திங்கள், 24 ஏப்ரல், 2023

"திங்க"க்கிழமை  :  குழிப்பணியாரம்  - JKC ரெஸிப்பி 

 

குழிப் பணியாரம்

 இட்லி /தோசை மாவு வெய்யில் காலத்தில்  3 நாளில் மிகவும் புளித்து விடுகிறது. சாதாரணமாக  புளித்த மாவு ஊத்தப்பமாக உருவெடுக்கும். ஆனியன் ஊத்தப்பம், கோகொனட் ஊத்தப்பம், வெஜிடபிள் ஊத்தப்பம், டொமட்டோ ஊத்தப்பம் போன்றும், பிஸ்ஸா தோசை என்ற பெயரில் சீஸ், டொமட்டோ சாஸுடன்,  ஆனியன் ரிங்ஸ், டொமட்டோ ஸ்லைஸ், கேப்ஸிகம் ரிங்ஸ், லெட்டூஸ் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு ஜீன்ஸ் போட்ட மாமியாகவும்  உருவெடுக்கும். அது போன்று தான்  இந்த குழிப் பணியாரமும்.

 வேண்டிய உபகரணங்கள்  குழிப்பணியார சட்டி(Patra Maker)

 


வேண்டிய பொருட்கள்.

புளிச்ச மாவு

வெங்காயம் பொடியாக அரிந்தது, (சின்ன வெங்காயம் ருசி கொடுக்கும் ), பச்சை மிளகாய், தேங்காய் பல்


தாளிக்க: கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு.

கடுகு தாளித்தது, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் பல் ஆகியவற்றை மாவில் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். உப்பு தேவை இல்லை. பணியாரச்சட்டியைத் துடைத்து பற்றவைத்த அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் அரை  டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்

சட்டி சூடானதும் மாவை ஒவ்வொரு குழியிலும் நிரப்பி மூடி வைத்து வேக வைக்கவும்


சிறிது நேரம் வெந்தவுடன் பணியாரங்களை குழியில் திருப்பிப் போட்டு வேக வைக்கவும்

பணியாரங்களை தட்டில் பரிமாறலாம். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, இட்லி மிளகாய் பொடி, முந்தைய நாள் வைத்த மணத்தக்காளி வற்றல் குழம்பு ஆகியவை இங்கே உள்ளன. 


ஆனாலும் ருசி திருப்தியாகவில்லை. இரண்டு பொருட்கள் இருந்தும் மாவில் சேர்க்க மறந்துவிட்டது. இஞ்சி (துருவியது), கொத்தமல்லி தழை.

சரவணபவன் மினி இட்லி போலவோ, ரத்னா கபே இட்லி போலவோ சாம்பாரில் மிதக்க வைத்து சாப்பிட்டால் ருசிக்கும்.

17 கருத்துகள்:

  1. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான படங்களோடு செய்முறை விளக்கம் அருமை.

    இதை முக்குழி என்றும் சொல்வதுண்டு...

    பதிலளிநீக்கு
  4. குழிப்பணியாரச் சட்டி வாங்க நினைத்தபோது, மனைவி, அம்மா வீட்டிலிருந்து கொண்டுவந்து கொடுத்தாள். இரண்டு முறை குழிப்பணியாரமும் உன்னியப்பமும் செய்தேன். எண்ணெய் அளவினால் பசங்களுக்கும் எங்களுக்கும் போதும்னு தோணிடுச்சு. கடாயை மாமியார் வீட்டுக்கே கொடுத்தோம். நாங்களும் வாங்கலை. எபில இரண்டு செய்முறையும் வந்திருக்கு என நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்போது நான் ஸ்டிக் குழிப்பணியார சட்டிகள் உள்ளன. எண்ணெய் செலவு குறைவு. 300ரூபாய்க்கு அமேசானில் கிடைக்கிறது. 
      வரவிற்கும், கருத்துரைக்கும் நன்றி. 

      நீக்கு
    2. அண்ணா, நான் வைத்திருப்பது நான் ஸ்டிக் அல்ல. இரும்பு - cast iron. அதுல எண்ணை செலவு இல்லாம நல்லா வரும். கடைகளில் குழிப்பணியாரச் சட்டி முழுவதும் எண்ணை விடுவாங்க. வீட்டில் அப்படிச் செய்வதில்லை. இனிப்பையும் குழிப்பணியார மாவை கெட்டியா வைச்சுட்டு அதுல வெல்லப்பொடி ஏலக்காய், எள்ளு கொஞ்சம் கலந்து கூட இப்படிச் செய்துவிடுவதுண்டு. சுக்குப் பொடியும் கூடக் கலந்து விட்டால் நல்ல சுவை.

      கீதா

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கப் பதிவில் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களது தயாரிப்பான குழிப்பணியாரம் சிறப்பான முறையில் அழகாக வந்துள்ளது. படங்களும் நன்றாக உள்ளது. தொட்டுகைகளும் நன்றாக உள்ளது. இதை என்னைப் பொறுத்தவரை பொதுவாக அப்படியே சாப்பிட்டு விடலாம்.

    நானும் முன்பெல்லாம் இப்படிச் செய்வேன். குறிப்பிட்ட அத்தனை பொருட்களுடனும் கொஞ்சம் மிளகுப்பொடி, (அது வீட்டில் அவ்வளவாக வாங்குவதே இல்லை) இல்லையென்றால் ஒரு ஸ்பூன் மிளகை பொடிதாக தட்டிப் போட்டு செய்வேன். சீரகமும் சிறிது சேர்ப்பேன். சுவைக்காக இல்லாவிடினும் புளித்த மாவும், எண்ணெய்யும் சிறிது நேரத்தில் ஜீரணமாகும் என்ற நம்பிக்கை.

    முன்பெல்லாம் தீபாவளிதோறும் முதல்நாள் இட்லிக்கு அரைத்த மாவை, (அவ்வளவாக புளிக்காத மாவை) வெங்காயம் தவிர்த்து மீதியுள்ள மற்ற பொருட்கள் சேர்த்து, உடன் கறிவேப்பிலையும் சேர்த்து எண்ணெய்யில் போட்டெடுக்கும் பழக்கம் எங்கள் வீட்டில் இருந்தது. காலை பஜ்ஜியுடன், இந்த வெள்ளையப்பமும் செய்வது ஒரு சாஸ்திரமாக இருந்தது. இப்போது செய்வதில்லை. இது கொஞ்சம் எண்ணெய் குடிக்கும்.

    நீங்கள் கூறியுள்ள முறையில் செய்தால் எண்ணெய் அவ்வளவாக குடிக்காது. நல்ல அழகான செய்முறை பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. http://geetha-sambasivam.blogspot.com/2013/07/blog-post_1279.html

      நீக்கு
    2. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி.

      தாங்கள் தந்த சுட்டிகளுக்குச் சென்று வெள்ளையப்பம் பதிவுகளை படித்து பார்த்து கொஞ்சம் சாப்பிட்டும் வந்தேன். (மானசீகமாக)

      நானும் முன்பெல்லாம் வெள்ளையப்ப விரும்பி. எங்கள் அம்மா வீட்டில் தீபபாவளிதோறும் இது காலையில் டிபனுடன் உண்டு. வெள்ளையப்பம் பஜ்ஜி, உக்கரை இல்லாத தீபாவளியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மதியும் சாதத்துடன் இரு வகை வடைகளும் . போளி வேறு கண்டிப்பாக உண்டு. அப்போது இவை அனைத்தையும் செய்யவும், அக்கம்பக்கம் உறவுகளுக்கென்று தரவும், சாப்பிடவும் உடலில் வலு இருந்தது.

      நானும் திருமணமான முதலில் எல்லாம் இப்படி வக்கணையாக செய்து கொண்டிருந்தேன். இப்போது கொஞ்ச வருடங்களாக பண்ணுவதில்லை. எண்ணெய் ஒருவருக்கும் ஒத்துக் கொள்ளவில்லை என்பதால். வெறும் வாழைக்காய் பஜ்ஜி காலை இட்லியுடன் என நிறுத்திக் கொள்கிறேன்.

      உங்கள் பதிவை பார்த்ததும் வெள்ளையப்பம் செய்து சாப்பிடத் தோன்றுகிறது. அதற்கு முதலில் இட்லிக்கு அரைக்க வேண்டும். :))) நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. குழிப்பணியாரம் செய்முறை விளக்க படங்களுடன் நன்றாக இருக்கிறது. தொட்டுக்கொள்ள சட்னி , மிளகாய் பொடி , வத்தக்குழம்பு என்று அருமை.

    நானும் செய்வேன். பேரனுக்கு பள்ளிக்கு கொடுத்து விடுவாள் மருமகள். மாவு அரைத்த அடுத்த நாள் மாவில் செய்து கொடுத்து விடுவாள்.

    பதிலளிநீக்கு
  9. ஜெகே அண்ணா கலக்கறீங்க போங்க!!!

    சூப்பரா சொல்லியிருக்கீங்க.

    நான் மீந்து போகும் மாவில் செய்வதில்லை. இதற்கென்று அளவு உண்டு அப்படிச் செய்வது வழக்கம். சிறுதானியங்களிலும் செய்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. நன்று. எங்கள் வீட்டிலும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!