ஞாயிறு, 23 மே, 2021

மல்லிகை - நம் எண்ணம் மயக்கும் பொன்னான மலரல்லவோ ..

 

நம் வீட்டு மல்லிகை என்றாலே மணம்  அலாதிதான் 


முதலில் மொட்டுக்களை மட்டும் ஜாக்கிரதையாக....


நண்பர் சொன்னார்.....பூத்த பின் காம்புடன் வெட்டி விடுங்கள் என்று...


சற்று ஏமாற்றமாகவே இருந்தது  செடிகள் இளை த்துப் போனமாதிரி -- 


பின் நிறைய பூக்களை பார்த்த போது  நன்னம்பிக்கை  - - 


துளிர்த்தது அவர்பால் நமக்கு ! 






மல்லிகைக்கூட்டத்தில் மாட்டிக்கொண்ட ஒற்றை ரோஜா 


நம்  மல்லி மட்டும்தான் மணக்குமா?


எதிர்வீட்டு மாமரமும் தான் 




வானத்து நக்ஷத்திரங்கள் பூமியில்... 


அதுவும்... நம் மாடியில் 




ரங்கூன் மல்லி  மாலதி, ஜஸ்வந்த் என்ன பெயர் சொன்னாலும் மாலையில் மாடிக்குப் போனால் வருவது ஒரு லேசான கிறக்கம் + 
பூவில் இருக்கும் தேனுண்ண நிறைய தேனீக்களின் வருகை மற்ற செடிகள் பெருக வரம் 


= = = = 

55 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. ஆஹா, நான் தான் ஃஃபர்ஷ்ட்ட்டா? இல்லைனா யாரானும் ஏற்கெனவே எட்டிப் பார்த்துட்டாங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி....பார்த்துட்டாங்களே...


      இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா. 

      நீக்கு
    2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கீதாக்கா! எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்வாக நீங்களும் மாமாவும் இருந்திட பிரார்த்தனைகள்!

      கீதா

      நீக்கு
    3. வாழிய பல்லாண்டு..

      அன்பின் பிறந்த நாள் வாழ்த்துகள்...

      நீக்கு
    4. நன்றி அனைவருக்கும்.

      நீக்கு
  3. அதானே, கோமதி வந்திருக்காங்க ஒரே ஒரு நிமிஷம் முன்னாடி. இப்படி யாரானும் வந்தால் தான் சுறுசுறு, விறுவிறுனு இருக்கு. வாங்க கோமதி, வாங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வளமுடன்
      அழைப்புக்கு நன்றி கீதா

      நீக்கு
    2. இருவருமாய் தோட்டத்தைச் சுற்றி பார்த்து விட்டீர்கள் போல...

      நீக்கு
    3. நானும் சுற்றிப் பார்த்துவிட்டேன்..

      கீதா

      நீக்கு
    4. ஹா..  ஹா..  ஹா..   நன்றி சின்ன கீதா!!

      நீக்கு
    5. ஹா ஹா ஹா ஸ்ரீராம் நீங்களும் வல்லிம்மா போல சின்ன கீதா என்று!! ஆஹா நன்றி நன்றி...உருவத்துல மட்டுமில்ல ஜூனியரோ ஜூனியராக்கும்!!! நெல்லையின் காதில் விழுட்டும்!

      கீதா

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நாளை முதல் தொடங்கப் போகும் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கினால் தொற்றுக் குறைந்து சாதாரணமான சூழ்நிலையும், மனோநிலையும் அனைவர் வாழ்விலும் ஏற்படப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரோனா ப்ரார்த்தனைகளே ஒரு வருடத்துக்கும் மேலாக ஓடுதே... கொரோனா வெர்ஷன் மாற அது காரணமில்லை அல்லவா?

      நீக்கு
    2. வழக்கம்போல நம்புவோம், பிரார்த்திப்போம்.

      நீக்கு
  5. காலை வணக்கம் அனைவருக்கும்.

    இதுதான் என் வீட்டிலும் ஒன்று இருக்கிறது. காம்பை வெட்டுவது என்றால் என்ன? பல்கிப் பெருகி பல தொட்டிகளில் வளர்க்க என்ன செய்யணும்? (உங்க வீட்டுப்பக்கம் வரும்போது ஒருசில செடிகளை லவட்டிவிட வேண்டும் என்ற பதிலுக்குத் தடா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் நெல்லை..  வாங்க... எங்கள் மாடியிலும் இந்தச் செடி இருந்தது.  ஆயினும் குறைந்த பூக்களே பூக்கும்!

      நீக்கு
    2. நெல்லையின் ஹஸ்பண்டுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்/ஆசிகள்/பிரார்த்தனைகள்.

      நீக்கு
  6. வானத்து நக்ஷத்திரங்கள் பூமியில் ஒளியுடன் இருக்கிறது அந்த படம் அருமை.
    ஒற்றை ரோஜா அழகு, அடுத்தவீட்டு மாங்காய் (கொத்து கொத்தாக காய்த்து இருப்பது)படங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. செடி, கொடிகள், மலர்கள், பூக்கள், மாங்காய்கள் எனப் பார்த்ததும் அம்பத்தூர் வீடு தான் நினைவுகளில். நான்கு மாமரங்கள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை! ஒன்று முழுக்க முழுக்க மஞ்சநாறி ஒன்று அரிசி மாங்காய், ஒன்று மாயவரம் பாதிரி. இன்னொன்று சிந்தூரா மாதிரிச் சிவப்பாக வரும். பாதிரியை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை வெட்டினோம். கோபமோ என்னமோ தெரியலை, பக்கத்து வீடு குடியிருப்பாக மாறினப்போ சிமென்ட், ஜல்லி, சுண்ணாம்பு போட்டுப் போட்டு மரமே பட்டுப் போய்விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியான வீடிருந்தால் அதன் சௌகர்யங்களே தனி..  இல்லையா?   இது அபார்ட்மெண்ட் காலம்...    குறைந்த அளவில்தான் செடிகள்!

      நீக்கு
    2. இப்போதைய மன/உடல் நிலையில் தனி வீடெனில் எங்களால் பராமரிக்க முடியுமா? சந்தேகமே ஶ்ரீராம். ஆகவே நினைவுகளில் உலவுவதோடு சரி! மற்றபடி வருத்தம் எல்லாம் இல்லை. அவ்வப்போது மனது நினைவுகளில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்.

      நீக்கு
    3. என் கருத்தில், ஐம்பது அறுபது வயது வரை தனிவீடு ஓகே, பிறகு அபார்ட்மென்ட்தான் சௌகரியம், பாதுகாப்பு.

      நீக்கு
    4. ம்ம்ம்ம்...     இதுவும் ஒரு பார்வைதான்.

      நீக்கு
    5. இல்லை ஶ்ரீராம், தனி வீடு பராமரிக்க வேண்டும் எனில் நம் கூடவே இளவயதுக் குழந்தைகள் தங்கி இருக்கணும். வயதான கணவன், மனைவி எனில் தனி வீடு பராமரிப்பது கஷ்டம். எங்கேயாவது போவது எனில் வீட்டில் ஆள் வைக்கணும். தோட்டம் பராமரிக்கணும். மாடிகளைச் சுத்தம் செய்யணும். வீட்டைச் சுற்றிலும் சுத்தம் செய்யணும். ஒரு நாள் விட்டாலும் தொந்திரவு. தென்னைமரங்கள் இருந்தால் 2 மாதத்துக்கு ஒரு முறை கழித்துவிட்டுப் பாளைகள் நன்கு வர/வளர தேங்காயாக மாற வழி செய்யணும். அதுவாகக் கீழே விழும் தென்னை ஓலைகளை அப்புறப்படுத்துவது பெரிய வேலை எனில் அதை நாம் சாதாரணமாக வீட்டுக்கு வெளியே எல்லாம் போட முடியாது. குப்பை வண்டிக்காரங்க எடுத்துப் போக மாட்டாங்க. அவங்க கிட்டே பணம் கொடுத்து எடுத்துப் போகச் சொல்லணும். மரத்தை வெட்டறதுன்னா கூலி மட்டும் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் வைச்சுக்கணும். இத்தனையும் செய்து கொண்டு அம்பத்தூரில் கணினியிலும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டு இருந்தேன். இங்கே வந்து எல்லாம் நின்றுவிட்டது. கணினியும் எப்போதாவது என ஆகிக் கொண்டு இருக்கு.

      நீக்கு
  8. அடுக்கு மல்லிகை, குண்டு மல்லிகை, காம்பு நீளமான ஒற்றை மல்லிகை, சந்தன முல்லைனு விதம் விதமான பூச்செடிகள்! எல்லாவற்றிலும் பறித்து மாளாது. இங்கேயும் சிதறிய நக்ஷத்திரங்களைப் போன்ற மல்லிகைப்பூக்கள் கண்களுக்கு விருந்து. மாடித்தோட்டம் முழுக்க முழுக்கப் பூந்தொட்டமா?

    பதிலளிநீக்கு
  9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறையருள் சூழ பிரார்த்திப்போம்.  வாங்க துரை செல்வராஜூ ஸார்...   வணக்கம்.

      நீக்கு
  10. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஹா...  அண்ணா சொன்னது மாமாவுக்கும் பொருந்தும்!

      நீக்கு
  11. படங்கள் எல்லாம் நல்லாருக்கு. அதற்கான தலைப்பும்...

    மாங்காய் காய்த்துக் குலுங்கும் மரம் ஆஹா...பறிக்கணும் போல இருக்கு!!!

    கீதா

    இப்போது இருக்கும் வீட்டில் மல்லிச் செடி கொடி போன்று படர்ந்து இருக்கும் சிறிய இடத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது. இடையில் நிறைய பூக்கள் பூத்தன 25 வரை. இப்போது குறைந்திருக்கிறது. ஆனால் நிறைய மொட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  12. படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. கேப்ஷன்ஸும்.

    ஆம் நட்சத்திரக் கூட்டம் போல் இருக்கின்றன.

    நம் வீட்டிலும் இங்கு வீட்டின் முன்பக்கம் நிறைய பூச்செடிகள், ரோஸ், மல்லி, என்று இன்னும் பல பூக்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  14. திருமதி கீதா சாம்பசிவத்திற்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாத்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  15. மலர்த்தோட்டத்தைப்பார்க்கையில் ரொம்ப நாட்களுக்குப்பிறகு மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அத்தனையும் அழகழகான மலர்கள்! இது ஜாதிமல்லிகை தானே? மாமரத்தைப்பார்க்கையில் மாவடு, மாங்காய்களை நினைத்து பெருமூச்சு எழுகிறது. துபாயில் உட்கார்ந்து கொண்டு வேறென்ன செய்வது? இந்த முறை மாங்காய் ஊறுகாய்கள் எல்லாம் ஊருக்குப் போக முடியாததால் மிஸ் ஆகி விட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா...    இந்நிலை சீக்கிரமே மாறவேண்டும் என்று பிரார்த்திப்போம், மனதார நினைப்போம் மனோ அக்கா...

      நீக்கு
  16. மல்லிகையின் படங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
  17. மல்லிகை இல்லாத மங்கலம் ஏது!...

    அப்புறம் - மல்லிகைக்கு இன்னொரு பேர் மல்லிகா என்பார்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூரில் மல்லிகா என்றால் மாம்பழம். இரண்டு நாள் முன்பு ஒரு கிலோ 86 ரூபாய்க்கு வாங்கினேன். (Amazon fresh)

      நீக்கு
    2. மாம்பழம்/பலாப்பழம் சாப்பிட்டே 3 வருடங்கள் ஆகிவிட்டன.

      நீக்கு
  18. பாடலுடன் படங்களை பார்த்து ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்...!

    பதிலளிநீக்கு
  19. மிக மிகப் பிடித்த மல்லிகை மலர்களின் காட்சியே கண்ணுக்கு
    விருந்து. இத்தனை அருமையாகத் தோட்டம்
    பராமரிப்பவருக்கு வாழ்த்துகள்.
    மல்லிகை வாசனையும் வரும்படி
    டெக்னாலஜி இருந்தால் எவ்வளவு நன்றாக
    இருக்கும்!!!
    நன்றியும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  20. படங்கள் - மல்லிகையின் படங்கள் அனைத்தும் நன்று. மாமரம் படங்களும் நன்று.

    நெய்வேலியில் இருந்தவரை மல்லிகை, மா போன்றவற்றை அலுக்க அலுக்க அனுபவித்தது நினைவில்...

    பதிலளிநீக்கு
  21. ஆம், வானத்து நட்சத்திரங்களைப் போலப் பிரகாசிக்கின்றன மல்லிகை மலர்கள். அழகு!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!