ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர் (வெங்கடகவி) : 1700 - 1765 காலத்தில் வாழ்ந்தவர். மன்னார்குடியில் பிறந்து ஊத்துக்காடு (திருவாரூர் மாவட்டம்; வலங்கைமான் தாலுக்கா ) ஊரில் வாழ்ந்தவர். இவர் இயற்றிய பாடல்கள் யாவுமே கண்ணனை நம் முன்னே கொண்டுவந்து நிறுத்தும்.
அதில் ஒன்று : கானடா இராகத்தில் அமைந்த இந்தப் பாடல்.
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா...
நிலைபெயராது சிலைபோலவே நின்று...
நிலைபெயராது சிலைபோலவே நின்று,
நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா என் மனம்
அலைபாயுதே... கண்ணா...
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே...
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலெனக்களித்தவா
கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?
இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?!
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா...!
இந்தப் பாடலை - சமீபத்திய இசைக் கலைஞர் சூர்யகாயத்ரி அவர்கள் பாடியிருப்பதை இங்கே பார்த்து, கேட்கவும் :
விசுவாமுத்திர முனிவர் ராமனைப் புகழ்ந்து பேசும் கட்டம் கம்பராமாயணத்தில் வருகிறது.
அப்போது கம்பர் வண்ணம் என்ற ஒற்றைச் சொல்லை எடுத்து ஓவியம் தீட்டியிருப்பார்.
"இவ்வண்ண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனி இந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவ துண்டோ
மைவண்ணத் தரக்கி போரில்
மழை வண்ணத்தண்ணலே நின்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்"
பொருள் :
இவ்வண்ணம் = இந்த மாதிரி
நிகழ்ந்த வண்ணம் = நிகழ்ந்த பின். அகலிகை சாப விமோசனம் பெற்ற பின்
இனி. = இனிமேல்
இந்த உலகுக்கு எல்லாம் = இந்த உலகத்திற்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி = உய்யும் வழி அன்றி
மற்று ஓர் = வேறு ஒரு
துயர் வண்ணம் = துயரங்கள்
உறுவது உண்டோ? = நேர்வது உண்டோ? (கிடையாது)
மை வண்ணத்து = மை போன்ற கரிய நிறம் கொண்ட
அரக்கி =அரக்கி (தாடகை)
போரில்.= சண்டையில்
மழை வண்ணத்து அண்ணலே! = மழை முகில் போன்ற கரிய நிறம் கொண்ட அண்ணலே
உன் = உன்னுடைய
கை வண்ணம் = கை வண்ணமாகிய வில்லாற்றலை
அங்குக் கண்டேன் =அங்கே கண்டேன்
கால் வண்ணம் = சாப விமோசனம் தரும் திருவடியின் வண்ணத்தை
இங்குக் கண்டேன் = இங்கே கண்டேன்
என்று கம்பர் எழுதியப் பாடலில் எட்டுமுறை வண்ணம் என்ற சொல் வந்திருக்கும்.
படம்: பாசம் (1962)
இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி
குரல்: P சுசீலா, P B ஸ்ரீனிவாஸ்
வரிகள்: கண்ணதாசன்
———————–
பாடல் வரிகள்:
(கருப்பு & வெள்ளைப் படமாக இருக்கும் பாடல் காட்சியை - ஒரு மாற்றத்திற்காக இங்கே வண்ணப்படமாக - நானும் ஒரு வண்ணம் சேர்த்து !! - உங்களுக்காகக் கொடுத்துள்ளேன்!! )
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..
பதிலளிநீக்குகுறள் நெறி வாழ்க..
வாழ்க குறள்நெறி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க நலம். வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குவாங்க, வணக்கம்.
நீக்குஇன்றைக்கு இனிய பதிவு..
பதிலளிநீக்குஅமுத விருந்து..
அருமை.. அருமை..
நன்றி.. நன்றி..
நீக்கு+ நன்றி!
நீக்குஊத்துக்காடு ஐயா அவர்களது பாடல் 40 வருடங்களுக்கு முன்பே மனப்பாடம்...
பதிலளிநீக்குஸ்ரீ பித்துக்குளி முருகதாஸ் அவர்களது குரலில் மனம் மயங்கிக் கிடக்கும்..
அதெல்லாம் இனிய வசந்த காலம்..
முதன் முதலில் பித்துக்குளி முருகதாஸ் பாடலை (ஊத்துக்காடு) கேட்டபோது மனம் ஒப்பவே இல்லை. ட்ரெடிஷனல் முறையில் அவர் பாடுவதில்லை. ஆனால் கேட்கக் கேட்க, அதுவே மனதில் பதிந்துபோனது. அது பக்தியுடன் உளம் உருகிப்பாடும் வகையான ரெண்டிஷன். கேபி சுந்தராம்பாள் அவர்களின் கடைசி தினத்துக்கு முந்தைய நாள், பித்துக்குளி அவர்களைக் கூப்பிட்டு சில மணி நேரங்கள் பக்திப்பாடல்களைத் தனக்காகப் பாடும்படிக் கேட்டுக்கொண்டிருந்தார். பித்துக்குளி அவர்களும் சில மணி நேரங்கள் பாடியபிறகு விடைபெற்றுச் சென்றார். மறுநாள் கேபிஎஸ் அவர்களும் மறைந்துவிட்டார்.
நீக்குகண்ணா கண்ணா..என்று ஆரம்பித்து ஆடாது அசங்காது பாடல் மிக மிக இனிமையாக இருக்கும்.
நீக்குஉபரி தகவல் ஒன்று... பித்துக்குளி முருகதாஸை அப்பா நட்பு பிடித்து வைத்திருந்தார். தஞ்சையில் எங்கள் வீட்டுக்கு ஒருமுறை அவர் வந்திருந்தார்.
நீக்குநாகையில் ஒவ்வொரு வருடமும் பித்துக்குளி முருகதாஸ் விடிய விடிய குமர கோவிலில் பாடல்கள் பாடுவார். ஒவ்வொரு வருடமும் (1960 களில் ) நானும் என் அம்மாவும் தவறாது போய் உட்கார்ந்து கேட்போம்.
நீக்குபித்துக்குளி முருகதாஸ் அம்பத்தூரில் நாங்க இருந்த தெருவில் தான் தெருவின் மேற்குப் பக்கம் கடைசியில் குடி இருந்தார். அவர் வீட்டுக்கு நேர் எதிரே ரேஷன் கடை. வலப்பக்கம் வள்ளீசன் வீடு, மௌலி வீடு இரண்டும் இருந்தது. மௌலி எல்லாம் காலி பண்ணிக்கொண்டு போக வள்ளீசன் மட்டுமே 2000 வரையோ என்னமோ இருந்தார்.
நீக்குமுருகதாஸ் பாடல்களை எல்லாம் பக்கத்தில் உட்கார்ந்து கேட்டிருக்கோம். ஹரிதாஸ், சிவானந்த விஜயலக்ஷ்மி, ஶ்ரீவாஞ்சியம், சேங்காலிபுரம், வீணையிலேயே சாம கானம் இசைத்த சந்தான கோபாலாச்சாரியார், கிருபானந்த வாரியார் என அந்தக் காலமே ஓர் பொன்னான காலம்.
நீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குபித்துக்குளி முருகதாஸ் எங்கள் சின்னத்தாத்தாவிற்கு(லால்குடி ரமணி ஐயர்)ரொம்ப க்ளோஸ். லால்குடி மில் எங்கள் தாத்தா வீட்டில் மாதக்கணக்கில் தங்கியிருக்கிறாராம். தாத்தா அவரை முருகா என்பார்.
நீக்குபத்தாம் வகுப்பு -
பதிலளிநீக்குதமிழ்ப் பாடவேளை..
கம்ப ராமாயணத்தில் நடத்த வந்த ஐயா அவர்கள் பால் வண்ணம் பருவம் கண்டேன் - எனும் கவியரசரின் பாடலை எடுத்தாண்டு வகுப்பை கலகலப்பாக்கிய நிகழ்வு நினைவுக்கு வருகின்றது..
நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்..
ஆம்.
நீக்குஅதே, அதே!
நீக்குஎத்தனை கோணம் எத்தனை பார்வை - எனும் படத்தில் இளையராஜா அவர்கள்,
பதிலளிநீக்குஅலை பாயுதே கண்ணா... பாடலை பயன்படுத்தியிருப்பார்.
(KJ ஜேசுதாஸ் - S. ஜானகி).
கேட்டிருக்கிறேன். இனிமையான குரல்கள், பாடல்.
நீக்குமுல்லை மலர் மேலே - போன்ற பாடல்களை இயற்றுவதற்கும் இசையமைப்பதற்கும் இப்போதைய காலகட்டத்தில் யாருமே கிடையாது.
பதிலளிநீக்குஇளையவர்களும் இத்தகைய பாடல்களில் மயங்கிக்கிடக்காதது காலத்தின் கோலம்தான்
அவரவர்களுக்கு கிடைப்பது அவரவர்களின் பூர்வபலன்!
நீக்குஆம்.
நீக்குகம்பராமாயணப் பகுதியைப் படித்தபோதே பால்வண்ணம் பாடல் மனதில் ஓடியது. கவிஞர் அவ்வளவு படித்தவர். என்ன ஒரு திறமை. எல்லாம் இறைவனின் கொடை
பதிலளிநீக்குஅதே.. அதே...
நீக்குக ரா படித்தவர்களை பார்த்தாத்தால் பொறாமை. காரணம் நான் இன்னும் படித்ததில்லை (மனப்பாடப் பகுதி தவிர!)
@Sriram, :(
நீக்குஅன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநோய் இல்லா சுக வாழ்வு கிடைக்க இறைவன்
அருளவேண்டும்.
பால் வண்ணம் பாடல் வந்த புதிதில் லயித்துக் கேட்டது
நீக்குஇன்னும் நினைவில்.
திண்டுக்கல்லில் இந்தப் படம் வந்த போது பார்க்க
அனுமதி இல்லை:)
வாங்க வல்லிம்மா... வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்கு//திண்டுக்கல்லில் இந்தப் படம் வந்த போது பார்க்க அனுமதி இல்லை:)//
அச்சச்சோ... ஏன்? அப்போ தியேட்டருக்கு யாருமே வரவில்லையா?!!!
நீங்க வேற!!!. தலைவர் படத்துக்கு அப்பா மறுப்பு சொல்வார்.:(
நீக்கு:>))
நீக்குஎங்கள் வீட்டில் கூட அப்படி ஒரு கட்டுப்பாடு இருந்தது. சிவாஜி மற்றும் பக்திப் படங்கள் ஓ கே - ஆனால் எம்ஜியார் படங்கள் பதின்ம வயது வரை பார்க்க அனுமதி கிடையாது!!
நீக்குஅதுவும் படப் பாடல்கள் ஒலிபெருக்கிகளில் அலறும் போது அப்பாவைப் பார்த்தால் சிரிப்பாக வரும்.குறிப்பாகப் “பரிசு” படப் பாடல்கள். இப்போது இருந்தால் என்ன செய்வாரோ!
நீக்குஆமாம், எனக்கும் எம்ஜார் படங்கள் பார்க்க அனுமதி கிட்டியதில்லை. வெண்ணிற ஆடை படமும் வந்தப்போப் பார்த்ததில்லை. அதன் பின்னர் கல்யாணம் ஆகி ராஜஸ்தான் போனப்புறமா ராணுவத் திறந்தவெளி தியேட்டரில் போட்டப்போப் பார்த்தேன் முதல் முறையாக! :)))))
நீக்கு:((
நீக்குஅந்தக்காலத்தில் இதெல்லாம் ஜகஜமுங்கோ! "பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்" பாடலை என்னையும் அறியாமல் பாடிட்டு! அன்னிக்குச் சாப்பாடு கிடைக்குமானே சந்தேகம் வந்தது! :))))) அந்தப் பாடலைப் பாடுவது தப்புனு அது வரை தெரியாது. கண்டித்த பின்னரே அதை ஏன் பாடக் கூடாது என்பதைப் பள்ளித் தோழிகளிடம் விசாரித்து அறிந்து கொண்டேன். :))))
நீக்கு:))))))))))))))
நீக்கு:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))புதிய பறவை,
நீக்குஉன்னை ஒன்று கேட்பேன் ' பாடலை
பள்ளிக்கூட இடைவேளைகளில் நான் பாடுவது
வழக்கம்.
வீட்டில் பாடக்கூடாது. அப்பா கோபிக்க மாட்டார்.
சங்கடப் படுவார்.:(((((
:))) கட்டுப்பாடுகளுடன் வளர்ந்ததால்தான் நாம் நல்ல நிலையில் இருக்கின்றோம்!
நீக்கு'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டுமென்றான்..' சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே..' போன்ற பாடல்களை பாடக் கூடாது என்பார்கள் என்று என் பெரிய அக்கா சொல்லியிருக்கிறார். எங்களுக்கு அப்படிப்பட்ட கண்டிப்பும் இல்லை. ஆனால் பொதுவாகவே சினிமா பாடல்களை கேட்கவும், பாடலும் ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் உண்டு.
நீக்குஇப்போல்லாம் புரியுதோ இல்லையோ சின்னக் குழந்தைகள் கூட இந்தப் பாடல்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்காகப் பாடுகின்றனர். இதைப் பற்றிக் குழுமங்களில் வாத/விவாதங்கள் கூட நடந்தன. வலைப்பதிவுகளிலும் பலரும் ஆக்ஷேபம் தெரிவித்து எழுதி இருந்தோம். :))))))
நீக்கு//கட்டுப்பாடுகளுடன் வளர்ந்ததால்தான் நாம் நல்ல நிலையில் இருக்கின்றோம்!// அப்போ இப்போக் கட்டுப்பாடுகளுடன் வளர்பவர்கள் இல்லைங்கறீங்களா? அல்லது கட்டுப்பாடுகளே தளர்ந்து விட்டனவா? புதன் கேள்வி!
நீக்குகீதா சாம்பசிவம், கமலா ஹரிஹரன் இவர்களைக் கண்டு நாட்களாகிறது. இருவருடைய நலத்துக்கும் இறைவன் துணை
பதிலளிநீக்குகீதா அக்கா நேற்று கூட வந்தாரே... நேற்று பானு அக்காதான் காணோம்!
நீக்குகமலா அக்காதான் நீண்ட நாட்களாய்க் காணோம். அவர் மகன் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதாய்ச் சொல்லியிருந்தார்.
ஓ. நான் தான் பார்க்கவில்லையா. ஸாரி மா.
நீக்குஆமாம் புதன் கேள்வி பதிலில் கூட பார்த்தேனே.
இரண்டு நாட்கள் முந்தி பானுவிடம் பேசினேனே. நலமாக இருக்கிறார்.
நீக்குவேலை அதிகமாக இருக்கும். குளிரும் அதிகம்.
நானும் கமலா ஹரிஹரனைப் பார்த்து நாளாச்சு. ரேவதியைக் குழுமத்தில் பார்க்க முடிகிறது. அவர், சுஜாதா, ஏகாந்தன், அப்பாதுரை, கோமதி ஆகியோர் அடிக்கும் லூட்டி, நடுநடுவில் கேஜிஜி அவர்களின் வெர்டில்! எனக் கலக்கறாங்க எல்லோரும். நான் ஒரு பார்வையாளர் மட்டுமே!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஎன்ன சொல்கிறார்கள் கீதா சாம்பசிவம் புரியவில்லையே!
நீக்குபரவாயில்லை. அது நீங்க இல்லை. கோமதி சங்கர் என்னும் மதுரைக்கார அக்கா. அவங்களும் மேலாவணி மூல வீதியில் எங்க வீட்டுக்கு எதிர்சாரியில் தான் இருந்தாங்க. நான் பள்ளியில் படிக்கையில் அவங்க காலேஜ் முடிச்சுட்டாங்கனு நினைக்கிறேன். அவருடைய அத்தை பிள்ளை எனக்கு மாமா பிள்ளை. ஹிஹிஹி, தலை சுத்துதா? அவங்க ஜி.எஸ். என்னும் பெயரிலேயே எ.பி.குழும வாட்சப்பில் இருக்காங்க. என் பெயரைப் பார்த்துட்டு சந்தேகப்பட்டு என்னைக் கேட்டு நான்/நான் தானானு நிச்சயப்படுத்திக் கொண்டாங்க. :)))))
நீக்குடெக்சாசில் "ஆஸ்டின்" நகரில் பிள்ளையுடனோ/பெண்ணுடனோ இருக்காங்க. விபரம் கேட்டுக் கொண்டதில்லை. :))))
நீக்குஎ.பி.குழும வாட்சப்பில் இல்லையே நான் என்று நினைத்து கொண்டேன்.
நீக்குவிவரத்திற்கு நன்றி கீதா.
கம்ப ராமாயணத்தை முதலில் பள்ளிக்கூடத்திலும்
பதிலளிநீக்குபின்பு பியுசி யிலும் கற்றோம்.
அன்றைய தமிழ் ஆசிரியர்கள் தமிழியும் நம்மையும் நேசித்தார்கள்.
கம்பரையும், புகழேந்தியையும், ஒட்டக் கூத்தரையும்
ரசிக்க வைத்தார்கள்.
கம்பரின் மொழியில் ராமனையே தரிசித்தோம்.
''கை வண்ணம் தன்னை நான் அங்கு கண்டேன்
கால் வண்ணம் தனை நான் இங்கு கண்டேன்...
மை வண்ண எழில் மேனி மலர்''
சி எஸ் ஜெயராமன் குரலில் சம்பூர்ண ராமாயணம்
பாடல்.
அருமையான பாடலைக் கொடுத்த கண்ணதாசனுக்கும்
இங்கே கேஜி சாருக்கும் நன்றி.
அலை பாயுதேவை மஹராஜபுரம் சந்தானம்
நீக்குகுரலில் கேட்டு லயித்திருக்கிறேன்.
பின் பாம்பே ஜயஷ்ரீ.
ஊத்துக்காடு பாடல்கள் அனைத்தும் ரத்தினம்.
உருகி உருகிக் கண்ணனை நம் முன் நிறுத்தி விடுவார். என்ன ஒரு பக்தி.
அவரைப் பற்றி இவ்வளவு விவரம் இப்போது
தான் தெரியும்.
மிக மிகா நன்றி ஸ்ரீராம்.
நான் யேசுதாஸ் குரலில்தான் முதலில் கேட்டேன் என்று ஞாபகம்.
நீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்கு''வெள்ளியலை மேலே
பதிலளிநீக்குதுள்ளும் கயல் போலே
அல்லி விழி தாவக் கண்டேன் என் மேலே
வெண்ணிலவை பூமியின் மேலே
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
மின்னல் உருமாறி மண் மேலே
கன்னியைப் போலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே''
மருதகாசியின் பாடல்களை நேற்று தான் ரசித்துக்
கொண்டிருந்தேன்.
அவர் எழுத ஜி.ராமனாதன் இசை அமைக்க
ஒரு பொன்னுலகமே உருவானது அந்தக் காலத்தில்.
என்ன ஒரு புலமை!!! இவர்களை ரசிக்கும் வண்ணம்
நமக்குத் தமிழ் கற்றுத் தந்த ஆசிரியர்களுக்கு நம்
வணக்கங்கள் என்றும்..
வணங்குவோம்.
நீக்குசிவாஜி, பத்மினி ஜோடி .டி எம் எஸ் சுசீலாம்மா குரல்களில்
பதிலளிநீக்குலயித்து நடித்த காட்சி. அந்தப் படகுதான் இப்படி அப்படி சாய்கிறது!!!
பயமாக இருக்காதோ!!
படகுல போனால் தண்ணீர் இறைக்க தெளிக்க வேண்டுமா. ஹா ஹா.
அநேகமாக குளோஸ் அப் காட்சிகளில் செயற்கை ஆட்டங்களாக அமைத்து படம் எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
நீக்குஆமாம் மா. நானும் படகுகளில் பயணித்திருக்கிறேன்.
நீக்குஇந்த மாதிரி ஆட்டம் கிடையாது:)
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே என்பதில் வண்டு சுழன்று மலரை மொய்ப்பதை போலவும், வெள்ளி அலை மேலே துள்ளும் கயல் போலே என்னும் வரிகளில் மீன் துள்ளிக் குதிப்பது போலவும் ஜி.ராமநாதன் ஸ்வரங்கள் அமைத்திருப்பார் என்று குன்னக்குடி வைத்தியநாதன் ஒரு பேட்டியில் கூறினார். அதன் பிறகு கவனித்து வியந்தேன்.
நீக்குஜி.ராமநாதனின் சகோதரர் மகன்கள் தானே மோகன் வைத்யாவும், ராஜேஷ் வைத்யாவும்?
நீக்குமோகன் வைத்யா அம்பத்தூருக்கு அருகே வைஷ்ணவி நகரில் தான் இருந்தார். அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் அடிக்கடி பார்ப்போம். ஆனால் இருவரும் மாமன், மருமகன் எனக் கேள்வி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்.
நீக்குஅலைபாயிதே பாடல் கேட்கும் போதெல்லாம் சில நினைவுகள் வரும். என் பள்ளி தோழியும் என் மாமா பெண்ணும் மிக அற்புதமாக இந்த பாட்டுக்கு நடனம் ஆடுவார்கள்.
பதிலளிநீக்குகர்நாடக இசை மேதைகள் எல்லோர் குரலிலும் இந்த பாடலை கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன்.
பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் பாடியதை நேரில் கேட்டு இருக்கிறேன்.
இந்த குழந்தையும் நன்றாக பாடினார்.
மற்ற பாடல்கள் எல்லாம் மிக அருமையான தொகுப்பு.
கேட்டு மகிழ்ந்தேன்.
நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
நீக்குகடைசி பாட்டு கறுப்பு வெள்ளை படம்
பதிலளிநீக்குபாசம் படத்தில் எல்லா பாடல்களும் மிக நன்றாக இருக்கும்.
கருப்பு வெள்ளை படம்தான் - ஆனால் இங்கே நாங்கள் பகிர்ந்துள்ளது, செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட பாடல் காட்சி.
நீக்குஅலைபாயுதே பாடலின் பிறப்பை இன்றுதான் அறிந்தேன்.
பதிலளிநீக்குசூரிய காயத்திரி இன்னும் சிறப்புறட்டும்.
கானடா ராகத்தில் அமைந்த "பாட்டும் நானே பாவமும் நானே" பாடலை நேற்று உல்டா வகையில் எழுதினேன்.
கானடா - காணடா எது சரி ?
//வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினா//
மருதகாசியாரின் பெண் வர்ணனையின் சிறப்பான வரிகள் இவை எனக்கு மிகவும் பிடித்தவை.
கம்பராமாயணம் என்று தொடங்கும் போதே இந்தப் பாடலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன் சரியாக வந்தது.
// கானடா ராகத்தில் அமைந்த "பாட்டும் நானே பாவமும் நானே" பாடலை நேற்று உல்டா வகையில் எழுதினேன்.
நீக்குகானடா - காணடா எது சரி ?//
கானடா ராகம்.
காணடா : கட்டளை
மேலும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல் கானடா இராகம் அன்று. கௌரி மனோகரி ராகம் என்று நினைக்கிறேன்.
கானடா ராகத்தில் அமைந்த "பாட்டும் நானே பாவமும் நானே" பாடலை நேற்று உல்டா வகையில் எழுதினேன்.//
நீக்குகில்லர்ஜி இந்தப் பாடல் கௌ அண்ணா சொல்லியிருப்பது போல் கௌரிமனோஹரி ராகம்
கீதா
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம்.
நீக்குசிறு வயதில் கர்நாடக சங்கீதம் பயின்ற போது, கற்றுக்கொண்டு பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று! சுதா ரகுநாதன் மிக அருமையாக பாடியிருப்பார். மயக்கும் ராகங்களில் கானடாவும் மோகனமும் எப்போதும் ஒன்றுக்கொன்று மிஞ்சி விடும் தன்மையுடையது. அதே கானடாவைத்தான் தங்கள் குரலில் குழைத்து டி.எம்.செளந்திரராஜனும் சுசீலாவும் ஒருவருக்கொருவர் மிஞ்சும் வண்ணம் பாடியிருப்பார்கள்! இரண்டு பாடல்களும் சின்ன வயதிலிருந்து கூடவே இணைந்திருந்த பாடலக்ள்! அருமையான பாடல்கள் தேர்வு!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅருமையான பாடல்கள்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇங்கே வந்ததுமே சூர்யா காயதிரியின் குரலில் "அலைபாயுதே!" பாடல் மூலம் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி தொடர்ந்து வந்த பாடல்களில் அதிகரித்துக் கடைசியில் கம்பராமாயண ஒப்புவமையில் மனம் மயங்கிக் கருத்தொழிந்து போனேன். :)))))
பதிலளிநீக்குஆஹா!! நன்றி.
நீக்குஇந்த வாரம் தேர்ந்தெடுத்த பாடல்கள் அனைத்துமே ஓர் அற்புதமான காலத்தை உருவாக்கிய நேரம். கொஞ்சும் தமிழில் இசைக்கலைஞர்களின் குரலும் பின்னணி இசையின் சேர்க்கையும் சேர்ந்து ஓர் உன்னத உலகையே சிருஷ்டித்த நேரம். அதிலும் முல்லை மலர் போல பாடல்! ஆஹா! எல்லாமே அடிக்கடி கேட்டவை தான்.
பதிலளிநீக்குஆம், உண்மைதான்.
நீக்குஊத்துக்காடுக்கு 2010 ஆம் ஆண்டில் போயிருந்தப்போ எங்க உறவினரான மூர்த்தியின் வீட்டுக்கருகே இருந்த வேங்கடகவியில் இல்லம் இருந்த இடம் இப்போது காலிமனையாகக் காட்சி அளித்தது. அதை அவங்க சொந்தக்காரங்க யாரோ வாங்கி நினைவு இல்லம் எழுப்பப் போவதாகச் சொன்னார்கள். காளிங்க மர்த்தனம் ஆடும் கண்ணனின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
பதிலளிநீக்குஆம்.
நீக்குபார்த்து,கேட்டு,ரசிக்கும் வண்ணம்,அழகான,இனிமையான பதிவு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅட! புதுசா ஒரு பகுதி! ராகம் சொல்லி அதுக்கான பாடல்...கௌ அண்ணா நானும் சூரியகாயத்ரி பாடிய பாடல்கள் கேட்பதுண்டு. சூரியகாயத்ரி என்றில்லை குல்தீப் பாய் அறிமுகப்படுத்தும் அவரது மாணவ மாணவிகள் எல்லோரது பாடல்களும் கேட்டதுண்டு. நல்ல ஒரு ஆசிரியர். குழந்தைகளும் அருமையாகப் பாடுபவர்கள்.
பதிலளிநீக்குமுல்லை மலர் மேலே பாட்டு கானடாவா தர்பாரி கானடாவா ன்னு ஒரு பட்டிமன்றம் வைச்சா நல்லாருக்கும்னு தோன்றுகிறது! ஹாஹாஹாஹா இங்கில்லை இசை மேடையில்! இசை வித்தகர்கள் எப்படி அனலைச் பண்ணுகிறார்கள் என்று பார்க்கத்தான்! தெரிந்துகொள்ளத்தான்.
சாருலதா மணி இதை ஸ்வரம் சொல்லி ராகா ஜெர்னி ல இந்தப் பாட்டை தர்பாரிகானடான்னு சொன்னாங்க. எப்படி என்றும். எங்க வீட்டுல இரு இசை வித்தகிகள் புகுந்த வீட்டில் என் கோ சிஸ்டர் குடும்பமே இசைக் குடும்பம். பிறந்தவீட்டில் என் மாமி. இவர்களும் சொன்னது தர்பாரி கானடான்னு. ஆனால் கானடான்னு அடிச்சு சொல்றவங்களும் இருக்கிறார்கள்.
பேசாம இசையமைப்பாளர்களே சொல்லிவைச்சிருக்கலாம் எதுல அமைச்சாங்கன்னு! ஹாஹாஹா
எதுவா இருந்தால் என்ன நாம் ரசிப்போம். நான் ரசிக்கும் பாடல் இப்பாடல். ஊத்துக்காடு அவர்கள் பற்றிய தகவல்கள் சிறப்பு.
கீதா
கானடா ராகம்தான். தரபாரி கானடாவில் அமைந்த பாடல்கள் என்றால், 'சின்னஞ்சிறிய வண்ணப்பறவை' - குங்குமம் படப்பாடலும், ' சிவசங்கரி - சிவானந்தலஹரி' - ஜகதலபிரதாபன் படப்பாடலும் - இந்த இரண்டிலுமே மேலே மேலே சஞ்சாரம் வரும் - கானடா ராகத்தில் அப்படி வராது.
நீக்குஆமாம் கானடாவில் மேலே மேலே வராது ...ஆனால் அதைத்தான் இந்த முல்லை மலர் மேலே இந்த மேலே வில் தைவதம் கொண்டு வந்திருப்பார் இசையமைப்பாளர் என்று சொன்னாங்க அதனால்.
நீக்குதர்பாரி கானடாவுக்கு இன்னொரு நல்ல உதாரணம் கோவர்த்தன கிரிதாரா. சேஷு இதை மிக மிக அருமையாகப் பாடியிருப்பார்.
திரைப்பட பாடலில் மலரே மௌனமா வும் நல்ல உதாரணம்
கீதா
கௌ அண்ணா இந்தப் புது பகுதியை நான் மிகவும் ரசிக்கிறேன். ராகம் சொல்லி திரை இசைப்பாடல் சொல்வது.
பதிலளிநீக்குநான் முன்பு எங்கள் தளத்தில் எழுத நினைத்தேன். மேலோட்டமாகத் தொடங்கினேன். ஆனால் புரிந்து கொண்டு அதைப் பற்றிக் கருத்துகள் அலல்து நல்ல தகவல்கள், எப்படி அந்த திரைப்பாடல் அந்த ராகம் என்ற விளக்கங்கள் கிடைப்பது அரிது என்பதால் எழுதவில்லை.
இங்கு அதைக் கண்டு மகிழ்ச்சி.
கீதா
நன்றி.
நீக்குஇரண்டாவது பாடலும் அருமையாகப் பொருந்திப் போகிறது. வண்ணம் என்பதைப் பார்த்ததும் மனதில் தோன்றிய பாடல் பால் வண்ணம் என்பதே....மிகவும் ரசித்த பாடல், எல்லாம் சிலோன் ரேடியோதான். வீட்டை விட பஸ்டான்ட் டீக்கடைகளில் பேருந்திருக்குக் காத்திருக்கும் சமயத்தில்.
பதிலளிநீக்குகீதா
ஹா ஹா - ஆமாம்!
நீக்குஊத்துக்காடு அவர்களின் பாடல்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கும்.
பதிலளிநீக்குஅலைபாயுதே, ஆடாது அசங்காது வா பாடல்கள் எல்லாம் நான் முதலில் கேட்டது பித்துக்குளி முருகதாஸ் வழியாக. கோயிலில் பாடல்கள் போடுவாங்களே அப்ப. அவர் லயித்து லயித்துப் பாடுவார். குரல் கணீர்க் குரல். நாம் மிகவும் ரசித்ததுண்டு.
அதன் பின் என் மாமி வழியாக... திருவனந்தபுரம் ம்யூஸிக் அகடமியில் இசை பயின்றவர் கச்சேரி செய்யும் அளவு திறமை. ஆனால் அப்போதைய காலகட்டத்தில் அது சாத்தியமாகவில்லை.
அப்புறம் மகாராஜபுரம் சந்தானம்....என்ன ஒரு குரல் அவருக்கும்!! அவர் ஊத்துக்காடு அவர்களின் பாடல்கள் ஆல்பம் உண்டு மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடி.
கீதா
முதலில் மகாராஜபுரம் ச பாடல்தான் தேடினேன். அப்புறம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சூர்யகாயத்ரி பாடியதைப் பகிர்ந்தேன்.
நீக்குகமலா கைலாசநாதன் உங்களுக்கு சொந்தமா?
நீக்குமஹாராஜபுரம் குரலில் எனக்கு ,"ஆடாது அசங்காது வா!" பாடல் ரொம்பப் பிடிக்கும். அடுத்து "போ! சம்போ! ஸ்வயம்போ!" என்னும் தயானந்த சரஸ்வதி பாடல்.
நீக்குகீதாக்கா ஹைஃபைவ்!! நானும் அதே அதே...
நீக்குமகாராஜபுரம் குரலில் போ சம்போ கேட்டுவிட்டு மற்றவர்கள் பாடியதை ரசித்தாலும் மகாராஜபுரம் பாடியது மனதில் ஆழமாகப் பதிந்து போனது.
அதுவும் மகாரஜபுரமும் எம் எஸ் வி இசையும் பின்னணியில் அந்த ஆல்பம் கேட்டிருப்பீங்க கீதாக்கா. ஹையோ அது செமையா இருக்கும்
கீதா
கமலா கைலாசநாதன் உங்களுக்கு சொந்தமா?//
நீக்குஜெகே அண்ணா இது யாருக்கான கேள்வி!!!! கௌ அண்ணாவுக்கா எனக்கா?
எனக்கு என்றால் இல்லை. யார் என்பதும் தெரியவில்லை
கீதா
இப்போத் தான் அந்த ஆல்பம் பழசாகிப் பயனில்லாமல் போச்சு. நிறையக் கேட்டிருக்கேன். கேட்டிருக்கோம்.
நீக்குபழைய பாடல்கள் . வாசகர்கள் பதில்கள் மூலம் பல தகவல்களும் அறிந்து கொண்டோம்.
பதிலளிநீக்குராகம் பற்றிய அறிவு கிடையாது. ஆனால் பாடல்களை ரசித்தேன். பழைய பாடல்கள் ஜெம்! மீண்டும் கேட்டு ரசித்தேன் மிக்க நன்றி கௌதம் ஜி.
பதிலளிநீக்குதுளசிதரன்
தேர்ந்தெடுத்து பகிர்ந்த பாடல்கள் அனைத்துமே பிடித்தவை. ஒவ்வொன்றாக கேட்கவேண்டும். வெள்ளி பாடல்கள் தொடரட்டும்.
பதிலளிநீக்கு