ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

ஞாயிறு : - என்ன நிறங்களோ..  வண்ண மலர்களோ... - கீதா ரெங்கன்

 

ஒரு கவிதையாய் பூ மலரும் 
சிறு துளி
களாய் தேன் உருளும்


பூத்துக் குலுங்கும் பூக்களே உங்கள் வண்ணத்தைத் தீட்டியது யாரோ!

எங்கள் ப்ளாகின் ஞாயிறு புகைப்படப் பதிவில் கௌ அண்ணா, லால்பாக் படங்களைப் பகிர்ந்திருந்தார். எனவே நான், பூங்காவில் எடுத்த படங்களில் இரண்டைத் தவிர, கண்காட்சியில் எடுத்த மலர்களின் படங்களில் சிலவற்றை இங்கும் மற்றவற்றை எங்கள் தளம் தில்லைஅகத்திலும் பகிர்கிறேன்.

மலர் கண்காட்சியில் மனதையும் கண்களையும் கவரும் மலர்கள் நிறைய இருந்தன. அவற்றில் சிலவற்றையே படம் எடுக்க முடிந்தது. மக்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்ததால், சரியான கோணம் பார்த்து மக்கள் கேமராவில் வராமல் எடுப்பது சிரமமாக இருந்தது. 

நான் அடிக்கடி நினைத்துக் கொள்வது, சொல்வது, நம் ஸ்ரீராமின் அர்த்தமுள்ள வரிகளில்

முடிவதற்குள்

புரிந்து கொண்டு

அனுபவித்துவிட வேண்டும்

வாழ்க்கையை

-----எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்-----

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரியும். இந்த பூமியும் இயற்கையும் நமக்கு அள்ளி வழங்கியிருக்கும், நம்மைச் சுற்றி உள்ள அழகான விஷயங்களைக் கொஞ்சமேனும் நாம் ரசித்து வாழ்ந்து அனுபவிப்போமே....அந்த அழகில் ஒரு சில துளிகள் இங்கே.....

என்னை மிகவும் மகிழ்வித்த விஷயம்  இது. புறாக்களுக்கான வீடு!!! (DOVECOTE - 1893) கூட்டில் இல்லாமல் சுதந்திரமாகப் பறந்து சென்று வந்து உண்டு உறங்கி குடும்பம் வளர்த்து!! வாழ ஒரு வீடு! அழகு! இல்லையா!!? ஓ வியாழனிலும் புறா! இன்றும் புறா! ஒரு தற்செயல் நிகழ்வு. தன் வீட்டு பால்கனியில் இருந்த புறா குஞ்சைக் காப்பாற்றத் தவித்ததை வியாழன் பதிவில் ஸ்ரீராம் சொல்லியிருந்தார் என்றால் அதற்கு முந்தைய தினம்தான் நான் இந்தப் படங்களை இங்கு போட்டு புறா வீடு என்று எழுதியிருந்தேன். 

பூங்காவினுள் இருக்கும் ஏரி

நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுங்கள். இயற்கையின் அற்புதமான
அழகான வண்ணப் பூக்கள்

பூஞ்சிரிப்பில்

பூக்களாய் தூவுகிறாய்

என் மனத்தோட்டம்

முழுவதும்

மகிழ்ச்சிப் பூக்கள்.

---எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்----

டெய்ஸி பூக்களில் நிறைய வகைகள் உண்டு நிறங்கள் உண்டு
ஜெர்பரா - டெய்ஸி குடும்பம்

 IMPATIENS - பூ

ஆர்கிட் பூ வகைகளில் ஒன்றுDENDROBIUM

ஆர்கிட் பூ வகை - DENDROBIUM வெள்ளை நிறம்

ஆர்கிட் வகை - PHALAENOPSIS


ஆர்கிட் - PHALAENOPSIS வகை

ரோஜாதோட்டத்துல சந்திப்போம்னு சொல்லியவனைக் காணலையே! காத்து இருக்கு பாருங்க புறா ஒன்று. 'நமக்குக் குடும்பம் நடத்த பிரச்சனையே இல்லை இங்க ஒரு வீடெல்லாம் கட்டிக் கொடுத்துருக்காங்க. இடமும் பாத்துவைச்சுட்டேன்னு சொல்லியும் ஆளைக் காணலை'யேன்னு அந்தப் புறா
ஒரே புறா பேச்சா இருக்கோ? வியாழன் பதிவில் சென்னைப் புறா....இன்று பங்களூர் புறா...

கள்ளி என் கொண்டையைப் பார்த்தீர்களா? உங்களால இப்படி ஒரு சிகை அலங்காரம் செய்ய முடியுமா! (அதெல்லாம் செஞ்சுட்டாங்க! Crazy People! - ஆனா இந்தத் தேங்காய்த் துருவி போல செஞ்சுக்கலை இன்னும்!!!!!!!!) 

ப்ரோமெலியா - BROMELIA - மயில் தோகையின் ஒரு பகுதி வடிவில் இருக்கு இல்லையா

ZINNIA - ஜின்னியா/சீனியா

தோகை இல்லை 

விரித்து நடனமாட

பூக்களாய் காட்டுகிறேன் 

என் மகிழ்ச்சியை

----எங்கள் பிளாக் ஸ்ரீராம்----

ஸ்ரீராம் 'எழுத்துகளாய்க்' காட்டுகிறேன் என்று எழுதியிருந்தார் அதை மட்டும் பூக்களாய் என்று மாற்றிப் போட்டிருக்கிறேன், 

நட்சத்திரங்கள் போன்று பல வகையான சாமந்திப் பூக்களின் கூட்டம்


 யதார்த்தங்கள்

மறந்த வாழ்வில்

சதா இருக்கும்

கவலைகளை மறந்து

இன்றேனும் ஒருநாள்

இயல்பாய் இரு

----எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்----

இன்றேனும் ஒரு நாள் என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக்குவோம்! அப்படி நினைத்து இன்று பூக்களை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்! 

பெயர்கள் ஓரளவு தெரிந்ததை வைத்து எழுதும் முன் கூகுள் படங்கள் வழியும் சரி பார்த்துக் கொண்டேன். இருந்தாலும் தவறாக இருந்தால் தெரிந்தவர்கள் சொல்லலாம். 

கௌ அண்ணா மற்றும் ஸ்ரீராமுக்கு மிக்க நன்றி. பார்த்து ரசித்தவர்களுக்கும், கருத்திடுபவர்களுக்கும் மிக்க நன்றி.

57 கருத்துகள்:

  1. "அண்ணா, அண்ணா" என்று வாய் நிறைய அழைத்து பதிவெழுதியிருக்கும் இரண்டெழுத்து தங்கையின் பெயரைத் தலைப்பில் போட மறந்து விட்டார்களே!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூக்கடைக்கு எதற்கு விளம்பரம் என்று நினைத்திருப்பார்களோ?

      நீக்கு
    2. 'கண்டு பிடிக்கிறார்களா பார்ப்போம்' என்று
      போடாமல் விட்டு விட்டதாகச் சொல்லாமல் இருந்தால் சரி.

      நீக்கு
    3. பதிவின் உள்ளே சென்றால் ஆரம்பத்திலேயே இருக்கிறதே என்றும் நினைத்திருக்கலாம்!

      நீக்கு
    4. ஜீவி அண்ணா, தலைப்பில் பெயர் இருக்கிறதே....ஓ நீங்க வரும் போது இல்லையா? அதனாலதான் கேள்வி? முதலில் புரியவில்லை...கீழுள்ள கருத்துகளைப் பார்த்ததும் புரிந்தது,.

      ஆனால் நான் ஸ்ரீராமின் கருத்தை வழி மொழிகிறேன். முதல் பாராவிலேயே இருக்கு. பெயர் போடவில்லை என்றாலும் ஒன்றுமில்லையே எல்லாம் நம்ம வூடுதானே!!!

      கீதா

      நீக்கு
    5. பூக்கடைக்கு எதற்கு விளம்பரம் என்று நினைத்திருப்பார்களோ?//

      ஹாஹாஹாஹா அதுவும் சரிதான்.....பூவுக்கு விலையைப் பார்த்த போது மனதில் என்னென்னவோ சிந்தனைகள். எங்கள் தளத்தில் பூக்களை வெளியிடும் போது பதிவில் எழுத நினைத்திருப்பதால் இங்க கருத்தை பெரிதாக்கவில்லை.

      கீதா

      நீக்கு
    6. என் பின்னூட்டங்கள்
      வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனால் மற்றவர்கள் சிந்தனைக்கே வராததை கூர்மையாகக் கண்டுபிடித்துக் குறிப்பிடுகிறேன்.

      நீக்கு
  2. இதை மாதிரி பூக்களைப் பார்த்தேன். நிறைய பயணங்கள் செய்திருப்பதால் not impressed.
    பகிர்ந்த படங்கள் அழகு. கீதா ரங்கன்(க்கா) இவ்வளவு விரைவாகப் பகிர்வதே ஒரு அதிசயம்தான் (அவர் வேலைகளுக்கு மத்தியில்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  கீதா ரெங்கன் படங்கள் இவ்வளவு விரைவாக வந்ததது அதிசயம்தான்!

      நீக்கு
    2. மிக்க நன்றி நெல்லை
      சிரித்துவிட்டேன். ஆமாம் ரொம்ப சீக்கிரமாகவே அனுப்பிவிட்டேன்....இன்னும் விசாகப்பட்டினம் என் விசாவுக்காக காத்திருக்கிறது!! ஹிஹிஹிஹி

      ஸ்ரீராம் - சிரித்துவிட்டேன்...உண்மைதான் நிறைய பதிவுகள் பாதியில் தொங்கிக் கொண்டிருக்கின்றன சில தலைப்பு மட்டும் போட்டு வைச்சு. பல பதிவுகள் கதைகள் குறிப்புக் கதையாக இருக்கின்றன!!! ஸ்பாஆஆஆ எப்ப எழுதி முடிக்கிறதோ...

      மிக்க நன்றி ஜீவி அண்ணா, நெல்லை, ஸ்ரீராம்

      கீதா


      நீக்கு
    3. ஸ்ரீராம், காலையிலேயே இங்க கொடுத்த ஒரு கருத்து வந்துட்டுக் காணாம போச்சு....ஸ்பாம்ல இருக்கும்னு நினைக்கிறேன்.

      இன்னொரு கருத்து கொடுத்து போகவே இல்லை.....அது வேறு ஒன்றுமில்லை...

      தலைப்பு அழகு....மிக்க நன்றி அதற்கு.....அது போல

      //பூத்துக் குலுங்கும் பூக்களே உங்கள் வண்ணத்தைத் தீட்டியது யாரோ!//

      இதுக்கு பொருத்தமா வர்ணம் அடிச்சதுக்கு!!!!! சூப்பர். இது நான் எழுதிவிட்டு, பூ பற்றி பாடல் என்னென்ன இருக்குன்னு பார்த்தா.....இது கொஞ்சம் வேறு விதமாக ஒரு பாட்டில் வருது....இப்ப டக்கென்று நினைவுக்கு வரவில்லை...யார் எழுதியது என்று

      கவிதையாய் பூ மலரும் - இதுவும் ஒரு பாட்டின் வரி. கூடவே ப்ராக்கெட்ல கொடுத்திருந்தேன் அது ஹெச் டி எம் எல் ல சேவ் ஆகலை போல....நானும் அப்புறம் அதை கம்போஸ் கொடுத்து செக் பண்ணலை....யாருன்றது மறந்து போச்சு...இன்று காலை மீண்டும் பார்த்தேன்...இங்க கொடுக்க நினைத்து. அந்தக் கருத்தும் போகவில்லை.

      பூவேலி படத்துல வர பாட்டு, வைரமுத்துவின் வரிகள் இவை இசை பரத்வாஜ். பாடியவர்கள் உன்னிக்கிருஷ்ணன், சுஜாதா

      அருமையான பாடல்...ஹம்சநாதம்/சாரங்கதரங்கிணி

      கீதா

      நீக்கு
  3. கவிதைகளை நினைவில் வைத்திருப்பது சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  ரசிப்பார் என்று தெரியும்.  சேமித்தே வைத்திருக்கிறார் என்று கொஞ்ச நாட்கள் முன்பு தெரிந்து கொண்டேன்.  அவர் எழுதிய ஒரு கதையிலும் அள்ளித் தெளித்திருந்தார்.  நான் என் கவிதைகளை தொலைத்தபோது அவர் கலெக்ஷனை தந்து உதவினார்!

      நீக்கு
    2. நெல்லை, ஸ்ரீராம் சொல்லிவிட்டார்!!

      மிக்க நன்றி நெல்லை, ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    3. நெல்லை ரெண்டு ஃபைல் இருந்தது, ஒன்றுதான் இப்போது இருக்கிறது மற்றொன்று கேடான ஹார்ட் டிஸ்கில் அல்லது பென் ட்ரைவில் என்று நினைக்கிறென். பென் ட்ரைவ் என்றால் மீட்க வாய்ப்பில்லை. ஹார்ட் டிஸ்க் என்றால் மீட்க முடியும் ஆனால் எப்போது என்றுதான் தெரியலை.

      மீண்டும் பொறுக்கி எடுக்க வேண்டும்....பழைய பதிவுகளுக்குப் போய்..

      கீதா

      நீக்கு
  4. பூக்களைத் தொடுத்த மாலையில் மரிக்கொழுந்தாய் ஸ்ரீராமின் கவிதைகளும் மணமூட்டுகின்றன. மாலை அழகாக இருக்கின்றது. பாராட்டுக்கள்.

    தோகை இல்லை
    விரித்து நடனமாட
    பூக்களாய் காட்டுகிறேன்
    என் மகிழ்ச்சியை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.  அப்படிதான் அவரும் எழுதி இருக்கிறார்.

      நீக்கு
    2. ஜெசி அண்ணா நல்ல உவமை. ஆமாம் எனக்கென்னவோ படங்களுக்கு ஸ்ரீராமின் கவிதைகள்தான் கூடுதல் அழகு சேர்த்தது போன்று தோன்றியது.

      மிக்க நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
  5. வண்ண மயமான ஞாயிறு..

    அன்பின் நல்வாழ்த்துகளுடன்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. பூக்களின் புகைப்படங்கள் அனைத்தும் அழகு.
    ஸ்ரீராம்ஜி அவர்களின் கவிதையும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி. ஆமாம் ஸ்ரீராமின் கவிதைகள் ரொம்பப் பொருத்தமாக அமைந்து அழகு சேர்த்திருக்கின்றன.

      கீதா

      நீக்கு
    2. ஆ.....இங்கு போட்ட கருத்து என்னாச்சு? ஸ்பாமில் இருக்கானு பார்க்கவும், ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே, வணக்கம் சகோதரி.

    இன்றைய பதிவு அழகான மலர்களும், அர்த்தமுள்ள கவிதைகளுமாக மிக அருமையான பதிவாக மணம் வீசுகிறது.

    பூக்களின் படங்கள் கண்களை அங்குமிங்கும் அலைய விடாமல் வசீகரிக்கிறதென்றால் அதற்கு பொருத்தமான கவிதைகளின் அர்த்தங்கள் அலையாயும் மனதை கட்டுக்குள் கொண்டு வருகிறது. அருமை. அருமை. கண் குளிர மனம் நிறைய தந்த பதிவுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க... கமலாக்கா....ஆமாம் அர்த்தமுள்ள கவிதைகள். நினைவுக்கு வந்தன உடனே ஃபைல எடுத்துப் பார்த்தேன் கிடைத்தன சேர்த்துவிட்டேன். ஸ்ரீராமின் கவிதைகள் பூக்களுக்குத் தோரண வாயிலே அமைத்துவிட்டன

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. இங்கு கமலாக்காவுக்குப் போட்டதும் காணவில்லையே, எண்டே ஈஸ்வரா!! இதென்ன சோதனை....

      கீதா

      நீக்கு
  9. ஆனாலும், சகோதரி கீதா அவர்கள் இப்படியெல்லாம் வண்ண மயமான பதிவுகளை இடக்கூடாது..

    பாருங்கள் இப்போது..

    இதற்கு இணையாக (!) என்று நினைத்துக் கொண்டு,

    எதையோ எழுதப் போக அது ஒரு கவிதையாகி விட்டது..

    சில நாட்களில் அதைக் காணலாம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      ஆகா.... கீதா ரெங்கன் சகோதரியின் மூன்றாவது விழியில் பூத்த பூக்களின் தோரணைகள் தங்களின் அழகு தமிழில் தோரணக் கவியாகி வரும் அந்த நாளை நானும் விரைவில் எதிர்பார்க்கிறேன். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. ஹாஹாஹா துரை அண்ணா!!!! ஆஹா உங்கள் கவிதையை ஆவலாக எதிர்பார்க்கிறேன் துரை அண்ணா, உங்கள் கவிதையை சொல்லவும் வேண்டுமா உங்கள் தமிழ் கூடுதல் அழகு சேர்த்த்விடுமே!

      அப்படியே ....அண்ணே நம்ம தளத்துலயும் படங்கள் பதிவு இருக்கு கண்டுக்கோங்க....கொஞ்ச நாளாவே காணலையே அங்க!!!!

      மிக்க நன்றி துரை அண்ணா.

      கீதா

      நீக்கு
    3. தங்களது ஆர்வத்தைக் கண்டு மகிழ்ச்சி.. இங்கே இப்போதைக்கு கால்ஷீட்
      கிடைக்க வாய்ப்பில்லை..

      தொடர்ந்து விஷயங்களைத் தர வேண்டியுள்ளதால் செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சையம்பதியில் அந்தக் கவிதை வெளியாகும்..

      மறுநாள் மதிப்புக்குரிய கமலாஹரிஹரன் அவர்களது பதிவினால் உருவான கதை ஒன்று..

      தங்களது தளத்திற்கெல்லாம் வரக்கூடாது என்று எதுவும் இல்லை..

      டாக்டரின் கண்டிப்பு அதிக நேரம் செல்லில் இருக்க வேண்டாம் என்று.. இருந்தாலும் சொல் பேச்சு கேட்கும் பிள்ளை அல்லவே!..

      விரல்களில் ஏற்படும் வலி இன்னும் குறையவில்லை..

      நீக்கு
    4. விபரங்களுக்கு நன்றி சகோதரரே. தங்கள் கை வலி இன்னமும் பூரணமாக குணமாகவில்லை என்ற செய்தி கவலையளிக்கிறது. மருத்துவங்களை முறையாக கவனித்து எடுத்து சரி செய்து கொள்ளவும். விரைவில் பூரண குணமடைய நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      என் பதிவினால் உண்டாகும் கதைப் பதிவா? அது என்னவென்று தெரிந்து கொள்ளவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

      மேலும் இன்று என் சிரமமான கைப்பேசியின் உதவியுடன் பதிவாக ஒன்று என் தளத்தில் தந்திருக்கிறேன். முடியும் போது சகோதர, சகோதரிகள் வந்து ஆதரித்து கருத்துக்களை தந்தால் மகிழ்வடைவேன். நன்றி அனைவருக்கும் .

      நீக்கு
    5. டாக்டரின் கண்டிப்பு அதிக நேரம் செல்லில் இருக்க வேண்டாம் என்று.. இருந்தாலும் சொல் பேச்சு கேட்கும் பிள்ளை அல்லவே!..

      விரல்களில் ஏற்படும் வலி இன்னும் குறையவில்லை..//

      ஓ! சரி சரி...உங்கள் உடல் நலனைக்கவனித்துக் கொள்ளுங்கள் அண்ணா. விரைவில் சரியாகிவிடும். நல்லதே நடக்கும்...

      //தொடர்ந்து விஷயங்களைத் தர வேண்டியுள்ளதால் செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சையம்பதியில் அந்தக் கவிதை வெளியாகும்..//

      //மறுநாள் மதிப்புக்குரிய கமலாஹரிஹரன் அவர்களது பதிவினால் உருவான கதை ஒன்று..//

      மகிழ்வான விஷயம் துரை அண்ணா. கலக்குங்க!!!

      உடல் நலனும் கவனிச்சுக்கோங்க

      கீதா

      நீக்கு
    6. சகோ, உங்கள் கவிதை ஒன்று இன்று என் பதிவில் இடம் பெற்று இருக்கிறது.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    இன்றைய பூக்கள் படம் மறுபடி மறுபடி பார்க்கத் தூண்டுகிறது. அதற்கு இணையான வசனங்களும், கவிகளும் அருமை.

    கள்ளிச் செடியின் பூக்கள் பேசுவது அழகு.

    அதுபோல் ரோஜா தோட்டத்தில் அவைகளுக்கான அந்தப்புறத்தில் காத்திருக்கும் அந்தப்புறாவின் மனதில் எழும் பேச்சும் ரசிக்க வைக்கிறது.

    அவைகளுக்கென அங்கு அமைத்திருக்கும் வாசஸ்தலமும் கண்களை கவர்கிறது.

    அழகான கலர்கலரான பூக்களும், மயிலிறகைப்போல வடிவமைப்புடன் பூத்திருக்கும் மலர்களும் பார்க்க அழகாக உள்ளது சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா ஒவ்வொன்றையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி. எனக்கு அன்று நேரமும் இல்லை. நம் வீட்டிலிருந்து போவதற்கே 1 1/2 மணி நேரம் மேல் ஆகிவிடுகிறது. அதன் பின் வருவதற்கு அதே நேரம். அங்கும் கூட்டம் வேறு. முடிந்த அளவில் எடுத்தேன்.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  11. மயில் தோகை பூ போன்ற வித்தியாசமான மலர் உள்பட அத்தனைப்பூக்களும் மிக அழகு! அதையும் விட அழகான கீதாவின் எழுத்து! ம்கவும் ரசித்தேன்!!!
    பாராட்டுக்கள் கீதா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மனோ அக்கா, படங்களையும் எழுத்தையும் ரசித்தமைக்கு. ஸ்ரீராமின் கவிதைகள் அழகு சேர்த்திருப்பதால் கூடியிருக்கிறது.

      கீதா

      நீக்கு
  12. ஸ்ரீராம்! ஆச்சரியம்! ஆ! இன்றே என் பதிவா!!!??

    ஓ ஒரு வேளை இந்த கீதா அனுப்புவதே அரிது, தாமதமாகும் ஸோ அதை இன்னும் தாமதிக்க வேண்டாம்னு போட்டுட்டீங்களோ!!!!!!!! ஹாஹாஹா

    மிக்க நன்றி ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  13. இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் லால்பாகில் மலர் கண்காட்சி! நான் செல்ல இயலாத குறையைத் தங்கள் படங்கள் தீர்த்து வைத்தன. அழகியப் பூக்கள்! அருமையான படங்களின் அணிவகுப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ராமலஷ்மி ரசித்தமைக்கு. உங்கள் படங்களை மிகவும் ரசிப்பவள் நான். இப்போதுகூட அங்கு ரசித்துவிட்டுத்தான் வருகிறேன்.

      நன்றி ராமலஷ்மி

      கீதா

      நீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் கீதா , ஸ்ரீராம் கவிதைகள் , என்பதற்கு பதில் கவிதைகல் என்று இடம் பெற்று விட்டது அதனால் அதை நீக்கி விட்டேன்.

      நீக்கு
    2. ஓ கோமதிக்கா அதனால் என்ன, அதை மட்டும் அடுத்த வரியில் கவிதைகல் - கவிதைகள் என்று கொடுத்திருக்கலாமே...

      கீதா

      நீக்கு
  15. அனைத்து படங்களும் அழகு . கீதா நன்றாக இருக்கிறது நீங்கள் எடுத்த படங்கள். புறா வீடு அழகு.
    ஸ்ரீராம் கவிதைகள் பொருத்தமான இடத்தில் சேர்த்தது கூடுதல் சிறப்பு.
    கள்ளிக் கொண்டை சிகை அலங்காரம் அழகு. நீங்கள் சொன்னது நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா. ஆமாம் ஸ்ரீராமின் கவிதைகள் கூடுதல் அழகு சேர்க்கின்றன. கள்ளியின் அப்பூவைப் பார்த்ததும் அதுதான் டக்கென்று தோன்றியது.

      புறாவீடு அழகாக இருக்கிறது இல்லையா...நான் ரொம்ப ரசித்தேன் மகிழ்ச்சியும் கூட..

      மிக்க நன்றி கோமதிக்கா படங்களை ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
  16. யதார்த்தங்கள்
    மறந்த வாழ்வில்

    சதா இருக்கும்

    கவலைகளை மறந்து

    இன்றேனும் ஒருநாள்

    இயல்பாய் இரு

    ----எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்----

    இன்றேனும் ஒரு நாள் என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக்குவோம்! அப்படி நினைத்து இன்று பூக்களை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!
    கவிதை நன்றாக இருக்கிறது.
    ஒவ்வொரு நாளும் இயற்கையை ரசிப்போம் கீதா.
    பூக்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா ஒவ்வொரு நாளும் இயற்கையை ரசிப்போம்.

      மிக்க நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
  17. பூக்களின் படங்களும் கவிதைகளும் பகிர்வை அழகு கூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  18. இருந்த இடத்தில் இருந்தே மலர்க்கண்காட்சியைப் பார்த்தாச்சு. விதம் விதமான ஆர்க்கிட் பூக்களும், மயிலைப் போன்று வடிவமைத்திருக்கும் பூவும் அழகு.கண்ணைக் கவர்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!