புதன், 26 மே, 2021

உங்களுக்குப் பிடித்த உணவு எது? ஏன்?

 

கீதா சாம்பசிவம் : 

1) ஆண்கள் சமையலில் சிறந்தவர்களா? பெண்களா?

# நளன் பீமன் மாதிரி சமையல் விற்பன்னர்கள் பட்டியலில் பெண்கள் பெயர் காணப்படாததால்....

& வீட்டு சமையல் என்றால் பெண்கள்; மற்ற commercial சமையல்கள் என்றால் ஆண்கள். 

2) கல்யாணம் போன்ற பெரிய விசேஷங்களில் ஏன் ஆண்களே சமைக்கின்றனர்?

# பெரிய அளவில் சமைத்தலை நிர்வாகம் செய்வதும் அலைந்து திரிவதும் பெண்களுக்கு ஏற்றதல்ல என்பதால் இருக்கலாம்.  பெண்ணின் இயக்கம் அகத்துள்ளும் ஆணின் அலுவல்கள் புறவுலகிலும் என்பது நம் மரபு.

3) நளபாகம் என்பது உண்மையில் அடுப்பில் வைத்துச் சமைக்காத சாப்பாடு செய்யும் முறை. ஆனால் நன்றாகச் சமைப்பவர்களை (அடுப்பில் வைத்துச் சமைப்பவர்கள்) நளன் மாதிரிச் சமைக்கிறான் என்று சொல்வது ஏன்?

# நளன் தீ மூட்டாமல் அக்னி மந்திரம் சொல்லிச் சமைப்பான் என்று சொல்வார்கள்.  மற்றபடி சலாட் மட்டுமே செய்பவன் அல்ல. 

4) பீமனும் சரியான சாப்பாட்டு ராமன் மட்டுமில்லாமல் சமைக்கவும் தெரிந்தவன். ஏன் பீம பாகம் என்று சொல்வதில்லை? திருப்பதியில் தான் எனக்குத் தெரிந்து பீம விலாஸ் சங்கிலி ஓட்டல்கள் உண்டு.

# ஒருக்கால் பீமன் தான் ஆக்கியதை எல்லாம் தானே சாப்பிட்டு விடுவானோ ?

& நாகையில் என் பள்ளிக்கூடத் தோழன் ஒருவனின் மாமாவும், சித்தப்பாவும் சேர்ந்து வைத்திருந்த ஹோட்டலின் பெயர் நள பீம விலாஸ். நண்பனுடன் அங்கு செல்லும்போதெல்லாம் பக்கோடா / கார பூந்தி ஓ சி யில் சுவைத்தது உண்டு. 

5) சில வீடுகளில் இரவு வரைக்கும் சாப்பாடைக் காலையிலேயே செய்து வைத்துவிடுகிறார்கள். அது நன்றாக இருக்குமா? அவ்வப்போது தேவைக்கு ஏற்பச் சமைப்பது நன்றாக இருக்குமா?

# அவர்களுக்கு நன்றாக இருக்கும்.

& நான் முதல் வகைக்கு ஆதரவாளன். 

6) உங்களுக்குப் பிடித்த உணவு எது? ஏன்?

# அரிசி மாவு உப்புமா, ரவா தோசை, பஜ்ஜி, வெண் பொங்கல். ஏன் என்றால் ருசியாக இருக்கும் என்பதால் தான். 

& அடை. சமீபத்தில்தான் எனக்குப் பிடித்த வகையில் அடை மாவு தயாரிக்கக் கற்றுக்கொண்டேன். சூடான அடையுடன் வெண்ணை தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அதுதான் சொர்க்கம். 

7) உங்கள் மனைவி உங்களுக்காக முதல் முதல் என்ன சமைத்துத் தந்தார்கள்? உங்கள் விருப்பமா? அல்லது அவங்க விரும்பினபடியா?

# நினைவில்லை. வந்த புதிதில் பெரிய சமையல் வித்தகராக இல்லை.

& அவியல். அவங்க விரும்பினபடி. (நன்றாக இருந்தது. ஆனால் உப்பு கம்மியா இருந்தது. ) 

8) அறிவு ஜீவிப் பெண்கள் எனில் சமையல் செய்யக் கூடாதா?

# பல புத்திசாலிப் பெண்கள் பிரமாதமாக சமைப்பதை அறிவேன். ஆனால் அறிவுஜீவிகள் சமைத்து வீடு பெருக்க வேண்டும் என ஏன் எதிர் பார்க்க வேண்டும் ?

& அஜீ பெண்கள் சமைத்ததை சாப்பிட்டால் 'அஜீ' + 'ரணம்' ஆகுமோ? 

9) அறிவு ஜீவி என்றால் என்ன? அவங்களுக்குத் தனியா என்ன அடையாளம்?

# பெண் அறிவுஜீவிக்கு சமையல் தெரியாமலிருக்க வேண்டும்.  ஆண் அ.ஜீ குடிகாரராக இருக்க வேண்டும். 

& ஆண் அஜீ என்றால் குறுந்தாடி, குர்த்தா மோட்டு வளைப் பார்வை. பெண் அஜீ யாரையும் நான் பார்த்ததில்லை. 

10) சில பெண்கள் சமையல் செய்வதைக் கேவலமாக நினைப்பதோடு அல்லாமல் பெண்கள் புத்தகம் என்றால் அதில் "பாகற்காய் அல்வா" போன்ற செய்முறைகளைத்தான் போடுவார்கள். நான் இதெல்லாம் படிக்க மாட்டேன் என்கிறார்கள். அவங்கல்லாம் சாப்பிடவே மாட்டாங்களா? சாப்பிட்டால் யார் சமைத்துச் சாப்பிடுவார்கள்?

# எல்லாரும் சமையல் குறிப்புப் பித்தர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

11) உங்க குழந்தைகளுக்கு நீங்க சமைச்சால் பிடிக்குமா? இல்லை அவங்க அம்மாக்கள் சமைப்பது தான் பிடிக்குமா?

# குழந்தைகள் ரசிக்கும் அளவுக்கு எனக்கு சமையல் செய்த அனுபவமில்லை. அம்மா சமையல் சாதாரணமாக காலம் கடந்து அவர் காதில் விழாதபோதுதான் பாராட்டுப் பெறும்.

& என் குழந்தைகளின் அம்மா சமைத்த நாட்களில் அடியேனுக்கு வெந்நீர் வைக்கக்கூடத் தெரியாது. 

Avargal Unmaigal: 

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த மிக தைரியமான விஷயம் என்ன?

 # உயர் அதிகாரிக்கு ஆலோசனை சொல்லப் போய் மூக்கு உடைபட்டதுதான்.

& ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல! 

2. உங்களுக்கு வேண்டிய மூன்று வரத்தை கடவுள் தருவதாக சொன்னால் நீங்கள் விரும்பும் வரங்கள் என்ன?

# முதல் : உலகுக்கு கொரோனாவினின்று விடுதலை 

இரண்டு: அனைத்து அணுஆயுதங்களும் செயலற்றுப் போக வேண்டும்.

மூன்று: மது புகையிலை ஆதிக்கம் வலுவிழந்து போக வேண்டும்.

3. உங்கள் பள்ளி பருவ நண்பர்களுடன் நீங்கள் இன்னும் தொடர்பில் இருக்கிறீர்களா?

# ஆசை உண்டு அதிர்ஷ்டம் இல்லை.

4, நீங்கள் இதுவரை வாங்கிய பொருட்களில் மிக விலையுயர்ந்த பொருள் எது

# வைர மூக்குத்தி. 

& Hearing aid. 

5 , இன்றைய வாழ்வில் எது உங்களை மிகவும் பயமுறுத்துகிறது? (கொரோனாவை தவிர)

# பணத்தைக் கண்மூடித்தனமாக வாரி இறைக்கும் கலாசாரம். 

6. நீங்கள் சிக்கலில் இருக்கும்போது நீங்கள் அழைக்கும் முதல் நபர் யார்?

# தம்பி அல்லது மக(ன்)ள்.

& சிக்கலில் மாட்டிக்கொண்டால் சிக்கல் சிங்காரவேலனை வேண்டிக்கொள்வேன். யாரையாவது அழைத்து அவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைப்பேன். 

7. உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தினர் எப்போதும் தவறாகப் புரிந்து கொள்ளும் ஒரு விஷயம் என்ன?

# என் எரிச்சல் உணர்வாக அவர்கள் நினைப்பது.

& அவர்களைத்தான் கேட்கவேண்டும். அவர்கள் உண்மைகளை சொல்வார்களா? 

8 நீங்கள் எப்போதும் செய்ய விரும்பிய ஆனால் இதுவரை செய்யாத ஒரு விஷயம் என்ன?

# பெரிய அளவில் தருமம்.

9. உங்களால் ஏதாவது ஒரு இசை கருவியை இசைக்க முடியுமா?

# சுமாராகவெனில் முடியும். (புல்லாங்குழல்)

& மோர்சிங் தவிர எதுவாக இருந்தாலும் இசைப்பேன் (ஆனால் யாராலும் அதை கேட்டு இரசிக்கமுடியாது!)  

10 .நீங்கள் சிறப்பாக சமைக்கும் டிஷ் எது?

# லெமன் ஜூஸ் அல்லது இட்லி.

& சமீப காலத்தில் அடை. 

 = = = = =
(பானுமதி வெங்கடேஸ்வரன், நெல்லைத்தமிழன் வாட்ஸ் அப் மூலம் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் அடுத்த வாரம் ) 

= = = =

74 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    என்றும் எல்லோரும் நலமாக இருக்க இறைவன் அருள் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா..  வாங்க...  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. மிக சுவையான கேள்விகளும்
    அதற்குச் சுவையான பதில்களும்.
    நரசிம்ஹர் வந்து கொண்டிருப்பதால் வரவேற்றுக்
    கொண்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிம்மா...

      //நரசிம்ஹர் வந்து கொண்டிருப்பதால் வரவேற்றுக்
      கொண்டிருக்கிறோம்.//

      அடடே...

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். பெருகி வரும் கொடூர நோயிலிருந்து அனைவரும் விடுபட்டு மன அமைதியுடனும், ஆரோக்கியத்துடனும், மகிழ்வுடனும் வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதாக்கா..  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  5. இந்த வாரம் யாரோட கேள்விகளுக்கும் $ பதில்கள் இல்லை. என்னோட கேள்விகளுக்குப் பதில் அளித்த #க்கும் & க்கும் மிக்க நன்றி. சில பதில்கள் சுவாரசியமாக இருந்தன. பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் அனைவருக்கும்.

    செய்முறை வெளியிடத்தான் மாசக்கணக்குல ஆகுதுன்னா கேள்விபதில் வெளியிட வாரக்கணக்காக ஆகிறதே...

    சில பதில்கள் மனதுக்குள் சலனத்தை ஏற்படுத்துகின்றன, கூடவே வருத்தத்தையும். (உ). ஹியரிங் எய்ட், சமையல். எப்போதுமே எஞ்சாய் பண்ணி சமைப்பது வேறு, அது நம்மிடம் காலத்தினால் திணிக்கப்படுவது வேறு.

    பதிலளிநீக்கு
  8. மதுரைத் தமிழன் துரையின் கேள்விகள் யோசிக்க வைத்தன.

    கடவுளிடம் எந்த வரமும் கேட்பதில் அர்த்தம் இல்லை. கேட்கவும் கூடாது. விதிப்படி நடக்கிறது, துன்பத்தைத் தாங்கும் சக்தியையும் உன் நினைவை மறவாமல் இருக்கும் எண்ணத்தையும் கொடு என்பதைத்தான் வேண்டிக்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளிடம் எந்த வரமும் கேட்பதில் அர்த்தம் இல்லை. கேட்கவும் கூடாது. விதிப்படி நடக்கிறது, //

      நெல்லை விதி என்று சொல்லிவிட்டால், நடப்பதுதான் நடக்கும் என்று நமக்குத் தோன்றிய மனப்பக்குவம் அடைந்துவிட்டால் அடுத்து வருவதும் கூடக் கேட்கக் கூடாதுதானே இல்லையோ?

      அங்கு வேண்டுதலுக்கே இடமில்லையே முழு சரணாகதி தவிர..

      கீதா

      நீக்கு
    2. வரம் என்பதும் வேண்டுதல் என்பதும் வேறு இல்லையோ? (அடுத்த புதன் கேள்விக்கும் எடுத்துக் கொள்ளலாம்)

      கீதா

      நீக்கு
    3. எடுத்துககொள்கிறோம் - நன்றி.

      நீக்கு
  9. எல்லோருக்கும் காலை வணக்கம்.

    இன்று என்ன 2 அல்லது ஒரு பதில் தான் வந்திருக்கிறது!! டாலரைக் காணவில்லை!!!!

    எல்லா பதில்களும் சுவை!!!

    //& அஜீ பெண்கள் சமைத்ததை சாப்பிட்டால் 'அஜீ' + 'ரணம்' ஆகுமோ? // ஹா ஹா ஹா ஹா இது இந்தச் சுவை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
    காலையில் வருகிறேன் பின்னூட்டங்களை படிக்க.

    //உங்களுக்கு வேண்டிய மூன்று வரத்தை கடவுள் தருவதாக சொன்னால் நீங்கள் விரும்பும் வரங்கள் என்ன?//

    இந்த கேள்விக்கு பதில்கள் அருமை.

    முதல் பதில் அருமை.
    அடுத்த வரம் எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று கேட்டு இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  12. கீதாக்காவின் முதல் கேள்வியே அதற்கான பதில் நம்ம வெங்கட்ஜி, ஸ்ரீராம், நெல்லை, மதுரை, துரை செல்வராஜு அண்ணா க்கு ஆதரவாக..ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌ அண்ணாவை விட்டுவிட்டேனே!!!

      கீதா

      நீக்கு
    2. வெங்கட், துரை இருவரையும் இதில் சேர்க்க முடியாது. அவங்க இருவரும் கட்டாயத்தின் பேரில் சமைக்கின்றனர். மத்தவங்க ஓகே. நெல்லைக்குத் தான் தான் நன்றாகச் சமைப்பதாக எண்ணம். அதனால் பீத்தல் கொஞ்சம் ஓவர்! மதுரைத் தமிழரும் மனைவிக்கு ஓய்வு கொடுப்பதற்காகச் சமைப்பதாகச் சொல்லி இருக்கார். ஶ்ரீராம் தனக்குப் பிடித்ததைச் சமைக்கவென்று சமையலறைக்குள் புகுந்துக்கறார். இஃகி,இஃகி,இஃகி,இஃகி,இஃகி! யாரேனும் அடிக்க வரதுக்குள் நான் ஓடியே போயிடறேன். இனிமேல் நாளைக்குத் தான் வருவேன். :))))

      நீக்கு
    3. ஸ்ரீராம் சமையலுக்கு பாஸ் செர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார்.
      வெங்கட்டும் நன்றாக சமைப்பார் என்றே தோன்றுகிறது.

      நீக்கு
    4. //ஶ்ரீராம் தனக்குப் பிடித்ததைச் சமைக்கவென்று சமையலறைக்குள் புகுந்துக்கறார்.//

      இல்லை.  மகன்கள் ரசிப்பார்களோ என்று...   மேலும் திட்டமிட்டு எதையும் சமைக்கும் பழக்கம் எனக்கு கிடையாது.  கண்டமேனிக்கு முயற்சிப்பேன்!

      நீக்கு
  13. கமலா அக்காவைக் காணவில்லையே? அக்கா நலம்தானே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஏன் கமலா கொஞ்ச நாட்களாக வருவதில்லை?

      நீக்கு
    2. கமலாவின் சொந்த சகோதரர் காலமானதால் அவர் இன்னமும் அந்த துக்கத்தில் இருந்து வெளிவரவில்லை என்றே நினைக்கிறேன். ரொம்பவே வருத்தமாகத் தான் இருக்கிறது. கடவுள் அவர் மனதுக்கு ஆறுதலைத் தரட்டும்.

      நீக்கு
    3. விரைவில் கமலாக்கா மீண்டு(ம்) வருவார் என்று எதிர்பார்க்கிறோம்.

      நீக்கு
  14. கேள்விகளும் பதில்களும் சுவாரசியமாக இருக்கின்றன.

    இறைவனிடம் இப்போது வைக்கும் மிகப் பெரிய பிரார்த்தனை இந்த உலகை கோவிட் 19 லிருந்து காப்பாற்று என்பதுதான்.

    நானும் கூட பாலக்காட்டில் இருந்தவரை 22 வருடங்கள் சமைத்துக் கொண்டிருந்தேன் நளபாகம் பீமபாகம் என்று சொல்லமுடியாவிட்டாலும் வயிற்றை நிரப்ப. அதற்கு முன்பு 10 ஆம் வகுப்பிலிருந்து தனியாக இருந்ததால் அப்போதும் ஏதோ ஒன்று பசியாற்ற. நாவிற்காகச் சமைத்ததில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  15. இன்று மஹா பெரியவர் ஜெயந்தி. ஏன் மஹா புருஷர்கள் ஜனித்த நாளை பிறந்த நாள் என்று சொல்லாமல் ஏன் ஜெயந்தி என்கிறோம்? மஹாவீர் ஜெயந்தி,புத்த ஜெயந்தி, சங்கர ஜெயந்தி,ராமானுஜ காந்தி ஜெயந்தி... இப்படி?(இது அடுத்த வாரத்திற்கான கேள்வி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்களை எல்லாம் கடவுளின் அவதாரம் என நினைப்பதால்! சாதாரண மனிதர்கள் எனில் பிறந்த நாள் என்போம்.

      நீக்கு
  16. நளபாகம் என்பது உண்மையில் அடுப்பில் வைத்துச் சமைக்காத சாப்பாடு செய்யும் முறை. ஆனால் நன்றாகச் சமைப்பவர்களை (அடுப்பில் வைத்துச் சமைப்பவர்கள்) நளன் மாதிரிச் சமைக்கிறான் என்று சொல்வது ஏன்?// குமுட்டியோ,விறகடுப்போ,கேஸ் அடுப்போ, மைக்ரோ வேவ் அவனோ எதில் சமைத்தால் என்ன? சமையல் நன்றாக இருக்க வேண்டியதுதானே முக்கியம்?

    பதிலளிநீக்கு
  17. எத்தனையோ பேர் நன்றாக நடித்தாலும், சிவாஜியைத்தானே நடிகர் திலகம் என்கிறோம்? பீமன் சமையல்காரன், நளன் சிறப்பான சமையல்காரனாக இருந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இங்கே எதுக்கு ஜிவாஜி வந்தார்? அநியாயமா இல்லையோ? நடிகர் திலகம் தான்! ஆனால் நல்ல நடிகர்னு சொல்ல முடியாது! :))))))

      நீக்கு
  18. முதல் 11 பசியைப் போக்கி விட்டது...!
    இரண்டாவது 10 சுயத்தைச் சிந்திக்க வைத்தது...!

    பதிலளிநீக்கு
  19. //பெண் அஜீ யாரையும் நான் பார்த்ததில்லை. // என்ன, இப்படிச் சொல்லிட்டீங்க? தமிழ் நடிகைகளில் லக்ஷ்மி, சுஹாசினி, சுமித்ரா, ரேவதி போன்றோர் அ.ஜீ. எனக் குறிப்பிடப்படுபவர்கள் ஆயிற்றே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுமித்ராவா. அது சாதுப் பொண்ணு இல்ல.?மற்றவர்கள்
      அறிவு ஜீவிகளா.இது என்ன வியாக்கியானம்னு தெரிய வில்லை.
      சிவசங்கரி,இந்துமதி எல்லோரும் இப்படித்தான் பேசப்பட்டார்கள்.

      நீக்கு
    2. ஆமா இல்ல? எப்படி மறந்தேன் சிவசங்கரி, இந்துமதி இருவரையும்! :))))))

      நீக்கு
    3. நான் பார்த்ததில்லை என்றுதான் சொல்லியிருக்கேன். நீங்க பார்த்திருக்கலாம்.

      நீக்கு
    4. @ வல்லி அக்கா: வாஸந்தியையும் அம்பையையும் விட்டு விட்டீர்களே?
      @கீதா அக்கா: ரோஹிணியை விட்டு விட்டீர்களே?(ரோஹிணி யார் என்று கேட்காதீர்கள். ரகுவரன் மனைவி)

      நீக்கு
    5. @பானுமதி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ரோஹிணியின் காமெடியை மறக்க முடியுமா? ஆனால் விரும்பி விரும்பி 2 தரம் பார்த்த அந்தப் படம் தான் பெயர் மறந்து விட்டது. ரேவதி, ஊர்வசி, ரோஹிணி, நாகேஷ், அசத்தல் நடிப்பு! பிணமாக! "மகளிர் மட்டும்" படமா அது? இஃகி,இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
  20. எனக்குத் தெரிந்து இடதுசாரி சித்தாந்தம்/கம்யூனிசத்தை ஆதரிப்போர் அனைவருமே பகுத்தறிவு, நிரம்பியவர்களாகவும் அறிவு ஜீவிகளாகவும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். அதிலும் அவர்களுக்குக் கட்டாயம் கடவுள் மறுப்பு இருந்தாகணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கூடவே கோயில்களுக்குப் போவோம், ஆனால் சாமி கும்பிட இல்லை. அங்குள்ள கலை நுணுக்கங்கள் உள்ள சிற்பங்களைப் பார்த்து ரசிக்கத் தான் என்றும் சொல்லிக்கணும். கர்பகிரஹத்தில் உள்ள உம்மாச்சியைப் பார்க்காமல் கண்களை மூடிப்போம் என்றும் சொல்லணும்.

      நீக்கு
  21. //பெண் அஜீ யாரையும் நான் பார்த்ததில்லை.// இந்த ஸ்டேட்மென்டுக்கு அறிவு ஜீவி பெண்கள் பொங்கி எழுவார்கள். புத்திசாலி பெண்கள் புறக்கணிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனவே, நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் - சரியா?

      நீக்கு
    2. எ.பி.யில் இருக்கும் எல்லா பெண்களும். எப்பூ..டி? 

      நீக்கு
    3. ஹிஹிஹி, @பானுமதி, நாமெல்லோருமே அறிவு ஜீவிகள் தானே! :))))))

      நீக்கு
    4. கெளதமன் புத்திசாலி என்கிறார், நீங்கள் அறிவு ஜீவி என்கிறீர்கள். ரெண்டும் கெட்டானாக இல்லாத வரை நல்லது.

      நீக்கு
    5. புத்திசாலி என்பது நாம் அனைவருமே தான் பானுமதி! ஆனால் அறிவுஜீவி கொஞ்சமாவது கடவுள் மறுப்பு இருக்கணும்/ பெண்கள் எனில் சக பெண்களைத் துச்சமாக நினைக்கணும்/ஆண்கள் எனில் உலகில் அனைவருமே முட்டாள்கள் என நினைக்கணும். இருவருமே ஒரு கதர் ஜிப்பா போட்டுக் கொண்டு ஜோல்னாப் பையை மாட்டிக் கொண்டு பார்வையை எங்கோவெறித்துக் கொண்டு கேள்வி கேட்கப் பட்டவற்றிற்கு உடனே பதில் சொல்லாமல் ஒரு பெருமூச்சு விடணும். பின்னர் பார்வையை எங்கோ பதித்த வண்ணம் அரைகுறை பதில் சொல்லணும். சொல்வதும் யாருக்கும் புரியக் கூடாது! முக்கியமா சநாதன தர்மத்தின் சடங்குகள், பழக்கங்கள் ஆகியவற்றைக் கேலியாகப் பேசியே ஆகணும். கடவுள் நம்பிக்கையை மூட நம்பிக்கை என்றும் சொல்லிக்கலாம்.

      நீக்கு
    6. நல்ல விளக்கம். நன்றி.

      நீக்கு
  22. அனைத்து கேள்விகளும் அதற்கான பதில்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  23. @ கீதாக்கா...

    // வெங்கட், துரை இருவரையும் இதில் சேர்க்க முடியாது. அவங்க இருவரும் கட்டாயத்தின் பேரில் சமைக்கின்றனர்... //

    கட்டாயத்தின் பேரில் என்பதை விட,
    விருப்பத்தின் பேரில் - என்று சொல்லலாம்..

    கூழானாலும் குளித்துக் குடி.. என்பதைப் போல - கூழே ஆனாலும் குளித்து விட்டு சமை!.. - என்பது எனக்கு இஷ்டமானது..

    ஊர் விட்டு வந்ததில் இருந்தே இப்படித் தான்.. என்றாலும் இந்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை..

    திரிகரண சுத்தியுடன் செய்யப்படுவது தான் சமையல்..

    முப்பது ஆண்டுகளுக்கு முன் என்னுடன் அறையில் மூன்றாண்டுகள் தங்கியிருந்த இளைஞன் கேட்டரிங் படித்தவன்.. விடியற்காலை 4:30 க்கு எழுந்து வேலைக்குச் செல்பவன்.. ஒருநாளும் எழுந்த பின் குளித்ததே இல்லை.. நாம் மரக்கட்டைகள் அல்லவே.. இதை அவனிடமே கேட்டபோது விடியற்காலை குளியல் எங்களுக்குக் கட்டாயம் இல்லை.. என்று சொல்லி விட்டான்.. நான் சமையலர் இல்லை என்றாலும் விடியலில் குளித்த பின் தான் காஃபி, டிபன் எல்லாம்...

    உணவகங்களில் நீங்கள் சாப்பிட்டதே இல்லையா.. அங்கெல்லாம் குளித்து விட்டா சமைக்கின்றார்கள்?... - என்று யாரும் கேட்கலாம்... குளிக்காமல் மூட்டிய அக்கினி அவனையே சுடும்! .. என்று கடந்து போக வேண்டியது தான்...

    நம்மூரில் விடியலில் குளித்து விட்டு அடுப்பு பற்ற வைக்கும் பழக்கம் டீக்கடைக்காரர்களுக்கும் உண்டு..

    இல்லறவாசிகளில் ஆணுக்கு ஒரு நீதி.. பெண்ணுக்கு ஒரு நீதி என்று படித்திருக்கிறேன்... மனை மங்கலத்தில் கணவன் விடியலில் எழுந்ததும் குறைந்தபட்சம் முழங்கால் வரை கழுவி விட்டுத் தான் தலை வாசலைக் கடக்க வேண்டும்.. ஆனால் மனைவி கை கால் முகம் கழுவி கூந்தல் முடித்து நெற்றிக்கு இட்டுக் கொண்டாலே போதும் ... திரு விளக்கை ஏற்றலாம்... ஆனாலும் மங்கையர் அப்படிச் செய்வதில்லை... தலை குளித்தால் தான் ஆத்ம திருப்தி... அதுதான் பாரம்பர்யம்.. கலாச்சாரம்..

    சென்ற ஆண்டு இதே நாளில் கொரானா காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோது ஒரு சில நாட்கள் தவறியிருக்கிறேன்... மற்றபடி கடுங்குளிர் காலத்திலும் விடியலில் குளித்து விட்டு திருநீறு தரிப்பதற்குத் தவறுவதே இல்லை.. அதனாலேயே என்மீது ஒரு சிலருக்கு காழ்ப்பு...

    சமையலின் போதும் சாப்பிடும் போதும் குறைந்தபட்சம் பக்தி இசைப் பாடல்களாவது ஒலித்துக் கொண்டிருக்கும்...

    அக்கா அவர்கள் என்னைக் குறித்து எழுதியதற்காகவே இதைப் பகிர்ந்து கொண்டேன்... கைப்பேசியில் தட்டச்சு செய்வதால் சில நேரங்களில் பாடல்களைக் கேட்க முடிவதில்லை.. மற்ரபடிக்கு இன்று சாம்பாருடன் வறுகடலை காரச் சட்னி.. சந்தோஷமாக சாப்பிட்டு முடித்தாயிற்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. @துரை, விளக்கமான கருத்துக்கு நன்றி. எங்க வீட்டிலும் காலை எழுந்ததும் குளித்துவிட வேண்டும். அம்மா அதன் பின்னரே காஃபிக்குக் குமுட்டி பற்ற வைப்பார். பின்னர் வந்த நாட்களில் எல்லாம் மாறி விட்டன. :( இங்கே எனக்குப் பெருக்கித் துடைப்பது, பாத்திரங்கள் கழுவுவது, மற்றும் கழிவறை சுத்தம் செய்வது என இருப்பதால் நான் இவற்றை எல்லாம் முடித்துவிட்டு எட்டு மணிக்குத் தான் குளிக்கப் போக முடியும்! ஆகவே காலையில் எழுந்ததும் குளிப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்! அப்புறம் இந்த வேலைகள் எல்லாம் நின்றுவிடுமே! :))))) ஆனால் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு கை,கால், முகம் கழுவி ஸ்வாமி விளக்கு ஏற்றி விடுவேன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!