புதன், 5 ஏப்ரல், 2023

எந்த பண்டிகையாக இருந்தாலும் பிரசாதம் நமக்கு முக்கியமாக இருக்கிறதே? என்ன காரணம்?

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

எந்த பண்டிகையாக இருந்தாலும் பிரசாதம் நமக்கு முக்கியமாக இருக்கிறதே? என்ன காரணம்?

# எண் சாண் உடம்புக்கு நாக்கே பிரதானம் - நமக்கு !!

இறைவனின் பிரசாதம் அவன் அருளுக்கு ஓர் அடையாளம் அல்லவா !

& பிரசாதம்தானே நாம் உடனடியாக 'கை மேல் காணும்' பலன்! மீதி பலன்கள் பிறகுதான் கிடைக்கும்! 

நெல்லைத்தமிழன்: 

இப்போதெல்லாம் கடை உணவுகளில் காரம் மிக அதிகமாக இருக்கிறது. இதை நான் சென்னை, கேரளா மற்றும் கர்நாடகாவில் காண்கிறேன். இது மது அதிகமாக உட்கொள்வதால், மக்களுக்கு காரம் அதிகமாகத் தேவையாக இருக்கிறதோ? இல்லை சைட் டிஷ் வியாபாரத்தை எதிர்பார்த்து இதனைச் செய்கிறார்களா?

# மது வணிகம் இன்று நேற்றா வந்தது ? 

அதிகம் வெளியில் சாப்பிடுவதில்லை என்பதால் இது எனக்குப் புது செய்தி.  எனவே pass.

& எனக்கும் அதிக காரமும் ஒத்துக்கொள்ளாது; வெளியிடத்து சாப்பாடும் ஒத்துக்கொள்ளாது. 

எதற்காக முதியோர்களுக்கு இரயில் பயணச் சீட்டில் சலுகை விலையில் டிக்கெட் வழங்கவேண்டும் (40 சதம் விலை குறைவு)?  பாஜக அரசு அதனை நிறுத்தியதில் என்ன தவறு?

# நானும் இம்மாதிரி சலுகைகள் கூடாது என்ற கட்சிதான்.

& நான் ரயில் பயணம் செய்து ஒரு மாமாங்கத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஒருவேளை முதியவர்கள் வருமானம் இல்லாதவர்கள் என்பதால் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கலாம்.  எனக்குத் தெரியவில்லை. 

கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சி, 200 யூனிட் மின்சாரம் இலவசம் மாதம் 2000 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்படும் (ஒரு ரேஷன் கார்டுக்கு), 20 கிலோ அரிசி இலவசம் என்று சொல்லியிருக்கிறதே.இப்படி இலவசங்கள் வழங்குவேன் என்று சொல்வது லஞ்சமாகாதா?  இது, கர்நாடகா தேர்தலில் வெற்றியை அளித்தால், அடுத்து காங்கிரஸ், மத்தியில் ஆட்சிக்கு அமர்த்தினால் வருமான வரியை 5 சதமாகக் குறைப்பேன் என்றும் டூப் வாக்குறுதி வழங்கிப்பார்க்கலாமே. 

# லஞ்சம் கொடுப்பது போலதான். தி மு க வழியைப் பின்பற்றிச் செய்கிறார்கள். பெண்களுக்கு 1000 , 2000 எல்லாம் மிகத் தவறான திட்டம்.  இம்மாதிரி தவறுகள் தலை எடுத்தால்  களைவது கடினம். பொறுப்பற்ற தந்திரம்.

= = = =

எங்கள் கேள்விகள் : 

1) பள்ளிக்கூட / கல்லூரி நாட்களில் நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றது எந்தப் பாடத்தில்?

2) இதுவரையில் நீங்கள் அதிக முறைகள் (தியேட்டர் / தொலைக்காட்சி ) பார்த்த திரைப்படம் எது?

3) சிறிய வயதில் நீங்கள் அதிகம் விரும்பி விளையாடிய விளையாட்டு எது?

4) தொலைக்காட்சியில் ஒரு சினிமா பாடல் காட்சி - பிறந்தநாள் கொண்டாடும் ஒரு குழந்தையை சுற்றி சந்தோஷமாக ஆடிப்பாடுகிறார்கள் மற்றவர்கள். உங்கள் கற்பனையில் நீங்கள் பிறந்தநாள் கொண்டாடும் அந்தக் குழந்தையாக இருப்பீர்களா - அல்லது பாடுபவராக இருப்பீர்களா அல்லது ஆடுபவராக இருப்பீர்களா அல்லது வெறும் பார்வையாளராக இருப்பீர்களா? 

 = = = = = =

அப்பாதுரை பக்கம் :

பொன்மகள் வந்தாள்! 

பெண்ணுக்குக் கல்யாணம் என்றவுடன் இத்தனை நகை இத்தனை வரதட்சணை (இன்னும் தருகிறோமா?) இத்தனை பாத்திரம் பண்டம் இத்தனை விருந்து இத்தனை வேட்டி புடவை இத்தனை வழிச்செலவு இத்தனை தட்சணை இத்தனை தாம்பூலம் இத்தனை மொய் என்று செலவு வரவு (?) கணக்கு பார்த்துக் கலங்கிய காலம் பழங்காலமா? 

பட்டணத்து மாப்பிளைக்கு பெங்களுரு பொண்ணு.  பெங்களுரு பொண்ணு கல்யாணத்துக்கு, சரியா படிச்சுக்குங்க, 1500 பேருக்கு அழைப்பு அனுப்பினாங்க பெத்தவங்க. எப்படி? 12 அங்குல ஐபேட்ல அழைப்பு விடியோவை 1500 பேருக்கும் அனுப்பி வச்சாங்க! 

 

அஞ்சு நாள் கல்யாணம். அஞ்சாம 2000 பேர் வந்தாங்களாம். வந்தவங்களுக்கு பெங்களுரு வட்டார நட்சத்திர ஓட்டல்களில் அறைகள். தங்கச் சரிகை எங்கும் பளபளக்கும் உடைகள்.  அத்தனை பேருக்கும் தங்க சங்கிலி. 

மாப்பிள்ளை வீட்டார் அத்தனை பேருக்கும் அரச பாரம்பரிய உடைகள்.  பெண் கட்டிய முகூர்த்தப் புடவை பதினேழு கோடி. (பதினெட்டு கோடிக்குக் கேட்டுப் பாத்திருப்பாங்க. புடவைக் கடைக்காரர் முடியவே முடியாது, கடைசி விலை பதினேழு கோடின்னதும் புலம்பிக்கிட்டே வாங்கியிருப்பாங்க). கல்யாணத்தன்றைக்கு பெண் அணிந்த நகைகள் 90 கோடியாம். ரிசப்ஷன் போது அணிந்த நகைகள் இதெல்லாம் கணக்கு தனி. கல்யாணம் ரிசப்ஷன் இரண்டுக்கும் பெண் மற்றும் தோழியர் ஒப்பனைக்கு செலவு முப்பதே முப்பது கோடி. இதுக்கு மேலே எழுதினா குமட்டுது. விட்டுர்றேன்.

செய்தி: Former Karnataka Minister Janardhana Reddy spent over Rs 500 crores for his daughter's marriage.

வால்:

திருமண நிச்சயப் பத்திரிகை படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்து. வாழ்விலே முதன் முறை. நான் படித்த சில நிபந்தனைகள் (கல்யாண நிச்சய பத்திரிகையில்!):

- வாரத்தில் மூன்று நாட்களுக்கு மேல் பெண் சமையல் செய்ய மாட்டாள்

- பெண் சம்பளம் எத்தனை உயர்வு எத்தனை போன்ற கேள்விகளை பிள்ளை வீட்டார் கேட்கக் கூடாது

- பெண்ணின் வேலை மும்பையில், பையனின் வேலை பெங்களூரில். பெண் தனக்குப் பிடித்த வேலை பெங்களூரில் கிடைக்கும் வரை மும்பையில் தான் வாசம். இரண்டு மாதத்துக்கு ஒரு முறை பிள்ளையும் பெண்ணும் மும்பை பெங்களுரு என்று மாற்றி மாற்றி வீட்டில் அல்ல ஓட்டலில் வாசம் (கோர்ட்யார்ட் மேரியட் தர ஓட்டல் - பெயர் கூட குறிப்பிட்டு)

படித்த எனக்கு இருந்த சங்கடம் பக்கத்தில் இருந்த பெண் பிள்ளைக்குக் காணோம்.

கொசுறு:

அமெரிக்கால வீட்டுக் கதவை முதலை தட்டுனா நம்ம ஊர் மட்டும் என்ன குறைஞ்சா போயிடும்?

நம்மூரு கேரளால பத்தனம்திட்டானு ஊரு. திட்றாப்ல இருந்தாலும் அதான் பேரு. 

அந்த ஊர் வாசி சோமராஜன். ஒரு நாள் காலைல எழுந்து குளக்கரை போயிட்டு வந்தவர் வீட்டுத் திண்ணைல ஆஜானுபாகுவா உக்காந்திருந்துச்சாம் ஒரு பெரிய புலி.  கிலில ஓட்டம் பிடிச்ச சோமராஜன் பக்கத்து ஊர் மணியார் வனத்துறை அதிகாரி வீட்டு வாசல்ல தான் நின்னாராம். அதிகாரி நிலவரத்தை விசாரிச்சு எல்லாரும் வீட்டுலயே இருங்கனு அறிக்கை விட்டிருக்காராம். பலே.

மார்ச் 10 செய்தி: Police have directed the public to halt rubber tapping works for a week. The attacks of tiger, leopard, boars and bisons have reportedly increased in the high ranges of the southern districts.

வால்:

வீட்டுவாசல்ல புலி இருக்குதுனு தானே நிங்களிடம் அலறியோடி வந்தது? வீட்டுக்குள்ள போனாத்தானே நீங்க சொல்றாப்ல வீட்டுலயெ இருக்க சாத்தியம்? நிங்கள் எந்தா மகாஞானஜோதியோனு போலீசை நல்லா கேக்க வேணாமோ சோமராஜன்?

= = = = =

104 கருத்துகள்:

  1. அப்பாதுரை எழுத்தை ரசித்தேன்.

    அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  2. //கணக்குப் பார்த்துக் கலங்கிய காலம்// - எனக்கும் திருமணச் செலவு உலக மகா வேஸ்ட் என்று தோன்றும். நடப்பது எல்லாமே நாடகம். சாதா திருமணத்திற்கு, மண்டபம் 12 லட்சம் (2 நாட்களுக்கு), உணவு 13 லட்சம். அடுக்குமா? இந்தப் பணத்தில் 20 லட்சத்தைப் பெண்ணுக்குக் கொடுத்தால், அவள் வாழ்க்கை நன்றாக ஆரம்பிக்காதா? ஆடம்பர உடை, போட்டோ, தீம் படங்கள் என செலவுக் கணக்கு மிக அநியாயமாக இருக்கிறது.

    கருப்புப் பணத்தைச் செலவு செய்ய விரும்புபவர்கள் தமிழச்சி, ரெட்டி என்ற பெயருல் 250, 500 கோடிகளைச் செலவு செய்யலாம். ஆனால் மத்திய தர வர்க்கம் யாருக்காக இந்த நாடகத்தை நடத்தவேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை - உங்கள் கருத்தை டிட்டோ செய்கிறேன்...சிம்பிளா அழகா செய்யலாம்.

      இதுலயும் ஸ்டேட்டஸ் பார்க்கறாங்களே!!!

      கீதா

      நீக்கு
    2. மேரேஜை சிம்பிளா செஞ்சுருங்க என்று சொல்லும்போதே இந்த கேடரர், இந்த மண்டபம், இந்த இந்த.... என்று செலவை அதிகரிக்கறாங்க. எந்த விழாவின் (மேரேஜ், நிச்சயதார்த்தம்) போட்டோ ஆல்பத்தை யாராவது பொறுமையா பார்த்திருக்காங்களா? பேசாம எலெக்ட்ரானிக் மீடியாவில் மாத்திரம் வைத்துக்கொண்டால் போதாதா? எனக்கு இந்த மாதிரி ஃபங்ஷனைப் பார்த்தாலே எரிச்சலா இருக்கு, எதுக்கு, யாருக்காக இவ்வளவு செலவு செய்யறாங்க என்று. சடங்கு என்பது எங்கேயோ போய், ஆடம்பரச் செலவு, தேவையில்லாமல், திருமணம் செய்பவர்களின் பணத்தை ஆட்டையைப் போடுவது என்று பெரும் அநியாயம் நடக்கிறது. தட்டிக் கேட்கத்தான் ஆளில்லை.

      நீக்கு
  3. அரபித் திருமணங்களில் நிபந்தனைகள் உண்டு. இரு தரப்பு நிபந்தனைகளும் வாசிக்கப்பட்டு, மதப் பெரியவர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்படும் (அநியாயமாக அவர்கள் நிச்சயதார்த்தம், திருமணத்தில் பெண்ணைக் காணவே முடியாது). நம்மூரில் இப்போதான் கேள்விப்படறேன்.

    பதிலளிநீக்கு
  4. பொன் வேல் முருகன்
    புவிதனைக் காக்க...

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. கல்லூரி இளம் கலையில் நான், ஆவரேஜாக அறியப்பட்டவன் (85 சதம் மார்க்). இளங்கலையில் இன்டேர்னல் 25 மதிப்பெண்களில் 25, ரேங்க் வாங்கும் மாணவனுக்கு வழங்குவார்கள். ஆப்டிக்ஸ் என்ற பேப்பரில் எனக்கு இன்டேர்னல் 23 மார்க். பல்கலைக்கழகத் தேர்வில் 75க்கு 74 மதிப்பெண்கள் எடுத்து யூனியில் முதல் மதிப்பெண். ப்ரொபசர், உனக்கு முழு மதிப்பெண் போட்டிருக்கலாமே என்று சொல்லிக்கொண்டிருந்தார். மதிப்பெண்கள், பிரின்சிபால் எங்கள் வகுப்பில் வாசித்த அன்று நான் ஆப்சன்ட்.

    பதிலளிநீக்கு
  6. நான் திரைப்படத்தை பரீட்சைக்குப் படிப்பதுபோலப் பார்ப்பதில்லை. என்னைக் கவரும் படங்களை இரண்டுமுறை பார்க்கத் தயங்கமாட்டேன் (காந்தாரா, அவதார1,2, பொ.செ 1, என்று லிஸ்ட் நீளும். என் பெண் சொன்னாள், அவள் நண்பன், குக் வித் கோமாளி சீரியல் பார்க்கிறேன் என்று யாராவது சொன்னாலே ப்ரெண்ட்ஷிப்பைக் கட் பண்ணிடுவேன் என்றானாம். அப்படிப்பட்ட சீரியலையே இரண்டாவது முறை பார்த்தேன்.

    பாஹுபலி 5 முறை, இரண்டு பாகத்தையும் பார்த்திருக்கிறேன். (3 தடவை தியேட்டரில். 55 இஞ்ச திரையில் இரு தடவை)

    பதிலளிநீக்கு
  7. எந்த பண்டிகையாக இருந்தாலும் பிரசாதம் நமக்கு முக்கியமாக இருக்கிறதே?..

    என்ன காரணம்?

    பிரசாதம் தான் காரணம்!..

    பதிலளிநீக்கு
  8. //பிறந்தநாள் கொண்டாட்டம்//- இது பற்றி என் கருத்து பசங்களுக்குப் பிடிக்காது. பிறந்த நாள் இன்னொரு நாளே. அது தானா வரும். அதனால் அதற்கு கொண்டாட்டங்களோ பார்ட்டிகளோ வைத்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான கருத்து!

      நீக்கு
    2. நம்மவருக்கும் இதே கருத்துத் தான். சொல்லப் போனால் எனக்கெல்லாம் பிறந்த நாள் வாழ்த்து என்பதே குழந்தைகள் விபரம் தெரிந்து வாழ்த்த ஆரம்பிச்சதும் தான்.

      நீக்கு
    3. நெல்லை மீ டூ....என் மகனுக்குக் கூட கொண்டாடியதில்லை. அவனும் கேட்டதில்லை. சிறிய வயதில் அவன் நண்பர்கள் கொண்டாடும் போது இவனைக் கூப்பிடுவாங்களே அப்போது கூட இவன் தனக்கும் கொண்டாட வேண்டும் என்று கேட்டதில்லை. எங்களுக்கே அது ஆச்சரியம்!!

      கல்லூரியில் படிக்கறப்ப, மகனின் வகுப்பு நண்பர்களுக்கு முதல் வருடம் இவன் பிறந்த நாள் தெரியாது, ஆனா அடுத்த வருடத்துல கண்டுபிடிச்சிட்டாங்க... அத்தனை பேரும் என்னிடம் வந்து, உங்க பையன் கொண்டாட மாட்டான் தெரியும்....அதுக்காக நாங்க விட்டுருவமான்னு வீட்டுக்கே வந்துருவாங்க! நான் கேக் பேக் செய்து, வித்தியாசமான உணவு ஏதாவது செஞ்சு எல்லாருக்கும் கொடுத்ததுண்டு.

      கீதா

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவருக்கும் ஆண்டவன் துணையால் நலமே விளைக. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ...திக காரங்களுக்கு நலம் விளையாதா?

      நீக்கு
    2. :))) அவர்கள் இரகசியமாக வணங்குவதால் இரகசியமாக நன்மை கிடைக்கும்.

      நீக்கு
    3. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

      தாங்கள்தான் அன்றே சொல்லி விட்டீர்களே..! வாழ்வில் தினசரி நலன்கள் என்பது முற்பிறவியில், செய்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப கிடைப்பதென்று. அதன்படி புண்ணியங்கள் செய்பவர் கஸ்டங்களை சுமப்பதும், பாபங்கள் செய்பவர்கள் சகல சௌபாக்கியங்களோடு அனுபவிப்பதுமென காலச்சக்கரம் சுழன்றபடிதானே உள்ளது. :))) நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  10. வருவாய் அற்ற முதியவர்களுக்கு ரயிலில் ஓரளவுக்கு சலுகை வழங்கினால் எவன் குடும்பம் மூழ்கிப் போகுமோ
    என்னவோ..

    தெரியவில்லை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதனை ஏசி வகுப்புகளுக்குப் பயன்படுத்துபவர்கள் மாதம் லட்சம் பென்ஷன் வாங்கும் முதியவர்கள். நீங்கள் சொல்லும் முதியவர்கள் ஸ்லீப்பர். அதனால் அரசுப் பணியாளர்கள் பென்ஷனர் தவிர மற்றவர்களுக்குச் சலுகை கொடுக்கலாம்.

      நீக்கு
    2. சிந்திக்க வேண்டிய விஷயம்.

      நீக்கு
    3. ரயிலில் போகாததால் இது பற்றித் தெரியலை. ஆனாலும் எல்லா உலக நாடுகளிலும் வயதானோர், மாற்றுத் திறனாளிகளுக்குச் சலுகைகள் உண்டு.

      நீக்கு
  11. பல நேரங்களில் பிரசாதங்களால்தான் பண்டிகை முக்கியத்துவம் பெறுகிறது. ஓ..இன்று கூடாரை வெல்லும் சீரா, கோயிலில் சர்க்கரைப் பொங்கல் கிடைக்குமே, இன்று கறவைகள் பின்சென்று, தயிர் சாதம்தான் (த்த்யோன்னம்) என மனது சொல்லும். ஶ்ரீஜெயந்தியா ஏகப்பட்ட பட்சணங்கள், ஶ்ரீராமநவமியா பானகம் கொடுத்தே முடிச்சுடுவாங்களே, காரடையான் நோம்பா..இனிப்பு அடை, பிள்ளையார் சதுர்த்தியா? நாம எங்கே கொண்டாடுவோம்..பிறர் வீடுகளில் இருந்து பூரணக் கொழுக்கட்டை வந்தால்தான், தீபாவளியா..ஆஹா பட்சணங்கள், பவங்கலா? எங்க போனாலும் சக்கரைப் பொங்கலைத் தருவாங்களே..கரும்பு ஓகே, பூநூல் மாற்றும் தினமா..அப்பம் நிச்சயம் என்றெல்லாம் மனது சொல்லும்.... இவைகள் இல்லையெனில், அவையும் மற்றொரு நாளே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீதாலட்சுமி அக்காவுக்கு இது தெரியாதது ஆச்சர்யமாய் இருக்கிறது!

      நீக்கு
    2. அதாவது சாப்பாட்டு ரசிகன் என்று எழுதுவதில் 'ரா' என தட்டச்சு மிஸ்டேக் என்று நான் நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்ளக் கூடாதாம். அதனால ராமன்' என்று எழுத வைத்து சந்தோஷப்பட்டுக்கொள்கிறார் இந்த 'அம்பத்தூர்' கீதா சாம்பசிவம் மேடம்.

      அது சரி ஸ்ரீராம், கேஜிஜி, ... நவராத்திரிக்கு சுண்டல், இனிப்பு கொடுக்கலைனா, வேலை மெனெக்கெட்டு மனைவியை அடுத்த வீடுகளுக்கு ஒவ்வொரு நாளும் கொண்டுபோய் விட்டுவிட்டு, காத்திருந்து கூட்டி வருவீர்களா? ஏதோ இவங்கள்லாம் உபவாசம் இருப்பதுபோல்னா சொல்றாங்க?

      நீக்கு
    3. நவராத்திரிக்கு மனைவியை வெற்றிலை,பாக்குக்கு அழைத்துச் செல்லும் கணவருக்குப் பாராட்டுகள். எல்லோரும் ஒத்துக்கறதில்லை. எங்க வீட்டில் நெருங்கிய சொந்தக்காரங்க வீடுகளுக்கு அந்தச் சாக்கில் ஓர் விசிட் செய்வோம் முன்னெல்லாம். இங்கே வந்தப்புறமா நாலு மாடிகளுக்குள் சரியாப் போயிடும்.

      நீக்கு
    4. //சீதாலட்சுமி அக்காவுக்கு இது தெரியாதது ஆச்சர்யமாய் இருக்கிறது!// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அப்போ ஏதோ கவனத்தில் புரியலை. அப்புறமாப் புரிஞ்சது! இஃகி,இஃகி,இஃகி. அ.வ.சி.

      நீக்கு
    5. எனக்கு இப்போதும் புரியலை!

      நீக்கு
    6. ஸ்ரீராம் ஹைஃபைவ்! நானும் சீதாக்கானு சொல்லலாம்னு நினைச்சு அங்கும் கருத்து கொடுத்து வந்தேன்...
      ஹாஹாஹாஹா

      நெல்லை அதானே விடாதீங்க கௌ அண்ணாவை. சாப்பாட்டை ரசித்து சாப்பிடும் ஆட்களாகிய எங்களுக்கு மாபெரும் ....அதை நிரப்பிக்கோங்க.

      எனக்கும் இந்தப் பண்டிகைகள் பெயர் கேட்டதுமே அன்னிக்கு என்ன பூஜைன்றது எதுவும் நினைவுக்கு வராது....அன்னிக்கு செய்யற தின்பண்டங்கள்தான்...

      ஆவணிஅவிட்டம் போளி, சித்திரை வருஷப்பிறப்புக்குப் போளி, மாங்கா பச்சடி, விட்டுப்டீங்களே!! பிள்ளையார் சதுர்த்தி நம்ம வீட்டுல கொழுக்கட்டை உண்டே!! எதையும் விடமாட்டோம். நவராத்திரி சரஸ்வதி பூஜை அன்றைக்கு என் மாமியார் பால் போளி செய்வாங்க.....இதெல்லாம் தான் நினைவுக்கு வரும் எனக்கு!!!

      கீதா

      நீக்கு
    7. கௌ அண்ணா, கீதாக்காவின் பதிவு செய்யப்பட்ட பெயர் original name சீதாலக்ஷ்மி!!!! கூப்பிடும் பெயர் கீதா!!!

      அது அவங்க பதிவுல சொல்லிருக்காங்களா ....அதான்...

      கீதா

      நீக்கு
    8. ஆமாம், ஸ்ரீராமநவமி பானகம், நீர்மோர், வடைப்பருப்பு அல்லது சுண்டலும் விட்டுப் போயிடுத்து! :)

      நீக்கு
  12. வன்கிழடுகள் வயதான காலத்தில் சுவர் ஓரமாக முடங்கிக் கிடக்காமல் ஊர் சுற்றித் திரிய வேண்டுமா என்ன?..

    அதே.. அதே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா...நோ நெவர்....உடம்பு முடியாதவர்கள் என்றால் மட்டுமே. அல்லாமல் எதுக்கு முடங்கணும்!! ஜாலியா இருக்கணும். சின்ன வயசுல குடும்பத்துக்காக உழைச்சு எங்கும் போயிருக்காதவங்க நிறையப்பேர் இருக்காங்க அவங்க வயசானப்புறமாவது அவங்களுக்குப் பிடிச்சதை செஞ்சு ஜாலியா இருக்கணும். நீங்களும் இத்தனை வருடங்கள் வெளிநாட்டில் இருந்து உழைத்து...இப்ப உங்களுக்குப் பிடிச்சதை செஞ்சு ஜாலியா இருங்கண்ணா....

      அதனால நெல்லை சொல்லிருக்காப்ல, வருமானம் குறைவாக, பென்ஷன் குறைவாக இருக்கறவங்களுக்கு சலுகைகள் வழங்கலாம்...

      கீதா

      நீக்கு
    2. //சுவர் ஓரமாக முடங்கிக் கிடக்காமல் ஊர் சுற்றித் திரிய வேண்டுமா என்ன?..// - அப்படி அல்ல துரை சார். ஒவ்வொரு உயிரும் அவரது அம்மாவிற்கு அருமையானது. வயதானால் என்ன? அவங்க எப்படி வாழணும்னு நினைக்கறாங்களோ அப்படி வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே. எதற்கு முடங்கிக்கிடக்கணும்? என்னை யாரேனும் ஆலோசனை கேட்டால், முடிந்தவரை ஏதேனும் தன்னால் இயன்ற வேலை செய்துகொண்டிருக்கவேண்டும். பாத்திரம் தேய்ப்பது, பால் வாங்கிவருவது....என்று நிறைய இருக்கும். தன்னால் முடிகிற போது, பிறரை வேலை வாங்குவது சரியல்ல.

      நீக்கு
    3. கருத்துப் பரிமாற்றங்களுக்கு நன்றி.

      நீக்கு
  13. பண்டிகைகளுக்கும் பிரசாதங்களுக்கும் சீதோஷ்ணமும், காலநிலையும் காரணம். பிள்ளையார் சதுர்த்திக் கொழுக்கட்டை எல்லாம் தத்துவார்த்தமானது. ஸ்ரீஜயந்தி பக்ஷணங்களோ அந்த மாதத்தின் சீதோஷ்ணத்தை ஒட்டியே இருக்கும்.. அதே போல் ஆவணி அவிட்டம், வரலக்ஷ்மி விரதம். பின்னர் வரும் நவராத்திரிக்காலத்தில் தமிழகத்தில் மழைக்கால ஆரம்பம் என்பதால் அதற்கேற்ற சுண்டல் வகைகள். தீபாவளியோ மிகப் பெரிய பண்டிகை என்பதால் ஏகப்பட்ட தித்திப்பு வகைகள், கார வகைகள். கார்த்திகை தீபத்தில் பொரிக்கு முக்கியத்துவம். அந்த விளக்குச் சூட்டில் வெல்லத்தோடு சேர்ந்த பொரியை உண்பதால் குளிர் சமனப்படும். பொங்கல் என்றாலோ கேட்கவே வேண்டாம். அப்போது தான் அறுவடை ஆன புத்தம்புதிய அரிசி, தானியங்கள், காய்கள், பழங்கள்.

    பதிலளிநீக்கு
  14. நான் விரும்பாமலேயே அதிகமாய்ப் பார்த்து நொந்த படம் உயர்ந்த மனிதன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மற்றபடி இருமுறை எல்லாம் எந்தப் படத்தையும் பார்த்ததில்லை. சர்வர் சுந்தரம் தவிர்த்து. அதைத் திரை அரங்கிலும், பின்னர் தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கோம்.

    பதிலளிநீக்கு
  15. அப்பாதுரை கலக்கிட்டார். ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் பற்றி ஏற்கெனவே படிச்சாலும் இத்தனை விபரங்கள் இன்னிக்குத் தான் தெரியும். உண்மையிலேயே இப்போதைய திருமணச் செலவுகள் வயிற்றைக் கலக்கினாலும் எப்படி எல்லோரும் சமாளிக்கிறாங்க என்னும் ஆச்சரியமும் ஏற்படத் தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  16. பள்ளி நாட்களில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றது தமிழ்ப் பாடத்திலும் பின்னர் புக் கீப்பிங் எனப்படும் அக்கவுன்டன்சியிலும் தான். தமிழ்ச்சங்கம் வைத்த பொதுத் தேர்வில் 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று முதல் வகுப்பிலும் வந்த அனுபவம் உண்டு. இப்போல்லாம் இந்தச் சங்கம், மன்றம் தேர்வுகள் தமிழில் நடப்பதாகத் தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ எல்லாம் தமிழ்ப் பாடத்தில் 47,000 பேர் ஃபெயில் ஆகும் காலம்!

      நீக்கு
    2. ஆமாம் சீ(கீ)தாக்கா அப்ப தமிழ்ச்சங்கம் தேர்வுகள் நாங்க படிக்கும் போதும் இருந்தது. அதில் நான் இரண்டாம் இடம் வந்தேன். இப்போது இருப்பதாகத் தெரியவில்லை சீ(கீ)தாக்கா

      கீதா

      நீக்கு
    3. சீதா அவுர் கீதா இவர்தானா!! புரிந்தது!

      நீக்கு
  17. விளையாடியது நிறைய. ஆனால் எங்க வீட்டில் நாங்க 3 பேரும் சேர்ந்து அதிகம் விளையாடியதில்லை. விளையாட முடியாது. அப்பா ஊரில் இல்லை எனில் தாயக்கட்டம், பரமபதம் போன்றவை அம்மாவோடு விளையாடுவோம். பொதுவாக அதிகம் விளையாடினது தாத்தா வீட்டில் தான். (அம்மாவின் அப்பா) தாயம், பல்லாங்குழி, கல்லாட்டம், பரமபதம், ட்ரேட், சீட்டு போன்றவை. அங்கே தான் சீட்டில் செட் சேர்ப்பது போன்ற விளையாட்டுக்களை மாமாவோடு விளையாடும்போது தெரிந்து கொண்டேன். மற்றபடி இந்த டெனிகாய்ட், வாலிபால், கூடைப்பந்து இதெல்லாம் விளையாடினதே இல்லை. :(

    பதிலளிநீக்கு
  18. தொலைக்காட்சியில் பிறந்த நாள் கொண்டாட்டப் பாடல் வந்தால் குறிப்பாக எதுவும் தோன்றியதில்லை. இதில் ஏதோ முக்கியத்துவம் இருப்பதால் இந்தக் காட்சியை எடுத்திருக்காங்க என நினைப்பேன். அதே போல் அந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஓர் முடிச்சு இருக்கும்.

    பதிலளிநீக்கு
  19. கேள்விகளே இப்படி என்றால், பதில்களும் அவ்வாறே...

    கர்நாடகாவில் ஜண்டா சொன்ன இலவசங்கள்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜண்டா.. முண்டா..

      ஆகா,!..

      அண்டா.. குண்டா..
      எல்லாத்தையும் உள்ளே எடுத்து வைத்து விட வேண்டியது தான்!..

      நீக்கு
  20. அன்பின் திரு அப்பாத்துரை அவர்களது கை வண்ணம் அருமை..

    பதிலளிநீக்கு
  21. அன்பின் திரு.. நெல்லை அவர்களே..

    தஞ்சையம்பதி யில் நாளைய பதிவு உங்களால்!..

    அதற்குப்பின் வேறொரு நாளில் வேறொன்றும்..

    வாய்ப்பு அளித்ததற்கு
    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  22. இப்போ எல்லாம் தமிழ்ப் பாடத்தில் 47,000 பேர் ஃபெயில் ஆகும் காலம்!..

    தமிழ்த்தாய் மனம் குளிர்ந்திருப்பாள்..

    பதிலளிநீக்கு
  23. தமிழுக்கு மேடை கட்டுவோம்..
    இந்திக்கு ₹%₹%₹%₹ கட்டுவோம்!..

    அப்போது சந்துக்கு சந்து சத்தம் போட்டதெல்லாம் ஞாவகத்துக்கு வந்து தொலையிதே!..

    பதிலளிநீக்கு
  24. அரசு எதற்காக மக்களுக்கு இலவசம் என்ற பெயரில் லஞ்சம் கொடுக்கணும் ?

    அதற்கு பதிலாக விலைவாசியை குறைக்கா விட்டாலும் பரவாயில்லை கட்டுப்படுத்தலாமே...

    பதிலளிநீக்கு
  25. உங்கள் கேள்விகள்!!

    1. அதிகமதிப்பெண் என்றால்....மத்தவங்களை விடவா இல்லை நாம வாங்கினதுலயே அதிக மதிப்பெண்ணா?!!!!! ஹிஹிஹிஹிஹி....

    ஏன்னா மீ மத்தவங்களை விட ஒரு நா கூட எடுத்ததில்லை. என் மட்டில் மற்ற பாடங்களை விட, தமிழ் ஆங்கிலம் இரண்டிலும்தான்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மத்தவங்களை விட அல்ல. நீங்கள் எடுத்ததில் அதிகம் எது?

      நீக்கு
  26. 2) ஒரு த்டவை பார்க்கறதே பெரிய விஷயம்...இதுல ஒரே படத்தை எங்க அதிகமுறை,,,,

    நெல்லை சமீபத்தில் பார்த்தாரே!!! அப்படி....

    கீதா

    பதிலளிநீக்கு
  27. 3 - கிட்டிம்புல், டயர் ஓட்டுதல்.....ஹிஹிஹி நான் பெரும்பாலும் பசங்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு நிற்பேன்....சின்ன வயசுல. அதுக்கு அப்புறம் என் இருப்பிடம் மாறியதில் போச்! எல்லாம் போச்! விளையாட்டு, வாசித்தல் எல்லாம்...

    4. வெறும் பார்வையாளராக......பி நா கொ பழக்கமில்லை. நினைவில் கூட இருக்காது. என் தங்கைகள் யாராவது கூப்பிட்டு வாழ்த்தினால்...ஓ ஆமால்ல என்பேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  28. (இன்னும் தருகிறோமா?) //

    இப்ப வேற விதமால்ல செலவோ செலவு!!! நீங்க சொல்லிருக்கறதும் உட்பட!!! இப்பல்லாம் கல்யாணத்துக்கு 50லட்சம்லருந்து 1 கோடி வரை ஆகுதாமே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு சாதாரண திருமணத்துக்கு 70-80 ஆகிறது. ஆடம்பரத் திருமணங்களுக்கு அளவில்லை. எல்லா மேரேஜ் கேடரர்களும் பல கோடி பெருமானமுள்ள 4-5 வீடுகள் வைத்திருக்கிறார்கள். கேடரர்கள் மாதிரி பணம் கொழிக்கும் தொழில் வேறு எதுவும் கிடையாது. 100 ரூபாய் சாப்பாட்டை 500 ரூபாய்க்கும், அதிலும் 100 சாப்பாடு தங்கள் குழுவினருக்கும், சீர் பட்சணங்கள் என்று வெளிக்கடைகளில் வாங்குவதற்கும், ஆட்கள் அதிகம் வந்துவிட்டால் பக்கத்துக் கடையிலிருந்து ஸ்வீட்ஸ் வாங்கிச் சமாளிப்பது என்று இவர்கள் செய்யும் அநியாயத்துக்கு அளவே இல்லை.

      நீக்கு
  29. செய்தி: Former Karnataka Minister Janardhana Reddy spent over Rs 500 crores for his daughter's marriage.//

    நீங்க சொல்லிருக்கறதப் பார்த்ததும் புரிஞ்சுருச்சு....இதுதான்னு!!!

    சாதாரண மக்களே இப்ப நான் முந்தைய கருத்தில் சொன்ன அளவு செலவழிக்கறாங்க..!!! ஜகன்நாத ரெட்டிகாருக்கெல்லாம் இது ஃபூ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெனார்த்தன ரெட்டியை ஜெயகடா . .. சாரி ஜெகன்னாத ரெட்டி ஆக்கிவிட்டீர்களே !

      நீக்கு
    2. ஹாஹாஹாஹ் டங்க் ஸ்லிப்பாகி...ஸாரி கை ஸ்லிப்பாகிப் போச்சு!!! அது என்னவே ஜெனார்த்தன எப்பவுமே என் வாயில ஜெகன்னாதன்னே வருது கௌ அண்ணா, ஜெகன்மோகன்னு வந்தாலாவது பக்கத்துலதான்னு சொல்லலாம்!!!

      கீதா

      நீக்கு
  30. வால் - சர்வ சகஜம். இது பப்ளிக்கா, சாட்சி போல போட்டிருக்காங்க. பொதுவா பேச்சில் இருக்கும்....

    இப்பத்த கல்யாணமே வேஸ்ட். செலவு சொன்னேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  31. //ஒரு பெரிய புலி. கிலில ஓட்டம் பிடிச்ச சோமராஜன் பக்கத்து ஊர் மணியார்// - இது அநியாயமில்லையோ? சுவாமி ஐயப்பனை மனமுருக வணங்குவது. அவர் தன் வாகனத்தை அனுப்பி வைத்தால் அலறி அடித்துக்கொண்டு ஓடுவது என்றிருந்தால், பக்தி எப்படி வளரும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாமி ஐயப்பனை மனமுருக வணங்குவது. அவர் தன் வாகனத்தை அனுப்பி வைத்தால் அலறி அடித்துக்கொண்டு ஓடுவது என்றிருந்தால், பக்தி எப்படி வளரும்?//

      ஹாஹாஹாஹா...கௌ அண்ணா நோட் திஸ் பாயின்ட்!!! இன்னிக்கு நீங்கதானே புதன் நாயகர் பஞ்சாயத்து தலைவர்...அதனால நோட் பண்ணிக்கோங்க..

      இந்த நெல்லை என்ன பண்ணுவார்னா, பக்தி பரவசத்துல...."ஆஹா என் வீடு தேடி வந்த ஹரிஹர சுதன் நாயக வாகனனே!!! வருக வருக....எங்கே உன் சுவாமி?!! உன்னை மட்டும் அனுப்பி விட்டு அவன் மறைந்திருந்து வேடிக்கை பார்க்கிறானா?!! இருக்கட்டும் இருக்கட்டும்....நான் பயப்படுவேன்னு நினைத்துவிட்டாரா உன் பாஸ்!! நீ என்ன என்னை அடிக்கவா போகிறாய்? அப்படி அடித்தாலும் ஹரி ஹர சுதன் ஓடி வந்து என்னைக் காப்பாற்ற மாட்டானா என்ன!!!! சுவாமியே சரணம் ஐயப்பா" ன்னு கோஷம் போட்டு புலிக்குப் பூஜை செய்யத் தொடங்கிவிடுவார்!!!

      புலியும், ஆஹா என்ன அருமையான வசனம் கேட்டு எவ்வளவு நாளாச்சு!!ன்னு வேடிக்கைப் பார்த்திட்டுருக்குமாம்!!!!

      கீதா

      நீக்கு
    2. புலிக்கு என்ன பிரசாதம் வைப்பார் நெல்லைன்னு கேளுங்க கௌ அண்ணா....

      கீதா

      நீக்கு
    3. நாங்கள் ஐயப்ப பக்தர்கள் அல்லர். அதனால் இந்தக் கேள்வி எழவில்லை. சாதாரண நாகப் பாம்புக்குப் பயப்படும் நாங்கள் ஐந்து தலை நாகம் வந்தால் வணங்குவோம்.

      நீக்கு
    4. ஆமாம். நாகத்திற்கு ஒரு தலை குறைந்தால் கூட வணங்கமாட்டார் நெல்லை.

      நீக்கு
    5. நாகத்திற்கு ஒரு தலை குறைந்தால் கூட வணங்கமாட்டார் நெல்லை.//

      ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    6. கருத்துரை இட்டவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி 100 முடிக்கின்றேன்.

      நீக்கு
  32. கேள்வியும், பதில்களும், பின்னூட்டங்களும் அருமை.
    அப்பாதுரை சார் அனுப்பிய காணொளி , மற்றும் பொன்மகள் வந்தாள் கட்டுரை நன்றாக இருக்கிறது.
    எளிமையாக திருமணம் செய்வது இப்போது மாறி விட்டது.

    பதிலளிநீக்கு
  33. கேள்வி பதில்களூக்கான பின்னூட்டங்கள் அருமை.

    திருமண ஆடம்பரங்கள் கேட்கவே திகைக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!