புதன், 23 மார்ச், 2022

ஆர்கானிக் என்பதன் உண்மையான பொருள் என்ன?

 

நெல்லைத்தமிழன் : 

தீபம் எண்ணெய் என்று ஏமாற்றுவித்தை காண்பிப்பதைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?

# அதைக் காலில் பூசிக்கொண்டால்  கொசு கடிப்பதில்லை என்று கண்டு பிடித்திருக்கிறோம்.  லேபிளை மாற்றி கொஞ்சம் விலை கூட வைத்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கலாம்.

$ தீபம் ஏற்ற ஒரு நூற்றாண்டுக்கு முன் இலுப்பை எண்ணெயை உபயோகித்தார்கள் என்கிறார்கள். சமையலுக்கு உதவாததால் விலை குறைவு. குளிக்க உபயோகப்படுத்தும் அரப்புத்தூள்  செய்யும்போது வரும் உப பொருள்.

இலுப்பை எண்ணெய் புகைக்கு கொசு வராது என்கிறார்கள். 

& தீபம் எண்ணெய் சில சமயங்களில் வாங்கியது உண்டு. நறுமணம் கொண்ட தீபம் எண்ணெய் உபயோகிக்க நன்றாக இருந்தது. இப்போ ரைஸ் பிரான்ட் எண்ணெய் (தவிட்டு எண்ணெய் ) உபயோகிக்கிறேன். 

"எம்ஜிஆர் மிளகு ரசம் சாப்பிட எங்கள் வீட்டுக்கு போலீஸ் பந்தோபஸ்தோடு வந்தார்' என்றெல்லாம் ஒய் ஜி மஹேந்திரன் பேட்டி அளிப்பது, ஒய் ஜி பார்த்தசாரதியையே சிறுமைப்படுத்துவது என்பது கூடத் தெரியாததாலா?

# அவர், ' எம்ஜிஆர் அவர்களது குடும்ப நண்பர் , -- மிளகு ரசம் சாப்பிட வருவார் என்று இல்லை - வரும்போது மிளகுரசம் உரிமையோடு கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்' என்பதை சொல்லுகிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் . அப்படிச் சொன்னால் அது எப்படி ஒய் ஜி பார்த்தசாரதியை சிறுமைப் படுத்துவதாக ஆகும் ! 

கல்யாணத்துக்கு முன்பான pre marriage shooting (theme park outside placesக்கு இருவரும் சென்று professional photographer உதவியுடன் வீடியோக்கள் எடுத்துக்கொள்வது) பற்றி உங்கள் மற்றும் வாசகர்களின் அபிப்ராயம் என்ன? (வாசகர்கள் கவனத்திற்கு ) 

$ ஒருக்கால் கல்யாணத்துக்கு பின் சுமக்கப் போகும் பாரத்தினால் வரும் மாறுதலுக்கு முன் நினைவுகள்..

# நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.  ஏனென்றால் கல்யாணத்துக்கு முதல் நாள் அன்று மணமகன் காலமாகி விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம்.  இது எப்படிப்பட்ட பிரச்சினையை ஒரு பெண்ணுக்கு  உண்டாக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும். அதுவும் சகுனம் ராசி போன்ற மூட நம்பிக்கைகள் கொண்ட சமுதாயத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் விபரீதத்தை உண்டாக்க முடியும்.

தினமும் செய்யும் வேலைகளில், bபோர் என்று எண்ண வைப்பவை எவை?

$ ஒரு காலத்தில் பல் தேய்ப்பது கூட bபோராகத்தான் இருந்தது.

# எனக்கு துணிமணிகளைத்  துவைத்துக் காயப்  போடுவது சற்று அலுப்பான விஷயம். அடுத்ததைச் சொன்னால் வியப்பாக இருக்கும். வேதாந்தப். புத்தகங்கள் படிப்பது..ஆனாலும் வேண்டாம் என்று விட முடியவில்லை.

மாஸ்க் போட்டுக்கொண்டிருப்பது அசௌகரியமாகவும் அன்ஹெல்தியாகவும் ஃபீல் பண்ணியிருக்கீங்களா?

$ வீட்டுக்கு வெளியே அதிகம் போகவில்லை. மாஸ்க் அணியும் கட்டாயம் 2 வருடங்களில் 16 மணி மட்டுமே.  வீட்டுக்குள் இருக்கும்போது வருபவர்களிடம் எதுவும் கேள்வி கேட்க ஆரம்பித்ததால் சமூக இடைவெளி இரட்டிப்பு நிச்சயம்!

# யாரேனும் அருகில் வந்தால் தவிர நான் மாஸ்க் போட்டுக் கொள்வது இல்லை.  காரணம் மாஸ்க் போட்டுக் கொண்டால் எனக்குச் சற்று மூச்சுத் திணறும்.

& இல்லை. நம் ஆரோக்கியமும், அக்கம்பக்கத்தவர் ஆரோக்கியமும் முக்கியம் அல்லவா !  

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

மில்ஸ் அண்ட் பூன் எத்தனை வயது வரை படித்தீர்கள்?

# ஒன்று கூட படித்ததில்லை. பெண்கள் தான் சுவாரஸ்யமாகப் படிப்பார்களோ என்னவோ?

$ நீங்கள் சொல்வது போல் பெண் குழந்தைகள்தான் மில்ஸ் & பூன், famous 5 எல்லாம் படிப்பதைப் பார்த்திருக்கிறேன். 

& ஹி ஹி - அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்! அந்தப் புத்தகங்களை கையால் கூட தீண்டியது இல்லை.  

ஒரு தலைமுறை ரசிக்கும் சினிமா பாடல்களை அடுத்த தலைமுறையினர் ரசிப்பதில்லை, ஆனால் சாஸ்திரீய சங்கீதத்திற்கு இந்த தலைமுறை இடைவெளி இல்லையே.. எப்படி?

# சினிமா பாட்டுக்கு மனோதர்மம் தேவையில்லை.  கார்பன் காபி மாதிரி அப்படியே பாடினால் ரசிக்கப் படுகிறது.  சாஸ்திரிய சங்கீதம் அப்படி அல்ல.  அதில் கற்பனை மனோதர்மம் இவற்றுக்கு இடம் உண்டு  என்பதால் கேட்கும்போதெல்லாம் புதிய ரசனை. நான் சினிமா பாட்டு பிடிக்காத கட்சி.

மனதிற்கு பிடித்த வேலைகள் செய்யக் கூட சில சமயங்களில் அலுப்பாக இருக்கிறதே என்ற காரணம்?

# அலுப்பு என்பதற்கு பல காரணங்கள் இருக்கும் .  சோர்வு, வேறு எதோ கவலை இந்த மாதிரி.

உறவில் ஒரு திருமணம். அப்போது ஒரு தூரத்து உறவினர் உங்களிடம்," என்னைத் தெரிகிறதா? யாருன்னு சொல்லு பார்க்கலாம்" என்று கேட்கிறார். உங்களுக்கு அவரை தெரியவில்லை, எப்படி சமாளிப்பீர்கள்? பொய் சொல்லக் கூடாது.

# "வயசாகிவிட்டதால் மறதி அதிகமாகி விட்டது.  பிள்ளைகள் பெயர் கூட மறந்து போகிறது.  கொஞ்சம் உங்களை அறிமுகம் செய்து கொள்வீர்களா ?" என்று கேட்பது என் வாடிக்கை.

& " அட இங்கே எப்படி வந்தீங்க ! ராமசாமி சௌக்கியமா இருக்காரா ? " என்று கேட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் - தூரத்தில் வேறு யாரையாவது பார்த்து, 'நமஸ்தே' என்று கை கூப்பியவாறே நகர்ந்துவிடுவேன். அப்போ கேட்டவருக்கே சந்தேகம் வந்துவிடும் - நானே நானா - யாரோதானா !! 

இந்த இடத்தில் ஒரு ஜோக். 

பாட்டி : " அடேய் நீ குப்புசாமிதானேடா  - ஆளே மாறிட்டியே !! "

அவர் : " இல்லை பாட்டி - நான் கந்தசாமி "

பாட்டி : " ஹூம் - ஆள்தான் மாறிட்டேனு நெனச்சேன் - பெயரையும் மாத்திக்கிட்டியா !! "  

கீதா சாம்பசிவம் : 

 1. ஓட்டு, வோட்டு இரண்டில் எது சரி?

# ஒரே மாதிரி ஒலிப்பதால் இரண்டுமே சரிதான். என்றாலும வோட்  என்பது ஆங்கில விக்கு நிகராக இருப்பதால் அது இன்னும் கொஞ்சம் அதிகம் சரி.

& நோட்டுக்குப் போடாவிட்டால் இரண்டுமே சரி. 

2.நாம் வாங்கும் காய்கள்/பழங்கள்/ தானியங்கள் எல்லாமுமே தாவரங்களில் இருந்து பெறப்படுபவையே! அப்படி இருக்கையில் இப்போல்லாம் ஆர்கானிக் என்னும் பெயரில் வருவன எங்கிருந்து வருகின்றன?

ஆர்கானிக் என்பதன் உண்மையான பொருள் என்ன?

# ரசாயன உரங்கள் உபயோகிக்காத விஷயங்களை அப்படிச் சொல்லவேண்டும்.  சில சமயம் மாங்காய் காய்க்கவேண்டும் அல்லது பூச்சி தாக்காது இருக்க வேண்டும் என்று சில மருந்துகள் அடிப்பதுண்டு.  அப்படி அடிக்கவில்லை என்று சொல்ல ஆர்கானிக் என்ற சொல் பயன் படுகிறது.  அதில் உண்மை இருக்கிறதா என்பதை நாம் கண்டு பிடிப்பது அசாத்தியம்.

Organic என்றால் ஆபத்து விளைவிக்கும் இடு பொருள் இல்லாமல் விளைவிக்கப்பட்டதாம்.

& என்னைப் பொருத்தவரை - ஆர்கானிக் - என்றால் - 'விலை அதிகம் - ஜாக்கிரதை - என்ற எச்சரிக்கை மணி' என்று பொருள். 

காய்கறிக்கடைகளில் இருந்து நாம் வாங்கும் காய்கள் எல்லாமும் காய்கறித் தோட்டங்களில் விளைந்தவையே! அப்படி இருக்கையில் குறிப்பிட்ட சில காய்கள் மட்டும் தோட்டத்துக்காய் எனச் சொல்லி விற்பது ஏன்? உதாரணமாகச் சிலர் எலுமிச்சம்பழங்கள்/மாங்காய்/மாவடு போன்றவை. மரத்திலிருந்து இறக்கியது என்பார்கள். எல்லாமுமே அப்படித்தானே வந்திருக்கணும்?

$ தோட்டத்துக்காய் என்றால் ஊர் விட்டு ஊர் வந்தது இல்லை! புதியது என்றும் பொருள்; மாவடு மரத்திலிருந்து இறக்கியது என்றால் வெம்பி உதிர்ந்ததல்ல.

 கீ சா மேடம் கேட்ட மீதி கேள்விகளும், நெ த கேட்ட ஒரு கேள்வியும் - பதில்கள் அடுத்த வாரம். 

= = = = =

படம் பார்த்து கருத்து எழுதுங்க :

1) தாச்சித் தாத்தாவுடன் ஓட்டப் பந்தயமா ! 

2) தலைமுடியை வாரிக்க சீப்பு வேணுமா ? 

3) அந்த வண்டியில் pull - என்று எழுதியிருந்து - குதிரை அதை புல் என்று நினைத்துவிட்டதோ ! 

= = = = =

167 கருத்துகள்:

 1. //கல்யாணத்துக்கு முன்பான pre marriage shooting (theme park outside placesக்கு இருவரும் சென்று professional photographer உதவியுடன் வீடியோக்கள் எடுத்துக்கொள்வது) பற்றி உங்கள் மற்றும் வாசகர்களின் அபிப்ராயம் என்ன? /

  எனக்கு இதில் ஒப்பில்லை என்றாலும் காலம் மாறுவதற்கு ஏற்ப நாம் இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்

  ஒரு காலத்தில் நிச்சயதார்த்தம் கல்யாணம் அதன் பின் ரிசப்ஷன் என்றுதான் இருந்தது. ஆனால் அதன் பின் அது உல்டாவாக மாறி ரிசப்ஷங்க்கு அப்புறம் கல்யாணம் பண்ணுவது வழக்கமாகிவிட்டது அதை நாம் ஏற்றுக் கொண்டோம் அது போல pre marriage shooting யும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்

  //நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் கல்யாணத்துக்கு முதல் நாள் அன்று மணமகன் காலமாகி விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். இது எப்படிப்பட்ட பிரச்சினையை ஒரு பெண்ணுக்கு உண்டாக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.//


  ரிசஷப்னுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணும் போது இதே மாதிரி பிரச்சனைகள் ஏற்படும்தானே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ரிசஷப்னுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணும் போது இதே மாதிரி பிரச்சனைகள் ஏற்படும்தானே//

   உண்மைதான்.

   சில மாற்றங்களை நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டிதான் இருக்கிறது.

   நீக்கு
  2. ரிசப்ஷனுக்கும் திருமணத்துக்கு முந்தைய ஷூட்டிங்குக்கும் வித்தியாசம் உண்டு என்பது என் எண்ணம்.

   இந்த ஷூட்டிங்குல், சினிமா படம் எடுப்பதுபோலெல்லாம், கேமராமேன் துணைகொண்டு தனியாகச் சென்று எடுக்கிறார்கள். ரிசப்ஷன் என்பது எல்லோர் முன்னிலையிலும் நடக்கிறது. பிறர் முன்னிலையில் செய்யக் கூச்சப்படும் எதையுமே மிருமணத்துக்கு முன்பு அனுமதிக்கக் கூடாது என்பது என் எண்ணம்.

   மணிரத்னம் போன்ற புரட்சியாளர்கள், டெலிவரிக்கு முந்தைய நாள் திருமணம் என்ற கான்சப்டைக் கொண்டு வருவதால், அதனை ஏற்பவர்கள், வெறும் ஷூட்டிங்தானே என நினைக்கலாம். இதை டைஜஸ்ட் செய்ய முடியவில்லை.

   நீக்கு
  3. Pre wedding shoot யாருக்காக? கொஞ்சம் யோசிங்க.

   நீக்கு
  4. அதில் என்ன கிடைக்கும்? பர்பஸ் என்ன?

   நீக்கு
  5. நெல்லைத்தமிழன். நமது ஜெனரேஷக்கு இதை டைஜஸ்ட் பண்ண முடியாதுதான் ஆனால் மாறும் உலகிற்கு ஏற்ப நாமும் மாறனும் ஒருபாலர் மணம் முடிப்பது லீவிங்க் டுகதர் காலமாகிவிட்டது அதையும் சமுகம் அங்கிகரிக்க தொடங்கிவிட்டது அப்படி இருக்கும் போது இந்த மாதிரி போட்டோ சூட்டிங்க் நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ அதையும் அட்ஜஸ்ட் பண்ணி நாம்தான் போய்க் கொள்ள வேண்டும்

   இந்த கால கட்டத்தில் நம்குகு இது பிடிக்கும் நாம் இப்படித்தான் இருப்போம் என்று மட்டுமே நாம் முடிவு செய்யலாமே தவிர நாம் பிள்ளைகள் உடபட மற்றவர்கள் இப்படி இருக்க வேண்டுமென்று நாம் நினைக்கலாமே ஒழிய ஆனால் நாம் விருப்பபடி அவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பாக்க முடியாது & கூடாது

   நீக்கு
  6. //Pre wedding shoot யாருக்காக? கொஞ்சம் யோசிங்க அதில் என்ன கிடைக்கும்? பர்பஸ் என்ன?//


   எல்லோரையும் சினிமா மோகம் பிடித்தாள்கிறது எல்லோருக்கும் சினிமாவில் இருப்பது போல தங்களது வாழ்விலும் நிகழ வேண்டுமென்று நினைத்து செய்துகொள்கிறார்கள் போல.. எல்லோருக்கும் அவர்கள் வீடியோ நாலு பேர் பார்க்க வேண்டும் அதை பற்றி பேச வேண்டும் அதற்கு லைக்ஸ் வீயூ அதிகம் கிடைக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிரது அதன் வெளிப்பாடுதான் இது என்னை பொருத்தவரையில் இவர்களுக்கு நிஜத்திர்கும் நிழலிற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்பேன் இதன் விளைவே டிக்டாக் போன்ற செயலிகள் பாப்புலராகி இருக்கின்றன

   நீக்கு
  7. // ஒருபாலர் மணம் முடிப்பது லீவிங்க் டுகதர் காலமாகிவிட்டது// லிவிங் அல்லது லீவிங் !! ஒன்றுக்கொன்று முரண் !!

   நீக்கு
  8. ஒரு பாலினத் திருமணம், லிவிங் டுகேதர் என்று இரண்டு நிகழ்வுகளை மதுரைத் தமிழன் சொல்லியிருக்கிறார். முரண் அல்ல. அவர் சொல்ல வருவது.... எல்லாமே மாறிக்கிட்டிருக்கு... நமக்குப் பிடிக்குதோ இல்லையோ ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்... ஆனால் நம் வீட்டில் நடப்பதை (குறைந்தபட்சம் இந்தியாவில்) நாம் கண்ட்ரோல் செய்ய ஓரளவாவது வாய்ப்பு இன்னும் இருக்கிறது என்று நம்புகிறேன்.

   நீக்கு
  9. வெளி நாடுகளில் 16 வயதுக்கு மேல்.. பசங்க அவங்க இஷ்டப்படி நடந்துகொள்ளலாம், வீட்டை விட்டு வெளியேறலாம், தாங்களே திருமணம் செய்துகொள்ளலாம், பெற்றோரின் பணத்தை எதிர்பார்ப்பதில்லை என்பதால், அங்கெல்லாம் சுலபமாக என்னவேணுமென்றாலும் செய்துகொள்ளலாம். இந்தியாவில் இன்னும் அந்த நிலைமை முழுவதுமாக வரவில்லை என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  10. // முரண் அல்ல. // நான் சொன்ன முரண் : லிவிங் vs லீவிங் !!

   நீக்கு
 2. மாஸ்க் போட்டுக்கொண்டிருப்பது அசௌகரியமாகவும் அன்ஹெல்தியாகவும் ஃபீல் பண்ணியிருக்கீங்களா?

  அப்படி நான் கருதியது இல்லை.. என் நிறுவனத்தில் கண்டிப்பாக அணிய வேண்டும் என்பதால் கடந்த 2 வருடமாக தினமும் 8 மணி நேரத்திற்கும் மேல் அணிந்து வந்ததேன் கடந்த 3 வாரங்களாகத்தான் அணியவில்லை காரணம் அணிவது அவசியம் இல்லை என்பதால்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாஸ்க் அணியவேண்டிய அவசியம் இல்லை என்னும் நிலைமை இன்னும் இந்தியாவில் ஏற்படவில்லை என்றே நினைக்கிறேன்.  நண்பர் ஒருவர் சமீபத்தில் புதிய வகை கொரோனா பற்றி சொல்லி இருந்தார்.  அது நான் செய்தித்தாளில் பிடிக்காதது.  ஆனால் சில மருத்துவர்கள் அந்த வகை தீராத வயிற்றுவலியை ஒருவகைக் கொரோனா என்றே சொல்கிறார்களாம். 

   நீக்கு
  2. * அது நான் செய்தித்தாளில் படிக்காதது.

   நீக்கு

  3. புதிய கொரோனா இங்கு பரவ ஆரம்பிக்கிறது என்று செய்தி ஆனால் பயமுறுத்தும் செய்திகள் இல்லை மூன்று தடுப்புசிகள் போட்டு இருப்பதால் மீண்டும் வந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதுதான் இன்றைய நாள் வரை வரும் செய்தி.. நாலுவது தடுப்பூசி பெற அரசாங்க அனுமதியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது ஃப்சைர் நிறுவனம்

   நீக்கு
  4. நான் இரண்டு தடுப்பூசி மட்டுமே போட்னுள்ளேன். புதிய வெரைட்டி உயிருக்கு ஆபத்து விளைவிக்காதது என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  5. ஆமாம் ஸ்ரீராம், என் தோழி ஹைதராபாத்தில் இருப்பவருக்கு முதலில் கொரோனா வந்து எல்லாரும் மீண்டு வந்த சமயத்தில் சமீபத்தில் அவளுக்குத் திடீரென வயிற்று வலி, வாயுப் பிரச்சனை போல சுருண்டு சுருண்டு வயிற்றை அழுத்தி வலியாம். என்னவெல்லாமோ வீட்டு வைத்தியம் செய்து பார்த்துவிட்டு மருத்துவரிடம் சென்றால் அவர் கேட்டுவிட்டு கொரோனா டெஸ்ட் செய்யச் சொல்லிப் பார்த்தால் பாசிட்டிவ். அடுத்து வீட்டில் மாமனார், கணவர் என்று எல்லோருக்கும் பாசிட்டிவ்.

   தோழிக்குக் கூடவே வாந்திவேறு. ஒரு வாரம் கஷ்டப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து மீண்டு வருகிறார். மற்றவர்கள் மருத்துவமனையில் இல்லை என்றாலும் கிட்டத்தட்ட அதே வேதனைகள்.

   இவர்களுக்கு நெகட்டிவ் என்று வரும் போது மகளுக்கு பாசிட்டிவ். அவளும் வயிற்றுவலியால் துடித்து இருக்கிறாள். முதலில் மாதாந்திரத்தொல்லையாலோ என்று பார்த்தால் இல்லை கொரோனா பாசிட்டிவ்.

   புதியதாக இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு டெஸ்டில் தெரியுமா என்று தெரியவில்லை. நானும் கேட்கவில்லை.

   சென்னையில் இருக்கும் கணவரின் நண்பர் ஒருவருக்கும் இப்படி வந்ததாம். அவருக்கும் பாசிட்டிவ். கடுக்கா பொடியில் தேன் கலந்து சாப்பிட்டாராம். இப்போது மீண்டு வருகிறார்.

   கீதா

   நீக்கு
  6. //தகவல்களுக்கு நன்றி.// - ஏதோ கீர பாசிடிவ் செய்திகளை எழுதியிருப்பதுபோல மறுமொழி கொடுக்கறீங்களே.. அவங்களுக்கு, படிக்கறவங்க எல்லோருக்கும் கலக்கம் ஏற்படும்படியான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்... இப்போ எனக்குமே கவலை வந்துவிட்டது. கொரோனாவுக்கு கடுக்காய் கொடுக்கணும் என்பதற்காக கடுக்காய் பொடியில் தேன் கலந்து சாப்பிட்டாரோ? நான் கொரோனாவுக்கு அல்வா கொடுக்கணும் என்று நினைத்தால் அல்வாவில் தேன் கலந்து சாப்பிடணுமா?

   நீக்கு
 3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  நோய்த் தொற்று இல்லா வாழ்வு தொடர வேண்டும் இறைவன் அருளால்.

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். ஶ்ரீராம் சொல்லி இருக்கும் புது வகைக் கொரோனா பற்றிக் கேள்விப் படவே இல்லை. அப்படி ஏதும் பரவாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா வணக்கம். பிரார்த்திப்போம். எனக்கும் நம் நண்பர் ஒருவர் சொன்னதுதான்.

   நீக்கு
 5. ஆங்கில அகராதியைப் பார்த்தால் ஆர்கானிக் என்பதற்கு "கரிம" என்னும் பொருளில் சொல்றாங்க. ஆர்கானிக் மேட்டர் எனில் கரிமப் பொருள், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி எனில் கரிம வேதியியல், ஆனால் அதே உணவில் வரச்சே ஆர்கானிக் ஃபுட் என்பதை இயற்கை உணவு என்கிறார்கள். இதில் பொருளே முரண்படுகிறது அல்லவா?

  பதிலளிநீக்கு
 6. நான் வெளியே அதிகம் எங்கும் செல்வதில்லை என்பதால் முகக்கவசம் அணிய நேரவில்லை. ஆனால் நம்மவர் அணிகிறார். வண்டி ஓட்டும்போது கஷ்டமாய் இருப்பதாகச் சொல்லுவார். வீட்டிற்கு வெளி ஊரிலிருந்து யாரேனும் வந்தால் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து விடுவோம். அதே போல் ஏசி மெகானிக், எலக்ட்ரிஷியன் போன்றவர்கள் வந்தாலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் அதிக நேரம் வெளியிடங்களில் புழங்குவதால் உல்ட்டா...!  உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யும்போதோ, வண்டி ஓட்டும்போதோ முகக்கவசம் தேவை இல்லை என்று முன்னர் சொன்னார்கள்.  அருகில் ஆளில்லாமல் இருக்க வேண்டும்!

   நீக்கு
  2. நான் வீட்டு கதவுக்கு வெளியே சென்றால், முககவசம் கட்டாயம் அணிந்துகொள்வேன்.

   நீக்கு
 7. முதல் படத்துத் தாத்தாவைப் பின்னாடி இருந்து பார்க்கையில் அசப்பில் சித்தப்பா (அசோகமித்திரன்)வை நினைவூட்டுகிறது.
  எனக்கென்னமோ சின்னஞ்சிறு குழந்தைகளை இம்மாதிரி விலங்குகளை நெருங்கி இருக்கிறாப்போல் பார்க்கையில் மனதில் கவலையும்/அச்சமும் ஏற்படுகிறது. மூன்றாவது படத்துக்கும் இதே பொருந்தும். இவை இரண்டுமே ஃபோட்டோ ஷாப்பிங்கோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அசப்பில் சித்தப்பா (அசோகமித்திரன்)வை நினைவூட்டுகிறது.//

   அட, ஆமாம் போல தெரிகிறது.

   நீக்கு
 8. எங்க பெண்/பையர் கல்யாணங்களில் ரிசப்ஷன் திருமணம் முடிந்த பின்னர் அன்று மாலை தான் வைத்தோம். இந்த மாதிரி ஃபோட்டோ செஷன் எல்லாம் இல்லை. மாப்பிள்ளை அவ்வப்போது மும்பையிலிருந்து தொலைபேசியில் அழைப்பார். பெண் ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு வைச்சுடுவாள். அவள் கல்யாணத்துக்குப் பின்னர் ஏழெட்டு வருடங்கள் கழித்துப் பையர் கல்யாணம். பையர்/மாட்டுப்பெண் இமெயிலில் தொடர்பு கொண்டிருந்தார்கள். அவ்வளவே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வழக்கம் இப்போது நான்கைந்து வருடங்களாகத்தான் அறிமுகம், பிரபலம் போல..

   நீக்கு
  2. இல்லை ஶ்ரீராம், எங்க பெண் கல்யாணத்திற்கு முன்பிருந்தே கல்யாணத்துக்கு முதல்நாள் ரிசப்ஷன் என்னும் கலாசாரம் வந்து விட்டது. எங்க சம்பந்தி வீட்டில் கூட அன்று தான் வைக்கணும்னு சொல்லிப் பார்த்தாங்க. நாங்க எங்க பெண் நிற்க மாட்டாள் என்று சொன்னோம். பையர் கல்யாணத்திலும் நாங்க தான் வேண்டாம் என்று சொன்னோம். மற்றபடி கடிதம் போட்டுக் கொள்வது/தொலைபேசியில் பேசுவது, உள்ளூராக இருந்தால் சேர்ந்து வெளியே செல்வது எல்லாம் எண்பதுகளில் எங்க உறவினர் வீட்டுக்கல்யாணங்களிலேயே இருந்து வந்தன. என் நாத்தனார் பெண்களின் கல்யாணங்களிலும் கடிதப்போக்குவரத்து, உள்ளூராக இருந்தால் சேர்ந்து வெளியே செல்வது என இருந்தது.

   நீக்கு
  3. ஓ.. நான் சரியாக உள்வாங்காமல் பதிலளித்திருக்கிறேன். நான் சொல்ல வந்தது போட்டோஷூட்.

   நீக்கு
  4. இந்த போட்டோ ஷூட் பண்ணி ஒரு சினிமா பாடலைக் கோர்த்து, சினிமா பாடல் ஷூட்டிங் போலச் செய்துதருகின்றனர்.

   ஒரு ந்தைச்சுவைக் காட்சியில் காண்பிப்பதுபோல, இப்படிக் கையை வை, இப்படித் தூக்கு என்றெல்லாம் செய்துகாண்பிப்பார்கள் போலிருக்கு.

   நீக்கு
  5. ரிசப்ஷன் - இது எதுக்காக என்று என்னைக் கேட்டால் ஒரே ஒரு காரணம்தான் எனக்குத் தோன்றுகிறது. திருமணத்தில் வெறும்ன சாம்பார், பருப்புசிலி, அக்காரவடிசல், டிபனாக இட்லி சட்னி என்று ஏய்த்துவிடுவார்கள் என்பதற்காக, நாக்குக்கு ருசியாக வெஜிடபிள் புலாவ், ஆனியன் ரெய்த்தா, ஐஸ்க்ரீம், என்று பெண்ணின் பெற்றோரைத் தாளிப்பதற்காகத்தான் ரிசப்ஷன் வந்ததோ?

   நீக்கு
 9. தோட்டத்துக்காய் என்பதற்கு திரு $ அவர்கள் கூறி இருக்கும் பதில் தெரிந்ததே எனினும் சிலவற்றிற்கு மட்டுமே அப்படிக் கூறுகின்றனர். அதற்கு நேரடியாக அவங்க தோட்டத்திலிருந்தே வந்தது என்னும் பொருளில் வருமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாறுதலான புதிய சொற்கள் வியாபார உத்தி.

   நீக்கு
  2. இல்லை ஶ்ரீராம், எங்க மாமியார் வீட்டில் எல்லாம் தோட்டத்துக்காய் என்பதை அடிக்கடி கூறுவார்கள். சொல்லப் போனால் நான் கல்யாணம் ஆகி வந்தப்புறமாவே இதெல்லாம் தெரியும் எனலாம். மதுரையில் எனக்குத் தெரிஞ்சு யாரும் சொன்னதாகத் தெரியலை.

   நீக்கு
  3. உண்மையில் உள்ள சில விஷயங்களை வியாபார கள் தங்கள் வியாபாரத்துக்கும் உபயோகிக்கிறார்கள்.

   நீக்கு
 10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

  வாழ்க நலம்..
  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க..

   வாங்க துரை செல்வராஜு ஸார்.. வணக்கம்.

   நீக்கு
  2. இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

   நீக்கு
 11. அலுப்பு என்பது மனம் சம்பந்தப்பட்டது எனவும் சோர்வு என்பது உடல் சம்பந்தமானது என்றும் கொள்ளலாமா? (அடுத்த வாரம் கூட பதில் சொல்லலாம்.( இஃகி,இஃகி, இஃகி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதின் அலுப்பினால் உடல் சோர்வு ஏற்படுகிறதா? அல்லது மனதுக்கு வரும் அலுப்பையே சோர்வு என்கிறோமா? மனச்சோர்வு?

   நீக்கு
 12. இந்த வாரக் கேள்விகள் அனைத்தும் சுவாரஸ்யம்.

  ஆமாம் பதில்களும் மிக ரசிக்க வைக்கின்றன.
  மாஸ்க் ஒரு அவசியம் தான். இன்று கூட

  ரத்தப் பரிசோதனை மற்ற செக் அப்களுக்கு ஒரு மூன்று மணி நேரம் போட்டுக்
  கொள்ள வேண்டிவந்தது.
  மூச்சுத் திணறி விட்டது.
  வெளியே வந்த பிறகே நிம்மதி.
  மற்றவர்களுக்குப் பழகி விட்டது. எட்டு மணி நேரம் தினம்
  போட்டுக் கொள்கிறார்களே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நோயாளிகள. கூடுமிடங்களிலும், இதுபோன்ற பரிசோதனை மையங்களிலும. மாஸ்க் மிக கட்டாயம் அம்மா.

   நீக்கு
  2. ஆம். மிகுந்த எச்சரிக்கை தேவை.

   நீக்கு
 13. தாத்தா பாட்டி எக்ஸர்சைஸ் செய்வது அருமை.

  குதிரையும் குழந்தையும் அருமை.
  மிருகங்களுக்கு இருக்கும்

  மிருதுத் தன்மை மனிதர்களுக்குக் கூட வராது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனாலும் அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு பதட்டமாகவும் பயமாகவும்தான் இருக்கிறது.

   நீக்கு
  2. படம் போடறதையும் போட்டுவிட்டு
   நீங்களே சொல்கிறீர்களா:) :) :)

   நீக்கு
  3. :)))) படம் போட்டது மட்டும்தான் நான். படம் எடுத்தது நான் அல்ல!!

   நீக்கு
 14. ஆர்கானிக் என்று நிறைய வருகிறது.
  இந்த ஊரில் எல்லாமே அதுதான். வயிற்றுக்குப் பிரச்சினை இல்லாமல்
  இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 15. இந்த தீபம் எண்ணெயையோ அல்லது வேறே ஏதேனும் எண்ணெயையோ நான் பயன்படுத்தியதே இல்லை, குறிப்பாக விளக்குகளுக்கு. இலுப்பை எண்ணெய் வாங்கி அகல்விளக்கு ஏற்றி இருக்கேன் திருக்கார்த்திகை சமயங்களில். இப்போவும் கொசு விரட்டிக்கு வேப்பெண்ணெய் பயன்படுத்துவேன். அகலில் ஊற்றியும் எரிப்போம். அல்லது குட் நைட் போன்ற கொசு விரட்டிகளில் இதை நிரப்பியும் வைப்போம். பலன் இருக்கு. ஸ்வாமி விளக்குக்கு எல்லாம் எப்போவும் நல்லெண்ணெய் அல்லது நெய் மட்டும் தான். நெய் விளக்கு எனப் போட்டிருந்தால் அப்போ நெய் விளக்கு ஏற்றி வைப்போம். தினசரி நல்லெண்ணெய் தான் ஸ்வாமி விளக்கிற்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்கள் தீபம் எண்ணெய் உபயோகிப்பதுண்டு. கொசு விரட்ட ஸ்பெஷலாய் எதுவும் முயற்சிப்பதில்லை!

   நீக்கு
 16. எம்ஜிஆரைப் பற்றி ஒய்.ஜி.மகேந்திரா சொல்லி இருப்பது அவர் தந்தையைச் சிறுமைப்படுத்துவதாக இருக்கும்? புரியலை! அவங்களுக்குள் இருந்த நெருங்கிய நட்பைத் தானே சொல்கிறார். இதில் தவறாக ஏதும் தெரியலை/நெல்லையைத் தவிர்த்து! இஃகி,இஃகி,இஃகி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க வீட்டுக்கு மோர் சாதம் சாப்பிட அப்துல் கலாம் போலீஸ் பந்தோபஸ்துடன் வந்தார் என்று சொல்லிக்கொள்வதே ரொம்ப பீத்தல் என்பது என் எண்ணம். இதை எம்ஜிஆர் படிக்க நேர்ந்தால், உங்க வீட்டுல ரசம் தவிர எதுவும் உருப்படி இல்லை, எதையாவது சாப்பிடணும்னு கட்டாயப்படுத்துவாங்களே என்று ரசம் குடித்தேன் என்று சொல்லியிருப்பாரோ?

   நீக்கு
  2. எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த நாளைக்கு அப்துல் கலாம் வந்த கதை தெரியுமா? படிச்சிருக்கீங்களா?

   நீக்கு
 17. இன்னிக்கு நெல்லையைக் காணோம். ஜீவி சாரை 2,3 நாட்களாகவே காணோம். திரு தன்பாலன் ஒரு வாரமாக வரலை. கமலா அவ்வப்போது தலை காட்டிச் செல்கிறார். பானுமதி கூட எப்போவானும் வரார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை அலைச்சலினால் மெதுவாகத்தான் எழுந்துகொண்டார். ஹிஹி

   நீக்கு
  2. வாங்க நெல்லை. மதிய வணக்கம் உங்களுக்காகச் சிறப்பு வணக்கம். திரு தனபாலன் அவர்களை ஓரிரு பதிவுகளில் பார்த்தேன். இங்கேயும் வந்திருக்கார். கமலாவையும் ஜீவி சாரையும் காணோம். ஆனால் எ.பி.குழுமத்தில் ஜீவி சார் இருக்கார் போல!

   நீக்கு
  3. பா.வெ. அவங்க ஊர் நேரத்துக்கு எழுந்து கருத்துப் போட்டுவிட்டு தூங்கச் சென்ற உடன், அடுத்த இடுகை வந்துவிடும். அதனால ஒருவேளை அவங்க அவ்வப்போதுதான் வர்றாங்களோ என்னவோ.

   ஜீவி சாரை வரவழைக்க ஒரு உத்தி இருக்கிறது. 'நவீனன் அவர்களின் இலக்கிய விமர்சனம்' (சும்மா நவீனன் என்று போட்டிருக்கேன். அப்படி ஒருத்தர் இருந்தால் சாரி..உங்களைச் சொல்லலை) என்பதுபோலத் தலைப்பு இருந்தால் மட்டுமே கலந்துகொள்வார் போலிருக்கிறது.

   நீக்கு
  4. //பா.வெ. அவங்க ஊர் நேரத்துக்கு எழுந்து கருத்துப் போட்டுவிட்டு தூங்கச் சென்ற உடன், அடுத்த இடுகை வந்துவிடும்// சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள் நெ.த. காலையில் எழுந்து பார்த்தால் இந்தியாவில் கருவாகி விடுகிறது. இனிமேல் கருத்து போட்டால் யார் பார்ப்பார்கள்? என்று தோன்றும். அதையும் மீறி சில சமயங்களில் கருத்திடுவேன். பின்னால் சென்று பாருங்கள், கடைசி கருத்து என்னுடையதாகத்தான் இருக்கும். கீதா அக்கா அதற்கு பதிலும் கொடுத்திருக்கிறார்.

   நீக்கு
 18. தீபம் எண்ணெய் என்பது ஏமாற்று வித்தை தான்..

  ஆமணக்கு (கொட்டை முத்து என்பார்கள் செல்லமாக)
  எண்ணெய் தான் அப்பொழுது எல்லாம்...ஆமணக்கு எண்ணெய் மருத்துவ குணம் உடையது.. விளக்கெண்ணெய் தடவி தோசை வார்ப்பார்கள்.. பால கறக்கும் முன் மடிக்காம்புகளுக்கு விளக்கெண்ணெய் தான்.. சுக பேதிக்கும் அது தான்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா! தகவல்களுக்கு நன்றி.

   நீக்கு
  2. மாவடுவுக்குக் கூட விளக்கெண்ணெய் விடணுமே! நானும் விட்டிருக்கேனே! :))))

   நீக்கு
  3. என் அப்பா வீட்டில் பலாச்சுளைகளை எடுக்க விளக்கெண்ணெய் தான் பயன்படுத்திப் பார்த்திருக்கேன். ஏதோ பேச்சு வாக்கில் இங்கே புக்ககத்தில் அதைச் சொல்லப்போக எல்லோரும் பலாச்சுளைக்கே வயிற்றுப் போக்கு வரும். இதிலே விளக்கெண்ணெய் வேறேயா? உனக்கெல்லாம் இதைப் பற்றி என்ன தெரியும் என்றார்கள். :)))) விளக்கெண்ணெயில் பலாச்சுளைகள் குளிக்கவா செய்யும்?எடுக்கும்போது கைகளில் ஒட்டிக்கொள்ளாமல் லகுவாக எடுக்கத் தான் அதன் உதவி.

   நீக்கு
  4. நான் மாவடுவில் விளக்கெண்ணெய் போட்டதில்லை. போடுவார்கள், போட்டால் நல்லது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

   நீக்கு
  5. எண்ணெய் பூச்சு இருந்தால், மெதுவாக உப்பு நீர் உள்ளே செல்லும். அதுதான் காரணம். நானும் மாவடு போட்டபோது அதற்கு எண்ணெய் தேய்த்துவிட்டிருக்கேன்.

   நீக்கு
 19. எதிலிருந்தோ மிச்சமாகும் ஏதோ ஒன்று நறுமணங்களில் குளித்து விட்டு நமது வீட்டுக்குள் பல விதங்களில் வருகின்றது என்கின்றார்கள்..

  கடவுள் தான் காக்க வேண்டும்..

  பதிலளிநீக்கு
 20. கல்யாணத்துக்கு முன்பான pre marriage shooting (theme park outside placesக்கு இருவரும் சென்று professional photographer உதவியுடன் வீடியோக்கள் எடுத்துக்கொள்வது) பற்றி உங்கள் மற்றும் வாசகர்களின் அபிப்ராயம் என்ன? (வாசகர்கள் கவனத்திற்கு ) //

  வேஸ்ட்! வேஸ்ட்! இது என் தனிப்பட்டக் கருத்து. என்னைப் பொருத்தவரை கல்யாணமே ரொம்ப ரொம்ப சிம்பிளாக அதிகச் செலவு இல்லாமல் பந்தாவிற்காக இல்லாமல், பணம் இருக்கு என்று செலவழிக்காமல், கடன் வாங்காமல் சோசியல் மீடியாவில் படங்களாகப் போட்டுத் தள்ளாமல் வீட்டோடு, சின்ன வட்டத்தோடு செய்து முடிக்க வேண்டும் என்பது என் தனிப்பட்டக் கருத்து. எங்கள் வீட்டவர்களின் எண்ணமும் கூட. பணம் இருந்தால் இப்படிச் செலவழிக்காமல் அப்படிச் செலவழிக்கும் பணத்தை குழந்தைகளின் பெயரில் போட்டு வைத்தால் அவர்களுக்கு நாளைக்கு உதவுமே.

  திருமணம் செய்து கொள்பவர்களும் இதை யோசிக்க வேண்டும். ஒரு சில நிமிட சந்தோஷத்திற்காக இத்தனை செலவு செய்வதை விட - இப்போதெல்லாம் மணமகன் மணம்களே கூடத் தங்கள் பணத்தை இப்படியானதுக்குச் செலவு செய்கிறார்கள் - தங்கள் பெற்றோரின் பெயரில் போட்டு வைக்கலாம். பெற்றோருக்கு வயதான காலத்தில் உதவுமே.

  ஹூம் நம்ம கருத்தை யார் கேக்கப் போறாங்க. போட்டு வைப்போம்...ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மற்றோன்று இக்கருத்தோடு....

   இப்படிச் செலவு செய்து திருமணங்கள் அதுவும் தற்போதெல்லாம் எத்தனை மாதங்கள்...ஸாரி நாட்கள் நீடிக்கின்றன? கல்யாணத்திற்கு முன்பே கூட முறிகின்றனவே

   டக்கு டக்குனு கோர்ட்டுக்குப் போயிடறாங்களே.

   இப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒரு கல்யாணம் இப்படிச் செலவழித்த ஆல்பத்திற்கு மட்டுமே 1.5 லட்சம். கடைசில ஆறு மாசத்துல திருமணம் முறிவு.

   ஆசிரியர்களின் பதில் பார்த்துவிட்டு வருகிறேன்.

   கீதா

   நீக்கு
  2. திருமணம் என்பதே உறவை அறிமுகப்படுத்தத்தான் என்பது என் எண்ணம்.

   இம்சைகளில் பெரிய இம்சை, கல்யாண ஆல்பம் செய்துகொள்வது, அதனை வருபவர்கள் பார்க்கச் சொல்வது.

   திருமணத்தின் கான்சப்ட், பிறருக்கு உணவளிப்பது, சமூகத்தின் அங்கங்களுக்கு ஏதேனும் பணம. அளிப்பது. மற்றபடி, இலைக்கு 400 ரூபாய், ஐந்து வேளை சாப்பாடு ஐந்து லட்சம், மண்டபம் எட்டு லட்சம் என்று பணத்தைச் சிதறுவதுல், திருமணத்தின் அங்கங்களை கான்டிராக்ட் விடுவதில் என்ன பிரயோசனம்? ஒரு நாள் கூத்துக்கு காலை வெட்டிக்கொள்வது போன்ற செயல் அது என்பது என் அபிப்ராயம்.

   நீக்கு
  3. திருமணம் முறிந்து, திரும்பவும் ஏமாளி அப்பாவை அடுத்த செலவு செய்யச் சொல்லுவாங்களோ?

   நீக்கு
  4. ஹூம் நம்ம கருத்தை யார் கேக்கப் போறாங்க. போட்டு வைப்போம்...//


   இங்கே வரவங்க எல்லோரும் கல்யாணம் ஆகி பேரன் பேத்தி எடுத்தவங்க. அவங்களுக்கு இந்த புத்திமதிகளை கேட்டாலும் படித்தாலும் ஒரு பிரயோசணமும் இல்லை. 

   நீக்கு
  5. நம்மைப் போல் பிறரையும் நினைப்பது நல்லதுதான். அதற்காக இப்படீல்லாம் ஜெகே சார் சிந்திக்கறாரே... என்னைப் போன்ற பதின்ம வயதுடையவர்களும், என்னைவிட ஒரு வருஷம் பெரியவர்களீன கீதா ரங்கன்(க்கா), ஶ்ரீராம் போன்றோர்களும் இல்கு வருகிறோமே

   நீக்கு
  6. நெல்லை அதேதான் ஹைஃபைவ்! முதல் கருத்து...

   //திருமணம் முறிந்து, திரும்பவும் ஏமாளி அப்பாவை அடுத்த செலவு செய்யச் சொல்லுவாங்களோ?//

   ஹாஹாஹாஹா பெரிய இடத்தில் வேண்டுமானால் அப்படி நடக்கலாம். சிம்பிள் என்று சொல்லி நிறைய செலவழிப்பாங்க...பார்க்கிறோமே.

   கீதா

   நீக்கு
  7. இங்கே வரவங்க எல்லோரும் கல்யாணம் ஆகி பேரன் பேத்தி எடுத்தவங்க. அவங்களுக்கு இந்த புத்திமதிகளை கேட்டாலும் படித்தாலும் ஒரு பிரயோசணமும் இல்லை. //

   அண்ணே இங்க என்னைப் போன்ற, நெல்லை (போனாப் போகுதுன்னு அவரையும் சேர்த்துக்குவோம்) ஸ்ரீராம், எல்லாரும் இருக்கப்ப இப்படிச் சொல்லலாமோ?

   பேரன் பேத்தி எடுக்காத கூட்டம் இருக்கு இங்கும் , சைலன்ட் ரீடர்ஸ் இருப்பாங்க. இளையவர்களும் இருக்கலாம்.

   இளைய பெற்றோரும் பார்க்க நேரலாமே.

   கீதா

   நீக்கு
  8. என்னைப் போன்ற பதின்ம வயதுடையவர்களும், என்னைவிட ஒரு வருஷம் பெரியவர்களீன கீதா ரங்கன்(க்கா), ஶ்ரீராம் போன்றோர்களும் இல்கு வருகிறோமே//

   பாருங்க குண்டூசி கேப்ல!!!

   கீதா

   நீக்கு
  9. சுவாரஸ்யமான கருத்துப் பரிமாற்றங்களுக்கு நன்றி.

   நீக்கு
  10. இங்கே வரவங்களுக்கும் பேரன், பேத்திகள் இருக்காங்க இல்லையா? இப்படியான புத்திமதிகளை அவங்களுக்குச் சொல்லலாமே! அவங்க கேட்க வேண்டும் என்பது தனி விஷயம். ஆனாலும் பேரன், பேத்தி எடுத்தவங்களுக்கும் இது பலனுள்ளதே! அவங்க நெருங்கிய மற்ற சொந்தங்களில் இவற்றைச் சொல்லிப் பார்க்கலாம். ஶ்ரீராமுக்குத் தான் பேத்தி (தங்கை பேத்தி) இருக்காளே! ஆகவே பெரியோர்களே! சிறியோர்களே! ஶ்ரீராமும் ஒரு தாத்தா தான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம். :))))

   நீக்கு
  11. //ஏமாளி அப்பாவை அடுத்த செலவு செய்யச் சொல்லுவாங்களோ?// எனக்குத் தெரிந்த சில பெண்களின் மறு திருமணத்தில் வைதிகக் காரியங்கள் மட்டும் முக்கியம்னு சொல்லிச் செய்தார்கள். அது தான் நல்லது என்பதெல்லாம் சரி. முதல் திருமணமும் அப்படி வைதிகக் காரியங்கள் செய்து பண்ணினவை தானே! அங்கே ஏன் சரியா வரலை? இதை எல்லாம் நான் கேட்டால் துரோகி என்னும் பட்டம் கிடைக்கும்/கிடைத்தது.

   நீக்கு
  12. நெருங்கியவர்களாயினும் நிறைய விஷயங்களை கேட்கவே முடியாது.  மனதுக்குள் வைத்துக் கொள்ளத்தான் முடியும்.  நட்பிடம் கூட மனம் விட்டு கேட்க முடியும்!

   நீக்கு
 21. படக்கருத்துக்கள்:
  1. மழை வருது சீக்கிரம் ஓடு.
  2. உன் அம்மாவும் உன்னை விட்டுட்டு போயிட்டாளா? சரி நாம இரண்டு பேரும் விளையாடலாம். 
  3. எனக்கு உன் முத்தம் வேண்டாம். நாற்றம்.

   Jayakumar

  பதிலளிநீக்கு
 22. நம் வீட்டில் விளக்கிற்கு நல்லெண்ணை அல்லது நெய். இவை இரண்டைத் தவிர வேறு எதுவும் எக்காலத்திலும் பயன்படுத்தியது இல்லை.

  பாட்டி இருந்த காலத்தில் இலுப்பை எண்ணை பயன்படுத்தியதுண்டு அதுவும் தினமும் அல்ல. தினப்படிக்கு நல்லெண்ணை. அதுவும் நல்ல நல்லெண்ணை. சில தினங்களில் மட்டும் நெய்.

  கீதா

  பதிலளிநீக்கு
 23. நான் சூப்பர் மார்க்கெட்டில் ஆர்கானிக் என்ற வார்த்தையைப் பார்த்தாலே பணம் கொள்ளையடிக்கும் செக்‌ஷன் என்றுதான் நினைப்பேன்.

  ஆர்கானிக் என்பதே பம்மாத்து.

  பதிலளிநீக்கு
 24. # நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் கல்யாணத்துக்கு முதல் நாள் அன்று மணமகன் காலமாகி விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். இது எப்படிப்பட்ட பிரச்சினையை ஒரு பெண்ணுக்கு உண்டாக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும். அதுவும் சகுனம் ராசி போன்ற மூட நம்பிக்கைகள் கொண்ட சமுதாயத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் விபரீதத்தை உண்டாக்க முடியும்.//

  யெஸ்ஸு!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது எக்செப்ஷன்தான். அதனால் அப்படிச் சிந்திக்கத் தேவையில்லை. போறவன் மணமேடையில் போக்க்கூடாதா?

   இருந்தாலும் இரண்டுபேர் கடலை போட, பக்கத்தில் ஒருவனை ரெகார்ட் பண்ண அனுமதிப்பது போன்றது இது (நாகரீகமா எழுதியிருக்கேன் ஹாஹா)

   நீக்கு
  2. நெல்லை எக்சப்ஷன் இப்போது சமீபகாலத்தில் ஆனால் அதுவும் கொஞ்சம் தான். இன்னமும் இருக்கிறதுதான்.

   டைவேர்ஸ் ஆன ஆணுக்கே அடுத்து வரும் பெண் திருமணம் ஆகாத பெண்ணாகத் தேடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கிடைக்காமல் கடைசியில் குழந்தை இல்லாதவர்கள், அதே போல டைவெர்ஸ் ஆன குழந்தை இல்லாத ஆண் என்றும் தேடுகிறார்கள். மேலைநாட்டுக் கலாச்சாரம் இப்ப நீங்க சொல்லியிருக்கும் ஷூட்டிங்க் போல எல்லாம் வந்தாலும் இதுக்கு மட்டும் இன்னும் அந்த அளவு ஏற்கும் மனம் இல்லை. அப்படியே ஆகும் திருமணங்களும் கூடப் பலச் சிக்கல்களைச் சந்திக்கின்றன.

   கீதா

   நீக்கு
  3. மற்றவர்களை வைத்துக் கொண்டு கல்யாணப் பெண்ணும்/பிள்ளையும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களை எடுத்துத் தரச் சொல்வதற்கும் சினிமா ஷூட்டிங்கிற்கும் என்ன வித்தியாசம்? :(

   நீக்கு
  4. அங்கே நடிப்பவர்களுக்குப் பணம். இங்கே (படம்) பிடிப்பவர்களுக்குப் பணம் !!

   நீக்கு
  5. கீதாக்கா அது 2 1/2 மணி நேரம் தான்...சினிமா..ரீல் ஷூட்டிங்க்

   இது ரியல் ஷூட்டிங்க்! லைஃப் லாங்க்!!!!! (இடைல கட் ஆனா அது வேறு)

   இன்னொன்று கேண்டிட் ஃபோட்டோக்ராஃபி!! இப்ப இதுவும் பிராபல்யம். அதாவது இப்படி நில்லை அப்படி சிரி என்று சொல்லாமல் சர்ப்ரைசிங்காக எடுப்பது. சில சமயம் எடுப்பவருக்கே ஆச்சரியமான பல நல்ல க்ளிக்ஸ் அபூர்வமான எதிர்பாரா க்ளிக்ச் போஸஸ் கிடைக்கும்.

   கீதா

   நீக்கு
  6. எனக்கு மிகவும் பிடித்த வகை ஃபோட்டோக்ராஃபி. இந்த கேண்டிட் ஃபோட்டோக்ராஃபி.

   கீதா

   நீக்கு
 25. ஆர்கானிக் என்பது சுத்த ஹம்பக்! சும்மா சொல்லி கொள்ளை. நான் அப்படியானவற்றை வாங்குவதில்லை. பக்கமே போகவும் மாட்டேன்!

  கீதா

  பதிலளிநீக்கு
 26. மாஸ்க் போட்டுக்கொண்டிருப்பது அசௌகரியமாகவும் அன்ஹெல்தியாகவும் ஃபீல் பண்ணியிருக்கீங்களா?//

  அதைவிட புகைப்பிடித்தல் - புகையிலிருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 27. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // கல்யாணத்துக்கு முன்பான pre marriage shooting (theme park outside placesக்கு) //

   லாட்ஜ் மெத்தைகளில் அமர்ந்து தோளில் இடுப்பில் கை போட்ட மாதிரி எல்லாம் விளம்பரங்கள் கொடுக்கின்றார்கள்.. Fb ல் வருகின்றன..

   போட்டோக்காரர்கள் எப்படி வேண்டுமானாலும் எடுப்பார்கள்.. அவர்களுக்கு வேண்டியது காசு..

   மெத்தையில் விளையாடிக் காட்டுவது நடிக/நடிகைகளாக (!) இருக்கலாம்..

   அப்படியில்லாமல் உண்மையிலேயே அவர்கள் அடுத்த நாளில் கலியாணம் கட்டிக் கொள்ளப் போகின்றவர்கள் என்றால்?..

   இருந்து விட்டுப் போகட்டுமே!..
   நமக்கு என்ன நஷ்டம்!..

   நீக்கு
  2. அது நம் பெண், நம் பையனாக இல்லாத வரையில் நமக்கென்ன நஷ்டம்? பார்வையாளராக்க் கூப்பிட்டால் கோய்ட்டு வந்துட வேண்டியதுதான். என்ன சொல்றீங்க?

   நீக்கு
 28. மனதிற்கு பிடித்த வேலைகள் செய்யக் கூட சில சமயங்களில் அலுப்பாக இருக்கிறதே என்ற காரணம்?//

  ஆசிரியர் சொல்லியிருக்கும் பதில் - யெஸ். மனச் சோர்வு. பிடித்ததையும் அழுத்தும் அளவிற்கு மனதை அதில் செலுத்தவிடாத அளவிற்கு ஏதோ ஒரு மனபாரம் இருக்கலாம்..ஸ்ட்ரெஸ்.

  கீதா

  பதிலளிநீக்கு
 29. உறவில் ஒரு திருமணம். அப்போது ஒரு தூரத்து உறவினர் உங்களிடம்," என்னைத் தெரிகிறதா? யாருன்னு சொல்லு பார்க்கலாம்" என்று கேட்கிறார். உங்களுக்கு அவரை தெரியவில்லை, எப்படி சமாளிப்பீர்கள்? பொய் சொல்லக் கூடாது.//

  நான் பல முறை சாரி சொல்லிவிட்டுக் கேட்டுக் கொண்டுவிடுவேன் அவரையே சொல்லச்சொல்லி...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி திகழும்போது, எனக்கு நினைவில் இருப்பதில்லை, ஒரு நிமிடம்.. என் மனைவியைக் கூப்பிடுகிறேன்.. அவளுக்கு கட்டாயம் நினைவில் இருக்கும் என்று சொல்லிடுவேன்.

   என் உறவினர்களை அவள்தான் நினைவில் வைத்திருப்பாள்.

   நீக்கு
  2. கணவன் பக்கத்து உறவினர்களை, மனைவி ஞாபகம் வைத்துக்கொள்வது என்பது அபூர்வம்!

   நீக்கு
  3. அதுக்குக் காரணம் ஆறு வருஷம் நான் பஹ்ரைன்ல தனியா இருந்தபோது எல்லா விசேஷத்துக்கும் மனைவி போவா. நான் பல ரிலேஷன்களைப் பார்த்தே 20-30 வருடங்கள் இருக்கும்

   நீக்கு
  4. அதே தான் எங்க வீட்டிலும். நம்ம ரங்க்ஸ் எங்கேயும் போகலைனாலும் அலுவல் காரணமாக அவரால் எல்லாக் கல்யாணங்களுக்கும் வர முடியாது. நான் தான் போவேன் என்பதோடு அவர் தரப்பு உறவுகளிடம் அப்டேட்டாகவும் இருப்பேன். :)))) முன்னாடி மோதி இருந்தப்போ என் தரப்பு உறவுக் கல்யாணங்களுக்கு நானும் பெண்ணும் போவோம். பையர் அப்போ ஹாஸ்டலில் இருந்தார். அவர் ஆஃபீஸுக்கு லீவு போட்டுவிட்டு மோதியைப் பார்த்துப்பார். அவர் தரப்புக் கல்யாணங்களுக்கு அவர் மட்டும் போய்விட்டு முஹூர்த்தம் வரை இருந்துட்டு சாப்பிட்டுட்டு அப்படியே அலுவலகம் போயிடுவார். நாங்க வீட்டில் மோதியைப் பார்த்துப்போம்.

   நீக்கு
  5. இதென்னடா... கீசா மேடமும் பிரதமர் மோதி பெயரை உபயோகிக்கிறாரே.. குஜராத்தில் முதல் மந்திரியாக இருந்தபோதே ரொம்பப் பழக்கம் போலிருக்கே என்று ஒரு கணம் நினைத்து அசந்துவிட்டேன்.

   நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  7. இங்கே சொன்ன மோதி இதோ இங்கே! https://sivamgss.blogspot.com/2014/02/blog-post_6626.html

   நீக்கு
 30. விலங்குகள் அருகில் குழந்தை .... எனக்கு உவப்பான படங்கள் அல்ல. குழந்தைகளை பெரியவர்களே மூச்சுக்காத்து, எச்சில் படக் கொஞ்சுவதே எனக்குப் பிடிப்பதில்லை (நான் அந்தத் தவறை என் பையனுடம் செய்திருந்த போதும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், அதுவும் நாயுடன் (என்னதான் செல்லம் என்றாலும்) சின்னக் குழந்தைகள் கட்டிப்பிடித்துத் தூங்குவது போல எல்லாம் படம் பிடித்துப் போடுகின்றனர். :(

   நீக்கு
  2. நெல்லையின் கருத்துதான் எனக்கும். விலங்குகளுக்கு மிக அருகில் குழந்தைகள் இருக்கும் படங்கள் எனக்கு பிடிப்பதில்லை. பயம் வருகிறது.

   நீக்கு
 31. ஏஞ்சலின், அதிரா... என்று பலர்்இப்படி சுத்தமாக்க் காணாமல் போய்விடுகிறார்களே... எனக்கு ஆச்சர்யமா இருக்கு.

  இதுபோல ராஜி (கனாக்காலம்?)... மற்றும் பலர் இணையத்திலேயே இல்லை (blogs)

  பதிலளிநீக்கு
 32. // கல்யாணத்துக்கு முன்பான pre marriage shooting (theme park outside placesக்கு) //

  30 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மாதிரி அன்பினில் நனைந்த போட்டோக்களுடன் போஸ்டர் அடித்து ஒட்டுவது நாகரிகமாக இருந்தது..

  ஒருமுறை இதைக் கண்டித்துச் சொல்லப் போக சண்டை வந்து விட்டது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், நெருங்கிய ஒரு சொந்தத்தின் திருமணத்தில் ஸ்டால் போடுவதை எல்லாம் ரொம்பவே அதிகப்படி, பணச்செலவு என்று பெண் வீட்டாரிடம் சொல்லப் போய் உனக்குப் பொறாமை, உன் பெண் கல்யாணத்தின்போது இதெல்லாம் இல்லை! அதான் இப்படிச் சொல்றே!" என்றார்கள். அதுக்கப்புறமா எந்தக் கல்யாணங்களிலும் இதை எல்லாம் பார்த்தால் வாயே திறக்கறதில்லை. :(

   நீக்கு
 33. எனக்கு தினப்படி வேலைகளிலும் அலுப்பு வந்துவிடக் கூடாது என்று மெனெக்கிடுவேன். அதனால்தான் பேஸ்ட், பிரஷ், சோப், துண்டு, ஷூ என எதை எடுத்துக்கொண்டாலும் பலவற்றை வைத்திருப்பேன்.

  பதிலளிநீக்கு
 34. அனைவருக்கும் வணக்கம்...

  கல்யாணத்துக்கு முன்பான சந்திப்பு (pre marriage shooting) தற்போது இருவீட்டார் விருப்பத்துடன் பரவலாக பரவுகிறது...

  # குறியீட்டில் உள்ள விபரீத எண்ணம் போல் இல்லாமல், வேறு பிரச்சனை ஏற்பட்டால், மணமகன் "மடலேற துணிவான்" என்பது சந்தேகமே...!

  திருமண நாள் குறைந்தது ஓரிரு மாசம் கழித்து இருந்தால் - நேரடி தொடர்பும் இல்லாமல் இருந்தால் - காதல் மெருகேறி பூக்கும்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க DD.. உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு எங்கள் அனுதாபங்களை சொல்லுங்கள்.

   நீக்கு
 35. கேள்விகளும் , பதில்களும் அருமை.
  நான் செக்கு நல்லெண்ணெய் பயன் படுத்துக்கிறேன் வழிபாட்டுக்கு.
  இப்போது நடந்த திருமணங்களில் திருமணம் முடிந்தபின் வெளிப்புற படபிடிப்பு நடத்துஇ வந்தார்கள்.
  திருமணத்திற்கு முந்தின நாள் மாப்பிள்ளை அழைப்பு, முன்பு மாப்பிள்ளை மட்டுமே மேடையில் இருப்பார், இப்போது மணமகளும் நிற்பது நடக்கிறது.
  மூன்று ஊசி போட்டு கொண்டாலும் இன்னும் மாஸ்க் அணிந்து கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரைக்கு நன்றி. ஆம், எச்சரிக்கையுடன் இருப்பதே நல்லது.

   நீக்கு
  2. மத்திய அரசுக் கொரோனாக் கட்டுப்பாடுகளை முழுமையாகத் தவிர்க்கச் சொல்லி விட்டது. ஆனால் முகக் கவசம்/சமூக இடைவெளி கட்டாயமாம். இப்போவே யாரும் கடைப்பிடிப்பதில்லை. இனிமேலா? :(

   நீக்கு
 36. சில நேரங்களில் அலுப்பு ஏற்படவே செய்கிறது.எவ்வளவுதான் மனதை ஈடுபடுத்தினாலும் அலுப்பை மாற்ற முடியவில்லை.

  வானொலி, தொலைக்காட்சி, இறைவழிபாடு, உறவு, நண்பர்களுடன் உரையாடல்
  எல்லாம் இருந்தும் இல்லா நிலை ஏற்படத்தான் செய்கிறது.

  //என்னைப் பொருத்தவரை - ஆர்கானிக் - என்றால் - 'விலை அதிகம் - ஜாக்கிரதை - என்ற எச்சரிக்கை மணி' என்று பொருள்.//

  உண்மை.

  "கொல்லை காய்" என்று மாயவரத்தில் ஒரு அம்மா சின்ன மூட்டையில் காய் கொண்டுவருவார், சுண்டைக்காய், வல்லாரை கீரை, முருங்கை கீரை, முருங்ககாய், பிஞ்சு வெண்டைக்காய், வாழைக்காய் எல்லாம் கொண்டு வருவார்.


  பதிலளிநீக்கு
 37. தீபம் எண்ணெய் விளக்கை ஊதிப் பாருங்கள் சீக்கிரத்தில் அணையாது. எனக்கு தோன்றுவது சிறிதளவில் டீசல் அல்லது கெரொசீன் சேர்க்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 38. இந்த pre wedding photo shoot, candid camera இவையெல்லாம் படுத்தும் பாடு...! என் மகள் திருமண சமயத்திலேயே(2015) வந்து விட்டது. அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
  கட்டுமரத்தில் டைட்டானிக் படத்தில் வருவது போல போஸ் கொடுக்க முயற்சித்ததில் தவறி விழுந்து மணமகன் மரணம் என்று செய்தி வந்தது.
  உறவில் ஒரு ஜோடி முத்தமிடுவதைப் போன்ற புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்திருந்தார்கள். முகநூலில் எப்படிப்பட்ட புகைப்படங்களை பகிர்வது என்று விவஸ்தை வேண்டாமா என்று நான் என் ப்ளாகில் எழுதினேன். அதில் அவர்களை குறிப்பிடவில்லை, இருந்தாலும் "இவை யாரு இதையெல்லாம் எழுத?" என்று என்னை திட்டியதாக கேள்விப்பட்டேன்.

  பதிலளிநீக்கு
 39. கேள்வி மற்றும் பதில்கள் சுவாரசியம். படங்களும் படங்களுக்கான வரிகளும் ரசிக்கும்படி இருந்தன.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!