வெள்ளி, 25 மார்ச், 2022

வெள்ளி வீடியோ : வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது நான்குமறை தீர்ப்பு,.

 இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்தப் பதிவை எழுதி வைத்திருந்தேன். 

எனக்கு அப்போது தெரியாது, மார்ச் 24  TMS  அவர்களை பிறந்த நாள் என்று.  அதில் ஒரு விசேஷம் என்ன தெரியுமா?  நேற்று டி எம் எஸ் அவர்களின் நூற்றாண்டு விழா.  மார்ச் 24, 1922 ஆம் ஆண்டு பிறந்த TMS ஸுக்கு நேற்று நூறு வயது.



இனி பாடல்களுக்கு செல்வோம்.

சினிமா பாடல்கள் ஒருபுறம் இருக்க, சில தனிப்பாடல்களையும் அவ்வப்போது பகிர எண்ணம்.

அதில் இன்று எனக்கு மிகவும் பிடித்த 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' எனும் ராகமாலிகைப் பாடல்.

எனக்கு மட்டுமா பிடிக்கும்?  அனைவருக்கும் பிடித்த பாடல்.

எத்தனை வருடங்களாகக் கேட்டு வரும் பாடல்...  டி எம் எஸ்ஸின் எவர்க்ரீன் பக்திப்பாடல்.  இந்தப் பாடலைப் பிடிக்காதவர்களோ, அதைவிட இந்தப் பாடலைப் பாடிப் பார்க்காதவர்களோ எவருமே இருக்க மாட்டார்கள்!

இந்தப் பாடலை இயற்றியவர் யார் தெரியுமோ?   எனக்கு இன்றுதான் தெரியும்.  யாழ்ப்பாணம் வீரமணி அய்யர் இயற்றிய பாடல் இது.  ஆனந்த பைரவி, கல்யாணி, பாகேஸ்ரீ, ரஞ்சனி ஆகிய ராகங்களில் ஒவ்வொரு சரணமும் இசைக்கப்பெற்றிருக்கும் இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் யார் என்று எங்கும் சொல்லவில்லை.  ஒருவேளை டி எம் எஸ் தானே இசையமைத்துப் பாடினாரோ என்னவோ...  மேலும் இதில் இசையமைக்க என்று ஒன்றும் இல்லை.  அவரே அந்தந்த ராகங்களில் இயற்றியிருப்பார்.  அதை அதே ராகத்தில் பாடினால் போதும்!
 

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!(கற்பக வல்லி)

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
(கற்பக வல்லி)

நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா!
(கற்பக வல்லி)

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்
நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!
(கற்பக வல்லி)

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா!
(கற்பக வல்லி)

அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் – அருள்
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!



அடுத்து TMS பாடிய ஒரு திரைப்பாடலுக்கு வருகிறேன்.​

1963ல் வெளிவந்த  திரைப்படம் தர்மம் தலைகாக்கும்.  கண்ணதாசனுக்கும் எம் ஜி ஆருக்கும் பனிப்போர் நிகழும் முன்னர் வந்த படம் போலும்.  எல்லாப் பாடல்களையும் கண்ணதாசன்தான் எழுதி இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்னர் எனது அலுவலகத்தில் எனக்கும் சிலருக்கும் ஒரு பனிப்போர் நடந்தது.  சில காரணங்களால் நான் டார்கெட் செய்யப்பட்டேன்.  மிகவும் மன உளைச்சல் அடைந்தேன்.  அப்போது இந்தப் பாடல், குறிப்பாக 'மலைபோலே வரும் சோதனை யாவும்' வரிகள் எனக்கு தைரியத்தையும் ஆறுதலையும் கொடுத்தன.  இந்த வரிகள் மனதில் வந்தததும் எனக்குள் ஒரு தைரியம் வரும்.  பிரச்னையை பொறுமையாகவும் துணிச்சலாகவும் எதிர்கொண்டேன்.  சில நாட்களில் அடுத்த வரியும் நிகழ்ந்தது.  எனவே எனக்கு மறக்க முடியாத பாடல் இது.

தேவர் தயாரிப்பில் எம் ஏ திருமுகம் இயக்கத்தில் எம் ஜி ஆர், சரோஜாதேவி, அசோகன் நடித்த படத்துக்கு இசை கே வி மகாதேவன்.

இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த ஒரே பாடலும் இதுதான்!

தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்

மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்

அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு..
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு,..
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு

87 கருத்துகள்:

  1. தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று..

    குறள வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க..  வாழ்க... 

      வாங்க செல்வராஜூ ஸார்..  வணக்கம்.

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்யம் நிறை வாழ்வு ஆண்டவன்
    அளிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்திப்போம்.  மார்ச் 31 உடன் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகின்றனவாம்.  இனி முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதும் மக்களின் விருப்பம்.  கட்டாயமில்லை  

      வாங்க வல்லிம்மா..  வணக்கம்.

      நீக்கு
    2. கேட்கவே அமிர்தமாய் இருக்கிறது.

      நீக்கு
    3. கவலைதான்.  சட்டம் இருக்கும்போதே மக்கள் மதிப்பதில்லை.

      நீக்கு
  4. TMS ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்..

    பதிலளிநீக்கு
  5. TMS அவர்கள் எல்லாம்
    சிரஞ்ஜீவி ஆனவர்கள்.. நமக்குப் பின்னாலும் பல்லாண்டு பேசப்படுவார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​கண்டிப்பாக. சிலருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைக்கிறது.

      நீக்கு
  6. இரண்டு பானல்களும் மிக அருமையான பாடல்.

    பாளையங்கோட்டையில் என் வீட்டின் அருகில் தங்கியிருந்த சித்தா கல்லூரி பாணவர், தன் கல்லூரி விழாவில் இந்தப் பாடலைப் பாடினாராம் (மற்ற மாணவர்களின் ஊளையைத் தாங்கிக்கொண்டு). நீங்கள் எழுதியிருப்பதுபோல் பலரும் பாட முயற்சிக்கும் பாடல் இது.

    கண்ணதாசன் வரிகள் (தர்மம்), ஒரு நோகியனுடையதைப் போன்றது. வரம் வாங்கிவந்த கவிஞன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. நானெல்லாம் எனக்குள்ளேயே பாடிக்கொள்(ல்)வேன். பொதுவெளியில் பாடுவதில்லை!


      கண்ணதாசன் பற்றி சொல்லவும் வேண்டுமோ...

      நீக்கு
  7. நேற்று தினமலரில் நானும் அந்தக கட்டுரையைப் படித்தேன்.. 100 பாடல்களைக் குறிப்பிட்டு இருந்தார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினமலரிலா? நான் படிக்கவில்லை. நான் முகநூலில் மோகன்ஜி, மற்றும் கே பி ஜனார்த்தனன் சார் பதிவுகள் பார்த்தேன். பின்னர் மாலை கோமதி அக்கா, வல்லிம்மா பதிவுகள் பார்த்தேன்.

      நீக்கு
  8. திரு டி எம் எஸ் அவர்களின் குரல் சிரஞ்சீவியாய் நம்மிடம் இருக்கும்.
    கற்பகவல்லி பாடல் யுகம் யுகமாகக்
    கேட்பது போலத் தோன்றும்.
    எங்கள் ஊர்த் தாயார். அத்தனை கருணை உள்ளவள்.
    அனைவரையும் காப்பவள்.
    அதுவும் திரு சௌந்தரராஜன் குரலில் இனிமையான ராகங்களில்
    அமைந்த பாடலை எத்தனை தரம் கேட்டிருப்போமோ
    தெரியாது. மிக நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  9. ''அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
    ஆனந்த பூந்தோப்பு வாழ்வில்
    நல்லவர் என்றும் கெடுவதில்லை-
    இது நான்குமறை தீர்ப்பு,..
    வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை-
    இது நான்குமறை தீர்ப்பு''


    இதுவே பெரிய மந்திரம் போலத் தோன்றும்.
    நல்லவர் என்றும் கெடுவதில்லை.
    நன்மை நிரம்பிய சொற்களை நம்பிக்கையோடு கேட்பதில் தான் எத்தனை பாசிட்டிவ்
    உணர்ச்சி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்..    சில திரைப்பாடல்கள் எனக்கு வாழ்வின் பல சமயங்களில் உந்துதலாகவும், ஆறுதலாகவும் இருந்ததுண்டு.

      நீக்கு
  10. காலத்தின் ஆகச் சிறந்த கவிஞரின் வரிகள்
    பொய்ப்பதில்லை.

    திரு எம் ஜி ஆருக்காகவே எழுதப்பட்டிருந்தாலும்,
    ஐயா குரலில் இந்தப் பாடல் ஒலிக்காத இடமே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலப் பாடல்கள் நிறையவற்றுக்கு இது பொருந்தும்.

      நீக்கு
  11. நன்றி கெட்ட திரையுலகில இருந்து எவ்வித பிரதிபலிப்பும் இல்லை..

    இம்மாதிரியான மா கலைஞர்களை எல்லாம் அவர்கள் சார்ந்திருந்த துறையினரே அவமதிப்பு செய்தனர்.. அவர்களது மமதை நோகச் செய்து வீழ்த்தினர்..

    இல்லை என்று யாரும் மறுக்க முடியாது...

    இதற்கெல்லாம் விடை / ஆற்தல் அவரது குரல்
    வழியாகவே கிடைக்கின்றது..

    ஆயிரம் கைகள்
    மறைத்து நின்றாலும்
    ஆதவன் மறைவதில்லை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  இதுவும் டி எம் எஸ் பாடல்தான்!  அவரது நூற்றாண்டு விழா நேற்று என்று சொல்லுமோது அரசு சார்பில் ஏதாவது விழா நடத்தியிருக்க வேண்டும் என்று தோன்றியது.

      நீக்கு
    2. // அவர்களது மமதை..//

      தயவு செய்து
      அவர்களது மனதை - என்று வாசித்துக் கொள்க.

      நீக்கு
  12. எத்தனை நேரங்களில் எனக்கு இந்தப் பாடல் ஊக்கம் கொடுத்திருக்கிறது என்று சொல்லி முடியாது.

    சிங்கத்தின் நேர்மையைப் புரிந்து கொள்ள முடியாமல்
    பொறாமை கொண்டவர்கள் மேலிடத்துக்கு
    துதி பாடியே இவருக்குத் துன்பம் தந்தனர்.
    சட்டென விலகி விட்டார்.
    அவர்களே இவரை நாடி வரும் வேளையும்
    வந்தது.

    கடவுள் அருளுக்கும் கை காண்பிக்க
    கவிஞர் வந்தார்.
    அருமையான பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, அவருக்கும் அதே அனுபவமா? என் மீது இல்லாத பழியை சுமத்தினர்.

      நீக்கு
    2. எல்லோருக்குமே இந்த வீழ் பழி சுமந்த அனுபவங்கள் எழுதப் போனால்! :(

      நீக்கு
    3. இந்தப் பாடலின் வெற்றி ரகசியமும் அதுவேதானோ!

      நீக்கு
  13. ''ஆயிரம் கைகள்
    மறைத்து நின்றாலும்
    ஆதவன் மறைவதில்லை!..''
    இன்னோரு பாடல் வரிகளை எடுத்துத் தந்த அன்பின் துரைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. குறை இல்லாத உயிர் என்று எவருமே இல்லை.. திரு சௌந்தரராஜன் அவர்களும் அப்படித்தான்..

    புகழ் பெற்று எழுந்தவர்களில் -
    விதயா கர்வம் இல்லாதவர் யார்?...

    அவரவர்க்கும் இறுமாப்பு உண்டே!..

    அப்படித்தான் அவர் சொன்னார்..

    அது எம்ஜியார் பாட்டும் இல்லை.. சிவாஜி பாட்டும் இல்லை.. என் குரலில் நான் பாடிய பாட்டு!.. என்று..

    அதை அப்படியே ரெண்டு பக்கத்திலும் கொளுத்திப் போட்டன அல்லக்கைகள்..

    திரு சௌந்தரராஜன் அவர்களிடமே வார்த்தைகளைப் பிடுங்கி அவருக்கு எதிராகப் போட்டன அன்றைய ஊடகங்கள்.. அது ஒரு பிழைப்பு..

    TMS, LR.ஈஸ்வரி ஆகியோர் ஓரங்கட்டப்பட்டதெல்லாம் இப்படித் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //..அது எம்ஜியார் பாட்டும் இல்லை.. சிவாஜி பாட்டும் இல்லை.. என் குரலில் நான் பாடிய பாட்டு! - என்று..///

      சரியாகத்தானே சொன்னார். தப்பாகிவிடுகிறதே தமிழ்நாட்டில் !

      ஓ...அயோக்யர்களும், அல்லக்கைகளும் ஆணவம் காட்டும் நாட்டில், வித்யாதேவியின் அருள் பெற்றவன் கொஞ்சம் கர்வம் காட்டினால் தப்புதான்..

      நீக்கு
    2. //..அது எம்ஜியார் பாட்டும் இல்லை.. சிவாஜி பாட்டும் இல்லை.. என் குரலில் நான் பாடிய பாட்டு! - என்று..///

      சரிதான் ஆனால் இதன் அர்த்தம் தெரியாத மடையர்கள் அன்று மட்டுமல்ல இன்றும் தொடர்கிறதே...

      சரி அவர்கள் படிக்காதவர்கள் இவர்கள் ?

      நீக்கு
    3. சில சமயங்களில் பேட்டி எடுப்பவர்கள் கேட்ட கேள்வியையும் பதிலையும் இடம் மாற்றியோ பொருள் மாறும்படியோ சில்மிஷங்கள் செய்வதும் உண்டு.  அந்நாளில் அப்போது உண்மையில் டி எம் எஸ் என்ன சொன்னாரோ..

      நீக்கு
  15. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  16. கற்பகவல்லி நின் பொற்பதம்..

    அழகென்ற சொல்லுக்கு..,

    உள்ளம் உருகுதையா..,

    மண்ணானாலும் திருச்செந்தூரில்,

    புல்லாங்குழல் கொடுத்த..,

    இவையெல்லாம்
    வல்லியம்மா அவர்கள் சொல்வதைப் போல யுக யுகமாய் தோன்றியிருக்கும் வரங்களைப் பெற்றிருப்பவை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பெரிய லிஸ்ட்டே உண்டு.  ஒவொன்றாய்ப் பகிர விருப்பம்.  பார்க்கலாம்.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டும் அருமை. டி எம்.எஸ் அவர்களின் திரைப்படப் பாடல்கள், தனிப்பட்ட தெய்வீக பாடல்கள் என அனைத்துமே அவரின் தெளிவான உச்சரிப்பில், கணீரென்ற குரலில் என்றுமே கேட்கும் போதெல்லாம் அமுதந்தான். அப்போது முதல் பாடல் வீட்டில் கொலுவெல்லாம் வைக்கும் போது பாடாத நாட்களில்லை எனலாம். அவரைப் பற்றிய நல்ல தகவல்களுக்கு நன்றி.

    இனி வெள்ளியில் பிரசித்தி பெற்ற தனிப்பாடல்களான தெய்வீக பாடல்களையும் பகிரப் போவதான தங்கள் எண்ணங்களையும் நன்றியுடன் வரவேற்கிறேன். அருமையான பாடல்களை இன்றைய தினம் பகிர்ந்தமைக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. ..சினிமா பாடல்கள் ஒருபுறம் இருக்க, சில தனிப்பாடல்களையும் அவ்வப்போது பகிர எண்ணம்//

    நல்லது. ஆகட்டும்.

    இன்றைய கற்பகவல்லியின்.., தர்மம் தலைகாக்கும்.. - அருமையானவை. முதல் பாடலை இயற்றிய அப்பாவியின் பெயரைக் கண்டுபிடித்துச் சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...ஹா...  எனக்கும் இப்போதுதான் தெரியும்.  அதுவும் அவர் இலங்கைக்காரர் என்பது ஒரு இனிய ஆச்சர்யம்.

      நீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. வெள்ளிக்கிழமை கற்பகவல்லி பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி.

    மிகவும் பிடித்த பாடல்.

    டி.எம்.எஸ் அவர்களுக்கு வாழ்த்துகள், வணக்கங்கள்.

    //மலை போலே வரும் சோதனை யாவும்
    பனி போல் நீங்கி விடும்
    மலை போலே வரும் சோதனை யாவும்
    பனி போல் நீங்கி விடும்//

    இந்த வரிகள் கேட்டாலே மனது நம்பிக்கை பிறக்கும். பிடித்த பாடல்கள், இரண்டு பாடல்களையும் கேட்டேன், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். எல்லா வரிகளும் சிறப்பு.

      நீக்கு
    2. ஆமாம், கற்பகவல்லி பாடலையும், ஆடுகின்றானடி தில்லையிலே பாடலையும் நானும் என் பெரியம்மா பெண்ணும் (அக்கா) எப்போவும் சேர்ந்தே பாடுவோம் யார் வந்தாலும். எங்களோட இரு குரலிசை நன்றாக இருப்பதாக எல்லோரும் சொல்வார்கள். "அதிலும் ரஞ்சனியே! ரட்சிப்பாய்! கெஞ்சுகிறேன் அம்மா!" என்னும் இடத்தில் நிஜம்மாவே குரல் கெஞ்சலாக இருக்கும் என்பார்கள். அதெல்லாம் ஒரு கனாக்காலம்.

      நீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம்.

    T.M.S. அவர்களுக்கு நூற்றாண்டா? நல்ல கணீர் குரல், தெளிவான உச்சரிப்பு. அவருடைய இடம் காலியாக தந்தான் இருக்கிறது. ஆனால் அவர் மெலடி பாடியிருக்கிறாரா?










    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனால் அவர் மெலடி பாடியிருக்கிறாரா?//

      என்ன, இப்படி கேட்டு விட்டீர்கள்?  ஆமாம், மெலடி என்றால் என்ன?

      நீக்கு
    2. நல்ல கேள்வி! :) டிஎம்.எஸ். அவர்களின் இசைக்குழுவின் கச்சேரிகளை அம்பத்தூரில் கல்யாணம் ஆன புதுசில் இருந்தப்போ எங்கள் பொழுதுபோக்கு சபா மூலம் நிறையக் கேட்டிருக்கோம். நேரிலேயே அவரைப் பார்த்துப் பேசியும் இருக்கோம்.

      நீக்கு
    3. எனக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை.

      நீக்கு
    4. பானுக்கா, கற்பகவல்லியிலேயே ரஞ்சனியே ரட்சிப்பாய் வரியே போதும் அதில் அந்த உருக்கம் உணர்வு இருக்குமே..

      கீதா

      நீக்கு
    5. Yaar antha Nilavu kelungal Bhanu.மெல்ல நட மெல்ல நட,
      கண்ணெதிரே தோன்றினாள்,

      மலரும் கொடியும் ஒன்றென்பார்
      மதியும் நதியும் ஒன்றென்பார்,

      பறவைகள் பலவிதம்,

      சித்திரம் பேசுதடி

      நீ எங்கே என் நினைவுகள் அங்கே

      ஓராயிரம் பார்வையிலே

      கண்ணில் காண்பதெல்லாம் காட்சியா.
      மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்.

      நீக்கு
  22. @ ஏகாந்தன்..

    //சரியாகத் தானே சொன்னார். தப்பாகி விடுகிறதே தமிழ் நாட்டில்!.. //

    சரியாக எது இருந்தாலும் தமிழ் நாட்டுக்குள் தப்பு தான்!..

    காமராஜரையே கழித்து விட்டவர்கள் ஆயிற்றே!..

    காமராஜர் அமைச்சரவையில் போலீஸ் அமைச்சராக பணி புரிந்த திரு. கக்கன் அவர்கள் - தமது இறுதிக் காலத்தில் தம்மை யார் என்று காட்டிக் கொள்ளாமல் தரும ஆசுபத்திரியின் தரையில் கிழிந்த பாயில் கிடந்தார்..

    அவர்கள் அடைந்த நன்மை
    தான் எது?..

    இன்றைய தினமலர் செய்தி..

    வடபழனி கோயிலில் சிறப்பு தரிசன வழியில் கட்டணமின்றி விடாததற்கும் சந்நிதியில் மாலை மரியாதை செய்யாததற்கும் சேர்த்து ஒரு வேடதாரி- உணவுப் பாதுகாப்புத் துறையில் உயர்நிலை வேலையாள் வெறியாட்டம் ஆடியிருக்கும் செய்தி வெளியாகி உள்ளது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ...காமராஜரையே கழித்து விட்டவர்கள் ஆயிற்றே!..//

      அவரைக் கருங்குரங்கென வர்ணித்தார்கள். கார்ட்டூனெல்லாம் விதவிதமாகப் போட்டு ஆனந்தங்கொண்டார்கள்!

      கக்கன், கலாம் போன்ற மஹானுபாவர்களும் நம் காலத்திலே வாழ்ந்தார்கள் என்பதிலும் ஒரு சிறு சந்தோஷம் மனதில் நிலவத்தான் செய்கிறது..

      நீக்கு
    2. வடபழனி கோவில் செய்தி காலையில் நானும் படித்துக் கொதித்தேன்.  என்ன அக்கிரமம்..

      நீக்கு
    3. இங்கே தினசரிகளில் வரலை.

      நீக்கு
    4. தினமலர் சுட்டி சென்று வாசித்தேன். கோயிலில் வழிபாட்டிற்கும் வருகிறார்கள், அதே இடத்தில் அகங்காரத்தையும் காட்டுகிறார்களே...முரண்

      செய்தியின் கடைசி பாரா நச்! சரியான கேள்வி.

      கீதா

      நீக்கு
  23. டிஎம்எஸ் அவர்கள் இருந்திருந்தால் நூறாவது பிறந்தநாள் கொண்டாடி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அவர் இல்லா விட்டாலும் தமிழுலகம் அவரைக் கொண்டாடும்.  தமிழக அரசு இதைக் கொண்டாடி இருக்கவேண்டும்.

      நீக்கு
  24. பாடல்கள் கேட்பது மனதை அமைதி படுத்த சந்தோஷம் என்றாலும், துக்கம் என்றாலும் பாடல்கள் கேட்போம். பக்தி பாடல்கள், சினிமா பாடல்கள் மனநிலைக்கு ஏற்றார் போல கேட்போம்.அப்படி கேட்க ஆசை பாடும் பாடல்களில் இந்த இரண்டு பாடல்களும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தச் சூழ்நிலையிலும் மந்திற்கான மாமருந்து இசை, பாடல்கள்.

      நீக்கு
  25. மற்றவர்களும் நன்றாகப் பாடிய தமிழ்த் திரை இசையின் பொன்னான காலகட்டத்தில், குறிப்பாக டி எம் எஸ்-ம், சுசீலாவும் தமிழை இழைத்தார்கள், நம்மை மெல்ல அழைத்தார்கள், ஆழ்ந்து அனுபவிக்க. லயித்துக் கிடக்க...

    பதிலளிநீக்கு
  26. @ ஏகாந்தன்..

    //கக்கன், கலாம் போன்ற மஹானுபாவர்களும் நம் காலத்திலே வாழ்ந்தார்கள்..//

    காமராஜர், கக்கன், கலாம் போன்ற மஹானுபாவர்கள் வாழ்ந்த காலத்திலே நாமும் வாழ்ந்தோம் என்பதே நாம் பெற்ற பேறு..

    அன்பின் ஏகாந்தன் அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினிமாப் பாட்டு ரசிகரான ஒரு அரசியல் பிரபலம், தான் மிகவும் ரசிக்கும் குரல்களுக்கு சொந்தக்காரர்களான டி.எம்.எஸ்., பி.சுசீலா இருவரையும் மதுரைக்கு அழைத்து, பொன்னாடை போர்த்தி (மற்றும் பணமுடிப்பு தந்தும் என்பதாக நினைவு) மரியாதை செய்வித்தார்.

      நீக்கு
    2. அவர் கட்சிக் காரர்கள் அவரையே இன்று மதிப்பதில்லையே...!

      முதல்வராவதற்கு முன் ஒரு பேட்டியில் இன்றைய முதல்வர் ஒரு டி எம் எஸ் பாடலைப் பாடி இருந்தார்.

      நீக்கு
  27. ஸ்ரீராம் தலைப்பு ...ம்ம்ம்ம்ம்ம் என்ன சொல்ல அந்தத் தீர்ப்பை நான் எதிர்த்து வழக்காடுகிறேன்!! ஹாஹாஹாஹாஹா

    நான்குமறை எழுதியவர் எழுதிவிட்டார் ஆனால் யதார்த்தம் வேறு... போங்க..ஹாஹஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. சிலசமயம் நீதிகள் காலம் கடந்தும் வெல்வதில்லை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்றும் இதற்குதான் சொல்லி வைத்திருக்கிறார்கள்!

      நீக்கு
    2. அதே அதே அதே!! நாமதான் அனுபவத்திலும் பார்த்துக் கொண்டிருக்கிறோமே ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  28. கற்பகவல்லி.....செம செம பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல். நான் சிறுமியாக இருந்த போது என் அத்தை வீட்டில் பாடி பாடி என் மனதில் பதிந்தது சொல்லியும் கொடுத்தார். அப்போதே நவராத்திரியில் பாடுவதற்கு!!!

    அதன் பின் வளர்ந்த பிறகு டி எம் எஸ்!!! லயித்துவிட்டேன். கேட்டு கற்றுக் கொண்டேன். இப்போது வரை கேட்பதுண்டு. பாடியதுண்டு. இப்போதுதான் பாட முடிவதில்லை. இந்தக் கொரோனா என் குரலைக் கொண்டு போய்விட்டது அதாவது பாட்டிற்கான குரலை. சுத்தமாகப் பாட வரமாட்டேன்கிறது சுருதி சேராமல் பாடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று குரலில் காற்று வந்துவிடுகிறது. கிட்டத்தட்ட ரேடியோ போல ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாகக் பாடுகிறீர்களே  கீதா..   உங்கள் பல பாடல்கள் கேட்டிருக்கிறேனே..

      நீக்கு
    2. ஸ்ரீராம் இப்ப கீதாவின் தொண்டைக்கு இரு பகுதியாகப் பிரிக்கலாம். கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின். ஹிஹிஹி

      கொரோனா பாட்டு பாடுவதற்காக என் குரலை லபக்கிடுச்சு!

      கொரோனா வந்து போன பிறகு நான் பாடி உங்களுக்கு எதுவும் நான் அனுப்பவில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் பாடவே இல்லையே. பாடிப் பயிற்சி செய்யவும் முடியவில்லை. ஒன்று குரல் தொண்டை போயே போச். இன்னொன்று வீட்டில் பெரும்பாலும் ஆன்லைன் க்ளாஸ், ரெக்கார்டிங்க் என்று போய்க் கொண்டிருந்ததால் பிராக்டீஸ் செய்ய முடியவில்லை.

      கொரோனாவுக்கு என் மீது என்ன பொறாமையோ...ஒரு வேளை உங்களுக்கு அனுப்பியிருந்தால் அது கொரோனாவிற்கு முன் பாடிய பாடலாக இருக்கும் ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  29. கற்பகவல்லி பாடலை இலங்கையில் இருந்த போது என் அத்தை கற்றுக்கொண்டு எனக்குக் கற்றுக் கொடுத்தார் அவர் அங்கு ஒரு நட்பு மாமியிடம் சும்மாபாடல்கள் கற்றார் அவர் தமிப்பாடல்கள்தான் கற்றுக் கொடுப்பார். முருகன், அம்மன் பாடல்கள். பெயர் சட்டென்று நினைவில் இல்லை. அதைக் கேட்டுச் சொல்லலாம் என்றால் அத்தைகளும் இல்லை என் அம்மாவும் இல்லை என் பாட்டியும் இல்லை. அப்பா யாரை எல்லாமோ நினைவில் வைத்திருக்கிறார் இவரை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை!!!!!!!!!

    இந்தப் பாடல் அந்த ஊரைச் சேர்ந்த வீரமணி என்பவர்.

    நீங்களே சொல்லிவிட்டீர்கள். நான் இதை டைப்பிக் கொண்டே இருகும் போது பதிவை கண்ணில் வைத்தேனா இந்த வரி பட்டுவிட்டது..//யாழ்ப்பாணம் வீரமணி அய்யர் இயற்றிய பாடல் இது. //

    யெஸ்ஸு....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஸ் பாடிக்காட்டி 'எப்படி' என்று கேட்பார். 'அப்படியே டி எம் எஸ் பாடுவது போலவே இருக்கிறது குரல்' என்பேன். முறைப்பார்!

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்!!! அப்ப நீங்க பாடினாலும் டி எம் எஸ் பாடுவது போலவே தான் இருக்கும்!!! புரிந்ததோ?!!!!!!

      கீதா

      நீக்கு
  30. ஸ்ரீராம் எனக்குத் தெரிந்து அவர் இசைவித்வான் என்பதால் அவரேதான் ராகம் அமைத்து எழுதியுள்ள பாடல். மெட்டும் அவரேதான்.

    அவர் இப்படிப் பல தமிழ்க்கீர்த்தனைகள் எழுதியிருக்கிறார். ராக முத்திரையோடு. என் அத்தைகள் இல்லையே...எனக்கு வேறு ஏதேனும் நினைவில் வருகிறதா என்று பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  31. தர்மம் தலைகாக்கும் பாடல் செம வரிகள் நிறைய கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் மதிய வேளையில் சிலோன் ரேடியோவில் ஒலிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  32. ஆஹா இந்த வெள்ளியில் பகிர்ந்த இரண்டு பாடல்களுமே மனதுக்குப் பிடித்தவை. முதலாவது பாடல் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கே இல்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!