மத்திய அரசுப் பணியை உதறிவிட்டு, பிறருக்கு வேலை வாங்கித் தருவதையே வேலையாக்கிக் கொண்ட சமூக சேவகருக்கு பாராட்டுகள் குவிகின்றன. புதுச்சேரியைச் சேர்ந்தவர், இ.பா.வீரராகவன்; தன்னால் முடிந்தளவு பலருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதை சமூக சேவையாக செய்து வந்தார். 2019 வரை 3,345 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்தார். இதையடுத்து, தனியார் 'டிவி'யில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், நடிகர் விஜய் சேதுபதியால் பாராட்டப்பட்டார்.தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாகவே வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்து வியக்க வைத்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி:'டிவி' நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியை தற்செயலாகவே சந்தித்தேன். மத்திய அரசு ஆசிரியர் பணியில் இருந்து கொண்டே, பகுதி நேரமாக சமூக சேவையை செய்து வந்தேன். வள்ளலாரை பின்பற்றும் நான், இது போன்ற சேவையால் மன நிறைவை பெற்றேன். இதனால் என் வேலையை ராஜினாமா செய்து விட்டு, முழு நேரமும் இச்சேவையில் இறங்கினேன். இதற்காக முடிந்த உதவிகளை செய்வதாக விஜய் சேதுபதியும் கூறினார்.'டிவி' நிகழ்ச்சிக்கு பின், நாட்டின் பல பகுதியில் இருந்தும், வேலை கொடுப்போரும், வேலை தேடுவோரும் என்னை தொடர்பு கொண்டனர்.
புதுச்சேரி தவளக்குப்பத்தில் அலுவலகம் அமைத்து, 'வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம்' என்ற தொண்டு நிறுவனமாக செயல்பட, விஜய் சேதுபதி உதவினார்; எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் சம்பளம் கொடுத்தார். கடந்த 2020 முதல், ௨௦22 மார்ச் வரை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஒரு லட்சத்து 133 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், புதுச்சேரியில் 7,000 பேரும், தமிழகத்தில் 93 ஆயிரம் பேரும் பயன் அடைந்துள்ளனர். எங்களது வேலைவாய்ப்பு சேவை இயக்கத்தை 4.35 லட்சம் பேரும், 1,400க்கும் மேற்பட்ட 'வாட்ஸ் ஆப்' குழுக்களும் பின்பற்றி வருகின்றனர். இதைத் தவிர, 73 சுயதொழில் முனைவோர்களையும் உருவாக்கியுள்ளோம்.
கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாம்களையும் நடத்தியுள்ளோம். புதுச்சேரியில் துவங்கிய எங்கள் சேவை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், குறிப்பாக குக்கிராமங்கள் வரை சென்றிருப்பதில் மகிழ்ச்சி.வேலை தேடும் நபர்கள், https://www.vvvsi.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து, தகவல்களை தினமும் பெறலாம். வேலை தரும் நிறுவனமாக இருப்பின், info@vvvsi.com என்ற மின்னஞ்சலில் வேலைவாய்ப்பு தகவல்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் இந்தியாவையும்-இலங்கையையும் இணைக்கும் பாக் ஜலசந்தி கடல் கால்வாயை, ஆட்டிசம் நோய் பாதித்த வாய் பேச இயலாத பதிமூன்று வயது சிறுமி அநாயசமாக நீந்திக்கடந்து கொண்டிருந்தார்.
மும்பையில் உள்ள இந்திய கடற்படை பிரிவில் பணியாற்றுபவர் மதன்ராய், இவரது மனைவி ரெஜினா ராய்.இவர்களது மகள் ஜியாராய்.இவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர். மூளை வளர்ச்சி குறைபாடுகளுடன் வளரும் குழந்தைகளை ஆட்டிசம் பாதித்த குழந்தைகளாக கருதுவர். பத்து வயது குழந்தையின் செயல்பாடு இரண்டு வயது குழந்தையின் செயல்பாட்டுடன் ஒத்திருக்கும்.
சர்வதேச நீச்சல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் யாராக இருந்தாலும் இந்தியா-இலங்கைக்கு இடையே உள்ள கடல்பகுதியை கடந்து சாதனை புரிய விரும்புபவர்.ஜியாராயும் அந்த சாதனை புரியட்டும் என்று பெற்றோர் ஆசைப்பட்டனர்.இரு நாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு ஜியாராய் களத்தில் இறங்கினார் கடலில் நீந்தினார்.
இலங்கையின் தலைமன்னார் பகுதியில் தனது நீ்ச்சலை ஆரம்பித்தவர் இந்தியாவின் தனுஷ்கோடி அருகில் உள்ள அரிச்சல் முனையில் கரையேறினார்.மொத்தம் உள்ள 29 கிலோமீட்டர் துாரத்தை பதிமூன்று மணி நேரம் பத்து நிமிடத்தில் கடந்தார்.2004-ல் புலா சவுத்ரி என்ற பெண் இதே துாரத்தை 13 மணி நேரம் 52 நிமிடத்தில் கடந்ததுதான் இதுவரையிலான சாதனையாக இருந்தது.இப்போது ஜியாராய் இந்த சாதனையை நாற்பது நிமிடம் முன்கூட்டியே வந்து முறியடித்து அதிவேக நீச்சல் வீராங்கனை என்ற பெயரை பெற்றுள்ளார்.சாதனை படைத்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிறுமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
ஜியாராய் கடந்த வந்து பாதையில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் கடல்வாழ் உயிரினங்களும் அதிகம் உண்டு கடல் கொந்தளிப்போடு கடல் வாழ் உயிரினங்களின் ஆபத்தையும் கடந்து இவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பதாக குறிப்பிட்டு பாராட்டினார்.
இந்திய நீச்சல் கூட்டமைப்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய ஆட்டிசம் சங்கம் உள்ளிட்ட பல முகமைகளின் ஒத்துழைப்புடன் இந்திய மாற்றுத் திறனாளி நீச்சல் கூட்டமைப்பு இந்த நிகழ்வை நடத்தியது.
இந்த அற்புதமான சாதனைக்காக செல்வி ஜியா ராய் மற்றும் அவரின் பெற்றோர்களுக்கு கப்பற்படையின் வைஸ் அட்மிரல் பகதூர் சிங் பாராட்டுத் தெரிவித்தார்.கௌரவமிக்க பிரதமரின் தேசிய பாலர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள செல்வி ஜியா ராய் உலகின் அனைத்து கடல்களிலும் நீந்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.
====================================================================================================================
சென்னை--தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், தன் 134வது மாரத்தானை, பீஹார் மாநில தலைநகர் பாட்னாவில் நேற்று நிறைவு செய்தார்.
கடந்த 2004ம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கியதால், கால் எலும்பு ஆறு துண்டுகளாக உடைந்த நிலையில், சுப்பிரமணியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கால்களை மடக்கி அமரவோ, வேகமாக நடக்கவோ முடியாது என்ற நிலையில், சிகிச்சை பெற்று திரும்பினார்; நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், யோகா, மூச்சுப்பயிற்சி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி, நடை பயிற்சியிலும் ஈடுபட்டார்.
2013ல் மெதுவாக ஓடும் அளவுக்கு முன்னேறினார். அடுத்தாண்டு, புதுச்சேரியில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று, 21 கி.மீ., ஓடினார். அது தந்த தன்னம்பிக்கை மற்றும் உற்சாகத்தால், அடுத்த ஆண்டுக்குள், 25 மாரத்தான் போட்டிகளில் ஓடி சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். அப்போது துவங்கிய ஓட்டம், கொரோனா, மழை, தேர்தல் காலத்திலும் கூட நின்றதில்லை.
ஈடுபாட்டுடன் ஓடும் அவர், 10க்கும் மேற்பட்ட நாடுகள், 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.நேற்று, பீஹார் மாநில தலைநகர், பாட்னாவில் நடந்த மாரத்தான் போட்டியில், 21.1 கி.மீ., துாரத்தை, இரண்டரை மணி நேரத்தில் ஓடி நிறைவு செய்தார். இது அவரின் 134வது மாரத்தான் போட்டி.அமைச்சர் சுப்பிரமணியன் விடாமுயற்சியுடன் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்பதால், இளைஞர்கள் பலரும் ஊக்கம் பெற்று ஓட்டத்தை துவக்கியுள்ளனர்.
===================================================================================================================
=================================================================================================================================================================================================================================
நான் படிச்ச புத்தகம்
பானுமதி வெங்கடேஸ்வரன்
நான் படிச்ச புத்தகம்.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பதிலளிநீக்குபொய்யா விளக்கே விளக்கு..
குறள் நெறி வாழ்க..
வாழ்க..
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க வாழ்கவே...
நீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇறைவன் அருளால்
நாம் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குஇந்த்ரா நூயி வெகு சுவாரஸ்யமான புத்தகம்.
பதிலளிநீக்குஅவரைப் பற்றி நிறைய சேதிகள்
படித்ததில் இந்தக் கிரீடமும் ஒன்று.
படித்திருக்கிறீர்களா?
நீக்குஆமாம் .ஸ்ரீராம். பேரனுக்கு அவன் அலுவலகத்தில் கொடுத்தார்கள்.
நீக்குஇப்போதான் ஆரம்பித்திருக்கிறேன்.
அனைவருக்கும் காலை/மாலை/மதியம் வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். ஆங்காங்கே அறிவிக்கும் தளர்வுகளால் பாதிப்பு இல்லாமல் அனைவரும் ஆரோக்கியமாய் இருக்கும்படிப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குஇன்னிக்கு எடுத்த எடுப்பிலேயே ரோபோ வந்தாச்சு! எல்லாச் செய்திகளுமே அருமையானவை. திரு வீரராகவன், அமைச்சர் ஆகியோர் பற்றிப் படிச்சேன். ஜியா ராய் பற்றிய விஷயம் புதிது. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்திரா நூயியின் இந்தப் புத்தகம் குறித்த விமரிசனங்களும் செய்தித்தாள்கள் மூலம் படிச்சேன். பானுமதியும் நன்றாக எழுதி இருக்கிறார். அமேசானில் புத்தகம் கிடைச்சதும் படிக்கலைனால் கையில் எடுத்துக் கொண்டு வந்திருக்கலாமே? புத்தகத்துக்கு ரொம்பவே டிமான்ட் போலும்.
பதிலளிநீக்குஎனக்கு இரண்டு நாட்களுக்கு முன் ரோபோ டிக் வந்தது. இப்போது இல்லை.
நீக்கு//புத்தகத்துக்கு ரொம்பவே டிமான்ட் போலும்.// ஆமாம். நான் படித்து முடிப்பதற்காக என் மகனும், மருமகளும் காத்துக் கொண்டிருந்தார்கள்.
நீக்குபானு விமரிசனம் செய்திருக்கும் அழகு
பதிலளிநீக்குஅருமை.
எனக்கு ஆன்லைன் படிப்பது கடினம்.
இப்போது கையில் வைத்துக் கொண்டு படிப்பது சுவாரஸ்யமாக
இருக்கிறது. வாழ்த்துகள் பானுமா.
நன்றி வல்லி அக்கா.
நீக்குஇன்றைய செய்திகள் நன்று.
பதிலளிநீக்குநிறையபேர் இன்ஸ்ப்பிரேஷனாக அமைகிறார்கள்.
நீச்சலில் சாதனைகள் படைத்த குற்றாலீஸ்வரன், இதனால் வாழ்க்கைக்குப் பிரயோசனமும் கிடையாது, இந்தியாவில் எந்த உதவியும் கிடைக்காது என்று தொந்துகொண்டு இப்போ சாதா வேலையில் வெளிநாட்டில் இருப்பதாகப் படித்தது நினைவுக்கு வருகிறது.
உண்மை. நிறைய பேர் இன்ஸபிரேஷனாக அமைகிறார்கள், நெகிழ வைக்கிறார்கள்.
நீக்குஅமைச்சர் திரு சுப்ரமணியனின் சாதனை மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
பதிலளிநீக்குஎன்ன ஒரு விடா முயற்சி!!!
சிறப்புடன் மேன்மேலும் சாதனை புரிய நம் வாழ்த்துகள்.
மிக நன்றி மா ஸ்ரீராம்.
அசந்து போகவைக்கும் விடாமுயற்சி.
நீக்குதிரு வீர ராகவனின் அரிய சேவை மகத்தானது.
பதிலளிநீக்குவேகை வாங்கிக் ஒடுத்து இத்தனை குடும்பங்களை
வாழ வைக்கிறார்.
அத்தனை மனம்களும் அவரை இடைவிடாமல் வாழ்த்திக் கொண்டே இருக்கும்.
வந்தனங்கள்.
உண்மை.
நீக்குசிறுமி ஜியா ராய் அவர்களுக்கும் அவர் பெற்றோர்களுக்கும்
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துகள். சுலபமான
சாதனையா இது. எத்தனை ஊக்கம் வேண்டும்!!!!
அதுவும் கவனம் சிதறாமல் நீரில் போரிட்டு
நீந்திக் கடந்த அவர் மன உரத்தைப்
பாராட்டுவதில் மகிழ்ச்சி.
இந்த வார நற் செய்திகளுக்கு மிக நன்றிமா.
மகிழ்ச்சி. நன்றி அம்மா.
நீக்குவேலைவாய்ப்புகள் குறைந்துள்ள காலத்தில் வேலை வாங்கித்தருவது ஒரு பெரிய காரியம். திரு வீரராகவன் பணி போற்றற்குரியது.
பதிலளிநீக்குபிரபலங்களின் சுய சரிதைகள் சூடாக விற்பனையாவதற்கு காரணம் அவர்கள் பிரபலமாக இருப்பதால் தான். ஆனால் அச்சரிதங்களைப் படிப்பவர்கள் எல்லோரும் பிரபலமடைவதில்லை. சும்மா படிப்பதோடு சரி
பானு அக்கா (வேறே எப்படி சொல்வது என்று தெரியவில்லை) இந்திரா நூயி சரிதத்தை படித்து சாராம்சத்தை சிறப்பாக எழுதியிருக்கிறார்.
சனி பிடித்திருந்த சனிக்கிழமையில் சனி விலகி நல்ல செய்திகள் வருவதும், அறிவு விருத்தியாக படித்த புத்தகம் பற்றிய விவரங்கள் வருவதும் ஒரு சுவையான மாற்றம் என்றே கொள்ளலாம்.
Jayakumar
முன்னரும் பாசிடிவ் செய்திகள் என்னும் பெயரில் நல்ல செய்திகளே வந்தன. திருமதி ரமா ஶ்ரீநிவாசன் அவருடைய எதேனும் ஓர் அனுபவம்/நிகழ்ச்சி பற்றி சனிக்கிழமைகளில் எழுதிக்கொண்டிருந்தார். அவர் முகநூல் மத்யமர் குழுமத்தோடு ஐக்கியம் ஆனதும் இந்த மாதிரி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
நீக்கு//பானு அக்கா (வேறே எப்படி சொல்வது என்று தெரியவில்லை// என் திருமணத்திற்கு முன்பு என்னுடைய பெரிய அக்காவின் குழந்தைகள் என்னை பானு சித்தி என்று கூப்பிட்டால் அந்த தெருவில் இருந்த பெரும்பாலானோர் என்னை பானு சித்தி என்று அழைப்பார்கள். எங்கள் வீட்டில் வேலை பார்த்த பெண் "எல்லோருக்கும் நீ சிந்தியா?" என்று சிரிப்பாள். அதைப்போல இங்கே உங்களுக்கும் அக்காவாக இருந்து விட்டு போகிறேன், அதனால் என்ன?
நீக்குபாராட்டுக்கு நன்றி.
நீக்குவரும் ஆகஸ்ட் மாதம் வந்தால் பாஸிட்டிவ் செய்திகள் தொடங்கி பத்து வருடங்கள் ஆகிறது ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்... நடுவில் நிறுத்தலாமா என்று கூட ஒரு எண்ணம் வந்தது - அதற்கு படிப்பவர்களின் வரத்து கம்மியாய் இருந்ததால். அப்புறம் பெரும்பான்மை விரப்பப்படியும், ஒரு நல்ல விஷயத்தை கைவிட வேண்டாம் என்றும் தொடர்கிறோம்.
நீக்குஎன் தம்பியின் நண்பர்கள் அனைவருக்குமே நாங்க இரண்டு பேரும் அக்கா/அத்திம்பேர் தான். அதே போல் என் அண்ணா பையரின் மாமனார் குடும்பத்தில் அனைவருக்குமே நான் அத்தை. வயதில் மூத்தவர்களுக்குக்கூட! :)))))
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குவணக்கம் மனோ அக்கா.. வாங்க...
நீக்குஅற்புதமான சாதனை.. செல்வி ஜியா ராய் மற்றும் அவரின் பெற்றோர்கள் அனைவருக்கும் முன்மாதிரி ஆனவர்கள்..
பதிலளிநீக்குஆம். உண்மை.
நீக்குதிரு வீரராகவன் செய்து வரும் சேவை மகத்தானது. பாராட்ட வார்த்தைகளில்லை! ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி இப்படிப்பட்ட சாதனை செய்வதற்கு அவரையும் விட அவரின் பெற்றோர்கள் தான் முக்கிய காரணம். அந்த உன்னதமான பெற்றோருக்கு இனிய வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅமைச்சர் மா.சுப்ரமணியனின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தான் கால் எலும்பு ஆறு துண்டுகளாகியும் அதே கால்களால் மராத்தன் வரை சாதனை படைக்கச்செய்துள்ளது!
இந்திரா நூயி பற்றிய பானுமதி வெங்கடேஸ்வரனின் நூல் விமர்சனம் மிக அருமை!
நன்றி மனோ அக்கா.
நீக்கு// விபத்தில் சிக்கியதால், கால் எலும்பு ஆறு துண்டுகளாக உடைந்த நிலையில்.. //
பதிலளிநீக்குதிரு. சுப்பிரமணியன் அவர்களது மனோதிடம் கருத்தில் கொள்ளத்தக்கது..
மிகவும் உண்மை.
நீக்குஇந்திரா நூயி அவர்களது புத்தகத்தைப் பற்றிய தொகுப்பு அருமை..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇந்த வீரர்களை பாராட்டி விருது வழங்குவதோடு தொடர்ந்து அரசே தத்து எடுத்து ஊக்குவிப்பதில்லை.
பதிலளிநீக்குகுற்றாலீஸ்வரன் இன்று என்ன ஆனான் ?
வெளிநாட்டில் மனைவியுடன் வசிக்கிறார் எனச் சிலரும் ஈசிஆர் சாலையில் ஏதோ ஒரு பார்ட்டிக்குப் போய்விட்டுத் திரும்புகையில் ஓர் விபத்தில் மனைவியுடன் இறந்துவிட்டதாக ஓர் வதந்தியும் இருக்கிறது.
நீக்குநம் நாட்டில் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டு வீரர்கள் கண்டுகொள்ளுப் படுவதில்லை
நீக்குகுற்றாலீஸ்வரன் சௌக்கியமாக இருப்பதாக இயம்புகிறது இந்த விக்கிப் பக்கம்.
நீக்குhttps://en.wikipedia.org/wiki/Kutraleeswaran
நானும் பார்த்தேன்/படித்தேன் ஶ்ரீராம். ஆனாலும் மனதில் ஏதோ நெருடுகிறது. ஆதாரங்களுடன் கூடிய தகவலை விரைவில் தேடணும். :(
நீக்குகீதாக்கா குற்றாலீஸ்வரன் நன்றாக இருக்கிறார். அவரது யுட்யூப் பேட்டிகள் 2019 ல் வந்திருந்தன. அவர் நீச்சலை ஏன் விட்டார் என்பதைச் சொல்லியிருக்கும் பேட்டி.
நீக்குசமீபத்தியது 2021ல் ஸ்போர்ட்ஸ் விகடனில் வந்திருந்தது. நான் பார்த்ததை இங்குப் பகிர்கிறேன்
https://sports.vikatan.com/sports-news/exclusive-interview-with-swimmer-kutraleeswaran
அவர் அரசையோ அல்லது சங்கங்களையோ சுட்டவில்லை.
ஆனால் முன்பு அவர் சின்ன பையனாக இருந்த போது சாதனைகள் படைத்த போது ஒவ்வொரு போட்டிக்கும் செல்வதற்கு பணம் திரட்ட அவர் அப்பா கஷ்டப்பட்டதை முன்பு வாசித்த நினைவு இருக்கிறது.
கீதா
செயல்கள் ஆன செய்திகள் சிறப்பு...
பதிலளிநீக்குபுத்தக வாசிப்பு அருமை...
நன்றி.
நீக்குநன்றி DD.
நீக்குசகோ கமலா ஹரிஹரன் அவர்கள் ஏன் வருவதில்லை ?
பதிலளிநீக்குஉடல் நலம் சரியில்லையோ/இல்லைனா அவர் மகன் திரும்பிச் செல்வதிற்கான ஏற்பாடுகளில் பிசியோ!
நீக்குமகன் ஊர் திரும்புவதில் பிஸியாயிருக்கக் கூடும்.
நீக்குஇ.பா.வீரராகவன் அவர்கள் பலரது வாழ்க்கை ஓட்டத்திற்கு உதவுகிறார் என்றால் நிஜமாகவே ஓடும் அமைச்சரும்(சுப்பிரமணியம்), ஒரு சிறப்பு குழந்தையை பாக் ஜலசந்தியை நீச்சலடித்து கடக்க வைத்திருப்பது இமாலய சாதனை. அந்த குழந்தையின் பெற்றோர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.
பதிலளிநீக்குஉண்மை.
நீக்குசனிக்கிழமை ஒருநாளாவது ஜீவி ஸார் வருவார் என்று பார்த்தால் அவரையே காணோமே இன்று...
பதிலளிநீக்குஆமா இல்ல! வாட்சப் குழுமத்தில் கூட அவரை ஒரு வாரமாகக் காணவில்லை. உடல் நலமாய் இருக்கார் இல்லையா? பிரார்த்தனைகள்.
நீக்குநான் நலமே, கீதா சகோ.
நீக்குசில நாட்களுக்குப் பின் வருகிறேன்.
தங்கள் விசாரிப்புக்கு நன்றி.
பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் நன்று. இந்திரா நூயி குறித்த புத்தகம் வாசித்த அனுபவத்தை மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கும் பானும்மா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்
நீக்குஅனைத்தும் நல்ல செய்திகள்.
பதிலளிநீக்குதன்னம்பிக்கை தருபவை.
பானு அவர்களின் புத்தக விமர்சனம் அருமை.
இந்திரா நூயி தாயின் கடமையை அருமையாக சொல்லி இருக்கிறார், அவருக்கும் தாய் உறுதுணையாக இருந்து இருக்கிறார்.
இரு பாசிட்டிவ் செய்திகளும் நன்று குறிப்பாக அசானிக்கிடையில் அசாத்தியமாக நீந்திய ஜியாராய் சிறுமி! அவருக்குப் பிரத்யேகமான வாழ்த்துகள். பாராட்டுகள்
பதிலளிநீக்குதுளசிதரன்
இந்திரா நூயி பற்றிய விவரங்களை மிக அருமையாக முக்கியமானவற்றைச் சொன்ன விதம் சிறப்பு. சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதுளசிதரன்
ஜியாராய்! வாசிக்கும் போது மனம் நெகிழ்ந்துவிட்டது. எப்படியான குறைபாடு! கண்ணில் நீர் வந்துவிட்டது. இந்தக் குழந்தை பல்லாண்டு வாழ்ந்து பல சாதனைகள் படைக்க வேண்டும். பெற்றோருக்கு என் வணக்கங்கள். இப்படியான ஒரு குழந்தையை வளர்ப்பது அத்தனை எளிதல்ல. எனவே பெற்றோரை ரொம்ப ரொம்ப பாராட்டுகிறேன். வணங்குகிறேன்.
பதிலளிநீக்குகீதா
பானுக்கா, அழகா நச்சுன்னு இந்திராநூயி பற்றி சொல்லியது நன்றாக இருக்கிறது. இவரைப் பற்றிய சில வாசித்ததுண்டு. நெட்டில். புத்தகமாக இல்லை. அவரே எழுதியது. அவர் குழந்தைகளைப் பற்றி, கடிதங்கள் பற்றி, அவங்க அம்மா சொன்னது அவர் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
பதிலளிநீக்குநல்ல உதாரணப் பெண்மணி. நல்ல புத்தகம் அறிமுகம், பானுக்கா
கீதா