புதன், 14 செப்டம்பர், 2022

பழி வாங்கும் குணம் ஏன் ஏற்படுகிறது?

 

கீதா சாம்பசிவம் : 

1) சமையல் பதிவுகளுக்குத் திரும்பத்திரும்ப சில குறிப்பிட்டவர்களே எழுதுவதால் வரவேற்பு இல்லையோ? (முக்கியமாக என் பதிவுகளே அதிகம் வருகின்றன.)

# சமையல் குறிப்புகள் படிப்பதில் (எல்லாரும் செய்து பார்ப்பதில்லை) ஆர்வம் இருப்பவர்கள் யார் எழுதியது என்று பார்த்து ஒதுக்க மாட்டார்கள்.  ஆர்வம் இருப்பதாகவும் குறைந்ததாகவும் நாம்தான் பிரமை கொள்கிறோம்.

& நம் திங்கள் பதிவுகளில் வரும் சில சிம்பிள் சமையல் பக்குவங்களை நானும் செய்து பார்த்து வெற்றி கண்டுள்ளேன். நெ த வின் மாங்காய் சாதம், பா வெ அவர்களின் quick rasam இரண்டும் சமீபத்து அனுபவங்கள். அவ்வப்போது எனக்கு சமையல் செய்முறையில் சில சந்தேகங்கள் வரும்போது  எங்கள் blog கடைசி ஜன்னலில் தேடி சந்தேகம் நிவர்த்தி செய்துகொள்வதும் உண்டு. (ஊறுகாய்  போன்றவை ) 



2.தினம் தினம் என்ன சமைப்பது என்ற பிரச்னை எல்லா வீடுகளிலும் உள்ளதா?

# தீவிரமாக இல்லாது போனாலும் அவ்வப்போது இருக்கும்தான். 

& எனக்கு அந்தப் பிரச்சனை கிடையாது. fridge ல என்ன காய்கறி இருக்கோ அதை வைத்து  அன்றைய சமையலை முடித்துவிடுவேன். 

3.பதிவுகள் எழுதுவதிலும்/இணையத்திற்கு வருவதிலும் பலருக்கும் ஒரு சோர்வு ஏற்படுவது ஏன்?

# நிறைய "கருத்துகள் விருப்பங்கள்" பதிவாகாதபோது இது சகஜம். 

& எனக்கு சோர்வு ஏற்படுவது இல்லை. சில சமயங்களில் என்னுடைய முழு நேரமும் வேறு தவிர்க்கமுடியாத சில விஷயங்களுக்குத் தேவைப்படும்போது இணையம் / பதிவுகள் எல்லாம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.  

4.பழி வாங்கும் குணம் ஏன் ஏற்படுகிறது?

# சினம் ஏமாற்றம் எரிச்சல் காரணமாக ஏற்படுகிறது. 

& 'பழி வாங்குவதால் பயன் ஏதும் கிடையாது' ('An eye for an eye - ends up only in making the whole world blind')  என்று என்னைப்போன்ற சிலர்  மட்டுமே தெரிந்துவைத்துள்ளார்கள் என்று தன்னடக்கத்துடன் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்! 

5.உங்களிடம் அலட்சியமாக நடந்து கொண்டு விட்டுப் பின்னர் காரியம் ஆகணும் என்பதற்காக நட்பு பாராட்டுபவர்களைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?

#  " என்னைப்போல் தான் இவரும் " என்று நினைப்பேன். 

& ஒன்றும் நினைக்கமாட்டேன். ஏதோ சந்தர்ப்பவசத்தால் அவர் தடுமாறி இருப்பார். அதை மீண்டும் நினைவில் கொண்டு வருவதால் நமக்கோ அவருக்கோ எந்த பயனும் இல்லை. 'மறப்போம்; மன்னிப்போம் ' என்பது என்  கொள்கை. 

6.அப்படிப்பட்டவர்களுக்குத் தெரிந்து கொண்டே உதவி செய்யலாமா?

# உதவி செய்வதில் ஒரு சந்தோஷம் உண்டு. எனவே தாராளமாகச் செய்யலாம். 

7.அபத்தமான கேள்விகளாக் கேட்டிருக்கேனோ?

# இல்லை.  ஆனாலும் ஒரு விஷயத்தைப் பற்றி இவ்வளவு சிந்தனை ஏன் வருகிறது என்று எண்ணத் தோன்றுகிறது. 

& நான் அபத்தமான பதில்களை சொல்லியிருக்கேனா ? 

8.எதற்கெடுத்தாலும் நேரடியாகப் பிரதமரே காரணம் எனச் சொல்பவர்களைப் பற்றி? (இத்தனைக்கும் உலகத்தலைவர்களில் முதலிடம் பெற்றிருக்கார்.)

# அரசியல் மதம், சினிமா, இலக்கியம் இதில் எல்லாம் பிடித்தது பிடிக்காதது நிறையவே இருக்கும்.

9.என்ன நடந்தாலும்/யார் என்ன சொன்னாலும்/வாய்மூடி மௌனிகளாக இருந்தால் பிரச்னைகளே வராது இல்லையா?

# வராது .

& "               " 

10.இந்தியப் பொருளாதார நிலைமை இங்கிலாந்தை முந்தி இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

# அடிப்படைத் தகவல்கள் சரிதானா என்று யோசிக்க வைக்கிறது.  இங்கிலாந்து பொருளாதாரம் பற்றி நமக்கு அதிகம் தெரிய வாய்ப்பு / தேவை அதிகம் இல்லை.

& மயில்சாமியைத்தான் கேட்கவேண்டும்! 

நெல்லைத்தமிழன் : 

1.  அரசியல் என்று வரும்போது மட்டும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லாஜிக், தன் விருப்பம் என்று ஒவ்வொரு குடும்பத்தில் இருப்பது ஏன்?   

# அரசியல் மட்டும் அல்ல. பிடித்த சினிமா, எழுத்தாளர், பாடகர் என்று எல்லாவற்றிலும் ஒவ்வொருவருக்கும் ஓர் அபிமானம் இருக்கும்.  குடும்பத்தில் எல்லோருக்கும் ஒரே மாதிரி ரசனை இருக்குமானால் அது ஒரு விதி விலக்கு. 

& சுயமாக சிந்திக்கும உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களில் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும். அதில் தவறு ஏதும் இல்லை. 

2. பிளாக்கில் எழுதுபவர்களால், எப்படி தொடர்ச்சியாக அயர்ச்சி இல்லாமல் எழுத முடிகிறது? அதற்கான உத்வேகம் எங்கிருந்து வருகிறது?  (வாசகர்கள்தாம் என்ற மொக்கை பதில் வேண்டாம்)

# மனதில் அலை மோதும் ஒன்று வெளிப்படுத்தப் படும் வரை நிம்மதி இராது என்று பெரிய படைப்பாளிகள் சொல்வதுண்டு.  ஒரு வேளை பிளாக்கர்களுக்கும் அது பொருந்துமோ என்னவோ.  (நான் உத்வேகம் கொண்ட "படைப்பாளி" அல்ல. எனவே அனுபவ பூர்வமாக பதில் தர இயலவில்லை. )

& மேலே ^ கீ சா மேடத்தின் மூன்றாவது கேள்வியைப் படிக்கவும்! அவர் சொல்வது சரியா இல்லை நீங்கள் சொல்வது சரியா? (நாராயண, நாராயண!) 

= = = = = 


91 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமைய வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    கேள்வி பதில்கள் அருமை. இன்று வழக்கப்படி இருக்கும் படங்களும், வேறு பகுதிகளும் இடம் பெறவில்லையா... பதிவு சிம்பிளாக முடிந்து விட்டதே.... சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் 3 வது கேள்வி உண்மையோ என்ற சந்தேகம் இதுவரை எந்த பின்னூட்டமும் இல்லாத பதிவை பார்க்கையில் வருகிறது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களுக்கு கருத்து எழுதுவோர் சிலரே. எனவே தற்காலிக ஓய்வு படங்களுக்கு!

      நீக்கு
  3. //அலட்சியமாக//- என்னைப் போல்தான் ...... பதில் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  4. //சோர்வு ஏற்படுகிறது//- அப்படித் தோன்றவில்லை. பதிவு இன்டெரெஸ்டிங்காகவோ, பின்னூட்டங்கள் இன்டெரெஸ்டிங்காகவோ இல்லை... அரட்டையடிக்கும் மூடு இருந்தாலோ அப்படி ஏற்படாது

    பதிலளிநீக்கு
  5. என்ன சமைப்பது என்ற பிரச்சனை, சாப்பாடு சாப்பிடுபவர்கள் ஆர்வமாக இருக்கும் வீட்டில் பெரும்பாலும் இருக்காது. நான் முன்கூட்டியே சொல்லிவிடுவேன்.

    ஆனால் நான் சமைக்கும் காலங்களில் கிச்சனில் நுழையும்போது மனதுக்குத் தோன்றுவதைப் பண்ணுவேன். அதற்கு முன் என்ன திட்டம் இருந்தாலும் மாறிவிடும். இதை நான் இன்னர் வாய்ஸ் என்று அர்த்தப்படுத்திக்கொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமைத்த பின் சாப்பிடும்போது மற்றவர்களின் அவுட்டர் வாய்ஸ் கேட்டு நொந்தது உண்டா?

      நீக்கு
    2. நெல்லை அதே அதே....சாப்பிடும் ஆர்வம் உள்ளவர்கள் இருந்தால் இருக்காதுதான் ஆனால் உங்களுக்குப் பிடிப்பது நீங்க சொல்லிடுவீங்க....ஆனா உங்களுக்குப் பிடிப்பவை குழந்தைகளுக்குப் பிடிப்பதில்லையே அப்ப பாவம் இல்லையா உங்க ஹஸ்பன்ட்!!!!!

      கீதா

      நீக்கு
    3. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பிடித்தமானவை பிடிக்காதவை என்று வேறு வேறாக இருந்தால் சமைப்பவர் எப்படி சமைக்க முடியும்? ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகச் சமைக்க வேண்டும். குழப்பம் வந்து சமைப்பவர் எப்போதுமே குழப்பத்தில்இருந்தால்...ஹிஹிஹிஹி...

      மற்றொன்று வீட்டில் சமைக்கும் ஐட்டங்களின் சாய்ஸ் குறைந்துவிடும். பரிசோதனை செய்து பார்த்து வித விதமாகச் சமைக்க முடியாது!

      கீதா

      நீக்கு
    4. சமைத்த பின் சாப்பிடும்போது மற்றவர்களின் அவுட்டர் வாய்ஸ் கேட்டு நொந்தது உண்டா?//

      சிரித்து முடியலை!!!!

      கீதா

      நீக்கு
    5. எல்லா நாளும் சரியாக வரும் என்று சொல்லமுடியாது. ஆனால் மோசமாக இருக்காது. ஒவ்வொருத்தரின் விருப்பத்தைக் கேட்டுப் பண்ணுவது மனைவி. நான் அப்படியெல்லாம் கேட்கமாட்டேன். யார் primary customerஓ அவருக்கு ஏற்ற மாதிரித்தான் பண்ணுவேன். பையனுக்கு வெண்பொங்கல் குழையக்கூடாது, அவனுக்காகத்தான் காலையில் பண்ணுகிறேன் என்றால் அவனுக்கு ஏற்ற மாதிரிதான். அதுதான் மனைவிக்கும். ஹா ஹா. ஆனால் நான் சமையல் செய்யும் அன்று பெரும்பாலும் நான் சாப்பிடுவதில்லை, சாப்பிடப் பிடிப்பதில்லை, கிச்சனிலேயே நின்று சமையல் செய்வதால்.

      நீக்கு
    6. சுவையே பார்க்காமல் இன்று பாஸ் செய்த சமையல் சூப்பர்.  மகாளயபட்ச தர்ப்பணம் இன்று. சாம்பார், ரசம், கூட்டு எள்ளுப்பொடி எல்லாமே அருமையாய் இருந்தது.

      நீக்கு
  6. பதிவுகள் எழுத நிறைய இருந்தாலும் அதை எழுத முடியாதபடிக்குப் பல வேலைகள், மனம் வேறு பல எண்ணங்களால் ஆக்ரமிக்கப்பட்டு இருக்கும் போது அதுவும் சுவாரசியமாகத் தர வேண்டும் என்று நினைத்து அது முடியாமல் போகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தி/கீதா! நிறைய விஷயங்கள் இருந்தாலும் அவற்றை எழுதுவதில் ஏற்படும் தயக்கம் காரணமாக எழுதுவது இல்லை. உடல் நிலை வேறே நடு நடுவில் நானும் இருக்கேன் என்று சொல்லும். :(

      நீக்கு
  7. என்ன சமைப்பது என்ற பிரச்சனை பெரும்பாலும் எழுவதில்லை ஆனால் எழவே எழாது என்றும் சொல்லமாட்டேன். மனம் தானே அதற்குக் காரணம்! வீட்டுச் சூழல் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றாற் போல....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க வீட்டில் நான் முதல் நாளே தீர்மானம் செய்தாலும் காலை சமையல் ஆரம்பிக்கும்வரை சஸ்பென்ஸாகவே இருக்கும். ஏனெனில் திடீர் திடீர் என நம்மவருக்குப் புதிய யோசனைகள் தோன்றும். இன்னிக்குத் துவையல் அரைத்துக் கூட்டுப் பண்ணி ரசம் மிளகு ரசமாகப் பண்ணலாம்னு நினைச்சிருப்பேன். அதைச் சொல்லியும் இருப்பேன். ஆனால் அவரோ திடீர்னு கீரைக்கட்டை வாங்கிக் கொண்டு வந்து நிற்பார். அப்போ சமையல் திட்டமே மாறும். கீரை மசிச்சு ஏதேனும் வெறும் குழம்பு அல்லது வற்றல் குழம்பு, ரசம்னு மாறும். இப்போத் தான் மஹாலய பக்ஷம் என்பதால் கீரை, பீன்ஸ் காரட், கத்திரிக்காய், முருங்கைக்காய் போன்றவற்றிற்குத் தடா!

      நீக்கு
  8. பழிவாங்கல் - அட்டிட்யூட் பிரச்சனை. இந்த் ஆட்டிட்யூட் பிரச்சனைதான் பல மனப்பிறழ்வுகளுக்கும் காரணம். மிகவும் மோசமான ஒன்று'

    இதற்கான "&" பதில் - ஹைஃபைவ்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. புதியதோர் புதன்..

    அன்பின்
    வணக்கங்களுடன்

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  10. @ கீதா

    தங்களது விருப்பத்தின் பேரில் நமது தளத்தில் உலக நீதி இரண்டு பாகங்களாக..

    தங்களது கவனத்திற்காகவே இந்தத் தகவல் !..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா காலையிலேயே பார்த்துவிட்டேன் முதல் பகுதிக்கு கருத்து போட்டு அடுத்து போட தாமதமாகிவிட்டது. இப்போது இரண்டாவதும் பார்த்து போட்டாச்சு. அருமையான் பதிவு துரை அண்ணா. நேற்று வர இயலவில்லை.

      கீதா

      நீக்கு
  11. கேள்வியும் பதில்களும்
    அருமை..

    இன்றைய பதிவு கச்சிதம்..

    பதிலளிநீக்கு
  12. இன்று
    வழக்கப்படியான படங்களும், வேறு விஷயங்களும் இடம் பெற வில்லை..

    இதுவும் ஓர் அழகு தான்..

    பதிலளிநீக்கு
  13. கருத்துரைகள் எழுதுவதை ஊக்குவிக்கிறது என்பது எனது எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறைகளை எழுதலாமா கூடாதா ன்னு யோசிக்க வைக்கிறது உங்கள் பின்னூட்டம் கில்லர்ஜி. ஆனா, ஒவ்வொரு பதிவு எழுதுவதும் ஒருவருடைய உழைப்பு என்பது உண்மைதான்.

      நீக்கு
    2. இருவரும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

      நீக்கு
    3. குறைகளை கண்டு கோபப்படுவது தவறு. அவைகள்தான் நம்மை செம்மைபடுத்துகின்றது என்பதும் எமது எண்ணம் தமிழரே...

      நீக்கு
    4. குறைகளும் சொல்ல வேண்டும் நெல்லை. கில்லர்ஜி சொல்லியிருப்பதுதான் என் கருத்தும்.
      குறைகள் சொல்லப்படும் முறையிலும் இருக்கிறது.

      கீதா

      நீக்கு
    5. குறைகள் சொல்லுவது வேறே! ஆனால் பதிவுகளின் கருத்து, உள்ளடக்கம் பிடிக்காத விஷயமாக இருந்தால் தனி மனிதத் தாக்குதல் அதிகமா இருக்குமே! இந்த விஷயத்தில் நான் அதிகம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கேன். இப்போத் தான் சில விஷயங்களில் இருந்து வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டிருப்பதால் பதிவுகள் வருவதும் குறைந்திருக்கு.

      நீக்கு
  14. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
    திறன்தெரிந்து கூறப் படும்

    பதிலளிநீக்கு
  15. Neenkal Adsense ku apply Seithaal Money Earn pannalam.Blog la earnings tap open panni joined pannunka

    பதிலளிநீக்கு
  16. சமையல் பகுதி சுவாரஸ்யமாகவே சென்று கொண்டிருக்கிறது. இன்னும் புதுப்புது குறிப்புகள் வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. 6 மாதங்கள் முன்பு, சகோதரர் ஸ்ரீராம் அவர்களது ஈமெயிலுக்கு சமையற்குறிப்பு அனுப்பி வைத்தேன். அவருக்கு அது கிடைக்கவில்லையோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு திங்களன்றும் சமையல் குறிப்பு வெளியிடும்போதும் சமையல் குறிப்பு எப்படி எந்த முறையில் அனுப்புவது போன்ற விபரங்களை தெரிவிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னரே கூட சொன்ன நினைவு. நானாக இருந்தால் ஶ்ரீராமுக்கு மெயில் கொடுத்துத் தொந்திரவு பண்ணிப் பார்க்கச் சொல்லி இருப்பேன். :)

      நீக்கு
    2. வாங்க மனோ அக்கா.. நான் எதுவும் பார்த்ததாக நினைவில்லை. பார்த்திருந்தால் அவசரத்துக்கு, "இன்றி. விரைவில் தேதி அறிவிக்கிறேன்" என்றாவது பதில் அனுப்பி இருப்பேன். தயவு செய்து திருப்பி அனுப்ப முடியுமா?

      நீக்கு
    3. இன்றி அல்ல நன்றி! ஆட்டோ குலுக்கல் டைப்பிங்!

      நீக்கு
  18. தினம் தினம் இன்றைக்கு என்ன சமைப்பது என்ற கேள்வி ஒரு பிரச்சினையாகவே நிறைய பெண்களுக்கு உள்ளது.
    என்னைப்பொறுத்த வரி, முதல் நாளே என்ன சமைப்பது என்பதை முடிவு செய்து, அதற்கான திட்டங்களும் போட்டு விடுவேன். அதனால் மறுநாள் காலை நூல் பிடித்தாற்போல வேலைகளையும் தொடங்கி முடித்து விடுவேன்.

    பதிலளிநீக்கு
  19. அனைத்துக் கேள்வி/பதில்களும் சுவாரசியம். அலட்சியமாக நடந்து கொள்பவர்களைப் பற்றிய கேள்விக்குத் திரு கௌதமனின் பதிலும் சரி/திரு கேஜிஒய் அவர்களின் பதிலும் சரி யதார்த்தம். சொல்லப் போனால் என்னை அலட்சியம் செய்தவர்களை மதித்து நான் பல உதவிகள் செய்துவிட்டுப் பின்னர் அதுக்கும் சேர்த்து அவமானங்களைச் சந்தித்திருக்கேன். :))))) என்றாலும் உதவினு வரும்போது செய்யாமல் இருக்க முடியலை. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வேறே! பொறுமைனு எல்லாம் இதைச் சொன்னதில்லை. அவ செய்யக் கடமைப்பட்டிருக்கா! செய்யறா என்பார்கள். :))))))))

      நீக்கு
  20. காய்கறிகளைப் பொறுத்து நானும் முடிவு செய்து கொள்வேன். வீணாகும் காய்களை முதலில் சமைக்கணுமே! ஆகவே பூஷணி, வெண்டை, வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றிற்கு முதலிடம். நம்மவர் சில/பல சமயங்களில் எல்லாவற்றையும் சேர்த்து வாங்கி விடுவார். அப்போத் தான் தலையைப் பிய்ச்சுக்கும் போல் குழப்பம் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா ஹாஹாஹா..... மாமா என்ன நட்சத்திரம்!!!!??? உங்க நட்சத்திரம் தெரியும்....அதான் சும்மா கேட்டேன்!!

      கீதா

      நீக்கு
    2. ஹையோ! தி/கீதா, நக்ஷத்திரத்தை விடுங்க. சிம்ம லக்னம். அவரும்/பையரும். ஆகவே வீட்டில் ஆணாதிக்கம் தான். மருமகள் பாடும் என் பாடும் தான் திண்டாட்டம்! முன்னெல்லாம் மாமா சொன்னதுக்கு மறுப்புச் சொல்வதே கஷ்டம். இப்போச் சில வருஷங்களாக தைரியமா (!!!!!!!) எதிர்த்துப் பேசுகிறேனாக்கும். அதுவும் காய்கறி வாங்கினால் அன்னிக்குக் கட்டாயமாய் டிஷ்ஷும், டிஷ்ஷும் தான். இன்னிக்குப் பாருங்க வாழைப்பூ, பூஷணிக்காய் இரண்டுமே வாங்கி இருக்கார். நாளைக்கு எதைப் பண்ணுவது? வாழைப்பூவை நிறுத்தி வைத்தால் கறுத்துவிடும். பூஷணிக்காயை நிறுத்தினால் ஜலமாக ஓடிடும். இரண்டையும் சாப்பிட ஆளைத் தேடணும். :(

      நீக்கு
    3. நானா இருந்தால், முதலில் வெண் பூசனி. (வாழைப்பூவைக் கள்ளன் எடுத்து பண்ணுவதற்கெல்லாம் எனக்குத் தெரியாது ஹா ஹா)

      நீக்கு
  21. செல்ஃபோன் வெடித்து எட்டுமாசக்குழந்தை இறந்து விட்டதாம். தொலைக்காட்சிச் செய்தியில் காட்டுகின்றனர். இந்தக் கொடுமைக்கு என்ன செய்யலாம்? என்று தணியும் இந்த செல்ஃபோன் மோகம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :(((( பெயர் தெரியாத பிராண்ட் ??

      நீக்கு
    2. அப்படித் தெரியலை. பார்க்கலாம். மாலைச் செய்தியில் இன்னும் விபரங்கள் வரலாம். குழந்தை கொள்ளை அழகு. மனசே ஆறலை. :(

      நீக்கு
    3. எட்டுமாசக்குழந்தை கையில் செல்ஃபோன்! வெடித்து குழந்தை மரணம் கேட்கவே மனம் பதறுகிறது.

      நீக்கு
  22. எட்டு, ஒன்பதாம் கேள்விகளுக்குத் திரு கௌதமன் அவர்கள் பதிலே சொல்லாமல் நழுவி விட்டார்! :)))))

    பதிலளிநீக்கு
  23. ஞாயிற்றுக்கிழமையில் இருந்து 3 நாட்கள் தீட்டு! (மாமியாரின் தம்பி 95 வயது.) நம்ம ரங்க்ஸுக்கு மாமா இறந்து விட்டார். காலையில் சீக்கிரம் எழுந்து எல்லாத்துணிகளையும் நனைச்சுக் குளிச்சிப் பின்னர் குளிச்சுக் காஃபி சாப்பிடவே ஏழு மணி ஆகிவிட்டது. அதன் பின்னர் துணிகளைத் தோய்த்து உலர வைக்கச் சமைத்துச் சாப்பிட என நேரம் ஆகிவிட்டது.போயிட்டுப் பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
  24. கீதாக்கா திங்க நல்லாத்தானே போய்க் கொண்டிருக்கிறது அப்புறம் என்ன?!!! நீங்க சீனியர் (குட்டிக் குழந்தை!!!) உங்க அனுபவங்கள் எல்லோருக்கும் பயன்படுமே, திப்பிஸம் உட்பட!!!! நெல்லை உடனே இதுக்கு என் காலை இழுக்க வருவார்!! (இப்படிச் சொன்னா வரமாட்டார்!!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  25. கேள்விகளும், பதில்களும் அருமை.
    பின்னூட்ட கருத்துகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  26. //பிளாக்கில் எழுதுபவர்களால், எப்படி தொடர்ச்சியாக அயர்ச்சி இல்லாமல் எழுத முடிகிறது? அதற்கான உத்வேகம் எங்கிருந்து வருகிறது? //


    இப்படி பதிவிடு தும் இப்போது நமக்கு ஒரு புத்துணர்வை தருகிறது. பதிவு நன்றாக உள்ளது சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
    இப்படி என் பதிவுக்கு கமலா ஹரிஹரன் பின்னூட்டம் வழங்கி இருக்கிறார்கள். அதுதான் உண்மை.
    பதிவு போட்டு அதற்கு வரும் பதில்கள் மனச்சோர்வை போக்கி புத்துணர்ச்சி தருவது உண்மை.

    நண்பர்களுடன் உரையாடுவது போல.
    கீதா சாம்பசிவம் சொல்வது போல சில நேரம் மனம் சோர்வாக இருக்கும் போது பதிவு எழுத தோன்றாது, முயன்று அமர்ந்து விட்டால் மனம் லேசாகி விடும்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /பதிவு போட்டு அதற்கு வரும் பதில்கள் மனச்சோர்வை போக்கி புத்துணர்ச்சி தருவது உண்மை. /

      இங்கு என் கருத்தையும் குறிப்பிட்டு எனக்கும் ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி சகோதரி.

      நீக்கு
  27. கேள்வி பதில்கள் அருமை.
    'என்ன சமைப்பது'..........நானும் இருக்கும் மரக்கறிகளில் பழுதடையும் மரக்கறிகளை முதலில் எடுத்து சமைத்து விடுவேன். இதுதான் சுலப வழி.

    பதிலளிநீக்கு
  28. சமையல் பதிவுகளுக்குத் திரும்பத்திரும்ப சில குறிப்பிட்டவர்களே எழுதுவதால் வரவேற்பு இல்லையோ?

    வரவேற்பு அதிகமாவதும் குறைவதும் எழுதுபவரினால் என்பதை விட விஷயம் ஒன்றும் புதிதாக இல்லை (திரும்பத் திரும்ப சாப்பாட்டில் என்ன வித்தியாசம் வ்ந்து விட முடியும்?) என்ற காரணம்? சிக்கன் பொடிமாஸ், மட்டன் பிரியாணி, மீன் வறுவல், நண்டு சூப் என்று மாற்றிப் பார்க்கலாமா?

    -மந

    பதிலளிநீக்கு
  29. பழி வாங்கும் குணம் ஏன் ஏற்படுகிறது?
    அற்புதமான ஆழமான கேள்வி.
    சிந்தித்துப் பார்த்தால், பழி வாங்கும் குணமே நமக்கு பகவத் கீதை கிடைக்கக் காரணமானது.

    -மந

    பதிலளிநீக்கு
  30. அப்படிப்பட்டவர்களுக்குத் தெரிந்து கொண்டே உதவி செய்யலாமா?
    உதவி செய்ய நினைத்தால் எப்படிப்பட்டவராக இருந்தால் என்ன? (கேள்விக்கு கேள்வியே பதிலா?)

    -மந

    பதிலளிநீக்கு
  31. எதற்கெடுத்தாலும் நேரடியாகப் பிரதமரே காரணம் எனச் சொல்பவர்களைப் பற்றி?
    ஒலிம்பிக்கில் மெடல் வாங்கினால் பிரதமர் காரணம் என்று சொல்லும் பொழுது சிலிர்த்துப் போய் ஜே போடும் பொழுது உள் நாட்டில் ஊழல் ஒழியாவிட்டாலும் பிரதமர் தான் காரணம் என்று சொல்லும் பொழுது பொத்துக் கொண்டு வருவானேன்?

    -மந

    பதிலளிநீக்கு
  32. இந்தியப் பொருளாதார நிலைமை இங்கிலாந்தை முந்தி இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
    பிரதமர் தான் காரணம்!
    ஜால்ராவை கீழே வைத்து விட்டு பதில் சொன்னால், இது எதிர்பார்த்தது என்று சொல்லலாம். இந்தியத் தொழிலாளிகளின் இளமை, வற்றாத நிலமை, செலாவணி,... இவை முக்கிய காரணங்கள்.

    -மந

    பதிலளிநீக்கு
  33. அரசியல் என்று வரும்போது மட்டும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லாஜிக், தன் விருப்பம் என்று ஒவ்வொரு குடும்பத்தில் இருப்பது ஏன்?
    இருந்தாலும்... வாக்களிக்கும் பொழுது யார் காசு கொடுக்கிறார்கள் என்ற பார்வை தலை தூக்கி குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. இது தெரியாமல் இலவசம் தவறு காசு கொடுப்பது தவறு என்று சொல்பவர்களுக்கு குடும்ப ஒற்றுமையில் அக்கறை இல்லை என்று தெரிகிறது.

    - மந

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!