ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்

 

அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரை– பகுதி 13

பார்கவ நரசிம்மர் ஆலயத்திலிருந்து 9 மணிக்குப் புறப்பட்ட நாங்கள் 10 ¼ க்கு காட்டுப்பயணப் பாதையில் பயணித்து பாவன நரசிம்மர் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தோம். பொதுவாக நான் சென்ற யாத்திரைகளில் அசம்பாவிதங்கள் நடந்தது இல்லை. இது யாத்திரை நடத்துபவரின் தெய்வபலம் என்றே நான் நம்புகிறேன். அவர், எந்த யாத்திரையையும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் அனுமதி பெற்றே தெரிவிப்பார். 50 வருடங்களுக்கு மேல், யாத்திரை கூட்டிச் சென்ற அனுபவம் மிக்கவர். 50 தடவைக்கு மேல், 106 வைணவ திவ்யதேசங்களையும் தரிசித்தவர்.

ஜீப்பிலிருந்து அனைவரும் இறங்கி, பார்கவ நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்றோம். சிறிய அளவிலான ஆலயம். நரசிம்மர், செஞ்சு மலைவாழ் மக்களின் பெண்ணான, செஞ்சு லக்ஷ்மியை இங்குதான் திருமணம் செய்துகொண்டார் என்று நம்புகின்றனர். அதனால் வருடத்திற்கு சில நாட்கள், அந்த மலைமக்கள் பெரும் கூட்டமாக வந்து கோயிலில் படையலிட்டுக் கொண்டாடுவர் (இந்த ஒரு நரசிம்மர் ஆலயத்தில்தான் பலியிடுவது நடைபெறுகிறது, அந்தச் சமயத்தில்). இவர்கள் நம்பிக்கைப்படி, அவர்கள் இனத்தைச் சேர்ந்த செஞ்சு லக்ஷ்மி வசித்த இடம் என்று அறியப்படும் ஒரு சிறிய குகை, மலைமீது சிறிது தூரத்தில் இருக்கிறது. அங்கு செஞ்சுலக்ஷ்மி மற்றும் சுயம்பு நரசிம்ம மூர்த்தி விக்ரஹங்களும் உள்ளன.





பாவன நரசிம்மரை தரிசனம் செய்தபிறகு, அருகில் மலைப்பகுதியில் இருந்த செஞ்சு லட்சுமி குகைக்குச் சென்றோம். ஒற்றையடிப் பாதை. ரொம்பவும் கடினமாக இல்லை. குகையில் நுழைந்து (உட்காரத்தான் முடியும். நிற்பதற்கு இடம் இல்லை, ஆனால் அளவில் கொஞ்சம் பெரிய குகை) செஞ்சு லட்சுமி, நரசிம்மரை தரிசனம் செய்தபிறகு, மிகக் குறுகிய குகையின் வெளிவாயில் வழியாக தவழ்ந்து வந்தோம். 







ஒரு மணி நேரம் பயணித்து (திரும்ப வந்த பயணம் கொஞ்சம் வேகமாக இருந்தது) நாங்கள் தங்கியிருந்த அஹோபில மடத்தை 12 மணிக்கு அடைந்தோம். 12 ½ மணிக்கு மதிய உணவு. எப்போதும்போல், கொஞ்சம் ஹெவியான உணவு. அவரை கறியமுது, கோஸ் கூட்டு, கோஸ் வடை, அக்கார அடிசல், பஞ்சாம்ருதம், கத்தரி சாம்பார், ரசம், அப்பளாம் என்று மெனு.

அஹோபிலத்திலிருந்து 2 மணி சுமாருக்கு பேருந்தில் கிளம்பினோம். பொங்கலுக்கு மறுநாளில் தொடங்கி, 40 நாட்களுக்கு மேலாக, அஹோபிலம் பிரகலாதவரதன் கோவில் உற்சவர் மற்றும் ஜ்வால நரசிம்மர் உத்ஸவர் இருவரையும், ஊர்வலமாக, அஹோபிலத்தைச் சுற்றியுள்ள 40க்கு மேலான கிராமங்களுக்கு எடுத்துச் செல்வார்கள். அதற்கு அந்த அந்த ஊர் கமிட்டி முன்பதிவு செய்து, அதற்குரிய வசதிகளையும் செய்துகொடுக்கும். அஹோபில யாத்திரை முடிந்து நாங்கள் திரும்பும்போது, அப்போது எந்த ஊரில் இந்த உற்சவர்கள் எழுந்தருளியிருக்கிறார்களோ அங்கு சென்று தரிசனம் செய்துவிட்டு அப்படியே ஊர் திரும்புவோம். அன்று 1 மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு, அந்த உற்சவர்கள் எழுந்தருளியிருந்த கிராமத்துக்குச் சென்று தரிசனம் செய்தோம்.


அப்படியே அருகிலிருந்த ஆஞ்சநேயர் கோவிலையும் தரிசித்தேன். (டக்குனு கோயிலுக்குள் நுழைந்து ஒரு வணக்கத்தைப் போட்டு, அங்கு சென்றதற்கு ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். நேரமாக்கினால் யாத்திரையை நடத்துபவர் கோபித்துக்கொள்வார்). இதற்கு அப்புறம், சென்னை திரும்பும் வழியில், நாங்கள் மாலை 4-5 மணிக்கு ஒரு இடத்தில் நிறுத்தி, காபி/டீ குடித்த பிறகு, ஒண்டிமிட்டா என்ற ஊரில் இருக்கும் புராதன கோதண்ட ராமர் கோவிலுக்குச் சென்று தரிசிக்கவேண்டும். (அவர்கள் நடை சாத்துவதற்குள் கோயிலுக்குச் செல்லவேண்டும்) பிறகு அங்கேயே ஒரு இடத்தில் இரவு உணவைச் சாப்பிட்ட பிறகு சென்னை நோக்கிப் பயணிக்கவேண்டும். அதனால் நேரத்தை வீணாக்க அனுமதி கிடையாது. அதுபோல ஒவ்வொரு வருடமும், அஹோபில யாத்திரை முடிந்து சென்னை நோக்கித் திரும்பும்போது, எந்த கிராமத்தில் உற்சவர் எழுந்தருளியிருக்கிறார் என்பது வேறுபடும்.

மாலை 5 மணி வாக்கில், கடப்பா அருகிலுள்ள ஒரு ராமர் கோவில் வளாகத்தில் பேருந்தை நிறுத்தி, எங்களுக்கு காபி, டீ போட்டுக்கொடுத்தார்கள். அங்கேயே மில்க் கேக் ஸ்வீட்டும், ரிப்பன் பகோடாவும் தந்தார்கள் (காலையில் செய்து பாக்கெட் போட்டு வைத்திருந்தது).

அங்கிருந்து பேருந்தில் கிளம்பும்போதுதான், கோவிலைச் சுற்றியுள்ள விளைநிலங்கள் கண்ணுக்குப் பட்டன. காய்கறிகள், கீரைகள், நெல் வயல்கள் என்று பச்சைப் பசேல் என இருந்த து. தெரிந்திருந்தால் கோவில் வளாகத்தைவிட்டு வெளியே நடந்து வந்து சிலபல புகைப்படங்கள் எடுத்திருப்பேன்.  இந்த மாதிரி விளைநிலங்கள் அருகிருக்க, கிராமத்து வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கும் என மனதில் தோன்றியது. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல்தான் இந்த எண்ணம்.  அங்கு சென்றால், 24 மணி நேரமும் மின்சாரம், கொசு போன்றவை இல்லாத சுத்தமான வசிப்பிடம், வீட்டில் குழாய்களில் வரும் அளவில்லாத நல்ல காவேரி நீர், வளாகத்தில் பயம் என்பதே இல்லாமல் இருக்கும் செக்யூர்ட் வாழ்க்கை என்று மனம் ஏங்க ஆரம்பிக்குமோ?

இந்தத் தடவை சீக்கிரமே அஹோபிலத்திலிருந்து கிளம்பிவிட்டதால், 7 மணிக்கெல்லாம் ஒண்டிமிட்டா ஊரை வந்தடைந்தோம். அங்கு இருக்கும் இராமர் கோவில் ஆயிரம் வருடங்களுக்கும் மேற்பட்டதாம்.  இந்த ஆலயத்தை சமீப வருடத்திலிருந்து, திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்க ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொரு மாதம் இரண்டாவது மற்றும் நாலாவது சனிக்கிழமை, திருப்பதியிலிருந்து லட்டுப் பிரசாதம் கொண்டுவந்து கோவிலில் விநியோகிக்கிறார்கள். ஆலயத்தின் எதிரே, வீராஞ்சநேயர் சன்னிதி (தனிக்கோயில்) இருந்தது. முதலில் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு, இராமர் கோவிலுக்குச் சென்றோம். சென்றமுறை இரவு 8 ½ மணி வாக்கில்தான் கோயிலை அடைந்திருந்தோம். இந்த முறை அதிக விளக்கு வெளிச்சமும் அமைத்திருந்ததால், கோவிலை நன்றாக் காண முடிந்தது. தரிசனமும் சிறப்பாக அமைந்தது. ஒண்டிமிட்டா கோவிலைப்பற்றியும் அங்கிருந்த சிற்பங்களையும் பிறகு காண்போம். 

அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரை நிறைவுற்றது. 

= = = = = 

56 கருத்துகள்:

  1. அஹோபில மலைக் குகைக்குள் நெல்லை!!! (தலைப்பு)

    படங்களை ரொம்ப ரசித்தேன். இந்த ரெண்டும்தான் முதல்ல கண்ணில் பட்டன!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. கருத்து மட்டுறுத்தல் வைச்சிருக்கீங்களா?

    கீதா

    பதிலளிநீக்கு
  3. முதல் கருத்து வரவே இல்லை...

    அஹோபில மலைக்குகைக்குள் நெல்லை! (தலைப்பு ஹிஹிஹி)

    இந்த இரு படங்கள்தான் முதலில் கண்ணில் பட்டன. ரொம்ப அழகா இருக்கு ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிலளிக்க பதிலளிக்க கருத்துகள் காணாமல் போய்விடுகிறது கீதா ரங்கன் (க்கா). ஆசிரியர்கள் இழுத்துக்கொண்டு வந்துவிடுவார்கள் என்று நம்புகிறேன்.

      நீக்கு
  4. 20 வருடங்களுக்கு முந்தைய நிலை - நாங்கள் சென்ற போது இப்படிப் பார்த்ததாகத்தான் நினைவு,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய மாறுதல்கள் ஏற்படுகின்றன. கோவில்களுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் மிக அதிகரித்துள்ளது

      நீக்கு
  5. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவனருள் கிடைக்க வேண்டும். அதுவும் அவனது இன்னருளே

      நீக்கு
  6. அடுத்த கருத்தைக்காணலை...அங்கு இருக்கும்னு நினைக்கிறேன்..இதுதான் அது

    20 வருடத்திற்கு முன் இருந்த நிலைதான் நாங்கள் போன போது இருந்ததுதான் நினைவில்

    செஞ்சு லக்ஷ்மி குகை என்பது பற்றி இப்பத்தான் அறிகிறேன் நெல்லை. அப்ப இதெல்லாம் சொல்லவில்லையே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிலுக்குப் பக்கத்திலேயே இருக்குறது. இதை எழுதும்போது, சித்ரகூடத்தில் அகலிகை கோவில் (?) அருகிலேயே பெரிய கோவில் இன்னொன்று வந்திருக்கிறது. அதனால் ஒரிஜினல் கோவிலுக்குச் சிலர் செல்லவில்லை. கோவில் பற்றிய விவரங்கள் எழுதிவைப்பது மிக முக்கியம்.

      நீக்கு
  7. குகை ரொம்ப அழகாக இருக்கிறது. டைல்ஸ் எல்லாம் சரிதான் ஆனால் அது அதனுடைய பழைமையை மாற்றிவிடுமே இல்லையா நெல்லை?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றிவிடும் என்பது உண்மை. ஆனால் இடம் மேலும் பழுதுபடாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறதே

      நீக்கு
  8. ஸ்ரீ நரசிம்ம
    ஜெய் நரசிம்ம
    ஜெய் ஜெய் நரசிம்ம

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி ஸமேத சீரிய சிங்கமே போற்றி.. போற்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து (மாரி மலை முழைஞ்சில் என்ற திருப்பாவை பாசுரம்) நினைவுக்கு வருகிறது

      நீக்கு
  10. மெனு அருமை...

    படங்கள், ஆஞ்சு ஆஹா!!

    விளை நிலங்கள் காய்கறிகள்...எனக்கும் பிடிக்கும். ஆனால் இப்போதைய யதார்த்தம் வேறுபடும்போது எதுவும் சாத்தியமில்லை. இருக்கும் இடம் வேங்கடம் வைகுண்டம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே ஆர் மார்க்கெட்டில் பல நேரங்களில் புதிது புதிதாக காய்கறிகளும் கீரைகளும் வரும். இன்று கீரை ஒரு கட்டு 5 ரூபாய் என்று பல இடங்களில் குவித்திருந்தார்கள் (ஞாயிறு என்பதினாலோ?)

      நீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரை நிறைவு பகுதி மிக அருமை.
    படங்களும், தகவல்களும் அருமை.

    //எந்த யாத்திரையையும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் அனுமதி பெற்றே தெரிவிப்பார்.//
    பார்த்தசாரதி யாத்திரையின் போது எல்லோருக்கும் நல்ல வழி தூணையாக வருவார் என்ற நம்பிக்கை அவரை வழி நடத்தி செல்கிறது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். அவருக்கு தெய்வபலம் மிக அதிகம். 70களில் அஹோபில யாத்திரை அவர்கள் குழு போயிருந்தபோது, மலைப்பகுதியிலிருந்து கரடி வந்ததாம். இவர் உடனே 'நரசிம்மா' என்று கத்திக்கொண்டே கையில் வைத்திருந்த கம்புடன் முன்னே சென்றாராம். கரடி உடனே சென்றுவிட்டதாம்.

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம் என்ற பின்னூட்டம் எங்கோ போய் விட்டது?
    தேட வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  15. பாவன நரசிம்மர் தரிசனம் செய்து கொண்டேன். மற்றும் செஞ்சு லக்ஷ்மி குகை படம் நன்றாக இருக்கிறது. குகைகுள் தவழ்ந்து போகும் போது கல் மண், கை, கால்களில் குத்தாமல் இருக்க டைல்ஸ் போட்டது நல்லதுதான். ஆனால் தண்ணீர் பட்டால் வழுக்கும் கவனமாக போக வேண்டும் உள்ளே.

    உற்சவர்கள் எழுந்தருளியிருந்த கிராமத்துக்குச் சென்று தரிசனம் செய்தோம்.//
    படங்களும் விவரங்களும் அருமை. தரிசனம் செய்து கொண்டேன்.
    ராமர் கோவில் நன்றாக இருக்கிறது, அனுமன், ராமர் தரிசனமும் இன்று கிடைத்தது.

    பதிவுக்கு நன்றி. இருக்குமிடத்திலிருந்து வாரா வாரம் அஹோபில தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி நெல்லைத் தமிழன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழைக்காலங்களில் இந்தப் பகுதிக்கு பக்தர்கள் செல்லமாட்டார்கள் என்று நினைக்கிறேன். மழைக்காலங்களில் காட்டுப்பகுதியில் ஜீப்பும் செல்லாது. மலையில் ஏறி சந்நிதிகளுக்குச் செல்வதும் சாத்தியமில்லை. செல்லும் வழியில் காட்டாறுகளும் அருவிகளும் இருக்கும்.

      நீக்கு
  16. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் என்ற பாடல் என் நினைவுக்கு வருகிறது கமலா ஹரிஹரன் மேடம்.

      நீக்கு
  17. இங்கே ஐயாறப்பர் கோயிலில் சமீபத்தில் திருப்பணியின் போது கருவறையின் முன்புற்ம் இருந்த பழைமையான கருங்கல் தளத்த்தை வழுவழுப்பான தளமாக மாற்றி இருக்கின்றார்கள்.

    திருவையாறு காசிக்கு சமம் என்பார்கள்..

    எல்லாம் அவனருள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். பெரும்பாலான கோவில்களில் கருவறையிலும் டைல்ஸ் பதிக்கறாங்க. சுத்தம் செய்வது எளிது. இல்லையென்றால் சந்நிதானம் அழகாகவும் சுத்தமாகவும் இருக்காது. அதனால இந்த மாற்றம் ஓகேதான் என்பது என் எண்ணம்.

      நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடந்ததுபோல, திருமஞ்சனம் நடைபெறுவதால் வழுக்கி அர்ச்சகர்களுக்கு விபரீதமாகாமல் இருக்கணும்.

      நீக்கு
  18. படங்களின் தரிசனம் கிடைத்தது நன்றி.

    விபரங்கள் அருமை

    பதிலளிநீக்கு
  19. அஹோபில
    நவ நரசிம்ஹர் தரிசனம் போல வேறு பல தலங்களின் தரிசனங்களும் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமையில் வரவேண்டும்...

    நம்மில் மற்ற சகோதர பதிவர்களும் இதற்கு உதவ வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து பல வருடங்களுக்கு இந்தப் பகுதி வருவதுபோல நானும் பல தலங்களுக்குப் பயணிக்கிறேன். இறைவன் அருள்தான் காரணம்.

      இன்னும் திருநீர்மலை தரிசனம் கிடைத்தால் 106 பூர்த்தியாகும். தட்டிக்கொண்டே செல்கிறது

      நீக்கு
  20. அவரவர் கை வண்ணங்களையும் கண் வண்ணங்களையும் கருத்தின் வண்ணங்களையும் - எபியில் வைக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞாயிறு, படங்கள் பகுதி. சிற்பங்களின் படங்கள் என ஆரம்பித்தது யாத்திரை அனுபவங்களாக மாற்றம் பெற்றுள்ளது. போரடிக்கக்கூடாது என்பதற்காக, இடையில் வேறு படப் பதிவுகளும் அனுப்புகிறேன்.

      நீக்கு
  21. நிர்வாகக் குழுவினர் என்ன சொல்வரோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றம் என்பது மானிடத் த்த்துவம் என்பதைப் புரிந்துகொண்டவர்கள் ஶ்ரீராம் மற்றும் கேஜிஜி சார்

      நீக்கு
  22. நரசிம்ம தரிசனம் நிறைவாக இருந்தது. விவரணைகளும் படங்களும் பல தெரியாத விஷயங்களை எடுத்து கூறின. இப்பயணக்  கட்டுரைகளை கையேடாக வெளியிட்டு இனி செல்பவர்களுக்கு ஒரு வழிகாட்டி என்ற முறையில் வினியோகிக்கலாம். அதுவும் ஒரு கைங்கர்யம் தான். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜெயகுமார் சார். இந்தத் தளத்திலேயே எப்போது வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாமே

      நீக்கு
  23. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    /யாத்திரை நடத்துபவரின் தெய்வபலம் என்றே நான் நம்புகிறேன். அவர், எந்த யாத்திரையையும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் அனுமதி பெற்றே தெரிவிப்பார். 50 வருடங்களுக்கு மேல், யாத்திரை கூட்டிச் சென்ற அனுபவம் மிக்கவர். 50 தடவைக்கு மேல், 106 வைணவ திவ்யதேசங்களையும் தரிசித்தவர்./

    இன்றைய பதிவு ஆரம்பித்தவுடனேயே தாங்கள் சொன்ன சத்திய வாக்கு. அவரையும் வணங்கிக் கொள்கிறேன்.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பொதுவாக ஒருவர் நடத்தும் யாத்திரைகளில் மாத்திரம் கலந்துகொள்கிறேன். அவர் திருவல்லிக்கேணி கோயில் சம்பந்தம் உள்ளவர். அந்த யாத்திரைகளில் உணவுப் பிரச்சனை இருக்காது, கோவில் தரிசனங்கள் மிகுந்த திருப்தியாகக் கிடைக்கும்.

      நீக்கு
  24. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    அஹோபில யாத்திரை படங்கள், சென்ற இடங்களின் விபரங்கள் என அருமையாக சொல்லி முடித்திருக்கிறீர்கள். பதிவு உங்களுடன் கோவிலுக்கு நாங்களும் வந்த உணர்வை, அதன் நிறைவை தந்தது. . மிக்க நன்றி.

    பார்க்கவ நரசிம்மர் ஆலயப் படங்கள், செஞ்சு லஷ்மி குகை படங்கள், அனுமார் படங்கள், ஸ்ரீ ராமர் படங்கள், கோவிலின் உற்சவ படங்கள் என அனைத்தையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். இறைவனார்களை தரிசனம் செய்து கொண்டேன். உங்களால் அஹோபில கோவில் நவ நரசிம்மர் தரிசனங்கள் சுலபமாக கிடைத்ததற்கு (அதுவும் நாங்கள் எங்கும் அலையாமல்,) உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி. மேலும் கோவில் யாத்திரைகள் பதிவுகளை தொடருங்கள். அந்தந்த கோவில்களை பார்க்க, இறைவனை தரிசிக்க என பக்தியுடன் காத்திருக்கிறோம். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம். நிச்சயம் கோவில் யாத்திரைப் பதிவுகளைத் தொடர்வேன். என்ன ஒன்று..கொஞ்சம் வளவள என்று இருக்கும். எப்படியும் ஒரு முறைதானே எழுதப் போகிறோம் என்று நினைத்து கொஞ்சம் விவரமாகவே எழுத முனைகிறேன். நிறைய தொடர்கள் எழுதவேண்டியிருக்கிறது. எழுத்தைவிட படங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறேன்.

      நீக்கு
  25. அஹோபில நரசிம்மர் தரிசனம் தொடராக எழுதி தந்த உங்களுக்கும் வெளியிட்ட நண்பர்கள் ஶ்ரீராம் மற்றும் கேஜிஜி ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி. எனக்கும் பயணிக்கும் ஆசை உண்டு. பார்க்கலாம் எப்போது வாய்ப்பு கிடைக்கிறது என்று. படங்களும் விளக்கங்களும் சிறப்பு. பதிவுகளை சேமித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க் தில்லி வெங்கட். நிச்சயம் உங்களுக்கும் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தமிழகம் வரும்போது, இதனைக் குறித்துக்கொள்ளுங்கள். 3 நாட்கள்தான் தேவை. நன்றி

      நீக்கு
  26. நாங்க போனப்போ திருவிழாக்காலம் என்பதால் கூட்டம் நிறைய இருந்தது என்பதோடு ஆங்காங்கே ஆடு, கோழிகளும் பலிக்கென வைக்கப்பட்டிருந்தன. கோயிலுக்குச் செல்லும் வழியெல்லாம் கூட்டம். செஞ்சுலக்ஷ்மியின் குகை பார்த்த நினைவு இல்லை. ஆனால் டைல்ஸ் போட்டிருப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை. இதனால் எட்டுக்குடியில் நம்ம ரங்க்ஸ் கீழே விழுந்து எக்கச்சக்கமா அடிபட்டுக்கொண்டதையும் முன்னர் எழுதி இருக்கேன். பயணத்தையே பாதியில் நிறுத்திட்டு உடனே திரும்பும்படி ஆச்சு. நாங்க அஹோபிலம் போயும் சுமார் 13/14 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதால் இப்போது நிறைய மாறுதல்கள் இருக்கும். அதே போல் உற்சவர்கள் உலா வருவதும் தெரியலை; நாங்க போய் தரிசிக்கவும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... வருடா வருடம் மாறுதல்கள் இருக்கிறது. நீங்கள் சென்றிருப்பது, செஞ்சு பழங்குடியினரின் விழாக்காலமாக இருந்திருக்கும்.

      டைல்ஸ் சில இடங்களில் நன்று. இரயில்வே ஸ்டேஷன்களில் வழவழ கற்கள் போட்டிருக்காங்க. மழை பெய்தாலும் தண்ணீர் இருந்தாலும் ரொம்பவே ஜாக்கிரதையாக நடக்கவேண்டியிருக்கும்.

      நீக்கு
  27. 106 திவ்யதேசம் தரிசிச்சாச்சா? நாங்களும் நிறையப் போய் இருக்கோம் என்றாலும் 106 இருக்குமா தெரியலை. அதே போல் தேவார ஸ்தலங்களும். நிறையப் போயாச்சு. கணக்கு வைச்சுக்கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாண்டியநாடு, மலைநாடு திவ்யதேசங்கள் - பல முறை, வடநாடு திவ்யதேசங்கள் - பல முறை - சாளக்ராமம் தவிர-இதற்கு அடுத்த வருடம் மீண்டும் செல்வேன், சோழநாடு திவ்யதேசங்கள் 40- பலவற்றை பலமுறை சேவித்திருக்கிறேன், இந்த வருட இறுதியில் இன்னுமொருமுறை செல்கிறேன். நான் இதுவரை சேவிக்காதது திருநீர்மலை மட்டும்தான். தேவாரத் தலங்களும் சென்றிருக்கிறேன், ஆனால் லிஸ்ட் வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக தரிசனம் செய்யவில்லை. அதனால் பெரும்பான்மை தரிசனம் ஆகவில்லை

      நீக்கு
  28. படங்கள் அருமை... பயண விளக்கம் யப்பா...!

    பதிலளிநீக்கு
  29. மனதுக்கு நிறைவான யாத்திரை நாங்களும் கூடவே பயணித்ததூபோல இருந்தது.

    படங்களும் விபரணங்களும் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!