திங்கள், 26 ஜூலை, 2021

'திங்க'க்கிழமை - அன்னவரம் பிரசாதம்   -  நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 நண்பர் ஒருவரிடம் கோவில் பிரசாதங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது, ஆந்திராவில் உள்ள அன்னவரம் கோவில் பிரசாதம் பற்றிக் குறிப்பிட்டார். 

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அன்னவரம் என்ற ஊரில் அமைந்துள்ள வைணவக் கோவில் ஸ்ரீ வீரவேங்கட சத்தியநாராயண சுவாமி கோவில். இது இரத்தினகிரி என்ற குன்றில் உள்ளது. அமைந்துள்ள ஊரின் பெயரால் இந்தக் கோவிலை, அன்னவரம் கோவில் என்பர். அது சரி.. நமக்கு இப்போது முக்கியம் இந்தக் கோவில் பிரசாதம்தானே.


இதனை உடனே செய்துபார்த்தேன்.  ரொம்ப நல்லா வந்தது. எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருந்தது (பசங்க ரெண்டு பேரும் ஒரு ஸ்பூன் சாப்பிடுவார்கள். அவ்ளோதான். இனிப்பு எது பண்ணினாலும் நானும் மனைவியும்தான் சாப்பிட்டுக் காலி பண்ணணும்).  இதை திங்கள் கிழமை பதிவுக்கு எழுதி அனுப்ப இவ்வளவு நாளாகிவிட்டது (மே முதல் வாரம்)



தேவையானவை

 

உடைத்த கோதுமை ரவை 1/2 கப்

வெல்லம்  1/2 அல்லது 3/4 கப்

தண்ணீர் 3 கப்

ஏலக்காய் பொடி 1/4 தேக்கரண்டி

முந்திரி 1 மேசைக்கரண்டி

உலர் திராட்சை 1 மேசைக்கரண்டி

நெய் 3 மேசைக்கரண்டி

பச்சைக் கற்பூரம் வாசனைக்கு


செய்முறை


கடாயில் 2 ஸ்பூன் நெய் விட்டு, சூடான பிறகு முந்திரியைச் சிவக்க வறுக்கவும்.  திராட்சையையும் நன்கு உப்புமாறு வறுத்து, இரண்டையும் தனியாக எடுத்துவைக்கவும்.


அதே கடாயில், கோதுமை ரவையைச் சேர்த்து மிதமான தீயில் நன்கு பொரிந்து வாசனை வரும் வரை வருக்கணும். இதுக்கு சுமார் 4-5 நிமிடங்கள் ஆகும்.


இதனை, 3 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 3 விசில் விட்டு வேக வைக்கணும்.


தனி பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துச் சுட வைத்து பிறகு வடிகட்டு. இப்போ சுத்தமான வெல்ல ஜலம் தயார்.


வெந்த ரவையை கடாயில் போட்டு, அதனுடன் வெல்ல ஜலம் சேர்த்துக் கிளறவும். அதில் ஏலக்காய் பொடி, முந்திரி திராட்சை சேர்த்துக் கிளறவும்.


ஓரளவு கெட்டியாக கொழகொழப்பான பதத்துக்கு வரும்வரை நன்கு கிளறணும்.


கடைசியில் பச்சைக்கற்பூரம் சேர்த்துக் கலந்து அடுப்பை அணைக்கவும். பிறகு அதில் 2 ஸ்பூன் நெய் சேர்த்துக் கலக்கவும்.






இதைப் பண்ணிவிட்டு என் மாமனாருக்கு அனுப்பினேன். அவருக்கு இனிப்பு பிடிக்கும் என்பதால். நன்றாக இருக்கு என்று சொன்னார்.  (நவம்பர் 14ம் நாள்). அவருக்கு ஜனவரி 2ம் தேதி நான் செய்துகொடுத்த அரிசிப் பாயசமும், தேங்காய் பர்பியும் ரொம்ப நல்லா இருந்தது என்று சொன்னார். அவர் ஜனவரில ஐ.சி.யூ வில் இருந்தபோது சர்க்கரைப் பொங்கல் செய்து அனுப்பினேன் (அவர் கேட்டதன் பேரில்). சரியா வரலை (அரிசி விரைத்துக்கொண்டுவிட்டது). அதற்கு முன்பு செய்த திருவாதிரைக்களியும் சொதப்பிவிட்டது.  இது இரண்டும் என் மனதுக்கு வருத்தத்தைத் தந்தது. 


அன்னவரம் பிரசாதம் நீங்களும் செய்துபாருங்க.

61 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்றும் ஆரோக்கியமும்
    அமைதி, ஆனந்தத்தோடு இருக்க இறைவனின்
    அருள் கிடைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அன்னவரம் பெயரே அருமையாக இருக்கிறது.
    தெலுங்கு தேசத்தில் பக்தியும் பிரமாதம்.
    பிரசாதமும் பிரமாதம் என்று சொல்வார்கள்.

    இங்கே முரளி கொடுத்திருக்கும் பிரசாத செய்முறையும் அமிர்தமாக இருக்கிறது.

    கோதுமை ரவை சுவைத்துச் சாப்பிடலாம். நல்ல மணம்
    வரும்.
    அதுவும் வறுத்து,
    வெல்ல வாசனையும் சேர்ந்தால் சிறப்பு தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... நான் அப்போ அப்போ, அதீதமாகச் சாப்பிடும் வழக்கத்தால், இன்றிலிருந்து இனிப்பு சாப்பிடுவதில்லை என்ற பிரசவ வைராக்யம் எடுத்துக்கொள்வேன். அதைக் கெடுக்கும் விதமாக ஐயர் மெஸ்ஸில் பாயசம் சாப்பிட்டுவிட்டேன். போதாக் குறைக்கு, விசுவாமித்திர்ருக்கு ரம்பா மேனகை போல எனக்கு, போளி செய்முறை (கமலா ஹரிஹரன் மேடம், நேந்திரப் பிரதமன் செய்முறைக் குறிப்பு-மனோ சுவாமிநாதன், என்விரத்த்தை எப்போது கைவிடச் செய்யுமோ எனத் தோன்றுகிறது. இனிப்பு சாப்பிடா இரதம் கடந்த மூன்று நாட்களாக

      நீக்கு
  3. புதுமையான ரெஸிப்பியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கில்லர்ஜி... ஆனால் நீங்கள் இனிப்பு மீது ஆசை வைக்காத்தால் ஒல்லியாவும், நான் இனிப்பில் அதீத ஆசை வைத்திருப்பதால் அதற்கு நேர்மாறாகவும் இருக்கிறேன்.

      நீக்கு
    2. ஆசை இல்லைனு நான் எப்ப சொன்னேன் ? ஆசைப்பட்டால் நல்லது இல்லைனுதானே சொன்னேன்.

      நீக்கு
    3. //ஆசை இல்லை.. ஆசைப்பட்டால்// - தலைவர், எதிர்கால முதலமைச்சர் கமல ஹாசன் சொன்ன, 'கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தால் நல்லது' என்ற வஜனம் போலத் தெரியுதே

      நீக்கு
  4. படங்கள் அத்தனையும் முறையோடு எடுக்கப்பட்டு

    காணவே ருசியாக இருக்கிறது.
    மிக மிக நன்றி மா.
    அன்பு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    சர்க்கரைப் பொங்கல் சிலசமயம்
    அப்படியாகும். இனி சிறப்பாக வரும்.

    பதிலளிநீக்கு
  5. பதிவிட்ட ஸ்ரீராமுக்கும் செய்ய வேண்டும்
    என்ற ஆசையைத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராமுக்கு வாழ்த்துகள்.

      நீக்கு
    2. ஶ்ரீராம், இனிப்பு செய்வதில் ஆசை காண்பித்த மாதிரியோ, செய்முறை எழுதுவதலோ ஆசை காண்பித்த மாதிரி நினைவில்லை.

      நீக்கு
    3. எதற்கு எனக்கு வாழ்த்து என்று புரியவில்லை. ஆயினும் நன்றி.

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  8. அன்னவரம் பிரசாதம் மிக அருமையாக இருக்கிறது.
    படங்கள் எல்லாம் அருமை.
    செய்முறையும் நன்றாக இருக்கிறது.
    அன்னவரம் பிரசாதம் என்று தெரியாமல் சம்பாகோதுமை ரவை பொங்கல் என்று செய்து இருக்கிறேன். இனி அதை செய்தால் அது அன்னவரம் பிரசாதம் என்று சுவாமிக்கு .
    அன்னவரம் கோயிலைப்பற்றி தெரிந்து கொண்டேன், நன்றி.

    //அவர் ஜனவரில ஐ.சி.யூ வில் இருந்தபோது சர்க்கரைப் பொங்கல் செய்து அனுப்பினேன் (அவர் கேட்டதன் பேரில்). சரியா வரலை //
    விரும்பி கேட்ட உணவு சரியாக வரவில்லை என்றால் வருத்தமாய் தான் இருக்கும்.

    மாமனார் அவர்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டது நெகிழ்வு.

    நாம் செய்யும் சமையலை விரும்பி கேட்டு வாங்கி மகிழ்வாய் சாப்பிடுவது மிக பெரிய ஆனந்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.

      பல இனிப்புகளை அவருக்குச் செய்து தந்திருக்கிறேன். (மிகவும் சுத்தமாக... அது அவருக்கு முக்கியம்)

      பாருங்க... சம்பா ரவை சர்க்கரைப் பொங்கல் எனபதைவிட அன்னவரம் பிரசாதம்னு சொல்வது கவர்ச்சியா இல்லை?

      நான் பயணங்களின்போது இனிப்பும் எடுத்துச் செல்வதுபோல நீங்கள் எடுத்துச் செல்வதுபோலத் தெரியலையே... எல்லோரும் இனிப்பை விரும்புவதுல்லையா?

      நீக்கு
    2. அன்னவரம் பிரசாதம் என்பது சிறப்புதான்.இனிப்புகள் எடுத்து வருவான் மகன்
      இந்த தடவை ஹல்தி ராம் சோன்பப்டி எடுத்து வந்தான், கடலைமிட்டாய், பெப்பர்மெண்ட் மிட்டாய் , சீரக மிட்டாய் என்று கிடைக்கும் இனிப்புகளை எடுத்து வருவான். விழா சமயம் வெளியில் போனால் இனிப்புகள் செய்வாள் மருமகள்.

      நீக்கு
    3. எனக்கு சோன்பப்டி ரொம்பப் பிடிக்கும் (கடுமையா வெயிட் போடும்). சமீபத்தில் அடையார் ஆனந்தபவன் ஸ்வீட்டில் 60 சதவிகித டிஸ்கவுண்ட் என்று இங்க சொன்னதால், தட்டை, சோன் பப்டி (இரண்டு வகை).... என்று நிறைய இனிப்பு காரங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தோம். எனக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாக்லேட் சோன் பப்டியும் சாதா சோன் பப்டியும் ரொம்பவே பிடிக்கும்.

      ஹாஹா... எனக்கும் சீரக மிட்டாய், கடலை மிட்டாய் இரண்டுமே ரொம்பப் பிடிக்கும்.

      நாங்கள் யாத்திரை போகும்போது, இரயில் நிலையத்தில் இனிப்புகள் வாங்கிக்கொண்டுதான் வண்டி ஏறுவேன்

      நீக்கு
  9. @ நெல்லை...

    //அது சரி.. நமக்கு இப்போது முக்கியம் இந்தக் கோவில் பிரசாதம்தானே!..//

    நன்றாக இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமையான நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவு அருமை. அன்னவரம் கோவிலைப்பற்றி தெரிந்து கொண்டேன். அந்த கோவில் பிரசாதத்தை நீங்கள் அழகாக படங்கள், செய்முறைகள் தந்து அளித்துள்ளீர்கள். நன்றி.

    நான் இதே போல் கோதுமை ரவை தேங்காய் பாலுடன் பாயாசம் செய்துள்ளேன். இது நன்றாக உள்ளது. பிரசாதத்தை பக்தியுடன் எடுத்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேம்.. கோதுமை ரவை டைஜஷனுக்கு நன்று என்பது என் அனுபவம்.

      அது சரி.. போளியை டன்சோ (அங்கிருந்து எங்க வீட்டுக்குக் கொண்டு கொடுப்பார்கள். அதுக்கு ஒரு சார்ஜ்) மூலம் அனுப்பியிருக்கலாமே.. நீங்க பெங்களூர்தானே

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      ஹா.ஹா.ஹா. அடுத்த தடவை நீங்கள் சொன்ன பக்குவ பிரகாரம் பண்ணும் போது அனுப்பி விட்ட்டால் போச்சு.:)

      நீக்கு
    3. ஸ்ரீராமுக்கும் எனக்கும் கொழுக்கட்டைகள், எனக்கு போளி.... Pending list கூடிக்கொண்டே செல்கிறதே கமலா ஹரிஹரன் மேடம்...

      நீக்கு
  12. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  13. சத்யநாராயண பூஜைக்கு இது தான் பிரசாதம். க்ஷீரா என்போம். குக்கரில் வைப்பதில்லை. பத்து ஆகிவிடும் என்பதால் நிறைய நீரைக் கொதிக்க வைத்து வறுத்த ரவையில் கொட்டிக் கிளறுவோம். கோதுமை ரவை உப்புமா பண்ணுவதில்லையா? அதே போல். பின்னர் நெய்யில் மு.ப.தி.ப. ஏலக்காய், பச்சைக்கற்பூரம் எல்லாம் போட்டு நிவேதனம் பண்ணுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ஷீரான்னம் என்பது கேசரி (கலர்ப்பவுடர் இல்லாமல்) அல்லவோ....

      அது சரி.. குக்கர் எப்படி பத்தாகும்? (அது எவர்சில்வராக இருக்கும் பட்சத்தில்.. சரி சரி... ரப்பர் இருக்கிறது என்பதாலா?)

      நீக்கு
    2. குக்கரில் வேக வைத்தாலே பத்து தான். :)

      நீக்கு
  14. அன்னவரம் பிரசாதம்..இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். கும்பகோணத்தைச் சேர்ந்தவன் என்ற நிலையில் இளம் வயது முதல் கோயில் பிரசாதம் என்றாலே தனி ஆர்வம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜம்புலிங்கம் சார்.

      கும்பகோணக் காரங்க கொடுத்து வைத்தவர்கள் (கொசு, தண்ணீர் பிரச்சனை இல்லைனா). எவ்வளவு கோயில்கள், சரித்திர இடங்கள், உணவு விடுதிகள்.. இனிப்பகங்கள்.

      கொஞ்சம் கொரோனா பயம் போனதும் ஐந்து நாட்கள் கும்பகோணம் வந்து ஆண்டவன் ஆஸ்ரமத்தில் தங்கி கோவில் தரிசனம் செய்யத் திட்டம். அப்போது உங்களையும் கரந்தையாரையும் முடிந்தால் சந்திக்கணும்.

      நீக்கு
  15. அம்ருத்ஸர் பொற்கோயிலிலும் இது தான் முக்கியப் பிரசாதம். அநேகமாய் எல்லாப் பஞ்சாபி சீக்கியரின் கோயில்களிலும் இந்தப் பிரசாதம் மிக முக்கியம். சும்மாவானும் கையை நீட்டி வாங்கக் கூடாது. கொடுக்க மாட்டாங்க. இரண்டு கைகளையும் பிச்சை வாங்குவது போல் நீட்டிக் கொண்டு உடலை வளைத்துக் குனிந்து வாங்கணும். இறைவனின் பிரசாதத்துக்குக் கொடுக்கும் மதிப்பு அது. நாம் உண்ணும் உணவு தினம் தினம் அவர் போட்ட பிச்சை என்பதை நாம் உணரவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்யச் சொல்வார்கள். பொதுவாகவே பிரசாதங்கள் அது விபூதி, குங்குமம் ஆனாலும் சரி, தீர்த்தமானாலும் சரி, துளசியானாலும் சரி இரு கைகளையும் நீட்டி பவ்யமாகவே வாங்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அம்ருத்ஸர் கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று நெடுநாள் ஆசை.. நிச்சயம் நானும் மனைவியும் போகணும். அங்கு உணவு தயாரிக்கும் காணொளிலாம் பார்த்திருக்கிறேன்.

      உணவு, இறைவன் அளிக்கும் பிச்சைதான்.

      நீக்கு
  16. அன்னவரம் ஊர்ப்பெயரும், இது அன்னவரம் பிரசாதம் என்பதும் இப்போத் தான் தெரியும். மற்றபடி இதை நிறையப் பண்ணிச் சாப்பிட்டிருக்கேன். இந்த மாதிரி வெல்லம் போட்டுக் கூடவே தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி வைத்துக் கொண்டு கோதுமை மாவு+மைதா மாவு சேர்த்துப் பிசைந்து கொண்டு சப்பாத்தி போல் மெலிதாக இட்டு உள்ளே பூரணத்தை வைத்து மூடித் தட்டிப் பொரித்து எடுத்தால் சொஜ்ஜி அப்பம். இப்போல்லாம் ரவையில் கேசரி பண்ணி மைதாமாவைப் பிசைந்து அதில் பூரணத்தை வைத்து மூடி தோசைக்கல்லில் போளி மாதிரிப் போட்டு எடுத்துவிட்டு சொஜ்ஜி அப்பம் என்று பெயர் வைத்து விடுகிறார்கள். :((((( க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாது... கோதுமை ரவாவை பூரணமாக வைத்து சொஜ்ஜி அப்பமா? இப்படீல்லாமா ஒப்பேத்தறாங்க?

      இங்க பெங்களூர்ல ச்ரார்த்தத்துக்கு இங்க உள்ள தளிகை செய்பவர்கள், சொஜ்ஜி அப்பம் செய்தால், சுவை சொல்லி மாளாது (சென்னைல யாருக்கும் பண்ணத் தெரியாது).

      நீங்க சொல்லியிருப்பதைப் பார்த்தால், பெண் பார்க்கும் படலத்தில் அவங்க கொடுக்கும் பஜ்ஜி, சொஜ்ஜியைப் பார்த்தே (பெண்ணைப் பார்க்காமல்), ஒருவரை திருமணம் செய்துகொள்ளலாம் இல்லை ரிஜெக்ட் செய்துவிடலாம் என்று சொல்வது போல இருக்கே....ஹிஹிஹி

      நீக்கு
    2. ஒரிஜினல் சொஜ்ஜி அப்பம் கோதுமை ரவையில் செய்வது தான். எங்க பெரியப்பா ச்ராத்தத்திற்குச் செய்யச் சொல்லுவார். திருவல்லிக்கேணி சாமிப்பிள்ளை தெருவில் இருந்தார். நான் நாலைந்து ச்ராத்தங்களில் சாப்பிட்டிருக்கேன். சொஜ்ஜி அப்பம் என்றால் அது தான்! மற்ற யார் செய்தாலும் அந்த ருசி இருந்தது இல்லை. சென்னைல மட்டுமில்லை. பொதுவாகவே சொஜ்ஜி அப்பம் என்றால் என்னன்னே தெரியறதில்லை. :(

      நீக்கு
  17. முன்னரே ஒரு முறை மாமனாருக்காகப் பண்ணின சர்க்கரைப் பொங்கல் விரைத்துக் கொண்டது பற்றிச் சொல்லி இருந்தீர்கள். பொங்கல் பண்ணும்போது அரிசியும், பருப்பும் கரைந்ததும் வெல்லத்தைச் சேர்த்தால் சாதம் விரைக்காது. நீங்கள் அநேகமாகப் பாகு வைத்துக் கொண்டு விடுவதால் சமயங்களில் விரைத்துக் கொள்ளத்தான் செய்யும். சர்க்கரைப் பொங்கல் செய்முறையே பருப்பு வெந்ததும் அரிசியைச் சேர்த்து அரிசி நன்கு குழைந்ததும் வெல்லத்தைச் சேர்ப்பது தான். வெல்லத்தைத் தூள் பண்ணி அரைக் கிண்ணம் தண்ணீரில் போட்டு வடிகட்டினால் தூசி, தும்புகள் வந்துவிடும். அதைச் சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கலாம். பாகு வைத்தால் கொஞ்சம் முன்னே, பின்னே தான் வரும். நாங்க வாங்கும் வெல்லம் கோலாப்பூர் வெல்லம். சுத்தமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ஆச்சு நெல்லையாருக்கு? எந்தக் கருத்துக்குமே பதில் சொல்லவில்லை! முக்கியமாய் எனக்கு! :(

      நீக்கு
    2. முடிஞ்சால் நாளைக்கு வரேன். இன்னிக்கு இவ்வளவு தான். முடியலை! :(

      நீக்கு
    3. நான் வேறு வேலைகளில் மூழ்கிவிட்டேன்.... இப்போதான் நேரம் கிடைத்தது கீசா மேடம்....

      கடைசியாக, ஏன் விரைத்துக்கொள்கிறது என்று கண்டுபிடித்துவிட்டேன். நான் வெல்லத்தைக் கொதிக்கவைக்கும்போது (அதில் உள்ள தூசுகளை வடிகட்டுவதற்காக) சில நேரங்களில் வெல்லத்தை முழுவதுமாக உடைத்து தூளாகப் போடுவதில்லை. ரொம்பப் பெரிய கட்டியையும் போட்டுடுவேன். அது கரைவதற்குள், வெல்லம் கொஞ்சம் சுமார் பாகு நிலைமைக்கு வந்துவிடுகிறது. அதனால்தான் வெல்லப் பாகைச் சேர்த்து, மீண்டும் சாதத்தோடு கொதிக்க வைக்கும்போது விரைத்துக்கொள்கிறது என்று தோன்றுகிறது.

      வாங்க வாங்க..

      நீக்கு

  18. ///பசங்க ரெண்டு பேரும் ஒரு ஸ்பூன் சாப்பிடுவார்கள். அவ்ளோதான். இனிப்பு எது பண்ணினாலும் நானும் மனைவியும்தான் சாப்பிட்டுக் காலி பண்ணணும்//

    நீங்க செய்து தந்தால் காலி பண்ண நாங்க ரெடி நெல்லைத்தமிழன்
    !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் துரை...

      நான் செய்தால், நானே காலி பண்ண ரெடியாக இருப்பேன். பரவாயில்லை.. உங்களுக்கும் கொஞ்சம் தந்தால் போயிற்று...

      நீக்கு
  19. அன்னவரம் குறிப்பு அருமை! வெல்லம் நல்ல வெல்லம் போலிருக்கிறது. இனிப்பின் நிறம் அருமையாக வந்திருக்கிறது. இதையே நேந்திரம்பழ பிரதமன் என்ற கேரள இனிப்பாய் நான் பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன். முக்கியமாக விருந்தினர் வரும்போது பக்க இனிப்பாக இருக்கும். நீங்கள் செய்தது போலவே எல்லாம் செய்து வெல்லப்பாகை ஊற்றி சிறு தீயில் அது கொதிக்கும்போது துண்டுகளாக அரிந்த நேந்திரம்பழங்களையும் கெட்டியான தேங்காய்ப்பாலையும் ஊற்றி கொஞ்சம் தாராளமாக ஏலப்பொடியையும் தூவ வேண்டும். ஒரு சில நிமிடங்கள் கொதித்தால் போதும், நேந்திரம்பழ பிரதமன் தயார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ சாமிநாதன். விரைவில் நேந்திரம்பழ பிரதமன் செய்துபார்க்கப் போகிறேன். நீங்க எழுதியிருப்பதிலேயே அது சூப்பராக இருக்கும்னு தோணுது.

      நான் எப்போதுமே கோலாப்பூர் வெல்லம் மட்டும்தான் வாங்குவேன். அதுதான் சுத்தமாக இருக்கும். மற்றபடி நம்மூர் வெல்லம்லாம். ஒரே கெமிக்கல் போட்டு பாலிஷ் அடித்து மேக்கப் போட்டிருப்பாங்க.

      நீக்கு
  20. இங்கே பிரசாதம் என்றால் நீயூஜெர்ஸியில் உள்ள பாலாஜி கோவில்தான் ஞாபகத்திற்கு வரும் அங்கு செய்து தரும் பொங்கல் போல நான் இதுவரை எங்கும் சாப்பிட்டது இல்லை பல தடவை கோவிலில் உள்ள குருக்களிடம் கேட்டும் வீட்டோம் அவர் பதில் சொல்வது சாமிக்காக செய்வதால் டேஸ்ட் தானாகவே வந்துவிடும் என்பதுதான் அடுத்தாக இங்குள்ள லட்டும் அருமையாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் பிரசாதத்தின் சுவை எப்போதுமே சொல்லி மாளாது மதுரைத் தமிழன். நிறைய கோவில்களில் வெகு சுமாராகச் செய்திருந்தாலும், நன்றாகத்தான் இருக்கும்.

      பல வருடங்களுக்கு முன்பு, திருப்பதி பாலாஜி கோவில் பல தடவை வெண் பொங்கல் பிரசாதம் (கோவிலின் பிரசாதம்) சாப்பிட்டிருக்கேன். ஒரு தடவை எங்களுக்காக நிறைய வந்தது. அதன் சுவை...சொல்லிப் புரியவைக்க முடியாது. சூப்பரோ சூப்பர்.

      நீக்கு
  21. புதிதாக இருக்கிறது... செய்முறை விளக்கம் அருமை...

    பதிலளிநீக்கு
  22. அன்னவரம் பிரசாதம் நன்று. அன்னவரம் சென்றிருக்கிறேன். அழகான கோவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. அந்தக் கோவிலுக்கே சென்றிருக்கிறீர்களா தில்லி வெங்கட்? உங்களுக்கு ப்ராப்தம் இருந்திருக்கிறது.

      நீக்கு
  23. பிரசாதம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. மஸ்கட் கிருஷ்ணன் கோவிலிலும் பெரும்பான்மையான நாட்களில் இதைத்தான் பிரசாதமாக தருவார்கள். பட்டர் பேப்பரையும் தாண்டி கைகளில் நெய் வழியும். வீட்டில் செய்யும் பொழுது கோதுமை ரவை வெல்ல கேசரி என்பேன். கமலா ஹரிஹரனைப் போல தேங்காய் பால் விட்டு பாயசமும் செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஸ்கட் பல முறை வந்திருந்தும் அங்குள்ள கோவிலுக்குச் சென்றதில்லை. ஆனால் துபாய் கோவில்களில் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன் (எங்க பஹ்ரைன் கிருஷ்ணன் கோவிலிலும்தான்)

      என் பையனுக்கு, வேக வைத்த கோதுமை ரவையில் ஜீனி, பால் விட்டுத் தந்தால் சாப்பிடுவான். (அது என்ன ரசனையோ... ஆனால் சின்ன வயசில் எனக்கு, சுட சாதம், அதன் மேல் ஜீனி, பால் விட்டுச் சாப்பிடப் பிடிக்கும். என் அம்மா, நான் கேட்கும்போதெல்லாம் தருவார்கள்... அம்மாவின் அன்புக்கு என்ன கைம்மாறு செய்துவிட முடியும்?)

      நீக்கு
    2. அம்மா அப்பாவை நினைக்கும்போது,

      உவத்த நீர் போல எந்தன் உற்றவர்க்கு ஒன்றுமில்லேன்

      என்ற திருமாலை பாசுர வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
  25. எங்க ஊர் உம்மாச்சி பிரசாதம். ஈசியா பண்ணுவதற்கு உகந்த மாதிரி படிப் படியா ஃபோட்டோ போட்டு எழுதிய விதம் நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி..... உம்மாச்சி பிரசாதங்களிலேயே எது சூப்பர் என்று ஒவ்வொருவரும் நினைக்கறாங்க என்று தெரிந்துகொள்ள ஆசை.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!