திங்கள், 7 மார்ச், 2022

"திங்க"க்கிழமை - Pumpkin sauce pasta - நிவி அர்விந்த் ரெஸிப்பி

 Pumpkin sauce pasta

நிவி அர்விந்த்

தேவையான பொருட்கள் :




பரங்கிக்காய்  சிறியது ஒன்று 
பெரிய வெங்காயம் 
பூண்டு 
பால்,
சீஸ் 
மிளகுப்பொடி 
வெண்ணெய் 
உப்பு,
பாஸ்தா 

செய்முறை :



முதலில் பாஸ்தாவை உப்பு கொஞ்சம் எண்ணெய் விட்டு நீரில் கொதிக்க வைக்கவேண்டும்.  கடிக்கும் பதம் வந்ததும் அதிலுள்ள தண்ணீரை வடித்துவிட்டு குளிர்ந்த நீரில் ஒருமுறை சுத்தம் செய்து  வைத்துக் கொள்ளவும்.



ஒரு Panல கொஞ்சம் ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் போட்டு, அதில் பொடியாக நறுக்கிய மூன்று அல்லது நான்கு பூண்டு, வெங்காயம் ஒரு கப் போட்டு நன்றாய் வதக்கவும்.  இரண்டும் வதங்கியதும் அதில் அந்றுக்கி வைத்துள்ள பரங்கிக்காயைப் போட்டு அதோடு அரை டம்ளர் அளவு பால் விட்டு அது நல்ல பதமாக வருமளவு வதக்கவும். 


பின்னர் அதை எடுத்து, ஆறவைத்து மிக்சியிலிட்டு அரைத்துக் கொள்ளவும். இதில் கொஞ்சம் முந்திரி சேர்த்துக் கொண்டால் க்ரீமியாக நன்றாய் இருக்கும் 



இப்போது அதே panல கொஞ்சம் வெண்ணெயோடு இந்த அரைச்ச விழுதை விட்டு  கொதிக்க விடவேண்டும். பின்னர் இதில் ஏற்கெனவே ஓரமாக வைத்துள்ள பாஸ்தாவை விட்டு புரட்டுங்கள். கன்ஸிஸ்டன்ஸி அடஜஸ்ட் பண்ணிக்கலாம்.  இன்னும் கொஞ்சம் சாஸ் போல வேணும்னா பால் சேர்த்துக்கலாம்.  குழந்தைகளுக்கு இதை அபப்டியே தரலாம்.


பெரியவர்களுக்கு இதில் மிளகுப்பொடி, உப்பு, oregano போட்டு சாப்பிடத் தரலாம்.


நான் பூண்டு, மூலிகை, வெண்ணெய் சேர்த்து தயார் செய்தேன்.  நல்ல வாசனையாய் இருந்தது.


இந்த பாஸ்தாவில் சுவையே அந்த இனிப்பு சுவைதான்.  எனவே, ரொம்பக் காரம் சேர்க்காமல் செய்வது பெட்டர்!  இல்லை, காரம் வேண்டுமென்றால் இரண்டு பச்சை மிளகாய் போட்டு கூட அரைக்கலாம்.

36 கருத்துகள்:

  1. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க தமிழ்.. வாங்க துரை செல்வராஜூ சார்... வணக்கம்.

      நீக்கு
  2. எளிய பொருட்கள்..
    அழகான செய்முறை..
    சுவையான பாஸ்தா..

    அருமை..

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. ஹையோ! நோ ரோபோ! ஜாலி, ஜாலி, ஜாலி! பாஸ்தா இந்தக் காலத்து உணவு நம் மக்களுக்கு. நான் ஒரு முறை எதுக்கோ இலவசமாய்க் கொடுத்த பாஸ்தாவை சேமியா போல் காய்கள் எல்லாம் போட்டுப் பண்ணினேன். :)))) கிட்டத்தட்ட உப்புமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது மிஞ்சியது. மாலை டிபனாக, அதை பூரணமாக வைத்து மோமோஸ் பண்ணினேன். ரங்க்ஸுக்கு பிடித்திரூந்தது --+ இதை எழுத மறந்துட்டாரோ?

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது கிடைச்சதே ஓசியிலே. நூடுல்ஸ் பாக்கெட்டை வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்துட்டேன். பாஸ்தாவை சேமியா மாதிரிப் பண்ணி பெண் ஒரு முறை கொடுத்தாள். அதனால் அந்த ஞாபகத்தில் வைச்சுக்கொண்டேன். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ஒரு சின்னக் கிண்ணம் பாஸ்தாவில் மிச்சம் வேறே வைக்கணுமா? மோமோஸ் இன்னும் பண்ணிப் பார்க்கலை. விரைவில் பண்ணணும். சமீபத்தில் உளுந்துப்பூரணம், கடலைப்பருப்புப் பூரணம்(காரம் போட்டது) வைச்சு கோதுமை மாவில் மோமோஸ் மாதிரிப் பண்ணி வேகவைச்சுப் பின்னர் எண்ணெயில் பொரித்தோ/நன்கு வறுத்தோ எடுக்கிறார்கள். அந்த மாதிரிப்பண்ணியும் பார்க்க யோசனை. :))))

      நீக்கு
  5. கு.கு.வுக்கு மருமகள் இம்மாதிரிச் செய்து தருவார். பறங்கிக்காயில் பாயசம், அல்வா போன்றவையும் செய்யலாம். கிட்டத்தட்டக் காரம் இல்லை என்பதால் இங்கேயும் அது தான் எனலாம். தற்கால நடைமுறைக்கு ஏற்ற உணவு வகையைப் பகிர்ந்தமைக்கு நன்றி. உங்கள் தங்கை பெண்ணிற்கு வாழ்த்துகள் ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வனக்கங்கள்!!

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!!

    பதிலளிநீக்கு
  8. Indian Fusion Styleல் ஒரு வித்தியாசமான பாஸ்தா குறிப்பு!! அளவுகள் குறிக்கப்படவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணளவு தான் எடுத்துக்கணும். :))))

      நீக்கு
    2. நானெல்லாம் அளவு சொல்லி இருந்தாலும் அது மாதிரி எல்லாம் பண்ணுவதில்லை. என்னோட கண்ணளவு தான். :)

      நீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஆரோக்கியம் நிறை வாழ்வு தொடர இறைவன்
    துணை.

    பதிலளிநீக்கு
  10. பாஸ்தா மகன்கள்,மகள் வீட்டில் அடிக்கடி செய்யப்படும் பொருள்.
    அதுவும் ப்ரௌன் ரைஸ் பாஸ்தா.
    நிறைய செல்லுபடியாகும். நிவி அர்விந்த் செய்முறையில் நூதனமான
    பரங்கிப் பாஸ்தா நல்ல ரெசிப்பி.

    அழகாகச் செய்து,படங்களையும் கருத்தாகப் பதிவிட்டிருக்கிறார்.
    அவருக்கு மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான செய்முறை ...

    எங்கள் வீட்டிலும் இப்பொழுது எல்லாம் அடிக்கடி இந்த பாஸ்தா உண்டு ,
    ஆனால் இது போல பரங்கி சேர்த்து அரைத்தது இல்லை ...வித்தியாசமான குறிப்பு ..

    வாழ்க நலம் ..

    பதிலளிநீக்கு
  12. புதுமையான ஃப்யூஷன் உணவு. செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. இப்படி குழைந்தைகளையே அவர்களுக்கு பிடித்தமானதை செய்யவிட்டால் பின்னர் அவர்கள் டிபனைப் பற்றி குறையோ, அல்லது சாப்பிடாமல் விடுவதோ நடக்காது. 

    பாஸ்தா, மாக்கரோனி, சேமியா, நூடுல்ஸ், மோமோஸ், போஹா, வடா பாவ், சாண்டவிச், கார்ன் பிளேக்ஸ இப்படிப்பட்ட விதம் விதமாக பலகாரங்கள் அவ்வப்போது செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். இடையில் இட்லி, தோசை, பணியாரம், ஊத்தப்பம், செட் தோசை, உப்புமா, ரவா தோசை, கேழ்வரகு தோசை, கோதுமை தோசை, இடியாப்பம், அப்பம், ஆப்பம், புட்டு, கொழுக்கட்டை, தவள அடை , கார அடை, பூரி, பொங்கல், சப்பாத்தி, கிச்சடி என்று ஒரு மாதத்தில் 30 நாளும் 30 வகையான டிபன் செய்யலாம். மாறுதலாகவும் இருக்கும். ரெடிமேடு புட்டு மாவு, இடியாப்ப மாவு, அப்ப மாவு ஆப்பமாவு, கேழ்வரகு மாவு என்பவை கிடைக்கின்றன.  

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மசால் தோசையை விட்டு விட்டேன். 

      நீக்கு
    2. குழந்தை? யாரு? நிவி அரவிந்தா? ஹிஹிஹிஹி! அவருக்கே குழந்தை பிறந்துவிட்டது போலிருக்கே! இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    3. எங்க வீட்டில் இப்படி மாற்றி/மாற்றித் தான் சமையல் டிஃபன் எல்லாமும்! ஆனால் அதுவே போரடிக்குது என்பார். அன்னிக்கு வெளியே ஏதானும் ஓட்டலில் வாங்குவார். எங்கே வாங்கினாலும் என்னோட கோட்டா 3 இட்லிகள் மட்டுமே!

      நீக்கு
  14. எனக்கு இந்தப் பிள்ளை வீட்டிலும் பாஸ்தா அடிக்கடி உண்டு பல மாதிரிகளில் செய்வார்கள் பரங்கிக்காய் சூப் செய்து சாப்பிடுவது இங்கே எல்லோரும் செய்கிறார்கள் அதனுடன் சில மசாலாக்கள் சேர்த்து செய்தவுடன் பிரட் சீஸ் முதலானது வைத்துக்கொண்டு டின்னர் ஐ முடித்துவிடுகிறார்கள். இதுவும் ருசியாகஇருக்கும் செய்து பார்க்கச் சொல்கிறேன் பரங்கிக்காய் முற்றியதாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன் நன்றாக எழுதி இருக்கிறார்

    பதிலளிநீக்கு
  15. சூப்பர் ரெசிப்பி! தெளிவான படங்களோட அழகா சொல்லிருக்காங்க நிவி! வாழ்த்துகள் சொல்லிடுங்க ஸ்ரீராம்.

    பாஸ்தா முன்பு அவ்வப்போது செய்வதுண்டு. சமீபமாகச் செய்வதுஇல்லை.

    ரெசிப்பில சீஸ் இருக்கு செய்முறைல மிஸ்ஸிங்க்!! பேச்சுலர்ஸ், முதன் முதலா செய்யறவங்களுக்கு டவுட் வருமே அதான் சொன்னேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீராம், நிவிக்கு ஏற்கனவே தெரிஞ்சுருக்கும் இருந்தாலும் சும்மா பம்ப்கின் பார்த்ததும் சொல்லத் தோன்றியது.... சொல்லுங்க அவங்ககிட்ட. பம்ப்கின் பட்டர் னு ரொம்ப ரொம்ப சிம்பிள் ரெசிப்பி..சில வகைகள் இருக்கு எது பிடிக்குமோ அதை....15, 20 நிமிஷத்துக்குள்ள செய்துவிடலாம். அது செஞ்சு ரெடியா வைச்சாச்சுனா இந்த மாதிரி மிக்ஸிங்க், ப்ரெட் ஸ்ப்ரெட், சப்பாத்தி ஸ்ப்ரெட் ரோல் செய்யலாம். பேருதான் பம்ப்கின் பட்டர். வெண்ணை இல்லா ரெசிப்பி. பரங்கிய வெண்ணை போல செய்யறதுனால இப்படி பெயர்.

    இது மேற்கில் ஒரு சீசனில் காய்த்து கொட்டிக் கிடக்குமே அப்ப இப்படி நாம ஊறுகாய் போடுவது போல செஞ்சு வைத்துவிடுவார்கள். ஆபத்பாந்தவன்.

    இப்போதெல்லாம் திங்க வுக்குச் செய்து அனுப்பும் ஒரு மனநிலையே இல்லை. இல்லை என்றால் பம்ப்கின் பட்டர் எல்லாம் செய்து அனுப்பியிருப்பேன். செய்து படங்கள் எடுத்த துப்கா, திபெத், பூட்டான் குறிப்புகள் இருந்தது எல்லாம் ரிப்பேர் ஆன ஹார்ட் டிஸ்க், கரப்டெட் பென் ட்ரைவில்...பென் ட்ரைவ் ரெக்கவர் பண்ண முடியவில்லை. ஹார்ட் டிஸ்கில் இருப்பதை மீட்க முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் அது இப்போதைக்கு நடக்காது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா,
      சீக்கிரம் ரெகவர் ஆகணும். என் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    2. // சீக்கிரம் ரெகவர் ஆகணும். என் பிரார்த்தனைகள்.// ஹார்ட் டிஸ்க் டேட்டாவா ??

      நீக்கு
  17. பூசணி சோஸ் பாஸ்ரா வித்தியாசமான குறிப்பு.

    இக்காலத்தில் இதைதானே விரும்புகிறார்கள். எங்கள் வீட்டிலும் பாஸ்ரா, நூடில்ஸ் ,மக்கரோனி, ஸ்பகற்றீ , எல்லாம் உண்டு காரம் சேர்ப்போம்.

    பதிலளிநீக்கு
  18. குறிப்புகள் நன்று.... பாஸ்தா எனக்குப் பிடிப்பதில்லை. :)

    பதிலளிநீக்கு
  19. பாஸ்தா செய்முறையும் படங்களும் அருமை.
    பேரபிள்ளைகளுக்கு வாங்கிய பாஸ்தா இருக்கிறது வீட்டில் செய்து பார்க்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!