செவ்வாய், 25 ஏப்ரல், 2023

சிறுகதை - பொங்கும் பூம்புனல் - துரை செல்வராஜூ

 பொங்கும் பூம்புனல்

துரை செல்வராஜூ 

*** *** *** *** *** *** ***

வானம் மூடி மூடித் திறந்து கொண்டிருந்தது.. 

மாசி மகம் வரைக்கும் இப்படித்தான்.. பங்குனிக்கு இன்னும் பத்து நாள்.. அதுக்கு அப்புறந்தான் சூரியன் அவன் வேலையக் காட்டுவான்..

இந்த ஊர்.. ல இருந்து நாலு மைல் மாயவரம்.. மாயவரத்துக்குப் போற தார் ரோடு தான் இது.. மழை வர்றதுக்கு முந்தியே போட்டாயிற்று.. அதுக்கு முன்னால செம்மண்ணும் ஜல்லிக் கல்லும்... 

இந்த வருசம் தாளடிப் பட்டம் பிந்திப் போச்சு..  அறுவடை பதினைஞ்சு நாளாத் தான் .. அறுவடை முடிஞ்சதும் பயறு உளுந்து விதைச்சு -  ரெண்டு பக்கமும் பச்சைப் பசேல்ன்னு பார்க்கவே  அழகா இருக்கு.. 

மத்தியான வெயிலுக்கு முன்னாலேயே குருவி எல்லாம் மரங்கள்.. ல வந்து அடைஞ்சாச்சு.. சாகுபடி வேலை முடிஞ்சு போனதால 
ஜனங்க நடமாட்டம் இல்லாம கிடக்குது ரோடு..

தார் ரோட்டுல நடக்குறதே சுகம்..  கல்லுங் கரடும் புரண்டு வராம ரோடு நல்லாவே இருக்குது.. 

இருந்தாலும், பார வண்டிகள் கரகர.. ன்னு ஏறி இறங்கறதால ரோடு நெடுக ரெண்டு பக்க ஓரமும் நொறுங்கி இருக்கு.. 

இந்த ரோட்டுல தான் கும்மோணம் எஸ்ஸார் வியெஸ் ரெண்டு தடவையும் தஞ்சாவூர் எஸ்ஸெம்ட்டி ரெண்டு தடவையும் ஓடிக்கிட்டு இருக்கு..

இப்படியான மகத்துவம் மிக்க ரோட்டுல -  வேகு.. வேகு.. ன்னு மூனு சைக்கிள்.. மூனு சைக்கிள்.. லயும் மொத்தமா ஏழு பசங்க.. இன்னைக்கு ஞாயித்துக்கிழமை..
மாயவரத்துக்குப் பயணம்..  சுந்தரத்துல எம்ஜியார் படம்..  பாக்குறதுக்கு போய்க்கிட்டு இருக்கோம்..

அந்தப் பக்கம் அழகப்பா.. அதுல சிவாஜி படம்.. அந்தப்  படமா.. இந்தப் படமா?.. பூவா தலையா போட்டுப் பார்த்ததில தல எம்ஜியார்.. ன்னு வந்தது..  அவ்வளவு தான்.. ஜாலியா கெளம்பியாச்சு..

அதிலயும் சைக்கிள்.. ல பறக்குறது.. ன்னாலே தனி சுகந்தான்.. 

வடுகநாதன் வாட்டசாட்டமா இருப்பான்.. அவனோட மாரிமுத்தும் குமாரும்.. என்னோட சைக்கிள்..ல சுந்தரம்.. இன்னொன்னு ல மணியும் மாணிக்கமும்...

எல்லாரும் ஒரே வகுப்பு.. இந்த வருசம் எஸ்ஸெல்சி.. இன்னும் மூனு நாலு மாசத்துல ஸ்கூல் படிப்பு முடியப் போகுது.. பெரிய பரிட்சை நெருங்குது..

' இந்த நேரத்துல கழுதைகளுக்கு சினிமாவா கேக்குது?.. ' - ன்னு, நீங்க கேக்குறது புரியுது..

' நாங்கள்ளாம் யார் சொல்லி கேட்டிருக்கோம்?.. அதுக்காக மோசமான பசங்களும் இல்லே!.. "

" நல்லா படிக்கணும்.. நல்லா படிக்கணும்!.. " - ன்னு விஸ்வநாதன் சார்   சொல்லிக்கிட்டே இருப்பார்.. 

நல்லா படித்தால் பேனா, பென்சில், நோட் என்று வாங்கிக் கொடுப்பார்.. மாதாந்திரத் தேர்வுகளில் முட்டை என்றால் எண்ணெய் சட்டியில்லாமல் பொரித்து எடுத்து விடுவார்..

நாற்பது மார்க் எடுத்துட்டு ரெட்டை ஜடையை ஆட்டிக்கிட்டு ஒரு கோஷ்டி அந்தப் பக்கமா சிரிச்சுக்கிட்டு இருக்கும்.. 

பசங்களுக்கோ பின்னால அரை டிராயர் கிழிஞ்சு போயிருக்கும்.. 

" வீட்ல அந்தப் புள்ளைங்க  வேலையும் பார்த்துட்டு பாடத்தையும் படிச்சு பாஸ் மார்க் எடுக்கறதே பெரிய விஷயம்.. கோயில் மாடு மாதிரி சுத்தி வர்ற உங்களுக்கு என்னடா கேடு?.. " - ன்னு கேட்டுக்கிட்டே வெளுத்து எடுக்கறப்போ ஒன்னு ரெண்டு.  உச்.. சத்தம் கேட்கும்.. 

அந்த உச்.. சத்தத்துக்காகவே படிக்கலாம்.. ன்னு சாயங்காலம் உட்கார்ந்தா - புத்தகத்துல எழுத்தே தெரியாது...  

' உச்.. உச்.. ன்னது யாரு?.. சந்திராவா, சரோஜாவா வசந்தியா  இல்லே கஸ்தூரியா.. ' ன்னு மனசுக்குள்ள ஒரு குரங்கு வந்து குதிக்கும்.. 
' அதுக்கு மேல மனசுக்குள்ள படிப்பு எங்கேருந்து வர்றது?.. '

எல்லாப் பொண்ணுங்களுமே நல்ல அழகா இருந்தாலும்
கஸ்தூரிக்காக மனசு தவங் கிடக்கும்..

அதுங்களும் சும்மாவே வர்றது இல்லை.. கண்ணுல மையப் பூசிக்கிட்டு அந்த குண்டு மல்லிகய ஒத்தப் பூவா காது ஓரம் வச்சிக்கிட்டு பார்த்தும் பார்க்காத மாதிரி போறதும் வர்றதும்!... 

எப்பவும் கைவசம் நெல்லிக்காய் வத்தல், எலந்தப் பழம், கொடுக்காப் புளி.. ன்னு  வச்சிருப்பாங்க.. நமக்கு வாய் ஊறிப் போய் கேட்டால் -  கஸ்தூரி  மட்டும் எங்கிட்ட கையை நீட்டுவாள்.. 

" நீயே எடுத்துக்கோ!.. " என்று.

உள்ளங்கை நிறைய நெல்லி வத்தல் இருக்கும்.. 

கஸ்தூரியின் உள்ளங்கையில் விரல்கள் படாமல் ஒன்றிரண்டு வத்தலைப் பொறுக்கிக் கொண்டு,  " உங்கையில் சுக்கிர மேடு நல்லா இருக்கே!.." - என்று தைரியமாகச் சொல்வதற்கு ரொம்பவே பிடிக்கும்..

அதே சமயம் -  " உனக்கு கைரேகை பார்க்கத் தெரியுமா சேகர்?.. " - என்று கேட்கும் போது, கஸ்தூரியின் கண்களை நிமிர்ந்து பார்ப்பதற்கான தைரியம் காணாமல் போயிருக்கும்...

கஸ்தூரியின் அருகாமையை விரும்புகின்ற மனம், அவளுடன் பேசிக் கொண்டிருக்கவும் விரும்பும்..

அதே விநாடி - ' யாரும் பார்த்து விட்டால்?.. வீட்டில் போய் சொல்லி விட்டால்?...'  - என்றும் நடுங்கும்.. 

" யம்மா.. அண்ணன் படிக்காம மோட்டு வளையப் பார்த்துக் கிட்டு இருக்கான்... "

" இருக்கட்டும்.. இருக்கட்டும்.. உங்க அப்பா கிட்ட ரெண்டு வளையல கழட்டிக் கொடுத்தா மாடு வாங்கிக்கிட்டு  வந்துடப் போறாரு!.." 

புகை மண்டிக் கிடக்கும் பின்கட்டில் இருந்து அம்மாவின் குரல் கேட்கும்..

இந்த லச்சணத்தில் ' வாத்தியார் அடிக்கிறார்.. ' - ன்னு வீட்ல போய் சொன்னா, " நல்லதா போச்சு.. படிப்புச் செலவு மிச்சம்.. நாளைக்கே நாலு மாடு வாங்கித் தர்றேன்.. " -  ன்னு சொல்லிட்டு சந்தைக்குப்  போகிற மாதிரி  அப்பாவும் கிளம்புவார்.. ஆனா மாடும் வராது.. கன்றும் வராது.. சும்மாச்சுக்கும் மிரட்டி வைக்கிறது!.. 

நாலு மாடு வாங்கற அளவுக்கெல்லாம்  ஐயா கையில காசு பணம் ஏது!.. 

ஆனாலும், பெத்தவங்கள நம்பவே கூடாது.. இப்படித்தான் நம்ம ராம்சாமி அவங்க வீட்ல பூச்சி காட்டப்போக அவங்க அப்பா நெசமாலுமே நாலு ஆட்டுக் குட்டிய வாங்கிக்கிட்டு வந்து விட்டார்.. 

மாடு மேய்க்கிறத விட ரொம்பக் கஷ்டம்  - ஆடு மேய்க்கிறது.. மெரண்டு போய்ட்டான் ராம்சாமி..

கண்ணீரும் கம்பலையுமா கால்ல விழுந்து அழுதுட்டு ' தப்பிச்சோம்.. பொழச்சோம்.. ' - ன்னு மறுநாளே ஸ்கூலுக்கு ஓடியாந்துட்டான்..

வந்ததுமே - ' திருக்குறள் தெரியலை.. ' - என்று விஸ்வநாதன் சாரிடம் தான் முதல் மண்டகப்படி..

விஸ்வநாதன் சார் என்று நினைப்பு வந்ததும் அடிவயிற்றில் ' திக் ' என்று வலித்தது.. அவர் மாயவரத்துக்காரர்.. எங்களை அங்கே சினிமா தியேட்டர் வாசலில் பார்த்து விட்டார் என்றால் நாளைக்கு ஸ்கூலில் உங்க வீட்டு அடி..  எங்க வீட்டு அடி தான்.. உரித்து எடுத்து விடுவார்..

விஸ்வநாதன் சாருடைய நினைப்பு வந்த வேளையில் - சாலை ஓரத்தில் வீர முனியாண்டவர்.. 

ரோட்டுக்கு மேற்கால வெட்டவெளியில் நாலடி மேடை..  ஒட்டு மொத்தமா ஏழடி உயரம்.. அவருக்கு முன்பாகவே ரோட்டில் இறங்கியாயிற்று.. 

முனியாண்டவர் பீடத்தைச் சுற்றிலும் அறுவடையின்  போது வைக்கப்பட்ட கதிர் முடிச்சுகள்..  குருவிக் கூட்டங்கள் தின்னட்டும் என்று!..

உயர்த்தி முடியப்பட்ட ஜடாமுடியும் உருட்டி விழித்த விழிகளும் முறுக்கிய மீசையும் கடித்த பற்களும்.. அடேங்கப்பா!..

முனியாண்டவர் வலது கையில் வெட்டுங்கத்தி இருக்க இடது கையில் குறுந்தடி..

வலது காலுக்குக் கீழ் அசுரனின் தலை..  அவன் நல்லவனா.. கெட்டவனா?.. இந்த ஆராய்ச்சிக்கெல்லாம் இப்போது நேரம் இல்லை..

எல்லாருமாக அருகில் சென்று முனியாண்டவர் காலைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு அருகில் இருந்த சம்படத்தைத் துழாவி நெற்றியில் பூசிக் கொண்டோம்... 

மற்றவர்கள் மனதில் என்ன என்னவோ.. தெரியாது..
என் மனதில் மட்டும்,  ' கஸ்தூரியுடன் நானும் பாஸாகி விட வேண்டும்!..' - என்று தோன்றியது..

மறுபடியும் முனியாண்டவருக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு சைக்கிளை நகர்த்திய போது எதிரில், பாம்.. - என்ற சத்தத்துடன் எஸ்ஸார்வியெஸ்.. கைக்கடிகாரங்கள் கைக்கு எட்டாதிருந்த சூழ்நிலையில் இப்படி பஸ் தான் நேரம் காட்டும்...

" டேய்... மணி ஒன்ரை ஆச்சுடா.. ரெண்டு மணிக்கெல்லாம் படம் போட்டுடுவான்!.. "

அவ்வளவு தான்.. சிட்டாகப் பறந்த சைக்கிள்கள் மாயவரம் கடைத்தெருவுக்குள் நுழைந்த போது கிளிங் என்ற சத்தத்துடன் மணியின் சைக்கிள் செயின் கழன்று கொண்டது.. 

" சை... "

சைக்கிள்கள் நின்றன..

நாலு பேர் பேசிக் கொண்டே சென்றார்கள்...

" வாத்யார் படம் ரிலீஸ்.. சரியான கூட்டம்!.. போலீஸ் வந்துடுச்சி.. ஹவுஸ் புல்.. ஒன்ரைக்கெல்லாம் படத்தைப் போட்டுட்டான்.. இன்னும் ஐநூறு பேர் வெயில் ல காஞ்சு போய் உட்கார்ந்து இருக்கானுங்க.. சாயங்கால ஆட்டம் பார்க்கணும்..ன்னு.. ஊரு விளங்குன மாதிரி தான்!.. "

முகத்தில் வியர்வையைத் துடைத்துக் கொண்டோம்.. 

" இப்ப  என்னடா செய்றது.. அழகப்பாவுக்குப் போலாமா?.. "

" வேணாம் டா.. இங்கே டிக்கெட் கிடைக்கலே.. ன்னு பாதிப்பேர் அங்கே போயிருப்பாங்க..  அடிதடி இருக்காதே தவிர அங்கேயும் கூட்டமாத்தான் இருக்கும்.. கையில இருக்கிற காசுக்கு நல்ல மாதிரியா சாப்பிடுவோம்..  துலாக்கட்டம் போய்ட்டு - சாயங்காலமா வீட்டுக்குப் போவோம்... "
வடுகநாதன்  தான் பேசினான்.. 

முழுச் சாப்பாடு ஒன்றரை ரூபாய் என்று எதிரில் இருந்த உணவகத்தில் எழுதப்பட்டிருந்தது..

***

77 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    அருமையான சிறுகதை. ஆழமான எழுத்துக்கள். தங்கள் எழுத்துக்கள் கதை படிக்கும் போது இது கதைதானே என்ற எண்ணத்தையும் தாண்டி இயல்பாக கண்ணெதிரே நடப்பதை பார்ப்பது போன்ற உணர்வை தருபவையாக அமைந்து விடும். அவ்விதமான சிறுகதைகளில் இதுவும் ஒன்று.

    /உள்ளங்கை நிறைய நெல்லி வத்தல் இருக்கும்../

    ஆகா.. இங்கேயே நெல்லிக்கனி வத்தலாக இடம் பெற்று விட்டதே.

    தங்களின் கதையில் வரும் நண்பர்களின் மனப்பக்குவத்தை ரசித்தேன். சிறப்பான மாணவர்கள். நன்கு படித்து நன்றாக வரட்டுமென பல இடங்களில் தோன்றுகிறது. அதுவும் வீரமுனியாண்டவரிடம்
    அவர்கள் வேண்டிக் கொள்வதை காணும் போதும், நாமும் அவ்விதமே வேண்டிக் கொள்ளத் தோன்றுகிறது.

    இறுதியில் நண்பர்கள் சினிமாவை விட வயிறார உணவு உண்டு விட்டு, மனதின் சந்தோஷத்திற்கு மதிப்பு தரும்படி முடிவு எடுப்பது சிறப்பாக உள்ளது. அருமையான கதையை ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கதைதானே என்ற எண்ணத்தையும் தாண்டி இயல்பாக கண்ணெதிரே நடப்பதை பார்ப்பது போன்ற உணர்வை//

      கதைக்குள் நானும் ஐந்து மைல் சைக்கிளில் செல்கின்றேனே...

      வாழ்ந்த இடங்களைப் பற்றி எழுதுவது என்றால் சொல்லித் தரவும் வேண்டுமோ..

      எல்லாம் தங்களது ஆதரவும் தாங்கள் அளிக்கும் உற்சாகமும் தான் காரணம்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    கதைக்கேற்ப கௌதமன் சகோதரர் வரைந்த ஓவியமும் அருமையாக உள்ளது. மை பூசிய விழிகள் அழகுக்கு அழகு சேர்க்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. கிராமத்தை, அன்று நடந்ததை, அந்தச் சூழலை அப்படியே கண்ணுக்குள் கொண்டுவந்திருக்கீங்க துரை செல்வராஜு சார்.

    உச்உச் ன்னது யாரு...... இதையெல்லாம் அனுபவித்தால்தான் எழுத்தில் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உச்உச் ன்னது யாரு...... இதையெல்லாம் அனுபவித்தால்தான் எழுத்தில் வரும்..//

      இந்த வரிகளை அன்பின் கில்லர் ஜி அவர்களும் குறித்துள்ளார்..

      தங்கள் அன்பினுக்கு
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இதைப்படிக்கும்போதே..... ஐந்தாம் ஆறாம் வகுப்பில் எழுந்த காதலும் (ஹா ஹா ஹா), என் 25ம் வயசில் மாம்பலம் அருகே ரெயில்வே ஸ்டேஷன் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பெண் (பெயரை மாத்திரம் சொல்லி) இப்போ எங்க இருக்கா என்ற என் கேள்விக்கு என் அப்பா பதிலாக, அவ உன்னைவிட ஆறு மாசம் பெரியவ என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.

    எட்டாம் வகுப்பில் (இன்னொரு தொலைதூர ஊரில்) கூடப்படித்த லட்சுமி பற்றிக் கேட்கமாட்டான், அவள் ஐயர் என்பதால், என நினைத்திருக்கக்கூடும். ஏன் கேட்கவில்லை, அவளைப் பார்க்கக்கூட முயற்சிக்கலையே என்று இப்போதும் நினைப்பு தோன்றும்.

    மகள்ட, எப்படி அவளைக் கண்டுபிடிப்பது, சமூக வலைத்தளம் என்றெல்லாம் சொன்னேன். வாய்ப்பில்லை ராஜான்னுட்டாள்.

    ஆமாம்... எதற்கு மீண்டும் சந்தித்து, பழைய நினைவுகளையும் பிம்பத்தையும் அழித்துக்கொள்ள வேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி பாரா நியாயமான கேள்வி.

      நீக்கு
    2. நெல்லை அவர்களது மலரும் நினைவுகள் இனிமை..

      /// ஆமாம்... எதற்கு மீண்டும் சந்தித்து, பழைய நினைவுகளையும் பிம்பத்தையும் அழித்துக்கொள்ள வேண்டும்?..///

      நியாயமான கருத்து..

      உண்மையான அன்பின் வெளிப்பாடு என்றென்றும் இனிமையாக இளமையாக அழகாகவே இருக்கட்டும்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அப்பாவுக்குத் தெரியாமல் சினிமா, சைக்கிள், முனியாண்டி கோவில், எம்ஜார் படத்திற்குக் கூட்டம் என.... மிக அழகிய ரசனையான ழுத்து. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// மிக அழகிய ரசனையான ழுத்து. பாராட்டுகள்..///

      நெல்லை அவர்களது கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. மீண்டும் பழைய காலம் வருமா என ஏங்க வைத்தாலும், பிற்காலத்தில் இப்படி இப்படியெல்லாம் உயர்வோம் என்ற எதிர்காலம் தெரிந்திருந்தால்தான், பழைய காலத்தை மீண்டும் வாழ்ந்துபார்க்க முடியும்.

    இன்னொன்று..... நம்மோடிருந்தவர்கள், வளர்ச்சி அடையாத நிலை, வாழ்க்கையின் துக்கங்களைச் சந்தித்து தனிமரமாக இருப்பது, ஊருக்கே (பத்தாப்பு விடலைகள்) அழகி என்ற க்ரெஷ் இருந்தவர் கணவனை இழந்து ஒற்றைப் பிள்ளையோடு உலர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, பழைய நண்பர்களை மீண்டும் காணவேண்டும் என்ற ஆசை போய்விடுகிறது.

    அழகி என்ற காலத்தால் அழிக்க முடியாத காவியத் திரைப்படம் நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் செய்யும் கோலத்தின் மீது கடும்கோபம் வருகின்ற நேரம்..

      /// அழகி என்ற காலத்தால் அழிக்க முடியாத காவியத் திரைப்படம் நினைவுக்கு வருகிறது.. ///

      உண்மை தான்..

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தந்திருக்கும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  10. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  11. இன்று எனது படைப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    அழகான சித்திரத்தால் அலங்கரித்த அன்பின் சித்திரச் செல்வர் திரு.கௌதமன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  12. கதை நன்றாக இருக்கிறது. சுந்தரம் தியேட்டரில் புதுபடம் போடுவார்கள், அழகப்பாவில் பழைய படம் தான் பார்த்து இருக்கிறோம். முன்பு புதுப்படம் போட்டு இருப்பார்கள் போலும்.
    இளமை காலத்தை கண் முன் கொண்டு வரும் எழுத்து.

    //மற்றவர்கள் மனதில் என்ன என்னவோ.. தெரியாது..
    என் மனதில் மட்டும், ' கஸ்தூரியுடன் நானும் பாஸாகி விட வேண்டும்!..' - என்று தோன்றியது..//

    முனியாண்டவர் நிறைவேற்றி இருப்பார்.
    கதையில் துலாகட்டமும் இடம் பெற்று விட்டது.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கதையில் துலா கட்டமும் இடம் பெற்று விட்டது.. //

      அந்தக் காலத்தில் மாயவரத்தின் துலாக் கட்டத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு ஆற்றை ரசிப்பது பெரும் பேறு..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  13. நேற்று சற்றே உடல் நலக் குறைவு..

    இன்று காலையில் எழுவதற்கு தாமதம் ஆகி விட்டது..

    அனைவருக்கும் மீண்டும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  14. கஸ்தூரியின் பள்ளி சீருடை , இரட்டை ஜடை பின்னல், மற்றும் மைதீட்டிய கண்கள் என்று நன்றாக வரைந்து இருக்கிறார் கெளதமன் சார்.

    பதிலளிநீக்கு
  15. இந்தக் கதைக்கு தாங்களே காரணம்.. சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை கோயில்கள் பற்றி தாங்கள் எழுதிய பதிவுகள் என் மனதைக் கிளறி விட்டதால விளைந்த கதை..

    தங்களது எழுத்தாற்றலுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்பகோணத்தில் தானே உங்கள் இளமை காலம் என்று சொன்னது போல இருந்தது. திருவெண்காட்டிலிருந்து புதுப்படம் பார்க்க மாயவரம் வருவோம்.மாயவரத்தில் இருப்பவர்கள் புதுப்படம் பார்க்க கும்பகோணம் போவார்கள்.

      மயிலாடுதுறை கோவில் பதிவு பள்ளி பருவத்தை நினைக்க வைத்து விட்டதா! நன்றி.
      இன்று உடல் நலமாகி இருக்கும் என்று நினைக்கிறேன்.



      நீக்கு
    2. // கும்பகோணத்தில் தானே உங்கள் இளமை காலம் என்று சொன்னது போல இருந்தது..//

      கும்பகோணம் மயிலாடுதுறை நகரங்களுக்கு நடுவில் தேவாரப் பாடல் பெற்ற ஒரு ஊரில் தான் எனது பள்ளி நாட்கள் எல்லாம்..

      இந்தக் கதையில் கஸ்தூரி இருக்கின்றாள்..
      எனவே ஊரின் பெயரை வேறொரு
      சமயத்தில் சொல்கின்றேன்..

      நீக்கு
    3. இன்று காலையில் ஓரளவுக்கு நன்றாக இருக்கின்றது..

      மகிழ்ச்சி.. நன்றி..
      நலம் வாழ்க..

      நீக்கு
  16. @ கோமதி அரசு ..

    தங்களது எழுத்தாற்றலுக்கு நெஞ்சார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ நானும் எழுதுகிறேன் என்ற எழுத்தாற்றல்தான்.
      நினைவுகளை பகிர்ந்து கொள்வேன் , அவ்வளவுதான்.
      உங்கள் நினைவுகளை மலர செய்து கதை உருவானது மகிழ்ச்சியே. நன்றி.

      நீக்கு
  17. // கஸ்தூரியின் பள்ளி சீருடை , இரட்டை ஜடை பின்னல், மற்றும் மைதீட்டிய கண்கள் என்று நன்றாக வரைந்து இருக்கிறார் கெளதமன் சார்..//

    நிஜத்தில் கஸ்தூரி நல்ல நிற்ம்..

    ஆனாலும் சித்திரச் செல்வர் ம்னதைக் கிறங்க அடித்து விட்டார்..

    அழகு.. அழகு..

    பதிலளிநீக்கு
  18. இப்போது சுந்தரம், அழகப்பா இரண்டு தியேட்டரும் இல்லை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா ஊர்களிலும் இப்படித் தான்...

      பல தியேட்டர்கள் காணாமல் போய்விட்டன..

      நீக்கு
    2. எல்லா ஊர்களிலும் இப்படித் தான்..

      பல தியேட்டர்கள் இல்லாமல் போய் விட்டன

      நீக்கு
  19. //உச்.. உச்.. ன்னது யாரு ?.. சந்திராவா, சரோஜாவா வசந்தியா இல்லே கஸ்தூரியா.. ' //

    எனக்கும் இன்னும் தீர்மானம் ஆகவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி..

      இத்தனை வருடங்கள் ஆகியும் எனக்கும் இன்னும் பிடிபடவில்லை..

      யாராக இருக்கும்?..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
    2. ஒருவேளை பொன்னம்மாவாக இருக்குமோ ?

      நீக்கு
    3. பொன்னம்மாவா?..

      அந்த மாதிரி யாரும் படிக்க வில்லையே..

      ஒருவேளை கோகிலாவாக இருக்குமோ!..

      கேட்டுப் பார்ப்போம்..

      நீக்கு
  20. கண்ணில் தெரியும் காட்சிகளாக... அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன் .. வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  21. துரை அண்ணா கதை ரொம்ப நல்லாருக்கு. அதுவும் பருவ வயதின் அதுவும் அந்தக் காலத்துப் பருவ வயதின் வெளிப்பாடுகள். பள்ளிக்கூடப் பயம். யாராச்சும் பார்த்துடுவாங்களோன்ற பயம்...

    கஸ்தூரி - சேகர் பகுதி டக்குனு ...ஒரே ஒரு பார்வை பார்த்தேன் கனாவா ஓடி மறைஞ்சன்னு .....வராக நதிக்கரை ஓரம் பாட்டில் வரும் வரிகள் நினைவுக்கு வந்தன...

    அழகான கதை எழுதிய விதம் அருமை துரை அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
  22. // அழகான கதை எழுதிய விதம் அருமை.. //

    அன்பின் சகோ..

    தங்கள் வருகையும் கருத்தும்
    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  23. நீங்கள் சொல்லிருப்பது போல்தான் நாங்களும் பல நேரங்களில் ஊருக்குச் செல்லும் பாதையில் நடந்து செல்ல வேண்டியிருக்கும். இரு பஸ் தான். அதே போல பஸ் வேரும் நேரம் வைத்துதான் நேரம் கணக்கிடுவது. எல்லாம் அப்படியே என் பழைய நினைவுகள் வந்துவிட்டன.

    நாங்களும் பெண்கள் இப்படிப் பேசி நடந்ததுண்டு....!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதே போல பஸ் வரும் நேரம் வைத்து தான் நேரம் கணக்கிடுவது.//

      hmt வருவதற்கு முன் கைக்கடிகாரம் என்பது மிகப் பெரிய விஷயம்.. எஸ்ஸெல்சி பாஸ் ஆனால் தான் வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கே கைக் கடிகாரம் கிடைக்கும்..
      அதெல்லாம் அழகிய கனாக்காலம்...

      மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
    2. ஆமாம் அதே அதே.....எனக்கெல்லாம் கைக்கடிகாரம் கிடைத்ததே திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்துதான்!!! அதன் பின் கட்டும் பழக்கமே இல்லாமல் ஆனது. ரொம்பப் பிடிக்கும். அதுவும் metal Strap. ஆண்கள் போடுவது போல். ஆனால் இப்போது வரை இல்லை! இப்பதான் கைப்பேசி வந்துவிட்டதே!

      கீதா

      நீக்கு
    3. கடிகாரம்.. பள்ளி நாட்களில் கனவுப் பொருள்..

      இருபத்தைந்து வருடங்களாக நானும் கடிகாரம் கட்டுவது இல்லை..

      நீக்கு
  24. ஆனால் சினிமாக்கு போனதில்லை. அதுக்கெல்லாம் அப்ப வாய்ப்பே கிடையாது. பள்ளி கல்லூரியிலிருந்து திரும்பி வரும் போது அன்று பார்த்தது, பள்ளி கல்லூர் விஷயங்கள், ஏதாவது பசங்க வந்து பேசினா அது பத்தி இப்படி....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிக் கதை எழுதியிருக்கின்றேனே தவிர

      நானும் நண்பர்களோடு சேர்ந்து சினிமாவுக்குப் போனது இல்லை..

      அதுக்கெல்லாம் அப்போது வாய்ப்பே கிடையாது..

      மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
    2. தெரியும் அண்ணா இது நீங்க கதைக்காக எழுதியது என்று. கதை ஆசிரியர் கதையில் சொல்லும் விஷயங்கள் எல்லாம் அவரது அனுபவங்களாக இருக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லையே இல்லையா?. அது கவிதையாக இருந்தாலும் சரி. தன்னைச் சுற்றி நடப்பவற்றைக்கூர்ந்து நோக்கியும் எழுதலாம்.

      ஆனால் பெரும்பான்மையோர் கதையை எழுதுபவரின் சொந்த அனுபவங்கள், அவரது கருத்துகள் என்று நினைப்பதுண்டு.

      கதையை சும்மா என் பழைய காலத்துடன் தொடர்பு படுத்திச் சொன்னதால் கதையில் வருவது போல் இல்லை...என்றாலும் அப்பருவத்தை ரசித்தேன். நம்ம கூட இருந்தவங்க இப்படி இருந்ததுண்டே...

      கீதா

      நீக்கு
    3. இந்தக் கதையில் என்னுடைய பங்கு பள்ளி நாட்கள்.. கவலையற்ற விடலைப் பருவம்...
      அவ்வளவு தான்...

      நீக்கு
  25. இப்படிக் கதை எழுதியிருக்கின்றேனே தவிர

    நானும் நண்பர்களோடு சேர்ந்து சினிமாவுக்குப் போனது இல்லை..

    அதுக்கெல்லாம் அப்போது வாய்ப்பே கிடையாது..

    மகிழ்ச்சி.. நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  26. அருமையான பள்ளிக்காலத்தை நினைவூட்டிய கதை. இல்லை, இல்லை நிகழ்வு. கண் முன்னர் அறுபதுகளின் கடைசிக்கும் எழுபதுகளின் இடைப்பட்ட காலத்தையும் நினைவூட்டி விட்டது. நாங்கல்லாம் இப்படி இரு பாலாரும் படிக்கும் பள்ளியில் எல்லாம் படிக்கலை. என்றாலும் நம்ம ரங்க்ஸ், அவர் சகோதர, சகோதரிகள் விஷ்ணுபுரம் ஜார்ஜ் ஹை ஸ்கூலில் படித்த அனுபவங்களைச் சொல்லுவார்கள். அதுவும் மழைக்காலத்தில் வயல் வரப்பில் காலில் சாக்கைக் கட்டிக்கொண்டு மேலேயும் ஒரு சாக்கைப் போர்த்திக்கொண்டு பள்ளி செல்லுவது பற்றிய சித்திரம் எனக்கு மனதில் ப்திந்து இருக்கு. இங்கேயும் அத்தகைய நினைவுகளைக் கொண்டு வந்திருக்கீங்க. கஸ்தூரியைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் அவங்க இப்போவும் அதே ஊரில் இருப்பாங்கனு நினைக்கிறேன். உங்க மனைவிக்குத் தெரியுமா கஸ்தூரியைப் பற்றி? :D கடைசியில் மாணவர்கள் திரைப்படமே போக வேண்டாம்னு முடிவெடுத்தது இன்னமும் சிறப்பு. அப்போல்லாம் காளியாகுடி ஓட்டல் இருந்திருக்குமே! நன்றாக ருசியாகச் சாப்பிட்டிருக்கலாம். நான் 73 ஆம் ஆண்டில் காளியாகுடி ஓட்டலில் சாப்பாடு சாப்பிட்டு இருக்கேன்.இன்றைய கதை துரைத்தம்பியோடதாக இருக்கும்னு நினைச்சுட்டே வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// கண் முன்னர் அறுபதுகளின் கடைசிக்கும் எழுபதுகளின் இடைப்பட்ட காலத்தையும் நினைவூட்டி விட்டது..///

      காலத்தை சரியாகக் கணித்து விட்டீர்கள்..
      சாதாரண மழைக் காலத்தில் வயல் வரப்பில் நடந்து சென்றதுண்டு கடும் மழைக் காலத்தில் அது உதவாது.. ஏனென்றால் வழியில் ஆபத்தான காட்டாற்று வடிகால்.. எனவே சாலை வழியே ரெண்டு மைல் சுற்றிக் கொண்டு தான் பள்ளிக்கூடம்..

      கஸ்தூரிக்கு பக்கத்து ஊர் .. பள்ளிக்கு வருவது ரெட்டை மாட்டு வண்டியில்..

      என்னவோ கனா கண்டது போல காலம் ஓடி விட்டது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நலம் வாழ்க..

      நீக்கு
    2. நாங்களும் சாக்கைத் தலையில் போட்டுக் கொண்டு சென்றதுண்டு. அப்பல்லாம் ப்ளாஸ்டிக் பைகள் ஏது?!! பெரும்பாலும் நடராஜா சர்வீஸ்தான். வயல்வழியாக அல்லது ரோடு வடியாக.

      கீதா

      நீக்கு
    3. // அப்போதெல்லாம் ப்ளாஸ்டிக் பைகள் ஏது?!! //

      அதுதானே...

      பிளாஸ்டிக் இல்லாத உலகம் அப்போது!...

      நீக்கு
  27. /// காளியாகுடி ஓட்டல் இருந்திருக்குமே! நன்றாக ருசியாகச் சாப்பிட்டிருக்கலாம்.. ///

    அந்த கால கட்டத்தில் காளியாகுடியில் விலை கொஞ்சம் ஜாஸ்தி..

    என்னவோ பசங்கள் பசி நேரத்தில் எதையும் யோசிக்க வில்லை..

    இப்போது மயிலாடுதுறை யில் இறைச்சியை சுட்டுத் தரும் கடைகளைக் கண்டேன்..

    அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

    பதிலளிநீக்கு
  28. ஒருங்கிணைந்திருந்த மாவட்டத்தில் - தஞ்சை, கும்பகோணம், மாயவரம், பட்டுக் கோட்டை - இந்த நாலு ஊர்களில் தான் ரிலீஸ் படங்கள்..

    பதிலளிநீக்கு
  29. பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்-ங்கிறபோது, எம்ஜிஆராவது, சிவாஜியாவது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே...

      ஏகாந்தன் அவர்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
    2. அதானே..

      ஏகாந்தன் அவர்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  30. கஸ்தூரி திலகம்-னு பேரு வச்சிருக்கலாமே. ரொம்பப் பச்சையாத் தெரிஞ்சிறப்படாதுங்கிறதுக்காக.. பூம்புனலோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பப் பச்சை..

      புரியவில்லை.. ஆனாலும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  31. அழகான நினைவலைகள். நீண்ட நாட்களுக்குப் பிறகு துரை சாரின் கதை படிக்கிறேன். வெய்யிலுக்கு இதமாக பானையில் வைத்த ஜில்லென்ற மோர் குடித்தது போல் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்க்ள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  32. கனாக்காணும் காலம் கிராமத்து சூழலில் அந்தக் காலத்துக்கே எங்களையும் இட்டுச் செல்கிறது.

    படமும் கதைக்கு அமைவாக நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்க்ள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!