வெள்ளி, 23 செப்டம்பர், 2022

வெள்ளி வீடியோ : வற்றிய குளத்தை பறவைகள் தேடி வருவது கிடையாது வாழ்க்கையில் வறுமை வருகின்றபோது உறவுகள் கிடையாது

 காலையில் ரேடியோவில் பக்திப் பாடல்கள் என்றால் இந்தப் பாடல் இல்லாமலா?  இதைக் கேட்டு உருகாதார் யார்?

டி எம் எஸ் பாடி இருக்கும் இந்தப் பாடலை எழுதியவர் யார்?  தெரியாது.  இசையமைத்தவர் யார்?  தெரியாது.  பிரதிபலன் எதிர்பாராமல் செய்து விட்டு சென்று விட்டார்கள்.  விவரம் எல்லாம் தெரியாமலேயே ரசிக்கிறோம்.​

முருகா என்றழைக்கவா முத்துக் குமரா என்றழைக்கவா
கந்தா என்றழைக்கவா கதிர் வேலா என்றழைக்கவா
எப்படி அழைப்பேன்
உன்னை எங்கு காண்பேன்

ஆறுபடை வீடெங்கும் தேடி வந்தேன் அப்பா
அங்கெங்கும் காணாமல் வாடி நின்றேன் அப்பா
அருணகிரி மனம் நொந்து தவித்தபோது – நீ
அருள் கொடுத்து ஒளியாக நின்றாயப்பா!
(உன்னை… முருகா என்றழைக்கவா)

நாவினிலே வேலால் எழுதிச் சென்றாயப்பா
நற்றமிழ் இசையைப் பாட வைத்தாயப்பா – அந்தப்
பாவினிலே மனமுருகி நின்றாயப்பா – உலகுக்குப்
பண்புமிகும் தமிழ்க் கவியை ஈன்றாயப்பா
(உன்னை… முருகா என்றழைக்கவா)

முருகாற்றுப்படை பாடி நக்கீரர் அழைக்க – நீ
முன் தோன்றி வழி அமைத்துக் கொடுத்தாயப்பா
கலிவெண்பா படைத்துக் குருபரர் நினைத்தாரப்பா – நீ
கந்தவேளாய் வந்து நின்று சிரித்தாயப்பா
(உன்னை… முருகா என்றழைக்கவா)

நாளெல்லாம் உன்னைப் பாடுகின்றேன் அப்பா – முருகா
நல்லருள் பொழிந்து ஆடி வருவாயப்பா
என் கண்கள் குளிர வந்து நின்றாடப்பா
என் காலமெல்லாம் துணையாக இருந்தாளப்பா
(உன்னை… முருகா என்றழைக்கவா)


=========================================================================================================

எல்லோரும் நல்லவரே.. 

1975 ல் எஸ் எஸ் பாலனால் இயக்கப்பட்ட இந்தத் திரைப்படம் அபார நஷ்டமடைந்து ஜெமினி ஸ்டுடியோவையே மூட வைத்தது.  அதன் கடைசிப் படம் இதுதான்.

முத்துராமன், லோகேஷ், மஞ்சுளா, ஆகியோர் நடித்த படம்.

கண்ணதாசன், பஞ்சு அருணாச்சலம் பாடல்களுக்கு இசை வி குமார்.   இந்தப் படத்திலும் பகிர்வதற்கு ஒரு எஸ் பி பி பாடல் உண்டு எனினும் இன்று நான் பகிரப்போவது கே ஜெ யேசுதாஸ் பாடிய தத்துவப்படல்!

கண்னதாசன் எழுதிய இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் தத்துவம்.


பகைகொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம் 
தீராத கோபம் யாருக்கு லாபம் 

வீட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக கூரையை எரிப்பாரோ 
வேதனைதன்னை விலைதந்து யாரும் வாங்கிட நினைப்பாரோ 
இதயத்தைத் திறந்து நியாயத்தைப் பேசு வழக்குகள் முடிவாகும் இருக்கின்ற பகையை வளர்த்திடத்தானே வாதங்கள் துணையாகும் 

வற்றிய குளத்தை பறவைகள் தேடி வருவது கிடையாது 
வாழ்க்கையில் வறுமை வருகின்றபோது உறவுகள் கிடையாது 
பாலைவனத்தில் விதைப்பதனாலே பயிரொன்றும் விளையாது \
பட்டபின்னாலே வருகின்ற ஞானம் யாருக்கும் உதவாது 

62 கருத்துகள்:

  1. சின்னத் திருத்தம்:

    டி.எம்.எஸ். பாடியிருக்கும்
    இந்தஒப்பாடலை -- இந்தப் பாடலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. இப்பொழுது அம்சமாக இருக்கிறது.

      நீக்கு
    2. திருத்தி விட்டேன். நன்றி. ​ஓ.. பார்த்து விட்டீர்களா?!!! இன்னொரு நன்றி!

      நீக்கு
  2. எஸ்.எஸ்.பாலனால் இயக்கப் பட்ட இந்தப் படத்தில் -- எந்தப் படத்தில்?
    'எல்லோரும் நல்லவரே'
    என்ற படமும் அதன் காட்சிகளும் நினைவுக்கு வருகின்றன. நல்ல திரைப்படமாயிற்றே, அது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்னவோ படம் பெயர் சொல்ல மறந்து விடுகிறது, விட்டுப்போய் விடுகிறது.  சென்ற வாரமும் இப்படிதான் செய்திருந்தேன்.  என் மனதில் தெரிந்திருதால் போதுமா?  வெளியில் சொல்ல வேண்டாமா?!!   சேர்த்து விட்டேன், பார்த்து விட்டீர்களா?!!

      நீக்கு
    2. பார்த்தேன். எல்லோரும் நல்லவரே படம் பார்த்து மகிழ்ந்து என் மகிழ்ச்சியை கடிதமாய் விகடன் ஆசிரியருக்கு அனுப்பியிருந்தேன். பாலன் அவர்கள் நன்றி தெரிவித்து பதில் கடிதமும் அனுப்பியிருந்தார்.
      அந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் அந்தப் பிரதேசமே அழிகிற மாதிரி ஒரு வெள்ளக் காட்சி வரும். செசில் பி டெமிலி தான் என் நினைவுக்கு அந்த நேரத்தில் வ்ந்தார்.

      நீக்கு
    3. அந்தக் கடிதங்கள் இருந்தால் (இந்தியா வந்ததும்) தெளிவாக புகைப்படம் எடுத்து அனுப்புங்களேன்.

      நீக்கு
    4. தேடிப் பார்த்து விகடன் சம்பந்தப்பட்ட சிலவற்றை நிச்சயம் வியாழன் எபிக்காக பகிர்கிறேன். நன்றி.

      நீக்கு
  3. 'முருகா என்றழைக்கவா' பாடலைக் கேட்கும் பொழுதே அந்த இசைக் கேற்றவாறு தலை அடையும்.அதே மாதிரி தான் 'சொல்லாத நாளில்லை சுடர் மிகு வடிவேலா' பாடலும்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். வாழ்த்துகள். நல்வரவு, பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. நவராத்திரிக் கொலு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வருஷத்துப் புதிய வரவு நடமாடும் கொலு. கொலு வைக்கும் பழக்கம்.ஆசை கொண்டவர்கள் இவங்களைத் தொடர்பு கொண்டால் போதும். தயாரான கொலுவைக் குறைந்தது ஐந்து படிகள் கொண்டதாகப் படிகளோடு பொம்மைகளையும் வைத்து நம் வீட்டில் கொண்டு வைத்துவிடுவார்கள். ஒரு நாளைக்கு 300 ரூபாய். பத்து நாட்களுக்கும் 3000 ரூபாய். பொம்மைகளை வாங்கிப் பாதுகாத்து வைத்துப் பின்னர் ஒவ்வொரு வருடமும் அவற்றை எடுத்துப் படிகள் கட்டிப் பின்னர் எடுத்து வைக்கும் சிரமம் ஏதும் இல்லை. ஒரே ஒரு தொலைபேசி அழைப்புத் தான். அவங்களே வந்து எல்லாம் செய்து கொடுத்துட்டுப் போவாங்க. இன்னும் திருச்சி/ஶ்ரீரங்கத்துக்கு வரலைனு நினைக்கிறேன். அப்படியே தினமும் சுண்டல்/புட்டு போன்றவையும் செய்து வெற்றிலை,பாக்கு, மஞ்சள் குங்குமத்தோடு முடிந்தால்பரிசுப் பொருளையும் வைச்சுக் கொடுக்கிறாப்போல் பைகளும் கொடுத்தால் தேவலை. கடைகளுக்குப் போய் அலைந்து திரிஞ்சு வாங்க வேண்டாம் பாருங்க! :))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னென்னவோ பிஸினஸ். நாமே ஏற்பாடு செய்யும் சந்தோஷமும் மனநிறைவும் இதில் கிடைக்குமா? ஏதோ கடமை போல நிறைவேற்றி நடிப்பது போல தோன்றுகிறது!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      இது நல்ல தகவலாக இருக்கிறதே....! பத்து நாளைக்கு 3000 ரூபாய் அதிகமென்றாலும், இப்போதெல்லாம் ஒரு அழகான சிறிய பொம்மைகள் வாங்குவதற்கே ஆயிரக்கணக்கில் விலை சொல்கிறார்கள்.

      /அப்படியே தினமும் சுண்டல்/புட்டு போன்றவையும் செய்து வெற்றிலை,பாக்கு, மஞ்சள் குங்குமத்தோடு முடிந்தால்பரிசுப் பொருளையும் வைச்சுக் கொடுக்கிறாப்போல் பைகளும் கொடுத்தால் தேவலை. கடைகளுக்குப் போய் அலைந்து திரிஞ்சு வாங்க வேண்டாம் பாருங்க! :))))))))/

      ஹா ஹா ஹா. அப்படியும் விரைவில் வந்து விடும். ஒவ்வொருவருக்குள்ளும் சோம்பேறிதனங்கள் ஒவ்வொரு நாளும் விரைவாக குடியேறி விட்டனவே.... அதற்கு தகுந்தாற்போல காலங்களும் மாறிக் கொண்டு விட்டன. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. ஹாஹாஹா, கமலா, ஏற்கெனவே பல்லாண்டுகள் முன்னரே நடமாடும் தபால் அலுவலகம், நடமாடும் மருத்துவமனை போன்றவை உண்டு. இப்போ இதோடு இன்னும் புதியவரவாகக் கல்யாண மண்டபம் இல்லாமல் தவிப்பவர்களுக்காக நடமாடும் கல்யாண மண்டபமும் தயார் நிலையில். வாடகை போன்ற இன்ன பிற விபரங்கள் இன்னும் வரவில்லை.

      நீக்கு
  6. முருகன் பாடல்களை டி.எம்.எஸ் பாடி அதைக் கேட்காமலும் இருப்பவர் உண்டோ? இரண்டாவது படம் வந்ததே தெரியாது. ஆனால் ஜெமினி ஸ்டுடியோ மூடினதெல்லாம் தெரியும். அந்த இடத்தில் பார்சன் குடியிருப்பு வளாகம் வந்ததும் பாரதிராஜா போன்ற பெரிய பெரிய திரைப்படத்துறை ஆட்கள் அங்கே குடிபோனதெல்லாமும் தெரியும். இஃகி,இஃகி. இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அந்த விவரமெல்லாம் நானறியேன்! புதுசு!

      நீக்கு
    2. 74 ஆம் ஆண்டில் நாங்க ராஜஸ்தான் முதல் முதலாகப் போனோம். அப்போத் தான் சித்தப்பா தன் முதல் அம்பேரிக்கப் பயணத்தை முடிச்சுட்டு வந்திருந்தார். அவர் சொன்ன தகவல்கள் தாம் மேலே உள்ளவை. ஜெமினி ஸ்டுடியோவில் இருந்து விலகினாலும் வாசன் குடும்பத்துக்கும் சித்தப்பா குடும்பத்துக்கும் தொடர்பு எப்போதுமே இருந்து வந்தது. "நீ திரும்பி வரும்போது ஜெமினி ஸ்டுடியோ இருக்காது!" என்று சொன்னார். அப்போவே பேசப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விஷயம் போல!

      நீக்கு
  7. மங்கலம் சொல்லும்
    மனமெலாம் துள்ளும்
    நன்நெறி சொல்லும்
    நாவினில் வெல்லம்..

    அன்பின் வணக்கங்களுடன்..
    நலமெங்கும் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. // விவரம் எல்லாம் தெரியாமலேயே ரசிக்கிறோம்..//

    இந்தப் பாடலைப் பற்றிய விவரம் தெரியாவிட்டாலும்
    அவனே விவரம்..
    அவனே விளக்கம்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  9. இன்றைய திரைப் பாடலும் அருமை.. தத்துவக்
    களஞ்சியம்..

    // வற்றிய குளத்தை பறவைகள் தேடி வருவது கிடையாது..
    வாழ்க்கையில் வறுமை வருகின்றபோது உறவுகள் கிடையாது..

    பாலைவனத்தில் விதைப்பதனாலே பயிரொன்றும் விளையாது..
    பட்டபின்னாலே வருகின்ற ஞானம் யாருக்கும் உதவாது.. //

    மிகவும் பிடித்த பாடல்..

    கவியரசர் கவியரசரே!..

    பதிலளிநீக்கு
  10. பட்ட பின்னாலே வருகின்ற ஞானம்
    யாருக்கும் உதவாது..

    இப்படியெல்லாம்
    திரைப் பாடல்களைக்
    கேட்டு வளர்ந்த காலத்தில் சமூக சீர்கேடுகள் குறைந்திருந்தன..

    இன்று திருக்குறளையே தூக்கிக் குப்பையில் போட்டு விட்டார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பட்ட பின்னாலே வருகின்ற ஞானம்யாருக்கும் உதவாது..//
      அவரே பட்டு அனுபவித்து கடைசியில் ஞானம் அடைந்தபின் தான் "அர்த்தமுள்ள இந்துமதம் " என்று அனுபவங்களையும் சேர்த்து விளக்கினார். அது நமக்கு உதவ வில்லையா? 
      Jayakumar

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய முதல் தனிப்பாடல் அருமை. அடிக்கடி கேட்டு ரசித்து, நானும் கூடவே மனமுருகி பாடி தவித்திருக்கிறேன். டி. எம். எஸ் அவர்களின் குரலில் இதுவும் ஒரு அற்புதமான பாடல். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  14. " முருகா என்றழைக்கவா?" இந்தப்பாடலை பல வருடங்களுக்குப்பிறகு கேட்டு ரசிக்க உதவியதற்கு அன்பு நன்றி! பழைய பாடல் என்பதால் சற்று வேகமாக ஓடுகிறது!
    வெள்ளிக்கிழமை! மங்கலகரமாக, மனதிற்கு புத்துணர்ச்சியாக இனிமையான பாடல்களுக்குப்பதிலாக, சோகமும் தத்துவங்களுமான பாடலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கென்னவோ வேகம் ஒழுங்காக இருபிப்பது போலதான் படுகிறது அம்னோ அக்கா..  அந்தக் காலத்தில் தஞ்சாவூர் ராஜேந்திரா தியேட்டரில் மாலை ஐந்தே முக்காலுக்கு கேட்ட அதே வேகம்!

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  16. முருகன் பாடல் அடிக்கடி கேட்பது. மிகவும் பிடித்த பாடல்.அடுத்த பாடல் வானொலியில் கேட்டது, கேட்டு பல காலம் ஆகி விட்டது.
    இன்று கேட்டேன்.
    இரண்டு பாடல்களையும் கேட்டு ரசித்தேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வெள்ளிக் கிழமை முருகனையும் சௌந்தரராஜனையும் கேட்பது
    மிகவும் இனிமை.

    எல்லோரையும் கொண்டாட வருகிறது நவராத்திரி.
    ஐந்து பொம்மை வைத்து ஆரம்பித்து வைத்த கொலு
    இப்போது ஏழுபடிக்குப் போன நிலையில்

    சில பொம்மைகள் சென்னையில் தூங்குகின்றன.
    சில வெளினாடுகளுக்கு வந்துவிட்டன.


    அனைவரும் உடல் நலத்துடனும் மன சந்தோஷத்துடனும்
    இருக்க இறைவன் அருள வேண்டும்.
    பாட்டுடன் பல செய்திகளையும்
    அறிய முடிந்தது. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  18. பகை கொண்ட உள்ளம், பழையவற்றை
    நினைத்துக் கடுமை கொள்ளும் குணம்
    எதுவும் மனதுக்கு மிக உளைச்சல் தருபவை.
    மறக்க நம் உள்ளத்தைப்
    பழக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. முதல் பாடல் எத்தனை முறை கேட்டும் அலுக்காத பாடல். அருமையான பாடல்.

    இரண்டாவது பாடலும் நிறைய கேட்டு ரசித்த பாடல். மிகவும் சோகமான படம் என்று நினைவு.

    பகிர்விற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  20. ஸ்ரீராம் முதல் பாடல் நிறைய கேட்டிருக்கிறேன் எல்லாம் ஊரில் இருந்தவரை. அதன் பின் விருப்பட்டு இப்போது நெட்டில் கேட்பதுதான் இடையில் கேட்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.

    அருமையான பாடல். டி எம் எஸ் முருகன் பாடல்கள் நிறைய பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  21. இரண்டாவது பாடல் வரிகள் எத்தனை அருமையான வரிகள். அருமையான பாடல். ரசித்த பாடல்.

    கூடவே ஸ்ரீராம், இந்த பாடல் முதல் வரிகள் முடியும் இடத்திலும், சரணம் முடியும் வரியைப் பாடிவிட்டு உடனே அதை
    எனக்கொரு காதலி இருக்கின்றாள் என்று பாடத் தொடங்கிவிடலாம்,,,இது முன்பு எத்தனையோ தடவைக் கேட்டும் தோன்றியதே இல்லை இன்று கேட்டதும்தான் வழக்கம் போல ஹையோ இது வேறு ஏதோ ஒரு பாட்டோடு லிங்க் ஆகுதேன்னு தோணிட....ஹப்பா இன்று பாடல் நினைவுக்கு வந்திருச்சு. வழக்கமா கீதாவுக்கு நினைவுக்கு வராதே!!!

    இரண்டும் ஒரே ராகம்...என்ன ராகம்னு கேக்காதீங்க!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா சொல்கிறீர்கள்?  ஏனோ எனக்கு அப்படி தோன்றவில்லையே கீதா!

      நீக்கு
  22. இந்தப் பாடல் மற்றும் டிஎம்எஸ் பாடிய பல முருகன் பாடல்கள் டி.ஆர்.பாப்பா இசையுதவியில் உருவானவை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!