சனி, 10 செப்டம்பர், 2022

அம்மாவின் கல்யாணம் AND நான் படிச்ச கதை (JC)

 போபால் : கால்வாய் தண்ணீல் அடித்து செல்லப்பட்ட இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண்ணின் வீரச் செயலை, போலீசார் வெகுமதி அளித்து பாராட்டினர்.

மத்திய பிரதேசம், போபாலில் உள்ள காதையகலா என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ரபினா கன்ஜர், 30. இவர் தன் 10 மாத கைக்குழந்தையுடன் வந்து கால்வாய் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.



அப்போது, கால்வாயின் மறுபுறம் ராஜு, ஜிதேந்திரா என்ற இரு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் கால்வாயில் இறங்கி கடக்க முயன்றனர். அன்று பெய்த கன மழை காரணமாக, கால்வாயில் தண்ணீர் பலத்த வேகத்துடன் கரைபுரண்டு ஓடியது. 'கால்வாயில் இறங்கி கடக்க வேண்டாம்' என, அவர்களை ரபினா எச்சரித்தார்.அதை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் இருவரும் கால்வாயில் இறங்கினர்.

கட்டுக்கடங்காத வெள்ளத்தில் சிக்கி இருவரும் அடித்து செல்லப்பட்டனர்.அப்போது இளைஞர்கள் இருவரும் காப்பாற்றும்படிகதறினர்.கையில் இருந்த 10 மாத குழந்தையை தரையில் விட்டு விட்டு, ரபினா கால்வாயில் குதித்தார், ராஜு என்ற இளைஞரை காப்பாற்றி கரை சேர்த்த பின், ஜிதேந்திராவை காப்பாற்ற முயன்றார்.

அதற்குள் ஜிதேந்திரா தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரது உடல் மறுநாள் மீட்கப்பட்டது. தன் உயிரையும் பொருட்படுத்தாமல், தண்ணீரில் குதித்து இளைஞரின் உயிரை காப்பாற்றிய ரபினாவின் வீரச் செயலை பாராட்டி, போலீசார் அவருக்கு வெகுமதி அளித்தனர்.ஜிதேந்திராவின் உடலை மீட்க உதவிய ரபினாவின் சகோதரருக்கும் போலீசார் வெகுமதி அளித்தனர்.
===============================================================================================

துக்கத்துடனும்,துாக்கமாத்திரையின் துணையுடனும் தனிமையில் வாழும் தன் அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதை விட அவருக்கு இணையான ஒரு துணையை ஏன் தேடித்தரக்கூடாது என்று சிந்தித்து செயல்பட்டவர்தான் திருச்சூர் பிரசீதா  கேரளா மாநிலம் திருச்சூர் கோலாழியைச் சேர்ந்தவர் ரதிமேனன்  தற்போது 59 வயதாகும் இவருக்கு இரண்டு மகள்கள்  மூத்தவர் பிரசீதா,இளையவர் ப்ரீத்தி


இருவருக்குமே திருமணமாகிவிட்டது,பரிசீதா வெளியூரில் வசிக்கிறார்,ப்ரீத்தி வெளிநாட்டில் வசிக்கிறார்  பிள்ளைகளுக்கு திருமணம் செய்துமுடித்துவிட்ட நிம்மதியில் இருந்த ரதிக்கு அவரது நிம்மதிக்கு உலைவைக்கும் விதத்தில் கணவர் மேனன் திடீரென மரணமடைந்தார்.
கணவரை இழந்த அம்மாவின் உடனிருந்து சில நாட்கள்தான் மகள்களால் ஆறுதல் கூறமுடிந்தது, அதன்பிறகு குடும்பம்,குழந்தைகள், வேலை காரணமாக கூடுதலாக அம்மாவுடன் இருக்கமுடியாத சூழ்நிலை.


அம்மாவும் தனிமையில் இருக்க விரும்பியதால் அவரை தங்களுடன் இருக்க வற்புறுத்தவில்லை,ஆனால் அந்த தனிமை அம்மாவிற்கு இனிமையைத் தரவில்லை என்பதை அடுத்து வந்த சில மாதங்களிலேயே பிரசிதா உணர்ந்தார்.  அம்மாவை நேரில் பார்த்தபோது அடையாளமே தெரியாத அளவிற்கு உடல் மெலிந்து காணப்பட்டார்  எப்போதுமே தன்னை இளமையாகவும் இனிமையாகவும் வைத்துக் கொள்ளும் அம்மா இப்போது நேர்மாறாக இருந்தார்.  மருத்துவரிடம் அழைத்துப் போன போது எந்தப்பிரச்னையும் இல்லை, தனிமைதான் பிரச்னை என்ற மருத்துவர் நன்றாக துாங்குவதற்கு சக்தி வாய்ந்த துாக்க மாத்திரையை எழுதிக்கொடுத்தார்.
அதன்பிறகு அம்மா துாங்கினாரா தெரியாது ஆனால் மகள் பிரசீதாவிற்கு துாக்கம் வரவில்லை.
அம்மாவை என்ன செய்வது என்பதுதான் அவரது முன் நின்ற ஒரே கேள்வியாக இருந்தது
யாருக்கு பாராமாக இருக்க விரும்பாத அம்மா நிச்சயம் தன்னுடனோ தங்கையுடனோ இருக்க மாட்டார்
எல்லோரையும் போல அம்மாவை முதியோர் இல்லம் அனுப்பவும் இஷ்டமில்லை,ஏன் அம்மாவிற்கு கல்யாணம் செய்துவைக்கக்கூடாது என்று யோசித்தார், கணவர் தங்கை மற்றும் அம்மாவின் நலம் விரும்பிகளிடம் ஆலோசித்தார்சமூகம் என்ன சொல்லும் என்பதைப் பற்றி யோசிக்காமல் நமது மனதும், எதார்த்தமும் என்ன சொல்கிறதோ அதைச் செய்யலாம் என அனைவருமே கூறினர்  அம்மாவிடம் விஷயத்தை சொல்ல அதிர்ந்து போகவில்லை மவுனத்தை பதிலாக தந்தார் பின் ஆ அவரிடம் பேசிப்பேசி இன்னும் வாழவேண்டிய வாழ்க்கை எவ்வளவோ இருக்கிறது என்று சொல்லி சொல்லி கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கினார்  பின்னர் மணமகனை தேடும் படலத்தில் இறங்கினார்  அதற்கு சிரமமே இல்லாமல் அம்மாவைப் போல இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, மனைவியை நோய்க்கு பறிகொடுத்துவிட்டு, தனிமையில் இருக்கும் அறுபது வயது ஒய்வு பெற்ற அரசு அதிகாரியான திவாகரனின் அறிமுகம் தோழியின் மூலம் கிடைத்தது.


அவரைச் சந்தித்து விஷயத்தை சொல்லி அவருடைய சம்மதத்ததையும் பெற்றாயிற்று.பின் அம்மாவையும் அவரையும் சந்திக்கவைத்து பேசவைத்தார்.
இருவரும் பல முறை சந்தித்து பேசிய பிறகு இழந்த வாழ்க்கையை தொடரலாம் என்று முடிவு செய்தனர்


ஒரு நல்ல நாளில் திருச்சூர் திருவம்பாடி கோயிலில் திருமணம் நடந்தது திருமணத்தில் திவாகரனின் குடும்பத்திர் மற்றும் ரதியின் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர்.
மகள் பிரசீதா தாயின் கையைப்பிடித்து மணமகன் திவாகரினின் கையில் ஒப்படைத்த போது அம்மாவின் முகத்தில் நீண்ட காலத்திற்கு முன் பார்த்த சந்தோஷமும்,சிரிப்பும் எட்டிப்பார்த்தது,
இதைத்தானே பிரசீதா எதிர்பார்த்தார்.
குறிப்பிட்ட வயதுக்கு பின் ஆனோ பெண்ணோ இப்படித்தான் வாழவேண்டும் என்ற சமூகத்தின் மனநிலையில் ஒரு மாற்றம் வேண்டும் அவர்கள் எப்படி வாழவேண்டும் என்று நீங்கள் தீர்மானிப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் ஒரு வார்த்தை கேட்டுப்பாருங்கள், வரக்கூடிய பதில் சமூகத்தில் நிறயை மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார் பிரசீதா தீர்க்கமாக..
-எல்.முருகராஜ்

=================================================================================================================



=============================================================================================================================================



 

நான் படிச்ச கதை (JC)

***********

திருடப் போனவன் திருப்பதி போன கதை - கதை சொல்லி. 

 

முன்னுரை

சிறுகதை என்ற சொல்லே ஒரு சிலேடை தான். சிறிய கதை, சிறப்புக் கதை, சிறுவர் கதை, சிறந்த கதை என்று பல விதங்களில் அர்த்தங்கள் சொல்லலாம். இங்கு நாம் காணப்போவது ஒரு சிறிய சிரிப்பு சிறுவர் கதைதான். இக்கதை வலைத்தமிழிலிருந்து எடுக்கப்பட்டது.   இக்கதையை எழுதியவர் கதை சொல்லி என்று உள்ளதே தவிர வேறு விவரங்கள் கிடைக்கவில்லை.

 இந்தக் கதை என்பது ஒரு வரி தான். அது தான் தலைப்பு. மற்றபடி விரிவாகச் சொல்ல கதைக்குள் கதையாக அதைப் புகுத்தி சில பல விவரணங்களையும் சேர்த்து தருகிறார் ஆசிரியர். ஆனாலும் கதை ஓட்டம் பிறழவில்லை. 

திருடப் போனவன் திருப்பதி போன கதை - கதை சொல்லி 

 அந்தக்காலத்திலே இப்ப இருக்கிற மாதிரி ரேடியோ, டீ வி, இன்டர்நெட் , இதுக எல்லாம் எதுவுமில்லாத ஒரு வசந்த காலம் இருந்துச்சு (கொஞ்சம் பேர் ஒத்துக்க மாட்டீங்க). அப்ப எல்லாம் முகம் பார்த்துத் தான் பேசணும், பழகணும். இப்ப கணக்கா ஆளு தெரியாம அவன் ஆணா பெண்ணா என்று தெரியாம அவன் சொல்லறதை நம்பி பழக வேண்டி இருக்கு. (உடனே கேள்வி வரும் நட்புலே எதுக்கு ஆணு, பொண்ணு அப்படீன்னு). காரணம் இருக்கு. 

மனுசனாப் பிறந்தவன் அவன் கவலைகளை எங்காவது இறக்கி வச்சாத்தான் அவனுக்கு நிம்மதி. இப்ப ஆணா பெண்ணா ன்னு தெரியாம நம்ம கவலைகளைச் சொன்னா சிலருக்கு சங்கடமா இருக்கும். சிலருக்கு நம்மை வெறுக்கவும் தோனிடுமில்ல? அப்பெல்லாம் இந்தக் கவலை கிடையாது. அவங்க கூட்டமா சேர்ந்து அவங்கவங்க கவலைகளை பேசித் தீர்த்துக்குவாங்க. சொன்னா நம்ப மாட்டீங்க. தொலை தூரத்தில் இருக்கிற சொந்தக்  காரங்க கூட இங்க வீட்டுக்கு வந்து ஒரு பாட்டம் சொந்தக் கதை சோகக் கதை எல்லாம் பேசி அந்த வீட்டிலேயே சாப்பிட்டு தூங்கி அவங்க ஊருக்கு கிளம்பிப் போன காலம் எல்லாம் உண்டு. 

அப்படிப்பட்ட காலத்திலே ஒரு சாதாரணக் குடியானவன் ஒருத்தன் இருந்தான். அவனுக்கு உறவு முறை நிறைய இருந்துச்சு. இதனால அவங்க எப்பப் பார்த்தாலும் இவன் வீட்டுக்கு வந்து சொந்தக் கதை எல்லாம் பேசிட்டுப் போவாங்க. அப்படி பேசிகிட்டு இருக்கும் போது ஒரு உறவுக்காரர் இந்தக் கதையை ஆரம்பிச்சாரு. 

ஒருக்கா எங்க ஊரிலே ஒருத்தர் வீட்டுக்கு நடு ராத்திரியில ஒரு களவாணி வந்தான். எல்லோரும் அசந்து தூங்கிட்டு இருந்தாங்க. இந்தக் களவாணி மெல்ல வீட்டுக் கூரை ஏறி ஓட்டைப் பிரிச்சு எட்டிப் பார்த்தான். 

எல்லோரும் அசந்து தூங்கிட்டு இருக்காங்க. மேலே இருந்து கீழே பார்க்க ரொம்ப உசரமா இருந்துச்சி. என்ன பண்றதுன்னு யோசனை பண்ணான். மெல்ல கீழே இறங்கி ஏதாவது கயிறு கிடைக்கா அப்படீன்னு பார்த்தான். கொஞ்சம் தள்ளி இருந்த மாட்டுக் கொட்டகையைப் போய் பார்த்தான். அங்க நிறைய மாடு கட்டியிருந்துச்சு. இவன் ஒரு மாட்டுப் பக்கம் போயி மெல்ல மாட்டுக் கயிற்றை அவுத்தான். மாடு அசந்து தூங்கிகிட்டு இருந்தது. கம்புலே கட்டியிருந்த கயிற்றை அவுத்தவனுக்கு மாட்டுக் கழுத்திலே இருக்கிற கயிற்றை அவுக்க முடியலே. கையில் வேறு கத்தியுமில்லாம என்ன பண்றதுனு முழிச்சிகிட்டு இருந்தான்.


இங்கே அசந்து தூங்கிக்கிட்டிருந்த ஒருத்தருக்கு திடீர்னு முழிப்பு வந்துடுச்சி. அவர் கண்ணை முழிச்சிப் பார்த்தா மேலே வானம் தெரியுது. அந்தத் திருடன் பிரிச்சு வைச்சிருந்த ஓட்டை வழியாய் பார்த்ததுல அவருக்கு அப்படி தெரிச்சிருக்கு. நல்ல நிலவு வெளிச்சத்தைப் பார்த்தவரு சரி விடியலாயிடுச்சு ன்னு நின்னைச்சிட்டு மெல்ல எழுந்து வெளியே வந்தாரு. நேரத்துல மாட்டுக்குத்  தண்ணிய காட்டுவோம்ன்னு தூக்க கலக்கத்திலேயே மாட்டுக் கொட்டகைக்குப் போய் புண்ணாக்கைத் தண்ணியிலே ஊறவைக்க ஆரம்பிக்கிறாரு. இந்த சத்தம் வரவும் களவாணி சட்டேன்னு மாட்டுக்கு  பின்னாலே போய் உட்காந்துகிறான். 

இவரு தூக்க மயக்கத்திலே புண்ணாக்கை கரைச்சு எடுத்து வந்து வரிசையா மாட்டுக்க முன்னாலே வச்சு இந்தா எந்திரீங்கன்னு எல்லாத்தயும் எழுப்பவும் அப்பவும் தூக்க கலக்கத்தில் இருந்த மாடுக எல்லாம்இந்தாளுக்கு என்ன பைத்தியமா?”  நடு ராத்திரியில வந்து எழுப்புறாருன்னு எந்திருச்சு நின்னுச்சுங்க. இவை தண்ணிய அதுக முன்னாடி குடிக்கச் சொன்னா உடனே சரி குடிப்போம் என்று குடிக்க ஆரம்பிச்சது. எந்திருச்ச உடனே சாணி போட்டு பழகின மாடுகள் வழக்கம் போல சாணி போட ஆரம்பிச்சது. 

பின்னாடி பதுங்கி இருந்த களவாணி தலையில சூடா சாணியும் அதுக்கப்புறம் பன்னீர் அபிஷேகவும் வரிசையா நடந்துச்சு. களவாணிக்கு என்ன பண்றது ன்னு புரியலை. வாய் விட்டு கத்தவும் முடியல. இந்த சாணி, கோமியம் நாத்தம் தாங்கவும் முடியல. அவன் போட்டிருந்த துணிமணியெல்லாம் நனைஞ்சு போயிடுச்சு. 

இதுக்குள்ள தூக்கக்கலக்கத்தில் இருந்தவருக்கு; எப்பவும் மாட்டுக்கூட பேசிட்டிருப்பாரு. அது மாதிரி ஒவ்வொண்ணா தடவிக் கொடுத்து இந்தா குடி ன்னு அதுக தண்ணி குடிக்கிறதை வேடிக்கை பார்த்திட்டு நிக்கறார். அப்பவும் மாட்டுக்கு பின்னாடி ஒரு ஆள் நனைஞ்சிகிட்டு தலையில் சாணியோடே ஒளிஞ்சுக்கிட்டு இருக்கிறதை கவனிக்கலை. 

மாட்டுகிட்டே பேசிகிட்டு இருந்ததனால உள்ளே படுத்திருந்த அவர் சம்சாரத்திற்கு முழிப்பு வர திரும்பிப் பார்த்தா; அந்த ஆளைக் காணோம். இந்த நேரத்தில ஆளு எங்க போய் தொலைஞ்சான் அப்படீன்னு யோவ் எங்கேய்யா போயிருக்க? னு அங்கிருந்து ஒரு சத்தம் கொடுக்க மாட்டுக்கு தண்ணி காமிச்சிட்டு இருந்தவன் மாட்டுக்கு தண்ணி காமிச்சிட்டு இருக்கேன் புள்ளே என்று கூவினான். 

அட கூறு கேட்ட மனுஷா அர்த்த ராத்திரிக்கு என்ன தண்ணியே காமிச்சிட்டிருக்கீரு வந்து படுத்து தொலை என்று சொல்லவும் இந்த ஆளு என்ன புள்ளே இப்படி சொல்ற விடியல் ஆயிடுச்சே அப்படீன்னு.. பட்டியில் இருந்து வெளியே வந்து பார்த்த பிறகு தான் அடடா நேரம் இருக்குது நா ஒரு கூமுட்டை என்னு தனக்குள் சொல்லிகிட்டே உள்ளே போனான். போய் படுக்கையிலே படுத்த பிறகு தான் அவனுக்கு ஞாபகம் வந்தது. நாம முழிச்சப்ப ஆகாசம் தெரிஞ்சதே அப்படீன்னு. மேலே பார்த்தா ஓடு பிரிஞ்சு ஆஆன்னு தெரியுது. 

எந்திரி புள்ளே என்று அவன் போட்ட சத்தத்தில் அவன் மட்டும் அவள் மட்டும் இல்ல வீட்டிலே இருந்த எல்லோரும் எந்திரிச்சுட்டாங்க. 

அப்புறம் என்ன மாட்டு கொட்டா தவிர எல்லா இடமும் தேடி பார்த்துட்டாங்க. திருடன் அகப்படவே இல்லை. சத்தம் கேட்டு ஓடிப் போயிருப்பான்னு மிச்ச நேரத்துக்கு சித்த படுப்பம் னு படுத்திட்டாங்க. 

நடுராத்திரி ஒருத்தன் குளத்திலே முங்கி முங்கி குளிச்சிட்டிருக்கிறான். பார்த்த அந்த ஊர் காவலாளி யார்லே அது? இந்நேரத்தில குளத்தில குளிச்சிட்டிருக்கே ன்னு சத்தம் கொடுத்தான். 

வெள்ளென திருப்பதிக்கு நடந்து போலாம்னு கிளம்பிட்டு இருக்கேன். 

சரி குளிச்சிட்டு வாலே. நானும் ஒன் கூட ஊர் எல்லை வர வாறன். எனக்கும் கொஞ்சம் புண்ணியம் கிடைக்கட்டும் னு சொல்லி குளத்தங்கரையிலேயே சித்த உட்கார்ந்துட்டான் காவலாளி. 

பின்னுரை. 

பசுஞ்சாணகம், கோமூத்திரம் இரண்டும் அவற்றின் புனிதத்தன்மையைவெளிப்படுத்தும்?” இக்காலகட்டத்தில்,  திருடனையும் திருத்தி நல்வழிப்படுத்தி புனித நடைப் பயணத்தை மேற்கொள்ள வைத்தது என்பது வினோதம் இல்லைதான்!!!!  திருடனும் மனம் மாறி திருட்டுக்கு ஒரு முழுக்கு போட்டு விட்டான் என்றே தோன்றுகிறது. 

காவலாளிக்கும் குளிப்பவன் திருடன் என்பது தெரிந்து விட்டது. ஆனாலும் திருட  முயற்சித்தும் திருட முடியாமல் வந்து  குளத்தில் குளிப்பவனைப் பிடித்து தண்டிக்க முடியவில்லை. மீண்டும் அவன் மனம் மாறாமல் இருப்பதற்காக அவனை ஊர் எல்லை வரை கொண்டு விட முடிவு செய்கிறான். 

திருடனும் மனம் மாறி திருட்டுக்கு ஒரு முழுக்கு போட்டு விட்டான் என்றே தோன்றுகிறது. 

இக்கதை கி ரா அவர்களின் பாணியில்சொல்லப்பட்டதாகதோன்றுகிறது.

  

49 கருத்துகள்:

  1. காலை வணக்கம்.
    இந்த மாதிரி கதை கேட்டு எவ்வளவு நாளாச்சு,?
    படிச்ச கதை பிடிச்சுப் போச்சு.
    நிஜமாலும் தான். :))

    பதிலளிநீக்கு
  2. கதைசொல்லி என்று பெயர் போட்டுக் கொண்டதிலும் அர்த்தம் இருக்கு. முப்பாட்டன், பாட்டன் பாட்டி என்று வழிவழியா சொல்லிச் சொல்லி வளர்ந்த கதைகள் இவை. இதே மாதிரி என் சின்ன வயதில் நான் கேட்டு மகிழ்ந்து என் குழந்தைகளுக்கும் நான் சொன்ன 'கால் திருடன், அரைத் திருடன், முக்கால் திருடன், முழுத்திருடன்' கதை நினைவுக்கு வந்தது. அதெல்லாம் அந்தக் காலம். இப்ப யார் இருக்கா, இந்த மாதிரி கன்ன பரம்பரைக் கதைகளை வாழையடி வாழையாக வளர்த்தெடுக்க யார் இருக்கா? ஏக்கம் தான் மிஞ்சுகிறது.

    பதிலளிநீக்கு
  3. பின்னுரையில் குறிப்பிட்டிருக்கும் வரிகள் அட்சர லட்சம் பெறும். மனதிற்கு இசைந்த
    வரிகள் நெடு நேரம் நினைவில் ரீங்கரித்துக் கொண்டே இருந்தன. ஜெஸி சாரின் சொந்த வரிகளோ?.. நல்ல மனங்கள் வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னுரையும் பின்னுரையும் எப்போதும் என்னுரையே.

      முதல்(வராக) பின்னூட்டத்தை தந்து பாராட்டியமைக்கு நன்றி. கதை வலைத்தமிழ் தளத்தில் இருந்ததை பார்த்து டைப்பியது.

      Jayakumar

      நீக்கு
  4. விதவைத்தாய்க்கு திருமணம் சமூகத்திற்கு முரணாக தோன்றலாம்.

    ஆனால் இதுதான் சரி....
    வாழ்க்கை வாழ்வதற்கே!

    பதிலளிநீக்கு
  5. போபால் என்றாலே விஷவாயு கசிந்து தேசத்தையே உலுக்கிப் போட்ட நினைவு தான்.
    தீரப்பெண் ரபீனாவிற்கோ அவரது சகோதரருக்கோ காவல் துறையில் ஏதாவது பணி நியமனம் கொடுத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்னுயிரையும் பொருட்படுத்தாது இன்னொரு உயிரை மீட்ட கருணை உள்ளம்.

      நீக்கு
  6. இனிய சனிக்கிழமை..

    அன்பின் வணக்கங்களுடன்
    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  7. ரபீனாவின் துணிச்சல் பாராட்டத்தக்கது..

    சொல்லியும் கேக்கலை.. எக்கேடும் கெட்டுப் போ.. ந்னு விட்டு விடாமல் இருவரையும் காப்பாற்ற முயன்று ஒருவனைக் கரையேற்றியது மகா தைரியம்..

    சொல்பேச்சு கேட்காமல் நண்பனை இழந்து விட்டதால் காப்பாற்றப்பட்டவனுக்கு மனசாட்சி உறுத்திக் கொண்டே இருக்கும்..

    பதிலளிநீக்கு
  8. இடுக்கண் களைவது எல்லாம் இப்போதைய நட்பில் இல்லை.. இடையூறுகளை உண்டாக்குவதே லட்சியமாகி விட்டது..

    சென்ற மாதத்தில் ஒருநாள் செலுப்பி மோகத்தில் ஏதோ ஒரு அருவிக்குச் சென்ற இருவரில் - ஒருவர் பாறை இடுக்கில் வழுக்கி விழுந்து நீரோடு கீழே போய் விட்டார் என்பது செய்தி..

    எல்லாம் கர்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் கொடுமையான நிகழ்வாக நான் குறிப்பிட வந்தது இந்த நிகழ்வைத்தான்.

      நீக்கு
  9. காக்கிச் சட்டைக்கு உள்ளேயும் கருணை நெஞ்சங்கள்..

    பதிலளிநீக்கு
  10. மூன்று செய்திகளுமே அருமையான செய்திகள்.

    முதல் செய்தி - அந்தப்பெண் எச்சரித்தும் ரெண்டும் கேக்காமல் கடக்க நினைத்துமாட்டிக் கொண்டாலும் காப்பாற்ற நினைத்த, அதுவும் கைக்குழந்தையை தரையில் விட்டு தைரியமாகக்குதித்த அப்பெண்ணைப் பாராட்ட வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னதான் அந்தப் பெண்ணைப் பாராட்ட நினைத்தாலும், எங்க ஊர் தாமிரவருணில (ஜங்க்‌ஷன்) நடந்த நிகழ்வு நினைவுக்கு வருது. வெள்ளத்தில், பலாப்பழம் வருவதைப் பார்த்த பெண், தன் குழந்தையை கரையில் விட்டுவிட்டு பலாப்பழத்தை எடுக்க தண்ணீரில் குதித்து பலாப்பழத்தோடு கரைக்கு வரும்போது, குழந்தை தாமிரவருணி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதை உணர்ந்தாளாம்.

      நீக்கு
    2. OMG... நீங்கள் சொல்லி இருப்பதைப் படிக்கும்போது மதுரையில் எம் ஜி ஆர் வந்தபோது நான் கண்ணால் கண்ட நிகழ்வு நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
  11. ரபினா கன்ஜர் அவர்களின் வீரம் வாழ்க...

    பரிசீதா அவர்களின் செயல் பாராட்டத்தக்கது...

    பதிலளிநீக்கு
  12. காக்கிச்சட்டை வீரர்களுக்கு நாமும் நன்றி சொல்லிப் பாராட்டுவோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. பரிசீதா - சூப்பர். தனியாக வாழ்பவர்கள் விரும்பினால் இப்படிச் செய்வது நல்ல விஷயம். தோழமையுடன் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்வது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை மலையாளத்தில் அப்படிதான் சொல்ல வேண்டுமோ..

      நீக்கு
    2. பெயர் ப்ரசீதா - PRASEEDHA என்பதால் தட்டச்சும் போது ப் ப வாகி விட்டது....ரி கொம்பு ஹிஹிஹி...

      தட்டச்சுப் பிழை துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  14. நல்ல செய்திகளைத் தொலைக்காட்சி, தினசரி மூலம் ஏற்கெனவே படிச்சேன். திரு ஜெ.சந்திரசேகர் அவர்களின் சிறுகதை திரு கி.ராஜநாராயணனுடையது தான் என்றே நம்புகிறேன். இந்தக் கதை படிச்சிருக்கேன். கதை சொல்லி என்னும் பெயரில் அவர் தான் எழுதி இருக்கார். கதையின் நடையும் தெற்கத்தி வட்டார வழக்கில் உள்ளது. களவாணி, வெள்ளென இதெல்லாம் தென் மாவட்டங்களில் அதிகம் புழங்கும் சொற்கள்.

    பதிலளிநீக்கு
  15. இந்த செல்ஃபோன்/செல்ஃபி மோகம் மிகவும் ஆபத்தானதாய் இருக்கு என்றாலும் யாரும் விடுவதாகத் தெரியலை. ஓர் இளம் தம்பதி கூடத் தேநிலவுக்குப் போன இடத்தில் செல்ஃபி எடுக்கப்போய் இருவருமே உயிரிழந்தனர். :(

    பதிலளிநீக்கு
  16. கத்திரிக்காய் பிடிச்சவங்க நிறையப் பேரோ இணையத்தில்? கத்திரிக்காய் சாதம் இன்னுமும் அதிகம் படித்தவர்கள் பட்டியலில் இருக்கே! இப்போப் புதுசாக் கடுகோரை சேர்ந்திருக்கு போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கத்திரிக்காய் சாதம் இன்னுமும் அதிகம் படித்தவர்கள் பட்டியலில் இருக்கே!..//

      எல்லாம் மாயாபஜார்
      மர்மயோகி வேலை மாதிரி தெரியுது!..

      நீக்கு
  17. மூன்று நல்ல செய்திகளும் அருமை.
    ரபினா தன் கை குழந்தையை கீழே விட்டு விட்டு, அந்த பையனை காப்பாற்றியது பாராட்டபட வேண்டிய விஷயம். வாழ்க வளமுடன்.
    இன்னொருவர் உடலை மீட்க உதவிய ரபினாவின் சகோதருக்கும் நன்றிகள்., பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  18. அருமையான கதை பகிர்வு. செவிவழி கதையாக கேட்டு இருக்கிறோம்.
    கதை சொல்லி அருமையாக கதையை சொல்லி இருக்கிறார்.
    கதை பகிர்வுக்கு சாருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. கதை எங்கள் ஊர்ப்பக்க வார்த்தைகள் நிறைய. கதை பற்றி ஜெகேசி அண்ணாவின் கருத்து சூப்பர். இந்தக் கதையைப் படித்ததும் எனக்கு எதுவும் தோன்றவும் இல்லை அண்ணாவின் கருத்து பார்த்ததும் அட! இப்படியும் ஒரு கோணம் உள்ளதே என்று தோன்றியது. ஆசிரியர் மறைமுகமாக அதைத்தான் சொல்லியிருப்பதாக எண்ணத் தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. வீரப் பெண்மணி ரபினா கன்ஜர்! காவலர்கள், ஆட்டோக்காரர் செய்த உதவிகள் பாராட்டுக்குரியவை. பிரசீதா இறுதியாகக் கூறியிருப்பது சிந்திக்க வேண்டியது. கதைப் பகிர்வு நன்று.

    பதிலளிநீக்கு
  21. ரபினா அவர்களின் சாதுரியம் வாழ்த்துகள்.
    அருமையான கதை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!