புதன், 26 ஏப்ரல், 2023

நடராஜனுக்கு ஏக டிமாண்ட் !

 

சென்ற வார முதல் கேள்விக்கான பதிலில், இப்படி எழுதியிருந்தேன் : 

& வீட்டுக்கு வருபவர் எதையும் வாங்கி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. இருந்தாலும் வாங்கி வருபவர், இந்த இரண்டு பழங்களில் எதையாவது வாங்கி வரவேண்டும் என்றால், வாழைப்பழம் வாங்கி வந்தால் எனக்குச் சந்தோஷம் ! ஏன் என்றால் - வாழைப் பழத்தை சுலபமாக உரித்துச் சாப்பிட்டுவிடலாம். ஆப்பிள் பழம் என்றால், கழுவி, கத்தி தேடி எடுத்து, (விரல்களை வெட்டிக்கொள்ளாமல் கவனமாக) துண்டங்களாக நறுக்கி, விதைகளை நீக்கி, ( என் மனைவி, பையன் போன்ற சிலர், ஆப்பிளுக்கு தோல் சீவ வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள் - இருக்கற வேலையில இது வேறயா !!) பிறகு சாப்பிட வேண்டும். ஆகவே, வா ப வா வ வா ப! (இதற்கு விளக்கம் கீ சா தருகிறாரா பார்ப்போம்! ) 

வா ப வா வ வா ப! : இதற்கு விளக்கம் எழுத யாரும் முயற்சி செய்யவில்லை. ஆகையால் நானே சொல்லிவிடுகிறேன்! ' வாழைப் பழம் வாங்கி வருபவர், வாழ்க பல்லாண்டுகள்! 

= = = = = 

சென்ற வாரத்தில் யாரும் எங்களை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. 

நாங்க ரொம்ப சிம்பிள் கேள்விகள் கேட்கிறோம். 

பதில் சொல்லுங்கள். 

1) காதலிக்க நேரமில்லை படத்தில் டி எம் சௌந்தரராஜன் பாடிய பாடல் எது? 

2) கீழ்க்கண்டவற்றுள் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?

a ) கடலை உருண்டை 

b ) கடலை மிட்டாய் (கேக் )

c ) எள்ளு மிட்டாய் 

3) சிறு தீனிகளில் நீங்கள் இதுவரை சுவைத்துப் பார்க்காதது எது? 

= = = 

KGG பக்கம் : 

ஐந்தாம் வகுப்பு படித்தது எங்கள் ஊரில் (நாகை) தேர்முட்டி ஸ்கூல் என்று அழைக்கப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில். 

ஐந்தாம் வகுப்புக்கு அந்த பள்ளியில் நான்கு பிரிவுகள். 

5 A பிரிவு தலைமை ஆசிரியர்தான் வகுப்பு ஆசிரியர். சுப்ரமணியன் என்னும் கண்டிப்பான ஆசிரியர். 

5 B பிரிவு & 5 D பிரிவு - ஆசிரியைகள். (பெயர் ஞாபகம் இல்லை ) 

5 C பிரிவுதான் நான் படித்த பிரிவு. ஆசிரியர் பெயர் ஷண்முகசுந்தரம். இவருக்கு வயிற்று வலி என்று ஒரு பட்டப் பெயர் இருந்தது. அடிக்கடி வயிற்று வலி காரணமாக லீவு எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார். 

அவர் வராத நாட்களில், வகுப்பில் இருக்கின்ற எல்லா மாணவ மாணவிகளும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மற்ற மூன்று பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள். 

என் வகுப்பில் அப்போது இரண்டு நடராஜன்கள் படித்தனர். அவர்களில் ஒரு நடராஜனுக்கு ஆசிரியைகளுக்கிடையே ஏக டிமாண்ட். அந்த நடராஜன்  தன் வகுப்பிற்குத்தான் இந்த முறை வரவேண்டும் என்று வாதிடுவார்கள். 

அப்படி அந்த நடராஜனிடம் என்ன அவ்வளவு ஈர்ப்பு என்று ஆச்சரியமாக இருக்கிறதா? அவர் படிப்பில் சூரர் இல்லை. எல்லா பாடத்திலும் முட்டை. ஆனால் பாட்டு பாடுவார். 

நடராஜனை தன் வகுப்பிற்கு எடுத்துக்கொண்ட ஆசிரியைகள், மற்ற எல்லோரையும் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, நடராஜனை பாட சொல்லிவிடுவார்கள். 

முதலில் ஒரு சாமி பாட்டுப் பாடுவார். தனிப்பாடல். 

பிறகு வரிசையாக அந்தக் காலத்து டி எம் எஸ் ஹிட் பாடல்கள். 

இன்றும் எனக்கு அவர் பாடிய " வா கலாப மயிலே " பாடல் அவ்வளவு பசுமையாக ஞாபகம் உள்ளது. 

 

**** *** 

சில நாட்களில், வகுப்பு பிரித்து அனுப்பப்படும் போது நானும் மற்ற சில மாணவர்களும்  தலைமை ஆசிரியர் வகுப்பிற்கு செல்ல வேண்டி வந்துவிடும். அவருடைய வகுப்பு என்றால் எங்களுக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிடும். வகுப்பில் எல்லோரும் கையைக் கட்டி, ஒரு விரலால் வாயைப் பொத்திக்கொண்டுதான் உட்கார்ந்திருப்போம். 

வகுப்பு நடக்கும்போது அவரிடம் ' தண்ணிக்கு / 1க்கு ' என்றெல்லாம் கேட்டு வெளியே செல்லமுடியாது. அதனால் சில பையன்கள் அவருடைய வகுப்புக்குச் செல்லவேண்டும் என்ற உடனேயே கிடு கிடு என ஓடிப் போய் 1 & W முடித்துவிட்டு வந்துவிடுவார்கள். 

எனக்கு வலது பக்கத்தில் உட்காருகின்ற பையன் - பரமசிவம் - கொஞ்சம் ஓவராகவே தண்ணீர் குடித்துவிட்டு வந்துவிடுவான். 

வகுப்பு ஆரம்பித்து அரைமணி சென்றதும் கொஞ்சம் நெளிய ஆரம்பிப்பான். கொஞ்ச நேரம் சென்றதும் அவனுடைய இடது தொடையால் என் வலது தொடை மீது ஒரு இடி இடிப்பான். 

நான் : (சிறிய குரலில்)  " என்னடா? "

அவன் : " 1 க்கு  அடைக்குதுடா " 

நான் : " சார் கிட்ட கேட்டுகிட்டு போடா ? "

அவன் : " கேட்டால் விடுவாராடா ? "

நான் : " உம் "

கேட்கமாட்டான். 

கொஞ்ச நேரம் அமைதி. 

இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் நெளியல். 

இடி. 

அதே வசனங்கள். 

வகுப்பு முடியும் வரை என்னை பாடம் கவனிக்க விடாமல் தொந்தரவு செய்துகொண்டே இருப்பான். 

அந்த வகுப்பு முடிந்ததும் எழுந்து பள்ளியின் பின் பகுதியை நோக்கி தலைதெறிக்க ஓடுவான்! 

= = = = = = 

அப்பாதுரை பக்கம் : 

*காதல் கடை'

மஞ்சள் நிறத்தில் சிறிய புட்டி ஒன்றைக் கொடுத்தேன். "குடிக்கும் பானத்தில் கலந்து கொடு. மாறவசியம். கண்டிப்பா உன்னையே சுத்துவா" என்றேன். பணம் வாங்கிக்கொண்டு திரும்புகையில் நால்வர் வருவதை கவனித்தேன்.

சிங்கபூரில் கடை வைத்திருக்கிறேன். 'ஒரே வாரத்தில் காதல்' என்று கூட்டு வகுப்பு, சுற்றுலா, மாறவசியம் எல்லாம் கலந்தடித்து பேகெஜாக விற்கிறேன்.  ஆயிரம் வெள்ளி.  ஒரே வாரத்தில் காதல் கைகூடாவிட்டால் இன்னொரு மஞ்சள் நிற மாறவசிய புட்டி இலவசம். 

நிறைய கிராக்கி வருகிறார்கள். பெரும்பாலும் சீன, மலேசிய வாடிக்கை. வெள்ளையர்கள், தென்னிந்தியர்கள் என்று அவ்வப்போது சிலர்.

மாறவசியம் ஒரு வித சிலேடை. மனம் மாற வசியம். மாறன் பேரில் வசியம். என் தமிழ் ஆசிரியர் பெருமைப்படுவார்.

வாராவாரம் வரும் கிராக்கிகள் உண்டு. வாங்கிக் கொண்டு காணாமல் போன கிராக்கிகளும் உண்டு. பொதுவாக கிராக்கிகள் யாரும் கூட்டாகத் திரும்பி வந்ததில்லை இதுவரை.

நால்வரும் வந்தார்கள்.  

"சிறிய சிக்கல்" என்றார்கள். "வந்து.." என்று இழுத்தார்கள். "வந்து.. வசியத்தை நாங்கள் நால்வரும் அறியாமல் ஒருவருக்கொருவர் கொடுத்துவிட்டோம்".

பதில் சொல்லாமல் கவனித்தேன். தொடர்ந்தார்கள். "வசியமாவது என்று விளையாட்டாக மொத்தமாக விஸ்கியில் கலந்து குடித்தோம். விபரீதமாகி விட்டது. நால்வரும் ஒருவரையொருவர் மனமாற காதலிக்கிறோம்.  இப்போ என்ன செய்வது?"

உள்ளே சென்று நீல நிற புட்டி ஒன்றை எடுத்து வந்தேன். "இரண்டாயிரம் வெள்ளி" என்றேன். "கலந்து குடிங்க. எல்லாம் சரியாயிடும்".

"இதென்ன?"

"போற வசியம்".

மறு நாள் காலை தொலைகாட்சியில் நான்கு இளைஞர்கள் காதல் பொறாமையால் ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டு இறந்ததை விவரித்துக் கொண்டிருந்தார்கள். போதை மருந்தாக இருக்கலாம் என்று கருத்து சொன்னார் ஒருவர்.

மாலையில் கவனிக்கலாம். இப்போது அவகாசமில்லை. ஒன்பது மணிக்கு கடை திறந்தாக வேண்டும். கிளம்பினேன்.

As China's Birth Rate Falls, College Students Given A Week Off To "Fall In Love". செய்தி.

வால்:

காதலிக்க நேரமில்லை என்று சைனாவில் இனி யாரும் சொல்ல முடியாது.  

தொண்ணூறுகளில் ஆஸ்லோவிலோ ஆம்ஸ்டர்டேமிலோ இது போன்று ஒரு முயற்சி செய்தார்கள். தம்பதியர்களிடம் நெருக்கம் அதிகமாக வேண்டி ஒரு மனோதத்துவ அடிப்படையிலான "தேனிலவு சிகிச்சை" என்றார்கள். அடுத்த வருடம் உச்சத்தைத் தொட்டது விவாகரத்து.

= = = = 

120 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. காதலிக்க நேரமில்லை படத்தில் டி எம் சௌந்தரராஜன் பாடிய பாடல் எது?

    அவர் அந்த படத்தில் பாடவில்லை

    பதிலளிநீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. சிறு வயதில் மூன்றுமே பிடிக்கும் கடலை உருண்டை, கடலை மிட்டாய், எள்ளுமிட்டாய். இப்போது வறுத்த கடலையை பொடி செய்து அதில் வெல்லபொடி சேர்த்து சிறிது நெய் விட்டு பிடிக்கும் கடலை உருண்டைதான் பிடிக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. வாற வசியம்..
    போற வசியம்!..

    ஆகா...

    கூட வசியம்..ன்னு ஒன்னு அதே சிங்கப்பூர்ல இருக்கு..

    தெரியுமா!..

    பதிலளிநீக்கு
  6. வா ப வா வ வா ப - வாசகர்கள் பழம் வாங்கி வந்தால் வாழைப் பழம்தான். என்றும் இருந்திருக்கக்கூடாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை நீங்க போன வாரம் சொல்லியிருக்கணும்.

      நீக்கு
    2. நான் சொல்ல லேட்டாகிப் போச்சு அதான் சொல்லலை!!!!!!!!!!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  7. க.உ, க.மி, எ.மி - மூன்றும் பிடிக்கும். இருந்தாலும் க.மி தான் பிடிக்கும். எ.மி சிறிது கசக்கும். ஒரு சில பிராண்டுகள்தாம் சூப்பராக இருக்கும். சமீபத்தில் அப்படிக் கண்டுகொண்டது, கும்பகோணம் பெரியகடை வீதியில் விற்கும் ஒரு பிராண்டு. இதற்குமுன் சென்னையில் ஒரு பிராண்ட் (அண்ணாநகரில் தயாரிக்கப்படுவது) ரொம்ப நல்லா இருந்தது

    பதிலளிநீக்கு
  8. சுவைத்துப் பார்க்காத்து இலந்தைவடை. என்னவோ மனதுக்குப் பிடிப்பதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! அப்படியா! எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம்.

      நீக்கு
  9. ஶ்ரீதர் கா.நே படம் எடுத்தபோதே புதுமைக்காகத்தான் எடுத்தார். அதிலாவது டி எம் எஸ் பாடுவதாவது? இளையராஜாவும் தன் படங்களில் தவிர்த்தவர்களில் முதன்மை டி எம் எஸ். ஒரு சமயத்தில் நடிகர் விஜய், எனக்கு எஸ் பி பி பாடவேண்டாம், புதுமையாக இல்லை என்று சொன்னது போலத்தான்.

    பதிலளிநீக்கு
  10. KGG சார் பக்கத்தின் பசுமையான நினைவுகள் அருமை. பகிர்ந்த பாடல் பிடித்த பாடல்.
    அப்பாத்துரை சார் பதிவிலும் காதலிக்க நேரமில்லை இடம்பெற்று இருக்கிறதே! "காதல் கடை" நல்ல வியாபார தந்திரம் தான்.

    பதிலளிநீக்கு
  11. ஶ்ரீதர் கா.நே படம் எடுத்தபோதே புதுமைக்காகத்தான் எடுத்தார். அதிலாவது டி எம் எஸ் பாடுவதாவது? இளையராஜாவும் தன் படங்களில் தவிர்த்தவர்களில் முதன்மை டி எம் எஸ். ஒரு சமயத்தில் நடிகர் விஜய், எனக்கு எஸ் பி பி பாடவேண்டாம், புதுமையாக இல்லை என்று சொன்னது போலத்தான்.

    பதிலளிநீக்கு
  12. டி.எம்.எஸ் காதலிக்க நேரமில்லையிலா? இல்லையே, சீர்காழி அல்லவோ வயதானவராய் நடிக்கும் முத்துராமனுக்குக் குரல் கொடுத்திருப்பார்,

    பதிலளிநீக்கு
  13. எனக்கும் எள்ளுருண்டை (முத்துருண்டை, சிமிலி உருண்டை) இரண்டும் பிடிக்கும் என்றாலும் கடலை மிட்டாய் தான் ரொம்பப் பிடிக்கும். நம்ம ரங்க்ஸ் கண்ணு வைக்கிறாப்போல் ஒரு பாக்கெட் ஒரு நாளைக்குப் போதாது! அதையே சாப்பிடுவேன். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய திருமதி க உ பிரியை.

      நீக்கு
    2. எனக்கும் க மி ரொம்பப் பிடிக்கும். ஆனா....திங்க முடியாதே!!

      கீதா

      நீக்கு
  14. எங்க பள்ளியிலும் இம்மாதிரி மாணவிகளைப் பிரித்து அனுப்புவது உண்டென்றாலும் அதெல்லாம் எடுக்கும் பாடப்பிரிவைப் பொறுத்தது. ஆங்கில ஆசிரியை, கணக்கு ஆசிரியை 2,3 வகுப்புக்களுக்கு ஒருவரே இருப்பாங்க பெரும்பாலும். அப்போ மற்ற வகுப்பு மாணவிகளோடு சேர்ந்து உட்காரும்படி இருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. மாற/போற வசியம் பற்றிய சுவாரசியமான கட்டுரைக்கு அப்பாதுரைக்கு நன்றி. முன்னெல்லாம் சொல்லுவாங்க வசியம் வைச்சுட்டான்னு. இப்போல்லாம் அந்தப் பேச்சே இல்லை. அதான் டாஸ்மாக் இருக்கே! :(

    பதிலளிநீக்கு
  16. சிறு தீனிகளில் பனங்கிழங்கு, இலந்தை வடை இவை எல்லாம் சாப்பிடாதவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! நான் எல்லாமே சாப்பிட்டது உண்டு.

      நீக்கு
    2. அப்போ, உப்புப்போட்டு வேகவைத்து காரப்பொடி போட்டுத் தரும் நெல்லிக்காய், பஞ்சுமிட்டாய்லாம் சாப்பிட்டிருப்பாங்களோ?

      நீக்கு
    3. நெல்லிக்காயை விடச் சென்னை மெரினாவில் விற்ற மாங்காய் பத்தை நிறையச் சாப்பிட்டிருக்கேன். பஞ்சு மிட்டாய் கடைசியாக ஹூஸ்டனில் 2011 Novermberil அக்வேரியம் பார்க்கப் போனப்போ வித்துட்டு இருந்தாங்க. அப்போச் சாப்பிட்டேன். கு.கு. அப்போப் பிறக்கலை. அது சாப்பிடுமானு தெரியலை.

      நீக்கு
    4. வடக்கே எல்லாம் கொய்யாப்பழத்துக்குக் கூட உப்பு, காரப்பொடி தடவிக் கொடுப்பாங்க.

      நீக்கு
    5. வணக்கம் சகோதரரே

      சிறுவயதில் பனங்கிழங்கு நான் சாப்பிட்டிருக்கிறேன். அம்மா வீட்டில் பனை மரங்கள் நிறைய இருந்தன. தோட்டக்காரர் வந்து பனம்பழத்தை மண்ணுக்குள் புதைத்து தந்த குறிப்பிட்ட நாட்களில் கிழங்கான பின்பு எடுத்து தருவார். அந்நாளுக்காகத்தான் நான் ஆவலுடன் காத்திருந்தது கூட நினைவில் இருக்கிறது.அப்போதெல்லாம் நல்ல உணவை விட இந்த சிறு திண்டிகளில்தான் ஆர்வம் அதிமாக இருந்தது.

      இதை நெருப்பு கங்குகளில், சுட வைத்தும் செய்யலாம். ஆவியிலோ தண்ணீரிலோ வேக வைத்தும் செய்யலாம். அந்த முறை அவ்வளவாக நினைவில்லை. ஆனால் சுட வைத்து நிறைய சாப்பிட்டிருக்கிறோம். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    6. கருத்துரைக்கு நன்றி. பனங்கிழங்கு சுட்டு / வேகவைத்து எல்லா வகையிலும் சாப்பிட்டிருக்கிறேன்.

      நீக்கு
  17. இது வரையிலும் நீங்கள் எதிர்கொண்ட கேள்விகளிலேயே பதில் சொல்ல முடியாத கஷ்டமான கேள்வி எது?

    பதிலளிநீக்கு
  18. பதில்கள்
    1. காதலுக்கு மரியாதைதான் கேள்விபட்டுள்ளேன்.:)

      நீக்கு
    2. @ D D வசியம் என்பதும் வசீகரம் என்பதும் ஒன்றா? காதலுக்கு வசீகரம் தேவை. வசீகரம் தான் காதலின் முதல் படி.


      Jayakumar

      நீக்கு
  19. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. கடலை உருண்டையின் திருப்தி கடலை பர்பியில் வருவதில்லை.

    பதிலளிநீக்கு
  21. இன்னும் சாப்பிடாத சிறு தீனி பஞ்சு மிட்டாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ பல்லிமிட்டாய் சாப்பிட்டிருக்கீங்களா?

      நீக்கு
    2. பஞ்சுமிட்டாய் சாப்பிடாமல் பிஞ்சுப் பிராயம் கழிந்ததெப்படி !

      நீக்கு
    3. அதுதான் ஆச்சரியமா இருக்கு. சிறு வயதில் எது கிடைத்தாலும் சாப்பிட்டு எனக்குப் பழக்கம். வேப்பம்பழம் கூட சாப்பிட்டது உண்டு!

      நீக்கு
    4. நான் வேப்பம் பழம் தின்றிருக்கின்றேன்..

      சாப்பிட்டதில்லை..

      நீக்கு
    5. இன்னொன்றும் கேட்கலையா? தி, சா, உ என்ன வேறுபாடு? தி-low usage என்பதால், திட்டுவதற்கும் உபயோகிப்போம். சோத்தைத் தின்னுட்டு, திங்கறது ஒண்ணுதான் இவனுக்குத் தெரியும்... சாப்பிடுவது - கௌரவமான மரியாதையான வார்த்தை. உண்ணுதல் - கொஞ்சம் இலக்கியமான வார்த்தை, இலக்கியங்களில் அடிக்கடி உபயோகிக்கப்படும் வார்த்தை.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி, கருத்துரையில் வந்த பதில்கள் அனைத்தும் அருமை. க. மி. க. உ எ. உ. எனக்கும் இப்போது வரைக்கும் பிடிக்கும். ஆனால் இப்போது சாப்பிட மிகஸியின் தயவை நாட வேண்டியுள்ளது.

    சின்ன வயதில் அதிகமாக சாப்பிட முடியாமல் இவை அனைத்தும் வாயு, பித்தம் என கட்டுப்பாடுகள் ஆனால் வெல்லம் உடன் சேர்வதால் பாதகமில்லையென கொஞ்சம் சாப்பிட்டாச்சு.

    இலந்தைப்பழங்களில் புழு இருக்குமென இலந்தை வடை சாப்பிட்டதில்லை. பதிவு சிறுவயது நினைவுகளை மீட்டுத் தந்தது. நன்றி.

    நன்றியுடன்.
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. // இலந்தைப் பழங்களில் புழு இருக்குமென இலந்தை வடை சாப்பிட்டதில்லை.//

      உண்மை தான்..

      நீக்கு
    3. கே ஆர் மார்க்கெட் போகும் வழியில், (நான் சொல்வது மூத்திரச் சாலை என்றுதான். அவ்வளவு அசிங்கமாக இருக்கும்) பாதை ஓரத்தில், வெகு சுகாதாரமற்ற முறையில், பழங்களை/வெள்ளரியை தோல் சீவி, கட் செய்து சிறு பிளாஸ்டிக் பையில் அடைப்பதைப் பார்க்கிறேன். இதை 10-20 ரூபாய்க்கு விற்பார்கள் என்று தோன்றுகிறது. இதை எப்படி அனுமதிக்கறாங்க என்றெல்லாம் யோசிப்பேன். எங்குமே கட் செய்யப்பட்ட பழங்களை/வெள்ளரியைச் சாப்பிட்டால் இந்தக் கதைதான் போலிருக்கு. இது பற்றி மேலதிகமாக எழுதினால் யாருக்குமே வெளியில் சாப்பிடத் தோன்றாது.

      நீக்கு
  23. நடராஜன் அப்படி ஒன்னும் ஃபார்முல இல்லயே.. அவருக்கா இங்கே டிமாண்ட்! - என்று நினைத்து உள்ளே வந்துவிட்டேன்!

    பதிலளிநீக்கு
  24. //ஆகவே, வா ப வா வ வா ப! (இதற்கு விளக்கம் கீ சா தருகிறாரா பார்ப்போம்! ) // Ada!

    பதிலளிநீக்கு
  25. இன்று கேள்விகள் இருக்காது என்று என் உள்ளுணர்வு கூறியது. என்னையும், நெல்லை தமிழனையும் தவிர வேறு யாருக்கும் ஸந்தேகங்கள் கிடையாதா? அல்லது எங்களுக்கு தேடல் அதிகமா?

    பதிலளிநீக்கு
  26. ஒரு கீசா மேடமோ, கீராக்காவோ இல்லாமல் போயும் போயும் இந்த பா.வெ. மேடம் போய் தன்னோடு ஜோடி சேர்த்துக் கொண்டிருக்கிறாரே என்று நெல்லைக்குத் தோன்றலாம். :))

    பதிலளிநீக்கு
  27. பாலாப் பழம் தின்றதுண்டா..

    வேப்பம்பழம் மாதிரியே இருக்கும்..

    துவர்ப்பு ருசி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலாப்பழம் பார்த்ததுண்டு; சாப்பிட்ட ஞாபகம் இல்லை.

      நீக்கு
  28. //காதலிக்க நேரமில்லை படத்தில் டி எம் சௌந்தரராஜன் பாடிய பாடல் எது? // அடுத்து கற்பகம் படத்தில் டி.எம்.எஸ் பாடிய பாடல் எது? ஒரு தலை ராகம் படத்தில் பாடிய பிண்னனி பாடகி யார் என்றெல்லாம் கேள்விகள் வருமோ?

    பதிலளிநீக்கு
  29. //சிறு தீனிகளில் நீங்கள் இதுவரை சுவைத்துப் பார்க்காதது எது?// எத்தனை வகை சிறு தீனிகள் இருக்கின்றன? அல்லது இருந்தன? என்ரு சொன்னால் பதில் சொல்வது ஈசியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  30. நான் அறிந்த வரையில் வேக வைத்த வேர்க்கடலை, கப்பங்கிழங்கு இவைகளை சாப்பிட்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவராத்திரிக்கு வேர்க்கடலைச் சுண்டல் பண்ணிச் சாப்பிட்டதில்லையா? அதைத் தவிரவும் வேர்க்கடலைப் பருவத்தில் நம்மவர் படிப்படியாக (முன்னெல்லாம் மூட்டை/மூட்டையாக)ப் பச்சை வேர்க்கடலை வாங்கி வந்து கொட்டிடுவார். எதெல்லாம் என் அப்பா கூடாது/சாப்பிடாதே என்பாரோ அதெல்லாம் இங்கே தாராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆளம். இப்போக் கூடச் சில மாதங்கள் முன்னர் (ஜனவரியில்?) வாங்கி வந்திருந்தார்.

      நீக்கு
  31. 1 கேள்விக்கு டக்கென்று என்னால் சொல்ல முடியாது!! கூகளைத்தான் கேட்க வேண்டும்

    2. எல்லாமே பிடிக்கும். ஆனா கைக்கு எட்டும் வாய்க்கு எட்டாது!! எப்பவாச்சும் எட்டும்!

    3. இப்படி எல்லாம் டி என் பிஸ் சி, பேங்க் எக்ஸாம் போல பொத்தாம் பொதுவா அறிவுக் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்ல?!!!
    சிறுதீனின்னா டிஃப்னா?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே சிலரது கருத்துகளை கவனிக்கவும். அதே லைனில் சொல்லவும்.

      நீக்கு
    2. கீதா ரங்கன் - Light tiffn - என்றால் சிறு சிறு தீனியா? என்னா சந்தேகம் வருது உங்களுக்கு? சிறுதீனி என்பது கொறிக்க என்று எடுத்துக்கொள்ளலாம். டிபன் - சிற்றுண்டி - பொங்கல்/கொத்ஸு, இட்லி வடை, தோசை ... மாலை நேரச் சிற்றுண்டி என்பது பஜ்ஜி காஃபி போன்று, மதிய உணவு-சாதம் குழம்பு சாத்துமது...என்று குளம் வெட்டுவது.

      நீக்கு
    3. ஓ! நொறுக்ஸ்ஸா!!!! நான் நொறுக்ஸ் சாப்பிடுவது அரிது....ஆனா எல்லாமே சுவைத்துவிடுவேன் அதனால எது சாப்பிட்டிருக்க மாட்டேன்னு பார்த்தா பேக்கரி வகைகள் !! ஆனா பார்த்தா அட்லீஸ்ட் சுவையாது பார்த்துவிடுவேன்!

      கீதா

      நீக்கு
  32. ஐந்தாம் வகுப்பு படித்தது எங்கள் ஊரில் (நாகை) தேர்முட்டி ஸ்கூல் என்று அழைக்கப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில். //

    கோயில் தேர் நிலைக்கு வராம உங்க ஸ்கூல முட்டி நிக்குமோ!!

    தேர்மூட்டு என்பதுதான் தேர்முட்டி ன்னு ஆகியிருக்கும்னு நினைக்கிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  33. 5 B பிரிவு & 5 D பிரிவு - ஆசிரியைகள். (பெயர் ஞாபகம் இல்லை ) //

    நீங்க ஸ்கூலுக்கே போலைனு சொல்லுங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! பின்ன ஆசிரியைகள் பெயரை மறக்கலாமோ!??

    நெல்லை எங்க இருக்கீங்க?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறிய வயதில் நமக்குப் பாடம் எடுத்த வாத்தியார், ஏதேனும் காரணத்தினால் ஸ்பெஷலாக இருந்தால்தான் நினைவுக்கு வரும். 5ம் வகுப்பில் சுகுமார் என்ற ஹெட்மாஸ்டர், அவர் பையன் குமார். குமாருக்கும் எனக்கும் ஏதோ சண்டை வந்துவிட்டது. சுகுமார், மேல்நிலைப்பள்ளி ஹெட்மாஸ்டரான என் அப்பாவிடம் தயங்கித் தயங்கி போட்டுக்கொடுத்து எனக்கு அடி வாங்கிவைத்தார். எனக்கு 6ம் வகுப்பு எடுத்த பள்ளியில், கங்கா, யமுனா, மீனா என்று மூன்று டீச்சர்கள் உண்டு. பெயரினாலும், மூவர் மாத்திரமே பெண் டீச்சர் என்பதாலும், மீனா டீச்சர் மாத்திரம், ஹெட் மாஸ்டராக இருந்த எங்க அப்பாவுக்கு எதிர் க்ரூப்பில் இருந்ததாலும் எனக்கு நினைவு இருக்கு. 7ம் வகுப்பில் (தாளவாடி) தயாநிதி என்ற தமிழ் டீச்சர், ஒரு மாணவியை 'டி' போட்டுக் கூப்பிட, 'இந்த டீ போடற வேலைலாம் எங்கிட்ட வச்சுக்காதீங்க' என்று அவள் எழுந்து சொன்னாள். அதனால் அந்த டீச்சர் பெயர் நினைவிருக்கு. பள்ளி, கல்லூரியிலும் குறிப்பிடத்தக்கவர்களைத் தவிர எல்லா டீச்சர்சையும் நினைவில் இருக்காது.

      நீக்கு
    2. நெல்லை நான் அண்ணாவை கலாய்ச்சிருந்தேன்!!!

      ஆமா நீங்க சொல்றது அப்படித்தான் நமக்கு நினைவு வைத்துக்கொள்ள ஏதாச்சும் ஸ்பெஷலா இருக்கணும். எனக்கும் வள்ளியூர்ல அஞ்சாப்பு படிச்சப்ப, வேத மூர்த்தி சார், திரவியம் சார் இன்னம் நினைவு இருக்கு. திரவியம் சார் கையை நீட்டச் சொல்லி பிரம்பால் அடிப்பார். அடி வாங்காம பொழச்ச ஆள் நான் தான். ஆங்கிலம் கற்பித்த ஸார். அதனால. கணக்குனா செமையா அடி வாங்கியிருந்திருப்பேன்.!!!

      ஆசிரியைகள் நு சொன்னதுனால...அண்ணாவை கலாய்ச்சிருந்தேன்....பொதுவா என் கூடப் படிச்ச ஆண் பிள்ளைகள் ஆசிரியைகளையும், பெண் பிள்ளைகள் ஆசிரியர்களையும் கரெக்ட்டா நினைவு வைச்சுப்பாங்க!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. ஆம். நினைவில் கொள்ள ஏதேனும் வித்தியாசமான நிகழ்வு நடந்திருக்க வேண்டும்.

      நீக்கு
    4. எனக்கும் ஆறாம் வகுப்பிலிருந்து பாடம் எடுத்த (இரண்டு டீச்சரின் பெயரைத்தவிர) எல்லா டீச்சரின் பேரும் மறந்து விட்டது. அவர்களும் 7 வரைதான் எடுத்தார்கள். ஆனால் ஜந்து வரை பாடங்களை சொல்லி தந்த வென்னிமலை சாரை அவர் பெயர் உட்பட அவர் உருவம் கூட லேசாக நினைவில் உள்ளது. நம் மறதிக்கு ஒர் அளவு இல்லை போலும்.

      நீக்கு
    5. //என் கூடப் படிச்ச ஆண் பிள்ளைகள் ஆசிரியைகளையும், பெண் பிள்ளைகள் ஆசிரியர்களையும்// நான் படிச்சதெல்லாம் நல்ல பசங்க/புள்ளைங்க படிக்கும் பள்ளிக்கூடத்தில்..... பெண்கள் ஆசிரியர்களை, ஆண்கள் ஆசிரியைகளை ....... நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை இப்படில்லாம் பசங்க இருப்பாங்கன்னு, 20 வருடம் முன்னால் வரை... ஹாஹாஹா

      நீக்கு
  34. என் வலது தொடையை இடித்துக் கொண்டே இருந்தவன் பொறுக்க முடியாமல் வகுப்பிலேயே..........முத்தாய்ப்பா இருக்கும்னு நினைச்சிட்டேன்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைமை ஆசிரியர் பிரம்பால் அடித்துத் துரத்திவிடுவார்.

      நீக்கு
  35. அப்பாதுரை ஜி பக்கம் - மாறவசியம் வசீகரம்!
    அந்த ஆள் பிடிபடலையா..

    சைனாவா இப்ப...ஜப்பான்ல கூட இப்படி ஒரு செய்தி அடிபட்ட நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் கௌதமன் சகோதரரே

    உங்கள் பக்கம் வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது. மலரும் நினைவுகள் அதிலும் நினைவில் தங்குபவை என்றுமே மறக்க இயலாத சந்தோஷத்தை தருபவைதான்.

    காத்தவராயன் திரைப்பட பாடல் வெகு நாட்களுக்கு பின் கேட்டேன். நிறைவாக இருக்கிறது. அப்போது டி. எம். எஸ். அவர்களின் இனிமையான, இளமையான குரலில் அமைந்த பாடல்கள் அனைத்தும் மிக அருமையாக இருக்கும்.

    தங்கள் பள்ளி மாணவர் நடராஜனின் குரலமைப்பும் அவருக்கு தெய்வம் தந்த பரிசுதான்.

    அவரின் டிமாண்ட் புரிந்தது. அருமையான பாடல்களுக்காக அவர் பிரபலமடைந்திருக்கிறார்.

    /முதலில் ஒரு சாமி பாட்டுப் பாடுவார். தனிப்பாடல்.

    பிறகு வரிசையாக அந்தக் காலத்து டி எம் எஸ் ஹிட் பாடல்கள். /

    ஆகா...!! அப்போதே தனிப்பாடல் உருவாகி விட்டதா? ஹா ஹா ஹா. (சும்மா தமாஷாக கேட்டேன் தவறாக நினைக்க வேண்டாம்.) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. ஒருவேளை அது திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலாகக் கூட இருந்திருக்கலாம். எனக்கு அப்போது தெரிந்திருக்காது.

      நீக்கு
  37. வணக்கம் சகோதரரே

    சகோதரர் அப்பாத்துரையின் பக்கமும் நன்றாக உள்ளது. இந்த வசியங்கள் அப்போதே கேள்விபட்டுள்ளேன். அந்தக் காலத்தில், எப்போதும் கணவனுக்கு பின்னாடியே நடந்து வரும் மனைவி, ஏதாவது ஒரு சமயத்தில் ஒரு அடி முன்னால் வைத்து விட்டாலும், இந்த வசியந்தான் சில பெரியவர்களால் காரணமாகச் சொல்லப்படும்.

    ஆனால், இப்போது முதியோர் இல்லங்கள் நிறைய வந்த இந்தக் காலத்தில் அதை யாரும் குறிப்பிடவில்லை. சொல்லிக் சொல்லிக் கேட்டு போரடித்து விட்டதோ? இல்லை, வசியங்கள் பழக்கமாகி விட்டதோ? யோசிக்க வேண்டிய விஷ(வசி)யம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  38. இலந்தை வடை நமது நாட்டில் இல்லை சாப்பிட்டது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையான பண்டம். ஒரு இலந்தை வடையை சிறு சிறு துண்டுகளாக ஆக்கி ஒவ்வொரு துண்டையும் ரொம்ப நேரம் வாயில் வைத்திருந்து சாப்பிடுவேன்.

      நீக்கு
    2. இது அத்திப்பழம் போலிருக்குமோ?

      நீக்கு
    3. புளிப்பு + இனிப்பு + கொஞ்சம் காரம் சேர்ந்த கலவை.

      நீக்கு
  39. //தம்பதியர்களிடம் நெருக்கம் அதிகமாக வேண்டி ஒரு மனோதத்துவ அடிப்படையிலான "தேனிலவு சிகிச்சை" என்றார்கள்// - இது பற்றி பிலிப்பைன்ஸில் பார்த்ததை எழுத நினைக்கிறேன். எழுதலாமா இங்கு, என்றும் தயங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  40. யாராவது வக்கிரம்ன்னு சொல்லிடுவாங்கன்னு தயங்கிறீங்களா?
    அதான் கவிதையாய் அங்கே சொல்லிட்டேனே! தெரிஞ்சவங்கன்னா யாருக்கும் irritating-ங்கா இருக்காது. இங்கே நடக்கறதும் அங்கே தெரியாது. நீங்களும் நல்ல பிள்ளையா வந்து அங்கே வந்து பின்னூட்டம் போடலாம்! தாராளமா எழுதுங்க!

    பதிலளிநீக்கு
  41. சமீபத்தில் உங்களைக் கலங்க அடித்த சம்பவம் எது? காரணம் என்ன?

    சின்னக் குழந்தைகளிடம் செல்ஃபோனைக் கொடுப்பதால் வரும் தீமைகளை ஏன் யாரும் நினைத்துப் பார்ப்பதே இல்லை?

    திருமண பந்தத்தின் உண்மையான/ஆழமான அர்த்தத்தைப் புரிந்து கொண்ட பின்னரே இப்போதைய திருமணங்கள் நடைபெறுகின்றனவா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!