வியாழன், 29 செப்டம்பர், 2022

தண்ணி ராசி!

 இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே....!

இது இப்போதைய நிலையில் இரண்டு விஷயங்களில் எனக்குப் பொருந்தும்.  ஒன்றை கண்டுபிடித்து விட்டேன்.  இன்னொன்று இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்!

இந்த எங்கள் புது வீட்டுக்கு வந்து இரண்டரை வருடங்கள் ஆகின்றன.  

இன்னமும் புது வீடு என்றுதான் சொல்கிறோம்.  ஏனென்றால் முந்தைய வீட்டில் 27 வருடங்கள் இருந்தோம் பாருங்கள், அதனால்!!

எவ்வளவோ பார்த்துப் பார்த்து, சோதித்து வந்தும் தண்ணீர் விஷயத்தில் மாட்டிக்கொண்டோம். முதலில் கொஞ்ச நாட்கள் வித்தியாசம் தெரியாமல்தான் இருந்தன.

தண்ணீர் கொஞ்சம் மஞ்சள் நிறமாக வந்தது.  கேட்டால் சென்னையில் பாதி இடங்கள் அப்படிதான் என்றார்கள்.  நான் முன்பு இருந்த வீட்டில் அப்படி இல்லையே என்றால், அது போர்வெல் என்றார்கள்.

சற்று நிறம் மாறி இருப்பது ஒரு பிரச்னை என்றால், ஒருவகை துர்நாற்றம் அவ்வப்போது வந்தது.  நிறம் மாறும் பிரச்னைக்கு எங்கள் வீட்டு மாடிகளில் ஒரு பேக்வாஷ் மெஷின் வைத்திருந்தார்கள்.  எல்லா பில்டிங் மாடியிலும் அது காணப்பபட்டது.  வீடு பார்க்கும்போது நாங்கள் கேட்கும் முன்பே அவர்களே அதை ஆர் ஓ வாட்டர் கிளீனர் என்றார்கள்.  சுத்தமான தண்ணீராக மாற்றித்தரும் என்றார்கள்.  உண்மைதான்.  அப்போது நாங்கள் நினைத்துக் கொண்டது வீட்டுக்குள் ஆர் ஓ போடுவோமே அதை.  

அவர்கள் சொன்னது எண்ணெய் தண்ணீரை சுத்தப்படுத்தும் என்று மறைமுகமாக..  அளவான வார்த்தைகளில் சொல்வதால் எங்களை அந்த அர்த்தத்துக்குள் தள்ளி விட்டார்கள்!

சரி..  ஏரியாவில் 90 சதவிகிதம் இப்படித்தானே என்று சமாதானப் படுத்திக் கொண்டோம்.  ஆனால் அவ்வப்போது வரும் வீச்சம் தாங்க முடியாமல் போய்க்கொண்டிருந்தது.

அருகாமை வீடுகளில் விசாரித்தால் அவர்களுக்கு அந்தப் பிரச்னை இல்லை என்றார்கள்.  ஆளாளுக்கு ஒவ்வொரு யோசனை சொன்னார்கள்.   அவர்கள் வீடுகளில் அளவான ஆழத்தில் தண்ணீர் எடுக்கப் பட்டுக்கொண்டிருந்தன.  ஆறு வீடுகளும் குடிவந்துவிட்ட நிலையில் ஒரு கோடையில் தண்ணீர் இல்லாமல் போக, எங்கள் கட்டிடத்தில் ஆழம் சற்று அதிகமாக போடப்பட்டிருந்தது.  அப்படி செய்தால் இப்படித்தான் என்றார்கள்.

இந்த விஷயம் 2021 நவம்பருக்குப் பின் மிகத் தீவிர பிரச்சனையானது.

மேலே ஓவர்ஹெட் டேங்க்கை மிகக் குறுகிய இடைவெளிகளில் அவ்வப்போது சுத்தம் செய்தோம்.  கீழே உள்ள ஸம்ப்பையும் அப்படியே.  ஆனாலும் பிரச்னை தீரவில்லை.

கட்டிடம் கட்ட ஆரம்பித்து அது நாள் வரையே மேலே அந்த பேக்வாஷ் யூனிட் வைத்து இரண்டரை வருடங்கள் ஆகியிருக்கும்.  அது கொஞ்சம் மட்டமான கம்பெனியென்றும், அதை  மாற்றலாம் என்றும் சொன்னார்கள்.  மேலும் நான் வந்தே அது இரண்டு முறை ரிப்பேராகி உள்ளே மெடீரியல்ஸ் மாற்றினோம்.  

எனவே விசாரித்து நல்ல கம்பெனி பேக்வாஷ் (கிரீன்வே) இயந்திரமாக ஒன்றை நிறுவினோம்.  இந்த இயந்திரம் சரியாக வேலைசெய்ய வேண்டும் என்றால் ஒழுங்காக பேக்வாஷ் நடைபெறவேண்டும்.  

தினமுமே ஒருமுறை செய்தால் சரிதான்.  ஆனால் யாருக்கும் பொறுமை இருக்காது. குறைந்தது இருபது நிமிடங்கள், அதிகபட்சம் ஒருமணிநேரம் செய்யலாம்.  முன்னர் இருந்ததை நாங்கள் வாரத்துக்கொருமுறை செய்துகொண்டிருந்தோம்.  அதுவே சமயங்களில் விட்டுப் போய்விடும்.

புதிய மெஷின் காஸ்ட்லி என்பதால் ஒன்று விட்டு ஒருநாள் செய்யலாம் என்று முடிவெடுத்தோம்.  வாரத்துக்கு ஒருவர் என்று முடிவு செய்தோம்.  பின்னர் எங்கள் அபார்ட்மெண்ட் க்ளீன் செய்பவரிடம் மாதம் முன்னூறு ரூபாய் கொடுத்து அதைச் செய்யச் சொல்லி விட்டோம்.

அதன் வேலையை அது செய்தாலும், நாற்றம் மட்டும் போகவில்லை.  சென்ற வருடத்தின் விடாமழைதான் காரணம் என்றார்கள்.  எதையெதையோ கிணற்றுக்குள் கொண்டுவந்து சேர்த்திருக்கும் என்றார்கள்.  பின்னால் அருகில் காலி இடங்களில் வீடு கட்டத் தொடங்கி குடியும் வந்த நிலையில் அங்கு கட்டும்போது அவர்கள் இந்தக் கிணற்றின் ஊற்றை வழிமறித்திருப்பார்கள், இடையில் சாக்கடையோ, கழிவுநீரோ ஏதாவது கலந்திருக்கும் என்று சொல்லி பீதியூட்டினார்கள்.  ஐம்பது அடியிலிருந்து நூற்றைம்பது இருநூறு அடிக்குள் எங்காவது கலந்திருக்கலாம் என்றும் சொன்னார்கள்.  

தண்ணீரை எடுத்துக்கொண்டு கிங் இன்ஸ்டிடியூட் சென்று சோதிக்கலாமா என்றும் யோசித்துக் கொண்டிருந்தோம்.  இடையில் கிரீன்வே காரர்களே ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்து சோதனைக்கு எடுத்துச் சென்று தனியார் சோதனைச்சாலையில் சோதித்தார்கள்.  சரியான பதில் இல்லை.  கிரீன்வே காரர்கள் நிறம் மாறும் தண்ணீரை சரிசெய்து கொடுப்பார்கள் தவிர இதுபோன்ற எதுவும் செய்ய முடியாது என்று ஏற்கெனவே சொல்லி இருந்தார்கள்.

இதில் இன்னொரு பிரச்னையும் ஏற்பட்டது.  நாங்கள் வீட்டுக்குள் குடிதண்ணீருக்கு RO போட்டிருந்தோம்.  பழைய வீட்டில் அது வருடக்கணக்கில் இந்தப் பிரச்னையும் செய்யாமல் உழைத்தது. அப்படியே பிரச்னை என்றாலும் முன்பகுதியில் உள்ள விலை குறைந்த பில்டரை மாற்றினால் போதும் என்று இருந்தது.

ஆனால் இங்கேயோ வந்த ஒரு வருடத்தில் பலமுறை பில்ட்டரை - அதுவும் பின்னால் இருக்கும் பெரிய பில்ட்டரையே இரண்டு மூன்று முறை - மாற்றவேண்டி வந்தது.  அப்புறம் அந்த RO மெஷின் புதிதாக ஒன்று வாங்கினோம்.

அதுவும் இது மாதிரியே பிரச்னை ஆகிக்கொண்டிருக்க, புது மெஷின் மாற்றியவர், இனி இப்படியே செலவு செய்வது வேஸ்ட்.  இனியும் தொல்லை வந்தால் இதை மறந்து விடுங்கள்.  தண்ணீர் கேனே வாங்க ஆரம்பித்து விடுங்கள் என்று சொல்லிச் சென்றார்.

எங்கள் ஏரியாவில் புதிய உறை இறக்குவது சிலபல ( ! ) வீடுகளில் நிகழ்ந்து கொண்டிருந்தது.  அதைப்பற்றி விசாரித்தபோது எங்காவது லீக் இருந்தால் கூட இப்படி ஆகும், எனவே உறை இறக்கினால் அவற்றைத் தடுத்து விடும்.  செய்யலாம் என்றார்கள்.  நிறைய செலவு செய்து அதையும் செய்தோம்.  கூடவே சம்ப் டேங்கில் உள்ளே டைல்ஸ் பதித்தோம். செப்டிக்  டேங்க் மற்றும் கழிவு நீர்த்தொட்டிகளால் உள்ளே லீக் ஆகிறதா என்று சோதித்தோம்.  

உறை மாற்றுபவர்கள் இடைவெளியில் சாப்பிட்டவர்கள் கைகழுவவும், டிபன்பாக்ஸ் கழுவவும் எங்கள் தண்ணீரைப் புறக்கணித்து எதிர் வீட்டுத் தண்ணீரில் கழுவினார்கள்.  "இந்த தண்ணீரை மனுஷன் உபயோகிப்பானா?" என்று பேசிக்கொண்டதைக் கேட்டபோது...

நாங்கள் அதில்தான் குளிக்கிறோம்,  பாத்திரம் தேய்க்கிறோம்.  குடிக்க, அரிசி கழுவ, சமையலுக்கு மட்டும் RO தண்ணீர் மற்றும் அவ்வப்போது இரண்டு கேன் தண்ணீர் வாங்கி உபயோகித்துக் கொண்டிருந்தோம்.

வீட்டு உரிமையாளர்களாக நாங்கள் இருவர் மட்டும் இருக்க, மற்ற நான்கு வீடுகளில் வாடகைக்கு இருந்தார்கள்.  அவர்கள் உரிமையாளர்களிடம் தண்ணீர் பிரச்னை பற்றி புகார் செய்ய, உரிமையாளர்கள் அங்கேயே இருக்கும் எங்களிடம் பிராது வைத்தார்கள்.  ஆவன செய்யக் கோரினார்கள்.

ஆனால் உறை மாற்றியும் பிரச்னை தீரவில்லை.  பேக்வாஷ் மெஷின் மாற்றியதில் நீரின் நிறம் வெள்ளைக்கு வந்தது ஒரு சாதனை.  ஆனால் நாற்றம் போதிய இடைவெளிகளில் வந்துகொண்டே இருந்தது.

நாங்கள் ஒரு சாப விமோசனத்துக்காக காத்திருந்தோம்.  நடுநடுவே பில்டரிடம் பேச எடுத்துக் கொண்ட முயற்சிகள் வீணாயின.  அது என்னவோ அவர் எப்போதும் வெளியூரிலோ, வெளிநாட்டிலேயேவோ இருந்தார்!

சாப விமோசன நேரம் நெருங்கியது.

அன்று மோட்டார் தண்ணீரை ஏற்றாமல் சண்டி செய்தது.  வழக்கம்போல செய்த ஏர்லாக் சிசுரூஷைகளும் பயனளிக்காமல் போக, பிளமப்ர வேலையும் தெரிந்த நண்பர் வந்தார்.  கிணற்றைத் திறந்து அந்தக் குழாயையே சற்று தூக்கி ஆட்டிவிட்டு போட்டார்.  ஏறத்தொடங்கியது.  எனினும் கழற்றி மேலே எடுத்து சுத்தம்செய்து கொண்டிருக்கும்போது திடீரென மேகம் இருட்டி மழை பொழிய, கிணற்றுக்குள் சரசரவென தண்ணீர் கொட்டத் தொடங்கியது.  நாற்றமும்!  எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் மழைநீர் சேகரிப்பு என்கிற பேயரில் பில்டர் செய்திருந்த ஏமாற்றுவேலை தொட்டியிலிருந்து வந்து கொண்டிருந்தது.  அதைத் திறந்தததுமே நாற்றம் தாக்கியது.  இரண்டரை வருடங்களாக அடியில் தேங்கி கிடைக்கும் த்சண்ணீர் மீது மொட்டை மாடியிலிருந்து மழைநீர் குழாய் வழியே வந்து விழுந்து அதிலிருந்து கிணற்றுக்குள் விழும்படியான ஒரு அரைகுறை அமைப்பு.  ஏற்கெனவே அதில் பேருக்கு இருந்த மணல், கூழாங்கற்களை யாரோ அகற்றியிருந்தார்கள்.  சேறும் சகதியுமாய் அடியில் தேங்கி இருந்தது.  புழுவும் சோற்றுப்பருக்கைகளுமாய் பார்க்கவே கன்றாவியாய் இருந்தது.  அதை வெளியேற்றி மூடிவிட்டோம். பத்து நாட்கள் வெள்ளோட்டம் பார்த்தோம்.  அதைச் சரி செய்ததும் எங்கள் பிரச்னை தீர்ந்தது.

==========================================================================================================

50 யானைகளுக்கு மேல் கொன்றவரும் பல நூறு போலீசாரின் உயிரிழப்புக்கு காரணமானவரும் பல கோடி மதிப்புள்ள சந்தன மரங்களை வெட்டி சாய்த்தவருமான வீரப்பனுக்கு 'வனக்காவலன்' என்று பட்டம் கொடுத்துள்ள சீமானின் செயலை என்னவென்று சொல்வது?

அப்படியா? யானைகளையும் பல கோடி மதிப்புள்ள சந்தன மரங்களையும் கடத்தினாரா?   சரி கடத்தினார் என்றே வைத்துக்கொள்வோம்.  அதை வாங்கியவர்கள் நாட்டுக்குள்ளே தானே இருக்க வேண்டும்? ஏன் இதுவரை ஒருவரும் கைதுசெய்யப்படவில்லை?

ஒருவர் மீது குற்றம் சுமத்தினால் அதற்கு ஆதாரம் வேண்டும், 50 யானைகளை சுட்டார் என்று ஒரு எண்ணிக்கையை எப்படி சொல்ல முடியும்? அந்த காட்டிற்குள் சென்று செத்த யானைகளை கணக்கெடுத்தார்களா? இல்லை வீரப்பன் சுடும் போது பக்கத்தில் நின்று பார்த்தார்களா?  சந்தன மரங்களை கடத்தினார் என்றால் அதை வாங்கியவர்கள் யார் யார்? ஏன் யாருமே கைது செய்யப்படவில்லை? பிறகு எதை வைத்து சந்தன மரங்களை கடத்தியதாக சொல்ல முடியும்?

சரி கடத்தினார் என்றே வைத்துக்கொள்வோம் அதன் மூலம் அவர் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தில் வீரப்பன் கட்டிய பங்களா, வங்கித்தொகை, சொகுசு கார் இவையெல்லாம் எங்கே? இதெல்லாம் வீரப்பனிடம் இல்லை என்றால் அவருக்கு எதற்கு கோடிக்கணக்கில் பணம்? இருந்தது என்றால் எங்கே போனது அந்த பணம்?

இது போன்ற ஆடம்பர பொருள்கள் ஊழல்வாதிகளான கருணாநிதி ஜெயலலிதாவின் வீடுகளில் இருக்கிறது. ஹம்மர் கார் கூட வேலைவெட்டிக்கு போகாத அவரது பேரனிடம் இருக்கிறது, இத்தனை ஊழல் புரிந்த கருணாநிதி ஜெயலலிதாவிற்கே பீச்சில் மணிமண்டபம் கட்டும் போது வீரப்பன் இருந்த காலம் வரை காடு காடாக இருந்தது அங்கு மரக்கடத்தல், குவாரிகள் என எதுவும் செயல்படவில்லை. இப்போது அனைத்தும் ஏகபோகமாக நடந்து வருகிறது என்பதையும் கவனிக்க வேண்டும், எனவே அவரை வனக்காவலன் என்று சொல்வதில் தவறில்லை!

வன அதிகாரிகளை சுட்டுக்கொன்றார் என்றால் வன அதிகாரிகள் என்ன தவறு செய்தார்கள் என்பதையும் பேச வேண்டுமல்லவா? பழங்குடி பெண்கள் தானே கேட்க நாதியில்லை தினம் ஒரு பெண் என்று கும்மாளம் அடிக்கலாம் என்று கருதிய பலர் எமலோகம் சென்றனர் அதன் பிறகு பழங்குடி பெண்களை எவனாவது தொடுவான்?

வன அதிகாரிகள் தான் காசு வாங்கிக்கொண்டு மேற்சொன்ன கடத்தல்களில் ஈடுபட்டனர் பழியை வீரப்பன் மீது போட்டனர்.

ஆரம்ப காலங்களில் தானும் யானை வேட்டை ஆடியதாக வீரப்பன் தெரிவித்திருந்தாலும் பின்னாளில் அந்த தவறை உணர்ந்து அவ்வாறு செய்வதை நிறுத்திக்கொண்டார். ஏழ்மையாக காட்டுவாசி போல தான் கடைசிவரை வாழ்ந்தார், தன் மனைவியை தவிர வேறு பெண் சகவாசம் கிடையாது, குடி கும்மாளம் கிடையாது இன்று சொல்வார்களே "டி டோட்டலர்" என்று அது வீரப்பனுக்கும் பொருந்தும்.

காட்டுக்குள்ள ராஜுகுமாரை கடத்த தெரிந்த வீரப்பனுக்கு நமீதாவையும் நயந்தராவையும் கடத்த தெரியாதா இல்லை முடியாதா? இங்க நாட்டுக்குள்ள அவனவன் மனைவி துணைவி இணைவி என்று ஊருக்கு ஊர் ஒரு கிராமத்தை உருவாக்கிக்கொண்டிருந்த வேளையில் ஒழுக்கமுடன் இருந்து தான் கட்டிய பொண்டாட்டி தவிர வேறு யாரையும் நினைச்சுக்கூட பார்க்கல.

வீரப்பனால் காட்டுவளங்களை திருட நினைத்தவர்களால் அது முடியவில்லை என்கிற காழ்ப்புணர்வில் தங்களால் முடிக்க முடியாத வழக்குகள் கொலைகள் எல்லாவற்றையும் வீரப்பன் மீது போட்டார்கள்.

இத்தனை அக்கறையுடன் கேள்வி கேட்டவர் ஏன் மேற்கு தொடர்ச்சி மலைகளை திமுக வின் கொடியை பறக்க விட்டு பட்டப்பகலில் கனிம வளங்களை திருடுகிறார்களே அதை பற்றி பேச முடியவில்லை? மணல் மாஃபியாவான சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கிய முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, செந்தில் பாலாஜி உள்ளிட்ட இன்னும் பலரது பெயர் இருப்பதாக தகவல் வந்திருக்கும் நிலையில் அது குறித்து பேசாமல் வீரப்பன் கொள்ளையன் யானைகளை கொன்றார் சந்தன மரங்களை கடத்தினார் என்று பேசுவது என்ன ஒரு முரண்?

வீரப்பன் காடுகளில் இருந்த வரை அந்த காடு தமிழ் நாட்டிற்கே அரணாக விளங்கியது, வீரப்பன் இறக்கும் வரை வாலாட்ட முடியாமல் இருந்த கர்நாடகம் வீரப்பன் மறைவிற்கு பிறகு ஒக்கேனக்கல் எங்களது என்று கூறி எல்லை தாண்டி வந்து உட்கார்ந்துக்கொண்டான் எடியூரப்பா, எல்லை தாண்டி வந்து தமிழ் எழுத்துக்களை அழிக்கிறான் வாட்டாள் நாகராஜ், வீரப்பன் இருந்த போது வந்து போராடியிருக்க வேண்டுமல்லவா? வந்து தமிழ் எழுத்துக்களை அழித்திருக்க வேண்டுமல்லவா? ஏன் செய்யவில்லை? முடியாது! அதனால் தான் வீரப்பன் எல்லைக்காவலன்!

“காடுகளை எல்லாம் கார்பரேட்டுக்குத் தாரை வார்த்து, அதை எதிர்த்த பழங்குடியினரைப் பச்சை வேட்டை என்ற பெயரில் கொன்ற காங்கிரஸ், இப்போது வனங்களை, இயற்கைச் செல்வங்களை அம்பானி, அதானிகளுக்குத் தாரை வார்க்கும் பாஜக ஆகியவற்றைக் குற்றம் சாட்டாமல் அந்த கார்பரேட்டுகளை எதிர்த்துப் போராடாமல், வீரப்பன் என்கிற தனி மனிதனைக் குற்றம் சாட்டுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

“வீரப்பன், மரங்கள் – தாவரங்கள் மீது அக்கறை கொண்டவர். மரத்தடி அருகே அடுப்பை வைத்துச் சமைக்காதீர்கள் என தனது குழுவினரிடம் சொல்வார். காரணம், மரத்தின் வேர்ப் பகுதி சூடு காரணமாகப் பாதிக்கப்படக் கூடாது என்பதால். தவிர அவர் அறியாமல் வனம் காக்கப்பட்டதும் உண்டு. அதாவது, அவரைப் பிடிக்க ஏராளமான காவலர்கள் வனத்துறையில் செக்போஸ்ட் அமைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனால் வேட்டைக்காரர்கள் காடுகளில் நுழைய முடியாத நிலை இருந்தது. இதனால் வனம் காப்பாற்றப்பட்டது என்பது உண்மையே" என்கிறார் வீரப்பனை முதன்முதலில் பேட்டிக் கண்ட சிவசுப்பிரமணியம்.

வீரப்பனை வேட்டையாட அதிரடிப்படையினர் இரவு பகலாக செக் போஸ்ட் அமைத்து பல வருடங்களாக தேடி வந்த போது அவர் எப்படி யானைகளை கொன்று தந்தங்களையோ இல்லை சந்தன மரங்களை வெட்டியோ கடத்தியிருக்க முடியும்? வாய்ப்பே இல்லை என்பதால் இந்த குற்றச்சாட்டுகளை உண்மையில்லை என கூறி மறுக்கிறோம்.

இன்று சத்தியமங்கலம் காடுகள் பாதுகாப்பின்றி மரக்கடத்தல்கள் குவாரிகள் என உண்மையான திருடர்கள் கொள்ளையர்களின் வேட்டைக்களமாக திகழ்கிறது, வீரப்பனால் அவை பாதுகாப்பாக இருந்தது எனவே அவர் வனக்காவலர்!

வீரப்பன் என்ற ராபின்ஹுட் பற்றி விவரம் தெரிய வேண்டுமென்றால் அரசிடம் கேட்டு பயனில்லை, அவர்கள் கதை வேறு விதமாக இருக்கும் களத்திற்கு சென்று அங்கு வாழும் பழங்குடியினரிடம் கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் எங்க வீட்டு பெண்கள் கற்பை, எங்கள் காட்டை காத்த வீரப்பன் எங்கள் குல சாமி என்று!

கஞ்சா கடத்துவதும், இயற்கை வளங்களை கொள்ளையடித்துவரும் கார்பரேட்டுகள் பற்றி வாய்திறக்காத கார்பரேட் ஊடகங்கள் வீரப்பனை கொள்ளையன் கொலைகாரன் என்று சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை! இங்கு பரப்புரை மேற்கொண்டால் வனக்காவலனை வன கொள்ளையன் எனவும் வனக் கொள்ளையனை காவலன் எனவும் திரித்து ஒரு பிம்பத்தை உருவாக்கிட முடியும் என்று கருதுகிறது கார்பரேட் ஊடகங்கள்!

வீரப்பனை குற்றம் சாட்டும் அரசு மற்றும் ஊடகங்கள் வீரப்பன் வெட்டி விற்ற சந்தன கட்டைகள் யாரிடம் இருக்கிறது, கொன்று திருடிய யானை தந்தந்தங்கள் யாரிடம் இருக்கிறது என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறோம். அதை வாங்கியவர்களை கைது செய்ததா இல்லையா? இல்லை என்றால் ஏன் செய்யவில்லை? என்பதையும் கேட்டு சொல்லுங்கள்! அதோடு வீரப்பனின் சுவிஸ் அக்கவுண்டையும், சொகுசு பங்களா காரையும் பொதுமக்களின் பார்வைக்கு தெரியப்படுத்துங்கள்!

மக்கள் தெரிந்து கொள்ளட்டும் மேற்சொன்ன இதெல்லாம் வைத்திருக்கும் உண்மையான கொள்ளையர்கள் யார் என்று!

வீரப்பன் வனக்காவலன்! வீரப்பன் எல்லைக்காவலன் என்பதில் மாற்று கருத்து இல்லை!!!

- கோராவிலிருந்து ஒரு பகிர்வு! -


================================================================================





இன்னும் எவ்வளவு தூரமோ..
திரும்பி விடலாம்
என்றுதான் திரும்பினேன்
இ(வ)ந்தப் பக்கமும் பயணம்
அப்படி ஒன்றும்
சௌகர்யமாயில்லை
   

 எதிரில் வரும்
ஒரு மனிதன்
சொல்லக் கூடும்
இந்தப் பாதை
எங்கு முடிகிறதென...
அல்லது
எங்கு தொடங்குகிறதென..

==========================================================================================================

கால்களே நில்லுங்கள்...   கவனத்தில் வையுங்கள்!



இன்றைய நிலையில் நீரிழிவு பிரச்னை என்பது சர்வ சாதாரணமாக பலரிடமும் நலம் விசாரிக்கிறது. வயதானவர்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும் நீரிழிவால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு பாதிப்புக்கு உள்ளானவர்கள் கவனக்குறைவுடன் இருக்கும் போது கால்களில் புண் (Diabetic foot ulcer) ஏற்படுவது முக்கிய பிரச்னையாக உள்ளது. திட்டமிட்ட உணவு, உடற்பயிற்சிகள் என நீரிழிவு பிரச்சனையை கட்டுப்படுத்த முயற்சித்தாலும், கால் புண்கள் பெரிய சவாலாகவே உள்ளன.


நீரிழிவால் பாதிக்கப்படுபவர்களில் 25 சதவீதத்தினர் கால் புண் பிரச்னைக்கும் உள்ளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவர்களுக்கு கால்களில் புண் உண்டானால் சரிவர ஆறுவது கடினமானது. அதேவேளையில், பலருக்கும் தங்களின் கால்களில் புண் ஏற்படுவதை சரிவர உணர முடிவதில்லை. சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் கால்கள் தப்பிக்கும்; இல்லாவிட்டால் தசைகள், எலும்புகள் என கிருமிகள் ஆதிக்கம் செலுத்தும் போது உயிருக்கே ஆபத்தாகி விடக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே, கால் பாதங்களை முறையாக பராமரிக்க சில வழிமுறைகள்...

வெளிச்சம் உள்ள இடத்தில் உட்கார்ந்து அடிக்கடி உங்கள் கால்களை, குறிப்பாக பாதங்களை நன்றாக பரிசோதிக்கவும். அதில், எரிச்சல், கொப்புளங்கள், பாதவெடிப்புகள், புண்கள் மற்றும் முள் குத்திய தடம் ஏதாவது உள்ளதா என பார்க்கவும். முகம் பார்க்கும் கண்ணாடியை பயன்படுத்தினால் பாதங்களை முழுமையாக பார்க்க முடியும். தொடர்ந்து, உங்களின் கை விரல்களை கொண்டு பாதங்களை அழுத்திப்பாருங்கள். ஏதாவது வலி தெரிந்தால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பாக கால்களை சோப்பு போட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தம் செய்யவும். பாதங்களில் வெடிப்புகளை தவிர்க்க தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ச்சரைசர் கிரீம்களை தடவலாம். அடிக்கடி கால் விரல்களில் தண்ணீர் படும்போது ஒருசிலருக்கு சேற்றுப்புண் (Athlete's foot) ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கால் விரல்களுக்கு இடையில் உலர்ந்துள்ளதா என உறுதிசெய்து, காட்டன் துணி அல்லது டவல் பயன்படுத்தி பாதங்களை துடைத்து உலர வைக்கவும்.

வாரம் ஒருமுறை கட்டாயமாக கால் நகங்களை வெட்ட வேண்டும். ஒட்ட வெட்டுவதை தவிர்க்கவும்; இல்லாவிட்டால், புண் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

கால் பாதங்களில் ஏதாவது புண் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும். வெளியிடங்களில் செருப்பின்றி நடமாடுவதை தவிர்க்க வேண்டும். காலை வாக்கிங் செல்பவர்கள் கட்டாயம் ஷூ அணிய வேண்டும்.

டாக்டரின் அறிவுரைப்படி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அடிக்கடி பரிசோதித்து நீரிழிவை கட்டுக்குள் வைக்க முயற்சிக்க வேண்டும்.
==================================================================================================================================

அன்று சொன்னது..   அர்த்தமிருக்கோ இல்லையோ...   சும்மா மறுபடி!




=============================================================================================================================


பொக்கிஷம்!

இந்தப் புன்னகை என்ன விலை?


ஹிஹிஹி...  கோச்சுக்காதீங்க ஜீவி ஸார்...   இந்த வார ராஜாஜி!


முயற்சி பண்ணுங்க....



88 கருத்துகள்:

  1. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
    வானம் வழங்கா தெனின்..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. வெள்ளிக்கு முன் வந்திருக்கும் வியாழன்..

    வித்தக ஒளியாய் வியாழன் வருக..

    பதிலளிநீக்கு
  3. விடியல்..

    இதற்கு மாற்றாக என்னவெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது?..

    பதிலளிநீக்கு
  4. தண்ணீர் புராணம் யோசிக்க வைக்கின்றது..

    பதிலளிநீக்கு
  5. இன்றைய வியாழன் கதம்பம் அருமை.

    நீரிழிவு முதல் பத்தியில் வாக்கியங்கள் ரிபீட் ஆகின்றன

    பதிலளிநீக்கு
  6. தவறோ சரியோ... காந்தி ராஜாஜி போன்ற அப்போதைய தலைவர்கள் தங்கள் மனசாட்சிப்படி நடந்தார்கள். என்ன ஒன்று... குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை (க்க்கன், காமராசர், வ உ சி போன்ற பலரின் நினைவு வந்து தொலைக்கிறது. குடும்பத்தைப் பரிதவிக்கவிட்டுவிட்டு தங்களைப் பொருட்படுத்தாமல் போகும் பொதுஜனங்களுக்காக வாழ்வு, சொத்தைத் தொலைத்தவர்கள் அவர்கள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எண்ணிக்கை பத்துக்குள் தேறுமா?

      நீக்கு
    2. பத்துக்குள் தேறுமாவது?.. தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டிலா? .. சொல்லுங்கள், வாரத்திற்கு ஒருவரை நினைவுகொள்ளலாம்.

      நீக்கு
  7. தண்ணீர் புராணம் திக் திக். க்ளைமாக்ஸ் சட்னு வந்துவிட்டது. இருந்தாலும்....

    லிவ்ப்யூர் ஆர் ஓ வாட்டர் மெஷின் லாபகரமானது. பிஷின், பராமரிப்பு போன்றவற்றிர்க்கு நமக்குச் செலவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ளைமாக்ஸ் படிக்கும்போதுதான் சட்டென வருகிறது். எங்களுக்கு நீண்ட நாள் தவிப்பு்

      நீக்கு
  8. முடிவு தெரியாத பாதையில் தனியாக நடக்கும் உணர்வைக் கவிதை தந்தது

    பதிலளிநீக்கு
  9. சமூகத்தில் வீரப்பன் போன்ற கடத்தல்/கொள்ளைக்கார்ர்களை வளர்த்துவிடுவதும், நன்கு வளர்ந்தபின் கைமீறிப் போகும்போது அவர்களை அழிக்க முயற்சி செய்து, அவர்களுக்கு மோசமான வில்லன் பிம்பம் கொடுப்பதும் ஒருவரே. இதைத்தான் ஆட்டோ சங்கர் விஷயத்திலும் பார்த்தோம்

    ஆனால் இந்த உண்மையினால் கடத்தல்/கொள்ளைக்கார்ர்கள் புனிதர்களாகமாட்டார்கள். வனக்காவலன், பொதுமக்களுக்கு உதவியவன் என்றெல்லாம் மாலைகள் சூட்டி மறைத்துவிடமுடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். முடிவுதான் கிடைக காது. வழக்காடுபவர. சாமர்த்தியம்.

      நீக்கு
  10. // டாக்டரின் அறிவுரைப்படி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ... //

    எப்படியோ மருத்துவம் (!) பிழைத்துக் கொண்டிருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  11. தண்ணீர்ப் பிரச்னை கேட்டதும் கஷ்டமாக இருந்தது. நான் கல்யாணம் ஆகிப் போகும் வரையிலும் மதுரையில் தண்ணீர்ப் பிரச்னை இருந்தது எனினும் வீட்டில் கார்ப்பரேஷன் குழாய் (அப்போ முனிசிபாலிடி) இருந்ததால் தெரியலை. கல்யாணம் ஆகிப் போனப்புறமோ தண்ணீருக்கோ நல்ல பாலுக்கோ, வீடு அமையவோ கஷ்டப்பட்டதே இல்லை. இது இறைவன் கருணையின்றி வேறே எதுவும் இல்லை. _/\_

    பதிலளிநீக்கு
  12. கால் பிரச்னை எனக்குச் சின்ன வயசில் இருந்தே இருக்கு என்பதால் இது சர்க்கரையினால் வரும் வலினு புரிஞ்சுக்கறது கஷ்டம். முக்கியமாய் வெரிகோஸ் நரம்புகள் கன்னாபின்னாவெனச் சுருட்டிக் கொண்டிருப்பதால் வலியும் அதிகமாகவே இருக்கு! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போவே சாக்ஸ் எல்லாம் போட்டுக்கொண்டு (செவிலியர் போடுகிற மாதிரிக் கால் முழுக்கவும்) கால் வலிக்குத் தக்க சிகிச்சை எடுத்துக்கொண்டு கவனிச்சுக்கவும். அலட்சியம் வேண்டாம். ஏற்கெனவே கண்/பல் ஆகியவற்றில் அலட்சியமாய் இருக்கீங்க. நாங்க இப்போத் தான் சமீபத்தில் கண்ணையும் காட்டிட்டு வந்தோம். நரம்புகள் பலவீனமாக இருப்பதாகச் சொல்லி அதுக்கு விலை அதிகமான மாத்திரைகள் கொடுத்திருக்காங்க. மற்றபடி கண்களில் கோளாறு இல்லை. பவரும் இல்லை. காடராக்டும் ஆரம்ப நிலையில் தான்.

      நீக்கு
    2. இதோ அதோ என்று ஓடி விடுகிறது சீக்கிரம் நாள் அமைய வேண்டும்

      நீக்கு
    3. "பவரும் இல்லை" என்றால், கண்ணுக்கு பவர் இல்லை என்று அர்த்தமா? இல்லை கண் ரொம்ப நல்லா இருக்குன்னு அர்த்தமா?

      நீக்கு
    4. எனக்கு திரும்பவும் பாதவலி ஆரம்பித்திருக்கிறது, சில மாதங்களாக. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, திரும்ப நடக்கும்போது ரொம்ப வலி. இது வாரத்தில் 4 நாட்கள் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பதாலா என்று தெரியவில்லை.

      நீக்கு
    5. உடம்பு வலிக்கு மறுபடியும் ஒரு மசாஜர் வாங்கி இருக்கிறேன். இந்த முறை கொஞ்சம் அப்பிரவாயில்லை!

      நீக்கு
  13. காந்தி/ராஜாஜி இருவர் படத்தையும் போட்டிருக்கீங்க! உங்கள் கவிதை எங்கோ முடிவில்லாப் பயணத்தில் இருப்பதைப் போன்ற மயக்கத்தில் ஆழ்த்துகிறது.

    பதிலளிநீக்கு
  14. அந்த மழைநீர் வடிகாலைச் சுத்தப்படுத்தின கையோடு அது மறுபடியும் நல்லா வேலை செய்யும்படி ஜல்லி, மணல் எல்லாம் போட்டு மாடி நீரை அதில் விட்டுச் சுத்தம் செய்து பின் கிணற்றுக்குள் போகும்படி பண்ணி இருக்கலாமோ? அம்பத்தூரில் எங்க வீட்டுக் கிணற்று நீரின் சுவையே மாறியது. அக்கம்பக்கம் எல்லாம் வந்து தண்ணீர் இறைச்சு எடுத்துட்டுப் போவாங்க.

    பதிலளிநீக்கு
  15. நகைச்சுவைத் துணுக்குகள் எல்லாம் படிச்சுட்டேன் முன்ன்ன்ன்னாடியே! :)

    பதிலளிநீக்கு
  16. தண்ணீர் நிலைப்பாடு எல்லா இடங்களிலும் பிரச்சனைதான்.

    வீரப்பன் பற்றிய தகவல்கள் யோசிக்க வைத்தது.

    கவிதை அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீர் வராமல் இருப்பது ஒரு பிரச்சனை! தண்ணீர் சுத்தமாக இல்லாது இருப்பது வேறு பிரச்சனை!!

      கவிதையை ரசித்ததற்கு நன்றி ஜி

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    தங்கள் வீட்டு தண்ணீர் பிரச்சனை ஒரு வழியாக பல சிரமங்களுகிடையே நல்ல விதமாக முடிந்தது மகிழ்ச்சி. நாங்கள் சென்னையிலிருக்கும் போது( 1980 ல்) வரும் கார்ப்பரேஷன் குடி நீர் இப்படித்தான் நிறைய தொந்தரவுகளை தந்து கொண்டிருந்தது. வீட்டில் போர்வெல் தண்ணீரே கிடையாது. எல்லாவற்றுக்கும் இதே கார்ப்பரேஷன் கலங்கல் தண்ணீர்தான். அதுவும் நான்கு குடித்தனதிற்கு போதுமானதாக சரியாக வராது. அதுபோக சென்றவிடமெல்லாம் இந்த தண்ணீர் பிரச்சனைகளை சந்தித்து வாழ்க்கையே வெறுத்து வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறோம் . கஸ்டந்தான்.. அதனால்தான் உங்கள் பிரச்சனையும் என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. இனிமேலாவது அனைத்தும் நல்லபடியாக நடக்க வேண்டிக் கொள்வோம்.

    எங்கே பாதை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்.. என்பதாகத்தானே வாழ்க்கை சென்று கொண்டுள்ளது. அந்தப்பாடலின் வரிகளைப் போல உங்கள் கவிதையின் வரிகளும் அருமை. ரசித்தேன்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் இவ்வளவு காசு கொடுத்து வீடு வாங்கி இப்படி ஏமாந்துட்டோமே என்றும் தோன்றும்.  எவ்வளவோ ஏமாற்றங்கள்...  காசையே ஒரு பில்டர் ஏமாற்றியிருக்கிறான்...   அதோடு இதுவும்...  இப்போதும்  விட்டதா என்று உறுதி இல்லை.

      நீக்கு
  19. தண்ணீர் பிரச்சனை - முடிவில் அதற்கான காரணம் அறிந்து நல்லபடியாக முடிந்தது "அப்பாடா" என்றிருந்தது...

    பதிலளிநீக்கு
  20. ஒரு சிலவரின் கவனக்குறைவு நம்மை எப்படியெல்லாம் பாடாய் படுத்துகிறது, தங்கள் வீட்டு தண்ணீர் பிரச்சினையும் மூலத்தைக் கண்டுபிடித்தது மகிழ்வினைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
  21. கவிதை அருமை... நினைவுக்கு வந்த பாடல் வரிகள் :-

    எங்கே வாழ்க்கை தொடங்கும்...?
    அது எங்கே எவ்விதம் முடியும்...?
    இதுதான் பாதை - இதுதான் பயணம் - என்பது யாருக்கும் தெரியாது...
    பாதையெல்லாம் மாறிவரும் - பயணம் முடிந்துவிடும் ...

    மாறுவதைப் புரிந்து கொண்டால் - மயக்கம் தெளிந்துவிடும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்கா கூட இதே பாடலை நினைவு கூர்ந்திருக்கிறார்கள்.

      நீக்கு
  22. வீரப்பன் - எழுதப்பட்ட பல கேள்விகளுக்கு விடை கிடைக்காது... ம்...

    பதிலளிநீக்கு
  23. உங்கள் தண்ணீர் பிரச்சினைப்பற்றி படிக்கப் படிக்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ஒரு வழியாக பிரச்சினை கண்டு பிடிக்கப்பட்டு, தீர்வும் கிடைத்ததறிய மகிழ்ச்சி!
    சொந்த வீட்டில் இப்படிப்பட்ட பிரச்சினைகள் நிகழும்போது அதை விட்டு ஓடவும் முடியாது. இருக்கவும் முடியாது. சரியாகிறவரை அனுபவிக்கும் அவஸ்தைகள் மன நிம்மதியை இழக்கச் செய்து விடும். கொரோனாவால் ஒரு வருடம் தஞ்சை செல்லாமலிருந்து பின் சென்ற போது, மோட்டார், குழாய்கள் என்று எல்லா இடங்களிலும் பிரச்சினை! நானும் இந்த வருடம் அந்த பிரச்சினையை அனுபவித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ அக்கா...  உண்மைதான்.  வாடகை வீடாயிருந்தால் மாற்றிக்கொண்டு ஓடி விடலாம்.  சொந்த வீடாயிருப்பதால் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதாகிறது!

      நீக்கு
  24. மழைநீர் மீத்தேன் நீர் ஆகி கிணறு நீருடன் கலந்து தொட்டியில் நிறைந்த கதை சிறுகதைக்குரிய இலக்கணங்களுடன் நன்றாக இருந்தது. அந்த இரண்டாவதின் இருப்பிடமும் சீக்கிரம் துலங்கட்டும்.

    வீரப்பன் ராபின்ஹுட் அரசிடமும் பணக்காரர்களிடமும்  பிடுங்கி ஏழைகளுக்கு உதவினான். ஆனால் தற்போது? நவீன ராபின்ஹுட்  நடுத்தர வர்க்கத்தினரைச் சுரண்டி முதலாளிகளுக்கு கப்பம் கட்டுகிறான். யாரைப் போற்றுவது? 

    இலக்கில்லாப் பயணம் 
    என்றும் எப்போதும்
    இனிப்பதில்லை. 

    பாதைகள் எல்லாம் 
    நேர்க்கோடுகள் அல்ல.
    அவை 
    வட்டமாகவும் அமையலாம் 
    துவக்கம் முடிவு இல்லாமல் 
    செக்குமாடு செல்வது போல 
    வாழ்க்கையும் அமையலாம். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீரப்பர்கள் முன்மாதிரி ஆகி விடுகிறார்கள்.  மக்கள் எப்போதுமே ஏமாளிகள்தாம்!  எசக்கவிதை ஓகே!

      நீக்கு
  25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  26. காந்தி சிரிக்கிறார்
    ரூபாய் நோட்டிலும்
    டாலருக்கு 82 ரூபாய்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  27. தண்ணீர் பிரச்சினை நிறைந்த சிரமம் தான்.
    காந்தி ராஜாஜி படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  28. ஸ்ரீராம். எங்களுக்கு Black water-ரே அப்பப்போ குழாயில் கொட்டும். Acqa guard, washing mechine இவற்றிற்கு கேடு! இந்தப் பகுதியில் Iron content அதிகம் என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது இந்தியாவில் இல்லையா?

      நீக்கு
    2. நான் குறிப்பிட்டது போரூர் ஏரியாவில்.

      நீக்கு
    3. அப்பாடி என்றும் இருக்கிறது என்று சொன்னால் கோபித்துக் கொள்வீர்களா?!!

      நீக்கு
  29. கறுப்புப் பணம் மாதிரி கறுப்புத் தண்ணீரா?

    பதிலளிநீக்கு
  30. கல்லூரி மாணவராய் இருந்த பொழுதும் இராசாசிக்கு (விடுதலை பத்திரிகை எழுதுகிற மாதிரி) இதே முப்பது வயது முகத்தோற்றம் தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராசாசியின் முப்பது வயது அல்ல!! தாணுவின் கல்லூரிப் பருவம்.

      நீக்கு
  31. 'நீங்கள் என்னைக் குறிப்பிடுகிறீர்கள் என்றால் 'என் பெயர் இராசாசி அல்ல' என்று விடுதலை பத்திரிகைக்கு ராஜாஜியே கடிதம் எழுதியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  32. காலை வேளை பிஸி. அப்புறம் வருகிறேன், ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  33. வீரப்பன் பற்றிய மாற்று சிந்தனை அபாரம். இந்த வியாழனுக்கு வீரியம் கொடுத்த கட்டுரை அது. வாசிக்காதவர்களுக்கு, தெரியப்படுத்துகிற பணி.
    தொடரட்டும் இந்த மாதிரியான புதுப் பார்வைகள்!!

    பதிலளிநீக்கு
  34. உங்கள் வீட்டு தண்ணீர் பிரச்சனை சரியாகி விட்டது நிம்மதி.
    தண்ணீர் சரியில்லை என்றால் மிகவும் கஷ்டம். அதன் காரணம் அறிந்து சரிசெய்து விட்டது சாதனைதான்.

    கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்க்கை பாதையில் இன்னும் எவ்வளவு தூரம் கடக்க வேண்டும் என்பது எங்களை போல் உள்ளவர்கள் சிந்திப்பது.
    கால்களே பாடல் கேட்டு வருடம் பல ஆகி விட்டது. கேட்டேன். கால் பாராமரிப்பு பகிர்வு பயனுள்ளது.
    கால் வலி தான் வயதானபின் வரும் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம். சிறு குழந்தைகளும் கால் வலி என்று சொல்கிறார்கள். மற்ற பகிர்வுகளும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீர்ப்பிரச்னை சரியாகி விட்டதாகத்தான் நம்புகிறோம்.  ஆனாலும் அவ்வப்போது சிறு நாற்றங்கால் தெரிகின்றன...  கால்களே நில்லுங்கள் பாடலை நீங்கள் மட்டுமே கவனித்திருக்கிறீர்களா என்று நினைக்கிறேன்.  நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  35. // இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே....!///

    போன கிழமை களம் குதிக்க வெளிக்கிட்டு, முடியாமல் போய், இன்று வந்தேன், இந்தப் பாட்டு வரிகள் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி.. என் பேவரிட் பாடல்களில் இதுவும் ஒன்று:)..

    தண்ணீர்ப் பிரச்சனை, பெரும் கஸ்டப்பட்டிருப்பீங்கள்.. தண்ணி இல்லை /சரியில்லை எனில் எவ்ளோ கஸ்டம்... பொதுவாக புது பில்டிங்குகளில் இப்படித்தான் ஆரம்பம் சிலசில சிக்கல்கள் வந்துதான் தீரும்.

    அனுஸ்காவை விட்டுப்போட்டு எதுக்கு ஸ்ரீராம் நயந்தாராவையும் நமீதாவையும் வீரப்பனோடு சேர்த்துப் பேசுகிறார் என ஓசிச்சேனா.. அது வேறு யாரோ போட்ட பதிவு எனப் பின்பு தெரிய வந்துது:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீரப்பன் அனுஷை கடத்தி இருக்க வேண்டும் என்கிறீர்களா?  கிர்ர்ர்ர்.....!  வாங்க அதிரா...  ரொம்ப நாளாச்சு..  போன வாரம் சில தளங்களில் உங்கள் கமெண்ட் பார்த்தபோதே இங்கும் 'அதிர'த்தொடங்கியதுதான்...  இப்போதுதான் வந்திருக்கிறீர்கள்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!