திங்கள், 21 மார்ச், 2022

சௌ சௌ தோல் துவையல் - சியாமளா வெங்கட்ராமன் ரெஸிபி

 


நாம் சௌசௌ வாங்கினால் அதன் தோலை சீவி விட்டு உள்ளே உள்ள காயை நறுக்கி சாம்பார் அல்லது பொரியல் செய்வோம். 

ஆனால் தோலியை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் தோலில்தான் நிறைய சத்துக்கள் உள்ளது எனவே அதை வைத்து நாம் துவையல் செய்யலாம் அது எவ்வாறு செய்வது என்பதை  பார்ப்போம்


 தேவையான பொருட்கள் : 

 சௌசௌ.......................3

 உளுத்தம் பருப்பு...........2 டேபிள் ஸ்பூன்

 காய்ந்த மிளகாய்.........5

 பெருங்காயத்தூள்......1 டீஸ்பூன்

 தேங்காய்த்துருவல்....2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய்.................1டேபிள் ஸ்பூன்

 செய்முறை: 

முதலில் சௌசௌவை  நன்றாகக் கழுவி விட்டு,  அதன் தோலை சீவி எடுத்துக் கொள்ள வேண்டும். 


ஒரு வாணலியில்1 டேபிள் ஸ்பூன்  எண்ணெய் விட்டு அதில் உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் போட்டு, பொன்னிறமாக வறுக்க வேண்டும். 

பிறகு அதை தனியே எடுத்து வைத்துக்கொண்டு,  அதே வாணலியில் சௌசௌ தோல் போட்டு வதக்க வேண்டும். 

நன்கு வதங்கியதும் அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு அதனுடன் தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து மைய அரைக்க வேண்டும்.

இப்பொழுது சௌசௌ துவையல் ரெடி இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு அல்லது எண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட சூப்பரோ சூப்பர்.  இதற்கு தொட்டுக்கொள்ள, மோர்க் குழம்பு அல்லது வத்தக்  குழம்பு சரியான காம்பினேஷன். 

மேலும் இது இட்லி தோசைக்கு சரியான சைட் டிஷ்.  இதை செய்வதும் சுலபம் பொருளும் வீணாகாது சத்தும் நிறைய கிடைக்கிறது

 இதை அனைவரும் செய்து  சாப்பிட்டு மகிழுங்கள். 

(பின் குறிப்பு : தோல் நீக்கப்பட்ட சௌ சௌ பகுதியை உங்கள் வழக்கம் போல் சாம்பார் அல்லது பொரியல் செய்யப் பயன்படுத்திக்கொள்ளலாம். )

= = = =

39 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    என்றும் ஆரோக்யம் நிறைந்திருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. சௌ சௌ துகையல் பார்க்கவே நன்றாக
    இருக்கிறது.

    அனேகமாக எல்லாக் காய்கறிகளின் தோலுக்கும் நன்மை செய்யும்
    சத்து உண்டு என்று தான் கேள்விப் பட்டிருக்கிறேன்.
    பீர்க்கங்காய்த் தோல்
    செய்தும் இருக்கிறேன்.
    அப்போது மீனாக்ஷி அம்மாள் சமைத்துப் பார் காலம்:)
    திருமதி சியாமளாவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. ஆமாம் வல்லி, பீர்க்கங்காய்த் தோல் துவையலும் நன்றாக இருக்கும். ஆனாலும் அதைக் கொஞ்சம் கீறி வாயில் போட்டுப் பார்த்துடணும். சமயங்களில் கசக்கும். புடலையின் குடல் பகுதி, (ஹிஹிஹி) பறங்கிக்காயின் குடல் பகுதி ஆகியனவும் துவையலுக்கு நன்றாக இருக்கும். எந்தத் துவையல் அரைத்தாலும் கொஞ்சம் புளி வைப்போம். தேங்காய்ச் சட்னி இட்லி, தோசைக்குப் பண்ணுவதற்குக் கூடப் புளி கொஞ்சம் போல் (சுண்டைக்காய் அளவு) வைப்பது உண்டு.

      நீக்கு
  3. சௌசௌ துவையல் எங்கள் உணவில் உண்டு. பெரும்பாலும் தோல் உபயோகிப்பதில்லை.

    சௌசௌ எனக்கு மிகவும் பிடித்த காய். பெரும்பாலும் கூட்டுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு சௌ சௌ - அலர்ஜி - உடனேயே running nose guaranteed !!

      நீக்கு
    2. எனக்கு அதன் sweetness பிடிக்கும். சௌசௌ தேங்கா அரைச்ச கூட்டு பருப்பு குழம்பு என் ஆல்டைம் ஃபேவரைட். நானும் ஒருநாள் இதை மெனுவாகச் செய்வேன் +இன்னொரு டிஷ் பூரி மசால்)

      நீக்கு
    3. வணக்கம் அனைவருக்கும்.

      இன்றைய திங்கள் சமையலான பெ. கத்திரிக்காய் துவையல் செய்முறை படங்கள் அனைத்தும் அருமை.

      இதில் சகோதரர் நெல்லைத் தமிழர் சொல்வது போல், தோல் நீக்கிய சௌ சௌ போட்டு, பாசி பருப்புடன் தேங்காய், மி.வத்தல், சீரகம், சேர்த்து கூட்டு,இல்லை, து. ப போட்டு சாம்பார் (குழம்பு) மிகவும் நன்றாக இருக்கும். நான் எப்போதுமே இதன் தோலை துவையல் செய்து (சாதத்துடன் கலந்து சாப்பிட) உள்ளிருக்கும் காயை பொடியாக நறுக்கிக் கொண்டு பா.ப போட்டு இதனை கூட்டும் செய்து விடுவேன். அன்றைய பொழுதுக்கு இவை இரண்டிற்கும் பொருத்தமாக இருக்கும்.

      பறங்கிக்காய் தோல், புடலையின் நடுவில் இருக்கும் பாகங்கள், வாழைக்காய் தோல் என எல்லாமே துவையலாக செய்து விடலாம். (எந்தெந்த காய்களில் எந்தெந்த இடங்களில் என்னென்ன சத்து உள்ளதென யார் கண்டார்கள் என்ற பழைய நாகேஷ் காமெடி நினைவுக்கு வருகிறது.:))) பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. சௌசௌ எங்க வீட்டில் வாங்கவே மாட்டார். எனக்குப் பிடித்ததுனும் கிடையாது. பிடிக்கலைனும் இல்லை. வாங்கி வந்தால் கூட்டுப் பண்ணுவேன். சில சமயங்களில் பஜ்ஜி போடுவதும் உண்டு. சப்பாத்திக்கு மிக்சட் வெஜிடபுள் கறி பண்ணும்போதும், வெஜிடபுள் ரைஸ் செய்யும்போதும் சௌசௌ கொஞ்சம் போல் சேர்ப்பேன். வாழைக்காய்த் தோல் கறி கூடப் பண்ணுவார்கள்.

      நீக்கு
    5. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

      ஆமாம்.. இதில் பஜ்ஜி கூட போடலாம். ஆனாலும் பஜ்ஜி என்றால் வாழைக்காய் (காயில்) போல் வேறு எதுவும் நல்ல ருசி வராது என்பது என் எண்ணம். குட மிளகாயை ஒரளவுக்கு சேர்த்துக் கொள்ளலாம்.மற்றபடி வெங்காயம் எந்த வகையிலும் ஈடு தரும். அதே போல் இந்த பெ. கத்திரி மற்ற காய்களுடன் பேதம் காட்டாமல் சேர்ந்து கொள்ளும் இனத்தை சேர்ந்தது. கறி, கூட்டு அவியல் என எதனுடன் சேர்த்தாலும் ஒத்துக் கொண்டு போகும்.

      இதை தொடர்ந்து சாப்பிட்டால் யானைக்கால் வியாதி வரும் என யாரோ (உண்மையா, வதந்தியா இல்லை, மற்ற காய்களின் பொறாமை பேச்சுக்கு அடி பணிந்தா:)) எனத் தெரியவில்லை.) இதைப் பற்றி பயமுறுத்தியும் இன்றளவில் இதன் விற்பனை எங்கெங்கும் ஜோராகத்தான் நடந்து கொண்டுள்ளது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    6. எனக்கு இந்தக் காய் சாப்பிட்டால் யானைக்கால் வரும் என்பது புதிய செய்தி. கேட்டதில்லை. ஆனால் வட மாநிலங்களில் முன்னெல்லாம் கிடைக்காது.

      நீக்கு
    7. இந்த கமலா ஹரிஹரன் மேடம் இந்த மாதிரி புரளியைக் கிளப்பிவிட்டுட்டாரே.

      நான் பஹ்ரைனில் இருந்தபோது, கிலோ 140 ரூ வீதம் இது வெள்ளிக்கிழமை மார்க்கெட்டில் ஃப்ரெஷ்ஷா கிடைக்கும். காய்கறி கடைக்காரர், ஃபிலிப்பினோஸ் இதனை விரும்பி வாங்குவாங்க என்று சொல்லுவார்.

      பெங்களூரில் 45 ரூபாய்க்கும் வாங்கியிருக்கேன், கிலோ 10 ரூபாய்க்கு சீரழிவதையும் பார்த்திருக்கிறேன். இப்போ 20 ரூ, ஆனாலும் இப்போ, கோஸ் கிலோ 10 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

      நான் அனேகமா வாரம் இரண்டு முறை சௌசௌ சாப்பிடுவேன். அதனைக் கெடுப்பதற்காக கமலா ஹரிஹரன் மேடம் சதித்திட்டம் தீட்டுகிறாரோ?

      நீக்கு
    8. //சௌசௌ எங்க வீட்டில் வாங்கவே மாட்டார்.// - என்ன அநியாயம் இது கீசா மேடம்... அதுக்கு ஏத்த மாதிரி யூடியூபுகளில் பெரிதாக சௌசௌ வைத்து செய்முறைகள் இல்லை போலிருக்கு. இருந்திருந்தால் உங்களைச் செய்யச் சொல்லியிருப்பார்...ஹா ஹா

      நீக்கு
    9. அது என்னமோ தெரியாது! வாழைக்காய் பஜ்ஜி என்றாலே எனக்கு போராக இருக்கும். சாப்பிடவே மாட்டேன். நேர்ந்தால் அலுப்புடன் ஒன்றிரண்டு எடுத்துப்பேன். இங்கே வீட்டில் அனைவருக்கும் வாழைக்காய் பஜ்ஜினா உயிர்.

      நீக்கு
  4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  5. என்ன அவர்களைக் காணோம்? மதியம் வந்துதான் காலை மாலை மதிய வணக்கம் சொல்வார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹாஹாஹா! இப்படி எல்லோரையும் எங்கே எங்கே எனத் தேட வைப்பதும் த்ரில்லிங்கா இருக்கே! :)))) ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்.

      நீக்கு
  6. கீர வும் இதைச் செய்வார்கள் என்று நினைவு.

    இங்க யாராவது கச்சக்காய் கரேமது சாப்பிட்டிருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஆமாம் செய்வதுண்டு நெல்லை.

      //இங்க யாராவது கச்சக்காய் கரேமது சாப்பிட்டிருக்கீங்களா?//

      ஓ யெஸ்!!

      கச்சக்காய் என்பது பிஞ்சு வாழைக்காய். பொரியல் நல்லாருக்கும் ஊரில் இருந்த போது வீட்டில் வாழை உண்டு..ஸோஒ இதுவும்

      அது போல மாமரமும் உண்டு இல்லையா....மாம்பிஞ்சு கச்சல்ன்னு சொல்வதுண்டே. மாவடு ஊறுகாய் போடுவது எல்லாருக்கும் தெரியும்தான்

      மாம்பிஞ்சு/கச்சல் பொரியல் சாப்பிட்டிருக்கீங்களா? அது ஒரு சுவையுடன் நல்லாருக்கும்

      கீதா

      நீக்கு
    2. ஏத்தங்காய் பிஞ்சு தோலோடயே நம் வீட்டில் செய்வதுண்டு. அது ஊரில் இருந்தவரை. தற்போது பிஞ்சு எதுவும் கிடைப்பதில்லை.

      சென்னைல நம் உறவில் திருமணம் வாழைக்குலை ரொம்ப பிஞ்சு வாழை அதை அப்புறம் பொரியல் செய்தேன் அங்கிருந்த போது அப்புறம் பிஞ்சு கிடைக்கவில்லை

      கீதா

      நீக்கு
    3. ஏத்தங்காய் தோல் பொரியல் கூடச் செய்வதுண்டு நல்லாருக்கும்.

      கீதா

      நீக்கு
    4. வயிற்றுப் புண்ணுக்குக் கச்சல் வாழைக்காய் ரொம்ப நல்லது. எங்க வீட்டில் அடிக்கடி வாங்குவோம். இங்கே அதிகம் வேக வைத்துக் கொட்டிய கறி தான். அம்மா வீட்டில் கச்ச வாழைக்காய் போட்டுக் கூட்டுக் குழம்புனு சிவப்புக் காராமணியும் ஊற வைச்சுப் பச்சை மொச்சை இருந்தால் அதுவும் போட்டுச் செய்வார். அன்னிக்கு அப்பளம் தே.எ.யில் பொரிப்பாங்க. வீடே மணக்கும்.

      நீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. எங்க நாட்டுல இதை chayote என்று அழைப்போம். இந்தியா போன்ற வெளிநாடுகளில் அதை செள செள என்று அழைப்பார்கள் ,செள செள பொரியல் , கூட்டு , துவையல் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த ஒரு காய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே உள்ளது நான் போட்ட கருத்து இன்னொருவரின் ஐடியில் வெளிவந்து இருக்கிறது?

      நீக்கு
  9. எங்க நாட்டுல இதை chayote என்று அழைப்போம். இந்தியா போன்ற வெளிநாடுகளில் அதை செள செள என்று அழைப்பார்கள் ,செள செள பொரியல் , கூட்டு , துவையல் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த ஒரு காய்

    பதிலளிநீக்கு
  10. சௌ சௌ தோல் துவையல் செய்முறை சூப்பர். ஃபைனல் ப்ராடக்ட் படம் காணவில்லையே!!!

    சௌ சௌ தோல் துவையல் ஆஹா நம் வீட்டில் சௌ சௌ வாங்கினால் கண்டிப்பாகச் செய்துவிடுவதுண்டு. அது போல பீர்க்கங்காய் தோல் துவையல், மாங்கா தோல் கூட விட மாட்டோமாக்கும்!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டிலேயே காட்மாண்டுவில் இந்தக் கொடி இருந்தது காய்கள் ஏராளமாக காய்க்கும் பிஞ்சுக் காயாக எடுத்து வதக்கி இதே முறையில் புலியும் துளி சேர்த்து செய்வது மோர் குழம்பு சாம்பார் கூட்டு யாவையும் வழக்கம் மோர்க்கூட்டு அவியல் மாதிரி பிரமாதமாக வரும் சமையலுக்கு ஏதுவான நல்ல காய்

      நீக்கு
  11. பானுக்கா எங்கே காணும்? இந்தியா வர தேதி ஆகிடுச்சா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றும் வந்திருக்காங்க பார்த்துவிட்டேன்.

      கீதா

      நீக்கு
  12. நானும் செய்வேன், ஆனால் புளியும் வறுத்து அரைப்பேன்.
    இவர்கள் மறந்து விட்டார்களா? அல்லது வேண்டாம் என்று விட்டு விடார்களோ தெரியவில்லை.
    துவையல் படம் போட்டு இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  13. கச்சக்காய் பொரியல், நானும் செய்வது உண்டு. எல்லோருக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  14. சௌ சௌ தோலில் துகையல் நாங்களும் செய்வதுண்டு.

    சுவையான குறிப்புகள்.

    பதிலளிநீக்கு
  15. நான் போட்ட கருத்து வரவில்லையா?

    பதிலளிநீக்கு
  16. நாங்களும் துவையல் பொரியல் செய்வோம். துவையல் எனது மகனுக்கு பிடித்தமானது எங்கே கண்டாலும் வாங்கி வருவார் .இப்பொழுது வேலை நிமித்தம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் பொதுவான லீவுகள் வந்து சந்தித்தால்தான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!