கிய பொருட்களை கண்ட வர்கள், அவர்கள் மூலம் எங்களைத் தொடர்பு கொண்டு, 'இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப்' குழுக்கள் மூலம் எங்களை அணுகி, விற்பனை சிறப்பாக நடக்கிறது.என்னை நினைத்து முதலில் வருந்திய குடும்பத்தினர் இப்போது, எங்களது கண்டுபிடிப்பால், பெருமிதம் அடைந்துள்ளனர்!தொடர்புக்கு: 073959 72662
=================================================================================================================
நாம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில், ஊரடங்கால் பாதித்த ஏழைகளுக்கு, தினமும், 150 உணவு பொட்டலம் வழங்கப்படுகிறது.திருப்பூர் பிஷப் பள்ளி முன்னாள் மாணவர்கள் இணைந்து, நாம் நண்பர்கள் அறக்கட்டளையை உருவாக்கியுள்ளனர். இவர்கள், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று, ரோட்டோரம் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர்.கொரோனா ஊரடங்கு என்பதால், உணவு கிடைக்காமல் சிரமப்படும், ரோட்டோரம் வசிக்கும் மக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, தினமும், 100 முதல்,150 உணவு பொட்டலங்கள் வழங்கி வருகின்றனர்.உணவு பொட்டலம் தயாரித்து பெறும் நாம் நண்பர்கள் குழுவினர், ஆதரவற்றவர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் பகுதிக்கு நேரில் சென்று, உணவு பொட்டலம் மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கி வருகின்றனர்.
=======================================================================================================

சில நாளுக்கு முன், சீலநாயக்கன்பட்டியில், இருசக்கர வாகனத்தில் மகனுடன் சென்ற மூதாட்டி மயங்கி விழுந்தார். அவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல யாரும் உதவ முன் வராதபோது, இளையராணி, மூதாட்டியை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார். இச்செய்தி ஊடகங்களில் வெளியானது. நேற்று, சேலம் விமான நிலையம் வந்த முதல்வர், இளையராணியை வரவழைத்து0பாராட்டி, புத்தகங்களை வழங்கினார்.
======================================================================================================

"எங்கள் பேக்கரி கேக்குகள் சுவையானவை மிகப்பிரபலமானவை ஆனால் ஊரடங்கு காரணமாக கேக்குகள் தயாரிப்பதை நிறுத்திவிட்டு பிரட் மட்டும் தயாரித்து சென்னையில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.  ஒரு மனிதாபிமான அடிப்படையில் கடை வாசலில் பிரட் பாக்கெட்டை அடுக்கிவைத்து இல்லாதவர்கள் இயலாதவர்களுக்கு வழங்கிவருகிறோம் இங்குள்ள பிரட்டை காசு கொடுத்து வாங்குபவர்களின் பணமும் இவர்களுக்கே பயன்படுத்தப்படுகிறது,இந்த பிரட் மூன்று நாளானாலும் கெடாது என்பதால் சாப்பாடு கிடைக்காத போது இதைச் சாப்பாடாக இவர்கள் பயன்படுத்திக் கொள்வர். பத்து நாளாக இதைச் செய்து வருகிறோம் காசு கொடுத்து பிரட் வாங்குபவர்களுக்கு மிச்சம் கொடுப்பதற்காகவும், ஒருவரே அதிகம் பிரட்டை இலவசமாக எடுத்துச் சென்று விடக்கூடாது என்பதற்காகவும் கண்காணிப்பதற்காக ஒருவர் இருப்பார் மற்றபடி இலவசமாக பிரட் எடுத்துக் கொள்பவர்களிடம் எந்த கேள்வியும் கேட்பதில்லை..."

இந்த மனிதாபிமானத்தின் பின்னனியில் உள்ளவர்கள் யார்? இதற்கு எவ்வளவு செலவாகிறது? என்று கேட்ட போது இது ஒரு சின்ன விஷயம் இதற்கெல்லாம் விளம்பரம் தேவையில்லை என்று சொல்லி தங்களைப் பற்றிய எந்த விவரத்தையும் தர மறுத்துவிட்டனர்.
===================================================================================================

53 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    விதவிதமான நல்லவர்கள் நிரம்பிய உலகம் இது. பதிவு அதனைச் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜூ சார்...  வணக்கம்...  வாங்க...

      நீக்கு
  4. நல்ல சிந்தையும் செயல்களும் நாடெங்கும் பரவட்டும்.. நலமே நாட்டில் எங்கெங்கும் நிலவட்டும்...

    பதிலளிநீக்கு
  5. பதிவில் தொகுக்கப்பட்டுள்ள செய்திகள் அனைத்தும் அருமை.. இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவனின் கோபம் சற்றே தணியட்டும்.  சாந்தி நிலவட்டும்.

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைத்துத் துன்பங்களும் குறைந்து அனைவர் வாழ்விலும் அமைதியும், மன மகிழ்ச்சியும் ஏற்படப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைந்து பிரார்த்திப்போம்.  வாங்க கீதா அக்கா..   வணக்கம்.

      நீக்கு
  7. ரொம்பப் பெரிசா இருக்கு பதிவு. படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
  8. அனைத்துச் செய்திகளும் புதுமை, அருமை! எல்லாமே நம்பிக்கையை ஊட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.
    கஷ்டபடுபவர்களும் உதவும் நல்ல விஷயங்கள் தொகுப்பு நன்றாக இருக்கிறது. கொரோனா காலத்தில் தேடி சென்று உணவு வழங்கும் திருப்பூர் பிஷப் பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    தேடிச்சென்று தினமும் உணவு வழங்கி பசியாற்றிவரும் மகேஷ்ராஜ் குடும்பத்தினர்களுக்கு வாழ்த்துக்கள்.
    இலவசமாக பிரட் கொடுப்பவர் வாழ்க வளமுடன்.

    ஹிமான்ஷ்,காலியா தம்பதியினர் வாழ்க வளமுடன்.
    உதவும் உள்ளம் படைத்த இளையராணி வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  11. குரோனா பற்றி எதிர்மறை செய்திகளே பரவிவரும் காலத்தில் நீங்கள் பகிர்ந்து இருக்கும் செய்திகள் மனதிற்கு ஆறுதல் அளிக்கின்றன. மிக்க நன்றி. உதவும் அத்தனை நல்ல உள்ளங்களையும் இறையருள் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  12. குரோனா பற்றி எதிர்மறை செய்திகளே பரவிவரும் காலத்தில் நீங்கள் பகிர்ந்து இருக்கும் செய்திகள் மனதிற்கு ஆறுதல் அளிக்கின்றன. மிக்க நன்றி. உதவும் அத்தனை நல்ல உள்ளங்களையும் இறையருள் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் நல்ல நாளாக விளங்க வாழ்த்துகள்.
    இறைவன் அருகிருந்து அனைவரையும் காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைந்து பிரார்திப்போம்ம்மா...    வாங்க...  வணக்கம்.

      நீக்கு
  14. நற்செய்திகள் நிரம்பி மனதை மகிழ்விக்கிறது.

    இத்தனை நல்ல உள்ளங்கள்.!!! இவர்களின் அறிமுகம் கொடுக்கும்
    எங்கள் ப்ளாகுக்கு மிக நன்றி.

    இறுதிச் சடங்குகள் செய்து கௌரவிக்கும்
    நல்ல மனிதர்களுக்கு முதல் நன்றி.

    ஆம்புலன்ஸில் வந்து தொற்றுள்ளவர்களைக்
    காக்கும் தம்பதியர்க்கு இரண்டாவது நன்றி.
    புது மருந்தைக் ஒண்டு வந்திருக்கும் அரசுக்கும்,

    ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறனுக்கும்
    சிறப்பு நன்றி.


    பதிலளிநீக்கு
  15. ப்ரெட் கொடுத்து உதவி செய்யும்
    மாமனிதர்களுக்கும்
    அன்றாடம் உணவு கொண்டு போய்க் கொடுக்கும்
    நாம் நண்பர்கள் அறக்கட்டளை, மற்றும்
    மகேஷ்ராஜ் குடும்பத்தினருக்கு
    மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. நல்லவை அல்லாத செய்திகளைப் படித்து மனமே
    சலித்த நிலையில் இங்கே பதியப்
    பட்டிருக்கும் நிகழ்வுகள்
    ஆறுதல் தருகின்றன. எல்லோரும் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!!

    பதிலளிநீக்கு
  18. அனைத்து செய்திகளும் மனதை நெகிழ்த்துகின்றன. சில செய்தித்தாளில் படித்தவை. சில செய்திகள் இது வரை அறியாதவை. கொஞ்ச நாட்களாகவே நிகழ்கின்ற, அனுபவிக்கின்ற, கேட்கின்ற செய்திகள் மனதை தொடர்ந்து வலிக்க வைத்துக்கொண்டிருக்கையில் இந்த மாதிரி நல்ல செய்திகள் புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.
    பவுடர் உருவில் கொரோனாவுக்கான மருந்து விரைவில் நடைமுறைக்கு வந்தால் எத்தனையோ பேருக்கு விடிவு காலம் பிறக்கும்.
    சடலங்களை ஆம்புலன்சில் எடுத்துச் சென்று உதவுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைத்தேடிச்சென்று உணவளிப்பதும் மிக உயர்ந்த சேவை! எந்த விதத்தில் அவர்களுக்கு நன்றி சொல்ல முடியும்? உயரிய சேவைகளை செய்து வரும் அத்தனை பேருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்!!

    பதிலளிநீக்கு
  19. மிக அருமையான விளக்கத்துத்துடன் கூடிய நல்லதொரு தகவலை சொன்னதற்கு அன்பு நன்றி!!

    பதிலளிநீக்கு
  20. திரு அருண் சுப்ரமண்யனின் கண்டுபிடிப்பை பற்றித்தான் குறிப்பிட்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  21. ..இளையராணியை வரவழைத்து0பாராட்டி, புத்தகங்களை வழங்கினார்.//

    அது எந்தமாதிரியான புத்தகம், யாரெழுதியது..? இளையராணிக்குத் தேவை அதுதானா? ஒ.. கேக்கப்படாது !

    பதிலளிநீக்கு
  22. ..அதன்பின் அனைத்து மண்டல மேலாண் இயக்குனர்களிடமும் அமைச்சர் விசாரித்து, பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணியரை ஊரில் சேர்க்கும் வகையில், சிறப்பு பஸ்களை இயக்க உத்தரவிட்டார்.//

    வரவேற்கத்தக்கது.

    பதிலளிநீக்கு
  23. ..3,655 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இச்சேவை தொடர்ந்து வழங்கப்படும் என,..//

    மக்கள் சேவை. மகேசன் சேவை.

    பதிலளிநீக்கு
  24. ..காப்பீட்டு திட்ட முகவர்களாக இருக்கும் இவர்களுக்கு காலியாவின் தாயார் திருமண பரிசாக பனிரெண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு ஆம்புலன்ஸ் வழங்கினார்.//

    ! It beats me...

    பதிலளிநீக்கு
  25. எனக்கு தெரிந்து நைட்ரஜென் ஒரு மூலகம் ஆக்ஷிஜென் ஒரு மூலகம். நைட்ரஜனும் ஆக்ஷிஜெனும் சேர்ந்து நைட்ரஸ் ஆக்ஸைடு என்னும் மயக்க வாயு உண்டாக்குவர். 
    ஆக நைட்ரஜனை ஆக்ஷிஜன் ஆக்க முடியாது. 

    ஆனால் நைட்ரஜன் தயாரிக்கும் இயந்திரங்களை ஆக்ஷிஜன் தயாரிக்க மாற்றி அமைத்து வெற்றி கண்டுள்ளனர் IIT Bombay.பார்க்க சுட்டி.

    https://www.hindustantimes.com/cities/mumbai-news/iitbombay-converts-existing-nitrogen-plant-into-oxygen-generator-10 

    காற்றில் உள்ள நைட்ரஜனைப் பிரித்து விட்டால் எஞ்சுவது ஆக்ஷிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைட், ஹீலியம், போன்றவையே. இந்தக் கலவையில் மற்ற வாயுக்களை பிரித்தால் எஞ்சுவது ஆக்ஷிஜன். இதுவாயிருக்கும் செய்தி. 

    பதிலளிநீக்கு
  26. மகத்தான சேவைகளின் தொகுப்பு... அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  27. //காப்பீட்டு திட்ட முகவர்களாக இருக்கும் இவர்களுக்கு காலியாவின் தாயார் திருமண பரிசாக பனிரெண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு ஆம்புலன்ஸ் வழங்கினார்.//

    அட! எப்படி இந்த ப்ரீமானிஷன்! தம்பதியர் இருவரும் டாப்!!! இன்றைய செய்திகளில்

    முதல் இரு செய்திகளும் நல்ல விஷயம்.

    உணவு வழங்கும் சேவை செய்யும் அத்தனைப் பேருக்கும் வாழ்த்துகள்! எப்பேர்ப்பட்ட பணியைச் செய்கிறார்கள் இச்சமயத்தில். அந்த மாணவர்களும்!

    அனைத்துச் செய்திகளும் மிக மிக அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  28. பவுடர் வடிவ கொரோனா மருந்து விரைவில் நிறைய வர வேண்டும்! அனாத ரக்ஷகன் தேவை இப்போது!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. கொரோனா பற்றியவை அனைத்தும் நம்பிக்கை ஊட்டுபவையாக இருக்கின்றன! விரைவில் நல்லகாலம் பிறக்க வேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
  30. அனைத்துச் செய்திகளும் அருமை.

    கொரோனா பொடி தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்கும்படி கிடைத்துவிட்டால் எத்தனை நல்லது. எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும்! இப்போது கேட்பவை அனைத்தும் மனதை வேதனையுறச் செய்வதாகபவே இருக்கிறது. உங்களின் முதல் இரு செய்திகளும் ஆறுதல் அளிக்கிறது.

    கொரோனா சமயத்தில் உணவு வழங்கும் சேவை செய்யும் அனைத்து உள்ளங்களையும் வாழ்த்துவோம்.

    ஹிமான்ஷ் காலியா வியக்க வைக்கிறார்கள்! என்ன ஒரு உன்னதமான சேவை! மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    இந்த நேரத்தில் இப்படியான நல்ல செய்திகள் வாசிப்பது இதமாக இருக்கிறது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  31. சிறப்பான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  32. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள் ! தொற்று குறைந்து மக்கள் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    நல்ல செய்திகள் மனதிற்கு இதமளிக்கிறது. பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  33. நல்ல உள்ளங்கள் வாழட்டும்.

    பதிலளிநீக்கு
  34. எல்லாமே பாசிட்டிவ் விஷயங்கள் .அண்ணா பல்கலைக் கழக மாணவனின்(MIT Campus)
    தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் கண்டு பிடிப்பு சூப்பர்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!