வியாழன், 28 ஏப்ரல், 2022

பழைய சோறு போதும்; சர்ஜரி தேவை இல்லை..

 கோவிலுக்குச் சென்று நாளாச்சு என்று தோன்றியது.  இந்த சனிக்கிழமை ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று தோன்றி விட்டது.   பாஸோடு கலந்தாலோசித்தபோது இதுவரை சென்ற கோவில் எதுவும் இல்லாமல் புதிதாக ஒரு கோவில் சென்றால் தேவலாம் போல இருந்தது.

எனக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன.  நீண்ட நாட்களாய் செல்ல ஆசைப்பட்ட சிங்கப்பெருமாள் கோவில்.  இன்னொன்று கோவளம் கல்யாண பெருமாள் கோவில்.    பாஸ் திருவள்ளூர் பெருமாள் கோவில் பார்த்ததில்லை என்றார்.

சில சாதக பாதகங்களை யோசித்து இரண்டைக் கைவிட்டு சிங்கப்பெருமாள் கோவில் தெரிவு செய்தோம்.  நானும் பாஸும் மட்டுமே..  

என்னைப் பொறுத்தவரை கோவிலுக்குச் செல்லவேண்டும் என்றால் அதிகாலையில் செல்லவேண்டும்.  சிங்கப்பெருமாள் கோவில் நானிருக்கும் இடத்திலிருந்து சற்றே தொலைவு என்பதால் காலை ஐந்துக்கோ ஐந்தரைக்கோ புறப்பபட்டுவிட முடிவு செய்தோம் எனினும் ஐந்தரை தாண்டிதான் புறப்பட முடிந்தது.

அதிகாலைப் பயணம் எப்போதுமே சுகமானது.  அதுவும் நீண்ட பயணங்களை எளிதாக்கும் ரிங் ரோடில் பயணிப்பது இன்னும் சுகம்.  சமீபத்தில் எங்கோ படித்தேன், சாலையோரம் பெரும்பாலும் அரளிச் செடிகள்தான் வைத்திருப்பார்கள், ஏனென்றால் அது விபத்தைத் தடுக்கும் என்று.  எந்த வகையில் அது விபத்தைத் தடுக்குமோ..  நான் பார்த்த வகையில் சாலையின் சென்டர் மீடியனில்  வரிசையாக அரளிச் செடிகள் வைக்கபப்ட்டு பூத்திருந்தன.  எதிரே பார்த்தால் நீண்ட மேடு பள்ளமான சாலை.  சல்லென்று அதில் விரையும்போது சற்றே பலமாக முகத்தில் அடிக்கும் மெல்லிய பூங்காற்று..


அருகே சென்ற உடன் கூகுள் மேப் பயன்படுத்தியும், இன்னும் அருகில் சென்றதும் வாசல் எங்கே என்று ஒரு பூக்காரம்மாவிடம் கேட்டும் கோவிலை அடைந்தோம்.


ஆறரைக்கே கோவிலை அடைந்து விட்டோம்.  ஆனால் உள்ளே சன்னதிக் கதவு சாத்தி இருக்க கதவில் ஒரு வாசகம்.  "அமைதி காக்கவும்.  தரிசனத்துக்கு இன்னமும் முப்பது (30) நிமிடங்கள் ஆகலாம்"   இது மளிகைக் கடைகளில் முன்பு தொங்கவிடப்படும் "இன்று ரொக்கம் நாளை கடன்" போன்றதொரு வாசகம் என்று பின்னர் புரிந்தது.




நாங்கள் போகும்போது நான்கைந்து பேர்கள் இருந்தனர்.  கொஞ்சம் பெரிய கோவிலாக எதிர்பார்த்தேன்.  சிறிய கோவில்தான்.  ஆனால் பழமையான கோவில்.  குடைவரைக் கோவில் வகையில் அமைந்திருந்தது.

சைவக் கோவில்களில் ஸ்வாமி தரிசனம் செய்து, பிரகாரம் சுற்றி முடித்த உடன்  நமஸ்காரம் செய்யவேண்டும் என்று சொல்வார்கள்.  அந்த சாஷ்டாங்க நமஸ்காரங்கள் துவஜஸ்தம்பம் அருகே செய்யவேண்டும்.  வைணவ கோவில்களை பொறுத்தவரை கோவில் உள்ளே நுழைந்த உடனேயே நமஸ்காரம் செய்துவிடவேண்டும்.  எனவே நமஸ்கரித்து உள்ளே சென்றால் காத்திருக்கும் படலம்.  




உள்ளே காத்திருந்த பக்தர் ஒருவரிடம் சம்பிரதாயமாக "எப்போது திறப்பார்கள்? என்று கேட்டேன்.

"பத்து நிமிடத்தில்" என்று பதில் வந்தபோது மணி 6.35

படியேறி இடது பக்கம் பார்த்தால் திருமடைப்பள்ளி.  வலது பக்கம் சன்னதிக்கு செல்லும் வழி.  சன்னதிக்குள் நுழையாமல் நேர் சென்றால் படிக்கட்டுகள் தெரிந்தன.  கொஞ்சம் படிக்கட்டுகள் ஏறியதும் வெங்கடேச பெருமாள் அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.  சுற்றி திரும்பி இன்னும் மேலே ஏறினால் மேலே ஒரு சந்நதி இருக்கிறது என்று நம்பிதான் ஏறினேன்.  போகும் வழியில் இந்த மரம் கண்ணில் பட்டது.  ஏகப்பட்ட பிரார்த்தனைகள். 



படிகள் மேலே ஏறி சுற்றி வந்து இறக்கி விட்டு விடுகின்றன.  அதாவது அதுதான் பிரகாரம் சுற்றுவது.  இறங்கும் இடத்தில் நமஸ்காரம் செய்யும் தரைச் சிற்பம் பதிக்கப்பட்டிருந்தது.  அதாவது, துவஜஸ்தம்பம் அருகே அல்ல, இந்த இடத்தில்தான் நமஸ்காரம் செய்யவேண்டும், அதுவும் பிரகாரம் சுற்றிய பிறகு என்கிற பொருளில்.

வெய்யில் ஏறுவதற்கு முன்னர் வீடு திரும்பி விடலாம் என்கிற எங்கள் எண்ணம் ஈடேறவில்லை.  ஏழேகால் மணிக்குமேல்தான் வெளியே நாதஸ்வர ஓசை கேட்டது.  பிலஹரியின் துணுக்குகள் காதில் விழுந்தன.




ஒரு பட்டாச்சாரியார் ஒரு அண்டா தண்ணீரை தலையில் சுமந்தவண்ணம் வந்து கொண்டிருந்தார்.  அப்புறம் ஒருவர் அப்புறம் இன்னொரு குடம் என அபிஷேகம் நடக்க, மடைப்பள்ளியிலிருந்து மூடிய தட்டில் பிரசாதங்கள் உள்ளே சென்றன.

எனக்கு முன்னால் நின்றிருந்த இளைஞர் உடலை முறுக்கி, முன்னே பின்னே ஆடி எங்களை பீதிக்குள்ளாக்கிக் கொண்டிருந்தார்.  திடீரென ஆவேசமாய் சாமி வந்தால் துள்ளி எங்கள் மேல்தான் விழவேண்டும்.  அபாயம் தெரியாமல் ஒரு இளம்பெண் அவர் காலடிக்கு அருகில் தரையில் அமர்ந்து தியானம் வேறு செய்து கொண்டிருந்தார்.  நல்லவேளை சந்நதி உள்ளே சென்ற பின்னும்  அவருக்கு 'சாமி' வரவில்லை என்பது ஒரு ஆறுதல்.

கீதா அக்கா சொல்வதுபோல ஒரிஜினல் மடைப்பள்ளி பிரசாதம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தும் ஏமாந்தேன். உள்ளே சென்ற தாம்பாளங்கள் அந்த எதிர்பார்ப்பைக் கிளப்பி இருந்தன.   நாங்கள் கிளம்பும்வரை விநியோகம் தொடங்கவில்லை.

பத்து பேர்களுக்குள் இருந்த பக்தர்கள் கூட்டம், இந்த சம்பிரதாயங்கள் முடிந்து ஏழரை வாக்கில் சன்னதிக் கதவு திறக்கப்படும்போது நூற்றைம்பது பேர்களைத் தாண்டி இருந்தது.  மொத்த பேரில் ஐந்தாறு பேர்கள் - எங்களையும் சேர்த்து - மாஸ்க் அணிந்திருந்தோம்.  முன்னால்தானே நின்று கொண்டிருக்கிறோம், சீக்கிரம் தரிசனம் ஆகிவிடும் என்கிற எங்கள் நினைப்பு அதோகதியானது.  கதவு திர்நததும் திபுதிபுவென எங்களைத் தள்ளிக்கொண்டு குறுகிய இடத்துக்குள் கூட்டம் நுழைந்து ஓடியது.  அவ்வளவு நேரம் நின்று கொண்டிருந்த வரிசை  அம்பேல் ஆனது.

ஐந்தாவது ஆளாக சென்ற நாங்கள் ஐந்தாவது பேட்ச்சில் நரசிம்மரை தரிசித்தோம்.  அவரது மூன்றாவது கண்ணை பக்தர்களுக்கு காட்டுவதில் பட்டாச்சாரியார் அதிக அக்கறை காட்டவில்லை.  அறிவிப்பு செய்ததோடு சரி.

ஹிரண்ய கசிபுவை வதம் செய்தபின் பிரகலாதன் வேண்டுதலை ஏற்று, நரசிம்மர் உக்கிரம் தணிந்த இடம் இது என்று சொல்கிறார்கள்.   கதவு திறந்ததும் உள்ளே செல்கையிலேயே சடாரி வைத்து அனுப்புகிறார்கள்.  பெருமாளை பார்க்கும் முன்னரே ஆண்டாளை தரிசனம் செய்து விடவேணும்.  இல்லாவிட்டால் அங்கிருந்து நேராக வேறு வழியில் வெளியே வந்து விட வேண்டியதாக இருக்கிறது.  

நரசிம்மருக்கு பூவும், துளசியும், தாயாருக்கு பூவும் வாங்கி சென்றிருந்தோம்.  ஆனால் எல்லாவற்றையும் நரசிம்மரிடமே ஒப்படைத்து விட்டோம்.  பூவின் அளவை பொறுத்து நரசிம்மர் மேல் சாற்றுகிறார்கள்.  துளசியை அவர் காலடியில் வைக்கிறார்கள்.

சுற்றி வருகையில் தீர்த்தம் வாங்கி கொண்டு வெளியே வந்தால் அஹோபில தாயார் சன்னதி வருகிறது. தாயாரையும் சேவித்து வெளியே வந்தால் படியேறி பெருமாளை வணங்கும் முன், அங்கிருந்த கடையில்  பிரசாத வியாபாரம்.  மடைப்பாளியிலிருந்து அல்ல என்று தெரிந்தும், மிளகு தோசை என்கிற பெயரைப் பார்த்து ஒன்று வாங்கி நானும் பாஸும் சுவைத்தோம்.  தடிமனான தோசையில் மிளகு வாசனை.  மேலே பொடி தூவி எண்ணெய் ஊற்றித் தந்தார்கள்.

வேங்கடவனுக்கு முன் இருந்த உண்டியல்.  அதுவரை அங்கு சுற்றித்திரிந்து கொண்டிருந்த பூனை ஒன்று உண்டியலில் மேல் அயர்ந்து படுத்திருந்தது!

கையலம்பி படியேறி வேங்கடவனை தரிசித்து பிரதட்சணம் செய்து வந்து இறங்கினோம்.  நமஸ்கரிக்கக் குறிப்பிட்ட இடத்திலும் நமஸ்கரித்தோம்.

வெளியில் வந்ததும் பாஸ் சம்பிரதாயமாக ஒரு நரசிம்மர் படமும், தலவரலாறு (அஜித் அல்ல) புத்தகமும் வாங்கி கொண்டார்.

வெயில் ஏறும் முன் வீடு வந்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தால், ஒன்பது மணிக்கே வெய்யில் கொளுத்தத் துவங்குவதில்  சூடாக திரும்பினோம்.  வழியில் டிஃபன் சாப்பிட்டு விடலாம் என்று நல்ல ஹோட்டலைத் தேடினால் ஊரப்பாக்கத்துக்கு முன் ஒரு அடையார் ஆனந் பவன் என்ற பெயரில் இருந்த (A2B)  ஓட்டலில் சாப்பிட்டோம்.  எங்கள் நேரமோ, அல்லது ஊருக்கு வெளியே இருப்பதால் அலட்சியமோ....   ஆனியன் ரவா அதன் இலக்கணத்தை இழந்திருந்தது.  சட்னிகள் நிறத்தில் மட்டும் நன்றாயிருந்தன.  சாம்பார் கொஞ்சம் ஆறுதல்.    நஷ்ட ஈடாக தேநீரும், காஃபியும் நல்ல தரத்தில் இருந்தன.  கடையில் வைத்திருந்த அவர்கள் ஹோட்டல் காபி பொடி என்ன விலை என்று கேட்டபோது 50 கிராம் 50 ரூபாய் என்றார்கள்.  வேண்டாம், எங்களுக்கு சுந்தரம் காபியே போதும் என்று வந்து விட்டோம்!

=====================================================================================================

immortality பற்றிய தெளிவான சிந்தனை இருக்கிறது, எழுதுகிறேன் என்று சொன்ன சுஜாதா அதை எழுதாமலேயே சென்று விட்டார்.  எழுத்தாளனைப்பற்றிய வாசக அபிப்ராயங்கள் பற்றியும் சொல்கிறார்.

தமிழிலிருந்து ஹீப்ரு மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரே தமிழ் நாவல் எது தெரியுமா?  சுந்தரராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை..

இன்டர்நெட்டில் என் எழுத்தைப் பற்றி பல கலந்துரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.  என்னைப்பற்றி சர்ச்சைகளில் நான் ஒரு வைணவன் என்று சிலர் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.  "மிகப்பெரிய எழுத்தாளர்..  இவருக்கு ஏன் இன்னும் பரிசு கிடைக்கவில்லை?" என்று சிலரும், இவர் ஒரு மோசமான எழுத்தாளர். இவர் எழுதுவதெல்லாம் குப்பை" என்று சிலரும் சொல்கிறார்கள்.....   இந்த விவாதங்களில் நான் கலந்து கொண்டு ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.    முடிந்தாலும் கூடாது.  எழுதுபவன் ஒருவன்.  படிப்பவர்கள் பலர்.  அவர்கள் ரசனையும் விருப்பங்களும் ஏனைய மனோ நிலைகளும் சமூகக் கோபங்கள், வெற்றி தோல்விகள், பொறாமைகள் போன்றவற்றைப் பொருத்தவை.

நான் திருப்திப் படுத்த வேண்டிய ஒரே ஒரு வாசகன் எனக்குள் இருக்கும் வாசகன்.  அவனை என்னால் திருப்பதி படுத்தவே முடியவில்லை.  அவனிடம் பொய் சொல்ல முடியவில்லை.  பாசாங்கு நடக்காது. அவனை நிராகரித்து எழுதவும் முடியாது.....

இந்த விவாதங்களில் ஒருவர் அண்மையில் விகடனில் வெளியான 'இரண்டாவது காதல் கதை' யிலிருந்து ஒரு வாக்கியத்தை மட்டும் பிரித்துக் காட்டி அது விரசமாக இருந்தது என்று சொல்லி விட்டு 'சுஜாதா எழுதுவது எல்லாமே விரசம்' என்று சொல்லி இருந்தது தப்பாட்டம்.

ஓர் எழுத்தாளனை இவ்வாறு பொதுப்படுத்தி அபிப்ராயம் சொல்ல, அவனுடைய எல்லாக் கதைகளையும் படிக்க வேண்டும் என்றில்லை.  குறைந்தபட்சம் பத்து கதைகளாவது படித்திருக்க வேண்டும்.  ஒரு நாவலில், ஒரு அத்தியாயத்தில் இருந்து பிடுங்கி எடுக்கபப்ட்ட ஒரு வரி மட்டும் போதாது....

என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது   'மறுபிறவியில் நம்பிக்கை உண்டா?   இதன் கிளையாக ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா?  அது உடலில் எங்கு இருக்கிறது?  சாவை வெல்ல முடியுமா?  நாம் சாஸ்வதமாக வாழ முடியுமா என்பவை அந்தக் கேள்வியின் பல வடிவங்கள்.   நாற்பது வயசுக்கப்பற்றும் பலர் மனதை இந்தக் கேள்வி குடைகிறது.   இதற்கெல்லாம் பதில் தரும் விதத்தில் immortality பற்றி விஸ்தாரமான கட்டுரை சமயம் கிடைக்கும்போது நிச்சயம் எழுதுகிறேன்.  அதைப்பற்றி தெளிவான கருத்துகள் எனக்கு உள்ளன.  இப்போதைக்கு Edward Young என்பவற்றின் Night Thoughts On Life Death And Immortality  என்னும் கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோள் கொடுக்கிறேன்.

"நீங்கள் சாசுவதமான உயிர் வாழ முடியும் என்பதை ஏன் சந்தேகிக்கிறீர்கள்?  நீங்கள் உயிர் வாழ்வதே ஒரு அதிசயம் அல்லவா, வியப்பல்லவா?  உயிரெனும் அற்புதத்தைக் கொடுத்தவனால் அதன் முடிவை ரத்து செய்ய முடியாதா?  இதில் என்ன அதிசயம்?"

-சுஜாதா - 'கற்றதும் பெற்றதும்' -
===========================================================================================================

பாஹே தூறல்கள் 


உண்மை இனிக்கட்டுமே 

வாழ்க்கை மெதுவாகத் துவங்கி சீக்கிரமாக முடிந்து விடுகிறது.  இடையில் நிறைய மேடு பள்ளங்கள்.

துவக்கமும் முடிவும் தடமற்றுப் போய்விடுவதே பெரும்பாலானோர்க்கும் சாத்தியமாகிறது 

துவக்ககாலக் கனவுகள் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. முடிவுகாலப் பெருமூச்சுகள் எல்லோரும் பொது.

கனவு காண்கிறவர்களால் கொஞ்சமாவது செய்ய முடிகிறது.  நினைக்கவே தெரியாதவர்கள் செய்தலையும் அறியாதவர்களே 

ஒரு இயந்திர கதி எல்லோருக்கு சுலபம்.  சிரமமில்லாததில் மட்டுமே எல்லோருக்கும் விருப்பம்.

போய்விட்ட வாழ்க்கை திரும்ப வாழக் கிடைத்தால் எல்லோருமே வேறுவிதமாகத்தான் செயல்படுவார்கள்?

ரொம்ப யதார்த்தமானது இது - 'நடக்காது' என்று தெரிவதால்!....

==========================================================================================================

பழைய சோற்றின் பெருமை...

ஸ்டான்லி அரசு மருத்துவர்கள் நம்பிக்கை

'மனிதர்களுக்கு ஏற்படும் 80 சதவீத குடல் நோய்களுக்கு, அறுவை சிகிச்சை தேவையில்லை; பழைய சோறே அருமருந்து' என, ஸ்டான்லி மருத்துவர்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.பழைய சோற்றின் மருத்துவக் குணங்கள் குறித்து, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள், தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜெஸ்வந்த் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.மனித உடலில், குடலில் ஏற்படும் அலர்ஜி, புண்கள், அல்சர் காரணமாக குடல் புண்ணாகி, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நோயாளிகளை அறுவை சிகிச்சை செய்யாமலே, பழைய சோறு காப்பாற்றி வருகிறது. இதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க, தமிழக அரசின் 2 கோடி ரூபாய் நிதி உதவியுடன், மூன்று ஆண்டுகள் ஆய்வு நடக்க உள்ளது.

இது குறித்து, துறை பேராசிரியர் ஜெஸ்வந்த் கூறியதாவது:பெருங்குடல் அலர்ஜி, சிறுகுடல் அலர்ஜி, வாய்ப்புண், குடல்புண் என, தினமும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

அவர்களின் உணவு பழக்க வழக்க மாற்றமே, நோய்களுக்கான காரணமாக அமைகிறது.குடல் புண், அலர்ஜி, வாய்புண்ணுடன் வந்த நோயாளிகளுக்கு, பழைய சோறு சாப்பிட சிபாரிசு செய்தோம். தொடர்ந்து பழைய சோறு சாப்பிட்டு வந்தவர்களுக்கு, நோய் பாதிப்பு வெகுவாகக் குறைந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பல ஆண்டு காலமாக மருந்துகள் எடுத்தும், அறுவை சிகிச்சை செய்தும் சரிசெய்ய முடியாத குடல் நோய் பிரச்னைகள், பழைய சோறு சாப்பிட துவங்கியவுடன் சரியானது தெரிந்தது.இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கவே, தமிழக அரசின் நிதியுதவியுடன் தற்போது ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

பழைய சோற்றில் எவ்வளவு பாக்டீரியா உள்ளது என துல்லியமாக கண்டறியப்பட்டு வருகிறது. கிராமப்புறம், நகர்ப்புறம் என, வெவ்வேறு இடங்களில் பழைய சோறு தயாரிக்கும் போது, பாக்டீரியா அளவு எவ்வளவு இருக்கும் என கணக்கிடப்படும்.

வெவ்வேறு வகையான அரிசி பயன்படுத்தப்பட்டு, அதன் விளைவுகளும் ஆய்வு செய்யப்படும். பழைய சோற்றில் குடலை வலுப்படுத்தும் நல்ல பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. குறிப்பாக, இயற்கை முறையில் பயிரிடப்பட்ட கைக்குத்தல் அரிசி பழைய சாதம், சாதாரண அரிசி பழைய சாதத்தை விட பன்மடங்கு சிறந்தது.

பழைய சோறு சாப்பிட்டு வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு, சர்க்கரையின் அளவு கட்டுக்குள்ளேயே இருக்கும். பழைய சோற்றை மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால், அதிக பலன் கிடைக்கிறது.

பழைய சோறு எளிதில் ஜீரணமாகும் சத்துக்கள் நிறைந்தது. 80 சதவீத குடல் நோய்களுக்கு மருந்தாக பழைய சோறு உள்ளது என, ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

==================================================================================================================

இந்தக் கதையைப் படிக்காதவர் வெகு குறைவாகத்தான் இருப்பார்கள்!  எங்கே இந்தக் காட்சிகளை ஞாபகப்படுத்துங்கள் பார்ப்போம்!



=========================================================================================================

சென்னை அவசரத்தேவையாக இப்போது மிக விரும்பும் ஒரு காட்சி...



வானில் ஒரு தேவன் எங்கோ விரைந்து சென்று கொண்டிருக்கும்போது க்ளிக்கியது...


பழைய பிரிண்ட் என்பதால் மங்கலாகத் தெரிகிறது.  அதுவே கேள்விக்கு காரணமாகிறது!  என்ன படம் என்றோ, என்ன பாடல் என்றோ இதை வைத்து சொல்ல முடியுமா?





பதிவு முடிவுக்கு வருமிடத்தில் பாட்டு ஸீனா?  நாளை இந்தப் பாட்டு இல்லா விட்டாலும் வேறு பாட்டு தொடரும் என்று கூட சொல்லலாம் அல்லவா?

194 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    ஆமாம் இது பதிவோடு சம்மந்தப்பட்ட பின்னூட்டமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா... ஹா..   எனக்குத் தெரியலையே நெல்லை!  வணக்கம்.  வாங்க...

      நீக்கு
    2. பதிவோடு சம்பந்தப்பட்டதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.

      நீக்கு
  2. பழைய சோறுக்கெல்லாம் ஆராய்ச்சியா? இல்லை அதனால்தான் நிலைமை மாறிவிடுமா? தண்ணீர் முதற்கொண்டு சுத்தமில்லாதபோது எங்கிருந்து பாக்டீரியா வரும்? இல்லை இதனால் பசங்க பிட்சா நூடுல்ஸை விட்டுடப் போறாங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லைதான்.  ஆனால் நான் பழைய சோறு (பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்துடன்) சாப்பிட்டு ஆண்டுகள் பலவாகின்றன.  சோறை மிச்சம் வைப்பதே இல்லை.  மதியத்துக்குப் பின் மிஞ்சிய சோறு வேலைக்கார அம்மா எடுத்துக் கொண்டு போய்விடுவார்!  அந்தக் காலத்தில் தண்ணீர் பாக்டீரியா இல்லாமல் சுத்தமாக இருந்ததா என்று நாம் பார்த்தோமா என்ன!

      நீக்கு
    2. பழைய சோறு amazon ல் கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

      நீக்கு
    3. இந்தக் கானில் கொடுக்கும் தண்ணீர் கூட எல்லாமும் எனக்கு ஒத்துக்கொள்ளாது. அதிலும் பிஸ்லேரிக்கு நோ! ஆகவே வீட்டில் கிடைக்கும் கிரவுண்டு வாட்டர் எனப்படும் பூமியிலிருந்து வரும் தண்ணீரே சுத்தமாக இருக்கும் எனப் பயன்படுத்துவேன்.

      நீக்கு
    4. எங்கள் ஏரியா தண்ணீர் படுமோசம்.  மிகுந்த மாணவருத்தத்தில் நான் இருப்பது இந்த விஷயத்தில்தான்.

      நீக்கு
    5. AO Smith water purifier can be installed in houses where the (drinking) water is a problem. I am using that for the past 4 years. But for that, AMC (Annual Maintenance Contract) is very important.

      நீக்கு
    6. எங்கு கிடைக்கும், இங்கு கிடைக்குமா என்று பார்க்கிறேன்.  எனக்கு பயன் உண்டா என்று கேட்கவேண்டும்.

      நீக்கு
    7. எந்த வாட்டர் ப்யூரிஃபையருக்கும் மெயின்டெனென்ஸ் உண்டு. எங்களுக்கு அது சுமார் 5000-6000 வருடத்துக்கு ஆனது. இது தவிர மெஷின் காசு. பெங்களூரில் லிவ்ப்நூர் உபயோகிக்கிறேன். மெஷினுக்குக் காசில்லை. நம் தண்ணீர் உபயோகத்தைப் பொறுத்து காசு. அவங்க வெப் சைட்ல போய்ப் பாருங்க.

      நீக்கு
    8. நெல்லை... இங்கிருக்கும் நிலைக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை RO வுக்கு பில்டர் மாற்ற 2000 செலவாகிறது.  அதற்கு இது தேவலாம் போலவே...

      நீக்கு
    9. கொள்ளை அடிக்கிறாங்களே! ஃபில்டரை ஒரு ஆண்டுக்கு ஒரு முறை மாற்றினால் போதும். எங்களுக்கும் இப்படித்தான் அக்வா கார்டில் சொல்லி ரொம்பத் தொந்திரவு பண்ணினாங்க. நாங்க அவங்களை வரச் சொல்லவே இல்லை. அனுமதிக்கவில்லை. நீங்க எந்தக் கம்பெனி ஆர்வோ வாங்கி இருக்கீங்களோ அதற்குத் தகுந்தாற்போல் யாரையானும் தனியாரைப் பிடிங்க.

      நீக்கு
    10. இல்லை.  எங்கள் தண்ணீர் லட்சணம் அப்படி.  இதே ஆர் ஓ பழைய வீட்டில் இரண்டு அல்லது இரண்டரை வருடங்களுக்கு தொறந்து பிரச்னை இல்லாமல் இருக்கும்.பலரையும் அழைத்து வேறு வழி காண விசாரித்தவண்ணம் இருக்கிறேன்.

      நீக்கு
    11. Please check Livpure website. Not sure whether they have the facility in Chennai but it is very very useful in my opinion. https://www.livpuresmart.com/ro-subscription/plan

      நீக்கு
  3. காஹே அவர்களின் எழுத்தும் சிந்தனையோட்டமும், ஏனோ எனக்கு கேஜிஒய் அவர்களையே ஞாபகப்படுத்துகிறது. அவர் பேச்சு எழுத்து இதே அலைவரிசையில் இருக்கிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தட்டச்சுப்பிழை என்றாலும் அப்பா என்பதால் திருத்தத் தோன்றுகிறது.  அவர் பாஹே!  

      நீக்கு
    2. //ஒரு இயந்தியாகத் எல்லோருக்கு சுலபம். // அதே, அதே, ஶ்ரீராம், பதிவில் இங்கேயும் அப்படியே திருத்திடுங்க. ஶ்ரீமான் சுதர்சனத்தில் வரும் நிகழ்வுகளைச் சித்திரமாகத் தீட்டி இருப்பது எத்தனை அழகாய் இருக்கு? அருமையான சித்திரங்கள். இந்த மாதிரிப் படங்களுடன் கூடிய ஒரிஜினல் பைன்டிங்கில் இருந்து தான் சித்தப்பா வீட்டில் முதல் முதலாக ஶ்ரீமான் சுதர்சனம் படிச்சேன்.

      நீக்கு
    3. சரி செய்து விட்டேன். நன்றி.

      நீக்கு
    4. ஒரிஜினல் பைண்டிங்கிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்தான் அவை.  காட்சியைச் சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தேனே...

      நீக்கு
    5. ஓ, காட்சியா? முதலாளி வங்கியில் கட்டக் கொடுக்கப்பட்ட பணத்துடன் சுதர்சனம் வங்கிக்குக் கிளம்பும்போது அவன் அலுவலக ப்யூன் தன் உறவினருடன் போட்ட திட்டத்தின்படி காரில் ஏறும்போது பணம் வைத்திருக்கும் பையைக் கொள்ளை அடிக்க அந்த நபர்கள் வந்தப்போ நடக்கும் நிகழ்வைக் காட்சியாகச் சித்தரித்திருக்கார் ஓவியர். அடுத்த படம் சுதர்சனத்தின் மேனேஜர்/சுதர்சனத்தில் பெயர் வாங்கினவர். அவனை வைத்து நிறைய வேலை வாங்கித் தான் காரியம் சாதித்துக்கொண்டவர் சுதர்சனத்திடம் கோபம் கொண்டு அவனை வெளியே போ எனச் சொன்ன நிகழ்ச்சி. இதெல்லாம் அந்த அந்தப் படங்களோடு படிக்கையில் சுகமோ சுகம்!

      நீக்கு
    6. மானேஜருக்குப் பின்னால் தலைப்பாகையுடன் வருபவர் தான் கம்பெனி முதலாளி. மௌனமாக நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

      நீக்கு
    7. சபாஷ்..   அதேதான்...  அதேதான்...   முதலாளி மானேஜரை ஒன்றும் சொல்லாதது வேறு சுதர்சனத்துக்கு துக்கம் முட்டிக்கொண்டு வரும்.  முன்னால் கண்ணாடி போட்டுக்கொண்டு புன்னகைத்துக் கொண்டிருக்கும் கேரக்டரும் கதையில் முக்கியமான ஒரு கேரக்டர்.

      நீக்கு
    8. காலைலேயே பாஹே என மாற்றினேனே. அந்தப் பின்னூட்டம் எங்கே போச்சு?

      நீக்கு
    9. அப்படியா?  நான் பார்க்கவில்லையே...

      நீக்கு
    10. ஆமாம், அந்தக் காரக்டர் தான் கதையில் கோழிச் சொல்லும் நபர்.

      நீக்கு
    11. @ஶ்ரீராம், தேவன் பற்றிய புதிரைக் கொடுக்கச் சொன்னதால் கொடுத்தீங்க போல! எனக்கு முதலில் நினைவு வரலை. பின்னர் தற்செயலாக அந்தப் பக்கம் போனப்போப் பார்த்ததும் நினைவில் வந்தது. :)))))

      நீக்கு
    12. இல்லை, தேவன் பற்றிய புதிர் என் நினைவுக்கே வரவில்லை.  மிகுந்த தற்செயலாக தந்ததுதான்.  மேலும் தேவன் பற்றிய  புதிர் இவ்வளவு சாதாரணமாக இருக்காதே...!

      நீக்கு
  4. சுஜாதாவின் கடைசிப் பாரா உண்மையைச் சொல்லுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். கிட்டத்தட்ட இதைப் போன்ற ஒரு வாசகத்தை சமீபத்தில் வெங்கட் தளத்தில் படித்தேன்.

      நீக்கு
  5. மற்ற பகுதிகளைப் பிறகு படித்து எழுதுகிறேன். ஒரு காலத்தில் பழைய சோறோ இல்லை மோர்சாதமோ மனதில் வெறுப்பையும், தன்னம்பிக்கையைக் குறைப்பதுபோலும், கேலிப்பொருளாக ஆகிவிட்ட தன்மையும் பலர் வாழ்வுல் நிகழ்ந்திருக்கக்கூடியது. இன்னைக்குக் கண்டுபிடித்து என்ன பிரயோசனம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் சிறுவயதில் அந்த மாதிரி எண்ணம் எல்லாம் இல்லாமல் அது ஒரு வாடிக்கையாக இருந்தது.  அவ்வளவே..

      நீக்கு
    2. நாங்க இப்போவும் பழையது சாப்பிடுவோம் விரதம் இல்லா நாட்களில்.

      நீக்கு
  6. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்...

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க, வாழ்க, வாங்கோ து செ !

      நீக்கு
    2. வாழ்க.. வாழ்க

      வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.  பிரார்த்திப்போம்.

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!

    சிங்கப்பெருமாள் கோவில் பற்றி என் பள்ளித் தோழி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

    கோடையில் என் விருப்பமான காலை உணவு பழையது மோர் விட்டுக் கரைத்தது தான். உடன் துண்ட மாங்காய் இருந்தால் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே, அதே, ஆதி? கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன்.

      நீக்கு
    2. வாங்க திருமதி ஆதி வெங்கட்.  நல்வரவு.  இப்போதும் பழையசாதம் சாப்பிடுகிறீர்கள் என்றால் பாராட்டத்தான் வேண்டும்.  தயார் செய்யுமிடத்து நீங்களே இருப்பதால் வசதி!

      நீக்கு
    3. இரண்டு ஸ்ரீரங்கம் காரர்களும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்!!

      நீக்கு
    4. நான் சின்ன வயசில் பழையது சாப்பிட்டதைப் பற்றி எல்லாம் பதிவே போட்டிருக்கேன். இப்போவும் அடிக்கடி பழையதைச் சின்ன வெங்காயத்தோடு சாப்பிடுவதைப் பற்றிச் சொல்லிண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டே இருப்பேனே! :)

      நீக்கு
    5. எனக்கு எப்போதுமே நீர் வைத்த சாதம், தயிர், புது மாங்காய் ஊறுகாய்/உருளை காரக் கறி/தோசை மற்றும் மிளகாய்ப்பொடி/ மிக்சர்/பொரித்த அப்பளாம் இவை இருந்தால் ரொம்பவே பிடிக்கும். காலை அல்லது மாலை சாப்பிட்டுவிடுவேன். சில நேரங்களில் சாதம் மிஞ்சிவிட்டால், மனைவியை மறுநாள் சாப்பிட அனுமதிப்பதில்லை. நான் சாப்பிட்டுவிடுவேன்.

      நீக்கு
  8. பெயரில்லா என ஏன் வருகிறது என்று தெரியவில்லை. முகநூல் வழி வந்தேன்..:) ஆதி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமயங்களில் முகநூல் வழிவந்தால் எனக்கும் இப்படி ஆகும்.  போதாதற்கு புதுமுறை பின்னூட்டப்பெட்டி வேறு...  கொஞ்ச காலமாகவே இப்படித்தான் இருக்கிறது!

      நீக்கு
  9. சிங்கப்பெருமாள் கோயில் சென்னையில் இருந்தவரை போகவே நேரவில்லை. :( உங்கள் விபரங்கள் நன்றாகவும் மிகவும் இயல்பான நடையிலும் இருக்கு. மேலே ஏறி ஏறிப் போகணும் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அக்கா..  கோவில் கீழேயேதான் இருக்கு.  மூலவர் சன்னதியைச் சுற்றியிருக்கும் பிரகாரம் சுமார் நூறு அல்லது ஏறத்தாழ நூறு அடிகளைக் கொண்டு அமைந்திருக்கிறது.

      நீக்கு
    2. ஓஹோ சரிதான்! நான் எப்போவுமே சிங்கப்பெருமாள் கோயிலையும், சோளிங்கர் மலையையும் குழப்பிப்பேன். அதில் நேர்ந்த தவறு. இரண்டுமே பார்க்கலை. :(

      நீக்கு
    3. ஆம். சோளிங்கர் வேற.. அங்கேயும் சென்று வரவேண்டும். அங்கு என் மைத்துனர்கள் இருவர் சத்திரம் கட்டி இலவச போஜனம் சேவை செய்து வருகிறார்கள். அவர்கள் அங்கு என்றில்லாமல் நிறைய வைணவக் கோவில்களில் சேவை செய்கிறார்கள். தங்களால் இயன்ற பொருளுதவி, உடல் உழைப்பைத் தருகிறார்கள்.

      நீக்கு
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இங்கே ஓம் நமோ நாராயணாய எனக் கொடுத்தேன். வரலை. :(

      நீக்கு
    5. அதைக் காணோம். இது வந்திருக்கு!

      நீக்கு
  10. அனைவருக்கும் தாமதமான காலை/மதியம்/மாலை வணக்கம். தொற்று அதிகரிப்பதாகச் சொல்கின்றனர். :( அனைவரும் தொற்றின் பிடியிலிருந்து முழுமையாக விடுபடப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  11. இன்றைய கதம்பம் அருமை.. ஸ்ரீ நரசிம்மர் நல்லருள் புரியட்டும்...

    பதிலளிநீக்கு
  12. ஜிவாஜியும், கே.ஆர்.விஜயாவுமா? ஆனால் படம் என்னனு தெரியலை. ஒரு வேளை "ராமன் எத்தனை ராமனடி!:" படமாக இருக்குமோ? முதல் படத்தின் முகபாவம் அந்தப் படத்தை நினைவூட்டியது. இன்னும் திறமைசாலிகளெல்லாம் இருக்காங்க. வந்து சொல்லுவாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! யூகம் சரியா/தப்பானு சொல்லலை. சரி, கிளம்பறேன். ஆட்கள் வேலை செய்ய வரதுக்குள்ளாகச் சில வேலைகளை முடிச்சுக்கணும். :)

      நீக்கு
    2. என்ன படம் அதுனு இன்னமும் சொல்லலையே!

      நீக்கு
    3. இல்லை, உங்களைத்தவிர இன்னும் வேறு யாருமே முயற்சிக்கவில்லையே என்று யோசித்தேன்!

      நீக்கு
    4. இதோ பதில்...  எல்லோரும் அது சிவாஜி என்றே எண்ணுவார்கள் என்பதாலேயே வெளியிட்டேன்.  அது ஜெய்கணேஷும் கே ஆர் விஜயாவும்.  படம் அக்கா.  பாடல் 'மாலை மலர் பந்தலிட்ட வேளை..'

      நீக்கு
  13. பாஹேயின் எழுத்துக்களைக் கொஞ்சம் சிரமப்பட்டே படிச்சேன். :( அதன் கீழே தட்டச்சி இருப்பது புத்தகத்தின் உள்ளே உள்ளவையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுவில் கட்டத்துக்குள் இருப்பவை கொஞ்சம் படிக்கச் சிரமமாகவே இருக்கு. கண் பிரச்னை! :(

      நீக்கு
    2. உங்களிடம் புத்தகமே இருக்கிறது!  அதில் உள்ள முன்னுரைப் பக்கத்தை போட்டோ எடுத்துக் போட்டிருக்கிறேன்.

      நீக்கு
    3. புத்தகம் அனுப்பியதும், அதை உடனே படிச்சுட்டு எழுதினதும் நினைவில் இருக்கு. ஆனால் இப்போத் தேடி எடுக்கணும். :(

      நீக்கு
    4. வியாழன்தோறும் ஒரு பக்கம் வெளியிட எண்ணம்!

      நீக்கு
    5. // பாஹேயின் எழுத்துக்களைக் கொஞ்சம் சிரமப்பட்டே படிச்சேன். //

      அவர் பேனாவால் எழுதியதைப் படித்தால் எல்லோருக்குமே அப்படிதான்!

      நீக்கு
  14. வல்லிம்மாவுக்கு இன்னமும் சளித்தொந்தரவு உடம்பு வலி முற்றிலும் விடவில்லை என்று நினைக்கிறேன்.  சீக்கிரம் சரியாக பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா? வல்லிக்கு உடம்பு சரியில்லையா? தெரியவே தெரியாது! :( பிரார்த்தனைகள்.

      நீக்கு
  15. நானும் கோயிலுக்கு சென்று பல வருடங்கள் ஆகின்றன. நரசிங்கம் என்றவுடன் மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் கோயிலுக்கு சென்றது நினைவில் வந்தது. 

    பாஹே சிந்தனைகளா? நான் ஓசோ என்று நினைத்தேன். பார்த்தேன் படித்தேன் மறந்தேன்.சிந்தனையில் நிற்காத சிந்தனைகள். 

    பழய சோறு பிடிக்கும். ஆனால் தடா. ஆஸ்த்மா, சுகர். மேலும்  சோறு  மிச்சம் ஆவதில்லை. 

    ஆட்டோ அடிதடி காட்சிகள் தான் தினமும் சீரியல்களில் வருகிறதே. அதெல்லாம் பாஸ் தான் பார்ப்பார். 

    புகைப்படம் பாஸ் க்ளிக்கியதா? 

    கவிதை இல்லாதது தெரியவில்லை.  


    மொத்தத்தில் பதிவு கணம் இல்லை. சுஜாதா இருந்தும் கூட. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் நரசிங்கக்கோவிலும் சென்றதில்லை நான்.

      பாஹேயின் புத்தகத்திலிருந்து வரிகள்...   இவை தொடரும்..

      பழைய சோறு பிடிக்கும்.  ஆனால் நேரம் ஒத்துவருவதில்லை.  தண்ணீரூற்ற சாதமும் மிஞ்சுவதில்லை!

      புகைபபடங்கள் நான்.. நான்... நானே எடுத்தது.  என்ன செய்வது..  அலைபேசி அஞ்சு வருஷப் பழசு!

      பதிவில் கனம் இல்லையா?  அடடா..  சிங்கப்பெருமாள் நரசிமம்ர் கூட வெயிட் இல்லையா?

      நீக்கு
    2. ஒத்தக்கடை நரசிம்மர் கோயிலுக்குப்போயிருக்கேன்.பதிவில் ஶ்ரீராமின் கவிதைகள் மற்றும் நகைச்சுவைத்துணுக்குகள் இந்த வாரம் இல்லை. அதனால் கனம் இல்லையோ? :)

      நீக்கு
    3. ஏற்கெனவே பதிவு வழக்கம்போல் ரொம்ப நீளமாகி விட்டதோ என்று தோன்றியது!

      நீக்கு
  16. அந்தப் படங்கள் தேவனின் ஶ்ரீமான் சுதர்சனத்தில் வருபவை எனக் கூறி இருந்தேன், அந்தக் கருத்து இங்கே இடம் பெறவே இல்லை. ஆனால் என்னோட மெயில் பாக்ஸுக்கு மட்டும் வந்திருக்கு! ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கேயும் இருக்கே...   நானும் பதில் சொல்லி இருக்கேனே..

      நீக்கு
    2. ஆமாம், வந்திருக்குப் பார்த்தேன். ஆனால் கருத்துரைகள் காணாமல் போகின்றன. :) வரேன் நேரம் ஆயிடுச்சே!

      நீக்கு
    3. அந்த 'ஓம் நமோ நாராயணா'வை மட்டும்தான் காணோம்!

      நீக்கு
    4. ஓம் நமோ நாராயணா! எங்கே போச்சு? :(

      நீக்கு
    5. காக்கா தூக்கிக்கிட்டுப்போய் கயிலாயத்துல போட்டுடுச்சு!

      நீக்கு
  17. விளக்கமான பக்தி உலா அருமை...

    பழைய சோறு அமிர்தம்...

    பதிலளிநீக்கு
  18. பழைய சோறு ஆராய்ச்சிக்கு ரெண்டு கோடி ரூவாயா!..

    ஆமப்பே!..

    பதிலளிநீக்கு
  19. கடேசீல சொல்லுடுவாங்க..

    பழய சோறு சிஸ்டம் டமிழர்களோடது இல்லே.. டமிளங்களுக்கு சோறு வடிக்கக் கத்துக் கொடுத்ததே மரிக்கென் மாவு கோஷ்டிதான்..ன்னு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாரு மரிக்கேன் மாவு கோஷ்டி?

      நீக்கு
    2. முன்பு நம் பள்ளிகளுக்கு அமெரிக்காவிலிருந்து சோள மாவும் எண்ணெயும் வந்தது (இலவசமாக.. அந்த லட்சணத்தில் நாடு இருந்தது). அதனை அமெரிக்கன் மாவு என்று சொல்லி மரிக்கேன் மாவு என்றாயிற்று. இப்போ அந்தக் கோஷ்டி யாரெனப் புரிந்திருக்குமே

      நீக்கு
  20. தோசையோடு பொடியெல்லாம் போட்டு எண்ணெயும் ஊற்றிக் கொடுத்தால் அது ஒப்பந்ததாரர் மூலம் தயாரிக்கப்பட்ட தோசை. காலை வேளையில் போனால் அநேகமாகப்பெருமாளுக்குக் காட்டிய பிரசாதங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்களுக்கு ஏனோ கிடைக்கலை. நீங்க திருமஞ்சனம் ஏற்பாடு செய்து நிறைவேற்றினாலோ அல்லது தளிகை/முழுத்தளிகைனு ஏற்பாடு செய்து பெருமாளுக்கு "அம்சு" செய்வித்தாலோ பிரசாதங்கள் நிறையவே உண்டு. முகப்பேர் சந்தானகோபால கிருஷ்ணன் கோயிலில் எங்களுக்கு இப்படி நிறையக் கிடைச்சிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையான தகவலுக்கு நன்றி.

      நீக்கு
    2. நாங்கள்தான் முதல் செட் தரிசனம்.  பிரசாதம் உள்ளே போனதையும் பார்த்தேன்.  ஆனாலும் லக் இல்லை!  கடையில் சுட்ட தோசைதான்!

      நீக்கு
  21. பெரும்பாலான நாட்களில் காலை வேளையில் இங்கு பழைய சாதம் - நீராகாரம் - ஒரு கோப்பை, சின்ன வெங்காயம் உண்டு. அதுவும் இப்போதைய பங்களூர் சூட்டிற்கு அமிர்தம்!

    இப்படி பழைய சோறு பத்தி வந்துவிட்டதில்லையா பாருங்க மட் கா பழைய சோறு/மண் பானையில் பழைய சோறு ன்னு ஒரு சின்ன பானை 30 லிருந்து 50 ரூபாய்னு விக்க ஆரம்பிச்சுருவாங்க!!!

    கருத்து போகிறதான்னு செக்கிங்க்.

    வெங்கட்ஜி தளத்தில் முந்தைய நாள் ரூபின் பாஸ் பதிவைப் பற்றிய என் கருத்து போகவே இல்லை. அது போல ராயசெல்லப்பா சார் தளத்தில் போட்ட கருத்துகளும் ஒன்றைத் தவிர வேது எதுவும் போகவில்லை. அதனால் இங்கு இப்ப உறுதி செய்து கொள்ள...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  சில இடங்களில் கமெண்ட்ஸ் போவதில்லை.  எனக்கு கோமதி அக்கா தளத்தில் இரண்டுமுறை அப்படி ஆகி இருக்கிறது.  கமெண்ட் மாடரேஷன் இருக்கும் இடத்தில் உடனே தெரிந்து கொள்ளவும் முடியாது.

      நீக்கு
    2. ஏற்கெனவே சில ஹோட்டல்களில் மண்பானை பழைய சோறு கெட்டித்தயிருடன் விற்பனை ஆகிறது என்று படித்திருக்கிறேன்.

      நீக்கு
    3. வெங்கட்ஜி தளத்தில் முந்தாநாள் பதிவுக்கு வந்துவிட்டது. இன்றைய பதிவுக்குப் போகவே மாட்டேன் என்கிறது. கமென்ட் மாடரேஷன் இருக்கும் பக்கங்களில் கருத்து போட்டதும் கீழே உங்கள் கமென்ட் வெளியாகும் என்று கறுப்பு வண்ணத்தில் your comment will be published after approval என்று வருகிறது. இல்லாத தளங்களில் கருத்து வந்துவிட்டால் தெரிந்துவிடும். தெரியவில்லை என்றால் இல்லை. இதில் ஒரு கருத்து போட்டு அது வெளி வந்ததும் அடுத்த கருத்து போடும் போது முதல் கருத்து காணாமல் போய்விடும். ராயசெல்லப்பா சார் தளத்தில் அப்படித்தான் ஆனது. கடைசியில் போட்ட கருத்து மட்டும் காட்டியது மற்ற்தெல்லாம் எங்கே போச்சு என்று தெரியவில்லை

      கீதா

      நீக்கு
    4. ஆம்.  சமயங்களில் இபப்டி படுத்துகிறது.  ஒன்று ரெப்ரெஷ் செய்து பார்க்கலாம்.  அல்லது அப்போது விட்டு விட்டு அப்புறம் முயற்சிக்கலாம்.

      நீக்கு
  22. மறைமலைநகர் அடுத்து உள்ள சிங்கப்பெருமாள் கோயில்தானே ஜி ?

    இந்தக் கோயிலுக்கு அபுதாபியிலிருந்து விமானத்தில் இறங்கியவுடன் பெட்டிகளோடு சரியான நேரத்திற்கு திருமணத்தில் கலந்து கொண்டேன்.

    தற்போது கஞ்சிதான் தினமும் சாப்பிடுகிறேன் அதுவும் எனக்குப் பிடித்த புலுங்கல் அரிசி (முரட்டு அரிசி)

    பதிலளிநீக்கு
  23. சின்ன வயதில் பழையது பெரும்பாலும் உண்டு. சில வீடுகளில் பெண்களின் மாதவிலக்கின் போது காலை பழையதுதான் கொடுக்கும் வழக்கமும் இருந்தது.

    அப்பால வரேன் வேலைகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியைச் சமன் செய்யும் என்பதோடு அப்போது உடலுக்குத் தேவையான சத்துக்களையும் தருவது பழைய சாதம். பெண் முதல் முதலாகப் பருவம் அடைந்த உடனேயே சின்ன வெங்காயம் போட்டுப் பழையது கொடுத்துவிட்டுப் பின்னர் உளுந்தங்களியைக் கருப்பட்டி, நல்லெண்ணெயோடு கொடுப்பார்கள். கருப்பை பலம் பெறும்.

      நீக்கு
    2. இப்போதெல்லாம் அரிசி வாகும் சரி, தண்ணீர் வாகும் சரி, பழைய சோறுக்கு ஒத்துவருவதில்லை!

      நீக்கு
    3. இந்த சின்னவெங்காயம் பற்றிப் படித்தவுடன் இந்த கீதா ரங்கன்(க்க்கா)வுக்கு என்னாச்சு என்று யோசித்தேன். அப்புறம் பார்த்தால் நம்ம மதுரை மீனாக்ஷியம்மாள். அவங்களுக்குத்தான் சின்ன வெங்காயம் முருங்கக்காய்லாம் இஷ்டமாச்சே

      நீக்கு
    4. ஆமாம் கீதாக்கா நம் வீட்டிலும் பழையதுதான். ஆனால் பாட்டி இருந்ததால், வீட்டில் இருந்தால் சி வெ கிடையாது. பாட்டி எங்கேனும் ஊருக்குப் போயிருந்தால் கிடைக்கும்.

      கீதா

      நீக்கு
    5. இந்த சின்னவெங்காயம் பற்றிப் படித்தவுடன் இந்த கீதா ரங்கன்(க்க்கா)வுக்கு என்னாச்சு என்று யோசித்தேன். அப்புறம் பார்த்தால் நம்ம மதுரை மீனாக்ஷியம்மாள். அவங்களுக்குத்தான் சின்ன வெங்காயம் முருங்கக்காய்லாம் இஷ்டமாச்சே//

      ஏன் நெல்லை? புரியலை...

      கீதா ரங்கன்(க்கா)வுக்கும் சி வெ ரொம்பப் பிடிக்குமாக்கும். இங்கு பெரும்பாலும் சி வெ உண்டே!!!! அதுவும் பழையதுடன். இப்ப ப மி ஒத்துக் கொள்வதில்லை

      கீதா

      நீக்கு
  24. மதிய வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான மதிய வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    பெருமாள் கோவில் தரிசனம் பகிர்வு நன்றாக இருந்தது. காலையில் (ஒரு ஏழு மணி வாக்கில்) படித்து விட்டேன். கொஞ்சம் வேலைகள் காரணமாக இப்போதுதான் கருத்திட வருகிறேன். பல வருடங்கள் சென்னையிலிருந்தும் இந்த கோவிலெல்லாம் போனதில்லை. மயிலை மாதவ பெருமாள், கேசவ பெருமாள், மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை எப்போதாவது சென்று வணங்கி வந்ததோடு சரி. இன்றைய பகிர்வில் தாங்கள் சென்று வந்த கோவில் தரிசனம் படிக்க மனதுக்கு நன்றாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹப்பாடி..  நீங்கள் சொல்லி இருக்கும் மூன்று கோவில்களும் நானும் பார்த்திருக்கிறேன்.  அங்கு செல்லும்போது வல்லிம்மாவையும் பார்த்து வந்திருக்கிறேன்.  இந்தக் கோவில் நானும் முதல்முறையாகப் பார்க்கிறேன்.

      நீக்கு
    2. கமலா ஹரிஹரன் மேடம், திருவல்லிக்கேணி கோவிலுக்குச் சென்றபோது கோவிலுள் கடையில் கிடைக்கும்-பிரசாத ஸ்டால், புளியோதரை, சர்க்கரைப்பொங்கல், மைசூர்பாக் போன்றவற்றை வாங்கினாரா?

      நீக்கு
    3. நான் வாங்கி இருக்கிறேன்!

      நீக்கு
    4. கோயிலுக்குப் போனாலே பிரசாதம் எங்கன்னுதானே முதல்ல பார்ப்பது!! ஹாஹாஹா என்னைச்சொன்னேன். உண்மையாகவே. அதனால திரு அல்லிக்கேணி பிள்ளை பெருமான் கோயிலில் புளியோதரை சாப்பிட்டதுண்டு. இன்னும் சில பிரசாதங்கள். புளியோதரையில் ஒரு முறை கொஞ்சம் நற நற...திருப்பதி கோயில்கள் தவிர வேறு கோயில்களில் நேரடியாகப் பிரசாதம் சாப்பிட்டிருக்கேனா என்று நினைவுபடுத்திப் பார்த்தேன் ம்ஹூம் நினைவு வரவில்லை

      கீதா

      கீதா

      நீக்கு
    5. சமீபத்தில் திருவஹிந்திரபுரம் கோவிலுக்குச் சென்றிருந்தேன். கோவிலின் உள்ளே பிரசாத ஸ்டால், லட்டு போன்றவை பார்க்க அட்டஹாசமாக இருந்தன. ஒரு சன்னிதி அர்ச்சகரிடம் இவை கோவில் பிரசாதங்களா என்று கேட்டேன். அவரோ இது டெண்டர் எடுத்து ஸ்டால் வைத்திருப்பவர்கள் என்று சொன்னார். நான் வாங்கவில்லை. இதுபோல காண்டிராக்ட் விட்ட கடைகளில் பிரசாதம் வாங்குவதில்லை.

      நீக்கு
    6. நெல்லை சார். கடலூர் எனது ஊர். திருவந்திபுரத்தில் குன்றின் மேல் இருக்கும் ஹயக்ரீவர் சன்னதிக்கும் கீழே இருக்கும் கிடந்த கோலம் உலகளந்த பெருமாளையும் தரிசித்தீர்களா? பெருமாள் மரக்காலை தலையணையாக வைத்துக்கொண்டு படுத்திருப்பார்.

       Jayakumar

      நீக்கு
    7. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே..

      இல்லை. வாங்கியதில்லை என்றுதான் நினைக்கிறேன். அப்படியே அப்போது வாங்கியிருந்தாலும் , இப்போது அது நினைவில் இல்லை. மதுரை, இங்கு என வந்த பின் சென்னை செல்வதே அரிதாகி விட்டது. அப்படியே உறவுகள், திருமணங்கள் எனச் சென்றால் கூட கோவில்களுக்கு செல்ல முடிவதில்லை. நெரம் அப்படி அமைந்து விடும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  26. சிங்கப் பெருமாள் கோயில் சென்றிறுக்கிறேன். ரயிலில். ரயில் நிலையத்தில் இறங்கி கொஞ்சம் ஒரு 7,8 நிமிடம் நடந்தால் கோயில். அங்கு பிரசாதக் கடையில்தான் ஒரே ஒரு முறை மிளகு தோசை. ஸ்ரீராம் நீங்கள் சொல்லியிருப்பது போல் மிளகாய்ப்பொடி தடவியதுதான். அதனால் அதன் பின் சென்ற போது வாங்கவில்லை. நானும் படங்கள் எல்லாம் எடுத்து வைத்திருக்கிறேன். அதற்கு அடுத்த வரியை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்...வழக்கமான பல்லவிதான்!இரண்டு மூன்று பல்லவிகள் அதில் ஒன்று!!!! ஹாஹாஹாஹா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு சிங்கப்பெருமாள் கோவிலை 9 முறை பிரதட்சணம் செய்யணும், 7 வாரங்கள்-ஒரே தினத்தில் என்று சொன்னார்கள். அதற்காக அடையாரிலிருந்து சென்று நானும் மனைவியும் பிரதட்சணம் செய்துவிட்டு வருவோம். சொன்னவர், வெளியில் எங்கும் தங்கக்கூடாது நேரே வீட்டுக்குத்தான் வரணும் என்று சொன்னதால், அங்கும் சாப்பிடவில்லை, வழியிலிருக்கும் தம்பி வீட்டுக்கும் போனதில்லை. (ஒவ்வொரு முறை பிரதட்சணம் முடிந்ததும் கொடிமரத்தை வணங்கணும். இதுபோல 80+ முறை திருவல்லிக்கேணி கோவில் இரு கொடிமரத்தையும் சுற்றி பிரதட்சணம் செய்துள்ளேன்)

      நீக்கு
    2. ஆ..  கீதா புரிந்தது.  காணாமல் போன கட்டுரைகள், ரெசிப்பிக்கள்!!!  கஷ்டம்தான்.

      நெல்லை..  ஒன்பது பிரதட்சணமா?  படி ஏறி இறங்க மூச்சுவாங்காதோ!  

      நீக்கு
    3. தில்லக்கேணியில் ஒருமுறைக்கு  80 பிரதட்சணமா?

      நீக்கு
    4. நெல்லை, இரண்டு வேண்டுதல்களா? சி பெ மற்றும் திரு அல்லிக் கேணி?

      கீதா

      நீக்கு
    5. ஆமாம். திருவல்லிக்கேணியில் 80-85ஐ, இரண்டு மூன்று நாட்களில் முடிக்கலாம், ஆனால் ஒவ்வொரு முறை ஆரம்பிக்கும்போதும், இரண்டு த்வஜஸ்தம்பங்களிலும் முழுமையாக வணங்கிவிட்டு ஆரம்பிக்கணும் என்றார். நான் 3 தடவைகளில் முடித்தேன். சிங்கப்பெருமாள் கோவிலில், கஷ்டமாக இல்லை. அதற்குக் காரணம் நான் சுதர்சனக் க்ரியா செய்வதால்தான் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    6. நெல்லை, நிஜமாகவே மூச்சுப்பயிற்சி செய்வது நன்றாகக் கை கொடுக்கிறது. நான் பிரம்மரியும், ஓம் மும் தினமும் செய்வதும் கொஞ்சம் கை கொடுக்கிறதுதான்.

      கீதா

      நீக்கு
    7. ​நல்லது. என்னால் கட்டாயம் முடியாது!

      நீக்கு
  27. சுஜாதாவின் கருத்துகள் ரொம்பப் பிடித்திருக்கிறது. மனிதர் Immortality பற்றி எழுதாமல் போய்விட்டாரே அதுவும் தெளிவான கருத்துகள் வேறு இருந்ததாகச் சொல்லியிருக்கிறார்.

    //Edward Young என்பவற்றின் Night Thoughts On Life Death And Immortality என்னும் கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோள் கொடுக்கிறேன்.//

    மேற்கோள் யோசிக்க வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். எழுதி இருக்கலாம். அல்லது எழுதித்தான் நாம் கவனிக்கவில்லையோ என்னவோ!

      நீக்கு
  28. தூறல்கள் - ரசித்தேன் ஸ்ரீராம். பல வரிகள் கூர்மையாக இருக்கும்.

    //யதார்த்த வாழ்வியல்
    தத்துவ மழையின் தூறல்கள்
    என் மேல் பன்னீராய் தூவிட
    நிமிர்ந்து கண்ணுற்றேன்
    என் வாழ்க்கைப் பரிமாணத்தின்
    குறுங்கோணங்கள்
    மாறிடத் துடிக்கின்றன
    விரி கோணமாய் !

    என்னடா இது தில்லைஅகத்திலிருந்து கவிதை? வியப்பு இல்லையா? வலை நண்பர்கள்/சகோதரிகள் பலரும் கவிதைகளில் கலக்கி வரும் போது அவர்களுக்கு நாங்கள் நிகராக வர இயலாதுதான்.

    தூறல்கள் எனும் இப்புத்தகத்தை வாசித்ததும் மனதில் எழுந்த வரிகள். இது விமர்சனமல்ல. இப்புத்தகத்தில் முழுவதும், ஆழ்கடலில் இருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட முத்துகள் போன்ற தத்துவ முத்துகள். இந்தத் தத்துவ முத்துகளில் பல ஆலங்கட்டி மழை போல “ணங்க்” என்று தெறித்து விழுந்து, தலையில் குட்டி, “இதைக் கொஞ்சம் கவனி” என்று சொல்லுகின்றன. //

    நினைவிருக்கா ஸ்ரீராம்? ஆவியுடன் உங்க வீட்டுக்கு முதன் முதலில் என் டப்பா வண்டியில் வந்திருந்த போது நீங்கள் பாஹே அப்பாவின் புத்தகம் தூறல்கள் கொடுத்தீர்கள். அதை வாசித்து எழுதியதுதான் இது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஆமாம்..  நீங்கள் பதிவிட்டிருந்தீர்கள்.  நிறையவே எடுத்து போட்டிருக்கிறீர்கள்.

      நீக்கு
  29. “உறவினால் ஏற்படும் அன்பை விட அன்பினால் ஏற்படும் உறவு உன்னதமானது” - பாஹே

    கீதா

    பதிலளிநீக்கு
  30. ஸ்ரீராம், சனிக்கிழமை பாசிட்டிவ் செய்திகளுக்கான காரணம்...

    // “பெட் காஃபியோடு அன்றைய தினசரியையும் பார்க்காவிட்டால் பலருக்கும் தலை சுக்கல் நூறாகி விடும். அதுவும் எம்மாதிரி செய்திகள் நம் தகவல் ஊடகங்களின் தர்ம கைங்கர்யம்? கொலை, கற்பழிப்பு சாலை விபத்து, லஞ்சம், நடிகைகளின் வழுவழுப்பான மர்ம பிரதேச தரிசனம், ஒட்டு மொத்த அரசியல்வாதிகளின் உளறல்கள், பொய்கள்.

    மனிதத்துவம் வெல்வதாக, மானுடம் ஜொலிப்பதாக எப்போதாவது சில சில செய்திகள் அத்திப் பூக்கும், தனி நபர்களின் சாதனைகளைப் படிக்கும் போது ஏற்படும் மன எழுச்சி சொற்பம் தான். ஒரே ஒரு பக்கம், அல்லது ஒன்றிரண்டு பத்திகளில் அவற்றைக் தேடித் தேடி வெளியிடும் நிருபர்களும், பத்திரிகைகளும் மகத்தான சேவை செய்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. இந்த ஒரே ஒரு பக்க அளவு இன்னும் நிறைய நிறைய பெருகினால், நாட்டில் சுபிட்சம் பொங்கும். எது இல்லாவிட்டாலும் படிக்கின்றவர் மனசாவது டெட்டால் போட்டுக் கழுவப்படும்.”// - பாஹே

    கீதா

    பதிலளிநீக்கு
  31. ரொம்ப யதார்த்தமானது இது - 'நடக்காது' என்று தெரிவதால்!....//

    இதை அங்கும் பதிவிலும் சொல்லியிருக்கிறோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  32. @ ஸ்ரீராம்..

    // அதாரு மரிக்கேன் மாவு கோஷ்டி?..//

    இன்றைய மைதா மாவு தான் அன்றைய மரிக்கென் மாவு..
    அமெரிக்காவில் இருந்து இறக்குமதியானதால் மக்கள்
    இப்படிச் சொல்லி யிருக்கலாம்.. மேலும் ஜாவா அரிசி ஜவ்வரிசியாகிய புராணத்தையும் காண்க...

    பதிலளிநீக்கு
  33. சிங்கப்பெருமாள் தரிசனத்துடன், பழையசோறு , ஜோக்ஸ், சுஜாதாவின் கருத்துக்கள் என சிறப்பான பகிர்வுகள் கண்டு கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  34. இந்தக் கதையைப் படிக்காத வெகு குறைவானவர்களில் நானும் அடக்கம்!

    தேவன் கதையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கீதா.  இது இணையத்தில் கிடைக்கிறது.  கட்டாயம் படிக்கலாம்.  மிகவும் சுவாரஸ்யமாயிருக்கும்.  இணையத்தில் கிடைப்பவை இப்போதைய பிரசுரங்கள் என்பதால் இந்தப் படங்களை நீங்கள் மிஸ் செய்வீர்கள்!

      நீக்கு
  35. அந்த அவசரத் தேவை இங்கு பங்களூருக்கும் தேவை. படம் செமையா இருக்கு ஸ்ரீராம். வந்து ஏமாற்றிவிட்டுப் போன கருமேகமா?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், சென்னை வெயிலை இந்த முறை தாங்கவே முடியவில்லை. அனல் அனல் அனல் வெப்பம்..

      நீக்கு
  36. தேவன் க்ளிக் சூப்பர். அந்த தேவன் விரைந்து செல்வது நல்லாத்தான் இருக்கு கூடவே மழையும் பொழிந்துவிட்டுச் சென்றால் நன்றாக இருக்கும். இங்கிட்டு வந்தா அங்க அனுப்பி வைக்கிறேன் அங்கிட்டு வந்தா இங்க அனுப்பி வைங்க.

    ஸ்கூட்டர் இருக்கையின் மீது தோசை, காரின் மீது சப்பாத்தி போடும் காணொளிகள் - அவ்வளவு அனலாம்!!!

    ஒரு மணி நேரத்தில் துணிகள் காய்ந்துவிடுகின்றன. வற்றல் போட்டால் ஒரே நாளில் நன்றாகக் காய்ந்து விடுகிறது. பங்களூரில் சொன்னேன் அப்படினா எம்புட்டு சூடுன்னு பார்த்துக்கோங்க. இங்கு மழை வர வேண்டும் ஆனால் வரவில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா நெகடிவ்வா சொல்லாதீங்க. பத்து நாட்களுக்கு முன், தொடர்ந்து சில நாட்கள் இரவில் நல்ல மழை பெய்தது. பேசாம, 2000ல் வீடு கட்டினவர்கள்/வாங்கினவர்கள் அல்லது அதற்கு முன் இந்த ஊருக்கு வந்தவர்கள், கன்னடிகாவின் பெற்றோர் தவிர மற்றவர்கள் பெங்களூரில் இடம் வாங்கமுடியாது என்று சொன்னால் ஒருவேளை மரங்கள், இயற்கை அழிப்பு நின்று பழைய குளிர் திரும்புமோ? (இதை கீதா ரங்கன் அக்காவுக்காகச் சொல்லவில்லை ஹா ஹா)

      நீக்கு
    2. ஹா.. ஹாங்.. ஹா.. கட்டாயம் அனுப்பி வைக்கிறேன்! ஸ்கூட்டர் மேல தோசை வீடியோ நானும் பார்த்தேன். அதுல் சென்னை என்று நினைத்தேன். இங்குதான் வெயிலும், அனலும் அதிகம்.

      நீக்கு
  37. பாட்டு வரிகள் சொன்னாலே திணறுவேன் என்ன பாட்டாருக்கும்னு இப்படிப்படங்கள் கொடுத்துக் கேட்டா கீதா அம்பேல்! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் பாட்டின் காணொளி பார்த்துவிட்டால், அதில் எந்த வரி எந்த ராகம் என்றெல்லாம் புட்டுவைத்துவிடுவேன் (னு சொல்றாங்களோ?)

      நீக்கு
    2. ஹாஹாஹாஹாஹா நெல்லை அதே அதே!!

      கீதா

      நீக்கு
    3. பாட்டு வரிகள் சொன்னால் கூகுளிட்டு விடை கண்டு பிடிச்சுடுவீங்களே!

      நீக்கு
  38. சிங்க்ப்பெருமாள் கோவில் பாடலாத்ரி தரிசனம் நன்று. பெருங்களத்தூரில் இருந்தபோதும் இந்தக் கோவிலுக்கு ஒரு முறை கூடச் சென்றதில்லை. பலப்பல வருடங்களுக்குப் பிறகு, ஒருவர் சொன்னார் என்று அடையாறிலிருந்து இந்தக் கோவிலுக்கு 7 முறை சென்றோம். நாங்கள் சென்றிருந்தபோது ஒவ்வொரு முறையும் மூன்றாவது கண்ணைக் காண்பித்தார் (அர்ச்சகர்)

    கோவில் பிரசாதம் தருவதற்கு ஒரு வேளை இருக்கிறது. உள்ளே கண்டருளப்பண்ணின உடனே தரமாட்டார்கள். பல கோவில்களில் ப்ரபந்தம், சாற்றுமுறை முடிந்த பிறகுதான் விநியோகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரசாத நடைமுறைகள் தெரியவில்லை.  வழக்கம்போல என் ராசி, கிடைக்கவில்லை!  அஷ்டே!  நானும் சிலமுறை வாய்ப்பு வந்தும், இப்போது இருக்கும் இடத்தை விட அந்தக் கோவிலுக்கு முன்பு இருந்த இடத்திலிருந்து இன்னும் கொஞ்சம் - கொஞ்சம்தான் - அருகிலிருந்தும் அப்போதெல்லாம் போக வாய்ப்பு கிடைக்கவில்லை.

      நீக்கு
  39. தோசை பிரசாதம் எப்படி கோவில்களில் வந்தது என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். இது புராதானமான பிரசாதம். ஆனாப் பாருங்க, தொட்டுக்க எதுவும் தரமாட்டாங்க. அப்புறம் எப்படிச் சாப்பிடுவது? ஒரு காலத்தில் திருப்பதியில் 2 ரூபாய் கொடுத்தால் 6 தோசைகளுக்கு மேல் தந்திருக்கிறார்கள் (நெய் விட்டு வார்த்தது). தொட்டுக்க இல்லாமல் சாப்பிடுவது கடினம்தான். ஆழ்வார் திருநகரியிலும் சாப்பிட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இந்த விவரங்கள் தெரியாது.  தொட்டுக்க இல்லாமல் அப்படித் தரப்படும் தோசைகள் மென்மையாக இருந்தாலாவது சுருட்டி வாயில் திணித்து விடலாம்.  இவை முரட்டுத் தனமாக அல்லவா இருக்கின்றன!

      நீக்கு
    2. தோசையிலேயே மிளகு, ஜீரகம் எல்லாம் போட்டிருப்பாங்களே!

      நீக்கு
    3. மிளகு போட்டிருந்தார்கள்.  சீரகம் போட்டிருந்தால் எனக்குப் பிடித்திருக்காது!

      நீக்கு
  40. பெங்களூரிலும் வெயில் கொளுத்துகிறது. நேற்று பத்தரை மணிக்கு மனைவியை அழைத்துக்கொண்டு, பிறகு 12 மணி வாக்கில் திரும்பினேன் (வங்கி போன்ற இடங்களில் உட்கார்ந்தும்). பெங்களூரில் இத்தனைக்கும் பெரும்பாலான சாலைகளில் மரங்கள். இருந்தும் ரொம்பவே சூடு அதிகம். மனைவி என்னிடம் கோபித்துக்கொண்டார்....ஹா ஹா. அவருக்கு சூரியன் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. எனக்கு வேறு காரணத்துக்காக சூரியனே பிடிக்காது.ஹிஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை எனக்கும் வெப்பம் தாங்குவதில்லை. குளிர் பிரச்சனை இல்லை. குளிர்தான் பிடித்திருக்கிறது. இந்த முறை ரொம்ப சூடு. அனல் தெரிகிறது. ராத்திரி 10 மணிக்கும் 28 டிகிரி!!!!!!! நம் வீட்டின் மேல் மொட்டைமாடிதான் அதனால் சூடு இறங்குவது தெரிகிறது.

      கீதா

      நீக்கு
    2. எனக்கு வேறு காரணத்துக்காக சூரியனே பிடிக்காது.ஹிஹி//

      ஹாஹாஹா புரிந்தது!!

      கீதா

      நீக்கு
    3. கோவில்களில் பிரசாதத்திற்கு தொட்டுக்கவெல்லாம் வைத்து தருவார்களா? ஆச்சரியமாக உள்ளது. அப்புறம் அதுவும் ஒரு சிற்றுண்டி சாலை ஆகி விடுமே... :).

      நீக்கு
    4. இல்லை, தருவதில்லை என்றுதானே நெல்லை சொல்கிறார். தொட்டுக்காக கொடுப்பது அங்கு விற்கப்படும் ஸ்டால்களில்.

      நீக்கு
  41. ஹோட்டல்களில் பழைய சோறு சாப்பிடுவதா? அவங்களுக்கு சுத்தம் சுகாதாரம் தெரியுமா? முதன் முதலாக சரவணபவன் பஹ்ரைனில் ஆரம்பித்தபோது, பசங்களுக்கு உணவு பிடிக்காது என்பதால் மாலை டிஃபனுக்கு முதல் ஆளாகப் போனோம். தோசைக்கு மத்தியான குழம்பு போன்றவற்றை வைத்ததில், பசங்க அப்செட். அப்புறம் சரவண பவனுக்கு வருவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, சுத்தமாக பரமாரிக்கப்பட்டு, மண்பானைகளில் முதல் நாளே நீரூற்றி என்று செய்முறை எல்லாம் சொல்லி முன்பு படித்திருக்கிறேன்.

      நீக்கு
  42. உங்களுக்கு நல்ல தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி, ஸ்ரீராம்ஜி.

    சென்னைக்கு வருவது என்பது அபூர்வம். வந்த போதும் மைலாப்பூர் கோயில் திருவான்மியூர் கோயில் தவிர வேறு கோயில்கள் எங்கும் சென்றதில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளஸிஜி.  எப்போதும் அந்தக் கோவில்களுக்கு போகிறோமே, பார்க்காத கோவில் பார்க்கலாம் என்றுதான் இங்கு சென்று வந்தேன்.

      நீக்கு
  43. immortality? ஒரு வேளை இறந்த பிறகும் பெயர் நிலைத்து நிற்பது பற்றியாக இருக்குமோ? ஜனனம் இருந்தால் மரணம் என்பது உண்டே.

    பழைய சோறு என்பது இல்லை இரவில் கேரளத்து அரிசியில் கஞ்சி பெரும்பாலும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  44. Immortality - பற்றியா? ஒரு வேலை இறந்த பிறகும் ஒருவரின் பெயர் நிலைத்து நிற்குமே அதைப் பற்றியோ?

    பழைய சோறு என்பதில்லை இரவில் பெரும்பாலும் கேரளத்து அரிசியில் கஞ்சிச்சோறுதான். அதற்குமே நல்ல பயன்கள் உண்டு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Immortality பற்றி அவர் எழுதி இருந்தால் என்ன சொல்ல வருகிறார் என்று தெரிந்திருக்கும்.

      கேரளத்து அரிசிகள் சிவப்பு கலரில் முரடாக இருக்கும் இல்லையா?!

      நீக்கு
  45. பாஹே- உங்கள் தந்தையின் இப்புத்தகம் குறித்து எங்கள் தளத்தில் எழுதியிருக்கிறோம் என்று நினைக்கிறோம். உள்ளே நுழையும் முன் இப்பகுதியே மிகவும் கவர்ந்தது. புத்தகத்தினை கீதா வாசித்துக் காட்டினார். அதன் பின் நான் கொஞ்சம் அவர் கொஞ்சமுமாக எழுதினோம். அதை வாசித்த போதுதான் நீங்கள் பாசிட்டிவ் செய்திகள் போடுவதன் காரணம் தெரிந்தது அதையும் நாங்கள் பேசிக் கொண்ட நினைவு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  46. மேகங்கள் படங்கள் நன்றாக வந்திருக்கின்றன

    சிவாஜி கே ஆர் விஜயா? இல்லையா? சிவாஜியும் கே ஆர் விஜயாவும் பல படங்கள் நடித்துள்ளனர். அந்தச் சட்டை பார்க்கும் போடு ரிஷி மூலம் படமோ?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பம் அருமை. கோவிலைப்பற்றிய செய்திகள் விபரமாக தெரிந்து கொள்ள முடிந்தது. எந்த கோவிலிலும் முதலில் கொடிமரத்தை நமஸ்கரித்து விட்டு பின் உள்ளே சென்று இறைவனை வணங்கி விட்டு பின் வெளியே வரும் சமயம் மறுபடி கொடிமரத்திற்கு முன் விழுந்து நமஸ்கரித்து விட்டு வரலாம் என்றுதான் எண்ணியிருந்தேன்.எந்த கோவிலிலும் சிறிது (ஒரு நிமிடமாவது) அமர்ந்து விட்டு வருவது வேறு ஒரு வலியுறுத்திய வாடிக்கையாக கடைப்பிடிக்கிறோம். (கோவில் சொத்து குல நாசம் . என்ற பழமொழிக்கு பயந்து) ஆனால் மணிக்கணக்கில் அங்கு அமர்ந்து, மனம் போனபடி பேசுபவர்களையும் கண்டுள்ளேன்.

    சுஜாதாவின் கற்றும், பெற்றதுமான எண்ணங்கள் சிறப்பு.

    தங்கள் தந்தையின் எழுத்துக்கள் முதிர்ந்த அனுபவம் அடைந்தவையாக அதுவும் வாழ்க்கையின் பக்குவங்களை பெற்றதாக பிரகாசிக்கின்றன.

    பழைய சாதம் மகிமை என்றுமே சிறந்தது. இப்போது இந்த வெயிலுக்கு மிகவும் உகந்தது. சென்னைக்கு தேவையான மழை மேகங்கள் இங்கும் கொஞ்சம் எட்டிப் பார்த்தால் நல்லதுதான். வெய்யில் உக்கிரமாக தகிக்கிறது.

    கடைசி படத்தின் பாட்டு இன்னமும் யாரும் கண்டு பிடிக்கவில்லையா? அதனால் அந்தப் படத்தின் வேறு ஏதாவது பாட்டு நாளை தொடருமா? நாளைய வெள்ளி விடியலில் எதிர்பார்க்கிறேன். அனைத்திற்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிலில் நமஸ்காரம் செய்வது பற்றி எங்கேயோ படித்தேன், வீட்டில் சிலரும் சொல்வார்கள்.  அதைத்தான் எழுதி இருக்கிறேன் கமலா அக்கா.  அதேபோல 'சிவன் சொத்து குலநாசம்' என்று சொல்வார்கள்.  சிவன் கோவில் சென்று வந்தால் அந்தக் களைப்பைக் கூட எடுத்து வரக்கூடாதாம்.  அங்கேயே விட்டு வரவேண்டுமாம்.  எனவே சிவன் கோவில் சென்றால் அங்கு உட்கார்ந்து வருவார்கள்.  வைணவ கோவில்களில் தேவை இல்லை;  உட்கார்ந்து வந்தால் தப்பில்லை.  இன்னும் கொஞ்ச நேரம் பெருமாளை நினைக்கலாம், கோவிலில் இருக்கலாம்!

      கடைசி படம் பற்றிய புதிருக்கு கீதா அக்காவுக்கு பதில் சொல்லி இருக்கிறேன் பாருங்கள்!  அது சிவாஜியே இல்லை.  ஜெய்கணேஷ்!  அந்த சட்டையும், ஸ்டைலும் பார்க்க அப்படி இருக்கும் என்பதாலேயே அதைப் பகிர்ந்தேன்.

      நீக்கு
    2. பெருமாள் கோவிலில் தாயார் தரிசனம், அவர் அனுமதிக்குப் பின் பெருமாள் தரிசனம். அதற்கு முன், கோவிலில் நுழையும்போதே த்வஜஸ்தம்பத்தின் அருகில் சேவிக்கணும். சிவன் கோவிலில் முதலில் சிவன் பிறகு அம்பாள் தரிசனம். த்வஜஸ்தம்பம் முறை தெரியாது. சிவன் கோவிலில் உட்கார்ந்துவிட்டு வருவார்கள். பெருமாள் கோவிலில் அந்தக் கட்டாயம் இல்லை. எந்தக் கோவிலிலும் பிரசாதம் அங்கேயே சாப்பிடணும். பெருமாள் கோவிலில் சரியான நடைமுறை, சாப்பிட்டபின் தலையில் கையைத் தடவிக்கொள்வது. இப்போதெல்லாம் பைப்பில் அலம்பிக்கொள்வது. தூணில் தடவுவது பாவம்.

      நீக்கு
    3. சிவன் கோவிலில் பிரதட்சணம் முடிந்து துவஜஸ்தம்பம் அருகே இடமிருந்து வலமாக நமஸ்காரம்.  

      பிரசாதம் சாப்பிட்டு விட்டு கையை தலையில் த்விக் கொள்ள வேண்டுமா...   இது நான் கேள்விப்பட்டதே இல்லை!

      நீக்கு
    4. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      / பிரசாதம் சாப்பிட்டு விட்டு கையை தலையில் தடவிக் கொள்ள வேண்டுமா... இது நான் கேள்விப்பட்டதே இல்லை!/

      ஆம் சகோதரர் ஸ்ரீராம் சொல்வது போல் நானும் கேள்விப்பட்டதில்லை. தீர்த்தம் தருவதைதான் கண்களில் ஒற்றிக் கொண்டு உள்ளுக்குள் சாப்பிட்டு தலையிலும் தெளித்துக் கொள்ள வேண்டும். அப்படியே செய்தும் வருகிறோம். அதுவும் கொடுக்கும் இடத்திலேயே வாயில் வைத்து எச்சில் செய்ய கூடாதென்று தீர்த்தம் வாங்கிக் கொண்டு சிறிது நகர்ந்து விடுவதுண்டு. இரண்டாவதாக இப்போது (இப்போது என்றால் இப்போதில்லை. முன்பு இரு வருடங்களுக்கு முன்பு. ) இங்கிருக்கும் ஒரு வெங்கடேச பெருமாள் கோவிலில் தனி லைனாக நிற்க வைத்து தொண்ணையில் புளியோதரை, சுண்டல் எனத் தருகிறார்கள். சாப்பிட்டு அங்கேயே கையலம்பி அப்படியே கோவிலுக்கு வெளியே வந்து விட வேண்டும். கோவில் நமஸ்காரங்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

      நானும் அது (கடைசி படம்) ஜெய்கணேஷ் என்றுதான் கூற நினைத்தேன். சிவாஜி யின் உடையமைப்பு அவருக்கும் பொருந்தி வரும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    6. பெருமாள் தீர்த்தம் கையில் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, அங்கவஸ்திரத்திலோ இல்லை புடவையிலோ துடைத்துக்கொள்ளணும். கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். தலையில் தெளித்துக்கொள்ளக்கூடாது. தலையில் தெளித்துக்கொள்ளவேண்டுமென்றால் முதலில் அதைச் செய்துவிட்டு பிறகுதான் சாப்பிடவேணும். இதன் காரணம், தீர்த்தத்துக்கு அப்புறம் சடாரி சார்த்துவார்கள் (பெருமாள் கோவிலில்). எச்சில் தண்ணீர் தலையில் இருப்பது அபச்சாரம்.

      நீக்கு
    7. ஓ...   தெரிந்து கொண்டேன்.  ஆனால் இங்கு முதலில் சடாரி வைத்து அனுப்பி, பிறகுதான் பெருமாள் தரிசனமே!  அதற்கப்புறம்தான் தீர்த்தம்.

      நீக்கு
  48. சிங்கப்பெருமாள் கோவில் தரிசனம் அருமை.
    பதிவில் அனைத்தும் அருமை. ஒவ்வொன்றையும் ரசித்து படித்தேன். ஆனால் பின்னூட்டம் போட நேரமில்லை. சார் தம்பி குடும்பத்துடன் வந்து இருக்கிறார்கள். பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா... மெதுவா வாங்க.. குடும்பம்தான் முதல்.

      நீக்கு
  49. சிங்க பெருமாள் கோவில் தரிசனம் சிறப்பு. காலை நேரத்தில் செல்லும்போது சிறிது காத்திருக்க வேண்டியிருக்கும் என்பது உண்மை. சில கோவில்களில் எனக்கும் இந்த அனுபவம் உண்டு.

    பழையது - அமிர்தம்! கூடவே மாவடு! :)

    பதிவின் மற்ற பகுதிகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  50. தலவரலாறு (அஜித் அல்ல) புத்தகம் - :)

    சிங்க பெருமாள் கோவில் தரிசனம் சிறப்பு. காலை நேரத்தில் செல்லும்போது சிறிது காத்திருக்க வேண்டியிருக்கும் என்பது உண்மை. சில கோவில்களில் எனக்கும் இந்த அனுபவம் உண்டு.

    பழையது - அமிர்தம்! கூடவே மாவடு! :)

    பதிவின் மற்ற பகுதிகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  51. ஆலய தரிசன அனுபவம் அருமை.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!