PICME Number என்றால் என்ன தெரியுமா உங்களுக்கு?
சிலருக்கு தெரிந்திருக்கலாம். சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்!எனக்கு சமீபத்தில்தான் தெரிந்தது. தேவை ஏற்படும்போதுதானே இதெல்லாம் தெரிந்து கொள்கிறோம்!
சமீபத்தில் மணமான என் அண்ணன் மருமகள் கர்ப்பம் என்று சந்தேகப்பட்ட நாள் முதல் மருத்துவரிடம் சோதனைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.
அந்த மருத்துவரும் முதல்முறை எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. இது சமீபத்தில் ஓரிரு வருடங்களாகத்தான் ஆரம்பித்திருக்கும் வழக்கம் போல...
ஐந்தாவது மாதம் நெருங்கும் சமயம் பர்த் சர்டிபிகேட் வாங்க ரெஜிஸ்டர் செய்யவேண்டும் என்று அவர் ஊர் செல்ல (பிரசவம் அங்குதானே பார்த்துக்கொள்ளப் போகிறார்) , 'இது என்னடா அதற்குள் பர்த் சர்டிபிகேட்?' என்று நினைத்துக் கொண்டேன்.
அங்கு சென்று பதிவு செய்யும் சமயம் இந்த பிக்மி எண்ணைக் கேட்டிருக்கிறார்கள். அது என்னடா பிக்மி எண் என்று கேட்டு அதை இங்கு கொடுங்களேன் என்று கேட்டபோது அது அவர்கள் வசிக்கும் இடத்தில், பிறக்கப்போகும் குழந்தையின் தகப்பனின் ஆதார் எண் கொண்டு செய்யப்படும் ஏற்பாடு என்று தெரிந்தது.
இதை கர்ப்பம் என்று நிச்சயமான நாளிலேயே கூட வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அல்லது மாநகராட்சி மருத்துவமனையில் செய்து கொள்ளலாம். இணையவழி மூலமாகவே கூட ஆரம்பகட்ட பதிவுகளை செய்யலாம். ஆனால் ஐந்து மாதத்துக்குள் கட்டாயமாக இந்த எண்ணை வாங்கி விடவேண்டும். இந்த எண் இருந்தால்தான் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் வாங்க முடியும். பின்னர் ஸ்டேட்டஸ் இணையத்திலேயே தொடரலாம்.
இது ஏன் தொடங்கப்பட்டது என்றால் அந்தக் காலம் வரை நிறைய குழந்தைகளுக்கு இரண்டு இடங்களில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது தெரிய வந்தது. இது சென்சஸ் கணக்கிலும் குழப்பத்தை உண்டு பண்ணும். இப்படி பதிவு செய்து விட்டால், அந்தக் குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கிய நிலை என்பது தொடர் கண்காணிப்பில் இருக்கும். இதன் மூலம், பிறப்பு கணக்கு, அபார்ஷன், இறப்புக்கணக்கு தாய்சேய் நலம், நலக்கேடு எல்லவதையும் அரசால் மானிட்டர் செய்ய முடிகிறது.
மேலும் தமிழக அரசின் இந்தத் திட்டத்தின்படி, முத்துலட்சுமி சுகாதார நிதியிலிருந்து, குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு 12,000 ரூபாய் வழங்குகிறார்கள். ஏழாவது மாதத்தில் 4,000 ரூபாய், பிரசவம் ஆனதும் 4,000 ரூபாய் மற்றும் மூன்றாவது தவணை 4000 ரூபாய் குழந்தை தனது மூன்றாவது டோஸ் DPT ஹெபடைடிடிஸ், போலியோ கடுப்பூசி போட்டுக் கொண்டதும் என்று வழங்கப்படுகிறது. இந்த நிதி கிட்டத்தட்ட 2016 க்கு முன்னரே வழங்கப்பட்டு வந்ததது. ஜெயலலிதா பின்னர் இதை 18,000 ரூபாய் என்று தொகையை ஏற்றியதாகச் சொல்கிறார்கள்.
மேலும் குழந்தை பிறந்த பிறகு நியூட்ரிஷன் கிட் என்ற ஒன்றும் வழங்கப்படுகிறது.
எப்போது இந்த வழக்கம் தொடங்கப்பட்டது என்று தேடி / கேட்டுப் பார்த்தேன்.
ஜனவரி 2018 ல் இது தொடங்கப்பட்டது. அப்போது இது RCH (Reproductive And Child Health) என்று தொடங்கப்பட்டது. அந்த வருடம் ஜூன் மாதத்திலேயே பிக்மி எண் வாங்கும் நடைமுறை அமுலுக்கு வந்து விட்டது.
இதைத் தெரிந்து கொள்ள எனக்கு நான்கு வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது!!
இந்த 18,000 ரூபாய் வழங்கப்படுவதும், நியூட்ரிஷன் கிட் வழங்கப்படுவதும் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொண்டால்தான் கிடைக்கும். தனியார் மருத்துவமனையில் பார்த்துக்கொண்டால் நான்காயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்குமாம்.
ஆனால் பிறப்புச் சான்றிதழ் வாங்க இந்த எண் மகா அவசியம்.
எங்கள் விஷயத்தில் என்ன நடந்தது என்பதையும் சொல்லவேண்டும். குழந்தையின் தகப்பனின் ஆதார் எண் விஷயத்திலேயே தொல்லை தொடங்கி விட்டது. அவன் ஆதார் கார்ட் வாங்கியது மதுரையில். 2016 முதல் அவன் சென்னையில் இருந்தாலும் ஆதார் அட்ரஸ் மாற்றாமல் இருந்திருக்கிறான். அப்புறம் ஒரு வீடும், இப்போது ஒரு வீடும் மாறி இருக்கிறான்.
இவன் பிக்மி எண் வாங்க வேண்டும் என்றால் மதுரைக்கு செல்லவேண்டும். அதுவும் கர்ப்பமாய் இருக்கும் பெண்ணையும் அழைத்துச் செல்ல வேண்டும். அந்த ஏரியாவில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காட்டி சோதித்து எண்ணைப் பெற வேண்டும். எண்ணைப் பெற்றுவிட்டால் பிரசவம் எங்கு வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த விஷயத்தை இவன் அறிந்தபோது ஐந்து மாதங்கள் தொடங்க இன்னும் நான்கே நாட்கள் இருந்த நிலை.
அப்புறம் தெரிந்தவர்கள் மூலமாக சம்பந்தப்பட்ட நிலையங்களில் பிரச்சனையைச் சொல்லி கேட்டபோது ஏதாவது ஒரு இருப்பிடச் சான்றிதழாவது கொண்டுவரச் சொன்னார்கள். இவனிடம் வங்கி பாஸ் புத்தகம் இல்லை. எல்லாம் ஆன்லைன்! ரேஷன் கார்ட் மாற்றவில்லை. எதற்கு என்று விட்டிருந்தார்கள்.
எனவே இருக்கும் வீட்டின் வாடகை ஒப்பந்தத்தை வைத்து பிக்மி எண்ணைப் பெறுவது என்று முடிவானது. அடுத்து நம் வீட்டுக்கு அருகில் இருக்கும், நம் ஏரியா அ ஆ சு நி எது என்று கண்டுபிடிக்கும் படலம். அருகில் விசாரித்து, இன்று அ ஆ சு நிலையத்தைத் தொடர்பு கொண்டு குழப்பி, அப்புறம் அது குடியிருப்பு நலச்சங்க செயலாளரைக் கேட்டு எது என்று தெரிந்து.... ஒரு வழியாய் இந்த சாங்கியங்களை முடித்தாயிற்று.
அங்கு சென்று பார்க்கும்போது இந்த விஷயம் அறியாமல் ஐந்து மாதங்களுக்கு மேற்பட்ட நிறைய தாய்மார்கள் வரிசையில் காத்திருந்தார்களாம். அதில் ஒரு பெண் நிறைமாதம்! ஏகப்பட்ட திட்டுகளாம். எதெதற்கோ விளம்பரம் செய்கிறார்கள்... இதற்கு விளம்பரம் போதுமான அளவில் இல்லையோ, அல்லது நான்தான் கவனிக்கவில்லையோ!
===============================================================================================================
இரண்டு வருடங்களாய் வாங்க முடியாமல் போனது. கொரோனா காலம்! கையில் இருந்த ஸ்டாக் எல்லாம் இரண்டு மாதங்களுக்கு முன்னால் தீர்ந்த நிலையில் இந்த வருடம் வாங்கியாச்!
============================================================================================================
மன உறுதியே முதுமையை வெல்லும்!
முதுமையை எப்படி அணுக வேண்டும் என கூறுகிறார், பிரபல முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன்:
முதுமை எப்போது துவங்குகிறது என்று, என்னிடம் பலர் கேட்பர். அவர்களுக்கு நான் சொல்லும் பதில், 'முதுமைக்கு வயதில்லை; அது ஒரு பருவம்' என்பேன்.நம் நாட்டில், 58வயதுக்கு மேல் முதுமைப் பருவம் துவங்குகிறது என்று, அரசு ஒரு கோடு போட்டிருக்கிறது.அது ஒரு குறியீடு தானே தவிர, வயதானோர் என்று சொல்ல முடியாது.
இந்த வயது வரம்பும், இப்போது மாறிக் கொண்டே தான் இருக்கிறது.வயதை வைத்தோ, தோற்றத்தை வைத்தோ சொல்ல முடியாத நிலையில், எதை வைத்துத் தான் சொல்வது என்ற கேள்வி எழலாம். ஆனால், ஒருவருக்கு வயது ஏற ஏற, எல்லா உறுப்புகளின் செயல் திறன்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே போகும்.குறையாதது அவரின் மனநிலை மட்டும் தான். மனம் மட்டும் எப்போதும் எதையாவது எண்ணி, ஓய்வின்றி அசை போட்டுக் கொண்டே இருக்கும்.முதுமையை நலமுடன் கடக்க வேண்டும் என்றால், முதலில், அலைபாயும் மனதை கட்டுப் படுத்தி, ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டும். ஒருவரின் மனோ பலத்துக்கு மரணத்தைக் கூட வெல்லும் சக்தி உண்டு.சில ஆண்டுகளுக்கு முன், கிராமத்தில் இருந்து வந்த ஒரு முதியவருக்கு, வயிற்று வலிக்காக ஆப்பரேஷன் செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனால், வயிற்றில் புற்றுநோய் தீவிர நிலையில் இருந்ததால், ஆப்பரேஷன் செய்ய முடியவில்லை. உறவினர்களிடம் மட்டும் உண்மையை சொல்லிவிட்டு, பெரியவரிடம், 'வாய்வு தொல்லை' என்று கூறி மருந்து கொடுத்து அனுப்பி விட்டோம்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, முதியவரின் உறவினர் வாயிலாக, அவரை நேரில் சென்று பார்த்த போது, அவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.அவருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதை பற்றி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தெரிவித்திருந்தால், அவர் மன பலத்தை இழந்திருக்கலாம். நோயை அதுவே தீவிரப்படுத்தி இருக்கலாம்; எதுவும் நடந்திருக்கலாம்.ஆரோக்கியமாக வாழ்ந்து, முதுமையை முடிந்தளவுக்கு தள்ளிப்போட, நம்மை நாம் முதலில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதை செய்து முடிக்க அல்லது சாதித்துக் காட்ட முதலில் மனதில் அதீத உறுதி வேண்டும்.நம் முயற்சியில், நாம் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்ற எண்ணத்தை, நம் ஆழ் மனதில் விதைக்க வேண்டும். பின் அதே உறுதியில், நாம் நினைத்ததை செயல்படுத்த வேண்டும்.
இதை தவறாமல் வாழ்க்கையில் கடைப்பிடித்தால் முதுமையையும் வெல்ல முடியும்.முதுமை என்பது முடிவல்ல; அதுவும் ஓர் ஆரம்பமே. சுமையல்ல சுகமே!
- தினமலரிலிருந்து -
=========================================================================================================================
அப்போது இதற்கு வெங்கட் பதில் சொல்லவில்லை!!!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சமீப நாட்களாய் சென்னையில் கடும் வெய்யிலையும் வெப்பத்தையும் உணர்கிறேன். ஒன்பது மணிக்கு மேல் பதினோரு, பனிரெண்டு மணிக்குள் கடும் தாகம் ஏற்படும். இப்படி வருடத்துக்கு வருடம் வெப்பம் ஏறிக்கொண்டே போனால் என்னாவது? சமீபத்தில் அடிலாந்திக் பகுதியில் பெரும் பனிமலை ஒன்று உருகி விட்டதாம். செய்தியில் படித்த நினைவு. கீழ்காணும் கட்டுரை நான் 2015 ல் பேஸ்புக்கில் பகிர்ந்தது.
நம்மை நாமேஏமாற்றிகொள்கிறோம்!
சூழலியலாளரும், சமூகச் செயல்பாட்டாளருமான ஒய்.டேவிட்:
"1992ல், ரியோ டி ஜெனிரோவில் நடந்த உச்சி மாநாட்டில், 'புவி வெப்பமடைதல் உலகப் பிரச்னை' என, அங்கீகரிக்கப்பட்டது. அதில், புவி வெப்பமடைய முக்கிய காரணம் வளர்ந்த நாடுகள் என்றும், அவை பசுங்குடில் வாயுவை சுயமாகக் குறைக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் பாரிசில், 21ம் புவி உச்சி மாநாடு, நவ., 30 முதல், டிச., 11 வரை நடந்தது. இம்மாநாட்டின் நோக்கம், உலகின் வெப்பநிலை அதிகரிப்பை, 2 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த, பசுங்குடில் வாயுவின் வெளியீட்டைக் குறைக்க வலியுறுத்துவதே.
சில ஆண்டுகளுக்கு முன், மும்பையில் ஏற்பட்ட பெரும் வெள்ளம், உத்தரகண்டில் ஏற்பட்ட பாதிப்பு, இப்போது சென்னையில் நடந்திருக்கும் வெள்ளச் சேதம் போன்றவற்றுக்கு, புவி வெப்பமயமாதலே முக்கிய காரணம்.
இதை நாம் மக்களிடம் கூறத் தவறி விட்டோம். இந்த சேதங்களை அரசியலாக்கப் பார்த்து, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.
தொழிற்புரட்சிக்கு பின், பூமியின் வெப்ப நிலை, 2 டிகிரி செல்சியசுக்கும் மேல் அதிகரிக்கக் கூடாது என்பது, உலகம் ஏற்றுக் கொண்ட ஒன்று. இன்று புவியின் வெப்பநிலை, 0.9 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இதற்கே, உலகமெங்கும் அழிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்போது, நாம் பேரழிவுக்குள் நுழைந்து விடுவோம். அதற்கு பின் அழிவுகளை நிறுத்துவது சாத்தியமானதல்ல.
மேலும், 1.50 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்போது, பெரும்பான்மையான தீவு நாடுகளும், கடற்கரையோர நகரங்களும், பெரும் பாதிப்புக்கு உள்ளாகலாம். அதனால் தான், தீவு நாடுகள் அனைத்தும் சேர்ந்து, 'எக்காரணம் கொண்டு புவியின் வெப்பநிலை, 1.50 டிகிரி செல்சியசுக்கு மேல் அதிகரிக்கக் கூடாது' என வேண்டுகோள் வைக்கின்றன.
இந்த நியாயமான கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, நாம் உடனடியாக யோசித்து செயலாற்ற வேண்டும்.
உலகின் வளங்கள் வற்றாதது என்ற எண்ணத்தைத் துாக்கியெறிந்து விட்டு, அவை மறு உற்பத்தி செய்ய முடியாதவை, அவற்றைப் பயன்படுத்துவது உச்சபட்ச நிலையை எட்டிவிட்டது என்பதை, நாம் உணர வேண்டும்.
தினமலர் 2015
=============================================================================================
ரசனையான புகைப்படங்கள் போட்டு கொஞ்ச நாளாச்சு இல்லே?
எத்தனையாவது மாடியோ?! இடது பக்கம் இருப்பவர்களை எறும்பு கடித்தால் என்ன ஆகும்?!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜோக்ஸ்...
அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் நலமுடன் வாழ இறைவன் அருள வேண்டும்.
வாங்க வல்லிம்மா... வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குநன்றாகச் சொன்னானே பையன். சகுந்தலைக்குத் தெரியாமப்
பதிலளிநீக்குபோச்சு.:)
ஹா.. ஹா.. ஹா... நாட்டி ரெங்குடு!
நீக்குபட்டாசுக்குப் பயப்படும் கார். ஹாஹா!!
பதிலளிநீக்குகார் பொலபொலவென உதிருந்துவிடுமோன்னு கவலைப்படும் ரெங்குடு!
நீக்குசரியாகத்தான் கேட்டான் பையன்.
பதிலளிநீக்குஆயிரம் படித்தாலும் அடுப்பூத வேண்டி இருக்கே
பாவம்.ஹாஹா.
ஹா... ஹா.. ஹா...
நீக்குயாருடைய ஜோக்ஸ் மா.முனியம்மான்னு பெயர் பார்த்தால்
நீக்குஸ்ரீதர் என்று தோன்றுகிறது.
மிக அருமை மா.
மதன்தான் அம்மா.
நீக்குOh oh . Thanks ma. Of course rettai vaal rangudu.:)
நீக்குமாடி, பலகை, எறும்பு பார்க்கவே பயங்கரம்:))
பதிலளிநீக்குஇருவரை நம்பும் ஒருவர்! ரிஸ்க்!
நீக்குஆமாம் மா. இங்கே எங்க பெரிய பேரன்,
நீக்குஎப்போதும், இப்படி நடந்தால் என்ன ஆகும்னு
கேட்டுக் கொண்டிருப்பான்:)
ஓ... இது நீங்கள் அங்கு நேரிலேயே பார்க்கும் காட்சியா?
நீக்குஆமாம் .நல்ல கற்பனை அவனுக்கு:)
நீக்குமுதுமை பற்றி அவர் எழுதின புத்தகம் என்னிடம் இருக்கிறது.
பதிலளிநீக்குமிக நல்ல அறிவுரைகள்
அப்படியா? நன்றி அம்மா.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க...
நீக்குபிக்மி...... எத்தனை சமாசாரங்கள் இருக்கிறது.!!!
பதிலளிநீக்குதங்களுக்கும் அண்ணனுக்கும், அண்ணன் மகன் ,மனைவிக்கும்
அன்பு வாழ்த்துகள்.
இத்தனை ஏற்பாடு செய்ய வேண்டுமா.
எவ்வளவு அலைய வேண்டி இருக்கிறது!!!
ஆம். இப்போதைய புதிய ஏற்பாடுகள் தமிழகத்தில் இதெல்லாம்...
நீக்குஇந்தியாவெங்கும்.
நீக்குஇந்தியாவெங்கும் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சொன்னார் சரி.
நீக்கு:)))))) ஹாஹாஹஹாஹா, இந்தியாவெங்கும் எல்லா மாநிலங்களிலும் குழந்தைகள் பிறக்கின்றனவே! அவை எல்லாமும் கூட ஜனத்தொகைக் கணக்கில் தானே சேரும்! எல்லாக் குழந்தைகளும் இந்தியப் பிரஜைகள் தாமே! ஆகவே எல்லா மாநிலங்களில் இந்த நடைமுறை கட்டாயம் உண்டு. தமிழக அரசு மட்டும் தனியாய்க் கணக்கெடுத்துத் தனியாய்ப் பிரிந்தா போகப் போகிறது? அவ்வளவெல்லாம் இங்கே சுறுசுறுப்பாய்ச் செய்துடுவாங்களா என்ன?
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரோபோ வந்துவிட்டது. கோவிச்சுண்டு போறேன். :(
நீக்குஅது என்னவோ சரிதான். கூகுளில் அந்தப் பக்கம் போனால் விவரம் தெரியலாம்.
நீக்குஇதை கர்ப்பம் என்று நிச்சயமான நாளிலேயே கூட வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அல்லது மாநகராட்சி மருத்துவமனையில் செய்து கொள்ளலாம். இணையவழி மூலமாகவே கூட ஆரம்பகட்ட பதிவுகளை செய்யலாம். ஆனால் ஐந்து மாதத்துக்குள் கட்டாயமாக இந்த எண்ணை வாங்கி விடவேண்டும். இந்த எண் இருந்தால்தான் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் வாங்க முடியும். பின்னர் ஸ்டேட்டஸ் இணையத்திலேயே தொடரலாம்''''''''''''''''''''''''''''''''''''''''' மிக மிக நல்ல செய்திகளைக் கொடுத்திருக்கிறீர்கள்
பதிலளிநீக்குஸ்ரீராம்.
எனக்கெல்லாம் பர்த் செர்டிஃபிகேட் கிடையாது.
பசங்களுக்குச் சிரமப்பட்டு வாங்கினோம்.
ஆதார் இருக்கிறது. பான் நம்பர் இருக்கிறது.
இன்னோரு ஏதோ ஒன்று வாங்க வேண்டுமாமே.
தொந்தரவு இல்லாமல் இருக்கவேண்டும்.
எனக்கும் பர்த் சர்டிபிகேட் இல்லாததால் பள்ளியில் அப்பா தேதி மாற்றிக் கொடுத்தார். அவருக்கு நினைவு வந்த தினம்! அவருடைய பிறந்த நாள்.
நீக்குஎன் நண்பன் அவன் மகளுக்கு இரண்டு இடங்களிலிருந்து பர்த் சர்டிபிகேட் வாங்கி வைத்திருந்தான். அதெல்லாம் பழைய கதை. அவை இப்போது நடைபெறாதிருக்கவே இந்த ஏற்பாடுகளாம்.
ஆதாரையும் பானையும் இணைக்கவேண்டும். ஒவ்வொரு வங்கிக்கணக்குடனும் ஆதார், பான் இணைப்பு இருக்க வேண்டும். ஏகப்பட்ட நடைமுறைகள்.
எங்களுக்கும் பிறந்த தேதி, வருடத்துடன் கூடிய சான்றிதழ் இல்லை. ஜாதகம் ஒன்று தான். முன்னெல்லாம் நான் பள்ளியில் படிக்கையில் ஜாதகத்தில் பொய்யாக எழுத மாட்டார்கள் என்பதால் எங்க பள்ளி ஹெட் மாஸ்டர் சில குழந்தைகளின் ஜாதகத்தைக் கேட்பார். ஶ்ரீராம் சொல்லி இருக்கும் எல்லா நடைமுறைகளும் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுச் சில வருடங்களாகவே நடைமுறையில் இருக்கின்றன. நாங்கல்லாம் எப்போவோ ஆதார், பான், வங்கிக்கணக்கு ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்துவிட்டோம். வங்கியிலேயே கேஒய்சி விபரங்கள் கேட்கும்போதே கொடுத்துவிடலாம். பத்து வருஷங்களாவது இருக்கும் நாங்க இவற்றை இணைத்து.
நீக்குஎங்க குழந்தைகளுக்கு அவங்க அம்பேரிக்கா போனப்புறமாப் பிறந்த தேதிச் சான்றிதழ் தேவைப்பட்டது. நல்லவேளையாக் கேந்திரிய வித்யாலயாவில் பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் சேர்க்க மாட்டாங்க என்பதால் நாங்க ஏற்கெனவே வாங்கி வைச்சிருந்தோம். அதைக் கொடுத்து விட்டோம்.
நீக்குமுன்னர் பெரிய அளவில் பிறப்புச் சான்றிதழ் கேட்பதில்லை. இப்போது ஒவ்வொரு இடத்திலும் கட்டாயம் கேட்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் தயாராக இருக்க வேண்டி உள்ளது.
நீக்குPICME Number இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன் ஜி
பதிலளிநீக்குநிறைய பேர்களுக்கு தெரியாமல் இருக்கும் என்கிற என் சந்தேகம் உறுதியானது! நாலுபேருக்கு உதவுமே...
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை/மதியம் வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள் ஒரு பக்கம் கொரோன இல்லை. இன்னொரு பக்கம் ஜூனில் நான்கவது அலை. எதுவும் இல்லாமல் நிம்மதியாய் இருக்கப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம். கொரோனா கட்டுப்பாடுகள் இன்றுடன் விடையப்பெறுகின்றன என்பது அரசின் நிலைப்பாடு. அதே சமயம் ஜூனில் (அதுவும் பஞ்சாங்கம் பார்த்தது போல 22 ஆம் தேதி!) நான்காவது அலை வரலாம், முகக்கவசமும், சமூக இடைவெளியும் கடைப்பிடிப்பது உத்தமம் என்பதும் அரசின் (பலவீனமான) நிலைப்பாடுதான்.
நீக்குரொம்பக் கவலையாத் தான் இருக்கு. இப்போக் கோயிலுக்குப் போனப்போ முகக் கவசம் போட்டுக் கொண்டிருந்தது ரொம்பவே வியர்த்துக்கொண்டிருந்தது. இத்தனைக்கும் ஏசி கார்! :(
நீக்குமூடிய காரில் முகக்கவசம்? தேவை இல்லை. ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு கவசமில்லாமல் பயணிக்கலாம்.
நீக்கு//இதற்கு விளம்பரம் போதுமான அளவில் இல்லையோ, அல்லது நான்தான் கவனிக்கவில்லையோ!// இதற்கு விளம்பரம் இல்லை என்பதிலிருந்தே இது மத்திய அரசின் திட்டம் எனத் தெள்ளத் தெளிவாகப் புரியவில்லையா? ஆதார் எண் கேட்டிருப்பதில இருந்தே யூகித்திருக்கலாம். இதைப் போலத் தான் பல்வேறு நலத்திட்டங்களும் பொதுமக்களின் பார்வைக்கு வரவே இல்லை. முக்கியமாய் மத்திய அரசின் விலை குறைவான மருந்துகள் கிடைக்கும் மருந்தகங்கள். சமீபத்தில் கும்பகோணம் சென்றிருந்த போது அங்கே 2,3 இடங்களில் பார்த்தேன். அதே போல் தஞ்சாவூரிலும் 2,3 இடங்களில் உள்ளன. இங்கே ஶ்ரீரங்கத்தில் எங்க வீட்டுக்கு அருகேயே இருக்கு. திருச்சியிலும் 2,3 இடங்களில் உள்ளன. ஆனால் எல்லாவற்றிலும் ப்ரதான் மந்த்ரி ஜன் ஔஷதி எனப் போட்டு அப்படியே ஹிந்தி வார்த்தைகளைத் தமிழில் எழுதி இருக்காங்க. இதைப் பார்த்ததுமே மக்கள் எப்படிப் புரிஞ்சுப்பாங்க? அவங்க பாட்டுக்கு ஏதோ ஹிந்தியில் உள்ளதை அப்படியே தமிழில் எழுதி இருக்காங்கனு போயிடுவாங்க. எங்க வீட்டு வேலை செய்யும் பெண்ணைப் பல முறை சொல்லியும் புரிஞ்சுக்காமல் மாதம் நான்காயிரத்துக்கு மருந்துகள் வாங்கிக் கொண்டிருக்கார். நேற்று நன்றாய்த் திட்டி இந்தக் கடையில் போய் வாங்குமாறும் கூடவே அவளுடைய யு.ஏ.என். கார்டும் (இ-ஷ்ரம் கார்டு) எடுத்துப் போய்க் கேட்கச் சொல்லி இருக்கேன். எல்லாம் செய்து கொடுத்தாலும் பயன்படுத்தத் தெரியலை. :(
பதிலளிநீக்குபல திட்டங்களின் பெயரும் ஹிந்தியிலே உள்ளதை ட்ரான்ஸ்க்ரிப்ஷன் செய்து போட்டிருப்பதால் அதன் முழு விபரங்கள் மக்களிடம் போயே சேரவில்லை. நூறு நாள் வேலைத்திட்டமும் மத்திய அரசோடது தான். அதை இவங்க (இப்போ இருக்கும் மத்திய அரசு) பெயரை மாற்றியது. உடனே தமிழ்நாடு முழுக்க அந்தத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது என்றே பிரசாரங்கள் நடந்தன. ஆனால் அதில் இன்னமும் கூடவே 50 நாட்கள் சேர்த்திருப்பதாகச் சொல்கின்றனர். கிராமப்புறச் சாலை மேம்பாட்டுக்கு ஹைவேஸ் துறையிலிருந்தே மானியங்கள் கொடுக்கின்றனர். பெண்கள் விறகில் சமைக்க வேண்டாம் என எரிவாயுவுக்கு ஏழை, எளிய பெண்களுக்கு மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் அடுப்புடன் கிடைக்கும்.இதைத் தவிர்த்து வீடு கட்டிக் கொள்ளவும் மானியங்கள் உண்டு.
நீக்குவிலை குறைந்த மருந்துகள் பற்றி மக்கள் மனதில் ஒரு மயக்கம் இருக்கிறது. விலை குறைச்சலாய் இருந்தால் நல்ல கம்பெனியாய் இருக்காது, வேலை சரியாய் செய்யாது.
நீக்குஅவர்களுக்குத் தெரியாதது கிட்டத்தட்ட எல்லா கம்பெனிகளும் ஒரே மாதிரிதான் என்பது. சொல்லப்போனால் பெரிய கம்பெனிகள்தான் நிறைய கொள்ளை அடிப்பார்கள்..
ஆம், ஹிந்தியில் உள்ளதை அப்படியே போவது.. இதற்கு மற்ற கடைக்காரர்கள் தூண்டுதல் அச்சுறுத்தல் காரணமாய் இருக்குமோ என்பது சந்தேகம். வீடு கட்ட மானியம் என்பது குடும்பத்தில் முதல் வீட்டுக்கு - பெண்களின் பெயருக்கு.
நீக்குஇல்லை, ஶ்ரீராம், ஹிந்தியில் உள்ளதை அப்படியே போடுவதில் மற்றக் கடைக்காரர்கள் சம்பந்தமெல்லாம் இருப்பதாய்த் தெரியலை. இங்கே உள்ளவர்கள்/சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த மத்திய அரசு ஊழியர்கள் இதை மொழி மாற்றம் செய்து கொடுக்கணும். மத்திய அரசு நிர்வாகத்தில் எல்லாத் துறைகளுக்கும் ஓர் மாநில மொழி அதிகாரி/ஹிந்தியில் கரை கண்டவங்களை வேலைக்கு வைச்சுக் கூடவே 4 உதவியாளர்களும் கொடுக்கிறாங்க. அவங்கல்லாம் செய்ய வேண்டிய வேலை இது! :( எங்கே!
நீக்குஅதாவது, அது என்ன மாதிரி கடை என்று மக்களுக்கு தெளிவாகத் தெரிந்து விட்டால், இவர்கள் வியாபாரம் பாதிக்கும் என்பதால், இவர்கள் அதைச் செய்ய வேண்டாம் என்று அழுத்தம் தந்திருக்கலாம் என்று சொல்ல வந்தேன்!
நீக்குஶ்ரீராமின் அண்ணன், அவர் மகன், மருமகள் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்/ஆசிகள்/பிரார்த்தனைகள். தேவதையைப் பற்றி ஶ்ரீராம் இன்னமும் எழுதவே இல்லை. :(
பதிலளிநீக்குவாழ்த்துகள், ஆசைகளுக்கு அவர்கள் சார்பில் நன்றி. சில விஷயங்களை எழுதாமலிருப்பதே நல்லது!
நீக்குஓ, ஓகே. சரி. :(
நீக்குஎங்க வீட்டில் ஏசியைப் பார்க்க ஆட்கள் வந்தால் நல்லபடி திரும்பிச் செல்லும் வரை திக் திக் திக் தான்! பிள்ளையாரை வேண்டிக்கொண்டு இருப்போம். :(
பதிலளிநீக்குமதன் நகைச்சுவைத் துணுக்குகள் அனைத்தும் ஏற்கெனவே படித்து ரசித்தவை.
நான் மேலே போய் பார்க்கவே மாட்டேன், அவர்கள் அந்த குறுகிய சுவரில் பிடிமானமில்லாமல் நிற்பதை... எனக்கு முதுகுத்தண்டில் சிலீரென்று இருக்கும்!
நீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்குஇன்றைய செய்திகள் அனைத்தையும் படித்தேன். நன்று.
ஜோக்ஸ் மனதிற்குப் புத்துணர்ச்சி
நன்றி நெல்லை.. என்ன கன சுருக்கமாக கமெண்ட்?!
நீக்குதர்ப்பணம் அப்புறம் நிறைய வேலைகள் (அதில் ஒன்று பாடாவதி வலிமை படத்தைப் பார்த்தது.. நல்லவேளை 600 ரூ மிச்சம்)
நீக்குவலிமையை நான் பென் டிரைவ் உபயத்தில் முன்னரே பார்த்து இரும்பூதெய்தினேன்!
நீக்குபிறப்பதற்கு ஒரு நம்பர் (PICME, RCH ), வாழ்வதற்கு சில நம்பர்கள் , (birth certificate, voter, aadhaar, இன்னும் வரப்போகும் NRC), சாவதற்கு ஒரு செர்டிபிகேட் (டாக்டர்), செத்தபின் தகனத்திற்கு செர்டிபிகேட், தகன வரிசை எண், செத்தபின்பும் செர்டிபிகேட் .... ஆண்டவா இன்னும் என்ன என்ன செர்டிபிகேட் கொண்டு வரப்போகிறாயோ? வாழ்நாள் முழுதும் இந்த சேர்டிபிகேட்கள் வாங்குவதிலேயே போய்விட்டால் எப்படி உழைத்து சம்பாதிப்பது?
பதிலளிநீக்குசில ஜோக்ஸ் முன்னேரே வந்தவை தன். அதனால்என்ன. அலுக்கவில்லை.
கவிதையே
நீ எங்கே போனாய்
சென்னையின் வெயிலில்
கரிந்து போனாயோ?
கவிதை ????
Jayakumar
கவிதை பகிர்ந்திருக்கலாம்.. மறந்து விட்டது. மேலும் ஏற்கெனவே நிறைய விஷயங்கள் வரிசையில் நிற்கின்றனவே என்று இருந்து விட்டேன்.
நீக்குஐயோ முக்கியமான PAN, இருப்பிட, nativity மற்றும் ஜாதி செர்டிபிகேட் களை விட்டுவிட்டேனே!
பதிலளிநீக்குJayakumar
காலத்தின் கோலம். எல்லாம் தேவையாய் இருக்கிறது.
நீக்குPICME certificate தெரியாத தகவல். தெரிவித்துள்ளது நன்றி. இந்த செய்தி பலரையும் சென்றடைய வேண்டும்.
பதிலளிநீக்குதனியார் மருத்துவமனைகளில் இதை தெரிவிக்கிறார்களா என்று தெரியவில்லை.
தனியார் மருத்துவமனையிலும் கணக்கு கொடுக்க வேண்டுமே... எனவே சொல்வார்கள்.
நீக்குபெங்களூரில் எங்கள் வீட்டில் ஏ.சி.க்கு இப்படித்தான் எசகுபிசகாக ஒரு இடம் கொடுத்திருக்கிறார்கள். சர்வீஸ் செய்வது ரொம்ப கஷ்டம்.
பதிலளிநீக்குஆனாலும் அந்த படத்தைப் பார்த்தால் உங்களுக்கு இப்படி தோன்றியிருக்க வேண்டாம்
ஹா.. ஹா... ஹா... நான் என்றால் அவர்கள் மேல் நம்பிக்கை வைத்து அப்படி நிற்கமாட்டேன்! மர்பி லா எனக்கு ரொம்பவே ஒத்துவரும்!
நீக்குமுதுமை பற்றி எனக்கு வயதாகும் பொழுது யோசித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஉலகம் வெப்பமயமாகுதல் பற்றி பயமுறத்தல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
ரெட்டைவால் ரெங்குடு ஜோக்ஸ் எதுவும் மறக்க முடியாது.
நீங்கள் எல்லாம் முன்னரே தயாராக இருக்க வேண்டுமே என்றுதான் நானும் இப்போதே பகிர்ந்தேன்.!!
நீக்குஉலகவெப்பமயமாதல் நடந்து ஒன்றுதான் இருக்கிறது.
ஜீவநதியாள் தாமிரபரணி தகதகத்துக் கொண்டு இருக்கின்றாள்.. எண்ணமும் இதயமும் குளிர்ந்திருக்கின்றன.
பதிலளிநீக்குநமது வலைப் பதிவர்கள் அனைவரது நினைவும் அலை மோதுகின்றது..
எல்லாரும் சௌக்கியமாக விளங்க வேண்டும்..
ஸ்ரீ உலகம்மை உடனாகிய பாவநாசப் பெருமான் நல்லருள் புரிவாராக..
ஆஹா! இப்போத் தான் நாங்க போயிட்டு வந்த விபரங்களைப் பதிவாகப் போட்டிருந்ததை மின்னூலுக்குத் தயார் செய்து வருகிறார் வெங்கட். :)))) அருமையான கோயில். அந்தச் சுற்றுப்புறமே மனதைக் கவரும். அங்கேயே இருந்தால் போதும் போல் இருக்கும். பாபநாசம் மேலே போய்ப் பார்த்தீங்களா?
நீக்குநான் திருநெல்வேலி வழியாக ஒருமுறை மார்த்தாண்டம் சென்றிருக்கிறேன் - நண்பனின் திருமணத்துக்கு! மற்றபடி அங்கிருக்கும் கோவில்கள் சென்றதில்லை.
நீக்குஆ துரை அண்ணா...தாமிரபரணி அதுவும் பாவநாசப் பெருமான் கோயிலா...எனது ஃபேவரிட் இடம்.
நீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா. வணக்கம்.
நீக்குஇன்றைய பதிவில் பயனுள்ள செய்திகள் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குஉங்கள் அண்ணன் மருமகளுக்கு வாழ்த்துகள்.
குடைமிளகாய் அருமை.
பிரபல முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் அவர்கள் கட்டுரை எப்போதும் நன்றாக இருக்கும். இந்த கட்டுரையும் அருமை.
மதுரையிலும் வெப்பம் அதிகம்.
நகைச்சுவைகள் நன்றாக இருக்கிறது.
ரசனையான புகைபடமா! உங்கள் எண்ணம் கடவுளே! என்று இருக்கிறது.மூவரும் பத்திரமாக இறங்கி இருப்பார்கள் என்று நம்புவோம்.
நன்றி கோமதி அக்கா. சென்னையிலேயே வெப்பம் தாக்குகிறது என்றால் மதுரையில் கேட்க வேண்டுமா?!
நீக்கு//உங்கள் எண்ணம் கடவுளே!//
ஹா.. ஹா.. ஹா... பின்னே எப்படி நம்பி நிற்பது!
PICME இப்பத்தான் தெரியும் நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது ஸ்ரீராம். இதுவரை தெரியாது.
பதிலளிநீக்குஅதெப்படி சொல்ல முடியவில்லை? இப்போதெல்லாம் சந்தேகம் வரும் போதே சென்று விடுகின்றனர். நம் தலைமுறையில் 45 நாளேனும் ஆக வேண்டும் என்று சொல்லி அதன் பின் தான் மருத்துவரிடம் செல்வது.
ஓ இப்போதெல்லாம் பர்த் செர்டிஃபிக்கேட் இப்படியா? அட பரவாயில்லையே நல்ல விஷயம். எனக்கு இருக்கிறது பர்த் செர்ட்டிஃபிக்கேட். ஆனால் என் கணவருக்கு இல்லை. இனி எடுப்பது சிரமமோ தெரியவில்லை.
கீதா
இன்னமும் இந்த விஷயம் எனக்கு ஏற்கெனவே தெரியும் என்று யாரும் சொல்லவில்லை என்பதைக் குறித்துக் கொள்கிறேன்.
நீக்குஎனக்கும் பர்த் சர்டிபிகேட் கிடையாது!
நீங்க எழுதின விஷயம் மிக முக்கியமானது. நான் கேள்விப்பட்டதே இல்லை. பாராட்டுகள் ஸ்ரீராம்.
நீக்குபர்த் சர்டிஃபிகேட் நமக்கெதற்கு? 10 வகுப்பு புத்தகத்தில் இருக்கும். அதைவைத்து பாஸ்போர்ட். போதாதா?
ஆ ஸ்ரீராம் உங்களுக்கும் ப சர் இல்லையா?!!!!!!
நீக்குநெல்லை சில விஷயங்களில் இன்னமும் பர்த் செர்ட்டிஃபிக்கேட் கேட்கிறாங்களே!! என் மகனுக்குக் கூட காப்பி காப்பியா எடுத்தோமே...
கீதா
பிக்மி - தமிழ்நாட்டில் அழகாகச் செய்திருக்காங்களெ. நல்ல விஷயம்
பதிலளிநீக்குஆதார் என்பது நல்ல விஷயம்தான் கிட்டத்தட்ட அமெரிக்கா ஆனால் எனக்கு இப்போதுவரை ஆதாரில் புதிய அட்ரெஸ் மாற்ற முடியாமல் தவித்துவருகிறேன். என் பெயரில் அது கேட்கும் எந்தவித ஆதாரமும் இல்லை.
சமீபத்தில் வீட்டு ஓனர் அலல்து வீட்டு உறவு (கணவர்/மனைவி/) நம்பரைக் கொடுத்தும் கூட ஆன்லைனில் செய்யலாம் என்று வந்தது. ஆனால் அந்த வழியிலும் இது வரை மாற்ற முடியவில்லை.
ஆதாரை இணைப்பது அத்தனை சுலபமாக இல்லை. பான் கார்டில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக முயன்று முயன்று இரு வாரம் முன் தான் இணைக்க முடிந்தது. நல்ல காலம் அதில் வேறு அட்ரஸ் ஆதாரில் இருப்பது வேறு அட்ரஸ்.
எங்கள் அட்ரஸ் மாறிக் கொண்டே இருப்பதால் மிகவும் கடினமாக இருக்கிறது. இப்படி மாறுபவர்களுக்காகவேனும் ஆனலைனில் டக்கென்று முடிக்க ஒரு வழி செய்யலாம்.
கீதா
தி/கீதா, நாங்க ஆதார் கார்டு 2010--2011 ஆம் ஆண்டில் அம்பத்தூரில் இருக்கும்போதே வாங்கினோம். கார்டுக்கு உரிய தகவல்களைக் கொடுத்துவிட்டு அம்பத்தூர் விலாசத்தையும் கொடுத்துட்டு அம்பேரிக்கா போயிட்டோம். ஆனாலும் கார்டு பத்திரமாக வந்தது. நாங்க அம்பேரிக்காப் போய் நான்கு மாதம் கழித்து. அதுக்கப்புறமா இன்னும் 2,3 மாசம் கழிச்சுத் தான் கார்டையே நாங்க திரும்பி வந்து பார்த்தோம். அதன் பின்னர் ஶ்ரீரங்கம் வந்த பின்னர் முதல் முறை விலாசம் நாங்க குடியிருந்த வீட்டின் எண்ணிற்கு நாங்களே மாற்றிக் கொண்டோம். அது ஒரு 2,3 வருஷம் இருந்தது. பின்னால் இந்த வீடு வாங்கின பின்னர் அதை மாற்ற வேண்டி வெங்கட்டிடம் பேசிக் கொண்டிருக்கையில் ஹைதராபாதில் இருக்கும் இந்த அலுவலக ஊழியர் ஒருவரைத் தொடர்பு கொள்ளச் சொன்னார். அவர் மூலம் இந்த விலாசத்துக்கும் மாற்றிக் கொண்டோம். இப்போது போன வருஷத்தில் என்னோட இனிஷியலை மாற்றணும்னு இங்கே ஶ்ரீரங்கத்தில் உள்ள தபால் அலுவலகத்துக்குச் சென்று விண்ணப்பம் கொடுத்தோம். பெயரின் இனிஷியல் மாறி வந்திருக்கு. :)))) நீங்க உங்கள் அருகே உள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். எல்லாத் தபால் நிலையங்களிலும் அங்கே இதற்கென்றே ஒரு தனி செக்ஷன் வேலை செய்கிறது. நாம் எப்போவுமே இப்படித்தான் வசதி இருக்குனு தெரியாமலேயே கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்போம். எனக்குப் பான் கார்டில் கீதா சாம்பசிவம். ஆதார் கார்டில் என்.ஆர்.கீதா. (இந்த இனிஷியலைத் தான் இப்போ மாற்றினோம் கீதா சாம்பசிவம் என்றே) ஆனாலும் என்னோட பான் கார்டை ஆதாருடன் என் மைத்துனர் இணைத்துக் கொடுத்துவிட்டார். போன வருஷம் எங்க ஆடிட்டரும் மிகவும் முயன்று இணைத்துவிட்டார். ஒண்ணும் பிரச்னை இல்லை.
நீக்குஇன்னும் சொல்லப் போனால் இவை எல்லாம் நாமே ஆன்லைனில் நம் வசதிக்கு மாற்றும்படியாக எளிமையாக உள்ளது. என்றாலும் நம்மவருக்குக் கொஞ்சம் யோசனை என்பதால் தபால் நிலையம் போனோம்.
நீக்குஇங்கே ஒரு மாமா வீட்டிலேயே அக்கம்பக்கத்துக் குடியிருப்புக்காரங்களுக்கு லைஃப் சான்றிதழ், மற்றும் முக்கியமான சான்றிதழுக்கு அவரே நேரடியாக இலவசமாகச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். இப்போ காலி பண்ணிப் போயிட்டார்.
நீக்குஅக்கா நாங்களும் ஆதார் அறிமுகப் படுத்தும் போதே உடனடியாக வாங்கியாச்சு.
நீக்குஇங்கே அருகில் இருக்கும் தபால் நிலையத்திற்கும் சென்று பார்த்தாச்சு. என் கணவுக்குப் பிரச்சனை இல்லை. உடனுக்குடன் மாற்ற முடிகிறது. எனக்குத்தான் பிரச்சனை. காரணம் என் பெயரில் இருக்கும் ஆதாரம் வண்டி லைசன்ஸ், பாஸ்போர்ட். ஆனால் இரண்டுமே இந்த முகவரியில் இல்லை. இனிதான் பாஸ்போர்ட் முகவரி மாற்ற வேண்டும். ஆனால் சமீபத்தில் பாஸ்போர்ட்டில் முகவரி எதுவும் மாற்ற வேண்டாம். அவசியமில்லை என்று வந்ததை வாசிக்க நேர்ந்தது.
அக்கா நாங்களும் ஆன்லைனில்தான் செய்கிறோம். ஆனால் அது எந்த டாக்குமெண்டையும் ஏற்பதில்லை. தபால் நிலையத்திலும் கேட்கும் டாக்குமென்ட்ஸ் என் பெயரில் இல்லை. கணவரின் ஆதாரை ஏற்க மாட்டேன் என்கிறார்கள். ஆனலைனில் செய்வது அத்தனை எளிதாக இல்லை.
ஒரு சில மட்டுமே ஆன்லைனில் எளிதாக இருக்கிறது. எங்கள் அனுபவம் ஆதார் ஆன்லைனில் பானொடு பாடுபட்டு இணைத்தது மட்டுமே. எனது மற்றவை எதுவும் ஆன்லைனில் வொர்க்கவுட் ஆகலை.
யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
கீதா
கணவுக்குப்/ கணவருக்கு
நீக்குகீதா
பாஸ்போர்ட் முகவரி இதற்கு முந்தைய வீட்டு முகவரியில் இருக்கிறது!!!!!!! இந்த முகவரிக்கு மாற்ற வேண்டும் கொரோனா சமயத்தில் முடியவில்லை. ஆன்லைனிலும் செய்ய முடியவில்லை எனவே நேரில்தான் போக வேண்டும் எனும் போதுதான் முகவரி தேவையில்லை என்று செய்தி....அதை உறுதி செய்ய வேண்டும்
நீக்குகீதா
இப்போது போன வருஷத்தில் என்னோட இனிஷியலை மாற்றணும்னு இங்கே ஶ்ரீரங்கத்தில் உள்ள தபால் அலுவலகத்துக்குச் சென்று விண்ணப்பம் கொடுத்தோம். பெயரின் இனிஷியல் மாறி வந்திருக்கு. :))))//
நீக்குஇப்படியான பிரச்சனை ஒன்றை அதாவது பேங்க் அக்கவுன்ட் பெயர் பாஸ்போர்ட் பெயர் எல்லாம் ஒரே போன்று இருக்க ஆதாரில் மட்டும் மாறி வந்திருக்கு நட்பு ஒருவரின் மகனுக்கு. அதை இணைக்க முடியாமல் அவஸ்தை. இன்னும் சரியாகவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதன்பின் கேட்கவில்லை. ஒரு சிலருக்கு எளிதாகிறது கீதாக்கா ஒரு சிலருக்கு எளிதாகச் செய்ய முடியவில்லை.
கீதா
இல்லை கீதா... என் ஆதார் எண்ணைக் கொடுத்தே மகன்களின் எண்ணை மாற்றுவது கடினமாக இருந்தது. சில முகவரிகள் தெளிவாக அமைகின்றன. சில முகவரிகள் குழப்பமாய் அமைகின்றன. அது இந்த விஷயத்தில் தொல்லை செய்கிறது.
நீக்குஎல்லா தபால் நிலையங்களிலும் இபப்டி மாற்ற முடியாது. இப்போது யூனியன் பாங்கிலோ வேறு எங்கோ ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறன். முன்னர் சிட்டி பேங்கில் இதற்கு என ஒரு செக்ஷன் இருந்தது. காலை ஏழு மணிக்கே சென்று டோக்கன் வாங்க வேண்டும். பின்னர் சம்பந்தபப்ட்டவர்கள் நேரில் சென்று மணிக்கணக்கில் தேவுடு காக்கவேண்டும்.
நீக்குநாமே ஆன்லைனில் மாற்றுவதிலும் சில சிரமங்கள் உண்டு. உங்களிடம் அவர்கள் கேட்கும் எல்லா டாகுமெண்ட்ஸும் ஸ்கேன் செய்து அனுப்ப வசதியாய் தயாராய் இருக்கவேண்டும்.
நீக்குஉதாரண சிரமம். நான் வீடு மாறியதும் முதலில் மாற்றிய எரிவாயு இணைப்பு ரசீதில் உள்ள என் முகவரிக்கு, ஆதார் மாற்றியதும் அதில் உள்ள முகவரிக்கு உள்ள வேறுபாடு. எரிவாயு இணைப்பு வீடு வாங்கிய பத்திரத்திலிருந்து எடுக்கப்பட்டது. (அதுவே பின்னர் சரியில்லை என்று ஆகிவிட்டது!) ஆதார், ஆன்லைனில் முஅயற்சிக்கும்போது அது காட்டும் ஆப்ஷன்களில் ஒத்துவருவதை க்ளிக் செய்து வாங்கியது.
நீக்குரொம்ப சுலபமான வேலை கீதா ரங்கன்(க்கா). வங்கி பாஸ்புக்கில் அட்ரஸ் மாத்தணும். அதுக்கு வாடகைக்கு இருக்கும் இடத்தின் ரெண்டல் அக்ரீமெண்ட் போதும் (நாங்கள் சொந்த வீட்டின் அட்ரஸ் வேண்டும் என்பதால் deed கொடுத்தோம்). பாஸ்புக்கில் அட்ரஸ் சரியா இருக்கான்னு பார்த்துக்கணும். அதைக் கொடுத்தால் வேலை முடிந்தது 50 ரூபாயில்.
நீக்குஇடம் மாறிக்கிட்டே இருப்பேன் என்றால் என்ன செய்யறது?
நெல்லை இதுவும் தெரியும்....வங்கி பாஸ்புக்கில் அட்ரஸ் மாத்த ஆதார் கேட்டாங்களே!!!!!!! வீட்டு அக்ரீமென்ட் என் பெயரில் இல்லையே....எல்லா வகையிலும் முயற்சி செய்து....
நீக்குவீட்டு ஓனர் அவர் ஆதார் நம்பர் கொடுத்தால் செய்யலாம்னு ஒரு ஆப்ஷன் இருக்கு. ஆனால் தயக்கம். ஏதேனும் வழி பிறக்கும்
கீதா
கீதா
ஸ்ரீராம் எல்லாம் ஸ்கேன் ரெடியாய் இருக்கு ஆனால் இந்த அட்ரஸ் பதிந்தது டாக்குமென்ட் என் பெயரில் இல்லையே.
நீக்குஎளிமையாக்கினால் நல்லது. அமெரிக்காவின் சோசியல் செக்யூரிட்டி நம்பர் போல ஆதாரைக் கொண்டு வர முயல்வது நல்லதுதான். அங்கு அந்த நமப்ரைத் தட்டினால் நபரைப் பற்றிய அத்தனை விவரங்களும் கொட்டிவிடும்.
பார்ப்போம் ஏதாவது வழி பிறக்கும். வீட்டில் எனக்கு மட்டும் தான் இந்தப் பிரச்சனை.
கீதா
இடம் மாறிக்கொண்டே இருப்பது இந்த வகையில் தொல்லைதான். வங்கிக் கணக்கு புத்தகம் சுலபமான வழிதான்.
நீக்கு//வங்கி பாஸ்புக்கில் அட்ரஸ் மாத்த ஆதார் கேட்டாங்களே!!!!!!!//
ஆமாம், இப்போ எல்லாவற்றுக்கும் ஆதார் நம்பர் கேட்பது ஒரு தொல்லை.
//எளிமையாக்கினால் நல்லது. அமெரிக்காவின் சோசியல் செக்யூரிட்டி நம்பர் போல ஆதாரைக் கொண்டு வர முயல்வது நல்லதுதான்//
நீக்குஉண்மை. மாறும் முகவரிகளைக் கொண்டு ஆதார் இல்லாமல் சிட்டிசன் என்கிற வகையில் ஒரு எண் தருவது நல்லது.
கீதா ரங்கன் சொல்வது எனக்கு என்னமோ புரியலை. கணவன்/மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் பெயரில் வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம் இருந்தால் போதுமே. கணவனுக்கு இருந்தால் மனைவிக்கு அதையே காட்டிக்கலாமே? குழப்பமா இருக்கு. :( இங்கே நாங்க வாடகை வீட்டில் இருந்தப்போ என்னோட வங்கிக்கணக்கெல்லாம் அந்த வீட்டு வாடகை ஒப்பந்தத்தைக் காட்டியும், ரேஷன் கார்டு, காஸ் பில் ஆகியவற்றைக் காட்டியுமே வங்கிக்கணக்குகளைப் பத்து வருஷங்கள் முன்னால் மாற்றினோம்.
நீக்குசுகாதாரத்துறையில் இருப்பவர்களுக்கே இந்தப் பிக்மீ பற்றிய போதிய ஞானம் இல்லைனால் மத்தவங்களைப் பத்தி என்ன சொல்வது! :( சரியான முறையில் விளம்பரப்படுத்த வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் மத்திய அரசு என்னமோ மாநிலத்தின் உரிமைகளைப் பறித்து விட்டாற்போல் மாநில அரசின் உரிமைகளை மீட்கப் பிரதமர்/உள்துறை அமைச்சருடன் சந்திப்புனு போட்டுக்கறாங்க! :( என்ன உரிமை பறி போய்விட்டது?
பதிலளிநீக்குசில விஷயங்கள் தேவை ஏற்பட்டு, அருகில் செல்லும் போதுதான் தெரிகிறது. சமயங்களில் அது சம்பந்தமான விளம்பரங்கள் கண்ணில் பட்டால் கூட நமக்கு சம்பந்தம் இல்லாத விஷயமாய் இருந்தால் நம் மனதில் பதியாது.
நீக்குகீதா சாம்பசிவம் இணையச் செய்திப் பத்திரிகை அல்லது தொலைக்காட்சிகளைச் சரியாப் பார்க்கிறாங்களா? பிரதமர்/மத்திய உள்துறை அமைச்சர், ஸ்டாலினுடன் சந்திப்பு என்றுதானே வந்திருக்கணும்? இப்போ, thatstamilல, சோனியா காந்தி 2 நிமிடங்கள் காத்திருந்து ஸ்டாலினைச் சந்தித்தார் என்றுதானே போட்டிருக்காங்க.
நீக்குஹா.. ஹா.. ஹா... உலகப்பிரதமர்!
நீக்குஹாஹாஹாஹா நெல்லை, பயங்கர பில்ட் அப். என்னமோ வெள்ள நிவாரண நிதிக்கு மத்திய அரசு எதுவுமே கொடுக்காதது போலவும் இப்போத்தான் கொடுக்கச் சொல்லி இவங்க வற்புறுத்தி இருப்பதாகவும் செய்தி! அதே போல் தான் மற்றவைகளும். :)))))
நீக்குமுதியோருக்கு மருத்துவம் பார்க்கும் திரு நடராஜனின் அந்தப் புத்தகம் என்னிடம் உள்ளது. மேல்மருவத்தூர் பக்தர் போல!
பதிலளிநீக்குஓஹோ... அப்பா கூட ஒன்று வாங்கி வைத்திருப்பார். கலெக்ஷனில் பார்க்க வேண்டும்.
நீக்குபிக்மி நம்பர் உங்கள் வீட்டு நிகழ்வு தலை சுத்துது ஸ்ரீராம். இதை எல்லாம் எளிதாக்கலாமே. என்னவோ போங்க..
பதிலளிநீக்குநம்மைப் போன்றவர்களுக்கே இப்படி என்றால் எந்தவித அக்கவுண்டும் இல்லாமல் கூலி வேலை செய்பவர்கள் என்ன செய்வார்கள்?
கீதா
வீட்டுக்கு அருகே இருக்கும் எந்த ஆரம்ப சுகாதார நிலையமும் இதற்கு ஏற்றதுனு அறிவிக்கணும். அல்லது அரசு மருத்துவமனைகளில் பதியலாம்னு சொல்லணும். இரண்டாவதே மிகச் சிறந்தது. கூலி வேலை செய்பவர்களும் பயன்படுத்திக்கலாம்.
நீக்குஆமாம் கீதாக்கா....இப்படிச் செய்யலாம் நீங்க சொல்லிருக்காப்ல. நல்ல விஷயம்.
நீக்குநான் என் விஷயத்திற்கும் கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கேன்
கீதா
சமயங்களில் சம்பந்தபப்ட்ட அலுவலகங்களில் நிறைய ரூல்ஸ் ராமாநுஜன்கள் இருப்பார்கள். ரூல்ஸ் சொல்வதை மொட்டையாகப் புரிந்துகொண்டு படுத்துவார்கள். அவை மக்களின் வசதிக்காக ஏற்பட்டது என்பதை மறந்த்து அதைக் கட்டிக்கொண்டு மாரடிப்பார்கள்.
நீக்குமோர்மிளகாய் யம்மி யம்மி!!! ஈர்க்கிறது.
பதிலளிநீக்குஇங்கு வீட்டுச் சுண்டைக்காய் பாட்டம் பாட்டமாய் போட்டாகிறது. உறவினர் கேட்க கேட்க வீட்டிலுள்ள மரமும் பூத்துக் கொண்டே காய்த்துக் கொண்டே இருக்கிறது. நானும் அவ்வப்போது பறித்துப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். நன்றி சுண்டைக்காய் செடி.மரத்திற்கு. நான் இங்கு வந்ததும் இரண்டு வைத்தேன் அதுதான் இன்று தந்துகொண்டிருக்கிறது. ஒரு வருடமாக!!!
கீதா
சுண்டைக்காயை மோரிலும் உப்புச் சேர்த்து ஊற வைக்கலாம். நான் பெரும்பாலும் மாவடு ஜலத்தில் போடுவேன். இன்னும் சுவையாக இருக்கும். போன வருஷ மாவடு ஜலம் இருந்தால் அதில் கூடப் போடலாம்.
நீக்குமோரில் போடவேண்டுமென்றால் மதுரைச் சுண்டைக்காய்தான்!
நீக்கு//நானும் அவ்வப்போது பறித்துப் போட்டுக் கொண்டே இருக்கிறேன்.// - னு சொல்றாங்க.. ஆனால் எனக்கு எதுவும் வந்து சேரலை. பச்சைச் சுண்டைக்காய், ஒரு கூறு 20 ரூபாய், 3 கூறு 50 ரூபாய் என்று மார்க்கெட்டில் சொன்னாங்க. நான் 2 கூறு 30 ரூபாய் என்று பேரம் பேசி வாங்காமல் வந்துவிட்டேன். இன்னும் இரண்டு நாட்களில் சென்று 50 ரூபாய்க்கு வாங்கிவரணும்.
நீக்குஹலோ நெல்லை உங்களைக் கேட்டேன்ல நீங்கள் பதிலே சொல்லலை....
நீக்குகீதா
ஆ கீதாக்கா உங்கள் கருத்துக்கு மதியம் பெரிய கருத்து அடித்தேனே வரலையா இங்கு...
நீக்குகீதாக்கா நானும் மோரில் ஊறப் போட்டிருக்கிறேன். நீர் நெல்லி போலவும்.....சுண்டைக்காய் கிரேவி செய்தேன். உசிலி, பொரியல், ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் நெகிழ்கறியமுது செய்யறப்ப அதிலும் நெயியில் வறுத்துப் போட்டு....
என் மாமியாரிடம் கற்றது நீங்கள் சொல்லியிருப்பது போல மாவடு நீரில் போட்டு வைப்பது. இப்ப இங்கு மாவடு இல்லை எனவே அது மட்டும் செய்யவில்லை.
கீதா
எனக்கென்னவோ சாம்பார் சுண்டைக்காயில் இதெல்லாம் செய்ய பிடிக்காது!
நீக்குமுதுமை பற்றி மருத்துவர் சொன்னது அக்மார்க்! சூப்பர். ஆமாம் மனோதிடம் மிக மிக அவசியம். அதுவும் அந்த நோயாளி!!!
பதிலளிநீக்குநான் மகனிடம் சொல்லுவேன், நம்ம ஆயுர்வேத மருத்துவர் இப்போது இல்லை. ஆனால் அவர் மருந்து நல்லா வொர்க்கவுட் ஆச்சு என்று. மகன் சொல்வான், முதல்ல நீ அவர் மேல வைத்திருந்த நம்பிக்கை அதுதான்...மெயின். அவர் உனக்கு ஒரு பொடியை ஒரு கேப்ஸுலில்தான் தந்தார் , அந்தக் கேப்ஸ்யூலில் என்ன பொடி இருக்கு என்று உனக்குத் தெரியுமா? ஸோ உன் நம்பிக்கைதான் காரணம்னு
நம்பிக்கை இருக்கும் போது மனோதிடம் தானாகவே வந்துவிடும்தானே
கீதா
இதை நானும் சொல்வேன். பிளேசிபோ தெரியுமா?
நீக்குயெஸ் யெஸ் ..ஸ்ரீராம் அதே Placebo effect...தெரியும்...பையனும் அடிக்கடி சொல்வதாச்சே..
நீக்குகீதா
ஓ தில்லி ஹோட்டல்கள் நல்லால்லியாமா?
பதிலளிநீக்குநமக்கென்ன தெரியும் நாம ஊர் ஊராய் போய் சாப்பிட்டால்தானே தெரியும்!! ஹாஹாஹாஹா
கீதா
தெரியலியே... இப்பவும், இன்னமும் வெங்கட் பதில் சொல்லவில்லை!
நீக்குதில்லி ஹோட்டல்கள் நன்றாகவே இருக்கும், சும்மா கச்சா முச்சான்னு கடைல சாப்பிடலைனா. நான் சமீபத்தில் ஒரு உடுப்பி ஹோட்டலில் (தங்கியிருந்த இடத்தின் அருகில்) ரவா தோசை சாப்பிட்டேன். நியாயமா தென்னிந்திய உணவுக்கு சரவணபவன் போன்ற ஹோட்டல்களுக்குப் போயிருக்கணும் (கரோல் பாக்கில் இரண்டு மூன்று இருக்கிறது). வட இந்திய உணவுக்கு பிகானீர்வாலா, ஹால்திராம் இன்னும் பல உள்ளன.
நீக்குசும்மா பொதுவா தில்லி ஹோட்டல் நல்லால்லைன்னு எப்படித்தான் சொல்றாங்களோ
ஆமாம் தில்லியில் நான் சாப்பிட்ட வரை நன்றாகவேதான் இருந்தது. வெங்கட்ஜி அவர் தளத்திலேயே கூட அவ்வப்போது சொல்லித்தானே வருகிறார்.
நீக்குஇது சரின்னு சொல்ல முடியுமா தெரியலை
கீதா
// சும்மா பொதுவா தில்லி ஹோட்டல் நல்லால்லைன்னு எப்படித்தான் சொல்றாங்களோ //
நீக்குஎழுதிய அந்த நிருபருக்கு ஏதோ ஒரு ஹோட்டலில் மோசமான அனுபவம் இருந்திருக்கும். அல்லது கவர் சரியாய் வந்திருக்காது!!
வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, நாம் உடனடியாக யோசித்து செயலாற்ற வேண்டும்.//
பதிலளிநீக்குபாருங்க இது சொல்லப்பட்ட வருஷம்?!!! இதுவரை என்ன நடந்தது? ஒன்னுமில்லை. யாரும் கேட்கப் போவதில்லை. எல்லாத்தையும் அழித்துக் கொண்டுதான் இருப்போம்.
இங்கு வந்த 3 வருடங்களில் இந்த வருடம் வெயில் இப்போதே கடுமையாகத்தான் இருக்கிறது. அதாவது பங்களூருக்குக் சொல்கிறேன். சென்னையோடு ஒப்பிட்டுச் சொல்லவில்லை.
இங்கும் கொஞ்சம் (நோட் இட்) வேர்க்கிறது!! பங்களூரும் கார்டன் சிட்டி என்பதிலிருந்து மேம்பாலம் கட்டிட சிட்டியாகிவிட்டது. ரயிலில் இனி வெல்கம் டு கார்டன் சிட்டினு சொன்னாங்கன்னு வையுங்க நற நற நற....
கீதா
நாம் நவீன கேட்ஜெட் உபயோகிப்பது எல்லாமே இவற்றை பாதிக்கும். நம்மால் அவற்றை உபயோகிக்காமல் இருக்கவும் முடியாது. இயற்கையின் அழிவைத்த தடுக்கவும் முடியாது!
நீக்குராஜராஜ சோழன் என்ன ஏஸி ரோமிலா படுத்தார்? செல்போனிலா பேசினார்?!
பெங்களூரில் இரண்டு நாட்களாக ஏசி போட்ட அறையில் சிறிது நேரம் இருக்கிறேன்.
நீக்குமைசூர் அரண்மணை உள்ளே ரொம்பவே குளிர்ச்சி. அதனால் நம் அரசர்களெல்லாம் நன்றாகவே தூங்கியிருப்பாங்க. இருந்தாலும், இயற்கையோடு ஒன்றிணைந்து எல்லோரும் இருந்ததால், இந்த அளவு வெக்கை அப்போது இருந்திருக்காது.
ஸ்ரீராம் நெல்லை சொல்லியிருப்பது போல் அப்போது இப்போது போல இல்லையே இயற்கையோடு இருந்ததால் இத்தனை வெக்கை இருந்திருக்காதுதான். க்ளோபல் வார்மிங்க் நீங்கள் சொல்லியிருப்பது போல் நாம் பயன்படுத்தும் கேட்கெட்ஸ்
நீக்குகீதா
இயற்கையோடு ஒன்றிணைந்து.....
நீக்குஅதைத்தான் நானும் சொல்ல வந்தேன்!
ஜோக்ஸ் அத்தனையும் சிரித்துவிட்டேன்.
பதிலளிநீக்குஅந்தப் படம் ஓ மை ரிஸ்க்கோ ரிஸ்கு
கீத
நன்றி கீதா.
நீக்குமதன் ஜோக்ஸ் சூப்பர். சுண்டங்காய் வத்தல் நன்றாக இருக்கிறது எங்கள் வீட்டிலும் உண்டு இம்முறை நிறைய காய்க்கவில்லை.
பதிலளிநீக்குஇன்றிலிருந்து 12 மணிநேரம் மின்வெட்டு காலல 8-12 மாலை 4_10 - நடுஇரவு. 12-2 .
அது மோர் மிளகாய் இல்லையோ?????????????????
நீக்குவாங்க மாதேவி.. உங்கள் நாட்டு நிலவரங்கள் செய்தியில் படிக்கும்போது கலவரமாகவும், கவலையாகவும் இருக்கிறது. பத்திரமாக இருங்கள்.
நீக்குகீதா அக்கா... ஆம். மோர் மிளகாயேதான்!
நீக்குபிக்மி நம்பர் பற்றிய தகவல்கள் அறிந்து கொண்டேன்...
பதிலளிநீக்குமனதிற்கு வயதில்லை...
உண்மை. நன்றி DD
நீக்குPICME Number என்றால் என்ன தெரியுமா உங்களுக்கு?//
பதிலளிநீக்குதகவல்கள் அறிகிறேன். நல்ல ஸ்கீம் என்று தெரிகிறது. மற்ற மாநிலங்களிலும் வந்துவிடும் என்று நினைக்கிறேன்.
துளசிதரன்
நன்றி துளசி ஜி. அங்கு கேரளாவில் இல்லையோ?
நீக்குநம் மனதை இளமையாக வைத்துக் கொண்டு சுறுசுறுப்பாக வைத்திருந்தால் முதுமை என்று உடலில் இருந்தாலும் மனதிற்கு இருக்காதுதான். மருத்துவர் சொல்லியிருப்பது அனைத்தும் நன்று.
பதிலளிநீக்குதுளசிதரன்
நன்றி துளசி ஜி.
நீக்குஜோக்ஸ் ரசித்தேன்.
பதிலளிநீக்குஅந்தப் படம், கட்டிடம் கட்டுபவர்கள் கூட உயரத்தில் ஏணியில் நின்று கொண்டு கூட கட்டிட வேலை செய்வார்களே அதையும் நினைவு படுத்துகிறது. கரணம் தப்பினால் மரணம் என்பது போன்றதாக இருக்கிறது. என்ன தைரியம்?
துளசிதரன்
பார்த்தால் வேலை செய்பவரின் உடன் வேலை செய்பவராகத் தெரியவில்லை. அந்த வீட்டு ஓனர் போல தெரிகிறது. அவரவர் மனைவிகள் "ஏங்க... இந்தாங்க காஃபி.." என்று குரல் கொடுத்தால் "இதோ வரேன்மா" என்று உள்ளே சென்றால் என்ன ஆவது!
நீக்குஇங்கும் வெயிலின் கடுமை ரொம்பவே சூடு தெரிகிறது
பதிலளிநீக்குதுளசிதரன்
உலகமே சூடாய் இருக்கிறது! கடவுளின் பூமியிலேயே சூடு!
நீக்குPregnancy and Infant Cohort Monitoring and Evaluation - PICME. It's a part of RCH programme of Government of India under National Health Mission. Most of the States are not following this as Health is a State subject under Constitutional provisions.
பதிலளிநீக்குதில்லி உணவகங்கள் குறித்த சர்வே குறித்து இப்போது, இன்றைய பதிவில் தான் பார்த்தேன். இவற்றில் பல தகிடுதத்தங்கள் உண்டு. தில்லி உணவகங்கள் பல நன்றாகவே இருக்கும். தேர்ந்தெடுத்து செல்ல வேண்டியது உங்கள் பணி. :) நிறைய உணவகங்கள் நன்றாகவே இருக்கின்றன.
மற்ற பகுதிகளையும் ரசித்தேன். ஆதார் எண் முகவரி மாற்றம் - Gazzetted அலுவலர் பக்கத்தில் இருந்தால் அவரிடமும் உரிய படிவத்தில் புதிய முகவரி கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
கெஜெட்டட் அலுவலரிடம் கையெழுத்து பெற்று, ஸ்கேன் செய்துதான் முடித்தோம்.
நீக்குநன்றி வெங்கட்.
இந்தப் பிக்மி மத்திய அரசின் திட்டம் என்பதே இங்கே உள்ள படித்தவர்கள் கூடப் புரிஞ்சுக்கலை! :( இப்படித்தான் அரசு வேலை அதிலும் மத்திய அரசு வேலையில் இருந்து பணி ஓய்வு பெற்ற ஒரு பெரியவருக்கு ரேஷன் பொருட்கள் மத்திய அரசால் வழங்கப்படுவது என்னும் விஷயமே தெரியவே இல்லை. சொன்னதும் முதலில் அதிர்ச்சி. நம்பவே இல்லை. :(
நீக்குபிக்மி புதிய தகவல். மருத்துவரின் குறிப்புகள் மனதில் நிறுத்த வேண்டியவை. இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதும், ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் வெப்பநிலையும் அச்சுறுத்துகின்றன. நகைச்சுவைத் துணுக்குகள் ரசிக்க வைத்தன. நல்ல தொகுப்பு.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு