ஞாயிறு, 27 மார்ச், 2022

பூமகள் ஊர்வலம்

 

KGY Raman எடுத்த படங்கள் தொடர்கின்றன. 

சோலை வழிச் சாலை 



நாம் மூவர் 

வட்ட மேஜை மாநாடு 



பாக்கு ?? 


எட்டிப் பார்க்கும் பூக்கள் 


கொத்தான மலரல்லவோ ! 




மஞ்சள் அழகிகள் !



பட்டன் பூ ?


நம் பக்கம் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்ட மஞ்சள் அழகி 


மீண்டும் செவ்வரளி !


(தொடரும்) 

53 கருத்துகள்:

  1. தானம் தவம்இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்கா தெனின்..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க..வாழ்கவே.

      வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.

      நீக்கு
  3. பாவைக்குப் பூ வைத்து
    பூவைக்கும் பா வைத்த
    தமிழே.. தமிழே..
    தண்டமிழே..

    பூவின் இதழில்
    தேன் வைத்தாய்!..
    சரி.. சரி..
    பாவையின் இதழிலும்
    ஏன் வைத்தாய்?..
    விதியா.. சதியா!..

    தொடரும் என்று வேறு போட்டு விட்டார்கள்!..
    அப்போது நிச்சயம் சதிதான்!..

    பதிலளிநீக்கு
  4. செவ்வரளி பொன்னரளி
    காட்டரளி வீட்டரளி
    கவிதைக்குள் வந்ததென்றால்
    வெறும் புரளி!..

    செவ்வந்தி ரோஜா முல்லை
    அவள் இல்லாத உலகம்
    அழகாக இல்லை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்தேன்
      நீங்கள் சொன்ன
      சொல்லை!

      நீக்கு
    2. நடிகை ரோஜா தெரியும். செவ்வந்தி யார்? முல்லை யார்? இந்தக் கேள்வியே மனதில் பெரும் தொல்லை

      நீக்கு
    3. நெல்லையின் லொள்ளு தாங்கலைப்பா

      கீதா

      நீக்கு
  5. ஆயிரம் மலர்களே மலருங்கள்
    அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்

    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்கியம் நிறை வாழ்வு தொடர இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான பாடலை நினைவுக்குக் கொண்டு வரும் தலைப்பு.
    அழகு மஞ்சளும்
    இனிய பசுமையும்,
    உள்ளம் கவர் கொத்தலர் பூங்குழல்களும்

    மலரும் நடை பாதையில் வசந்தன் வந்து விட்டது.
    மிக அருமை. திரு.ராமனுக்கு நன்றி.
    வாசகங்கள் மிக இனிமை.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  9. அழகான பூக்கள். அங்கே கீழே உதிர்ந்து கிடப்பவை கீழிருந்து மேலாகப் பத்தாவது படம் பாக்குகள் தான். அம்பத்தூர் வீட்டில் இருந்தது. என்னோட அப்பா பார்த்துட்டுக் கார்ப்பரேஷன் காரங்களுக்குத் தெரிஞ்சால் பணப்பயிர்னு வரி போடுவாங்க. அனுமதி வாங்கியே வைச்சுக்கணும் என்றார். என்னமோ தெரியலை. சுமார் பத்து, பனிரண்டு வருடங்கள் இருந்தன. பின்னர் பட்டுப் போய்விட்டது. காரணம் தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாக்கு அல்ல இது வேற ஏதோ பெயர் தெரியாத மரம் பழம் கிட்டத்தட்ட உள்ளே பெரிய சைஸில் இருக்கிறது கசப்பு ருசியாக இருக்கிறது பழமும் கூட.

      நீக்கு
    2. அதென்னமோ கருத்துச் சொன்னேன். அப்படியே ஸ்வாஹா! என்ன ஆச்சுனே தெரியலை. மேலே உள்ளவை பாக்குத்தான் என்றே தோன்றுகிறது. உள்ளே பழம் துவர்ப்பும் கசப்புமாகத் தான் இருக்கும். உரிச்சுக் காய வைக்கணும்.

      நீக்கு
    3. அப்பாடா! இதுவானும் வந்ததே! மற்றவை எங்கே? தெரியலை.

      நீக்கு
  10. அழகான குளிர்ச்சியான தண்ணென்ற சோலைப் பாதை! இயற்கையான இந்தக் குளிர்ச்சிக்கு முன்னால் ஏசி எல்லாம் ஒண்ணுமே இல்லை.

    பதிலளிநீக்கு
  11. இத்தனை அழகான, குளிர்ச்சியான கண்ணைக் கவரும் குடியிருப்பு வளாகம் சென்னையில் இருக்க வாய்ப்பே இல்லை. சென்னையில் ஒரு அங்குல இடம் கிடைச்சாலும் அதிலும் கட்டிடம் கட்டுப் பணம் பண்ணவே பார்ப்பார்கள். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் ஹிராநந்தினி வளாகம் இதனைப் போன்றதே (சென்னையில்). நிறைய வளாகங்கள் இப்படி இருக்கின்றன. ஸ்ரீரங்கத்தில் இடப் பற்றாக்குறையினால் கிடைத்த இடத்தில் முழுமையாக வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள்.

      நீங்களும் மாடியேறி சுற்றும் முற்றும் பார்த்தால் தென்னஞ்சோலைகளும் வயல்களும் தெரிந்திருக்கலாம். காவிரி படம் போட்டே பல வருடங்களானது போலத் தெரியுதே எனக்கு. முன்பெல்லாம் அவ்வப்போது காவிரி படம், அங்கிருந்து மலைக்கோட்டை என்று பட்டும் படாமலும் படங்கள் எடுத்து பதிவு தேற்றுவீர்கள். அதெல்லாம் இப்போ செய்வதில்லையே

      நீக்கு
    2. இப்போ பெங்களூரில் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வந்தால் சல்ட்ரியாக இருக்கிறது. இனி போகப் போக சென்னை காலநிலை ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை

      நீக்கு
    3. சென்னை தான் சோழிங்க நல்லூர்...

      நீக்கு
    4. கீதாக்கா நான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே போன ஞாயிறு பதிவிலேயே..சென்னை என்று. முன்பு இதே வளாகப் படங்கள் வந்திருக்கின்றன. நான் சோழிங்கநல்லூர் என்று சொல்ல நினைத்தேன் ஆசிரியரே பதில் சொல்லியிருக்கிறார்.

      கீதா

      நீக்கு
    5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஶ்ரீரங்கத்திலும் இப்படியான வளாகங்கள் இருக்கின்றன. எங்க குடியிருப்பு வளாகம் இப்படி இல்லை தான். இடப்பற்றாக்குறை எல்லாம் சென்னையில் தான். இங்கே இல்லை. ஒரு வேளை இப்போ சமீபத்துப் ப்த்துப் பனிரண்டு ஆண்டுகளில் இவை எல்லாம் வந்திருக்கும். அதிலும் ஊருக்குள் இருக்க வாய்ப்பெஎ இல்லை. சோழிங்க நல்லூர்னு சொல்லி இருக்காரே! அது போல அல்லது ஓ.எம்.ஆர். அல்லது ஈசிஆர் எனப் பெயர் பெற்ற சாலைகளில் இருக்கலாம். காசா க்ரான்ட் இப்போ அது போலக் கட்டுவதாகக் கேள்வி.

      நீக்கு
    6. ம்ம்ம்ம்ம், நீங்க அந்தப் பக்கமெல்லாம் போயிருப்பீங்க போல தி/கீதா. நான் சோழிங்க நல்லூர் எங்கேனே தெரியாதவள். :( ஆனாலும் அந்தச் சுத்தம், இது தமிழ்நாடா என மீண்டும் வியக்க வைக்கிறது. நம்ம மக்களும் பொறுப்போடு இருப்பாங்க போல!

      நீக்கு
    7. நெல்லை பங்களூர் சென்னையைப் போல ஆகிக்கொண்டிருக்கிறது. வாக்கிங்க் முடித்து வந்தால் வேர்க்கத்தான் செய்யும்!! பனிக்காலத்திலும் கூட கொஞ்சமேனும் வேர்க்க வேண்டுமாம் அப்போதுதான் நாம் சரியா பயிற்சி செஞ்சிருக்கிறோம் என்று அர்த்தமாம் ஒரு மருத்துவர் சொன்னது!!!!

      என்றாலும் பகலில் ஓகே. வெளியில் சென்றால் சூடு ரொம்பவே தெரிகிறது. இடையில் மழை பெய்தது. இப்படி வெயில் வந்தால் மழை வந்துவிடும். பங்களூரில். சரியாக மாலை நேரங்களில் பெய்யும். 34 டிகிரி இப்ப, அதுவும் மாலை ஆகும் போது வீட்டிற்குள் சூடு இறங்கும் போது தெரிகிறது.

      கீதா

      நீக்கு
    8. அக்கா இப்படியான வளாகங்கள் சென்னையில் நிறைய இருக்கின்றன. ஆமாம் சோழிங்கநல்லூர் மட்டுமில்லை சென்னையில் பல இடங்கள் போயிருக்கிறேன் கீதாக்கா. நவராத்திரி வைபவம் , உறவினர் வீட்டு விசேஷம் என்று. ஆமாம் சென்னையை விட்டுக் கொஞ்சம் வெளியேதான். ஆனால் சோழிங்கநல்லூர் எல்லாம் வெளியே என்று சொல்லக் கூடாது என்பாள் என் தோழி. ஹாஹாஹா.

      கீதா

      நீக்கு
    9. @கீர (க்கா) - பெங்களூரில் இன்னும் இரண்டு அல்லது இரண்டரை மாதங்கள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். அப்புறம் மழை,குளிர் என்று அடுத்த 9 மாசங்கள் ரொம்ப நல்லா இருக்கும். சென்னைல, வருஷத்துக்கு 8 மாசம் ரொம்ப சூடா இருக்கும். மீதி 4 மாசம் பழகிடும்.

      நீக்கு
    10. சென்னையின் இப்போதைய வெக்கை தாங்க முடியாததாக இருக்கிறது.

      நீக்கு
  12. பதில்கள்
    1. @ அன்பின் நெல்லை..

      // நடிகை ரோஜா தெரியும். செவ்வந்தி யார்? முல்லை யார்? இந்தக் கேள்வியே மனதில் பெரும் தொல்லை.. //

      நடிகை என்றில்லை.. ரோஜா, செவ்வந்தி, முல்லை - என்பதெல்லாம் கூடப் படித்த பிள்ளைகள்..

      நீக்கு
    2. ரோசா, தாமரை, செவ்வந்தி, முல்லை, கனகம் (கனகாம்பரம்), மருதாணி, செம்பருத்தி, மல்லிகை, பவழமல்லி என்றெல்லாம் பூவின் பெயர் பூவையருக்கு இருப்பது சிறப்புதான்.

      நீக்கு
    3. பட்டன்ரோஸ், அரளி, டேலியா என்றெல்லாம்...?

      நீக்கு
  13. பூமகள்(கள்) ஊர்வலம் மனதில் பல பழைய பாடல்களை நினைவூட்டுகிறது. படங்கள் எல்லாம் மிகவும் அழகாகத் தெளிவாக எடுக்கப்பட்டிருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  14. படங்கள் வாவ்!!! ரொம்ப அழகாக எடுத்திருக்கிறார் ஆசிரியர்!! அட்டகாசமான படங்கள்.

    ரசனையோ ரசனை!!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. அந்த பாக்கு படம் முன்பும் வந்திருக்கிறது..நாங்கள் மூவர் மலர் படமும் வந்திருக்கிறது முன்பு....இதே வளாகப் படங்களும் இதே போன்று

    கீதா

    பதிலளிநீக்கு
  16. காகிதப் பூ (நாம் மூவர்) நடுவில் இருக்கும் வெள்ளை பூ மட்டும் மிக அழகாய் எடுத்து இருக்கிறார்கள்.அனைத்து பூக்களும், மலர்கள் ஊர்வலம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. @ ஸ்ரீராம்..

    // பட்டன்ரோஸ், அரளி, டேலியா என்றெல்லாம்?...//

    இன்றைய நவநாகரிக
    நாரீமணிகள்!...

    பதிலளிநீக்கு
  18. பூமகள் ஊர்வலம் தொடரட்டும். அனைத்து படங்களையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!