புதன், 30 மார்ச், 2022

பேலியோ உணவு குறித்து அறிந்திருக்கிறீர்களா? அதை ஆதரிக்கிறீர்களா?

 

நெல்லைத்தமிழன் :

உங்களிடம் வீடும் 50 லட்சமும் இருக்கிறது, இரண்டு பசங்கள்ல ஒருவன் ரொம்பவே சுமாரா இருக்கான், இன்னொருவன் நல்லா படித்து நல்ல வாழ்க்கை அமைந்திருக்கிறது என்றால், சொத்தை சரிசமமாகப் பிரிப்பீர்களா இல்லை தாழ்ந்திருப்பவனுக்கு மூன்றில் இரண்டு பங்கு என்பதுபோலப் பிரிப்பீர்களா?

# இதற்கு விடை சொல்வது எளிதல்ல.  நல்ல நிலைமையில் இருக்கும் பையன் சம்மதத்துடன் ஒரு முடிவுக்கு வருவது சிறப்பாக இருக்கும்.  பையன்கள் மட்டும் அல்ல அவர்களது மனைவியும் உடன்பட்டு சுமுகமாக தீர்க்கவேண்டியது அவசியம்.

& அவர்களையும் கலந்தாலோசித்து முடிவு எடுப்பதுதான் சரி என்றுதான் எனக்கும் தோன்றுகிறது.  

மதவெறி என்றால் என்ன? வேற்று மதத்தைச் சேர்ந்தவரை காதல் என்ற பெயரில் மதம் மாற்றுவது, குழந்தைகளை தன் மதத்தில் வளர்ப்பது, மதத்தை வைத்து வாக்களிப்பது, வெளிநாட்டுப் பணத்தை வாங்கி மதமாற்றம் செய்து தேசத் துரோகத்தில் ஈடுபடுவது போன்றவை மதவெறி என நான் நினைத்திருந்தேன்

# நீங்கள் நினைப்பது சரிதான்.  அத்தோடு "என் மதத்திற்கு மாறவில்லை என்றால் கொலை செய்வேன் "  ஒரு பக்கம்.  " கொலையே செய்தாலும் சரி -- நான் மாற மாட்டேன் "  என்பது எதிர்ப்பக்கம். இதில் ஒன்றை வெறியாகவும்  மற்றொன்றை தியாகமாகவும் நாம் பார்க்கிறோம்.  இந்தப் பார்வை சரிதானா என்பது என் எதிர்க் கேள்வி.

எதற்காகவும் உயிரை விடுவது நான் என்று இல்லாதபோது அதை தியாகமாகப் பார்ப்பது மிக எளிது . இதை நம்மில் பலரும் புரிந்து கொள்வதில்லை.

நீங்கள் சொல்வது மதம் சம்பந்தமான மோசடி.

கீதா சாம்பசிவம் :

ஹைப்ரிட் காய்கள் உடலுக்கு நல்லது செய்யுமா? பிடி கத்திரிக்காய் என்கிறார்களே! அதை எப்படிக் கண்டுபிடிப்பது? (இப்போதைக்குக் கத்திரிக்காய் வாங்கலை)

$ இப்பொழுது நாம் உபயோகிக்கும் எல்லா காய்களும் Survival of the fittest என்ற முறையில் ஆயிரக் கணக்கான வருடங்களாக மழை,மழையின்மை,காற்று வெப்பம் இவற்றுக்கு தப்பிப் பிழைத்த hybrid thaan .உபயம் தேனீக்கள்,பூச்சிகள்கள், வண்டுகள். இவற்றில் bactilus thurungis போன்ற பாக்டீரியாக்களால் தாக்கப்பட்ட காய்களில் வேறு பூச்சிகள் வாழமுடிவதில்லை. கடைகளில் காய் தேர்வு செய்யும்போது அரசின் கொள்கைகளை மனதில் கொண்டு, சோனி,நசுங்க ல், சொத்தை இவற்றை எல்லாம் பொறுக்கி எடுத்துக் கொண்டால் நீங்கள் ஆர்கானிக் காய்களையே எடுத்துள்ளீர்கள்.

# BT கத்திரிக்காய் மிகப் பெரிதாக வளர்ந்திருக்கும்.  விதைகள்  அதிகம் இரா.  விதை போட்டு முளைக்க வைக்க முடியாது என்கிறார்கள்.  எனவே கத்தரி என்பதே அழிந்து போய்விடும் என்பதால் அது நல்லதல்ல என்று கருதப் படுகிறது.  சுவையும் அதிகம் இருக்காதாம்.

& என்ன காரணமோ - இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் தவிர வேறு எதையும் உபயோகிக்கப் பிடிப்பதில்லை. போன்சாய் மரங்கள் / கனிகள்  கூட என்னைக் கவர்வதில்லை. 

பேலியோ உணவு குறித்து அறிந்திருக்கிறீர்களா? அதை ஆதரிக்கிறீர்களா?

$ Paleo பற்றி தெரிந்தாலும் என் உணவு முறைக்கு சரிப்பட்டு வராது என்பதால் நோ paleo. 

# பேலியோ உணவுமுறை குறித்து பல விதமான கருத்துக்கள் இருக்கின்றன.  எது சரி என்று தெரியவில்லை.  எனக்குத் தெரிந்த ஒரே கேசில் அவர்களது உணவுப்பழக்கங்கள் தாறுமாறு ஆகிவிட்டது என்று தெரிய வந்தது.  எனவே நான் அதை ஆதரிப்பதில்லை.

& ஆரம்பத்தில் அது என்ன என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருந்தது. அப்புறம் அதுபற்றி படித்தவுடன் - இதெல்லாம் கோடீஸ்வரர்கள் விளையாட்டு என்று தோன்றிவிட்டது. ஒவ்வொரு நாளைக்கும் பாதாம், வெண்ணை என்றெல்லாம் செலவு செய்தால் - சுலபமாக லட்சாதிபதி ஆகிவிடலாம் - கோடீஸ்வரர்கள் !!  

சர்க்கரையைக் குறைக்கப் பேலியோ உணவு சிறந்தது என்கிறார்கள். அது உண்மையாய் இருக்குமா?

$ சர்க்கரையைக் குறைக்கும் என்னும் எல்லா உணவுகள் மருந்து மாயங்கள் எல்லாம் நம் ஜீரண நேரத்தை அதிகப்படுத்தி உணவில் இருக்கும் சர்க்கரை மெதுவாக உடலில் சேரும்படி செய்கின்றன 

ஒரு முறை சாப்பிடும் உணவைப் பிரித்து 2/3 முறை சாப்பிடுவது, பருப்பு முதலான பைபர், எளிதில் இரத்தத்தில் வந்து கலக்காத எந்த carbo வும் நன்மை செய்யும்.

# சர்க்கரையைக் குறைக்க உணவுமுறையில் நியமங்கள்தான் ஒரே வழி.  பேலியோ அதைச் செய்யுமா என்பது இன்னும் ஐயமின்றி நிரூபிக்கப் படவில்லை.

& சர்க்கரையைக் குறைக்க நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொண்டாலே போதும். 

= = = = =

எங்கள் கேள்விகள் :

1) வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு (திரவ / திட ) வகைகள் என்னென்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ? அவைகளை நீங்கள் சாப்பிடுவது உண்டா? 

2) சமீபத்தில் நீங்கள் மிகவும் ரசித்துப் பார்த்த கலைப்பொருள் எது? 

3) கடுகு தாளிப்பது - சுவையைக் கூட்டுகிறதா ? ( எனக்கு என்னவோ நம் முன்னோர்கள் - எண்ணெய், பொருட்களை பொறிக்க சரியான உஷ்ண நிலைக்கு வந்துவிட்டதா என்று தெரிந்துகொள்வதற்காக ஒரு உஷ்ணமானியாகத்தான் கடுகைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று அடிக்கடி தோன்றும்) 

படம் பார்த்து கருத்து எழுதுங்க :

1)  


2)   


3)   




117 கருத்துகள்:

  1. நெல்லைத் தமிழரின் கேள்வியும், பதிலும் வெகு சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க.. வாழ்க...

      வாங்க துரை செல்வராஜூ ஸார்.   வணக்கம்.

      நீக்கு
  3. பேலியோ உணவு குறித்து - அந்த முறையைப் பின்பற்றி நலம் எய்தியதாக சம்பந்தப் பட்டவர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டாலும் -

    அந்த உணவு முறையின் மீது எவ்வித ஈர்ப்பும் ஏற்படவில்லை.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம், வணக்கம், வணக்கம், பல முறை சொன்னேன், சபையினர் நடுவில். அனைவருடைய உடல் நலமும் நோய் நொடி இல்லாமல் செழித்து இருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. கவிஞர் ஆகிறதுன்னு தீர்மானிச்சுட்டீங்க. சபையினர் முன்னே என்பது சரியா இல்லை சபையினர் நடுவில் என்பது சரியா?

      நீக்கு
    3. சபையினர் நடுவில்னு சொன்னா என்னவாம்? முன்னே மேடை இல்லை. அதான் நடுவில் போய்ச் சொன்னேன். :)))))

      நீக்கு
    4. வணக்கம் ஒருமுறை சொன்னேன் - ஓரத்தில் நின்றே - ஒன்றரை மணிக்கு !!

      நீக்கு
    5. ஹாஹாஹா கௌதமன் சார்! :)))))

      நீக்கு
    6. //வணக்கம், வணக்கம், வணக்கம், பல முறை சொன்னேன், சபையினர் நடுவில்.// கீதா அக்காவை பரதநாட்டிய உடையில் கற்பனை பண்ணி பார்த்தேன்...

      நீக்கு
  5. வெயிலுக்கேற்ற திட உணவு பழைய சாதம், ராத்திரியே தண்ணீர் ஊத்தி வைச்சுடணும். மாங்காய் ஊறுகாய் (துண்ட மாங்காய்) அல்லது சின்ன வெங்காயம். வேணும்னா சின்ன வெங்காயத்தை ராத்திரியே பழைய சாதத்தில் சேர்த்துட்டால் இன்னும் நல்லது. தயிர் ஒரு கரண்டி ஊற்றி உப்புச் சேர்த்துத் துண்டம் மாங்காயோடு சேர்த்துச் சாப்பிட்டால் தொண்டைக்குழியில் ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல உணவுதான்.  காலை பதினோரு மணியளவில் ஒரு  நீர்மோர்!

      நீக்கு
  6. நாங்க இப்போப் புதினா சுரசம். எலுமிச்சம்பழம் பிழிந்து சாப்பிடறோம். மோர் தினமுமே எலுமிச்சை பிழிந்து உப்புப் போட்டுகி கரைச்சு வைச்சுடுவேன். தேவையானப்போக் கொஞ்சம் எடுத்துக் கொண்டு பானைத் தண்ணீர் கலந்து சாப்பிடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எலுமிச்சம்பழம் பிழிந்தால் புளிப்பாகிவிடாதோ..  சமீப நாட்களாய் பயங்கர வெயில், தாங்க முடியாத வெக்கை.  பதினோரு மணி சுமாருக்கு தண்ணீர் ல்லாம் வேலைக்கு ஆகாமல் மோரில் நீரூற்றி சாப்பிடுகிறேன்.

      நீக்கு
    2. எலுமிச்சம்பழம் பிழிந்து ஜூஸே சாப்பிட மாட்டீங்களா? அந்தப் புதினா சுரசத்தில் புதினாவின் சாறு. இஞ்சியின் சுவை, கொத்துமல்லி விதையின் மணம் எல்லாம் கலந்து எலுமிச்சைச் சாறின் ருசியோடு ப்ரவுன் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை போட்டுக் கலந்த ஜூஸ் தொண்டைக்கும் உடலுக்கும் இதமோ இதம். அனுபவிச்சால் தான் தெரியும். ஓ, நீங்க மோரில் சொல்றீங்களா? இருக்காது இருக்காது! எங்க வீட்டுத் தயிர்/மோரெல்லாம் புளிக்காது. எலுமிச்சம்பழம் பிழிஞ்சால் இன்னும் ருசி கூடும்.

      நீக்கு
    3. நீங்க எல்லோரும் வெய்யில் கொடுமையிலிருந்து
      சற்றாவது விடுதலை பெற பகவான்
      அருள வேண்டும்.

      நீக்கு
    4. இரண்டு வாரங்களாக கீதா சாம்பசிவம் மேடம் சுரசம் சரசம்னுலாம் சொல்றாங்களே தவிர அதைப்பற்றி விரிவாக எழுதறதில்லை. ஒருவேளை அதைவைத்துத் தன் தளத்தில் ஒருசில பதிவுகளைத் தேத்தலாம் என்ற திட்டமாக இருக்குமோ?

      நீக்கு
    5. அதான் சொல்லி இருக்கேனே நெல்லை! ஒழுங்காவே படிக்கிறது இல்லை. என்னென்ன சேர்க்கணும்னு சொல்லி இருக்கேனே! எல்லாவற்றையும் போட்டு நன்கு அரைத்து வடிகட்டிச் சாறு பிழிந்துக் குடிக்க வேண்டியது தான். இதற்கு வெள்ளைச் சர்க்கரை அவ்வளவு நன்றாக இருக்காது. கருப்பட்டி, நாட்டுச் சர்க்கை அல்லது ப்ரவுன் சர்க்கரை தான்.

      நீக்கு
    6. விளக்கமான செய்முறை தேவை.

      நீக்கு
    7. நாம சொன்னால், அரை குறையா படித்தேன் என்று சொல்லிடுவாங்க. கேஜிஜி சாரும், விளக்கமாக எழுதச் சொல்லியிருக்கார். சரசம்...சேசே சுரசம் வருமா?

      நீக்கு
    8. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நெல்லை. புதினா ஒரு கட்டு, கொத்துமல்லி விதை இரண்டு மேஜைக்கரண்டி, இஞ்சி ஓரங்குல நீளத்துண்டு தோல் சீவி, சோம்பு ஒரு மேஜைக்கரண்டி. புதினாவை ஆய்ந்து அலம்பிக் கொண்டு மேற்சொன்ன சாமான்களுடன் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும். முதலில் ஒரு தரம் சாறு எடுத்த பின்னர் அந்தச் சக்கையை மறுபடி போட்டு இன்னொரு முறையும் அரைச்சுக்கலாம். மேல் சொன்ன அளவிற்குச் சுமார் இரண்டு டம்பளர் (400மிலி) சாறு வரும். அதில் ஒரு எலுமிச்சம்பழச் சாறைப் பிழிந்து கொண்டு தூள் செய்த வெல்லம்/கருப்பட்டித் தூள்/நாட்டுச் சர்க்கரை/பனங்கல்கண்டு இருந்தால் பொடித்துச் சேர்த்துக் கலந்து குடிக்கவும். அதுவும் காலை பத்தரையிலிருந்து பதினோரு மணிக்குள்ளாக!

      நீக்கு
    9. வெள்ளரிப்பிஞ்சுகளை வாங்கி வைத்துக்கொண்டு அப்படியே சாப்பிட்டு வரலாம். குறைந்தது ஒரு நாளைக்குக் காலை எட்டு மணியிலிருந்து மாலை நான்கு வரை, 2,3 வெள்ளரிப் பிஞ்சுகளைச் சாப்பிடலாம். தாகமே எடுக்காது. தொண்டை வறண்டும் போகாது.

      நீக்கு
    10. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  7. நடுவில் காஃபி கலக்கப் போயிட்டேன். இப்போல்லாம் காலைக் காஃபிக்கு ஆறு மணி ஆகிவிடுகிறது. சாப்பாடுக்கு மத்தியானம் ஒரு மணி ஆகிவிடுகிறது. :( என்னமோ வேலைகள்! (

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் காலை நாலேமுக்காலுக்கு காஃபி!   நாங்களும் மதியம் ஒரு மணிக்குதான் சாப்பாடு -  பல வருடங்களாகவே...

      நீக்கு
    2. நான் உணவு உண்பதில் பல வருடங்களாக ஒரு ஒழுக்கத்தைக் கடைபிடித்திருந்தேன். சமீப காலமாக (இரண்டு வருடங்கள்), காலை முதல் உணவு, 500-600 எம்எல் வெது வெதுப்புக்கும் அதிக நீர், 10-11 மணிக்கு உணவு, மாலை 6 மணிக்கு முன்னால் டிபன் என்று மாறிவிட்டது.. இது சரியா என்பதில் எனக்குச் சந்தேகம். மற்றபடி காபி பால் போன்றவை பக்கத்திலேயே செல்வதில்லை.

      நீக்கு
    3. நாங்க எப்போவுமே குறிப்பிட்ட நேரத்தைக் கடைப்பிடிப்போம். இப்போத் தான் எனக்கு உடம்பு வந்து படுத்துக் கொண்டு இருந்தபோது கொஞ்சம் கொஞ்சம் மாறியது. அதில் காலை காஃபி இப்போல்லாம் ஒரே முறை தான். ஐந்தரை/ஆறுக்குள் குடிக்கிறோம். ஏழரை எட்டுக்குள் கஞ்சி அல்லது ஏதேனும் எளிதான டிஃபன். மத்தியானம் சாப்பாடு தான் ஒரு மணி ஆகிவிடுகிறது. இரவு ஏழு மணிக்குள்ளாகச் சாப்பிட்டு முடித்துடுவோம். அதுக்கப்புறமா மறு நாள் காலைக் காஃபி தான். ஒரு சிலர் சீக்கிரமாய்ச் சாப்பிடுவதால் ராத்திரி பசிக்கலையானு கேட்பாங்க. பழகி விட்டது. பசிப்பது இல்லை.

      நீக்கு
    4. சுவையான தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. கணவன் தான் பிறந்திருக்கும் சமயக் கோட்பாடுகளில் இருந்து விலகி வேறு சமயத்துக்கு மாறி விட்டான்.அவனது மனைவியோ தனது சமயத்தின் மீது உயிரை வைத்திருப்பவள்..

    கனவனின் ம்த மாற்றத்தை வெறுக்கின்ற நிலையில் -

    அவன் அவளை வற்புறுத்த முடியுமா?..

    அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஏழடி நடந்து ஏற்படுத்திக் கொண்ட பந்தம் வேற்று கோட்பாடுகளுக்குள் சென்ற பின் இச் சடங்குகளால் ஏற்படுத்திக் கொண்ட பந்தத்தின் நிலை என்ன?..

    அது "இல்லறம்" என்றாகுமா?..
    அதன் பொருள் என்ன?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் கஷ்டமான நிலைமை.  இதை வலிந்து ஏற்றுக்கண்டவர்களும் உண்டே..  (கலப்புத்திருமணம்)

      நீக்கு
    2. எப்போது அங்கு இருவருக்குமிடையே காதல, மரியாதை இல்லையோ, அப்போது மனைவிக்கு வேறு வழியில்லை.

      பல வருடங்களாகவே நாடார் சமூகத்தில் இந்தப் பிரச்சனை அதிகரித்து, திருமணமே இந்து கிறித்துவர்களுக்கிடையே நடந்து பிறகு கிறித்துவராகிவிடுகிறார்கள் ;மனைவி கிறித்துவராக இருந்த திருமணங்களில்). இதற்கு நான் எப்படியோ வாழ்க்கை நல்லா வாழ்ந்தால்கோதும் என்ற மனநிலையும், சமயப்பற்று என்ற ஒன்று பெரும்பான்மை இந்துக்களுக்கு இல்லாத நிலையும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

      நீக்கு
    3. ஆமாம், அம்பத்தூரில் இதை அதிகம் பார்த்திருக்கேன். நாடார்கள் அங்கே அதிகம். அடுத்தது செட்டியார்களும் குஜராத்தியரும். செட்டியார்களோ, குஜராத்தியரோ அவரவர் சமூக/மத வழக்கங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எப்பாடு பட்டாவது அவரவர் கலாசாரத்தைக் கைப்பிடிப்பார்கள். நாடார்களில் ஒருத்தருக்கொருத்தர் சொந்தமாக இருந்தாலும் பையர் வீடு கிறித்துவம், பெண் வீடு இந்து என இருக்கும். அல்லது பெண் கிறித்துவம், பையர் இந்து என இருக்கும். நிறையப் பார்த்திருக்கேன்.

      நீக்கு
    4. இதெல்லாம் படிக்கும்போது, 'மதச்சார்பற்ற' என்று ஜல்லியடிப்பவர்கள் மீது வருத்தம்தான் வருது.... ஒருவேளை பெர்சனல் அஜெண்டாவாக இருக்குமோ?

      நீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இறைவன் அருளால் எல்லா நலங்களும்
    தழைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. எனக்கும் காஃபி காலையில் 5 மணிக்கு.
    8 மணிக்கு பழைய சாதம் +மோர்+ மோர் மிளகாய்.
    10 மணிக்கு சாலட், 12 மணிக்கு மதிய சாப்பாடு.
    பிறகு நடை.

    மாவடுவுக்கு எங்கே போறது?

    பதிலளிநீக்கு
  11. பேலியோவில் நம்பிக்கை இல்லை.

    நம் காய்கறிகளும் , ஆரஞ்சுப் பழமும் போதும்.
    என் டயபெடிஸ் சரியான அளவில் தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. அத்து மீறி வெளியில் ஏதாவது வாங்கி
    சாப்பிட்டால் வயிற்று வலி நிச்சயம்.
    பயமே என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. கலப்புத் திருமணம் செய்ததம்பதியினரின் பையன்
    திருமணத்துக்கு மிக சிரமப்பட்டான்.

    தந்தை வழியில் அவர் ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்து,
    வந்தப் பெண்ணுக்கும் அவனுடைய தாய்க்கும் தினம்
    லடாய். இது நடந்து 10 வருடங்கள் ஆகிறது.

    பதிலளிநீக்கு
  14. செல்லப் படங்கள் அருமை.
    கேள்வி பதில்கள் மிகச் சிறப்பு.
    சுவாரஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  15. 1) வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு (திரவ / திட ) வகைகள் என்னென்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ? அவைகளை நீங்கள் சாப்பிடுவது உண்டா?

     பழைய சோறு, நீராகாரம், கம்பங்கூழ் போன்றவை நல்லது. ஆனால் எனக்கு ஆஸ்த்மா தொந்தரவும் உண்டு என்பதால் தவிர்க்கிறேன்.

     2) சமீபத்தில் நீங்கள் மிகவும் ரசித்துப் பார்த்த கலைப்பொருள் எது?

     KGG சார் வரைந்த ஆடு கோழி படம் (ரொம்ப ஓவர் , ஹி, ஹி)

     3) கடுகு தாளிப்பது - சுவையைக் கூட்டுகிறதா ? ( எனக்கு என்னவோ நம் முன்னோர்கள் - எண்ணெய், பொருட்களை பொறிக்க சரியான உஷ்ண நிலைக்கு வந்துவிட்டதா என்று தெரிந்துகொள்வதற்காக ஒரு உஷ்ணமானியாகத்தான் கடுகைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று அடிக்கடி தோன்றும்) சுவை கூடுவது உண்மை.

    ஒரு கடுகு வாசனை, கடுகு காரம் மற்றும் எண்ணெய் கலப்பு முதலியவை சாம்பாருக்கும்  குழம்பு வகையறாக்களுக்கும்  சுவையைக் கூட்டுகின்றன. இம்மாதிரி சுவை வித்தியாசங்களை பிள்ளைகள் எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள்.

      படம் 1. யார் பிள்ளை நீ? 

    படம் 2 . இந்த எலி தான் நல்ல எலி. ஓடாது.

     படம் 3. மூதாதையர் வேண்டியதை எடுக்கிறார். அவர் படம் இல்லையேல் புதன் பதிவு முற்றுப் பெறாது. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  16. கடுகு வெடிக்காமல் கடுகைச் சாப்பிடுவது நல்லதல்ல. முன்னோர்கள் அவ்வப்போது சாப்பாட்டில் மருந்தாக ஒவ்வொன்றைச் சேர்த்திவந்திருக்கிறார்கள், balance செய்ய. அதன் ஒரு பகுதிமான் கடுகு. ;பருப்பு சாதம் இஞ்சி மிளகு சீரகம் நெய் கலந்து வெண்பொங்கலாக மாறினதைப் போல)

    பதிலளிநீக்கு
  17. //கலந்தாலோசித்து// - இது எப்படி வேலைக்காகும்? விதிவிலக்குகளாகத்தான் நடைபெற முடியும். என் தாத்தாவின் அப்பா சொத்துப் பிரித்தகோது, மூத்தவர் தனக்கு இது இது வேணும் என்று வாங்கிக்கொண்டதாகவும், என் தாத்தா, அண்ணன் எடுத்துக்கொண்டது போக மீதமே தனக்குப் கோதும் என்று சொன்னதாகவும் அதனால் என் தாத்தா பரம்பரைச் சொத்துக்கள் இல்லாமல், அவரின் அடுத்த தலைமுறை தானே சம்பாதிக்கும் திலைக்கு வந்ததாகச் சொல்வர்.

    ஆலோசனை செய்தால் எத்தனைபேர் தங்கள் உரிமையை விட்டுக்கொடுப்பர்? இரத்த சம்பந்தம் இருப்பதால் இன்னொருவன் புரிந்துகொண்டாலும் வெளியிலிருந்து வந்த மனைவி, அவர்கள் பெற்றோர் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? போகாத. ஊருக்கு வழி சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான் நியாயம் என்று அப்பா கன்வின்ஸ் பண்ண முயல்லாம். அதை ஒத்துக்கொள்ளாவிட்டால் சரிசம்மாக (அதுவுமே சாத்தியம் குறைவு) பிரிக்கலாம். அல்லது மனைவி பெயரில் தேவையான சொத்தை அவள் வாழ்க்கை நடத்த எழுதி வைத்துவிட்டு, பசங்களுக்கு தான் நியாயம் என நினைப்பதை உயிலெழுதலாம்.

      இந்துக்களில் (அல்லது பாரத்த்தில்) ஆண் பெண் செலவு வெகுவாக வித்தியாசப்படும்.

      நீக்கு
    2. எங்க புக்ககத்தில் என் மாமனார் அவர் அண்ணாவுக்கு விட்டுக் கொடுத்ததாகச் சொல்லுவார்கள். எங்களோட தலைமுறையில் மாமனார் ஒண்ணும் வைச்சுட்டுப் போகலை. இருந்ததையும் மைத்துனர்களிடம் கொடுத்துட்டார். மொத்தக் குடும்பமும் எங்கள் கவனிப்பில்! :)))))

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
    4. இப்போ எல்லாம் உயில் எழுதி வைச்சுடப் போறாங்க. நானும் உயில் எழுதப் போறேன். எனக்கப்புறமா என்னோட புத்தகங்கள் யாருக்குப் போய்ச் சேரணும்னு. அதுக்கு இப்போவே நிறையப் போட்டி! என் அண்ணா, தம்பி, நண்பர்களில் சிலர், என் நாத்தனார் மாப்பிள்ளை ஆகியோர்! அதிலும் நாக்பூரில் இருக்கும் நாத்தனார் மாப்பிள்ளை பாரதியின் பரம ரசிகர்.

      நீக்கு
    5. உயில் எழுதி வைச்சுட்டுப் போறாங்க. வைச்சுட னு வந்துவிட்டது. :(

      நீக்கு
    6. :))) கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    7. என் புத்தகங்களை ஏதாவது நூலகத்திற்கு தான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அடுத்த தலைமுறையில் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் குறைவு. எனக்குப் பிறகு என் புத்தகங்கள் என்னவாகுமோ? என்ற கவலையினாலேயே புத்தகங்கள் வாங்குவதை குறைத்து விட்டேன்.

      நீக்கு
    8. ஹாஹாஹா, பானுமதி, அநேகமாக எங்கள் வீட்டிலும் சின்னவர்கள் தலைமுறையில் என் அண்ணா பெண்/பிள்ளை, தம்பி பிள்ளைகள் தவிர்த்து யாருக்கும் தமிழ் தெரியாது. தம்பி பிள்ளைகள் ஶ்ரீராம் பிள்ளைகளைப் போல் புத்தகங்களில் ஆர்வம் இல்லாதவர்கள். அண்ணா பிள்ளைக்குப் புத்தகங்கள் படிக்க நேரம் கிடைக்குமா சந்தேகம். அண்ணா பெண்ணோ புத்தகங்கள் வாங்கினாலும் உட்கார்ந்து படிப்பதில்லை.

      நீக்கு
  18. வெயிலுக்கு ஏற்ற உணவு - எனக்கு இதில் சந்தேகம் உண்டு. கடவுள்/இயற்கை, வெயில் காலத்தில் சூட்டுப் பழங்களின் காலமாகச் செய்திருக்கிறது. உதா... மாங்காய் புளி... அதே சமயம் எலுமி வெயில் காலத்தில் மிக்க்குறைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எலுமி வெயில் காலத்தில் குறைவு - விலையா அல்லது விளைச்சலா ?

      நீக்கு
    2. விலை அதிகம்.. இப்போ நல்ல சைஸ் எலுமி, நல்ல பெருசா இருப்பது, 6 ரூபாய் ஒன்று. கொஞ்சம் சிறிது, சீசனின் ஒரு ரூபாய்க்குக் கிடைக்கும். வெயில் காலத்தில் வரத்தும் சிறிது குறைவு

      நீக்கு
    3. இங்கே நாங்க எல்லா நாட்களிலும் எலுமிச்சையைக் கட்டாயமாய் வைத்திருப்போம். மோருக்கு தினமும் பிழிவதோடு அவ்வப்போது இந்தச் சுரசம் சாப்பிட, ரசம் வைக்க, நன்னாரியோடு பிழிந்து சாப்பிட என!

      நீக்கு
  19. ரசித்துப் கார்த்த (அவசர அவசரமாக) - சபீபத்தில் நிறைய. படங்கள் போடாமல் விளக்குவது கடினம். திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் முன் மண்டபம், திருக்குறுங்குடி முன் மண்டபச் சிற்பங்கள், இரு வாரங்களுக்கு முன் சென்ற சில கோவில்கள்.

    படங்கள் அனுப்பலாம் என்றால், சிவன் சொத்தை கிறித்துவப் பள்ளிக்கு நெடிய குத்தகைக்கு விட்ட அநியாயம் போல், ஞாயிறை தெடுங்காலக் குத்தகைக்கு விட்டுவிட்டாங்க. என்ன செய்யறது?

    பதிலளிநீக்கு
  20. @ ஸ்ரீராம்..

    // மிகவும் கஷ்டமான நிலைமை...//

    அதற்கான பதில் இது இல்லை..

    பதிலளிநீக்கு
  21. பேலியோவில் நம்பிக்கை இல்லை. நம் உணவையே சரியான விதத்தில், அளவாகச் சாப்பிட்டு, உடற்பயிற்சி, சோம்பலா இல்லாமல் வேலைகள் செய்து கொண்டு இருந்தாலே சர்க்கரை அளவை மெயின்டைய்ன் செய்யலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. முதல் படத்தில் வலியவன் எளியவனைப் பயமுறுத்தல்.
    இரண்டாவது படம் ரொம்பச் செல்லமோ?
    மூன்றாவது படம் நம்ம முன்னோர் இல்லாத இடம் ஏது?

    பதிலளிநீக்கு
  23. 1. நீராகாரம், கூழ், சாலாட், பழங்கள், சர்க்கரை சேர்க்காத பழரசம், சம்பார மோர்.இன்னும் சொல்லலாம்

    2. சமீபத்தில் என்ன? ஊருக்குச் சென்ற போதும், தினமுமே இயற்கையின் கலையை ரசித்துக் கொண்டிருக்கிறேன். படங்களும் எடுத்துக் கொண்டு...

    3. கடுகு - உங்கள் ப்ராக்கெட் தகவல் அட என்று சொல்ல வைத்தாலும் கடுகு தாளித்தாள் கண்டிப்பாகச் சுவை கூடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. பதில்கள்
    1. இதுக்கு அர்த்தம், சாப்பிட்ட பிறகு வருவேன் என்று எடுத்துக்கொள்வதா? இல்லை, சாப்பாடு முழுமையாகத் தீரவில்லைனா, அதனை திப்பிச முறையில் ஏதேனும் செய்து இரவுக்குப் பண்ணிச் சாப்பிட்டுவிட்டு அதன் பிறகு வருவேன் என்று எடுத்துக்கொள்வதா? 3 1/4 மணி வரைல ஆளைக் காணோமே.. அதனால் கேட்டேன்.

      நீக்கு
    2. ஹாஹாஹா, சாப்பிட்டுட்டு உட்காரலாம்னா மல்லிகைப்பூ வந்துடுத்து. அது தொடுத்து முடிக்க இரண்டே கால் ஆகிவிட்டது. பூத்தொடுத்ததும் உடனே படிக்கக் கஷ்டம் என்பதால் கண்களுக்கு ஓய்வு கொடுத்துப் படுத்து விட்டேன். மூன்றே காலுக்குத் தான் எழுந்தேன். காஃபிக்கடை முடிந்து இரவுக்கான ஏற்பாடுகள் முடிந்து இப்போ வந்திருக்கேன். :))))

      நீக்கு
  25. பிடி கத்தரிக்காய் பற்றியும் கீதாக்காவின் பதிவிலேயெ சின்னதாகக் கருத்து சொன்ன நினைவு.

    கத்தரிக்காய் செடி பூச்சிகள் தொந்தரவினால் நஷ்டம் அதிகமாகியதால் மருந்து அதிகமாகத்தெளிக்கப்பட்டு விளைவித்தாங்க. அப்போதான் பயோடெக் கத்தரிக்காய்கள் அறிமுகப்படுத்தப்பட்டு முதலில் வரிக்கத்தரி மட்டும் பயோடெக் என்று சொல்லப்பட்டது போய் தற்போது எல்லா வெரைட்டியுமே பயோடெக் கத்தரி என்றுதான் வருகிறது. முன்பு கடைகளில் பயோடெக் கத்தரி என்று அட்டை வைத்திருப்பார்கள் கத்தரிக்காய் பெட்டியில் ஆனால் தற்போது அப்படிக் காண முடிவதில்லை. இந்தக் கத்தரிக்கு அதிகமாகப் பூச்சி மருந்து கெமிக்கல் அடிக்கத் தேவையில்லை.

    பயோடெக் கத்தரி நார்மல் கத்தரி போன்று அதே சத்துள்ளது. கெடுதல் இல்லை என்றுதான் சொல்லப்படுகிறது.

    இங்கு நான் வாங்கும் கத்தரிக்காய்கள் பெரும்பாலும் புழு அரித்ததாகத்தான் இருக்கிறது. சமையலுக்குக் குறையுமாக இருக்கலாம் ஆனால் மனசுக்குத் திருப்தி.

    பயோடெக் கத்தரிகளினால் விவசாயிகளுக்கு மகசூல் கிடைக்கிறது நல்ல விஷயம். பயோடெக் நம் ஐசிஏஆர் அப்ரூவலில்தானே நடக்கிறது. அவர்கள் அதை ஆராய்ச்சி செய்துதான் அறிமுகப்படுத்தியிருப்பார்கள் அதில் பாதகம் இருக்காது என்பதால்தான் என்று தோன்றுகிறது.

    சரி வீட்டுத் தோட்டம் போடலாம் என்று சொல்லலாம் அதில் கூடியவரை பூச்சி மருந்து தெளிக்காமல் இயற்கையாக விளைவித்தாலும் நாம் போடும் விதைகள் நாட்டு விதைகள் என்று எப்படிச் சொல்ல முடியும்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. பயோ டெக் என்பதை விட GM என்பது தான் சரி. BT (Bacillus thuringiensis) க்கு முன்பே விளக்கம் தந்து விட்டார்கள். என்ன இருந்தாலும் பழைய காலத்து வெண்ணை கத்தரிக்காய்கள் ருசியே தனி. தற்போது சில வெள்ளை கத்தரிக்காய்களிலும் சில குண்டு பச்சை கத்தரிக்காய்களிலும் கொஞ்சம் வெண்ணை ருசி கிடைக்கிறது. தேங்காய்  சைஸ் டெல்லி கத்தரிக்காய்களுக்கு ருசியே கிடையாது.

       Jayakumar

      நீக்கு
    3. இந்தக் கேள்விகள் கேட்கும்போது தான் கத்தரிக்காய் வாங்கவே இல்லைனு சொல்லி இருந்தேன். திருஷ்டி! போன வாரம் வந்த கத்திரிக்காய் முந்தாநாளோடு செலவு செய்துட்டு அப்பாடானு இருந்தால் இன்னிக்கு அரைக்கிலோ வந்திருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எனக்கு ரொம்பப் பிடிச்ச கத்திரிக்காயை இப்படி தினமும் வாங்கிட்டு வராரே! என்னவா இருக்கும்?

      நீக்கு
    4. ஆமாம் ஜெனிட்டிக்கலி மாடிஃபைட் தெரியும் ஜெகே அண்ணா

      அது பிடி பிடி என்று சொல்வதால் அப்படி எழுதினேன்

      கீதா

      நீக்கு
  26. சொத்து சரிசமமாக பிரித்தால் பிரச்சனை இல்லை... பிறகு அவர்களுக்குள் "கொடுத்தல் வாங்கல்" நடந்தால் சிறப்பு...

    பேலியோ போலியோ...?

    பதிலளிநீக்கு
  27. எங்கள் அம்மா சொத்து எல்லோருக்கும் என்று எழுதி வைத்தார்கள். நானும் என் கணவரும் அதை பெற்றுக் கொண்டு என் சகோதர சகோதரிகளுக்கு பிரித்து கொடுத்து விட்டோம். என் கணவர் வீட்டு சொத்து இன்னும் பிரிக்கபடாமல் இருக்கிறது.

    நாம் வாங்கி கொண்டு அப்புறம் நம் விருப்பபடி கொடுக்கலாம்.


    கடுகு வெடிக்காமல் சாப்பிட்டால் வயிற்று வலி வரும் என்பார்கள்.
    கடுகு சிறந்த மருந்து பொருள், ஊருகாயில் அது கெட்டு போகாமல் இருக்க கடுகு பொடித்து போடுவார்கள். சாம்பார் பொடி கெட்டு போகாமல் இருக்க சிறிது அளவு கடுகு சேர்ப்பார்கள். அதிகமாக சேர்க்க கூடாது.
    பிள்ளை பெற்ற சமயம் கடுகு பெருங்காயம் வறுத்து பொடித்து ஒரு உருண்டை சாதம் கொடுப்பார்கள். மதுரையில் செளராஷ்டிரா வீடுகளில் கடுகு சாதம் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாம் வாங்கி கொண்டு அப்புறம் நம் விருப்பபடி // கோமதி அரசு மேடம்... சொத்து என்பது எப்போதுமே பிரச்சனைகளோடுதான் பிரிக்க இயலும். எல்லாவற்றிர்க்கும் விலை போட்டு ஒவ்வொருவருக்கும் பிரிப்பது கடினம். வாங்கிக்கொண்டவர்களும் புரணி பேசாமல் (அவர்களுக்குள்ளேயாவது) இருக்கமாட்டார்கள். பாரதத்தில் பெற்றோர் சொத்து தங்களுக்கு என்ற எண்ணம் உண்டு, மேற்கத்தைய நாட்டில் அப்படி இல்லை.

      என் பெரியப்பா அப்படி ஒரு வீட்டை (on behalf of brothers as well) தன் கசினுக்குப் போய்ச்சேரவேண்டியதைக் கொடுத்துவிட்டு எடுத்துக்கொண்டபோது கசின், தாங்கள் ஏமாற்றப்பட்டதாக மனம் குமைந்தனர். என் பெரியப்பா அப்படி வாங்கிய வீடும் வீணாகப் போயிற்று, யாருக்கும் பிரயோசனம் இல்லாமல். இது நடந்தது திருவனந்தபுரத்தின் முக்கிய வீதியில்.

      நீக்கு
    2. கோமதி அரசு சொல்லி இருப்பதைத் தான் நானும் சொல்ல இருந்தேன். கடுகு பதப்படுத்துவதற்கு முக்கியமாய் ஊறுகாய்களுக்குச் சிறந்தது. அதோடு அதில் சல்ஃபர் இருப்பதால் உடலுக்கும் தேவை. கடுகு தாளிக்காமலா சமைப்பார்கள்? சொன்னால் சிரிப்பீர்கள்! நான் கூட்டு, சட்னி, பச்சடி ஆகியவற்றில் தாளிக்கும் கடுகைப் பொறுக்கிச் சாப்பிடுவேன். :))))) வெந்தயத்தையும்.

      நீக்கு
    3. நீங்கள் சொல்வது போல நகை , வீட்டு பாத்திரங்கள், வீட்டு சாமான்கள் பிரித்தால் பிரச்சனைகள் வரலாம். அது எல்லாம் அம்மா இருக்கும் போதே பிரித்து யார் யாருக்கு கொடுக்க வேண்டுமோ கொடுத்து விட்டார்கள். வீடு மட்டும் அண்ணன் எடுத்து கொண்டு பணமாக கொடுத்தார்கள் அதை சரி சமமாய் எல்லோருக்கும் பிரித்து கொடுத்தார்கள் அண்ணி.(அண்ணன் இல்லை) நாங்கள் என் பங்கை எல்லோருக்கும் சரியாக பிரித்து கொடுத்தேன்.

      மாமனார் வீட்டு உபயோகபொருட்களை அவர் அவர் வேண்டுவதை எடுத்து கொண்டார்கள். வீடு இன்னும் முடிவு செய்யவில்லை . யாருக்கும் நேரம் இல்லை பார்க்க.

      நீக்கு
    4. நானும் பெரிய கடுகாய் சிலர் வீடுகளில் தாளித்து இருப்பார்கள், அதை பொறுக்கி எடுத்து வைத்து சாப்பிடுவேன். நான் சிறு கடுகாய் வாங்குவேன். கொஞ்சம் போட்டு தாளிப்பேன்.

      நீக்கு
    5. என் அம்மா தாளிக்கப்பெரிய கடுகுதான் எனச் சொல்லுவார்கள். திரு பாரதிமணி ஐயாவும் அப்படியே சொல்லுவார். ஆனாலும் எப்போவுமே பெரிய கடுகே தாளித்துப் பழக்கம் என்பதால் சின்னக் கடுகு ஊறுகாய்களுக்குப் பொடித்துப் போட வைச்சுப்பேன். அதையும் உருட்டிட்டுத் தான் காய வைச்சோ வெறும் வாணலியில் வறுத்தோ பின்னர் பொடிக்கலாம். சின்னச் சின்னக் கற்கள் நிறைய இருக்கும்.

      நீக்கு
    6. எங்கள் அம்மா சொத்து எல்லோருக்கும் என்று எழுதி வைத்தார்கள். நானும் என் //////கணவரும் அதை பெற்றுக் கொண்டு என் சகோதர சகோதரிகளுக்கு பிரித்து கொடுத்து விட்டோம்.// பெரிய மனது உங்களுக்கு. நீங்கள் இருவரும் ஒத்துப் போனதும் மிகச் சிறப்பு __/\__ __/\__

      நீக்கு
  28. தோட்டத்தில் இயற்கையாக விளைந்த காய்கறிகள், கீரைகள் நல்லதுதான், செயற்கை உரங்கள் , செயற்கையாக விளைவித்த காய்கள், பழங்கள் நல்லது இல்லைதான்.
    மோரிஸ் என்ர பச்சை பழம் இப்போது மஞ்சளாக கிடைக்கிறது பச்சை பழம் இப்போது கிடைப்பது இல்லை. கோவையில் கிடைக்கும் நம் ஊர் பக்கம் இப்போது எல்லாம் மஞ்சள் பழம் தான் கிடைக்கிறது.

    பேலியோ உணவு நமக்கு சரிபட்டு வராது.

    பதிலளிநீக்கு
  29. கோடைக்கு திரவ உணவு சிறந்தது அவரவர் விருப்பம் போல் அருந்தலாம்.
    பலநாட்களாக வரமுடியவில்லை ஜலதோசம் உடம்பு உழைவுவேறு வேலைகளுடன். நல்லகாலம் வேறு ஒன்றுமில்லாமல் தப்பித்து விட்டேன்

    இனிமேல்தான் ப்ளாக்குகள் பக்கம் செல்லவேண்டும் விடுபட்டவை படிக்கவேண்டும்.
    இதற்குள் நாளுக்கு 10 மணித்தியால பவர்கட் வேறு .வேலைகளுடன் சமாளிக்கவேண்டும் :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல் நலத்தில் கவனம் வைக்கவும். அங்கே உள்ள நிலைமை பற்றித் தொலைக்காட்சிச் செய்திகள் மூலம் பார்த்து வருந்துகிறோம். கையாலாகாத நிலை! வேறேன்ன செய்வது? விரைவில் சரியாகட்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.

      நீக்கு
    2. உங்கள் அன்பான விசாரிப்பிற்கு மிக்கநன்றி. ஓரளவு நலமாக இருக்கிறேன்.

      நீக்கு
  30. சமீபத்தில் எந்தக் கலைப்பொருளையும் ரசித்துப்பார்க்கும்படியான சூழ்நிலை ஏற்படலை.
    பேலியோ உணவு பற்றிய கேள்விக்கு $ அளித்திருக்கும் பதில் சரியானது, உண்மையும் கூட. சாப்பிடும் சாப்பாடையே அளவோடு சாப்பிட்டால் போதும். சில மருத்துவர்கள் இட்லி, தோசையே சாப்பிடாதே என்பார்கள். அன்னிக்கு நான் தோசை வார்த்து 3 சாப்பிட்டுடுவேன். :))))

    பதிலளிநீக்கு
  31. அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் தூக்கம் போய் விட்டீர்களா?

    வெயிலுக்கு ஏற்ற உணவு என்றால் கீதா அக்கா சொன்னதுதான்.

    நீங்களெல்லாம் வெய்யில், சூடு என்றெல்லாம் பேசும் பொழுது இங்கே
    வெயில் எப்போது தொடங்கும் என்றிருக்கிறது. இன்று காலை கூட லேசான பனிப்பொழிவு. :(((
    காலையில் என் பேத்தியை எழுப்பிய பொழுது,"I want summer to start" என்றாள்.

    பதிலளிநீக்கு
  32. நியாயப்படி பார்த்தால் சொத்தை சமமாகத்தான் பிரிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் பட்சபாதமாகத்தான் நடந்து கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  33. கடுகு தாளிப்பது உணவிற்கு நிச்சயமாக சுவையும், மணமும் சேர்க்கும்.

    பதிலளிநீக்கு
  34. பேலியோ என்பது பற்றித் தெரியவில்லை. வீட்டில் எப்போதும் கேரளத்துப் பாரம்பரிய சமையல்தான்.

    கொஞ்சம் சுமாராக இருக்கும் பைய்னுக்குப் பணத்தில் கூடுதல் கொடுப்பது அப்படிச் செய்வதில் தவறில்லை. ஆனால் மற்றவருக்கும் அவரது குடும்பத்திற்கும் விட்டுக்கொடுக்கும் மனம் வேண்டும். போதும் என்ற திருப்தி பலருக்கும் இருப்பதில்லையே.

    துள்சிதரன்

    பதிலளிநீக்கு
  35. கேள்வி பதில்கள் நன்று. கடுகு குறித்த தங்களது கேள்வி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

    பதிலளிநீக்கு
  36. சமீபத்தில் ரசித்துப் பார்த்த கலைப்பொருள் என்றால் தன்னுடைய கிராஃப்ட் பேப்பர்களைக் கொண்டு என் பேத்தி செய்திருந்த இயர் போனுடன் கூடிய ஐபேட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! படம் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். அடுத்த புதன் பதிவில் வெளியிடுகிறோம்.

      நீக்கு
  37. @நெல்லைத்தமிழன்

    /மதவெறி என்றால் என்ன? //

    நான் பேஸ்புக்கில் போட்ட பதிவை இந்த கேள்விக்கு பதிலாக தருகின்றேன் "இந்தியத் தேச மக்கள் தங்கள் மதத்தை, மதக் கோட்பாடுகளை, பழக்கவழக்கங்களை பின்பற்றுவதற்குப் பதிலாக மாற்று மதங்களை வெறுக்க துவேசிக்க கற்றுக் கொண்டுள்ளார்கள். இதில் எந்த மத மக்களும் விதிவிலக்கல்ல. இதைத்தான் நான் மதவெறி என்கிறேன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!