வெள்ளி, 22 ஏப்ரல், 2022

வெள்ளி வீடியோ : பொண்ணுன்னா பொண்ணல்ல தேவ மங்க பூமிக்கு வந்ததென்ன

 அப்போதெல்லாம் காலை எழுந்த உடன் பல்விளக்கும் முன்னரே ரேடியோ ஆன் செய்து விடுவது வழக்கம்.  காலை ஐந்தரை மணிக்கு மங்கள இசை.  பின்னர் அருளாசி.  அப்புறம் என்னவோ...  ஆறு மணிக்கு பக்தி மாலை தொடங்கும்.  அதில் வழக்கமாக சில பாடல்களும் அணிவகுப்பதுண்டு.  திடீரென புதிய பாடல் அறிமுகமாவதும் உண்டு.  

சீர்காழி கோவிந்தராஜனுக்கென்று ஒரு பெரிய லிஸ்ட் பாடல்கள் உண்டு.  விநாயகர் பாடல்களும் (விநாயகர் அகவலும் அடக்கம்) முருகன் பாடல்களும் ஸ்பெஷல்.  அவ்வப்போது அபிராமி அந்தாதி போன்ற அம்மன் பாடல்கள்.  சீர்காழி கோவிந்தராஜன் என்றாலே உச்சஸ்தாயிதான் நினைவுக்கு வரும்.  

ஒருநாள் இந்த பாடல் காதில் விழுந்ததும் அதுத கணமே மனதில் நுழைந்து இடம் பிடித்து விட்டது.  அமைதியான குரலில், தென்றல் போன்ற இசையுடன் உருக்கமான பாடல்.  

'அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்..  அவன்தான் வைகுந்தமே' என்கிற வரி ஆழமாக மனதில் நின்றது.

பாடலை எழுதியவர் உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம்.  இசை குன்னக்குடி வைத்தியநாதன்.

காவிரி சூழ்பொழில் சோலைகள் நடுவினில் கருமணி துயில்கின்றது
கண்ணனின் நித்திரை வண்ணங்கள் காட்டிடும் ஸ்ரீரங்கம் தெரிகின்றது..ஸ்ரீரங்கம் தெரிகின்றது..

மாவிலை தோரணம் வாயில்கள் தாண்டிட கோயில் ஒளிர்கின்றது
மத்தளம் மேளங்கள் கொட்டி முழக்கிட மண்டபம் மலர்கின்றது
மணி மண்டபம் மலர்கின்றது..

பாரெங்கும் சுற்றினும் அவனருள் கிட்டிடும் ஓர் இடம் ஸ்ரீரங்கமே
அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் அவன் தான் வைகுந்தமே
போனது போகட்டும் இனியாகிலும் நெஞ்சம் புனிதம் ஆகட்டுமே..
புன்னகை புரிந்திடும் மன்னவன் பொற்பாதம் கண்கள் காணட்டுமே..
கண்களும் காணட்டுமே...


========================================================

1985 ல் வெளியான படம் 'நீதியின் மறுபக்கம்'.  ஷோபா சந்திரசேகரின் கதையை எஸ் ஏ சந்திரசேகர் இயக்க, அவரின் ஆரம்பகால ஆஸ்தான நாயகன் விஜயகாந்துடன் ராதிகா இணைந்து நடித்த இந்தப் படத்துக்கு இசை இசைஞானி இளையராஜா.

இன்று பகிரப்படும் இந்தப் பாடலை எழுதி இருப்பவர் புலமைப்பித்தன்.

கே ஜே யேசுதாஸ், ஜானகி குரலில் மிக இனிமையான பாடல்.

இந்தப் பாலுக்காக விவரங்கள் தேடியபோது ஷோபா சந்திரசேகர் பற்றி படிக்க நேர்ந்தது.  

என்ன ஒரு திறமையான பெண்மணி..  

கர்நாடக சங்கீதத்தை முறையாகப் பயின்று மேடையேறியவர்.   சில லைட் மியூசிக் ட்ரூப்புகளிலும் பாடி இருக்கிறார்.  மீனாக்ஷி சுந்தரம், மற்றும் டி எம் தியாகராஜனிடம்  வாய்ப்பாட்டும், கல்பாக்கம் ஸ்வாமிநாதனிடம் வீணையும் பயின்றிருக்கிறார்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தமிழக கலை, பாரம்பரிய ஆலோசகராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.  படங்கள் தயாரித்திருக்கிறார், பாடல்கள் பாடி இருக்கிறார், படங்கள் இயக்கி இருக்கிறார். வெற்றிகரமான குடும்பத்தலைவியாகவும் இருக்கிறார்.

இன்னொரு தகவல் ஆச்சர்யப்படுத்தியது.  ஷோபா சந்திரசேகரின் முதல் பாடல் பற்றிய விவரம் அது.  'இருமலர்கள்' படத்தில் வரும் 'மகராஜா ஒரு மகாராணி' பாடல்தான் அவர் திரையில் பாடிய முதல் பாடல்!

சரி. இன்றைய திரைப் பாடலுக்கு வருகிறேன்.

மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில்
ஏன் பாடுதோ
ஜோடிக் குயிலொண்ணு பாடிப் பறந்ததை
தான் தேடுதோ

கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ
கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே

மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில்
ஏன் பாடுதோ ஜோடிக் குயிலொண்ணு
பாடிப் பறந்ததை தான் தேடுதோ

பொண்ணுன்னா பொண்ணல்ல தேவ மங்க
பூமிக்கு வந்ததென்ன
கண்ணுன்னா கண்ணல்ல காந்தம் அம்மோய்
கதையொண்ணு சொன்னதென்ன

கை வளையோ நான் வளைக்க நீ வருவாய் நான் ரசிக்க
கன்னத்தில் செந்தூர கோலமிட கையோடு கை கொண்டு தாளமிட
நீ ஓடி வா


இரவெல்லாம் பூமால ஆகட்டுமா மகராசன் தேகத்தில
மருதாணி நான் வந்து பூசட்டுமா மகராணி பாதத்தில

உன் மடிமேல் நான் மயங்க நாள் விடிந்தால் கண்ணுறங்க
காவேரி ஆத்துக்கு கல்லில் அணை கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அணை
நான் போடவா

62 கருத்துகள்:

  1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று..

    குறள் நெறி வாழ்க!..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்...

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.  முற்றிலும் குணமடைந்து விட்டீர்களா?

      நீக்கு
  3. // விநாயகர் பாடல்களும் (விநாயகர் அகர்வாலும் அடக்கம்) முருகன் பாடல்களும் ஸ்பெஷல்..//

    விநாயகர் அகர்வால்!..

    அகர்வாலுக்கு இது தெரியுமா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா.. ஹா... மாற்றி விடுகிறேன்!!!

      நீக்கு
    2. இன்னும் ஒன்றிரண்டு கண்களில் பட்டன. முக்கியமாய்த் தலைப்பில் "மங்கை" என்பது "மங்க" என வந்திருப்பது பொருளையே மாற்றி விடுகிறதே! :(

      நீக்கு
    3. பாடலில் உச்சரிப்பது மங்க என்றே என்பதால் அப்படியே போட்டுவிட்டேன்!

      நீக்கு
  4. //அந்தரங்கம் யாவும் அந்த அங்கண் அறிவான்.. அவன்தான் வைகுந்தமே..//

    அந்தரங்கம் யாவும்
    அந்த ரங்கன் அறிவான்.. அவன்தான் வைகுந்தமே!..

    பிழை செய்வதையே பிழைப்பாகக் கொண்டவர்களின் நெஞ்சைச் சுடுபவை இந்த வரிகள்...

    இப்படியெல்லாம் தேனமுதைத் தந்தார்கள் அன்றைய கவிஞர்கள்...

    இன்றைக்கு ஐங்கரனில் இருந்து அனுமான் வரைக்கும் ஒரே அடி !?..ஒரே கூச்சல்!


    ஆந்திரத்து
    ஏழு கொண்டல வாடா.. வெங்கட ரமணா.. ஸ்டைலில்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அகர்வாலைத் திருத்தும்போதே ரங்கனையும் சேவித்து விட்டேன்.

      நீக்கு
  5. அந்த ரங்கம்..
    அந்த ரங்கன்!..

    என்ன ஒரு அழகான சொல்லாடல்!..

    அந்தரங்கத்தில் தூசு படிந்திருக்கும் நாமெல்லாம்
    அந்த ரங்கத்தின் தூசுக்குக் கூட நிகராக மாட்டோம்!..

    ரங்கா.. ரங்கா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அதுதான் எனக்கும் அப்போதே மனதில் நின்றது.  அடுத்து 'போனது போகட்டும் இனியாகிலும் நெஞ்சு புனிதம் ஆகட்டுமே'  என்று தடவிக்கொடுக்கும் வரி.

      நீக்கு
  6. மனத்திலோர் தூய்மை இல்லை..
    வாயிலோர் இன்சொல் இல்லை..

    - தொண்டரடிப்பொடியாழ்வார்..

    பதிலளிநீக்கு
  7. இந்த கூகுளாண்டிக்கு சமயத்தில் இப்படியெல்லாம் குறும்பு...

    அகவல் என்று தட்டினால்
    அகர்வால் என்று முந்திக் கொள்வது..

    சோனியா அகர்வால் என்று மாற்றி விடாமல் இருந்தானே!...

    பதிலளிநீக்கு
  8. @ ஸ்ரீராம்..

    // முற்றிலும் குணமடைந்து விட்டீர்களா?..//

    தலைக்கனம் - நெஞ்சில் சளி
    (அது பிறவியோடு வந்தது.. குறைவதற்கு வாய்ப்பில்லை .. இது வேறு!..)

    காரனம் தாங்கள் அறிந்ததே.. அதிக வெப்பம்.. தீராத வியர்வை.. இரவில் புழுக்கம்.. மின் விசிறி ஒத்துக் கொள்ளவில்லை.. சமயத்தில் மின் தடை வேறு!..

    காய்ச்சலில் இருந்து மீண்டு விட்டேன்.. தொண்டையில் கிச்கிச் இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருத்துவரைப் பார்த்து மருந்து எடுத்துக் கொள்ளலாம் அல்லது நம்வீட்டு அஞ்சறைப்பெட்டியை சரணடையலாம்.

      நீக்கு
    2. அஞ்சறைப் பெட்டியே அரும் துணை!..

      நீக்கு
    3. நினைத்தேன். அதையே சொன்னேன்!

      நீக்கு
    4. தம்பி துரை செல்வராஜூவின் உடல் நலம் விரைவில் குணம் அடையப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    5. அண்ணா சீக்கிரம் நலம் பெறுவீர்கள்.

      இப்போது இங்கு பங்களூரே கொஞ்சம் அதிக வெப்பமாகத்தான் இருக்கிறது.

      கீதா

      நீக்கு
  9. அணில் கடித்த கனி என்பது அந்தக் காலம்..

    அணில் கடித்த கம்பி என்பது கலியின் காலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா... ஹா..  நாட்டில் நிலக்கரி கையிருப்பு குறைந்து விட்டதால் நாடு முழுக்க மின் உற்பத்தி பாதிப்பாமே...

      நீக்கு
    2. பக்தி பாடல்களுக்கான குரல் சீர்காழி கோவிந்தராஜனுடையது.

      நீக்கு
    3. தினம் தினம் அணில் கடிக்கும் கம்பிகளின் நீளம் அதிகமாக ஆகிக்கொண்டே இருக்கே! :(

      நீக்கு
    4. இந்தியாவெங்கும் அணில்கள் பிரச்னை இருக்கும் போலவே!

      நீக்கு
    5. இருக்கவே இருக்கு மத்திய அரசின் தொகுப்பிலிருந்து கிடைக்கும் மின்சாரம் சரிவரக் கிடைக்கலைனு சொல்லிடலாமே! அதானே சொல்றாங்க/ ஆனால் பக்கத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலிங்கானாவை மட்டும் அது ஏன் பாதிக்கலைனு நாம் அறிவு கெட்டதனமாகக் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது.

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  11. இன்று, நாளை, நாளை மறு நாள் -

    மூன்று நாட்களிலும் மிகச் சரியாக ஆறு மணிக்கு அடி வானில் சூரியோதயம்..

    கண்டு தரிசனம் செய்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை நான்கு மணிக்கு எழுந்து விடுகிறேன் என்றாலும் ஸூர்யோதயத்திக் காண்பதில்லை. வீட்டுக்குள்ளேயே....!!

      நீக்கு
    2. மொட்டை மாடிக்குப் போய்ப் பாருங்க ஶ்ரீராம். நாங்க முன்னெல்லாம் போய்க் கொண்டிருந்தோம். இப்போல்லாம் எங்கானும் கிழக்கே பார்த்துச் செல்லும் பயணங்களில் கட்டாயமாய்ப் பார்த்துடுவோம்.

      நீக்கு
    3. நாளை பார்த்து விடுகிறேன்.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    பக்தி பாடல்கள் என்றாலே சீர்காழி அவர்களின் குரல்தான் காதில் ஒலிக்கும். அவரின் தெளிவான உச்சரிப்பும் அழுத்தந்திருத்தமாக மனதில் நிற்கும். நானே அவர் பாடிய பாடல்களை தனிப்பாடல் பிரிவில் பகிருங்கள் என சொல்லலாமா என நினைத்தேன். நீங்களே இன்று பகிர்ந்து விட்டீர்கள். மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் நினைத்தது எனக்குத் தெரிந்து விட்டது! ஹா.. ஹா.. ஹா... நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. ஆஹா கோயின்சிடென்ஸ் இங்கு என்றால் கீழே யும் ஒரு கோயின்சிடன்ஸ் கில்லர்ஜி சொல்லியிருக்கிறார்!!

      கீதா

      நீக்கு
  13. ஒரு காலத்தில் எங்கள் வீட்டில் காலையில் அரை மணிநேரம் சீர்காழியின் பாடல் ஒலிக்கும்...

    ஓர்தினம்
    //கணபதியே வருவாய்//
    என்று சீர்காழியார் பாடியபோது ஊருக்கு போயிருந்த எங்கள் அப்பா (கணபதி) உள்ளே நுழைய எல்லோரும் சிரித்து விட்டோம்.

    பதிலளிநீக்கு
  14. இரண்டு பாடல்களுமே இன்னிக்குத் தான் கேட்டேன். மிக்க நன்றி. சீர்காழியின் குரலுக்கு ஒப்பிடலே கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ரங்கனை
      அந்தரங்கனைப் பற்றிய
      பாடலை இன்றுதான் கேட்டீர்களா!.. ஆச்சர்யம்..

      நீக்கு
    2. கீதா அக்கா ஸ்ரீரங்கப் பாடலை முன்னரே கேட்டிருக்கிறார்கள்.  முன்னரே பேசி இருக்கிறோம்.

      நீக்கு
    3. அப்படீங்கறீங்க? நினைவில் இல்லை ஶ்ரீராம். பூலோக வைகுண்டமாம் ஶ்ரீரங்கமே! பாடல் தான் நினைவில் வருது. அடிக்கடி கேட்ப்தால் இருக்கும்.

      நீக்கு
  15. இரு பாடல்களுமே அருமை. சீர்காழியின் பாடல் எங்கள் அப்பா மிகவும் விரும்பிக்கேட்பது.
    ஷோபா சந்திரசேகர் பற்றி மேலதிக தகவல்கள் அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
  16. முதல் பாடல் வரிகளைப் பார்த்ததுமே தெரிந்துவிட்டது...மனதில் பாடிவிட்டேன்...அருமையான பாடல். எங்கள் ஊர்க் கோயிலில் ஒலித்த பாடல். தினமும் காலையிலும் மாலையிலும் போடுவாங்களே அதுவும் திருவிழாக்காலங்களில் நிறைய நேரம் ஒடும். அப்படிக் கேட்ட பாடல்.

    குரல் கணீர்க்குரல்...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. என்ன ஒரு திறமையான பெண்மணி.. //

    ஸ்ரீராம் உங்களுக்கு இப்போதான் தெரியுமா? நிஜமாவா?

    இவங்க நல்லா பாடுவாங்கன்னு முன்னரே தெரியும். அவங்க முறையாகக் கற்றுக் கொண்டவங்க. அவங்க சகோதரர் அதான் விஜயின் மாமா சுரேந்தர் அவரும் நன்றாகப் பாடுவார். மோகனுக்குக் குரல் கொடுத்தவர்.

    நான் போன வருடம் சென்னையில் இருந்த போது சங்கரா டிவியில் இசைப் போட்டி கர்நாடக சங்கீதம் போட்டி பஜன் போட்டி...என் மாமியாருக்காகப் போடுவதுண்டு. அப்ப பஜன் சாம்ராட்லயோ அல்லது வேறு ஒன்றிலோ இவங்க இப்ப இசைப்பள்ளி நடத்தறாங்கன்னு நினைக்கிறேன் அதுல அப்படித்தன் வந்தது. இவங்க மாணவிகள் செலக்ட் ஆகிருந்தாங்க....அப்புறம் தெரியவில்லை. தமிழ்நாடு இசைக்கல்லூரிலதான் படிச்சாங்க. வீணையும் தெரியும். இப்ப மஹாராஜபுரம் சந்தானம் அவரின் பெண்கிட்ட கர்நாடக சங்கீதம் தொடர்ந்து கத்துக்கறாங்கனும் தெரிந்தது.

    சந்திரசேகர் டைரக்ட் செஞ்ச படத்துல எல்லாம் பாடிருக்காங்கனு நினைக்கிறேன் எஸ்பிபி யோடும் பாடியிருக்காங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஜட்ஜா இருந்து செலக்ட் பண்ணினாங்கன்னு நினைக்கிறேன்...ஆனா இவங்க அதுல வந்தாங்க....

      கீதா

      நீக்கு
  18. மாலைக்கருக்கலில் கேட்டிருக்கிறேன். நல்ல பாடல். ஸ்லோ டெம்போ...மெலடி! அதிகம் கேட்டதில்லை. இந்தச் சுட்டியில் பாடல் ரொம்பத் தெளிவாக இல்லையோ ஸ்ரீராம்? இல்லை எனக்குத்தான் அப்படிக் கேட்கிறதோ...மூன்றாவது காதாச்சே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. அருமையான பாடல்கள் சீர்காழியின் குரலுக்கு ஈடு இணை கிடையாது.

    ஷோபா சந்திரசேகரின் பன்முகத்திறமை,
    அவரின் ஆர்வம் மென்மேலும் வளரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைச்சுப் பார்த்தால் மனம் வேதனைப் படும். :( கொஞ்ச நாட்கள் முன்னர் சுரேந்தரின் பேட்டி எதிலோ படிச்சேன்/அல்லது பார்த்தேன். வேதனையாகவே இருக்கு இன்னமும். :(

      நீக்கு
    2. கீதாக்கா, சுரேந்தர் அவ்வளவா மேல வராததுக்குக் காரணமா?

      கீதா

      நீக்கு
    3. நடிகர் மைக் மோகனுக்கு சுரேந்தர் தானே டப்பிங் பேசி வந்தார். பலரும் அதைக் கொஞ்சம் அதிகமாகவே பாராட்ட மோகனுக்குக் கோபம் வந்து சுரேந்தர் இல்லாமலேயே தான் நடிக்கப் போவதாகச் சொல்லித் தானே டப்பிங் பண்ணி இருக்கார். அது எடுபடவில்லை. கடைசியில் மோகனுக்கும் படங்கள் போய்விட்டன. சுரேந்தருக்கும் வாய்ப்புகள் போய்விட்டன. என்றாலும் கையில் தொழில் இருப்பதால் சுரேந்தர் தாக்குப்பிடித்து விட்டார். விஜயோ, சந்திரசேகரோ, ஷோபாவோ எந்தவிதமான உதவியும் செய்யவில்லை.

      நீக்கு
    4. ஷோபாவே சொன்ன ஒரு பேட்டியும் மூலம் தெரிந்து கொண்டது அவர் கிறித்துவ பக்திப்பாடல்கள் தான் அதிகம் பாடுவார் என்று அவரே சொல்லி இருந்தார். மற்றப் பாடல்களைப் பார்க்க அனுமதிக்குக் காத்திருப்பாராம். அவருக்கு இறைவனின் அனுமதி கிடைத்தால் பாடிக் கொடுப்பாராம். இது ஷோபாவே ஒரு பேட்டியில் சொன்னதாக எதிலோ படிச்சேன்.

      நீக்கு
  20. இரு பாடல்களுமே நல்ல பாடல்கள். நிறைய கேட்டிருக்கிறேன்.

    இரண்டாவது பாடல் பல பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் கேட்கிறேன். பாடலை நினைவுக்குக் கொண்டு வந்தது உங்கள் பதிவு.

    மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. பாடல்கள் இரண்டும் மிக அருமையான தேர்வு.
    கேட்டேன் இரு பாடல்களையும்.

    பதிலளிநீக்கு
  22. மாலைக் கருக்கலில் பல முறை கேட்டு ரசித்த பாடல். முதல் பாடலும் இந்தப் பதிவு வழி கேட்டு ரசித்தேன். சீர்காழி அவர்களின் குரலில் சிறப்பான பாடல். ஷோபா சந்திரசேகரன் குறித்த தகவல்கள் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!