புதன், 19 ஏப்ரல், 2023

வீட்டுக்கு வருபவர் வாங்கி வரும் பழம் .. ..

 

நெல்லைத்தமிழன் : 

ஆப்பிளைப் பற்றி சென்ற வார புதனில் நிறைய பேசினோம். அது சரி..உங்கள் வீட்டுக்கு வருபவர் ஒருவர் வாழைப்பழம் வாங்கிவந்தால், இன்னொருவர் ஆப்பிள் வாங்கி வந்தால், உங்கள் மனதில் இருவர் மீதும் ஒரே மாதிரி அபிப்ராயம் தோன்றுமா இல்லை ஆப்பிள் வாங்கி வந்தது சந்தோஷப்படுத்துமா?

$ நண்பர்கள் வந்தாலே சந்தோஷம்.

# ஆப்பிள் உயர்வுதானே. சந்தோஷப் பட்டால் தப்பில்லை.

& வீட்டுக்கு வருபவர் எதையும் வாங்கி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. இருந்தாலும் வாங்கி வருபவர், இந்த இரண்டு பழங்களில் எதையாவது வாங்கி வரவேண்டும் என்றால், வாழைப்பழம் வாங்கி வந்தால் எனக்குச் சந்தோஷம் ! ஏன் என்றால் - வாழைப் பழத்தை சுலபமாக உரித்துச் சாப்பிட்டுவிடலாம். ஆப்பிள் பழம் என்றால், கழுவி, கத்தி தேடி எடுத்து, (விரல்களை வெட்டிக்கொள்ளாமல் கவனமாக) துண்டங்களாக நறுக்கி, விதைகளை நீக்கி, ( என் மனைவி, பையன் போன்ற சிலர், ஆப்பிளுக்கு தோல் சீவ வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள் - இருக்கற வேலையில இது வேறயா !!) பிறகு சாப்பிட வேண்டும். ஆகவே, வா ப வா வ வா ப! (இதற்கு விளக்கம் கீ சா தருகிறாரா பார்ப்போம்! ) 

பொன்னாடைகள் போர்த்துவதன் அர்த்தம் என்ன? இதைவிட வெட்டிச் செலவோ இல்லை வெட்டிப் பந்தாவோ உண்டா?

$ வந்திருக்கும் பிரபலம், நீண்ட தூரம் பயணம் செய்து வந்திருப்பார். அப்படி வரும்போது, பிரயாணத்தில் அழுக்கடைந்த ஆடை மீது (பொன்னாடை) போற்றி சபையில் அவருக்கொரு மதிப்பு கூட்டல் செயலாக ஆரம்பித்து, வெறும் பந்தா அல்லது சமூகக் கடமையாக ஆன விஷயம்.

# சால்வைகள் மரியாதைக்கு அடையாளமாக காலம் காலமாக இருந்து வருகின் றன. இப்போது கொஞ்சம் மலினப் பட்டுப் போயிருப்பது உண்மை.  போர்த்திக் கொண்ட சிலர் அதை பாதி விலைக்கு கடைக்கு விற்று விடுவதும் உண்டு என்று சொல்கிறார்கள்.

& வெட்டிச் செலவு, வீண் பந்தா என்றுதான் நான் வெகு நாட்கள் நினைத்திருந்தேன். ஒருமுறை எங்கள் தொழிற்சாலை தொழிலாளர் வகுப்பில், எங்கள் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் வண்டிகள் குறித்தும் அவற்றின் சிறப்புகள் பற்றியும் ஒரு மணி நேர வகுப்பு எடுத்து விளக்கமாக சொன்னேன். வகுப்பு முடிந்ததும், வகுப்பில் பங்கேற்ற தொழிலாளர்களின் சார்பாக எனக்கு ஒரு சால்வை அணிவித்து, வாழ்த்திப் பேசினார்கள். அந்த சால்வையை நெடு நாட்கள் வைத்திருந்தேன். அதைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு சந்தோஷ உணர்வு வந்துகொண்டிருந்தது. அப்புறம் பொன்னாடை போர்த்துவது, சால்வை அணிவிப்பது பற்றிய என் அபிப்பிராயம் மாறிவிட்டது. 

பாராட்டிப் பேசியவர் மறந்திருப்பார்; 

பொன்னாடை போர்த்தியவர் மறந்திருப்பார். 

பாராட்டப் பட்டவர் புன்னகைப்பார் - அந்தப் 

பொன்னாடை கண்ணில் படும்போதெல்லாம்! 

இந்தப் படத்தைப் பாருங்கள் : 

☝As per the description given in Valmiki Ramayana, with the help of AI (Artificial intelligence) 21 years old Sri Rama portal drawn by computers. Really amazing features of Sri Rama, feeling like keeping this image always in the heart and to enjoy his kind gestures forever and ever...🙏🙏🙏💐 JAI SHREE RAM 🙏🙏💐

ஏன், அழகிய முகம் என்று நாம் நினைக்கும் முகங்களில் பெண்மையின் சாயல் தெரிகிறது? 

# தெரியக் கூடாதா என்ன ? சற்று பெண்மை அழகு பெண் குரல் இனிது என்பது அகில உலக ரசனை.

& அது சரி, கணினி உருவாக்கிய ஸ்ரீராமர் படம் மட்டும் அனுப்பி இருக்கிறீர்களே, சீதா தேவி படமும் கணினி உருவாக்கியது - உலா வருகிறதே. அதையும் சேர்த்து, சீதா ராமனை வணங்குவோம்! 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

நீங்கள் வத்சலா குட்டிக்கு அடம் பிடித்தது இருக்கட்டும். உங்கள் குழந்தைகள் அடம் பிடித்த பொழுது எப்படி சமாளித்தீர்கள்?

# அதிர்ஷ்டவசமாக என் குழந்தைகள் அடம் பிடித்ததில்லை.

& அதை ஏன் கேட்கிறீர்கள்! என்னுடைய பெண் சிறு வயதில் பயங்கரமாக அடம் பிடிப்பாள். சமாளிப்பது ரொம்பக் கஷ்டம். திடீரென்று ஏதேனும் கதை சொல்லி, கவனத்தைத் திருப்பி அடம் பிடித்த பொருளை அவள் நினைவிலிருந்து அகற்றி சமாளிப்பேன். 

உங்கள் மனைவி ஏதோவொரு பொருளுக்கு தீவிரமாக ஆசைப்படுகிறார், ஆனால் நிச்சயம் பயன்படுத்த மாட்டார் என்று தெரியும், அப்போது என்ன செய்வீர்கள்?

# காசு கஷ்டம் இல்லை என்றால் வாங்கிக் கொடுத்து விடுவேன். 

& இந்த விஷயங்களில், என்னை விட, என் மனைவி ரொம்ப கெட்டி. பயன்படாத பொருள் எதற்கும் ஆசைப்பட்டதில்லை. 

ஒருவரை பார்த்து இன்ஸ்பயர் ஆகி ஒரு வேலையை செய்வதற்கும் போட்டி போடுவதற்கும் என்ன வித்தியாசம்? 

# ஆர்வத்துக்கும் பொறாமைக்கும் இருக்கும் வித்தியாசம்தான்.  நேர்த்தியும் பட படப்பும் அடையாளம் .

= = = = = =

KGG பக்கம் :

சிறு வயது சந்தேகம். 

பள்ளியில் சேராத வயதில், பல வார்த்தைகள் காதில் விழும் - சில புரியும், சில புரியாது! வீட்டில் பேசிய (தாய்) மொழி தெலுங்கு என்பதால், சில தமிழ் வார்த்தைகள் / ஆங்கில வார்த்தைகள் - அர்த்தம் புரியாமல் யோசிப்பேன். 

குடியிருந்த வீட்டிற்கு மாவடு விற்பவர் வந்திருந்தார். சென்ற சீசனில் வாங்கிய மாவடு - இந்த சீசனில் அவர் கொண்டு வந்திருந்த மாவடு ஒப்பீடுகள் நடு வீட்டு அத்தைப் பாட்டிகள் தலைமையில் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. 

ஒரு பாட்டி சொன்னார் : " போன தடவை கொண்டு வந்த மாவடு - காணவே இல்லை - சீக்கிரமே ஆய் போயிடுச்சு .. etc etc " 

என் அகராதியில் அது வரை, ' ஆய் போயிடுச்சு' சொற்றொடருக்கு ஒரே அரத்தம்தான்!  

அம்மாவிடம் சென்று கேட்டேன் - " அம்மா - மாவடு எல்லாம் கூட ஆய் போகுமா? " 

அம்மா சொன்னார் - " அந்தப் பாட்டி சொன்னதின் அர்த்தம் - சென்ற முறை போடப்பட்ட மாவடு ஊறுகாய் சீக்கிரமே தீர்ந்து போய் விட்டது என்பதுதான்! " 

*** *** 

அப்பா அடிக்கடி - ராமாயணம், மகாபாரதம் இவற்றிலிருந்தெல்லாம் சின்னச் சின்னக் கதைகள் எனக்கு சொல்லுவார். கதைகள் கேட்டுக்கொண்டே இரவில் தூங்கிவிடுவேன். 

மாலை நேர ஆண்கள் மாநாட்டில் - நடு வீட்டு மாமா - லெவனோ கிளாக் - செவனோ  கிளாக் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்ததை, அவருடைய சகோதரர், என்னுடைய அப்பா, மற்றவர்கள் எல்லோரும் சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். 

நான் அப்பாவிடம், " அப்பா லவன் என்றால் என்ன ? " என்று கேட்டேன். 

அப்பா : " லெவன் என்றால் பதினொன்று. பத்துக்குப் பிறகு வருகின்ற நம்பர் " 

நான் : " அப்பா - அப்போ குசன் என்றால் பன்னிரெண்டா ? "

அப்பா : " ஞே! " 

= = = = = = = =

அப்பாதுரை பக்கம் : 

உலகம்! 

சென்னை நண்பருடன் அடையாறு சங்கீதாவில் மதிய சாப்பாட்டுக்காகச் சென்றேன். நெருக்கடியான தெருவில் அவருடைய டிரைவர் எங்கள் இருவரையும் ஓட்டல் வாசலில் இறக்கி விட்டுக் காணாமல் போனார். நாங்கள் சாப்பிட்ட பின் டிரைவருக்காகக் காத்திருக்கையில் பிறிதொரு முதுநிலை என்கவுன்டர். இது முதியவர் நிலை. 

பொறுக்க முடியுமா முடியாதா என்று கணித்துச் சொல்ல முடியாத அளவுக்கு வெயில்.  எங்கே டிரைவர் என்று சலித்தபடி தேடி வருவதாகச் சொல்லிக் காணாமல் போனார் நண்பர்.

எங்கே நண்பர் என்று நான் சலிக்கையில் ஒரு வயதான அம்மணி.. எழுபதுக்கு மேல் வயதிருக்கும்.. நல்ல நூல் புடவை, பளிச்சென்ற முகத்தில் விபூதிக் கீற்று.. என்னை அண்டித் தன் கையிலிருந்த மூன்று பாதாம்பருப்பு பாகெட்களைக் காட்டி வாங்கிக் கொள்ள வற்புறுத்தினார். பாகெட் நூறு ரூபாயென்றார். 

வேண்டாம் என்று ஒதுங்கினேன். அவர் விடவில்லை.  பின் தொடர்ந்து வந்து வற்புறுத்தினார்.  வேண்டாம் எனறு மீண்டும் மறுத்து சற்றே முகம் காட்டினேன்.  முதியவர் என்ற உறுத்தல் வர,  "அம்மா.. எனக்கு தேவையில்லைமா. விட்டுருங்க" என்றேன்.  அவர் விடவில்லை.  "உடம்புக்கு நல்லதுங்க. நூறு ரூவா குறைச்சு மூணு பாகெட்டுக்கு எரனூறு குடுங்க. நீங்க வாங்கினா தான் எனக்கு சாப்பாடு" என்றார் கலங்கினாற் போல். 

கடுப்பானேன். இதென்ன புதுவிதப் பிச்சை? கடுப்பைக் காட்டாமல், "வேணாம்மா.. நூறு ரூவா தரேன்.. வச்சுக்குங்க.. பொட்லம் எல்லாம் வேணாம்" என்று கை வீசி நகர்ந்தேன், நண்பரின் கார் வருவதைப் பார்த்துவிட்டு.

"விடமாட்டேங்கறாங்க" என்றேன் உள்ளே அமர்ந்து கார் கதவை மூடியபடி. "எழுபது வயசுக்கு மேலருக்கும் அந்தம்மாவுக்கு.. வெயில்ல பாதாம்பருப்பு வித்திட்டுருக்காங்க.. பாதாம் பருப்பு வாங்கி என்ன பண்ணப் போறேன்?" என்றேன்.

அதற்குள் அந்த அம்மணி காரை வலம் வந்து நண்பர் பக்கக் கதவைத் தட்டினார். கார் ஜன்னல் வழியே நண்பரிடம் பொட்லங்களை நீட்டி "பாகெட் நூத்தம்பது" என்றார். 

"ஏம்மா.. எங்கிட்டே.." என்று குரலெடுத்த என்னை  அடக்கிய நண்பர் அம்மணியிடம் ஐநூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து ஐம்பது சில்லறையும் பாதாம் பொட்லங்களையும் வாங்கிக் கொண்டார். 

வண்டி நகர்ந்தபின் "இது போல இந்த அடையாறு ஏரியால மட்டும் ஆறு அம்மணிகள் இருக்காங்க.  கொஞ்சம் தள்ளி கபாலீஸ்வரர் கோவில் பக்கம் போனா அங்க பத்து பேராவது பாக்கலாம். சுண்டைக்காய் வற்றல் பனங்கற்கண்டு பாகெட் வித்திட்டுருப்பாங்க. இவங்க ஒரு பாகெட் வித்தா பத்து ரூவா கமிசன், வேறே சம்பாத்தியம் கிடையாது. இவங்களுக்கு தங்க ஒரு ஓபன் விடுதி ஒண்ணு இருக்கு மந்தவெளில.. யாருடைய வீடோ தெரியல கோர்ட் கேஸ்ல மாட்டிக்கிட்டு அப்படியே கிடக்கு.. வீட்டு சொந்தக்காரங்க வாரிசெல்லாம் அமெரிக்காலயோ எங்கயோ இருக்காங்க.. அபென்டன்ட் ப்ராபர்டி.. சாமர்த்தியமான ஏதாவது கழக எம்எல்ஏ அந்த வீட்டு சொத்தை அபகரிக்குற வரைக்கும் இவங்களுக்கெல்லம் ஷெல்டர்" என்றார். "எல்லாருமே நல்ல வசதியான குடும்பத்து அம்மணிகள். பிள்ளைகள் வெளிநாட்டில் காணாமல் போய்,  சரியான சொத்துக் கணக்கு விவரம் முறையாகப் பேணாத கணவர்களும் இறந்ததும் திடீரென்று தெருவுக்கு தள்ளப்பட்டு பிழைப்புக்காக இப்படி விக்கிறாங்க.." என்றார். "நீங்க பாத்த அந்தம்மாவுக்கு.. i am positive she has been forgotten by her kids overseas... and her deceased husband likely will had a few laks in his bank account when he died" என்றார்.

"நம்பவே முடியலபா" என்றேன் அதிர்ச்சியுடன். பொட்லம் வாங்கியிருக்கலாமோ? உறுத்தியது.

வீட்டுக்கு வந்தேன். என் அம்மாவுக்கு ஏறக்குறைய அதே வயது தான்.  காரணமே இல்லாமல் காலில் விழுந்து நமஸ்காரம்மா என்றேன். நடந்த விஷயத்தைச் சொல்வதா வேண்டாமா என்று சிந்திக்கையில் வாட்சப்பின் அறிவிப்பு ஒலி நங்னங் என்றது.

இன்ஸ்டக்ரம் பேஸ்புக் இவற்றில் எனக்கு ஆர்வமில்லை. ஆனால் ஆர்வமுள்ளவர்களின் நட்பிருப்பதால் ஏதாவது செய்தி வந்தபடியிருக்கும். அப்படி வந்த செய்தி ஒன்று அன்றைய தினத்தின் அடையாளமாகிப் போனது.

மும்பை மின்ரயிலில் ஒரு பெண்மணி சீடை முறுக்கு விற்பது பற்றிய விடியோவுடன் வந்த india today செய்தி.



= = = = = 

124 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம். வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. அப்பாத்துரையின் உலகம் மனதிற்கு வருத்தத்தைக் கொடுத்தது.

    கணவன், மனைவிக்கு வங்கிக் கணக்குகள், சொத்துபத்திரம் போன்றவை கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். நான் அதைத் தெரிந்துகொள்ளாமலேயே இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிந்திருக்கவேண்டும்.

      நீக்கு
    2. நானும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். என்ன சோம்பலோ தெரியவில்லை.

      நீக்கு
    3. இருவருமே தெரிஞ்சு வைச்சிருக்கணும். எங்க வீட்டில் அவர் சொல்லும் கணக்கு, வழக்குகள் என்னால் சரிபார்க்கப்படுவதால் இருவருக்கும் தெரியும்.. மேலும் வங்கிகளிடமிருந்து வரும் செய்திகள் எனக்கு வருவதாலும் எனக்கும் ஓரளவுக்குக் கணக்கு வழக்குகள் தெரியும். அதுக்கே அவர் கவலைப்படுவார்.

      நீக்கு
  3. இதைவிட அவலமான நிலைமை, கணவன் கடன் வாங்கி, அதனை அக்கவுன்ட் வைத்துக்கொண்டு பகிராமல் மண்டையைப் போட்டு, குடும்பத்தைத் தெருவுக்குக் கொண்டுவருவது.

    இது அப்பா சொல்லி என் மனதில் பதிந்ததாலோ என்னவோ, கடன் வாங்குவதில்லை, க்ரெடிட் கார்ட் வாங்கியதே இல்லை..

    நான் யாருக்கும் பணமாக்க் கொடுக்கவேண்டியதில்லை. ஆனால் வாழ்க்கையில் பலரின் உதவிகள் என்னை உயர்த்தியிருக்கின்றன, மனைவி உட்பட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய உலகமே, டெபிட் கார்ட் + ஆன் லைன் பணப்பரிமாற்றங்கள் மட்டுமே.

      நீக்கு
    2. எங்களிடம் எந்த வகைக் கார்டுகளும் இல்லை. முக்கியமான சிலவற்றைத் தவிர்த்து மற்றவை பணம் கொடுத்துத் தான் வாங்குகிறோம்.

      நீக்கு
  4. கௌதமன் எழுத்து புன்னகை வரவழைக்கிறது.

    ஒரு மாத்த்துக்குமுன் என் அப்பா, அம்மா கனவில் வந்தார்கள். பார்த்ததும் ஓடிப்போய், அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு அப்படி ஒரு அழுகை அழுதேன்.

    அவங்கள்லாம் இல்லாம எப்படி நாமே தனியாக்க் காலம் கழிக்கும்படி ஆகிவிட்டது... இதுவே ஆகப்பெரிய சோகம் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கௌதமன் எழுத்து புன்னகை வரவழைக்கிறது.// நன்றி.

      நீக்கு
    2. //ஒரு மாத்த்துக்குமுன் என் அப்பா, அம்மா கனவில் வந்தார்கள். பார்த்ததும் ஓடிப்போய், அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு அப்படி ஒரு அழுகை அழுதேன்.

      இருக்கட்டும். கனவிலிருந்து விழித்ததும் எப்படி உணர்ந்தீர்கள்?
      சிறுகதைக்கான கரு.

      நீக்கு
  5. ஒரு பொன்னாடைன்னா ஓகே. எப்போப் பாத்தாலும் செயற்கையான புன்னகைகளுடன் அரசியல்வாதிகளுக்குப் போர்த்தப்படும், வாங்கிக்கொள்ளப்படும் பொன்னாடைகள் காசுக்குப் பிடித்த கேடு. அதற்கு போர்வை போர்த்தினால் ஏழைகளுக்காவது உபயோகப்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்னாடை சரித்திரம் கொஞ்சம் சிரித்திரம்.
      தென்னாட்டின் சாதாரண வழக்கத்தை சாதி வழக்காக மாறியதில் திராவிட தந்தைக்கு நிறைய பங்கிருக்கிறது இந்த சரித்திரத்தில். இணையத்தில் படிக்கலாம்.

      நீக்கு
  6. இராமன் நிறம் கருப்பு என ஸ்க்ரிப்டில் தெளிவா இருக்கு. சத்ருக்னன் மாத்திரம் வெண்ணிறம். சீதை நேபாளப் பகுதி, நல்ல நிறம். ஆனால் பொதுப்புத்தி எப்படியெல்லாம் வெண்ணிறமே உசந்தது எனச் சொல்லுது பாருங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராமன் நிறம் ஒருவித நீலம் என்று வால்மீகியில் படித்த நினைவு.

      நீக்கு
    2. நீல மேக ஷ்யாமளன், கார் வண்ணன்.... எல்லாமே கருப்பை softஆகச் சொல்லப் பிறந்தவை. அப்பாதுரை சார் இன்னும் அவதார் படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீளவில்லை போலிருக்கு

      நீக்கு
  7. வாங்கிக்கொண்டு வரும் பொருள், கொடுக்கும் பொருளை வைத்து நாம் மனிதர்களை மதிக்கிறோம் என்பது நினைக்கவே கசப்பானதுதான்.

    பதிலளிநீக்கு
  8. அப்பாதுரை பகிர்ந்துள்ள வீடியோ பாட்டி ரஜினி மாதிரி மூன்று நான்குமுறை திரும்பித்திரும்பி வருகிறார் என்று தெரியாமல் கொஞ்ச நேரம் அடுத்த என்ன நடக்கிறது என்று கா(பார்)த்துக்கொண்டிருந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கவனித்தேன். ஒவ்வொரு முறையும் அந்த அம்மாவின் சிரித்த முகத்தைப் பார்த்து வருந்தினேன்.

      நீக்கு
    2. எங்கள் அதிகாரி ஒருவர் (சமீபத்தில் ஒய்வு பெற்றார்.  தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் கூட அவர் பெயர் வந்ததது) ஏதாவது கோபமாக கேள்வி கேட்டு விட்டு வாய்ப்ப்பகுதியை ஒரு மாதிரி சைட் வாங்கி வைத்துக் கொள்வார்.  பார்க்க சிரிப்பது போல இருக்கும்.  முதல் இரண்டு முறை சந்தர்ப்பம் மற்றும் உண்மை தெரியாமல் கோபபபடுவதற்கு பரிகாரமாக (!) புன்னகைக்கிறார் என்று நினைத்து நானும் சிரித்து வைத்து வாங்கி கட்டிக்கொண்டேன்!

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள்.
    அனைவரும் நலமுடன் வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.

    வீட்டுக்கு வருபவர்கள் ஏதாவது வாங்கி வர வேண்டுமென்ற கட்டாயத்தை முதலில் உருவாக்கியது யாரோ..? அதிலிருந்துதான் இந்த அன்புத் தொல்லைகள் தொடங்கி விட்டது.

    பொன்னாடைகள் பற்றி கூறிய விளக்கம் சரிதான். அது ஒரு நினைவுகள்தான்... ஆனால் தேவைக்கு அதிகமான நினைவுகளை சுமக்க முடியாதவர்களுக்காக இப்படி ஒரு வழி இருப்பதை இப்போதுதான் அறிகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வீட்டுக்கு வருபவர்கள் ஏதாவது வாங்கி வர வேண்டுமென்ற கட்டாயத்தை// - திருமணத்துக்கு பரிசு, மொய் கொடுப்பதும் அது போலத்தானே.... இரண்டு வேளை சாப்பிட்டோம். அப்படீன்னாக்க 500 ருபாய் ஒருத்தருக்கு என்று கணக்குப் பார்க்கும் அவலம் இல்லையா?

      நீக்கு
    2. சில மன கணக்குகள் வெளியே சொல்ல முடியாது.

      நீக்கு
    3. தாங்கள் சொல்வதும் உண்மைதான் நெல்லைத் தமிழர் சகோதரரே.

      திருமண பரிசாக யார் என்ன கொடுத்தார்கள் என்ற கணக்கை வேறு நினைவுபடுத்தி வைத்துக் கொண்டு அவர்கள் வீட்டு விஷேடங்களில் பதிலுக்கு அவ்வாறே செய்வது.... இல்லை காலத்திற்கேற்ப அந்த பொருளின் விலைகளுக்கேற்பவே அப்போதுள்ளதில் வேறு ஏதாவது வாங்கித் தருவது. ... இந்த மாதிரி கணக்கிலிருந்தும் மனிதர்கள் மாற மாட்டார்கள். இது எங்கும் நியதியாக காண்பது.

      அப்படி பரிசளிப்பதுடன் சரி. அதன் பின் அவரவர்கள் இன்ப துன்பங்கள் இவர்கள் மனதில் உறுத்தாது . ஆனாலும் சிலருக்கு அவர்களின் இன்பம் மட்டும் ஒரு வகை பொறாமையை, அதன் விளைவாக துவேஷத்தை ஏற்படுத்தும். இதுவும் மனித இயல்பு. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. //சிலருக்கு அவர்களின் இன்பம் மட்டும் ஒரு வகை பொறாமையை, அதன் விளைவாக துவேஷத்தை// - இது இருக்கத்தான் செய்யும். சிறிய அளவில், நமக்கு இந்த மாதிரி அமையவில்லையே என்று மனம் எண்ணினால் தவறில்லை. ஆனால் துவேஷம், அவர்களுக்கு எதிராக மனதில் நினைப்பது போன்றது, நமக்கே கெடுதல் விளைவிக்கும்.

      நீக்கு
    5. உண்மை.. . "கெடுவான் கேடு நினைப்பான். " என்றொரு பழமொழி உண்டே. சரியாக சொனன்னீர்கள். நன்றி.

      நீக்கு
  11. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாருக்கும் இறைவனை
      நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

      நீக்கு
  12. கணினி உருவாக்கித் தந்த கரியவன் கருணைகூர் மைதிலி இருவரையும் கண்டதும் கண்கள் கலங்கி விட்டன..

    அப்போதே
    கொண்டைய ராஜூ அவர்களது சித்திரங்களில் இந்த சாயலைக் கண்டிருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    கெளதமன் சகோதரர் பக்கம் சிரிப்பை உண்டாக்கியது. அறியா பருவமென்றாலும் ஆழமான கேள்விகள். ரசித்தேன்.

    சகோதரர் அப்பாத்துரை பக்கம் படித்ததும் கண் கலங்க வைத்து விட்டது. வாழ்வில் முதுமை சற்று கொடியதுதான். ஆனாலும் அவர்களின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. பொன்னாடைகள் காசுக்குப் பிடித்த கேடு...

    பன்னாடைக்கு மதிப்பு உண்டு..

    பதிலளிநீக்கு
  15. இன்றைய ஆப்பிள் பழங்கள் பெரும்பாலும் இறக்குமதி..

    ஆப்பிள் நல்லது என்பது மோசடி.. ஓட்ஸ் மாதிரி வேண்டாத வேலை..

    சென்ற முறையே எனது கருத்தை உள்வாங்கிக் கொண்டு இங்கே பதில் தரவில்லை என்ற வருத்தமும் எனக்கு உண்டு..

    An apple a day keeps the doctor away.. என்பது உண்மை என்றால் ஆப்பிளை அவித்தும் தின்கிற் பழக்கம் உடைய மேலை நாடுகளில் பிணியே கிடையாதா?..

    புளிப்பு ஆப்பிளைத் தின்று வயிறு உப்பிக் கொண்டால் அது சீராக எந்த ஆப்பிளைத் தின்பது..

    மேல் நாட்டுப் பழம் என்ற வீண் பகட்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரிதான்.

      நீக்கு
    2. //மேலை நாடுகளில் பிணியே கிடையாதா?..// - இந்தக் கேள்வி தவறானது. எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்பதுபோல, எனக்குத் தெரிந்து பல சித்தா டாக்டர்கள், அலோபதி டாக்டர்கள் குறைந்த வயதில் இறந்திருக்கிறார்கள், கேன்சர் வந்திருக்கு இன்னும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்திருக்கு.

      அவனுவளுக்கு ஆப்பிளை விட்டா வேற பார்த்ததில்லை. அதுனால தினம் ஒரு பழம்னு சொல்லிட்டுப்போயிட்டான். நமக்கு வாழைப்பழம் (அந்தக் கால ஒரிஜினல்). இப்போ ஆப்பிளைச் சாப்பிட்டாலும் வாழைப்பழம் சாப்பிட்டாலும், பிணி உறுதி

      நீக்கு
  16. அப்பாத்துரை அவர்களது பக்கத்தைப் படித்ததும் மறுபடியும் மனம் கலங்கி விட்டது.

    இன்றைய காலகட்டத்தில் உற்வுகள் அற்றுப் போன முதுமை கொடியது தான்..

    பதிலளிநீக்கு
  17. மாவடு சீக்கிரமே ஆய் போய்டுச்சு!..


    கௌதமனும் கலக்க ஆரம்புச்சுட்டார்!..

    பதிலளிநீக்கு
  18. வீட்டிற்கு வருபவர் எதுவும் வாங்கிக் கொண்டு வரவேண்டும் என்ற நினைப்போ, எதிர்பார்ப்போ துளியும் கிடையாது. வீட்டிற்கு மனிதர்கள் வந்தாலே மகிழ்ச்சிதான்.

    அப்படியே அவர்கள் அன்போடு, தங்களின் மன மகிழ்ச்சிக்காகக் கொண்டு வந்தாலும் அன்போடு மகிழ்வோடு கொண்டுவருவதை விட உயர்த்தி தாழ்த்தி பார்ப்பது மிகவும் மட்டமான குணம் என்பது என் தனிப்பட்டக் கருத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. ஆனால் அப்படி உயர்த்தி தாழ்த்தி பார்க்கும் மனிதர்கள் குடும்பத்தில் உண்டு. அவர்களை எல்லாம் நான் வகையில் சேர்த்துக் கொள்வதே இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. பொன்னாடை போர்த்துவது ஏதேனும் அபூர்வமாக, கௌ அண்ணாவுக்கு நிகழ்ந்தது போல இருந்தால் அது நினைவில் இருக்கும். எதுவும் ஓரிரண்டு எனும் போது அது மகிழ்ச்சி. அதுவே அதீதமானால் அதன் மதிப்பு மிகவும் குறைவு.

    எதற்கெடுத்தாலும் பொன்னாடை என்பது எந்த விழா என்றாலும் பொன்னாடை என்பதெல்லாம் சுத்த வேஸ்ட். குறிப்பாக அரசியல், இலக்கிய விழா என்று பெறுபவர்கள் அதை நினைவு கொள்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. வீட்டில் ஒரு அலமாறி முழுவதும் இருந்தால் பத்தோடு பதினொன்று என்றுதான் ஆகும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம ரங்க்ஸுக்குப் பணி ஓய்வின் போது போர்த்திய பொன்னாடை நல்லவேளையாக நல்லதொரு கம்பளி ஷால் ஆக இருந்தது. இப்போவும் பயன்படுத்துகிறோம்.

      நீக்கு
    2. எனக்கும் பொன்னாடை போர்த்தி, நானும் நான்கு பொன்னாடை வைத்திருக்கிறேன்!

      நீக்கு
  21. ஒருவரை பார்த்து இன்ஸ்பயர் ஆகி ஒரு வேலையை செய்வதற்கும் போட்டி போடுவதற்கும் என்ன வித்தியாசம்? //

    ஆசிரியரின் பதில் சூப்பர்.

    அதோடு....(நல்ல விஷயங்கள் பற்றி) இன்ஸ்பயர் ஆகிச் செய்யும் போது நாம் அதைப் பார்த்து வியந்து உணர்ந்து செய்வதால் அது நிலைக்கும். யாரைப் பார்த்து அலல்தி எதிலிருந்து இன்ஸ்பையர் ஆகிறோம் அவர்கள்/அதன் மீது நமக்கு உயர் அபிப்ராயம் தோன்றும்.

    போட்டி போடும் போது (ஆரோக்கியமான போட்டி வேறு) அது நிரந்தரமல்ல. அந்த நிமிடத்திற்கானது அவ்வளவே இது அதில் அந்த நிமிடத்துக்குக் கற்றல். பல சமயங்களில் பொறாமையைத்தான் தூண்டும். வெற்றி பெற்றால் எக்காளம், தோல்வி அடைந்தால் மனதில் வன்மம், பொறாமை ....போட்டிப் போட்டுக் கொண்டு செய்வதற்கு மனப்பக்குவம் வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. மாவடு ஆய் - ஹாஹாஹாஹா....ஆ கூடவே இது தோன்றுதே...அதே நினைப்பு இருந்தா மாவடு சாப்பிடும் போது...ஹிஹிஹிஹி...

    லவன் - குசன் - சுவாரசியம்.

    செவன் ஓ க்ளாக் என்றால் எங்கள் இளம் பிராயத்தில் யாரேனும் ஃபோரடித்தால் அவர்களை 7 O clock என்று சொல்வதுண்டு. எங்களுக்குள் சங்கேத மொழி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அளவுக்கு அதிகமாக ஊறின, 1 வருடம் ஆன மாவடுவை எடுத்தாலே, கௌதமன் சார் நினைப்பு, படிப்பவர்களுக்கு நிச்சயம் வரும்

      நீக்கு
  23. அப்பாதுரை ஜி, இப்பவும் அடையாறில் சங்கீதா இருக்கா? சென்ற முறை சென்னை போனப்ப அங்கு சங்கீதாவைக்!!! காணவில்லையே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அதுவும் நுங்கம்பாக்கமும் சுவையில் நன்றாக இருக்கும். முஸ்லீம் மேனேஜ்மெண்ட் வந்தபிறகு நுங்கம்பாக்கம் என்ன ஆனதுன்னு தெரியலை. காலைல பிரியாணி போட ஆரம்பிச்சுருப்பாங்களோ

      நீக்கு
    2. நாங்க அடையாறு சங்கீதா போயிட்டு ஒரு தரம் அவதிப்பட்டோம். அதே மயிலையில் தெப்பக்குளத்துக்கு எதிரே இருந்த (இப்போ இருக்கா?) சங்கீதாவில் கொத்துமல்லி வடை நன்றாக இருந்தது. அது ஒரு காலம். இப்போ இங்கே உள்ள சங்கீதாவில் ஸ்விகி மூலம் ஒரு முறை பையர் வாங்கிட்டுக் கெட்டுப் போன உணவு! அப்படியே தூக்கி எறிந்தோம்.

      நீக்கு
    3. சென்ற மார்ச் கடைசி வாரம் சங்கீதா அதே இடத்தில் இருந்தது. :-)

      நீக்கு
  24. இருப்பவர்களின் உலகம், இல்லாதவர்களின் உலகம் என்றிருந்தது ஒரு காலத்தில். காசைத்தான் சொல்கிறேன். இப்போது காசு ஒரு பக்கம் கொழுத்திருக்க, சில இடங்களில் சேர்ந்து மூலையில் குவிந்து கிடக்க, முதியோர் உலகம், முதியோரல்லாதார் உலகம் என ஆகிவிட்டிருக்கிறது. எப்படியிருப்பினும் தொடர்கிறது இந்த டிவிஷன். பிரிவுகள். பிரிவினை. பிரித்துப் பிரித்து, விலக்கி விலக்கிப் பார்த்தலால் வரும் வினை. மனித இனம் உருப்படும் என்ற நம்பிக்கையில்லை. மேலும் நாசமாய்த்தான் போகும் என்று இங்கே சொன்னால்... பெஸிமிஸ்ட் எனவோ, சரியான எதிர்மறை சிந்தனை எனவோ கூச்சல் எழக்கூடும் !

    பதிலளிநீக்கு
  25. @ திரு ஏகாந்தன்..

    // இருப்பவர்களின் உலகம், இல்லாதவர்களின் உலகம் என்றிருந்தது ஒரு காலத்தில். காசைத்தான் சொல்கிறேன்..//

    சில வரிகள் படித்ததும் அறிவு என்று நினைத்தேன்..

    சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள்..

    பதிலளிநீக்கு
  26. அப்பாதுரை ஜி! மேட்டர் கண்ணு கலங்கிடுச்சு. எனக்குச் சென்னையில் இருந்தப்ப இப்படியானவர்களில் சிலர் அறிமுகமுண்டு. இப்போது தொடர்பில்லாமல் போய்டுச்சு.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. அன்றைக்கு பெரிய சித்தப்பா சின்ன சித்தப்பா, அறந்தாங்கி அத்தை ஆலங்குடி அத்தை என்று ஏகப்பட்ட உறவுகள்..

    இன்றைக்கு வீட்டுக்கு வீடு ஒத்தைப் பனை மரம்..

    ஆட்சிக் கட்டில்.. ல இருந்த கான் கிராசும் தீரா விடியமும்
    சிறு குடும்பம் சீரான வாழ்வு.. ன்னு சொல்லி - தெரத்திப் புடிச்சு நரம்பை நறுக்கி விட்டானுங்க..

    சிறு குடும்பம் எல்லாம் சிதறிப் போன குடும்பம் ஆச்சு..

    கோடிக்கு மேல கோடியா கொட்டிக் கிடக்குதாம்..

    சிறு குடும்பம் எல்லாம் சிதறிப் போனது தான் மிச்சம்!..

    பதிலளிநீக்கு
  28. ஒரு புள்ள இல்லாட்டி ஒரு புள்ள கஞ்சி ஊத்தாதா!?... என்றொரு பேச்சு இருக்கும் அந்தக் காலத்தில்..

    இத்தனைக்கும் படிப்பறிவு கம்மி..

    இப்போ சீர்மிகு கல்வியால -

    சிறு குடும்பம் ஆன பிறகு முதியோர் இல்லமும்
    ஆதரவற்ற வாழ்க்கையும் பெருகிப் போச்சி..

    சீச்சி!..

    பதிலளிநீக்கு
  29. அன்பிற்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்களது தாயார் இன்று காலையில் இயற்கை எய்தினார்கள்..

    பதிலளிநீக்கு
  30. முதுமையில் தனிமை, வறுமை கொடியது.

    வீட்டுக்கு வருபவர்கள் எதுவும் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. பொருட்களை வைத்து அவர்களை கணிப்பதுமில்லை.

    பதிலளிநீக்கு
  31. எங்க வீட்டுக்கு யாராவது வராங்கன்னாலே ஆப்பிள் வாங்காமல் வரணும்னு வேண்டிப்போம். அப்படியும் சில/பல சமயங்கள் வந்துடும். தீர்ப்பதற்குள் போதும் போதும்னு ஆகிடும். நான் என்னமோ ஒரு துண்டு கூட வாயில் போடுவதில்லை. இருமல் துளைத்து விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. yessssssssssssu! ஒரு சில நண்பர்கள் எல்லாப் பழங்களுமாக வாங்கி வந்ததும் உண்டு. மொத்தத்தில் ஓர் பழக்கடையே வரும். :)))) அப்போவும் விநியோகம் தான் கை கொடுக்கும்.

      நீக்கு
  32. கௌதமன் சாரின் அருமையான சந்தேகங்களும் பெற்றோரின் பதில்களும் அருமை. இஃகி,இஃகி,இஃகி! அப்பாதுரை பக்கம் படிச்சதும் கலங்கி விட்டேன். இப்படி எல்லாமுமா நடக்கிறது என்று! சிலரின் மனம் ஏனோ கல்லாய் ஆகிவிடுகிறதே! அதுவும் பெற்றோரிடம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் இந்தியா வந்திருந்த பொது நண்பரின் பெற்றோரை தற்செயலாக ரங்கநாதன் தெருவில் (அந்தக் கூட்டத்தில் எப்படி ஒருவர் பார்வையில் ஒருவர் பட்டோம்?!) சந்தித்தேன். நலம் விசாரித்த அடுத்த கணம் "ஏம்பா.. கண்ணன் ஆறு மாசமா செலவுக்கு பணமே அனுப்பலபா.. கொஞ்சம் சாரிக்கிறியா?" என்கிறார் நண்பரின் அப்பா. திரும்பியதும் நண்பரை அழைத்துப் பேசினேன். விவரம் சொன்னேன். "டேய்.. நான் இப்ப சியாடில்ல வீடு வாங்கியிருக்கேன்.. பணம் அதுக்கே போயிடுது. அப்பாம்மாக்கென்னடா.. பணமா குறை? அந்தாளுக்கு மாசம் பென்சன் எழுபதாயிரமோ என்னவோ வருது. பிசுநாறி.. நான் அனுப்பலனு புலம்பறான் பாரு".
      பெற்றோருடன் அதீத உறவோ நட்போ இருக்க வேண்டிய அவசியமில்லை தான். ஆனால் வெறுப்பும் இகழ்ச்சியும் எங்கிருந்து வருகிறதோ?

      நீக்கு
    2. பெற்றோருக்காக எல்லாவற்றையும் துறந்து கடமையாற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

      நீக்கு
    3. இதெல்லாம் இளமைக் காலத்தில் தன்னை மிகவும் டாமினேட் செய்து, ரொம்பவே அப்பா/பெற்றோர் அடக்கி வைத்ததால் ஆழ்மனத்தில் இருக்கும் வெறுப்பா? இல்லை எவ்வளவுதான் வளர்ந்தாலும் தன் மகனை அடல்டாகப் பார்க்காமல், இன்னும் சிறுவனாக நடத்துவதாலா? இல்லை மனைவி, குழந்தைகள் என்று ஆனபிறகு, பெற்றோர் மீதான பாசம் காணாமல் போய்விடுமா?

      நீக்கு
    4. என்னதான் பெற்ற பிள்ளை/பெண் என இருந்தாலும் கல்யாணம் ஆகிக் குழந்தைகளும் பிறந்துவிட்டால் அவங்க செலவு அவங்களோட என்பது போல் நாம் அவங்களிடம் கேட்டும் வாங்கக் கூடாது. அவங்களாக முடிஞ்சப்போ முடிஞ்சதைக் கொடுத்தால் அது வேறே!

      நீக்கு
  33. இந்த ஸ்ரீராமரும் சீதாதேவியும் ஏற்கெனவே வலம் வந்துட்டாங்களே!

    பதிலளிநீக்கு
  34. சிக்கிக் கொண்டிருக்கும் நேற்றைய பதிவு பின்னூட்டங்களை
    விடுவிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  35. சென்னை ராமபுரத்தில் விக்னேஷ்வரா கல்சுரல் அகாடமி என்று ஒன்று இருந்தது. அதில் ஒரு முறை நான் நிகழ்சியை தொகுத்து வழங்கினேன். அதன் உப தலைவரான டில்லி கணேஷ் நான் உட்பட எல்லோருக்கும் பொன்னாடை போர்த்தினார் இல்லையில்லை பொன்னாடைக்கு பதிலாக பெரிய துண்டு போர்த்தினார். அதற்கு அவர் கூறிய காரணம்,"எல்லா விழாக்களிலும் பொன்னாடை என்று ஒன்று போர்த்துவார்கள், அதை ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு பதிலாக இந்த மாதிரி துண்டை துவர்த்திக் கொள்ள பயன்படுத்தலாம். நான் ஈரோட்டிலிருந்து வாங்கி வந்தேன், ஒரு துண்டு 130 ரூபாய் சொன்னான், மொத்தமாக வாங்கியதால் நூரு ரூபாய்க்கு கிடைத்தது" துண்டு என்னவோ நன்றாகத்தான் இருந்தது. ஆனால் விலையைச் சொல்லியிருக்க வேண்டாம் என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
  36. சிறு வயதில் வீட்டிற்கு வருபவர்கள் பிஸ்கெட் வாங்கி வந்தால் பிடிக்கும். க்ரீம் பிஸ்கெட் பிடிக்காது. அவர்கள் சென்றதும் அம்மா பாக்கெட்டைப் பிரித்து ஆளுக்கு இரண்டு கொடுப்பாள். நான் யார் வீட்டிற்குச் சென்றாலும் பழங்கள்தான் வாங்கிச் செல்வேன். குழந்தைகள் இருந்தால் இனிப்பு.

    பதிலளிநீக்கு
  37. அப்பாத்துரை பக்கம் - நெகிழ்சி!

    பதிலளிநீக்கு
  38. பெரியவர்களை பார்க்க போகும் போதும், குழந்தைகளை பார்க்க போகும் போதும் வெறுங்கையுடன் போக கூடாது என்பார்கள் என் அம்மா.
    மாமியாரின் அப்பா ஒரு தடவை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து விட்டால் அது அடுத்த முறையும் எதிர்பார்க்கும் என்பார்களாம்.
    யார் வீட்டுக்கும் ஒன்றும் வாங்கி செல்லமாட்டார்கள்.

    பெரியவர்களுக்குவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு வாங்கி தரலாம். ஒரு வயதான உறவினருக்கு வாழைப்பழம் வாங்கி சென்ற போது வாழைப்பழம் சாப்பிட்டால் கால்வலி வந்து விடுகிறது, பேரீச்சம்பழம் வாங்கி வா. அதுவும் கண்டிப்பு இல்லை, நீ வாங்கி வர வேண்டும் என்று நினைத்தால் என்றார்கள்.

    என் கணவர் வாங்கி வந்த பொன்னாடைகள் நிறைய இருக்கிறது, உறவினர்களுக்கு எல்லாம் கொடுத்து இருக்கிறேன். சொற்பொழிவு செய்யும் போது மாலைக்கு பதில் பொன்னடைதான் போர்த்துவார்கள்.

    பதிலளிநீக்கு
  39. கெளதமன் சார் மலரும் நினைவுகளின் மழலை பேச்சு பகிர்வு சிரிக்கவைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  40. அப்பாத்துரை சார் பகிர்வு படிக்கும் போது மனம் கலங்கி போகிறது.
    ஆதரவற்ற முதுமை கொடுமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!